Tamil News | Online Tamil News |
- நாட்டின் 14வது பிரதமராக 26ம் தேதி மோடி பதவி ஏற்பு
- மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபடுவேன்: மோடி உருக்கமான பேச்சு
- தலைவர் பதவியா? தனி கட்சியா? காங்., மேலிட முடிவுக்கு காத்திருக்கும் வாசன்
- ஜெயலலிதாவை சமாளிக்க அமைச்சர் பதவி: பா.ஜ.,விடம் விஜயகாந்த் வலியுறுத்தல்
- தி.மு.க.வில் 'களையெடுக்க' உயர்நிலை கூட்டம் கூடுகிறது?
- அ.தி.மு.க., நால்வர் அணியில் மாற்றம்: முனுசாமி மந்திரி பதவியும் பறிப்பு
- மெகா திட்டங்களை தயாரியுங்கள்: துறை செயலர்களுக்கு கேபினட் செயலர் உத்தரவு
- 40 சதவீத கிரஷர் கம்பெனிகளுக்கு மூடுவிழா: கட்டுமான பணி ஸ்தம்பிப்பால் தொழில் நெருக்கடி
- காற்றாலை கைகொடுத்தும் 900 மெகாவாட் மின் பற்றாக்குறை
| நாட்டின் 14வது பிரதமராக 26ம் தேதி மோடி பதவி ஏற்பு Posted: பா.ஜ., பார்லிமென்டரி கட்சித் தலைவராகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் நேற்று தேர்வு செய்யப்பட்ட, நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்ற ஜனாதிபதி, அவரை ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுத்தார். வரும், 26ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, நாட்டின், 14வது பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்கள் பலரும் பதவியேற்க உள்ளனர்.லோக்சபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட, பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம், பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பா.ஜ., பார்லிமென்டரி கட்சித் தலைவர் ... |
| மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபடுவேன்: மோடி உருக்கமான பேச்சு Posted: புதுடில்லி: நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, என்னால் முடிந்த வரை பாடுபடுவேன். ஏழைகளின் நலனில், அதிக அக்கறை காட்டுவேன்,'' என, பிரதமராக தேர்வு செய்யப்பட்ட, நரேந்திர மோடி கூறினார்.லோக்சபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பா.ஜ., பார்லிமென்டரி கட்சித் தலைவராக, அதாவது பிரதமராக, மோடி தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து, அவர் நிகழ்த்திய ஏற்புரை: நம் ஜனநாயகத்தின் மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை, தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன. மக்களிடம் ... |
| தலைவர் பதவியா? தனி கட்சியா? காங்., மேலிட முடிவுக்கு காத்திருக்கும் வாசன் Posted: தேர்தல் தோல்விக்கு பின், தமிழக காங்., கட்சியில், இப்போது தான் மெல்ல புகைச்சல் கிளம்ப துவங்கி உள்ளது. 'தமிழக காங்., தலைவர் பதவியில் இருந்து, ஞானதேசிகனை நீக்க வேண்டும்' என, தேர்தலில் தோற்ற வேட்பாளர் ஒருவர், முதல் குரல் கொடுத்து, முதல் திரியை கொளுத்தி போட்டுள்ளார். இந்த குரலுக்கு பின்னணியில், சிதம்பரம் அணியினர் இருப்பதால், விரைவில் இது கொழுந்து விட்டு எரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நீண்ட காலத்திற்கு பின், தமிழகத்தில் இந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசார் தனித்துப் போட்டியிட்டனர். 39 தொகுதிகளில், 38ல் 'டிபாசிட்'டை பறிகொடுத்த போதிலும், 18 லட்சம் ஓட்டுகள் ... |
| ஜெயலலிதாவை சமாளிக்க அமைச்சர் பதவி: பா.ஜ.,விடம் விஜயகாந்த் வலியுறுத்தல் Posted: இரண்டு ஆண்டுகளுக்கு, முதல்வர் ஜெயலலிதாவை சமாளிக்க வேண்டுமானால், தே.மு.தி.க.,விற்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, பா.ஜ., மேலிட தலைவர்களிடம், விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட, தே.மு.தி.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.எப்படி வழிநடத்துவது...: எதிர்பாராத இந்த தோல்வியால், தே.மு.தி.க., கூடாரம் கலகலத்து கிடக்கிறது. தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் என, பலரும் தங்கள் அரசியல் வாழ்க்கை குறித்த கவலையில் உள்ளனர். சட்டசபை தேர்தல், தமிழகத்தில், 2016ம் ஆண்டு நடக்க ... |
| தி.மு.க.வில் 'களையெடுக்க' உயர்நிலை கூட்டம் கூடுகிறது? Posted: லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயவும், மீண்டும் அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் சேர்ப்பது குறித்தும், புகார்கள் குவிந்துள்ள மாவட்டச் செயலர்களை களையெடுப்பது குறித்தும் ஆலோசிப்பதற்கு, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம், அடுத்த மாதம், 2ம் தேதி, சென்னையில் கூடுகிறது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், சென்னை கோபாலபுரம் இல்லத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சமீபத்தில், சேலம் மாவட்ட நிர்வாகிகள், வேட்பாளர் உமாராணி ஆகியோர் சந்தித்தனர். அப்போது, உமாராணி, 'என்னுடன் ஓட்டு கேட்க வந்தவர்களை பார்த்ததும், தொகுதி ... |
| அ.தி.மு.க., நால்வர் அணியில் மாற்றம்: முனுசாமி மந்திரி பதவியும் பறிப்பு Posted: 'அம்மா பிடித்து வைத்தால் பிள்ளையார்; தூக்கி எறிந்தால் சாணி' என, பொதுக்குழுவில் முழங்கிய, முனுசாமியிடம் இருந்த பதவிகள் அனைத்தும், நேற்று அடுத்தடுத்து பறிக்கப்பட்டது. கடைசியில், மந்திரி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.அ.தி.மு.க.,வில், கட்சி நிர்வாகிகள் மீது வரும் புகார்களை விசாரிக்க, முதல்வர் ஜெயலலிதா, 2013 ஜூன், 6ம் தேதி, ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்தார். இக்குழுவில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், இடம் பெற்றனர். அவர்கள், 'நால்வர் அணி' என, அழைக்கப்பட்டனர். இக்குழுவினர், தொண்டர்கள் தரும் புகார்களை ... |
| மெகா திட்டங்களை தயாரியுங்கள்: துறை செயலர்களுக்கு கேபினட் செயலர் உத்தரவு Posted: புதுடில்லி: மோடி தலைமையிலான புதிய அரசில், நிறைவேற்றப்பட வேண்டிய புதிய திட்டங்கள் எவை, தற்போது முடங்கியுள்ள திட்டங்கள் எவை, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து, விரிவாக அறிக்கை அளிக்குமாறு, அனைத்து துறை செயலர்களுக்கும், கேபினட் செயலர் உத்தரவிட்டு உள்ளார்.வளர்ச்சி மாநிலம்: குஜராத் முதல்வராக, 13 ஆண்டுகளாக இருக்கும் நரேந்திர மோடி, தன் நிர்வாகத் திறமையால், அந்த மாநிலத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக உயர்த்தி உள்ளார். முடிவுகளை விரைவாக எடுப்பது, அவசியமான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஒவ்வொரு பணிகளுக்கும், ஒவ்வொரு அதிகாரியை ... |
| 40 சதவீத கிரஷர் கம்பெனிகளுக்கு மூடுவிழா: கட்டுமான பணி ஸ்தம்பிப்பால் தொழில் நெருக்கடி Posted: 'தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் பெருமளவில் முடங்கியுள்ளதால், 40 சதவீத கிரஷர் கம்பெனிகள் (ஜல்லி தயாரிப்பு) மூடுவிழா கண்டுவிட்டன' என, கிரஷர் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.தமிழகத்தில், தற்போது, கட்டுமானப்பணிகள் நடைபெறுவதில், தொய்வு ஏற்பட்டுள்ளதால், அந்த தொழில் சார்ந்த பலர், வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். அரசு சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்களில், கட்டுமான பொருட்களுக்கு, அரசு நிர்ணயித்த டெண்டர் விலைக்கும், வெளிமார்க்கெட்டில் விற்கப்படும் கட்டுமான பொருளுக்கும், 30 சதவீதம் வரை, விலை வித்தியாசம் உள்ளது. மேலும், ... |
| காற்றாலை கைகொடுத்தும் 900 மெகாவாட் மின் பற்றாக்குறை Posted: காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்த போதிலும், நேற்று, மின்தேவை மேலும் உயர்ந்ததால், 900 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழகத்தில், இருவாரங்களுக்கு முன், கோடைமழை கைகொடுத்ததால், 13 ஆயிரம், மெகாவாட் ஆக இருந்த மின் நுகர்வு, 9,500 மெகாவாட் ஆக சரிந்தது. மழை தீவிரம் குறைந்ததால், மீண்டும், மின்தேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த, 17ம் தேதி, 11 ஆயிரத்து 600 மெகாவாட் ஆக இருந்த மின்தேவை, நேற்று முன்தினம், 12 ஆயிரம் மெகாவாட் ஆகவும், நேற்று, 12 ஆயிரத்து 400 மெகாவாட் ஆகவும் அதிகரித்தது. நேற்று முன்தினம், 280 மெகாவாட் ஆக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, நேற்று, 1,060 மெகாவாட் ஆக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 21,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |