Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார், வக்கார் யூனிஸ்

Posted: 02 May 2014 01:15 PM PDT

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் பொறுப்பு ஏற்கிறார்.

வக்கார் யூனிஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த டேவ் வாட்மோரின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரப்படுத்தியது.

இப்பொறுப்புக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிசும் விண்ணப்பித்து இருந்தார். அவரிடம் நேற்று முன்தினம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜம் சேத்தி நேர்காணல் நடத்தினார்.

இந்த நிலையில் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இதனை நஜம் சேத்தி நேற்று தெரிவித்தார். வக்கார் யூனிசும், புதிய தேர்வு குழு தலைவர் மொயின் கானும் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

2–வது முறை

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்த மாத இறுதியில் பதவி ஏற்க உள்ள 42 வயதான வக்கார் யூனிஸ் ஏற்கனவே 2010–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.

அந்த சமயத்தில் அவருக்கும், அப்போது கேப்டனாக இருந்த அப்ரிடிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக பயிற்சியாளர் பதவியை துறப்பதாக கூறி வக்கார் யூனிஸ் வெளியேறினார். அதைத் தொடர்ந்து அப்ரிடியும் கேப்டன் பதவியில் இருந்து தூக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

category:

போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி

Posted: 02 May 2014 01:08 PM PDT

ஓய்ராஸ்,

போர்ச்சுகல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஓய்ராஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா– ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6–4, 6–3 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் லீசல் ஹூபர்– லிசா ரெய்மான்ட் இணையை தோற்கடித்து இறுதிசுற்றில் அடியெடுத்து வைத்தது. இந்த வெற்றியை பெற சானியா கூட்டணிக்கு 1 மணி 14 நிமிடங்கள் தேவைப்பட்டது.

category:

ஆரே காலனியில் 3 பேர் கும்பலால் பெண் கற்பழிப்பு: தலைமறைவு குற்றவாளிகள் 2 பேர் சென்னையில் பிடிபட்டனர்

Posted: 02 May 2014 12:23 PM PDT

மும்பை,

ஆரே காலனியில் கணவர் கண் முன்னே 3 பேர் கும்பலால் இளம்பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில், தலைமறைவு குற்றவாளிகள் 2 பேர் சென்னையில் பிடிபட்டனர்.

கொடூர சம்பவம்

மும்பை ஆரே காலனி, மோராச் குடிசை பகுதியில் 21 வயது இளம்பெண் ஒருவர் தன் கணவருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 26–ந் தேதி நள்ளிரவு அந்த பகுதியை சேர்ந்த வேல்பாண்டி, வெள்ளபாண்டி, ஜெய்ஸ்ராஜ் தேவேந்திரா ஆகிய 3 பேர் இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். பெண்ணின் கணவரை கத்தியை காட்டி மிரட்டி கயிற்றால் அவரை கட்டி போட்டனர். பின்னர் கணவரின் கண் முன்னே அந்த பெண்ணை கொடூரமாக கற்பழித்துவிட்டு தப்பினர்.

அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சயான் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆரே காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்பாண்டியை கைது செய்தனர். மற்ற 2 பேர்களும் தலைமறைவானார்கள்.

சென்னையில் பிடிபட்டனர்

 இந்த சம்பவத்தை கண்டித்தும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மகளிர் அமைப்புகளும், ஆரே காலனி பகுதி மக்களும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர்.

 தலைமறைவான வெள்ளபாண்டி மற்றும் ஜெய்ஸ்ராஜ் தேவேந்திரா ஆகியோர் சென்னையில் பதுங்கி இருப்பதாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விரைந்து சென்ற மும்பை குற்றப்பிரிவு போலீசார் தமிழக போலீசாரின் உதவியுடன் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

category:

News Group Category:

குந்தாபுரா அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபர் கைது

Posted: 02 May 2014 12:19 PM PDT

மங்களூர்,

உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா மரக்காளா கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்(வயது 32). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சல் போட்டு அலறினாள். அவளது அலறல் சத்தத்தை கேட்டு அந்த சிறுமியின் பெற்றோர் வந்தனர். இதனால் கணேஷ் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குந்தாபுரா போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரக்காளா காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த கணேசை கைது செய்தனர்.
 

category:

News Group Category:

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் குண்டு வெடித்து பெண் பலி குண்டு வைத்த சதிகாரர்கள் பற்றி துப்பு துலங்குகிறது 5 மாநிலங்களுக்கு சென்று தனிப்படை போலீஸ் விசாரணை

Posted: 02 May 2014 12:17 PM PDT

சென்னை

பெங்களூரில் இருந்து சென்னை வழியாக அசாம் மாநிலம் கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் காலை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்து நின்றபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 குண்டு கள் வெடித்தன.

குண்டு வெடித்து பெண் பலி

அந்த ரெயிலின் எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகளில் இந்த குண்டுகள் வெடித்தன.

இதில், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சுவாதி (வயது 24) என்ற பெண் என்ஜினீயர் பலி ஆனார். மேலும் 14 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல் கட்டமாக, சென்டிரல் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு தில்லை நடராஜன், இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்துவார்கள் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கிவிட்டனர்.

குண்டு வெடித்த ரெயில் பெட்டிகள் சென்டிரல் ரெயில் நிலையத்தின் 11-வது பிளாட்பாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. அந்த பெட்டிகளில் வெடிகுண்டு நிபுணர் ஆசீர் விஜயகுமார் தலைமையிலான வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி, வெடிகுண்டு சிதறல்களை கைப்பற்றி உள்ளனர். வெடித்த குண்டு, குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் 'டைம்பாம்' வகையைச் சேர்ந்த 'பைப்' வெடிகுண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சதிகாரர்கள்

ரெயில் பெட்டிகளில் குண்டு வைத்த சதிகாரர்கள் 4 பேர் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில், குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த ரெயில் நின்றிருந்த 9-வது பிளாட்பாரத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

கேமராவில் பதிவான காட்சிகளில், எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் ஏறும் 4 பேரை, போலீசார் சந்தேக பார்வையில் வைத்து உள்ளனர். அவர்களின் புகைப்படங்கள் கேமரா காட்சியில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. அந்த புகைப்படங்களை, காயம் அடைந்த பயணிகளிடம் காட்டி சூப்பிரண்டு நாகஜோதி நேற்று விசாரணை நடத்தினார்.

துப்பு துலங்குகிறது

இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டுகள் அன்பு, ஜெயகவுரி ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் துணை சூப்பிரண்டு ராஜா சீனிவாசன் உள்ளிட்ட 3 துணை சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக் டர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசார் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இந்த தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் பெங்களூர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இது தவிர அசாம், பீகார், சீமாந்திரா ஆகிய மாநிலங்களிலும் தனிப்படையினர் முகாமிட்டு உள்ளனர். தனிப்படை போலீசாரின் விசாரணையில், ரெயிலில் குண்டு வைத்த சதிகாரர்கள் பற்றி துப்பு துலங்குகிறது.

பெங்களூரில் விசாரணை

குண்டு வெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக புதன்கிழமை நள்ளிரவு 1.05 மணிக்கு புறப்பட்டது. அங்கிருந்து ரெயில் புறப்படும் முன் அதில் குண்டு வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும், குண்டு வெடிப்பு திட்டத்தை சதிகாரர்கள் பெங்களூரில் இருந்து அரங்கேற்றி இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்து உள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி, தகவல்களை திரட்டுவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று காலை பெங்களூர் சென்றனர். பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தை பார்வையிட்ட அவர்கள், பின்னர் பெங்களூர் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு சித்தராமப்பா, ரெயில்வே பாதுகாப்பு மூத்த அதிகாரி லூயிஸ் அமுதன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து 2 மணி நேரத்துக்கும் மேலாக குண்டுவெடிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

கேமராவில் பதிவான காட்சிகள்

கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதற்கு முன் பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் நின்றிருந்த போது ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் பெங்களூர் ரெயில்வே போலீசார் வழங்கினார்கள்.

அந்த காட்சிகளை வைத்து, அந்த ரெயிலில் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் சந்தேகத்துக்கு இடமாக யாராவது மர்ம நபர்கள் பயணம் செய்தார்களா? என்பது பற்றி தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. மகேஸ்குமார் அகர்வால், நேற்று மாலை 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

உறுதியான தகவல்கள்

நாங்கள் விசாரணையை தொடங்கி விட்டோம். முதல் கட்டமாக குண்டு வெடிப்பு நடந்த ரெயில் பெட்டிகளில் ஆய்வுசெய்தோம். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள், வெடித்த குண்டு சிதறல்களை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் அறிக்கை கொடுத்த பிறகுதான், வெடித்த குண்டு எந்த வகையைச் சேர்ந்தது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

குண்டு வைத்த சதிகாரர்கள் யார்? என்பது பற்றி துப்பு துலக்கி வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் இதில் உறுதியான தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தனிப்படை போலீசார் சென்னை மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

