Daily Thanthi |
- நெய்வேலி மின்நிலைய விபத்தில் மேலாளர் பலி: டாக்டர் ராமதாஸ் இரங்கல்
- பகுஜன் சமாஜ் கட்சியின் அனைத்து நிர்வாக குழுக்களும் கலைப்பு மாயாவதி அதிரடி நடவடிக்கை
- பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு: மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படுவேன் நரேந்திர மோடி பேச்சு
- முதல்–மந்திரி பதவியில் இருந்து நரேந்திர மோடி இன்று விலகல் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்கிறார்
- இன்று நாள் எப்படி...?
- பதவியைப் பெற பா.ஜனதா எம்.பி.க்கள் படையெடுப்பு நரேந்திரமோடியுடன் 20 மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள்
- இணையதளத்தில் படங்கள் வெளியீடு நடிகை சுருதிஹாசன் போலீசில் புகார்
- சாணக்கியன் சொல் (21-05-2014)
- ஆண்டியார் (21-05-2014)
- ஆன்மீக சிந்தனை (21-05-2014)
| நெய்வேலி மின்நிலைய விபத்தில் மேலாளர் பலி: டாக்டர் ராமதாஸ் இரங்கல் Posted: 20 May 2014 01:09 PM PDT சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் முதல் அனல் மின்நிலையத்தில் இன்று (நேற்று) காலை கொதிகலன் குழாய் அதிக அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியதில், அங்கு பணியாற்றிய முதன்மை மேலாளர் செல்வராஜ் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில், அனல் மின்நிலைய பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அபிஷேக், ஜோதி, பலராமன், ஒப்பந்தக்காரர் சிவலிங்கம் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியும் வேதனை அளிக்கிறது. இந்த விபத்திற்கு என்.எல்.சி. நிர்வாகம் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த விபத்து குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். விபத்தில் உயிர் இழந்த மேலாளரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். image: category:News Group Category: |
| பகுஜன் சமாஜ் கட்சியின் அனைத்து நிர்வாக குழுக்களும் கலைப்பு மாயாவதி அதிரடி நடவடிக்கை Posted: 20 May 2014 12:16 PM PDT லக்னோ, பாராளுமன்ற தேர்தல் தோல்வி காரணமாக கட்சியின் அனைத்து நிர்வாக குழுக்களையும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கலைத்தார். மாயாவதி ஆய்வு 20 எம்.பி.க்களை கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சி அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. முன்பு உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த அக்கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. படுதோல்வியால் அதிர்ச்சியடைந்த கட்சியின் தலைவியும், முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதி நேற்று கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தை லக்னோவில் கூட்டினார். கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து தலைவர்களுடன் அவர் ஆய்வு செய்தார். தனித்தனியே விசாரணை அப்போது, கட்சிக்கு ஓட்டு சதவீதம் குறைந்தது ஏன் என்பது பற்றி கட்சியின் நிர்வாகிகளிடமும், தலைவர்களிடமும் அவர் விளக்கமாக கேட்டறிந்தார்.மண்டல மற்றும் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக கட்சி நிர்வாகிகளையும், தலைவர்களையும் அழைத்து தனித்தனியே மாயாவதி விசாரித்தார்.அப்போது பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மக்களின் மனப்போக்கு குறித்து கட்சியின் தலைமைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் சரியான தகவல்களை மேலிடத்திற்கு தெரிவிக்கவில்லை என்று கட்சி நிர்வாகிகள் அவரிடம் புகார் தெரிவித்தனர். குழுக்கள் கலைப்பு இதைத்தொடர்ந்து கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல, சட்டசபை அளவிலான அனைத்து வித நிர்வாக குழுக்களையும் மாயாவதி உடனடியாக கலைத்து உத்தரவிட்டார். இதேபோல், தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்த 6 மண்டலங்களின் ஒருங்கிணைப்பாளர்களையும் அவர் பதவி நீக்கம் செய்தார்.கூட்டத்தில் கட்சித் தலைவர்களிடையே மாயாவதி பேசியதாவது:–மிகப்பெரிய வெற்றியை பா.ஜனதா கூட்டணி பெற்றிருப்பதுபோல் புதிய அரசுக்கு மிகப்பெரிய பொறுப்பும் உள்ளது. தீர்ப்பு எதிராக இல்லை அவர்கள் நிறைய எதிர்பார்ப்புகளை மக்களிடையே உருவாக்கி இருப்பதால் புதிய அரசு ஏராளமான சவால்களை சந்திக்கவேண்டி இருக்கும். மக்களின் தீர்ப்பு பகுஜன் சமாஜ்க்கு எதிராக இல்லை. எதிர்அணியினருக்கு ஒட்டுமொத்தமாக ஓட்டுகள் திரண்டதால் வெற்றி கிடைத்துள்ளது.அடுத்து வரும் சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சியின் கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டு கட்சிக்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கட்சியின் தொண்டர்களும், தலைவர்களும் இப்போதிருந்தே கடுமையாக உழைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எதிர்ப்பு கோஷம் முன்னதாக கட்சித் தொண்டர்களில் ஏராளமானோர் கட்சியின் அலுவலகத்திற்குள் நுழைய முடியாதவாறு வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.மதுரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த யோகேஷ் குமார் திவேதி வந்தபோது அவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் மாயாவதிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. image: category:Tagging:News Group Category: |
| Posted: 20 May 2014 12:11 PM PDT புதுடெல்லி, மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படுவேன் என்று நரேந்திர மோடி பேசினார். பிரதமராக மோடி தேர்வு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம், டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. அங்கு தனது வாழ்வில் முதல் முறையாக நரேந்திர மோடி வந்தார். பாராளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, நரேந்திர மோடி முழங்கால் பணிந்து பாராளுமன்றத்தை வணங்கினார். இந்த காட்சியை கண்ட பாரதீய ஜனதா தலைவர்கள், புதிய எம்.பி.க்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்த கூட்டத்தில் நரேந்திர மோடி முறைப்படி பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமராக) தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறையாக... அதைத் தொடர்ந்து மக்களுக்கும், கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து நரேந்திர மோடி 30 நிமிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–முதல் முறையாக பாராளுமன்றத்தின் இந்த மைய மண்டபத்துக்கு வந்துள்ளேன். இது முதல் முறையாக குஜராத்தில் நான் முதல்–மந்திரி பொறுப்பேற்று, முதல்–மந்திரி அலுவலகத்துக்கு சென்றது போன்ற உணர்வை தருகிறது. நீங்கள் என்மீது சுமத்தியுள்ள பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். தலைவர்கள் வளர்த்தார்கள் மோடியின் (உயர்ந்த) நிலையினால் நீங்கள் இந்த மோடியைப் பார்த்துக்கொண்டிருக்கவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் என்னை அவர்களின் தோளில் தூக்கி வளர்த்ததால்தான் நீங்கள் என்னை இன்று பார்க்க முடிகிறது.இந்த தருணத்தில், நான் அரசியல் சாசனத்தை உருவாக்கிய முற்பிதாக்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். ஏனென்றால், அவர்கள் உருவாக்கி தந்துள்ள அரசியல் சட்டத்தின் காரணமாகத்தான், ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். வாஜ்பாய் வந்திருந்தால்... தலைவர் வாஜ்பாய் நன்றாக இருந்திருந்து, அவர் இங்கே வந்திருந்தால் அது கேக் மீது ஐஸ் கட்டியை வைத்தது போன்று இருந்திருக்கும்.