Tamil News | Online Tamil News |
- பழங்குடியின பகுதிகளில் அதிக ஓட்டுப்பதிவு : அதிர்ச்சியில் சத்தீஸ்கர் நக்சல் தீவிரவாதிகள்
- பங்களாவை புனரமைக்க ரூ.2.5 கோடி : கர்நாடக அமைச்சர் செயலுக்கு எதிர்ப்பு
- நதி நீர் பங்கீட்டில் கேரள அரசு ஓரவஞ்சனை! தமிழக குடிநீர் திட்டங்கள், பாசன நிலங்கள் பாதிப்பு
- கூட்டணி தலைவர்கள் சந்திப்பு: விஜயகாந்த் முயற்சியில் பின்னடைவு
- அவதூறு பிரசுரங்களை வினியோகிக்கும் கோழைகள்: மோடி மற்றும் பா.ஜ.,வினர் மீது பிரியங்கா பாய்ச்சல்
- தோல்வி பயத்தால் கடவுளை நாடும் சோனியா: மோடி
- கருணாநிதி மனைவி தயாளு, மகள் கனிமொழி, ராஜா ஆஜராக உத்தரவு:'2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேட்டில் டில்லி சி.பி.ஐ., கோர்ட் அதிரடி
- கருணாநிதிக்கு குண்டுவெடிப்பு தகவல் தெரிந்து இருக்கலாம்: சந்தேகம் கிளப்புகிறார் முதல்வர் ஜெ.,
- குண்டுகள் வெடிக்குமா? தொடர் மிரட்டலால் தமிழகத்தில் பரபரப்பு
- சென்னை ரயில் குண்டு வழக்கு விசாரணையில் போலீசார் திணறல்
- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் விற்ற தங்கம்1,500 கிலோ: அக்ஷய திருதியை நாளில் மக்கள் ஆர்வம்
| பழங்குடியின பகுதிகளில் அதிக ஓட்டுப்பதிவு : அதிர்ச்சியில் சத்தீஸ்கர் நக்சல் தீவிரவாதிகள் Posted: ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், நக்சல் தீவிரவாதிகளின் மிரட்டலை புறக்கணித்து, பழங்குடியின மக்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டளித்துள்ளதால், மிரட்சி அடைந்துள்ள நக்சல் தலைவர்கள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆழ்ந்த யோசனையில் உள்ளனர்.தீவிரவாத இயக்கம் : கடந்த 1967ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த, தீவிரவாத எண்ணம் கொண்ட சிலர், மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி என்ற கிராமத்தில் கூடி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட, வன்முறையை பாதையை தேர்ந்தெடுப்பது என முடிவு செய்து, துவக்கிய இயக்கம் தான் நக்சல் இயக்கம். தமிழகம் உட்பட சில மாநிலங்களில் முற்றிலும் ... |
| பங்களாவை புனரமைக்க ரூ.2.5 கோடி : கர்நாடக அமைச்சர் செயலுக்கு எதிர்ப்பு Posted: பெங்களூரு: மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவும் நேரத்தில், குடிநீருக்காக மக்கள் அல்லாடும் நிலையில், கர்நாடக, ஆளும் காங்கிரஸ் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர், தன் பங்களாவை புனரமைக்க, 2.5 கோடி ரூபாய் செலவிட்டது, பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.காங்., அமைச்சர் : காங்கிரசை சேர்ந்த முதல்வர் சித்தராமய்யா தலைமையிலான கர்நாடக அரசின், பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர், எச்.சி.மகாதேவப்பா. இவர், பெங்களூரு நகரில் உள்ள அரசு பங்களாவில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வீட்டை புனரமைக்க, 2.5 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். இதை அறிந்த மாநில கவர்னர், ... |
| நதி நீர் பங்கீட்டில் கேரள அரசு ஓரவஞ்சனை! தமிழக குடிநீர் திட்டங்கள், பாசன நிலங்கள் பாதிப்பு Posted: பரம்பிக்குளம், சிறுவாணி திட்ட நதி நீர் பங்கீட்டில், கேரள அரசு ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்வதால், தமிழகத்தில் குடிநீர் திட்டங்களும், பாசன நிலங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.தமிழக - கேரள அரசுகள் இடையே முல்லைப்பெரியாறு உள்ளிட்ட 13 நதிநீர் பங்கீட்டு பிரச்னைகள் உள்ளது. இதில், கோவை மாவட்டத்திலுள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் (பி.ஏ.பி.,), சிறுவாணி குடிநீர் திட்டங்களும் அடக்கம்.பி.ஏ.பி., திட்டம் தொடர்பாக தமிழக - கேரள அரசுகள் இடையேயான ஒப்பந்தத்தில், 'கேரளாவில் இடைமலையாறு அணை கட்டி முடித்த பிறகே, பி.ஏ.பி., திட்டத்தில் ஆனைமலையாறு அணை கட்ட வேண்டும்' என, ... |
