Daily Thanthi |
- தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதா கூட்டணிக்கு அமெரிக்கா வாழ்த்து
- எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் ஜெயலலிதா அறிக்கை
- மோடி தலைமையிலான அரசு, உலக தமிழர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
- தி.மு.க. தோல்விக்கு காரணம், ஸ்டாலின்தான்: மு.க.அழகிரி கருத்து
- அண்ணா அறிவாலயம்
- பா.ஜனதா அமோக வெற்றி
- அ.தி.மு.க பெண் தொண்டர் ஒருவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தட்டில் சாக்லெட் வழங்கினார்
- முதல்–மந்திரி பதவியில் இருந்துகொண்டே , பிரதமர் ஆவது புதிய சாதனை
- ஐ.பி.எல். கிரிக்கெட் ரன் குவிப்பில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டு வீரர்கள்
- மோடிக்கு ராஜபக்சே தொலைபேசியில் வாழ்த்து இலங்கைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்
| தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதா கூட்டணிக்கு அமெரிக்கா வாழ்த்து Posted: 16 May 2014 09:39 AM PDT வாஷிங்டன், இந்திய பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அரசு வாழ்த்து தெரிவித்து உள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் சமூக வளைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''இந்தியாவில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றிருப்பதற்கு அமெரிக்கா தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. புதிய அரசு அமைக்கப்பட்ட உடன், அதனுடன் நாங்கள் கூட்டாக இணைந்து செயல்படுவதை முன்னெடுத்து செல்வோம்'' என்று கூறப்பட்டுள்ளது.
image: category:Tagging:News Group Category: |
| எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் ஜெயலலிதா அறிக்கை Posted: 16 May 2014 09:04 AM PDT சென்னை, எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் என பாராளுமன்ற தேர்தல் குறித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– நெஞ்சார்ந்த நன்றி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வரலாறு காணாத மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது அன்பார்ந்த தமிழக மக்கள் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ததன் மூலம், தங்களுடைய முழுமையான நம்பிக்கையை என் மீது வைத்திருக்கிறார்கள் என்பதனை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளனர். அந்த நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் நான் என்றும் தமிழக மக்களின் மேன்மைக்காகப் பாடுபடுவேன் என்று உறுதி அளிக்கிறேன். பிரசாரத்தின் இலக்கணம் ''பிரசாரம் என்பதன் உட்பொருளே, தான் விரும்புகின்ற கருத்தை மற்றவர்கள் விரும்புகின்ற முறையிலும், நம்புகிற முறையிலும், பல்வேறு வகைகளில் எடுத்துச் சொல்வது தானே? இதுவே பிரசாரம் என்கின்ற பொருளுக்கு இலக்கணமாகும்'' என்றார் பேரறிஞர் அண்ணா.பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, கடந்த ஏப்ரல் 24–ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த மார்ச் 3–ந் தேதி முதல் ஏப்ரல் 21–ந் தேதி வரை நான் சூறாவளித் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டேன். மக்களிடம் கோரிக்கை நான் உரையாற்றிய அனைத்துத் தேர்தல் பிரசார கூட்டங்களிலும், ஊழல் புரையோடிய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்; ஊழலில் புதிய உச்சத்தை ஏற்படுத்தியதோடு, தமிழக மக்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் துரோகச் செயல்களுக்கு துணை போன தி.மு.க.வை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.மேலும், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட; தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க பெறுவதை உறுதி செய்ய; தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற்றுத்தர மத்தியில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும்; எனது கரங்களை வலுப்படுத்திட வேண்டும் என்றும், நான் தமிழக மக்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதாவது, பதவியை அடைய வேண்டும் என்ற தன்னலத்திற்காக அல்லாமல், தமிழக மக்கள் பயன் அடைய வேண்டும் என்ற பொது நோக்கத்திற்காக, ஒரே நிலைபாட்டினை மேற்கொண்டு நான் சூறாவளி பிரசாரம் செய்தேன். எதிர்க்கட்சிகளுக்கு தக்க பாடம் மக்கள் நலன்கள் குறித்து பேசாமல்; தங்களது கட்சி வெற்றி பெற்றால் என்னென்ன நன்மைகள் இந்திய மக்களுக்கு, குறிப்பாக தமிழக மக்களுக்கு கிடைக்கும் என்பதைப் பற்றி விளக்காமல்; மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் என் மீதும், எனது தலைமையிலான அரசின் மீதும் புழுதிவாரி இறைப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சிகளின் அர்த்தமற்ற விமர்சனங்களையும், கருத்துகளையும், பொய்ப் பிரசாரங்களையும் முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது; தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்'' என்ற