Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பிரதமரான மோடி; பயத்தில் ஓடி ஒழியும் தாவூத் இப்ராகிம், கூட்டாளிகள்

Posted: 20 May 2014 10:58 AM PDT

இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் நாட்டில் தலைமறைவாக உள்ளார். நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததால் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாவூத் இப்ராகிம் தனது இடத்தை மாற்றிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாவூத் தலைமறைவாக உள்ளதாக இப்பகுதிகள் தலீபான் தீவிரவாதிகளின் கட்டுப்பட்டுக்குள் உள்ளது. பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது குஜராத் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நான் ஆட்சி வந்தால் பாகிஸ்தானில் ...

வைகோ வை பற்றி பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்:

Posted: 20 May 2014 10:55 AM PDT

வைகோ வை பற்றி பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்: 1. என்னோடு இருக்கும் 200 MPகளுக்கு சமமானவர் வைகோ - இந்திரா காந்தி 2.வைகோ வை போன்ற நேர்மையான தலைவர்களின் கைகளில் தான் எதிர்கால அரசியல் இருக்கிறது - வி பி சிங் 3.வைகோ வை போன்ற போராட்டட குணம் கொண்டவர்களை நான் என் வாழ் நாளில் பார்த்தது இல்லை -ராஜீவ் காந்தி 4.எந்த மிரட்டலுக்கும் அடிபணியாத லட்சியவாதி வைகோ -நரசிம்ம ராவ் 5.வைகோ வை போன்ற திறமைசாலிகள் மத்திய அமைச்சரவையை அலங்கரிக்க வேண்டும் -முரளி தியோரா 6.அரசியலை மக்கள் ...

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - சோளே மசாலா பொடி

Posted: 20 May 2014 09:53 AM PDT

ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.

சிவப்பாய் ஒரு பூ

Posted: 20 May 2014 09:42 AM PDT

மரங்கள்இலைகள் உதிர்ந்து இளம் தளிர்கள் துளிர்க்க தொடங்கி விட்டது. எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள் இனி பூக்கும் காய்க்குமென்று. ஊரார் பேச்சினை கேட்கும்போதெல்லாம் தூர தேசம் வந்துவிட்ட என்னுள் தோன்றி மறைகிறாள் நகுமலர் இனவெறி தாக்குதலில் மாண்டுபோன என் மகள். அவள் ஆசையாய் வளர்த்த மரத்தடியில் நீருற்றும் வேளை ரத்தம் ஊற்றி மாண்டுபோனாள். என் வீட்டுவாசலில் இந்நேரம் இலைகள் உதிர்த்து துளர்விட்டு பூக்குமா என்மகள் ஆசையாய் வாசலில் வளர்த்த சங்குப்பூ மரம் அவள் ரத்தம் குடித்த நன்றிக்கு சிவப்பாய் ...

யார் இந்த அமித் ஷா?

Posted: 20 May 2014 09:28 AM PDT

உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா வென்ற தொகுதிகளில் பாதிக்கும் கொஞ்சம் அதிகமான தொகுதிகளில்தான் தேசிய அளவில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? நரேந்திர மோடி அலை என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால், அந்த அலையை உத்தரப் பிரதேசத்தில் பேரலையாக மாற்றிக் காட்டியவர் அமித் ஷா. ஆமாம், நரேந்திர மோடியின் வலதுகரம், குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர், ஷோரப்தீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர், மோடிக்காக இளம் பெண் வேவுபார்க்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர் ...

எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி?

Posted: 20 May 2014 09:22 AM PDT

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற, அ.தி.மு.க.,வும், திரிணமுல் காங்.,கும், ஒரு குழுவாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை, திரிணமுல் தரப்பு உறுதி செய்தாலும், 'இது தொடர்பாக, இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்றும் தெரிவித்து உள்ளது. லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு, பெரும்பான்மை இடங்கள் கிடைத்துள்ளன. காங்., படுதோல்வியை சந்தித்து உள்ளது. லோக்சபாவில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறும் அளவுக்கு கூட, எம்.பி.,க்கள் பலம், காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. ...

EEGARAI FLASH NEWS

Posted: 20 May 2014 09:10 AM PDT

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி



திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்!

Posted: 20 May 2014 08:34 AM PDT

நால்வர் பெருமக்களுள் ஒருவரான சுந்தரர் ஒவ்வொரு கோவிலாக சென்று பாடி வந்தார். ஒருமுறை அவிநாசி செல்லும் வழியில், பரிசாக பெற்ற பொன், பொருளுடன், அவிநாசி ரோட்டில் தற்போதும் உள்ள கூப்பிடு பிள்ளையார் கோவிலில், இரவு தங்கினார். . திருமுருகன்பூண்டியில் தாம் கோவில் கொண்டுள்ளதே தெரியாமல் சுந்தரன் உள்ளானே என எண்ணிய சிவன், திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார். வேடன் உருவம் பூண்டு, பூத கணங்களுடன் சென்று பொருட்களை திருடியதோடு, வழி நெடுகிலும் வீசி விட்டு வந்தார். காலையில் எழுந்து பார்த்த சுந்தரமூர்த்தி ...

