Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனு

Posted:

புதுடில்லி: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி, வீர விளையாட்டாகக் கருதப்படுகிறது. போட்டிகளின்போது, காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால், இந்த போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி, விலங்குகள் நல உரிமை அமைப்புகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்து, ...

இந்தியாவில் பலமான மத்திய அரசு:இலங்கை மகிழ்ச்சி

Posted:

கொழும்பு:இந்தியாவில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வின் நரேந்திர மோடி தலைமையிலான சக்திவாய்ந்த அரசு அமைவது இலங்கைக்கு மகிழ்ச்சியளிப்பதாக, அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சரும் மற்றும் அரசின் செய்தி தொடர்பாளருமான கெஹலியா ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் கூறியதாவது:இந்தியாவில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் மத்தியில் சக்திவாய்ந்த அரசும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதா 37 லோக்சபா தொகுதிகளை பெற்றிருந்தாலும் மத்தியில் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும் எங்களுக்கு மகிழ்ச்சியாக ...

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு: சி.பி.ஐ., முடிவுக்கு சி.வி.சி., எதிர்ப்பு

Posted:

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், சில நிறுவனங்களுக்கு எதிரான, விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வர, மத்திய புலனாய்வு நிறுவனமான - சி.பி.ஐ.,க்கு, மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையமான - சி.வி.சி., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கணக்கு தணிக்கை அலுவலகம்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், 1.86 லட்சம் கோடி ரூபாய், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் புகார் தெரிவித்தது. இதையடுத்து, நிலக்கரி சுரங்க ...

இலங்கை மீன்வளத்தை பயன்படுத்துவதா? சர்வதேச பிரச்னையாகும் என மிரட்டல்

Posted:

கொழும்பு: ''இலங்கையின் மீன் வளத்தை, இந்தியாவில் பதவியேற்க உள்ள புதிய அரசு, தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்தால், இந்த பிரச்னையை, சர்வதேச அமைப்புகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல நேரிடும்,'' என, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஞ்சிதா செனரத்னே கூறியுள்ளார்.இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஞ்சிதா செனரத்னே கூறியதாவது: இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையே, மீன் பிடிப்பதில், இழு வலை, மடி வலை ஆகியவற்றை பயன்படுத்துவது உள்ளிட்ட, சில முக்கிய பிரச்னைகள் உள்ளன. இது தொடர்பாக, ஏற்கனவே இந்திய அரசுடன் பேச்சு நடத்தி உள்ளோம். இதன் அடிப்படையில், இலங்கை கடல் பகுதியில், ...

குஜராத்தில் 21 கோடீஸ்வர எம்.பி.,க்கள்

Posted:

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 26 எம்.பி.,க்களில், 21 பேர் கோடீஸ்வரர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 26 லோக்சபா தொகுதிகள் உள்ளன. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும், ஆளுங்கட்சியான, பா.ஜ., வெற்றி பெற்றது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள் குறித்தும், அவர்களின் பின்னணி குறித்தும், தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன்படி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட, எம்.பி.,க்களில், 21 பேர், கோடீஸ்வரர்கள். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் ...

எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி?

Posted:

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற, அ.தி.மு.க.,வும், திரிணமுல் காங்.,கும், ஒரு குழுவாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை, திரிணமுல் தரப்பு உறுதி செய்தாலும், 'இது தொடர்பாக, இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்றும் தெரிவித்து உள்ளது.லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு, பெரும்பான்மை இடங்கள் கிடைத்துள்ளன. காங்., படுதோல்வியை சந்தித்து உள்ளது. லோக்சபாவில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறும் அளவுக்கு கூட, எம்.பி.,க்கள் பலம், காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. மொத்த இடங்களில், குறைந்தது, 10 சதவீத எம்.பி.,க்களை பெறும் ...

ராஜ்யசபாவில் மோடி அரசுக்கு சிக்கல்

Posted:

புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், ராஜ்யசபாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த அந்த சபையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தான் அதிக, எம்.பி.,க்கள் உள்ளனர்.மொத்தம், 543 லோக்சபா எம்பி.,க் களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ., 282 இடங்களைப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. அதன் கூட்டணி கட்சிகள், 53 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம், 335 ...