பேரறிஞர் அண்ணாவின் அமுத மொழிக்கு ஏற்ப, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நல்லாட்சி நடத்தி வரும் என் மீதும், எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசின் மீதும் நம்பிக்கை வைத்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை 37 தொகுதிகளில் தமிழக மக்கள் வெற்றி பெற செய்து, எதிர்க்கட்சிகளுக்கு தக்கப் பாடம் புகட்டியுள்ளனர். இரட்டிப்பு மகிழ்ச்சி ஆலந்தூர் இடைத் தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளரை வாக்காளப் பெருமக்கள் அமோக வெற்றி பெற வைத்துள்ளனர். மக்களுக்காகவே எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது என்பதை தமிழக மக்கள் உறுதி செய்துள்ளனர். இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தனிக் கட்சியும் பெறாத அளவுக்கு, 37 தொகுதிகளில் அ.தி.மு.க.வை தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்தத் தேர்தல் மூலம், தமிழ் நாட்டில் மக்கள் ஆதரவு பெற்ற தனிப் பெரும் முதன்மைக் கட்சி அ.தி.மு.க. தான் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு மூன்றாண்டுகள் நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நன்னாளில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி கிடைத்திருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஜனநாயகத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி பெருவாரியாக திரண்டு வந்து வாக்களித்து, அ.தி.மு.க.விற்கு பிரம்மாண்டமான வெற்றியை நல்கிய எனது அன்பிற்கு இனிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ், ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் சுயநலவாத தி.மு.க., மற்றும் இதர சுயநல உதிரிக் கட்சிகள் இந்தத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. சுயநலவாதிகளை புறந்தள்ளிவிட்டு பொதுநலத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளதை இந்தத் தேர்தல் எடுத்துக் காட்டுகிறது. மனமார்ந்த பாராட்டும், இதயங்கனிந்த நன்றியும் வெற்று ஆரவாரத்தால், பொய்ப் பிரசாரங்களால், தனிப்பட்ட தாக்குதல்களால் உண்மையை மறைக்க முடியாது, நியாயத்தை புதைக்க முடியாது என்பது இந்தத் தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட கட்சி தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், கட்சி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைமை பேச்சாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், கலைக் குழுவினர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், ஊராட்சிக் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சியில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய முன்னாள் நிர்வாகிகள், இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமைக் கட்சி உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், இதயங்கனிந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அமைப்புகள், சங்கங்கள், மன்றங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் புதிதாக அமையவுள்ள மத்திய அரசு மூலம் நிறைவேற்றிட அயராது பாடுபடுவேன், ஓயாது உழைப்பேன் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| மோடி தலைமையிலான அரசு, உலக தமிழர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி Posted: 16 May 2014 08:53 AM PDT நாகர்கோவில், நரேந்திரமோடி தலைமையில் அமைய உள்ள அரசு, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உந்து சக்தியாக விளங்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழக பா.ஜனதா தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது: மிகப்பெரிய தாக்கம் நாடு முழுவதும் நரேந்திரமோடி அலை மிகப்பெரிய தாக்கத்தை அரசியல் ரீதியாக ஏற்படுத்தி உள்ளது. அவரது அயராத உழைப்பினாலும், அவர் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையினாலும், காங்கிரஸ் அரசு செய்த தவறுகள் மீது மக்கள் கொண்ட கோபத்தின் விளைவாகவும் அறுதிப்பெரும்பான்மையான வெற்றி பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது. இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இது இந்திய அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு ஆகும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அளவில், சாதி&மத பேதமற்ற இந்தியாவை புதிய கோணத்தில், புதிய வளர்ச்சிப்பாதையில் நரேந்திரமோடி அரசு அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வெற்றியை தந்த இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறோம். உந்துசக்தியாக விளங்கும் தமிழகம் மலரவேண்டும், தமிழ் இனம் மலர வேண்டும் என்பதன் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உந்து சக்தியாக, பக்கபலமாக விளங்கும் அரசாக நரேந்திரமோடி தலைமையிலான அரசு விளங்கும். இதற்கு தமிழக பா.ஜனதா துணை நிற்கும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். image: category:News Group Category: |
| தி.மு.க. தோல்விக்கு காரணம், ஸ்டாலின்தான்: மு.க.அழகிரி கருத்து Posted: 16 May 2014 08:53 AM PDT மதுரை, தி.மு.க. தோல்விக்கு காரணம், ஸ்டாலின்தான் என்று மு.க.அழகிரி எம்.பி. கூறினார்.இன்று வெளியான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதற்காக, மதுரையில் மு.க.அழகிரி இல்லத்தின் முன்பு மிகப்பெரிய திரையிலான டி.வி. ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அழகிரியும், அவருடைய ஆதரவாளர்களும் அங்கு அமர்ந்து தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பார்த்தனர். விலக வேண்டும் அப்போது அழகிரியிடம் நிருபர்கள் தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்டனர். அதற்கு அவர், நான் தான் தேர்தலில் போட்டியிட வில்லையே, வெற்றிதோல்வி பற்றி எனக்கு கவலையில்லை என்று கூறினார். கேள்வி: தி.மு.க.வின் தோல்வி குறித்து? பதில்:- இந்த தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்தற்கு முக்கிய காரணம், கலைஞரின் அறிவுரைப்படி நடக்காமல் போனது தான். மேலும் கட்சியின் ஆல் இன் ஆல் அழகுராஜா மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரமாக நடந்து கொண்டார். யாரையும் மதிக்க வில்லை. இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம். கலைஞரின் விருப்பப்படி வேட்பாளர்களின் தேர்வு நடைபெற வில்லை. அதனால் தான் தி.மு.க. படுதோல்வி அடைந்துள்ளது. எனவே இந்த தோல்விக்கு காரணமானவர்கள் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்றார். கேள்வி:-மீண்டும் கலைஞர் அழைத்தால், கட்சியில் சேருவீர்களா? பதில்:- அவர் அழைத்தால் பார்ப்போம். ஆனால் என்னுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் கட்சியில் சேருவேன். அதாவது முறைகேடாக நடந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். மாவட்ட செயலாளர்களை மாற்ற வேண்டும். கட்சியை சுத்தம் செய்ய வேண்டும். பணபலம் கேள்வி:- அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று இருக்கிறதே? பதில்:- அ.தி.மு.க.வினர் தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்ததாக பத்திரிகைகளில் எல்லாம் செய்தி வந்ததே. அதுமட்டுமின்றி கலைஞரின் சொல்படி நடக்காததால், தி.மு.க.வின் பலவீனத்தை அ.தி.மு.க. தனக்கு சாதகமாக்கிக் கொண்டது. கேள்வி:- தேசிய அளவில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளதே? பதில்:- நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அழகிரி கூறினார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 16 May 2014 08:44 AM PDT |
| Posted: 16 May 2014 08:43 AM PDT |
| அ.தி.மு.க பெண் தொண்டர் ஒருவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தட்டில் சாக்லெட் வழங்கினார் Posted: 16 May 2014 08:39 AM PDT |
| முதல்–மந்திரி பதவியில் இருந்துகொண்டே , பிரதமர் ஆவது புதிய சாதனை Posted: 16 May 2014 08:02 AM PDT புதுடெல்லி, சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்–மந்திரி பதவியில் இருந்தவாறு பாராளுமன்றத் தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமரானது கிடையாது. இப்போது நரேந்திர மோடி, குஜராத் முதல்–மந்திரியாக இருந்துகொண்டே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நேரடியாக பிரதமராக பதவி ஏற்கிறார். அது மட்டுமல்ல, மொரார்ஜி தேசாய்க்கு பிறகு குஜராத்தில் இருந்து பிரதமராகிற இரண்டாவது தலைவர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.மேலும், பாராளுமன்றத்தில் முதல் முறையாக எம்.பி.யாக நுழைகிறபோதே, மோடி பிரதமர் ஆக நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging:News Group Category: |
| ஐ.பி.எல். கிரிக்கெட் ரன் குவிப்பில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டு வீரர்கள் Posted: 16 May 2014 08:00 AM PDT சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரன் குவிப்பில் வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் 2008–ம் ஆண்டில் உதயமாகி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திருவிழா, இந்திய இளம் வீரர்களின் திறமையை வெளிக்கொணரும் தளமாக அமைய வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக தான் ஐ.பி.எல். போட்டிக்கான ஒரு அணியில் அதிகபட்சமாக வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் மட்டுமே களம் இறங்க அனுமதிக்கப்படும் என்ற விதியும் வகுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளின் வரலாற்றை புரட்டி பார்த்தால் ரன் குவிப்பில் வெளிநாட்டு வீரர்களே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்து இருக்கிறார்கள் என்ற வேதனையான உண்மை வெளிப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது அங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உடனடியாக மாற தடுமாறும் இந்திய வீரர்கள், உள்ளூரில் நடைபெறும் போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பலை தான் சந்தித்து வருகிறார்கள். வெளிநாட்டு வீரர்கள் ஆதிக்கம் ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு கவுரவமிக்க ஆரஞ்சு தொப்பியுடன், தொடர்நாயகன் விருதுடன் கூடிய ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுவதில் நம்மவர்களை விட வெளிநாட்டு வீரர்களே முன்னணியில் உள்ளனர். 2008–ம் ஆண்டில் நடந்த முதலாவது ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷான் மார்ஷ் (பஞ்சாப் அணி, 11 ஆட்டங்களில் 616 ரன்கள்) பெற்றார். 2009–ம் ஆண்டில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹைடன் (சென்னை அணி, 12 ஆட்டங்களில் 572 ரன்கள்) அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தினார். 2010–ம் ஆண்டில் நடந்த போட்டியில் மட்டும் தான் ஆரஞ்சு தொப்பி இந்திய வீரர் ஒருவர் வசமானது. மும்பை அணிக்காக விளையாடிய நட்சத்திர நாயகன் சச்சின் தெண்டுல்கர் 15 ஆட்டங்களில் 618 ரன்கள் குவித்து அந்த கவுரவத்தை சொந்தமாக்கினார். 2011, 2012–ம் ஆண்டுகளில் பெங்களூர் அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் முறையே 608, 733 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்தார். 2013–ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மைக் ஹஸ்ஸி (சென்னை அணி, 17 ஆட்டங்களில் 733 ரன்கள்) ரன் குவிப்பில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். மேக்ஸ்வெல், வெய்ன் சுமித் முன்னிலை இந்த ஆண்டுக்கான போட்டியில் இதுவரை 41 லீக் ஆட்டங்கள் முடிந்து இருக்கின்றன. பஞ்சாப் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இதுவரை 517 ரன்கள் (10 ஆட்டங்களில்) குவித்து முதலிடத்தில் நீடிக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் சென்னை அணிக்காக ஆடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெய்ன் சுமித் (10 ஆட்டங்களில் 440 ரன்கள்) இருக்கிறார். அதிக தொகைக்கு விலைபோன இந்திய வீரர்களை விட குறைந்த தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் இங்குள்ள சூழலை சமாளித்து பேட்டிங்கில் வெளுத்து வாங்குவது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. அவர்களின் அடியொற்றி இந்திய வீரர்களும் ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே நமது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். இந்த சீசனில் ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயம் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இந்திய பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார் (ஐதராபாத் அணி, 10 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகள்), மொகித் ஷர்மா (சென்னை அணி, 10 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகள்) ஆகியோர் முதலிடத்தில் நீடிக்கின்றனர். category:Tagging:News Group Category: |
| மோடிக்கு ராஜபக்சே தொலைபேசியில் வாழ்த்து இலங்கைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் Posted: 16 May 2014 07:47 AM PDT கொழும்பு, பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்தார். இந்திய பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை இலங்கை அதிபர் ராஜபக்சே வரவேற்று உள்ளார். தேர்தல் முடிவுகள் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக வெளிவரத் தொடங்கியதும் இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று தொலைபேசி மூலம் மோடியை தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது அவர் நரேந்திரமோடியிடம் உங்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றிக்காக பாராட்டுகிறேன். இலங்கைக்கு நீங்கள் வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த தகவலை ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் மோகன் சமரநாயகே தெரிவித்தார்.கடந்த சில ஆண்டுகளாக ராஜபக்சேவுக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லாத நிலையில் மோடியை ராஜபக்சே பாராட்டி இருப்பதும், அவரை தனது நாட்டுக்கு வருமாறு அழைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல், இலங்கையின் முன்னாள் தூதரக அதிகாரி தயான் ஜெயதிலகே கூறியதாவது:– பா.ஜனதாவுக்கு கிடைத்திருக்கும் வெற்றியால் இந்திய–இலங்கையின் நட்புறவில் உறுதியான நிலை ஏற்படும். மோடியுடன் ராஜபக்சே நல்லதொரு நட்பை வளர்த்துக் கொள்வது அவசியம். இவர்களது நட்புறவுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உதவும்.மோடிக்கும், ராஜபக்சேவுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவரிடமும் தங்களது அரசியல் அணுகுமுறையில் தேசிய வாசனை இருக்கும். எனினும் இந்த 2 தலைவர்கள் இடையேயும் விரிசலை ஏற்படுத்துவதற்கு சில சக்திகள் முயற்சி செய்யலாம். இலங்கை விஷயத்தில் மன்மோகன் சிங்கை விட மோடி தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