ஜனநாயகத்தின் திருக்கோவிலாக பாராளுமன்றம் திகழ்கிறது. 125 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் சந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தேசத்தை நிர்மாணிப்பதில், அனைவரும் மன உறுதியுடன், நேர்மையுடன், மிகுந்த ஊக்கத்துடன் செயல்பட வேண்டும். பதவிகளுக்காக உழைக்காதீர் நீங்கள் என்னிடம் சுமத்தியுள்ள பொறுப்பை நான் நிறைவேற்றுவதற்கு என்னால் இயன்ற அளவுக்கு கடுமையாக முயற்சிப்பேன். நீங்கள் (எம்.பி.க்கள்) அனைவரும், தூய்மையாக உழைக்க வேண்டும். பதவிகளுக்காக உழைக்கக்கூடாது. நாட்டு மக்களுக்காக பாடுபட வேண்டும். 2013–ம் ஆண்டு செப்டம்பர் 15–ந் தேதி கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி, இந்த நாள் வரையில் நான் ஒரு தொண்டராகத்தான் பணியாற்றி வந்துள்ளேன். 10–ந் தேதி தேர்தல் பிரசாரத்தை முடிப்பது வரை எந்தவொரு வாய்ப்பையும் நான் தவறவிடவில்லை. ஒரு சிப்பாயாக... தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நான் ஆமதாபாத் புறப்பட்டபோது, கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். எனக்கு கொடுத்த பணியை நிறைவுடன் செய்து முடித்ததாக கூறினேன். ஒரு சிப்பாயாக உங்களிடம் அறிக்கை அளிக்கிறேன் என கூறினேன்.நான் ஒரு தொண்டராகத்தான் எப்போதும் வாழ முயற்சித்திருக்கிறேன். புதிய நம்பிக்கை இந்த தேர்தலில் 550 மில்லியன் மக்கள் ஓட்டு போட்டது கண்டு உலக தலைவர்கள் எல்லோரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவுகள், ஜனநாயகத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது.சாதாரண மக்களிடையே புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளின் மிகப்பெரிய முக்கியத்துவம் இதுதான். மக்கள் தந்த வெற்றி மக்கள் நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள். இந்த வெற்றி, கட்சியின் 5 தலைமுறை தலைவர்கள் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி ஆகும்.இந்த வெற்றி, ஒரு தனிமனிதரால் வந்தது என்ற உணர்வு உங்களில் யாருக்கும் வந்து விடக்கூடாது. இது மக்கள் தந்த வெற்றி. யாருக்காக அரசு? இந்த அரசு யாருக்காக? இது ஏழைகளுக்காக.எங்களுடைய புதிய அரசு, கோடானுகோடி ஏழை மக்களுக்கு, கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு, தாய்மார்கள், சகோதரிகளின், கிராமப்புற மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின், இன்னலுற்ற மக்களின் பாதுகாப்புக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொள்கிறது. உழைப்பதற்கு ஒரு வாய்ப்பு பாரதீய ஜனதாவுக்கு மக்கள் ஒரு முழுமையான பெரும்பான்மையை தந்திருப்பதின் மூலம் அவர்கள் புதிய நம்பிக்கைக்கு வாக்களித்துள்ளனர்.நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபடுவதற்கு, கஷ்டங்களை அனுபவிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. ஆனால் இந்த நாட்டுக்காக இப்போது உழைப்பதற்கு லட்சோப லட்சம் மக்கள் எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். அரசின் முழக்கம் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவோம். ஏழைகளைப் பற்றி சிந்திப்போம். ஏழைகள் சொல்வதை கவனிப்போம். ஏழைகளுக்காக வாழ்வோம்.ஒவ்வொருவருடனும், ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காக என்பதே எங்கள் அரசின் முழக்கமாக இருக்கும். உறுதிமொழி 2019–ம் ஆண்டு, ஒரு செயல் அறிக்கையுடன் நான் மறுபடியும் உங்களையெல்லாம் சந்திப்பேன். எனது அரசு எனக்கு உரித்தானது அல்ல. அது நாட்டுக்குரியது. எனது அரசு ஏழைகளுக்கு உரியது.கடந்த காலங்களில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களால், யாரும் சோர்ந்து போகத் தேவை இல்லை என்ற உறுதிமொழியை மக்களுக்கு தர விரும்புகிறேன். நான் எப்போதும் நம்பிக்கை உள்ளவன். நம்பிக்கை உள்ள ஒருவரால்தான் நாட்டில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.நாட்டுக்கு இன்றைய தேவை நம்பிக்கை. துரிதமான வளர்ச்சியைக் காண்பதற்கு நேர்முறை அணுகுமுறை வேண்டும்.மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் செயல்பட முயற்சி செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார் image: category:Tagging:News Group Category: |
| முதல்–மந்திரி பதவியில் இருந்து நரேந்திர மோடி இன்று விலகல் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்கிறார் Posted: 20 May 2014 12:06 PM PDT ஆமதாபாத், குஜராத் முதல்–மந்திரி பதவியில் இருந்து நரேந்திர மோடி இன்று விலகுகிறார். எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்கிறார். குஜராத் செல்கிறார் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நரேந்திர மோடியை, புதிய பிரதமராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நியமித்துள்ளார். மோடி, 26–ந் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார்.இதையடுத்து, குஜராத் முதல்–மந்திரி பதவியை மோடி இன்று ராஜினாமா செய்கிறார். பிரிவு உபசார விழா இதற்காக இன்று குஜராத்துக்கு செல்லும் மோடி, சட்டசபை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அங்கு அவருக்கு எம்.எல்.ஏ.க்கள் பிரிவு உபசார விழா நடத்துகிறார்கள்.பின்னர், மாலை 3.30 மணி அளவில், பா.ஜனதா பிரதிநிதிகள் குழுவுடன் சேர்ந்து, கவர்னர் கமலா பேனிவாலை மோடி சந்திக்கிறார். முதல்–மந்திரி பதவி ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் சமர்ப்பிக்கிறார். பிறகு, சபாநாயகர் வஜுபாய் வாலாவை மோடி சந்திக்கிறார். தனது எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தையும் அவர் சமர்ப்பிக்கிறார். புதிய முதல்வர் தேர்வு நரேந்திர மோடி ராஜினாமாவைத் தொடர்ந்து, குஜராத் புதிய முதல்–மந்திரியை தேர்வு செய்ய பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிலும், மோடி கலந்து கொள்கிறார். மேலிட பார்வையாளராக பா.ஜனதா மூத்த தலைவர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்கிறார். அதில், புதிய முதல்–மந்திரி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.புதிய முதல்–மந்திரி, நாளை காந்திநகர் மகாத்மா மந்திரில் பதவி ஏற்கிறார். அந்நிகழ்ச்சியிலும் மோடி கலந்து கொள்கிறார்.குஜராத் முதல்–மந்திரியாக 2001–ம் ஆண்டு அக்டோபர் 7–ந் தேதி நரேந்திர மோடி பதவி ஏற்றார். அவர் சுமார் 13 ஆண்டுகள் அப்பதவியில் இருந்துள்ளார். image: category:Tagging: |
| Posted: 20 May 2014 12:02 PM PDT Endru Image: ![]() |
| பதவியைப் பெற பா.ஜனதா எம்.பி.க்கள் படையெடுப்பு நரேந்திரமோடியுடன் 20 மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள் Posted: 20 May 2014 12:01 PM PDT புதுடெல்லி, நரேந்திரமோடியுடன் 20 மந்திரிகள்வரை பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது. மந்திரி பதவியைப் பெற எம்.பி.க்கள், ராஜ்நாத்சிங்கை சந்தித்து வருகிறார்கள். நிதி மந்திரி பதவிக்கு அருண் ஜெட்லியுடன் அருண் ஷோரி பெயரும் அடிபடுகிறது. 3–வது நாளாக ஆலோசனை பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திரமோடி, 26–ந் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார்.மந்திரி பொறுப்பில் யார் யாரை நியமிப்பது என்று நேற்று 3–வது நாளாக நரேந்திரமோடி தீவிர ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள குஜராத் பவனில், தனக்கு நெருக்கமானவரான அமித் ஷா, அருண் ஜெட்லி ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.