ரமணியின் கவிதைகள்

Posted: 20 May 2014 08:23 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

மிஷன் வெற்றி பெற வேண்டி

Posted: 20 May 2014 08:22 AM PDT

மிஷன் வெற்றி பெற வேண்டி

நைஜீரியாவில் கடத்தப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்களை மீட்க பல நாடுகள் முயற்சி எடுத்து வரும் நிலையில் ..தற்போது உள்ள தகவலின் அடிப்படையில் இங்கிலாந்தின் SAS மற்றும் பிரெஞ்சு நாட்டின் GIGN சிறப்பு படைகள் அமரிக்காவின் உதவியுடன் அவர்களை மீட்க புறப்பட்டுள்ளனர் ..

அவர்களின் ஆபரேஷன் வெற்றி பெற நாம் கடவுளை பிரார்த்திப்போமாக ..

பாமரர் தேவாரம்

Posted: 20 May 2014 05:53 AM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 20 May 2014 05:09 AM PDT



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Posted: 20 May 2014 05:03 AM PDT

மனித உடல் ஆரோக்கியத்துக்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றைச் செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு தினசரி அரை கிலோ காய், கனிகளை உண்பது அவசியம் என்கிறார்கள். சுமார் 65 ஆயிரம் பேரிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை, 25 வயதுள்ள ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவாவது காய்கறி மற்றும் பழங்களை உண்ண வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் ...

திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்

Posted: 20 May 2014 03:24 AM PDT

குமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், மேல்புறத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நேற்று மேல்புறத்தில் வைத்து திருமணம் நடந்தது. இருவீட்டாரும் திரளாக பங்கேற்று சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் மதிய விருந்து பரிமாறப்பட்டது. அப்போது வாலிபர் ஒருவர் தனக்கு கூடுதலாக ஒரு அப்பளம் வேண்டும் என கேட்டார். பந்தி பரிமாறியவர்கள் உங்களுக்கு மட்டும் கூடுதலாக அப்பளம் கொடுத்தால் பலரும் அதுபோல கேட்பார்களே என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு மூண்டது. இருவருக்கும் ஆதரவாக மேலும் ...

சிந்தனைத் துளிகள்

Posted: 20 May 2014 03:23 AM PDT

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். - விவேகானந்தர். மனிதன் முன்னேற ஏழு பாதைகள் பகுத்தறிவு கல்வி சிந்தனையில் உண்மை அன்புடமை நன்னடத்தை கட்டுப்பாடு உள்ள குடும்பம் நல்ல ஆட்சி - சீன அறிஞர் கன்பூசியஸ் "வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க" - தாகூர் ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன். -அண்ணல் காந்தி புதியதோர் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (24)

Posted: 20 May 2014 03:14 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Posted: 20 May 2014 02:20 AM PDT

பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன்

தன்னம்பிக்கை வார்த்தைகள்

Posted: 20 May 2014 01:10 AM PDT

தாழ்வுமனப்பான்மை வேண்டாம்.அனைத்தையும் வெல்ல முடியும்.வெற்றியைப்பற்றிய சிந்தனையுடன் செயல்படுங்கள். தோல்வி, வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடமளிக்காமல் வெற்றியை மட்டுமே சிந்தித்து உயர்வடையுங்கள். உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சியத்தை நோக்கித்தான் இருக்க வேண்டும். தடைகள் எதிர்படும்பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள் மனத்தையும், செயலையும் பின்வாங்கவிடாதீர்கள். இவையெல்லாம் உங்கள் உறுதியை சோதிகக வந்தவை என்று கருதி அந்தத் தடைகளையும் தாண்டி உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடையுங்கள். ...

வத்தல் போடலாமா ? மோர் மிளகாய்

Posted: 20 May 2014 12:58 AM PDT

வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா? உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா? வத்தல் வடாம் வகைகளுக்கான ...

கிராமத்து வாடை..!! [ லிமரைக்கூ .

Posted: 19 May 2014 11:20 PM PDT

* கருமலையோ மிக உயரம் அழகுப்படுத்துகிறது நெட்டையான ஒற்றை பனைமரம். * பேச்சில் கிராமத்து வாடை வியாபாரம் செய்ய வந்தவள் தலையில் தயிர் கூடை. • யாரோ ஏற்படுத்திய சினம் பொறுத்தக் கொண்டான். எப்படியோ? அமைதியடைந்தது மனம். * ஒவ்வொரு மனிதனும் ஒரு ரகம் ருசியாய் விரும்பிக் கடித்துச் சிலர் சாப்பிடுவதோ விரல் நகம். * நடப்பதற்கு ஏனிந்தச் சிக்கல் காலை உறுத்தியது காலணிக்குள் சிக்கிய சிறுகல். *

தர்ப்பணம், சிரார்த்தம் தகவல்கள் !