| கூட்டணி தலைவர்கள் சந்திப்பு: விஜயகாந்த் முயற்சியில் பின்னடைவு Posted: ஓட்டு எண்ணிக்கைக்கு முன், பா.ஜ., கூட்டணி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக, விஜய காந்த் மேற்கொண்ட முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், அ.தி.மு.க.,- - தி.மு.க.,விற்கு மாற்றாக, லோக்சபா தேர்தலில், பா.ஜ., புதிய கூட்டணியை உருவாக்கியது. இதில், தே.மு.தி.க., - -பா.ம.க., - -ம.தி.மு.க., - -கொ.ம.தே.க., - -ஐ.ஜே.கே., -புதிய நீதி கட்சி ஆகியவை இடம் பெற்றன.ஆனால், இக்கட்சிகளின் தலைவர்கள், ஒருவருக்கொருவர் எதிரெதிர் மனப்பான்மை கொண்டவர்கள். இதனால், கூட்டணி அமைவதற்குள் நீண்ட இழுபறி ஏற்பட்டது. ஒருவழியாக கூட்டணி உருவாகி, தொகுதி பங்கீடு முடிந்தாலும், தேர்தலில் ஒருவருக்கு மற்றவர் ... |
| அவதூறு பிரசுரங்களை வினியோகிக்கும் கோழைகள்: மோடி மற்றும் பா.ஜ.,வினர் மீது பிரியங்கா பாய்ச்சல் Posted: அமேதி : ''என் தாயார் மற்றும் சகோதரர் குறித்த அவதூறு தகவல்கள் அடங்கிய கையேடுகளையும், துண்டுப் பிரசுரங்களையும், என் பொதுக்கூட்ட மேடைகள் அருகே, நள்ளிரவில் வீசிச் செல்பவர்கள் கோழைகள்,'' என, பா.ஜ., கட்சியினரை, காங்., தலைவர், சோனியாவின் மகள் பிரியங்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம், அமேதி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில், அவருக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரம் செய்து வரும், அவரின் சகோதரி பிரியங்கா, பா.ஜ.,வினரையும், அந்தக் கட்சியின், பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியையும் ... |
| தோல்வி பயத்தால் கடவுளை நாடும் சோனியா: மோடி Posted: காலியாபாத் (உ.பி.,) : ''இதற்கு முன், ஒருமுறை கூட, கடவுளைப் பற்றி பேசாத காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ., ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக, இப்போது, கடவுளிடம் வேண்டுகிறார். அப்படியானால், அவருக்கு எவ்வளவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை, நீங்களே உணருங்கள்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, மொத்தம் உள்ள, 80 லோக்சபா தொகுதிகளில், 47 தொகுதிகளுக்கு ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்து விட்டது. மீதமுள்ள, 33 தொகுதிகளுக்கு, இம்மாதம், 7, 12 ஆகிய தேதிகளில், தேர்தல் ... |
| Posted: கலைஞர் தொலைக்காட்சிக்கு, முறைகேடான வழிகளில், 200 கோடி ரூபாய் வந்ததாக கூறி, அமலாக்கத் துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், இம்மாதம் 26ல், ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அக்கட்சித் தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி மற்றும் மனைவி தயாளு உட்பட, 19 பேருக்கு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.'2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கை, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது. இதில், 'கலைஞர்' தொலைக்காட்சிக்கு, 200 கோடி ரூபாய், முறைகேடாக வந்த விவகாரம், தற்போது சூடுபிடித்து உள்ளது.ரூ.200 கோடி வழங்கிய ... |
| கருணாநிதிக்கு குண்டுவெடிப்பு தகவல் தெரிந்து இருக்கலாம்: சந்தேகம் கிளப்புகிறார் முதல்வர் ஜெ., Posted: சென்னை : ''தி.மு.க., தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் எம்.பி.,யான இளங்கோவன், ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கும் போது, பயங்கரவாதிகளிடம் இருந்து, நிறைய தகவல்களை பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது. அப்படி அவர்கள் ஏதேனும் தகவல்களை பெற்றிருந்தால், அதை உடனடியாக, தமிழக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்,'' என, ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:கோவை தொடர் குண்டுவெடிப்பை முன்கூட்டியே தடுக்கத் தவறிய, அப்போதைய முதல்வர் கருணாநிதி, ரயில் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, விவரம் புரியாமல், மனம் போன போக்கில், அரசியல் ... |
| குண்டுகள் வெடிக்குமா? தொடர் மிரட்டலால் தமிழகத்தில் பரபரப்பு Posted: சென்னை : சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெங்களூரு - -கவுகாத்தி விரைவு ரயில் பெட்டிகளில், நேற்று முன்தினம் காலை, இரு குண்டுகள் வெடித்த சம்பவத்தில், இளம்பெண் பலியானார்; பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று, தமிழகம் முழுவதும் பல ஊர்களில் வெடிகுண்டு பீதி கிளப்பப்பட்டது.'சென்னை ஆவடி ரயில் நிலையத்தில், சக்தி வாய்ந்த குண்டுகள் வெடிக்கும்' என, நேற்று முன்தினம் இரவு, 10:25 மணிக்கு, சென்னை காவல் துறை கட்டுப்பாட்டறைக்கு, மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தார்.சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி, ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் ... |
| சென்னை ரயில் குண்டு வழக்கு விசாரணையில் போலீசார் திணறல் Posted: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தி வரும், தமிழக சி.பி.சி.ஐ.டி., மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர்( என்.எஸ்.ஜி.,) இதுவரை துப்பு ஏதும் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் காலை, பெங்களூரில் இருந்து வந்த, கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின், இரண்டு பெட்டிகளில், அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில், ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண், சுவாதி, 24, பலியானார்.காயமடைந்த, 14 பேர், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தொடர்பாக, ... |
| தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் விற்ற தங்கம்1,500 கிலோ: அக்ஷய திருதியை நாளில் மக்கள் ஆர்வம் Posted: அக்ஷய திருதியையை முன்னிட்டு, பொது மக்கள், நேற்று, ஆர்வமுடன், நகைக் கடைகளில், தங்க ஆபரணங்களை வாங்கிச் சென்றனர். இதனால், நேற்று, ஒரு நாளில் மட்டும், தமிழகத்தில், 1,500 கிலோ அளவுக்கு தங்க நகைகள் விற்பனையாகி உள்ளது.தமிழகம் உட்பட, நாடு தழுவிய அளவில், நேற்று, அக் ஷய திருதியை கொண்டாடப்பட்டது. சில ஆண்டுகளாக, அக்?ஷய திருதியை அன்று, தங்கம் வாங்கும் பழக்கம், பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது.மே தினத்தையொட்டி, நேற்று முன்தினம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை. இதனால், நேற்று, ஒரு நாள் விடுமுறை எடுத்தால், தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு விடுமுறை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 03,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |