Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சீமாந்திராவில் தெலுங்கு தேசம் - பா.ஜ., கூட்டணி அபாரம் : தெலுங்கானாவின் முதல் முதல்வராகிறார் சந்திரசேகர ராவ்

Posted:

ஐதராபாத்: லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவின் சீமாந்திரா மற்றும் தெலுங்கானா பகுதி சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் நடந்தது. இதில், சீமாந்திராவில், தெலுங்கு தேசம் - பா.ஜ., கூட்டணியும், தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. சீமாந்திரா முதல்வராக, சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானா முதல்வராக, சந்திரசேகர ராவும் பதவியேற்க உள்ளனர்.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில், ஆளும் காங்கிரசும், சிக்கிமில், ஆளும் சிக்கிம் ஜனநாயக கட்சியும் மீண்டும் அரசு ...

நிதிஷ் கோட்டையில் வெற்றிகொடி நாட்டிய பா.ஜ.,

Posted:

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள, 42 லோக்சபா தொகுதிகளில், முதல்வர் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ், 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், பா.ஜ.,வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தலா இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2009 லோக்சபா தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான, இடதுசாரி கட்சிகள், 15 தொகுதிகளிலும், திரிணமுல் காங்கிரஸ், 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. இம்முறை, கூடுதலாக, 15 தொகுதிகளை மம்தா கட்சி பிடித்துள்ளது. கடந்த, தேர்தலில் ஆறு இடங்களைப் பிடித்த காங்கிரஸ், இந்தத் தேர்தலில், நான்கு இடங்களில் ...

தமிழகத்தில் 'நோட்டா'விற்கு 5.67 லட்சம் ஓட்டுகள் பதிவு

Posted:

சென்னை:தமிழகத்தில், அனைத்து தொகுதிகளிலும், 'நோட்டா'விற்கு அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக, தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவர்கள், 'ஓட்டளிக்க விரும்பவில்லை' என்பதை தெரிவிப்பதற்காக, இயந்திரத்தின் கடைசி பட்டன், 'நோட்டா' பட்டனாக அறிவிக்கப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும், ஏராளமானோர் 'நோட்டா' பட்டனை அழுத்தி உள்ளனர். அதிகபட்சமாக நீலகிரி(தனி) தொகுதியில், 46 ஆயிரம் பேர், நோட்டாவிற்கு ஓட்டு போட்டுள்ளனர்.ஒவ்வொரு தொகுதியிலும், 'நோட்டோ' பட்டன் அழுத்தியவர்கள் விபரம்: திருவள்ளூர்23,598; வட ...

கங்கையில் குளித்தாலும் காக்கை அன்னமாகுமா ? ; கெஜ்ரி ' வாலுக்கு ' அடி

Posted:

புதுடில்லி: அன்னா ஹசாரேயிடம் இருந்து பிரிந்து ஆம்ஆத்மி என்ற கட்சியை துவக்கி தனக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட கெஜ்ரிவால், பல கட்சிகளுடன் கூட்டணி வைத்த தி.மு.க., தேசிய அளவில் இடதுசாரிகள், மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ்கட்சி, முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி என பல்வேறு அரசியல் கட்சிகள் மோடி என்னும் சுனாமியில் காணாமல் போயிருக்கிறது. கங்கையில் குளித்து நெற்றியில் திருநீறு பூசி மக்களிடம் பிரசாரம் மேற்கொண்ட கெஜ்ரிவாலுக்கு ஒரு இடம் கூட கொடுக்காமல் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். தமிழகத்தை ...

எடுபடாமல் போன எதிர்கட்சிகளின் பிரசாரம்: தமிழகத்தில் எழுந்த 'லேடி' அலை

Posted:

மதுரை : இந்தியா முழுவதும் பா.ஜ., கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற நிலையில், அதற்கு எதிர்மாறாக தமிழகத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.லோக்சபா தேர்தல் அறிவிப்பு வௌியான நிலையில் முதல் கட்சியாக அ.தி.மு.க., அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை ெவளியிட்டது. அதுமட்டுமின்றி தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி போன்றவற்றுடனும், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க.,வுடன் பா.ஜ., கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், கூட்டணியில் இடம் பெற்றிருந்த கம்யூ.,களையும் அ.தி.மு.க., கழற்றி விட்டது.தமிழகத்தில் ...

தி.மு.க.,வுக்கு பூஜ்ஜியம்; அதிர்ச்சியில் கட்சி

Posted:

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததாலும், கட்சிக்கு வழக்கமாக வரும் வாக்கு சதவீதம் குறைந்து விட்டதாலும், தி.மு.க., கடும் அதிர்ச்சியில் உள்ளது. கடந்த, 2009ல் கிடைத்த வெற்றியை போல் இல்லாவிட்டாலும், 'திருவிளையாடல்' படத்தில், நாகேஷ், 'எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு தகுந்தபடி, பரிசில் குறைத்துக் கொள்ளுங்களேன்' என்று சொல்வதை போல, 'பிழைக்கு ஏற்ப ஒரு சில தொகுதிகளை கழித்துக் கொண்டு, 10-12 தொகுதிகளிலாவது வெற்றி கிடைக்கும்' என, தி.மு.க.,வினர் எண்ணி இருந்தனர்.ஆனால், ஒரு தொகுதி கூட கிடைக்காததால், தோல்வியின் காரணம் குறித்து, அக்கட்சியினரால் ...

தனித்து நின்றதால் காணாமல் போன காங்.,

Posted:

மதுரை:தமிழகத்தில் தனித்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட காங்., அதனாலேயே தனது செல்வாக்கை இழந்துள்ளது.தமிழகத்தை ஆண்ட கட்சி, மத்தியில் தொடர்ந்து ஆட்சி செய்த கட்சி என்ற பெருமைக்கு சொந்தமான காங்., தமிழகத்தில் இன்று இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு தனிமை படுத்தப்பட்டுள்ளது.திராவிட கட்சிகள் முளைக்கும் வரை, தமிழகத்தில் வேரூன்றி இருந்த காங்., ஒரு கட்டத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் வலுத்ததும், அவற்றுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்து வந்தது. கட்சி துவங்கிய நாள் முதல், லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் தனக்கென உறுப்பினர்களை பெற காங்., தவறவில்லை.கட்சி ...

உங்களின் வேலைக்காரன் நான்: மோடி உருக்கம்

Posted:

வதோதரா:வரவிருக்கும், 60 மாதங்களுக்கு, உங்களுக்கு நல்ல வேலைக்காரனாக நான் இருப்பேன்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறினார்.மொத்தம், 5.70 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த, குஜராத்தின் வதோதரா தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, வதோதரா நகரில், நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில், மோடி பேசியதாவது:அரசுக்கு யாரும் வேண்டப்பட்டவர்களாகவும் இருக்கக் கூடாது; அன்னியமானவர்களாகவும் இருக்கக் கூடாது. இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்லும் பணியில், என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள நான், அந்தப் பணியில் அனைவரையும் ஒன்றிணைத்து ...

'தலை வணங்கி தோல்வியை ஏற்கிறோம்: கருணாநிதி உருக்கம்'

Posted:

லோக்சபா தேர்தலில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி, லோக்சபா தேர்தலில், தி.மு.க., மற்றும் அதன் தோழமை கட்சிகள் வெற்றியை முழுவதுமாக இழந்துள்ளன. 'மக்கள் குரலே, மகேசன் குரல்' என்ற ஜனநாயக தத்துவத்தின் அடிப்படையில், தலை வணங்கி தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம்.தி.மு.க., இது போன்ற தோல்வியை சந்தித்துள்ளது; தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பெறாத மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது.'வெற்றியை கொண்டு வெறி கொள்வதுமில்லை; தோல்வியை கண்டு துவண்டு போவதுமில்லை' என, அண்ணாதுரை அறிவுறுத்தியவாறு, மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதியாக ...

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க., இடம் பெறுமா?முதல்வர் ஜெயலலிதா நழுவல் பேட்டி

Posted:

சென்னை: ''அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளை, நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.நேற்று, ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், 37 தொகுதிகளில், அ.தி.மு.க., முன்னிலை வகிப்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து, போயஸ் கார்டனில், முதல்வர் ஜெயலலிதா, நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:அ.தி.மு.க.,விற்கு மிகப்பெரிய வெற்றியை தந்த, தமிழக மக்களுக்கு, முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி.அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, இவ்வெற்றியை பெற்றுள்ளது. அ.தி.மு.க., தேர்தல் ...

தோல்விக்கு நாங்களே பொறுப்பு: சோனியா, ராகுல் அறிவிப்பு

Posted:

புதுடில்லி:தேர்தல் தோல்விக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகனும், கட்சியின் துணைத் தலைவருமான ராகுலும், தார்மீக பொறுப்பேற்றுக் கொண்டனர்.டில்லியில், காங்கிரஸ் தலைமையகத்தில், இருவரும் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு நாங்களே பொறுப்பேற்றுக் கொள்கிறோம். புதிய மத்திய அரசுக்கு எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தல் தோல்வி குறித்து, நிறைய ஆராய வேண்டியுள்ளது.எங்களுக்கு எதிரான மக்களின் தீர்ப்பை பணிந்து ஏற்றுக் கொள்கிறோம். எனினும், சமூக ஒற்றுமை, தேசிய விவகாரங்களில், எங்கள் ...

வதோதராவில் 5.70 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மோடி வெற்றி: வாரணாசியில் கெஜ்ரிவாலை தோற்கடித்தார்

Posted:

வதோதரா:பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், வதோதரா லோக்சபா தொகுதியில், 5.70 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் நேற்று வெற்றி பெற்றார். அதேபோல், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியிலும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் படுதோல்வி அடைந்தார்.ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலில், குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில், மொத்தம், 11.63 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகின. இதில், 8 லட்சத்து, 45 ஆயிரத்து, 464 ஓட்டுகள் மோடிக்கு கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர், மதுசூதன் ...

தனிப்பெரும்பான்மையால் நிலையான ஆட்சி:எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்.,குக்கு கேள்விக்குறி

Posted:

புதுடில்லி:பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, எட்டே மாதங்களில், எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ.,வை, தனி பெரும்பான்மை பலத்துடன், மத்திய ஆட்சியில் அமரச் செய்துள்ளார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இதன் மூலம் நிலையான ஆட்சி மத்தியில் கைகூடியுள்ளது. நாடு முழுவதும் வீசிய, 'மோடி அலை'யில், காங்கிரஸ் காணாமல் போய் விட்டது. 16வது லோக்சபாவில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.கடந்த, 1984ல், இரண்டு எம்.பி.,க் களுடன் இருந்த, பா.ஜ.,வுக்கு இப்போது, தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் மோடி. வரலாற்றுச் சாதனையாக, இப்போது, 283 ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™