மந்திரி பதவியை பிடிக்க பா.ஜ., - எம்.பி.,க்கள் போட்டி: மோடி, ராஜ்நாத் சிங்கை சந்திக்க படையெடுப்பு

Posted:

மத்தியில் புதிதாக பதவி யேற்க உள்ள, நரேந்திர மோடி தலைமையிலான அரசில், அமைச்சர் பதவியைப் பிடிக்க, பா.ஜ., - எம்.பி.,க்கள் இடையே போட்டி உருவாகி உள்ளது. மோடி தங்கியுள்ள குஜராத் பவனுக்கும், பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கின் வீட்டிற்கும் படையெடுத்து, ஆதரவு திரட்டி வருகின்றனர்.லோக்சபா தேர்தலில், தனிப் பெரும்பான்மை உடன், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளதால், அரசு அமைப்பது தொடர்பான, அடுத்த கட்ட நடவடிக்கைகளில், அக்கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, தற்போது டில்லி, குஜராத் பவனில் தங்கியுள்ளதால், அந்த பவன், சில ...

சோனியா, ராகுலின் ராஜினாமா முடிவு நிராகரிப்பு: தோல்விகளை ஆராய காங்கிரஸ் திட்டம்

Posted:

புதுடில்லி: லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முன்வந்ததை, காங்., செயற்குழு நிராகரித்தது. தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்கு, சோனியாவுக்கு அதிகாரம் அளிப்பதாகவும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில், நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சியிலும், 'ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என்ற கோஷம் எழுந்தது.மேலிடம் தயக்கம்: அவரை பிரதமர் வேட்பாளராக ...

மோடி ஆட்சியில் ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டம் தொடருமா? மக்கள் பங்கேற்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு

Posted:

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நரேந்திர மோடி ஆட்சியில், ஜவஹர்லால் தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம் (ஜே.என்.என்.யு.ஆர்.எம்.,) தொடருமா என்பது, கேள்விக்குறியாகி உள்ளது.நாட்டின் அனைத்து பெருநகரங்களிலும், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டம், 2005ல், காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் துவக்கப்பட்டது.ரூ. 31,000 கோடி: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட, நாடு முழுவதும், 67 நகரங்களில், 550 திட்டங்களுக்காக, 31 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ஒப்புக்கொண்டதில், இதுவரை, 21,286 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு ...

தி.மு.க.,வில் நடப்பது என்ன? ஸ்டாலினை தொடர்ந்து மா.செ.,க்களும் விலகல் கடிதம்

Posted:

தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வில் திடீர் ராஜினாமா செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் பொருளாளர், இளைஞரணி செயலர் போன்ற பதவிகளில் இருந்து ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக, நேற்று முன்தினம் வெளியான செய்தியைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்டச் செயலர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதாக, நேற்று செய்தி வெளியானது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 35 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க.,வால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தலித் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் அமைத்திருந்த கூட்டணியும், தி.மு.க.,வுக்கு கை கொடுக்கவில்லை. ...

தமிழக அமைச்சரவையில் இருந்து 3 பேர் "டிஸ்மிஸ்!': மாஜிக்கள் 3 பேருக்கு மீண்டும் மந்திரி யோகம்

Posted:

சென்னை: லோக்சபா தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதும், முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவையில், அதிரடி மாற்றம் செய்துள்ளார். அமைச்சர்கள் தாமோதரன் (வேளாண்), ரமணா (வருவாய்), பச்சைமால் (தொழிலாளர் நலன்) ஆகியோரை, 'டிஸ்மிஸ்' செய்துள்ளார். அவர்களுக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர்கள், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி, கோகுல இந்திரா ஆகியோரை, மீண்டும் அமைச்சராக்கி உள்ளார். நால்வர் அணியில், முக்கிய பங்கு வகித்து வந்த கே.பி.முனுசாமி உட்பட, மூன்று அமைச்சர்களின் இலாகாக்களில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் முடிந்ததும், அமைச்சரவை மாற்றம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™