Tamil News | Online Tamil News |
- வடக்கு, கிழக்கு மாநிலங்களை கலக்கிய பாரதிய ஜனதா
- காங்.,செயற்குழுவில் அதிருப்தி எதிரொலிக்குமா? சோனியா முடிவு குறித்து பரபரப்பு
- சொந்த தொகுதியில் மண்ணை கவ்விய காங்., வாரிசுகள்
- தி.மு.க., கோட்டையை அசைத்த அதிகார மையம்: கோடநாட்டில் வகுக்கப்பட்ட வியூகம்
- என்ன செய்யப் போகின்றனர் 37 எம்.பி.,க்கள்: தமிழக நலனுக்காக லோக்சபாவில் ஒரே குரலாக ஓங்கி ஒலிக்குமா?
- அழகிரியை மறந்து விட்டேன்: கருணாநிதி கோபம்
- தேர்தல் படுதோல்வியால் ஸ்டாலின் ராஜினாமா 'டிராமா': கருணாநிதி உட்பட தலைவர்கள் பரபரப்பு
- தமிழகத்திற்கு ஒத்துழைப்பு: ஜெ.,யிடம் மோடி உறுதி
- மோடி மந்திரி சபையில் இடம்பெறுவது யார்? மூத்த தலைவர் அத்வானிக்கு சபாநாயகர் பதவி
- வெற்றி தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவிப்பதா? கனடா உட்பட பல நாடுகளுக்கு ராஜபக் ஷே கண்டனம்
- பீகார் அடுத்த முதல்வர் யார் என்பதில் குழப்பம்: நிதிஷை மீண்டும் தேர்வு செய்ய அமர்க்களம்
| வடக்கு, கிழக்கு மாநிலங்களை கலக்கிய பாரதிய ஜனதா Posted: புதுடில்லி: லோக்சபா தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ., நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளின் பல அரசியல் கட்சிகளுக்கு, பலத்த தோல்வியை பெற்றுத் தந்துள்ளது.பா.ஜ.,விடம் பலத்த அடி வாங்கிய கட்சிகளாக, வடக்கு மாநிலங்களில் உள்ள பகுஜன் சமாஜ் மற்றும் ஜம்மு - காஷ்மீரின், தேசிய மாநாட்டு கட்சிகளைக் கூறலாம். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியால், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.அது போல், மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியாலும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.உத்தர பிரதேசத்தில், 1998ல், ... |
| காங்.,செயற்குழுவில் அதிருப்தி எதிரொலிக்குமா? சோனியா முடிவு குறித்து பரபரப்பு Posted: புதுடில்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம், டில்லியில் இன்று கூடுகிறது. இதில், அக்கட்சியின் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.தார்மீக பொறுப்புநடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும், 500க்கும் மேற்பட்ட தொகுதிகளில், கட்சி சார்பிலும், கூட்டணியாகவும் போட்டியிட்ட காங்கிரஸ், 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது; எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ., 282 இடங்களை பிடித்துள்ளது.இந்த படுதோல்விக்கு, தார்மீக பொறுப்பேற்றுள்ள சோனியாவும், ராகுலும், ... |
| சொந்த தொகுதியில் மண்ணை கவ்விய காங்., வாரிசுகள் Posted: புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும் பல காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகள், அவர்களின் சொந்தத் தொகுதியிலேயே மண்ணைக் கவ்வியுள்ளனர்.மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரான, ராஜேஷ் பைலட்டின் மகனும், மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை இணை அமைச்சருமான, சச்சின் பைலட், ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ., வேட்பாளர், சன்வர்லால் ஜாட்டிடம், 1.71 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளார்.மத்திய நிதி அமைச்சரான சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், 2009 லோக்சபா தேர்தலில், தன் தந்தை வெற்றி பெற்ற தொகுதியான, ... |
| தி.மு.க., கோட்டையை அசைத்த அதிகார மையம்: கோடநாட்டில் வகுக்கப்பட்ட வியூகம் Posted: ஊட்டி:கோடநாடு எஸ்டேட் பங்களாவை, அதிகார மையமாக வைத்து, ஜெயலலிதா வகுத்த தேர்தல் வியூகம், தி.மு.க.,வின் கோட்டையான நீலகிரியை அசைத்து பார்த்துள்ளது. இது, தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டசபை தொகுதிகள், தி.மு.க.,வின் செல்வாக்கு மிகுந்த தொகுதிகள். மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் ஆகியவை அ.தி.மு.க., செல்வாக்கு பெற்ற தொகுதிகள். இந்த அடிப்படையில் தான், அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து வந்தன.அதிகார மையமான கோடநாடுமுதல்வர் ஜெ., கோடநாடு எஸ்டேட் ... |
| என்ன செய்யப் போகின்றனர் 37 எம்.பி.,க்கள்: தமிழக நலனுக்காக லோக்சபாவில் ஒரே குரலாக ஓங்கி ஒலிக்குமா? Posted: கோவை :தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரே கட்சியில் 37 எம்.பி.,க்கள் இருப்பதால், தமிழக நலன் தொடர்பாக லோக்சபாவில் ஒன்று பட்டு குரல் கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 லோக்சபா தொகுதிகளில், 37 தொகுதிகளை வென்று, இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க., உருவெடுத்துள்ளது. எதிர்க்கட்சியே இல்லாத லோக்சபாவாக இருப்பதால், அ.தி.மு.க.,வின் குரல் ஓங்கி ஒலிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது; இதற்கு முன்னால், தமிழகத்திலிருந்து ஒரே கட்சியின் சார்பில், இத்தனை எம்.பி.,க்கள் ... |
| அழகிரியை மறந்து விட்டேன்: கருணாநிதி கோபம் Posted: சென்னை:''பொருளாளர் ஸ்டாலின் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக கூறுவது கடைந்தெடுத்த பொய்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தி.மு.க.,வில் இருந்து விலக்கப்பட்ட அழகிரியை மறந்ததாகவும் தெரிவித்தார்.அவரது பேட்டி:லோக்சபா தேர்தலில், தி.மு.க., தோல்விக்கு பொறுப்பேற்று, பொருளாளர் ஸ்டாலின் ராஜினாமா செய்து, கடிதம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறதே?அது பொய்; கடைந்தெடுத்த பொய். பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக என்னிடம் வந்து கூறினார்.லோக்சபா தேர்தலில், தி.மு.க., தோற்றதற்கு காரணம் என்ன?ஓட்டுகள் குறைந்தது தான்.தேர்தல் தோல்வி குறித்து ஆராய, ... |
| தேர்தல் படுதோல்வியால் ஸ்டாலின் ராஜினாமா 'டிராமா': கருணாநிதி உட்பட தலைவர்கள் பரபரப்பு Posted: லோக்சபா தேர்தல், படுதோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக, அறிவித்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பின் முடிவை வாபஸ் பெற்றார்.லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான, 16ல், சென்னை கோபாலபுரம் வீட்டிற்கு வந்த ஸ்டாலினிடம், கருணாநிதி தன் வருத்தத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். அதன்பின், கோபாலபுரம் வீட்டிற்கு ஸ்டாலின் வரவில்லை. நேற்று முன்தினம் இரவு முழுவதும், ஸ்டாலின் தூங்காமல், தன் அறையில், ஆழ்ந்த சிந்தனையில் இருந்துள்ளார். அப்போது, ஒரு கடிதத்தை எழுதி, அதை கவரில் போட்டு மூடி வைத்துள்ளார். நேற்று காலை, 10:30 ... |
| தமிழகத்திற்கு ஒத்துழைப்பு: ஜெ.,யிடம் மோடி உறுதி Posted: சென்னை:லோக்சபா தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நரேந்திர மோடி தொலைபேசியில் நன்றி தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில், ஆளும் அ.தி.மு.க., 39க்கு, 37 இடங்களைப் பெற்று, மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.பா.ஜ., வெற்றி பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம், முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில் நேற்று பிற்பகல், முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நரேந்திர மோடி, கடிதத்திற்கு நன்றி ... |
| மோடி மந்திரி சபையில் இடம்பெறுவது யார்? மூத்த தலைவர் அத்வானிக்கு சபாநாயகர் பதவி Posted: புதுடில்லி: புதிய அரசு அமைப்பது தொடர்பாக, பா.ஜ., தலைவர்கள் இடையே தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிரதமராக பதவி யேற்க உள்ள, நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற வேண்டியவர்கள் யார் யார் என்பது குறித்து, நாளை முடிவு செய்யப்படும். அதே நேரத்தில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு, லோக்சபா சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 282 இடங்களில் தனித்து வெற்றி பெற்ற, பா.ஜ., தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. அதனால், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில், புதிய அரசு அமைப்பது தொடர்பாக, ... |
| வெற்றி தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவிப்பதா? கனடா உட்பட பல நாடுகளுக்கு ராஜபக் ஷே கண்டனம் Posted: கொழும்பு:இலங்கையில் விடுதலை புலிகளை வெற்றி கொண்டதன், ஐந்தாவது ஆண்டு தின கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்த நாடுகளுக்கு, அதிபர் ராஜபக் ஷே கண்டனம் தெரிவித்துள்ளார்.இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டை, 2009ல் முடிவுக்கு வந்தது. விடுதலை புலிகளை வெற்றி கொண்ட நாளை, இலங்கை அரசு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. நேற்று ஐந்தாவது ஆண்டு தின கொண்டாட்டம் நடைபெற்றது.இதையொட்டி, ராணுவத்தினரின் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பங்கேற்க வேண்டும் என, கொழும்பில் உள்ள பல நாடுகளின் துாதரகங்களுக்கும் அழைப்பு ... |
| பீகார் அடுத்த முதல்வர் யார் என்பதில் குழப்பம்: நிதிஷை மீண்டும் தேர்வு செய்ய அமர்க்களம் Posted: பாட்னா:'லோக்சபா தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ்குமாரின் முடிவை ஏற்கக் கூடாது; அவரையே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும்' என, ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று வலியுறுத்தினர்.இதனால், புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, நேற்று கூடிய கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.243 தொகுதிகளை...பீகாரில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான அரசு பதவியில் இருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 19,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |