Tamil News | Online Tamil News |
- மோடி அமைச்சரவையில் புது மந்திரிகள் யார் யார்? பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை துவங்கியது
- தொங்கு பார்லிமென்ட் அமைந்தால் ஜனாதிபதி என்ன செய்வார்? கே.ஆர்.நாராயணன் பாணியை பின்பற்றலாம் என தகவல்
- 'தேர்தலில் காங்., தோல்வி அடைந்தால் பிரதமரை குறை சொல்ல வேண்டாம்'
- குருவிடம் பாவ மன்னிப்பு கேட்டார் திக்விஜய்
- இலங்கை அரசின் தலையீட்டால் பேச்சு தோல்வி: தமிழக மீனவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு
- 'மத்தியில் யாருக்கு ஆதரவு? தேர்தல் முடிவுக்கு பின் தெரியும்'
- சென்னையில் தொடரும் திடீர் மின்தடை: தேவை 4,000 மெகாவாட்டாக அதிகரிக்க வாய்ப்பு
- தி.மு.க.,வினர் விழிப்போடு இருக்க வேண்டும்: திருச்சியில் ஸ்டாலின் அறிவுரை
- 'நதிகள் இணைப்பை செயல்படுத்த விடாமல் தடுத்தது நானே!'
| மோடி அமைச்சரவையில் புது மந்திரிகள் யார் யார்? பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை துவங்கியது Posted: புதுடில்லி: கருத்து கணிப்புகள், தங்கள் கட்சிக்கு சாதக மாக வெளியாகியுள்ள தால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு, பா.ஜ., தலைவர்கள் தயாராகி வருகின்றனர். 'மோடி தலைமையிலான அமைச்சரவையில், இடம் பெறப்போவது யார் யார்' என்ற, ஆலோசனைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. பெரும்பாலான கருத்து கணிப்புகள், 'பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் படுதோல்வி அடையும்' என, தெரிவித்துள்ளன. அதனால், மத்தியில், அடுத்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில், பா.ஜ., தலைவர்கள் களம் இறங்கி உள்ளனர். பா.ஜ., தலைவர்கள் ... |
| தொங்கு பார்லிமென்ட் அமைந்தால் ஜனாதிபதி என்ன செய்வார்? கே.ஆர்.நாராயணன் பாணியை பின்பற்றலாம் என தகவல் Posted: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு பார்லிமென்ட் அமையுமானால், 1998ல், ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணன் பின்பற்றிய நடைமுறையை தானும் பின்பற்ற, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.272 யாருக்கு? லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, நாளை நடைபெற உள்ளதால், இம்முறை, எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற பரபரப்பு, உச்சக்கட்டத்தில் உள்ளது. ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, பல்வேறு செய்தி சேனல்கள் வெளியிட்டன. அவற்றில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ... |
| 'தேர்தலில் காங்., தோல்வி அடைந்தால் பிரதமரை குறை சொல்ல வேண்டாம்' Posted: புதுடில்லி: 'லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்தால், அதற்கு கட்சியினர் அனைவரும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும். மன்மோகன் சிங் மீது குறை சொல்வதை தவிர்க்க வேண்டும்' என, கட்சியின் மூத்த தலைவர்களுக்கு, காங்., தலைவர் சோனியா உத்தரவிட்டுள்ளார்.லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், வெளியான கருத்துக் கணிப்புகளில், 'மத்தியில், பா.ஜ., கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்; காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தோல்வியை சந்தித்தால், காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக பொறுப்பேற்று, நாடு முழுவதும் பிரசாரம் செய்த, காங்., துணை ... |
| குருவிடம் பாவ மன்னிப்பு கேட்டார் திக்விஜய் Posted: போபால்: மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், தன் ரகசிய காதலி பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியானதில் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். மன நிம்மதிக்காக, தன் மானசீக குருவான, துவாரகா பீட சங்கராச்சாரியிடம், அழுது புலம்பி பாவ மன்னிப்பு கோரியுள்ளார்.காதலியுடன்...: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரான திக்விஜய் சிங், 67, ம.பி., முன்னாள் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். இவரின் முதல் மனைவி, கடந்தஆண்டு புற்றுநோயால் இறந்தார். இந்நிலையில், பிரபல 'டிவி' சேனலில் பணியாற்றும், அம்ரிதா ... |