சிறிய எண்ணிக்கையிலான மந்திரிசபையைத்தான் மோடி விரும்புகிறார். அரசு நடத்துவதற்கு அவசியமானவர்களை மட்டும் மந்திரி ஆக்கினால் போதும் என்று அவர் கருதுகிறார். எனவே, மோடியுடன் 12 மந்திரிகள் முதல் 20 மந்திரிகள்வரை பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படையெடுப்பு இதற்கிடையே, மந்திரி பதவியைப் பெற பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங்கை பா.ஜனதா தலைவர்களும், எம்.பி.க்களும் சந்தித்து வருகிறார்கள். மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், உமாபாரதி, அருண் ஷோரி, கோபிநாத் முண்டே, யோகி ஆதித்யநாத், வருண் காந்தி ஆகியோர் ராஜ்நாத்சிங்கை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களும் சந்தித்தனர்.மந்திரிகள் தேர்வில், தாங்கள் தலையிடவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். மறுத்து வந்தபோதிலும், டெல்லி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு பா.ஜனதா தலைவர்களும், எம்.பி.க்களும் படையெடுத்து வருகிறார்கள். அமித் ஷா, அருண் ஜெட்லி ஆகியோரும் அங்கு சென்று ஆலோசனை நடத்தினர். பலர் ஆர்.எஸ்.எஸ். சிபாரிசைப் பெற முயன்று வருகிறார்கள். நிதி இலாகா மோடி அரசில் யார், யாருக்கு என்ன இலாகா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் உள்துறை மந்திரி ஆவார் என்று பரவலாக பேசப்படுகிறது. சுஷ்மா சுவராஜ், வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், அவருக்கு வேறு இலாகா அளிக்கப்படும் என்று தற்போது கூறப்படுகிறது. நிதி மந்திரி பொறுப்பு, அருண் ஜெட்லிக்கு அளிக்கப்படும் என்று பேசப்பட்டது. ஆனால், தற்போது அந்த இலாகாவுக்கு பத்திரிகையாளர் அருண் ஷோரியின் பெயரும் அடிபடுகிறது. இந்த பின்னணியில், அவர் ராஜ்நாத்சிங்கையும் சந்தித்து பேசினார். அருண் ஷோரி, வாஜ்பாய் அரசில், தொலைத்தொடர்புத்துறை, பங்கு விலக்கத்துறை இலாகாக்களை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டணி கட்சிகளுக்கும் பதவி முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, அனந்தகுமார், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் மந்திரிசபையில் இடம்பெறுவது உறுதி ஆகியுள்ளது.மூத்த தலைவர் அத்வானி, சபாநாயகர் பதவியை விரும்புவதாக தெரிகிறது. சிவசேனா, தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி ஆகிய கூட்டணி கட்சிகளுக்கும் மந்திரி பதவி அளிக்கப்படும் என்று தெரிகிறது. மற்றொரு கூட்டணி கட்சியான அகாலி தளம், மந்திரிசபையில் சேர விரும்பவில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டது. category:Tagging:News Group Category: |
| இணையதளத்தில் படங்கள் வெளியீடு நடிகை சுருதிஹாசன் போலீசில் புகார் Posted: 20 May 2014 11:53 AM PDT ஐதராபாத், நடிகை சுருதிஹாசன் 'யேவடு' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதற்காக சில மாதங்களுக்கு முன்பு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதில் சில படங்கள் தகாத கோணங்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படங்கள் எந்த அனுமதியும் இன்றி இணையதளங்களில் வெளியானது. இதனை அறிந்த சுருதிஹாசன் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி நடிகை சுருதிஹாசன் போலீசில் புகார் செய்தார். இந்த புகார் சி.ஐ.டி. பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. category:Tagging:News Group Category: |
| Posted: 20 May 2014 11:15 AM PDT Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special chanakkiyan: ![]() |
| Posted: 20 May 2014 11:12 AM PDT Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Andiyar: ![]() |
| Posted: 20 May 2014 11:10 AM PDT Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Anmikasinthanai: ![]() |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