குமரி மாவட்டத்தில் மின்னல் தாக்கி 6 பெண்கள் காயம்

Posted: 02 May 2014 11:32 AM PDT

களியக்காவிளை,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி&மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. களியக்காவிளை பகுதியில் நேற்று மதியம் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது களியக்காவிளை குளப்புறம் பகுதியை சேர்ந்த டாளி (வயது48), மேரி கில்டா, வசந்தா, சுசீலா, ராஜம் ஆகிய 5 பெண்கள் ஊரக வேலை உறுதி திட்டப்பணியை முடித்துவிட்டு வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை மின்னல் தாக்கியது. இதில் 5 பெண்களும் படுகாயம் அடைந்து சுருண்டு விழுந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதேபோன்று பூதப்பாண்டி பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. அப்போது இறச்சகுளத்தை சேர்ந்த சரசம் (52) என்ற பெண் வீட்டு வாசல் பகுதியில் இருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவரது 2 கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
 

News Group Category:

நரேந்திர மோடியை குறிவைத்து நடத்தப்பட்டதா? ஐ.ஜி.பதில்

Posted: 02 May 2014 11:29 AM PDT

சென்னை,

ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால், நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

ரெயில் குண்டு வெடிப்பு சம்பவம், நரேந்திர மோடியை குறிவைத்து நடத்தப்பட்டதா? என்ற கேள்விக்கு, ஐ.ஜி.மகேஷ்குமார் அகர்வால் பதில் அளித்தார். குற்றவாளி கைது செய்யப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்பட்டபிறகுதான் அது பற்றி சொல்ல முடியும், என்று அவர் கூறினார்.

சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி, ஜாகீர்உசேனுக்கும், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமா? என்ற கேள்விக்கு, இதுவரை நடந்த விசாரணையில், அது போன்ற தகவல்கள் இல்லை என்று குறிப்பிட்டார். மதுரையில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுக்கும், பெங்களூரில் வெடித்த குண்டுக்கும், தற்போது ரெயிலில் வெடித்த குண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்றும், அவர் மேலும் கூறினார்.

category:

News Group Category:

ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்கும்போது சக்கரத்தில் கோளாறு

Posted: 02 May 2014 11:25 AM PDT

சென்னை,

ஐதராபாத்தில் இருந்து நேற்று இரவு 9.15 மணிக்கு சென்னை வந்த Ôஏர் இந்தியாÕ விமானத்தில் 166 பயணிகளும் 5 ஊழியர்களும் என மொத்தம் 171 பேர் இருந்தனர். அது தரையிறங்கும்போது விமானத்தின் பின் பகுதி சக்கரங்களில் ஒன்று சுழலாமல் சிக்கி நின்றது. இதனால் விமானம் பெரும் சத்தத்துடன் அதிர்ந்து குலுங்கியது.

உள்ளே இருந்த பயணிகள் பீதி அடைந்து பரபரப்புக்குள்ளாயினர். விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை Ôபிரேக்Õ போட்டு ஓடுபாதையின் நடுவிலேயே நிறுத்தினார். இதனால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அதிகாரிகளும் தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று, விபத்து நிகழாமல் தடுத்தனர். பின்னர் இழுவை வாகனம் மூலம் அந்த விமானம், பயணிகள் இறங்கும் பகுதிக்கு இழுத்து வரப்பட்டது. இதைத்தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக இறங்கினர்.

இந்த விபத்து காரணமாக மதுரை, திருச்சி, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கொடுத்த அறிவுரையின்படி நடுவானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. இரவு 10 மணிக்குப் பிறகு அந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின. விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டன.

category:

News Group Category:

இன்று நாள் எப்படி?

Posted: 02 May 2014 11:23 AM PDT

Endru Image: 

பெங்களூரில் ஏறிய 4 மர்ம மனிதர்கள் யார்?

Posted: 02 May 2014 11:19 AM PDT

பெங்களூர்,

பெங்களூரில் இருந்து கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்தவர்களில் சிலர் வரவில்லை என்று விசாரணையில் தெரியவந்து உள்ளது. அவர்கள் யார்? அவர்கள் பயணத்தை தவிர்த்தற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் பெங்களூரில் இருந்து கிளம்பிய அந்த ரெயில் சில ரெயில் நிலையங்களை கடந்த பிறகு, ஒரு ரெயில் நிலையத்தில் 4 பேர் அதில் ஏறியதாகவும், அவர்கள் தங்கள் பைகளை இருக்கைக்கு அடியில் வைத்ததாகவும் நேரில் பார்த்த பயணிகள் சிலர் தெரிவித்து உள்ளனர்.

அது உண்மைதானா? என்றும், அந்த 4 பேர் யார்? என்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™