| இலங்கை அரசின் தலையீட்டால் பேச்சு தோல்வி: தமிழக மீனவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு Posted: சென்னை: 'சுமுகமாக முடிய இருந்த தமிழக - இலங்கை மீனவர்களின், இரண்டாம் கட்ட பேச்சு தோல்வி யடைந்ததற்கு, இலங்கை அரசு அதிகாரிகளின் தலையீடு தான் முக்கிய காரணம்' என, தமிழக மீனவ பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.கோரிக்கை: தமிழக - இலங்கை மீனவர்கள் இடையே, சென்னையில் ஜன., 27ம் தேதி முதற்கட்ட பேச்சு நடந்தது. இரண்டாம் கட்ட பேச்சு, இலங்கை தலைநகர் கொழும்பில், கடந்த, 12ம் தேதி நடந்தது. தமிழக மீனவர்களின் கோரிக்கையை, இலங்கை மீனவர்கள் ஏற்க மறுத்ததால், இந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நடக்க இருந்த, இரண்டாம் நாள் பேச்சு ... |
| 'மத்தியில் யாருக்கு ஆதரவு? தேர்தல் முடிவுக்கு பின் தெரியும்' Posted: சென்னை: ''ஒவ்வொரு குடிமகனும், தேர்தல் முடிவை ஆர்வமுடன் எதிர்பார்த்திருப்பது போல், நானும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கிறேன்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.லோக் சபா தேர்தல் முடிந்ததும், முதல்வர் ஜெயலலிதா, கோடநாடு சென்றார் நேற்று, மாலை 3:30 மணிக்கு, விமானம் மூலம், சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு, அ.தி.மு.க., வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை 4:08 மணிக்கு, போயஸ் கார்டன் வந்தார். அங்கு, அவர் நிருபர்களிடம் பேசும்போது, ''தேர்தல் முடிவுகள், 16ம் தேதி வெளியாக இருப்பதை, ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனரோ, அதேபோல், ... |
| சென்னையில் தொடரும் திடீர் மின்தடை: தேவை 4,000 மெகாவாட்டாக அதிகரிக்க வாய்ப்பு Posted: 'ஓவர்லோடு' பிரச்னையால், சென்னை மற்றும் புறநகரில், மாலை நேரங்களில், மின்தடை செய்வது, தொடர் கதையாகி வருகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 27 லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர். மாநிலத்தின் மொத்த மின் தேவையில், இவர்களின் பங்கு, 2,500 - 3,000 மெகாவாட். சென்னையைச் சுற்றி, மொத்தம், 165 துணை மின் நிலையங்கள் உள்ளன. சென்னையில், தரைக்கு அடியில், 'கேபிள்' மூலமும், புறநகர் பகுதிகளில், மின் கம்பங்கள் வாயிலாகவும், மின் வினியோகம் செய்யப்படுகிறது.'ஓவர் லோடு': கோடை வெயில் கடுமையாக உள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 'ஏசி', பயன்பாடு வழக்கத்தை விட, ... |
| தி.மு.க.,வினர் விழிப்போடு இருக்க வேண்டும்: திருச்சியில் ஸ்டாலின் அறிவுரை Posted: "லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, தி.மு.க.,வினர் விழிப்போடு இருக்க வேண்டும்," என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.கரூர் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தந்தையும், கரூர் வட்ட தி.மு.க., முன்னாள் செயலருமான காந்தி, கடந்த, 2ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து, நன்னியூரில் நேற்று, காந்தி படத்தை திறந்து வைத்து, அஞ்சலி செலுத்திய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., தலைவர்களோடு நெருங்கிய நட்பில் இருந்த காந்தியின் இறப்பு, கரூர் மாவட்ட தி.மு.க., தொண்டர்களுக்கு மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க.,வினருக்கு ... |
| 'நதிகள் இணைப்பை செயல்படுத்த விடாமல் தடுத்தது நானே!' Posted: பிலிபிட்: ''நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை, பிரதமராக இருந்த வாஜ்பாய் செயல்படுத்த முற்பட்டார்; அதை தடுத்தது நான் தான்,'' என, பா.ஜ., - எம்.பி., மேனகா காந்தி கூறினார்.உத்தர பிரதேச மாநிலம், ஆன்லா லோக்சபா தொகுதி எம்.பி.,யான மேனகா, நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, கோம்தி மற்றும் சாரதா நதிகளை இணைப்பது தொடர்பாக, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மேனகா கூறியதாவது: நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டத்தை, வாஜ்பாய் அரசு செயல்படுத்த விடாமல் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 15,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |