Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து 25000 இந்துக்கள் விரட்டி அடிப்பு

Posted: 14 May 2014 02:56 PM PDT

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மத கலவரத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 25 ஆயிரம் இந்துக்கள் இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பாகிஸ்தானில் நடக்கும் மதகலவரங்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் இந்துக்கள் இந்தியாவுக்கு துரத்தி அடிக்கப்படுவதாக பாகிஸ்தான் இந்து சபை தலைவர் டாக்டர் ரமேஷ் குமார் வங்கானி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில்தான் மத கலவரம் காரணமாக அதிகமான இந்துக்கள் ...

தேர்தல் முடிவுகள் நாளை காலை 10 மணி முதல் வெளியாகும்: பிரவீன்குமார் பேட்டி

Posted: 14 May 2014 02:52 PM PDT

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதல் சுற்று (ரவுண்டு) எண்ணிக்கை முடிவு சுமார் 10 மணி அளவில் வெளியாகும் என்று நம்புகிறேன். எனவே தேர்தல் முடிவுகளை காலை 10 மணியில் இருந்து தெரிந்துகொள்ளலாம். தேர்தல் முடிவுகள் அனைத்தையும், ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையும் முடிய, முடிய உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டும். ...

மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV

Posted: 14 May 2014 02:49 PM PDT

Group: Group IV ((+)ssRNA) வரிசை: Nidovirales குடும்பம்: Coronaviridae துணைக்குடும்பம்: Coronavirinae பேரினம்: Betacoronavirus இனம்: MERS-CoV மெர்ஸ் நோய் (Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV) ஒரு வகை வைரஸ் கிருமியால் பரவுகிறது. இவ்வகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், நுரையிரல் அலர்ஜி மற்றும் சிறுநீரகம் செயல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஒட்டகங்கள் மூலம் பரவும் இந்த ஆட்கொல்லி நோய்க்கான வைரஸ் கிருமிகள் கடந்த ஒன்றை ஆண்டுக்கு ...

இலங்கைக் கடற்படையினரால் 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நாள் மே.15- 1985

Posted: 14 May 2014 02:45 PM PDT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 1978-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி பங்குச் சந்தை அமைக்கப்பட்டது * 1955 - உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர். * 1957 - பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது. * 1958 - சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது. * 1960 - சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது. * 1963 - நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ...

மெக்சிகோ ஆசிரியர் நாள்: மே 15

Posted: 14 May 2014 02:42 PM PDT

மெக்சிகோவில் மே மாதம் 15-ந்தேி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1851 - நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார். * 1860 - கரிபால்டியின் படைகள் சிசிலியின் நேப்பில்ஸ் நகரைக் கைப்பற்றினர். * 1897 - கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர். * 1915 - இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஷவ்கத் அலியும் முகம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா ...

ருத்ராட்ஷத்தின் - மகிமை

Posted: 14 May 2014 02:41 PM PDT

ஓம் நம சிவாய ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும் ருத்ராட்ஷத்தின் - மகிமை ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது? சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும் ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா? ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் ...

தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து)

Posted: 14 May 2014 02:39 PM PDT

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''. மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' ...

வருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்

Posted: 14 May 2014 12:42 PM PDT

வருமான வரி என்றால் என்ன ? (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு (Indian Laws) உட்பட்டு, வருமானம் (Income) பெறுகின்ற ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும். இவ்வரி Income tax Act எனும் சட்டத்தின் கீழ் இந்திய பாரளமன்றத்தால் (Parliament of India) கொண்டுவரப்பட்டது. வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம் (Department of Income Tax) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறை ...

அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி"

Posted: 14 May 2014 11:33 AM PDT

தகுதியான மனிதர்களுக்கு பணிவோடு அன்னதானம் செய்தால் முழுப் பயனையும் பெறலாம். மனிதர்கள் என்றில்லை… எறும்புகளுக்கு சர்க்கரை இடுவது, காகம் உள்ளிட்ட பறவைகளுக்குச் சோறிடுவது, மாடுகளுக்கு தீவனம் அளிப்பது போன்றவையும் மனித குலத்துக்குச் செய்கின்ற அன்னதானத்துக்கு இணையானவையே! புண்ணிய காரியங்களைச் செய்ய நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை எனினும் சில நற்காரியங்களைச் சில புண்ணிய தினங்களில் செய்வது சிறப்பென்று வகுத்துள்ளது இந்து தர்மம். அதற்கு சூட்சுமமான காரணத்தையும் வைத்துள்ளது. அவற்றிலொன்றுதான், ...

காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும்: வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் போலீஸில் புகார்!!

Posted: 14 May 2014 10:16 AM PDT

தன்னை உயிருக்குயிராக காதலிப்பதாக கூறிய காதலி, திடீரென பெற்றோர் சொல்படி திருமணம் செய்துகொண்டதால், ஆத்திரமடைந்த காதலன், காதலிக்கும் போது தான் செய்த செலவை திருப்பித் தரவேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஹைதராபாத் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அந்த இருவரும் முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர் நட்பு காதலாக மாறியது. இருவரும் சுமார் 2 ஆண்டுகளாக பூங்கா, திரையரங்கம், ஷாப்பிங் மால்கள், கோயில், குளங்கள் ...

இதுவே வெற்றி!

Posted: 14 May 2014 10:14 AM PDT

ஆயிரம் பேர் மார்க் எடுக்கலாம் , கேமராவுக்கு உதடு நடுங்க வாயை திறந்துக்கொண்டு இனிப்பு வாங்க போஸ் கொடுக்கலாம்.. ஆனாலும் சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து 1168, மதிப்பெண் பெற்று , மாநகராட்சி பள்ளிகளிலேயே இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கும் சவுஜன்யாவுக்கு அம்மா இல்லை.. ரத்தபுற்றுநோயால் இறந்து போய் விட்டார்… அப்பாவுக்கு கண் தெரியாது… தம்பி தங்கைகளுடன் சொற்பமாக வரும் வீட்டு வாடகையில் படித்து வெற்றி பெற்று இருக்கின்றார்… மதிப்பெண் ரிசல்ட் பார்த்து விட்டு பார்வையற்ற தகப்பனை அழைத்துக்கொண்டு நடந்து ...

தொடரும் "கார்பைடு கல்' மாம்பழ விற்பனை!

Posted: 14 May 2014 09:27 AM PDT

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் பொருள்படுத்தாமல், தொடர்ந்து கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இது போன்ற ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உண்பவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். மாம்பழங்களில் மல்கோவா, செந்துறை, பங்கணப்பள்ளி, நீலம், ஒட்டு உள்ளிட்டவற்றை பலரும் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மாம்பழத்தில் ...

யார் யாருக்கு எந்த துறை?:அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் மோடி 'பிசி'

Posted: 14 May 2014 09:08 AM PDT

புதுடில்லி : நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் நிலையில், பா.ஜ., தலைவர்களோ புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் இடம்பெற போகிறவர்கள் யார் என்ற பட்டியலையும், அவர்களுக்கும் ஒதுக்கப்படும் துறைகளையும் முடிவு செய்யும் ஆலோசனையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும், இம்முறை அத்வானிக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்கப்படமாட்டாது என்றும், சபாநாயகர், லோக்சபா கட்சி தலைவர் அல்லது தே.ஜ., கூட்டணி தலைவர் ஆகிய பொறுப்புக்களில் ஒன்று அவருக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. தலைவர்கள் ...

மக்கள் விழிக்கும் நேரம்

Posted: 14 May 2014 08:48 AM PDT

இன்று....!

Posted: 14 May 2014 08:38 AM PDT

1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற
பெயருடனிருந்த இயக்கத்திற்கு
தமிழீழ விடுதலைப் புலிகள்
என்று பெயர் மாற்றப்பட்டது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

Posted: 14 May 2014 08:31 AM PDT

சித்திரைத்திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார் சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரைத் திருவிழா வரலாற்று பெருமை பெற்றதாகும். இந்த ஆண்டு சிறப்பு மிக்க சித்திரைத் திருவிழா கடந்த 1–ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் ...

கனவிலே இவன் கணவனாவான்!!

Posted: 14 May 2014 08:16 AM PDT

பெண்ணுக்காய் தன்னிலை மாற்றி! பொங்கிடும் உணர்வுகள் ஏற்றி! பாதையில் தன் அழகினைக் காட்டி! பரிதாபம் இவன் நிலை இன்று! அவளுக்காய் செல்வந்தனாகி! அப்பாவின் பணத்தினை காவி! அருமை அணிகலன் வாங்கி! அலைகிறான் பித்தனாகி! சொல்லிலே நவீனம் சேர்த்து! சொல்லாங்கிலம் பலதை திணித்து! சொர்க்கமாம் அவளை நினைத்து! சிணுங்கிடும் அவன் மொழியிது! அவள் பெயர் அவனுக்கழகு! அவள் மொழி அவனுக்குலகு! அவளே என்றும் அவன் நினைவு! ஆசைக்கு அவளின் தெரிவு! நினைவிலே என்றும் அவளுக்கு! நிரந்நதர இட ஒதுக்கீடு! நிலையான ...

புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்

Posted: 14 May 2014 08:14 AM PDT

புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள் அனைவருக்கும் வணக்கம். 10-01-2014 முதல் 22-01-2014 வரை, சென்னை நந்தனம் Y.M.C.A.மைதானத்தில், சுமார் 400 பதிப்பகங்கள் கலந்து கொள்ளும் புத்தக கண் காட்சி நடைபெற உள்ளது. அங்கு ஸ்டால் எண் . . . . இல் (ஸ்டால் எண் பின்பு தருகின்றோம்), யாம் தொகுத்து உருவாக்கிய கீழ்க்கண்ட நூல்கள் கிடைக்கும். 1.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 1 2.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 2 3.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 3 4.தஞ்சை ராமையாதாஸ் திரையிசைப் ...

பயனுள்ளவை.... முகநூலிருந்து

Posted: 14 May 2014 08:05 AM PDT

எடை குறைய 7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை Weight Loss Successஒரே வாரத்தில் உடல் எதையை சுமார் 5 கிலோ வரை குறைப்பதற்காக ஆரோக்கியமான வழிமுறை. ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்) நாள் 2: முழு ...

கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி - நூற்றாண்டு விழா

Posted: 14 May 2014 07:33 AM PDT

கலைமாமணி   கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு விழா [ 19.05.1914 – 13.5.1990 ] நாள் : 19.05.2014 திங்கட்கிழமை மாலை 5.00 மணி. இடம்: "வாழ்க வளமுடன்" சிற்றரங்கம், 28, 27வது தெரு, நங்கநல்லூர், சென்னை 600 061 விழா ஏற்பாடு: புதுகை அச்சுக்கலை வித்தகர் இலக்கிய ஆர்வலர் கண்ணபிரான் எஸ் பரசுராம்.குடும்பத்தினர் சார்பில்                 குழந்தை இலக்கியச் செல்வர் பி.வெங்கட்ராமன் ==================================================== விழா ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் மகஸ்ரீ ...

ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது பீர்க்கங்காய்!

Posted: 14 May 2014 06:33 AM PDT

இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது. இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது. ரத்தத்தை சுத்தகரிக்கும் தன்மை உள்ளது. இதில் ...

கள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள் !

Posted: 14 May 2014 06:32 AM PDT

யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள். வழிகாட்டும் ஒளி ரூபாய் நோட்டின் முன்பக்கத் தில் இடதுபுறம் உள்ள பூ வேலைப் பாடு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது. நோட்டின்மீது வெளிச்சம் படும்படியாக வைத்துக்கொண் டால், நல்ல நோட்டாக இருந்தால் அதில் அந்த ரூபாய் நோட்டுக் ...

மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம்

Posted: 14 May 2014 06:26 AM PDT

எப்போதாவது அபூர்வமாக வரும் மிக சிறந்த கதையம்சம் கொண்ட படங்களின் வரிசையில், 'மெய்யழகி.' ஜெய்குவேதனி சிறுமியாக இருக்கும்போதே அவருடைய அம்மா ஒரு தம்பியை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து போகிறார். அப்பா ஒரு குடிகாரர். தம்பியை தன் கழுத்தில் தொட்டில் கட்டி வளர்க்கிறார், ஜெய்குவேதனி. 'ஆட்டிஸம்' பாதித்த சிறுவனாக வளர்கிறான், தம்பி பாலாஜி. வாயில் எப்போதும் எச்சில் ஒழுக, கையையும் கால்களையும் இழுத்துக்கொண்டு நடக்கும் பாலாஜியை ஊரில் உள்ள மற்ற சிறுவர்கள், 'ஜொள்ளு' என்று கேலி–கிண்டல் செய்கிறார்கள். அக்கா ...

நாம் கணினியில்(LAN) உள்ள இணையத்தை மற்ற சாதனத்திலும் பயன்படுத்தும் முறை

Posted: 14 May 2014 05:39 AM PDT

நாம் நம்முடிய கணினியில்(வோய் ஃபை இருக்கும் கணினியில் மட்டும்) இருக்கும் இணையதளத்தை(INTERNET) ஐ வோய் பை மூலமாக மற்ற அதாவது மொபைல் அல்லது வோய் ஃபை வசதியுள்ள அனைத்து சாதனத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம்… அதற்க்கு இந்த மென்பொருள் பயன்படுகின்றது இதனை டவ்ன்லோட் செய்து ரன் செய்து பயன்படுத்திகொள்ளலாம் http://www.4shared.com/get/G8TFMOo1/Virtual-wi-fi-router.html படத்தை பார்க்க இதில் கான்பிகர் பகுதியில் சென்றால் Hotspot Name : இல் நம்மக்கு விருப்பமுள்ள அல்லது நமது பெயரை கொடுத்து அதற்க்கு ...