Posted: 19 May 2014 10:45 PM PDT

இது என்னுடைய 22222 ஆவது பதிவு நண்பர்களே ! 1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும். 2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர ...

மலர்கள்

Posted: 19 May 2014 10:08 PM PDT

ஓரறிவு வண்டிற்கும் வாயார உணவளிக்கும் அட்சையப்பாத்திரம் முற்காலத்தில் முப்பொழுது அறிய இயங்கா கைகடிகாரம் . உமது பெயரை பிரித்துபார்த்தேன் சூரிய+காந்தி பகலைக் கொணரும் -சூரியன் இருள் மாய்ந்த மாக்களை வாழ் வெளிசம்மாக்கிய -காந்தி உன்பெயர் பொருத்தமானதுதான் . தலையில் பாரம் சுமக்க மறுக்கும் நங்கை அந்திப்பொழுது மலரும் அல்லியே-உன்னை அள்ளி சுமப்பதேனோ ? தாமரை இலை மீது ஓட்ட நிரைப்போல் நி நிலத்தை ஒட்டாது நீரை ஒட்டி உள்ளதால் உன்னை பறிப்போரும்,பழிப்போரும் இலர் . மல்லிகையே ...

பேருந்து

Posted: 19 May 2014 10:07 PM PDT

உமது வரவிற்கு எண்ணில்லா வரம் வருகைஎனில் வாசலில் வாய் சண்டை, கை சண்டை . இலவச சேலைக்கு இரந்தலாய் உமது இருக்கைக்கு ஏன் இத்தனை இடர்பாடு இசைவு கிட்டினால் போதும் முதல்வர் அரியணை ஆட்கொண்ட அகமகிழ்வு. எம்மதம் சம்மதம் என ஒரே இருக்கையில் இந்து,கிறிஸ்டின் ,முஸ்லிம் உன் பொது நலம் பேண அக்றினைகள் அடித்துக்கொண்டு இடித்துக் கொள்கிறார்கள். காதலில் அக்கொண்ட கிறுக்கர்கள் சுவரொட்டி என எவளவு கிறுக்குவது. மதுவால் மயங்கிய மாக்கள் உன்னில் சிதற விட்ட செரிக்க உணவு ...

முதுமை

Posted: 19 May 2014 10:06 PM PDT

இறைவன் அருளிய இரண்டாம் குழந்தை குழந்தை அகவையில் தட்டுதடுமாறி ,தளர் நடையில் தந்தை கரம் பற்றி கால் தடம் பதிப்பான் -வருகை பருவத்தில் நீயும் தந்தை கரம் விலக்கி தடியை பற்றுண்டு தடம் பதிப்பாய்-வயதான பருவத்தில் உமது பற்களை யாரிடம் பறிகொடுத்தாயோ? நான் அறியேன் பதம் உச்சரிப்பில் பலவீனம் பல்லிலா குழவிபோல் தட்டுத் தடுமாறி தமிழ் பேசுகிறாய் மழலை போல்அழகாய். இளையகவி

காதல் மயக்கம்-அகரம் அமுதன்

Posted: 19 May 2014 09:30 PM PDT

காதல் மயக்கம் வா!இப் படிஎன் வஞ்சிக் கொடியே வாரி அணைக்கின்றேன் தா!இப் படிஉன் தங்க உடலைத் தழுவிக் களிக்கின்றேன் நீஇப் படிஉன் நாணம் காட்டி நிற்பது கூடாதே பூஎப் படிதன் பூமுகம் மூடினும் பொன்னளி கூடாதோ! நெஞ்சில் நெஞ்சை நேராய்த் தைத்து நித்திரை கொள்ளவோமா? பஞ்சில் தீயைப் பற்ற வைத்துப் பார்த்துக் களிப்போமா? அஞ்சி அஞ்சி அகல்வது மேனோ அருகில் வாராயா? மிஞ்சும் காதல் மிருகம டக்கி வெற்றியைத் தாராயா? ஓரக் கண்ணால் ஒளிந்து ...

சிரித்தார் நந்தி...!! .

Posted: 19 May 2014 08:10 PM PDT

*
காதில் குசுகுசு வென்று
பிரார்த்தனையைச் சொன்னார்கள்
மௌனமாய் சிரித்தார் நந்தி.
*
புற்றில் பால் முட்டை ஊற்றி
பூசை செய்தார்கள்
குடிச்சிருக்குமோ பாம்புகள்.
*
பக்திப் பிரார்த்தனையோடு
இடுப்பில் குழந்தை
தலையில் பால்குடம்.
*


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™