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம்

Posted: 14 May 2014 05:29 AM PDT

வீட்டுக்குள்ளே வந்துவிட்டால், எதிராளி யும் விருந்தாளி... படி தாண்டி வெளியே கால் வைக்கிற அடுத்த நொடியே போட்டுத் தள்ள வேண்டிய பகையாளி! இப்படி, விடியோ கேம்ஸ் மாதிரி விநோதமான விதிமுறை கொண்ட ஒரு முரட்டுக் குடும்பத்தை காட்டி, அந்த புதிர் வளையத்துக்குள் சிக்கும் நாயகன் சந்தானம் எப்படி மீண்டு, காதல் ஸ்கோரை ஜெயித்தார் என்று காட்டி இருக்கிறார்கள். சென்னையில் சைக்கிளை மிதித்து தண்ணீர் சப்ளை செய்யும் சந்தானம், 'வேன் வாங்கினால்தான் வேலை' என்று முதலாளி சொல்லவும், காசுக்கு வழி தேடுகிறார். சொந்த ஊரில் ...

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 14 May 2014 04:53 AM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே ...

ஒரு நிமிட சந்திப்பு tamil kathal kavithai

Posted: 14 May 2014 04:30 AM PDT

"> காதல் வலி ஓர் உணர்வு "< " நாம் சந்திப்பதோ ஒரு நிமிடம் அந்த ஒரு நிமிடத்திற்காக நான் எத்தனை மணி நேரம் உனக்காக காத்து இருப்பேன் என்று உனக்கு தெரியுமா " அந்த நேரத்தில் என் இதயம் உன்னை நினைத்து எத்தனை முறை துடிக்கிறது தெரியுமா!! " என் நெஞ்சில் கை வைத்துப்பார் தெரியும்!! " நான் உன்னை சும்மா ஏமாத்துவதற்காக மறைந்து நிற்பதை கூட எப்படி கண்டு பிடிக்கிறாய் என்று இது வரைக்கும் எனக்கு தெரியவில்லை " நாம் பேசும் வார்த்தைகளை என்னிக்கொண்டே இருக்கின்றாய் மனதில்!! " ஒரு நொடியை கடப்பது என்ன ...

சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் சித்ரா பெளர்ணமி திருவிழா

Posted: 14 May 2014 04:28 AM PDT

சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாத சுவாமி கோவிலில் சித்ரா பெளர்ணமி விழா சிங்கம்புணரி.மே.14 : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாத சுவாமி கோவிலில் 73ம் ஆண்டு சித்ரா பெளர்ணமி விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் காலை 9.30 மணிக்கு சீரணி அரங்கம் அருகிலுள்ள அய்யப்பன் கோவிலிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிக்கு பால்குடம் எடுத்து வந்தனர். ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 14 May 2014 04:26 AM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை!

Posted: 14 May 2014 03:21 AM PDT

புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம், 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக்கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய்., ஆற்றிய உரை வருமாறு: ""பெயர் பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ரஷ்யாவில் தாம் சென்றபோது ரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றை திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (19)

Posted: 14 May 2014 02:55 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

சென்னையிலிருந்து மோகனன்...

Posted: 14 May 2014 01:25 AM PDT

எனது பெயர் மோகனன் என்கிற மோ. கணேசன். எனது சொந்த ஊர் ஆத்தூர் (சேலம் மாவட்டம்). தற்போது வசிப்பது மேற்கு தாம்பரத்தில் (சென்னை). 12 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் இருக்கிறேன். ஆனந்த விகடன், தினமணி, மாலைமலர் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவன். தற்போது புதிய தலைமுறை கல்வி வார இதழில் உதவி ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்... இணைய உலாவல் மூலம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ஈகரையை அறிந்தவன். கவிதை, கதை, கட்டுரை, வரலாற்றுப் புதினம் எழுதுவது... சினிமா பாடல் எழுதுவது ...

நீ சிரித்தால் நான் சிரிப்பேன்!

Posted: 14 May 2014 12:06 AM PDT

இறுதித் தேர்வு முடிவைப் பார்த்த மகேசுக்கு தூக்கிவாரிப் போட்டது.எல்லா மாணவர்களும் தங்களது முடிவைப் பார்த்து விட்டு சிலர் சிரித்தவர்களாகவும் சிலர் தலையைத் தொங்கவிட்வர்களாகவும் சிலர் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாதவர்களாகவும் சென்று கொண்டிருக்க மகேஸ் மட்டும் ஆழ்ந்த சிந்தனையிலும் கவலையிலும் காணப்பட்டான். அவனது நண்பர்கள் பலர் வந்து அழைத்தும் அதனை கவனத்தில் கொள்ளாது சிந்தனையுலேயே இருந்தான்.அவனது நண்பன் கமலன் வந்து அழைத்தும் அவன் எழாமலேயே நீ போ கொஞ்சம் தாமதித்து வருகிறேன் என்று மறுத்துவிட்டான். இது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™