Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மோடி பாதுகாப்பு அதிகரிப்பு: மத்திய அரசு விளக்கம்

Posted:

புதுடில்லி: "பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு, சிறப்பு நடைமுறைகளின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது' என, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.மத்திய அ ரசு வட்டாரங்கள், இதுகுறித்து, மேலும் கூறியதாவது: நரேந்திர மோடி, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகின. புலனாய்வு அமைப்புகளும், இதுகுறித்து எச்சரித்திருந்தன. இதையடுத்து, சிறப்பு நடைமுறைகளின் அடிப்படையில், அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மோடிக்கு, தேசிய பாதுகாப்பு படையான, என்.எஸ்.ஜி., ...

கந்து வட்டி கும்பலிடம் சிக்கி கதறும் தொழிலாளர்கள்: 'டாலர்' சிட்டியின் கொடூர முகம்

Posted:

திருப்பூர்:கந்து வட்டி, கடனுக்காக சொத்துக்களை அபகரித்தல், ஏலச்சீட்டு மோசடி என அடாவடி நிதி நிறுவன கும்பல்களின் ஆதிக்கம், திருப்பூரில் அதிகரித்துள்ளது. இவர்களிடம் சிக்கும் ஏழை தொழிலாளர்கள், மீள முடியாமல் தவிக்கின்றனர்.திருப்பூருக்கு தினமும் ஏராளமான தொழிலாளர்கள் பிழைப்பு தேடி வருகின்றனர். வேலை கிடைத்தாலும், வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து, மருத்துவ செலவு உள்ளிட்ட செலவுகள் அதிகம். இதனால் குடும்பத்தை நடத்த திணறுகின்றனர்.அவசர தேவைக்காக ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால், 200 ரூபாயை வட்டியாக எடுத்துக் கொள்கின்றனர். கடனை அடைக்க மற்றொரு கடன் என, ...

சென்றது மோடிக்காக பேசியது தமிழுக்காக

Posted:

தமிழகத்தில் கடந்த மாதம் 24ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து, தமிழகத்தில் இருக்கும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பா.ஜ., தரப்பினரும் மோடி ஆதரவாளர்களும், மோடி போட்டியிடும் குஜராத் மாநிலம் வதோதராவுக்குச் சென்று பிரசாரம் மேற்கொண்டனர்.அங்கிருக்கும் தமிழர் ஓட்டுகளைக் குறிவைத்து, அவர்கள் மோடிக்காக தீவிர பிரசாரம் மேற் கொண்டனர். இதற்காக சைக்கிள் பேரணி உட்பட, பல்வேறு விதமான உத்திகளையும் மேற்கொண்டனர்.அதன் அடுத்த கட்டமாக, மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கும் அவர்கள் சென்றனர். தமிழகத்தில் ...

'ஜல்லிக்கட்டு போட்டிகள் சுப்ரீம் கோர்ட்டில் ஆய்வு மனு'

Posted:

சென்னை:'ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு, மறு ஆய்வு மனு மூலம் அனுமதி பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தமிழர்களின் நீண்ட நெடிய, பாரம்பரியம் மிக்க பண்பாட்டின் அடையாளமாக, வீர விளையாட்டுகள் போற்றப்பட்டு வருகின்றன.வீரமும், காதலும், தமிழர் பண்பாட்டின் இரு கண்கள். உலகெங்கிலும் இருந்து, தமிழகத்தை நோக்கி, பிறநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்திடக் கூடிய, பண்பாட்டுத் திருவிழா ஜல்லிக்கட்டு.தமிழகத்தில் ...

90 சதவீதம் ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு இல்லை: பயணிகள் அதிருப்தி காரணம்

Posted:

பயணிகளின் வருகை குறைந்ததை அடுத்து, ஆம்னி பஸ்களில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை, 90 சதவீதம் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் செயல்படுத்தவில்லை.சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. வசதி மற்றும் சொகுசான பயணம் என்பதன் அடிப்படையில், ஆம்னி பஸ்களில் பயணிப்போர் அதிகம்.மே 1 முதல்கோடை விடுமுறையின் போது, நகரங்களில் வசிப்போர் சொந்த ஊருக்கு செல்வது, சுற்றுலா பகுதிகளுக்கு செல்வது என, ஆம்னி பஸ்களில் பயணம் களைகட்டும்.இந்த தருணத்தில், ஆம்னி பஸ் கட்டணத்தை, மே, 1ம் ...

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்?அறிவியல் படிப்புகளுக்கு மவுசு கூடுகிறது

Posted:

பொள்ளாச்சி:தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில், மாணவர்களிடையே என்ன மேல்படிப்பில் சேரலாம் என்ற குழப்பம், நிலவி வருகிறது.கடந்த 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வழக்கம் போல இந்த ஆண்டும் படபடப்புடன் காத்திருந்த மாணவர்கள், தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்களை அறிந்து கொண்டனர். மதிப்பெண்கள் தெரிந்தவுடன் அடுத்த கட்டமாக கல்லூரியில் சேர்வது குறித்த 'டென்ஷன்' மாணவர்களிடையே ஆரம்பித்துள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரும் இது குறித்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். காரணம், என்ன வகையான படிப்புகளில் தங்கள் பிள்ளைகளை ...

மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போலீசார் குவிப்பு: இன்று ஓட்டுப்பதிவிற்காக 45 ஆயிரம் பேர் பாதுகாப்பு

Posted:

வாரணாசி : பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி போட்டியிடும், வாரணாசி லோக்சபா தொகுதியில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, பாதுகாப்புக்காக, 45 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், வதோதரா மற்றும் உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி என, இரு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். இதில், வதோதராவில், ஏப்ரல், 30ம் தேதி தேர்தல் நடந்தது. மற்றொரு தொகுதியான, வாரணாசி யில், இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.பா.ஜ.,வின் கோட்டைவரலாற்று சிறப்புமிக்க கோவில் நகரமான வாரணாசியில், பா.ஜ., சார்பில், ...

மின்சார பிரச்னையை சந்திக்க உள்ள புதிய மத்திய அரசு அவசர நடவடிக்கை அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தல்

Posted:

புதுடில்லி : மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை, பருவமழை பற்றாக்குறையால், நீர்மின் உற்பத்தி குறையலாம் என்ற எதிர்பார்ப்பு போன்றவை, மத்தியில் பதவியேற்க உள்ள புதிய அரசுக்கு பெரும் சவாலாக இருக்கலாம் என, நம்பப்படுகிறது.இதுதொடர்பாக, நிபுணர்கள் கூறியதாவது:பூமத்திய ரேகை பகுதியிலும், கிழக்கு பசிபிக் கடல் பகுதியிலும், வழக்கத்திற்கு மாறாக உருவாகும் வெப்பம், எல்நினோ என, அழைக்கப்படுகிறது. இந்த எல்நினோ காரணமாக, பருவமழை வழக்கத்திற்கு குறைவாக பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அப்படி பருவமழை குறைவாக பெய்தால், ...

மன்மோகன் சிங்கிற்காக தயாராகிறது மோதிலால் நேரு சாலை பங்களா

Posted:

புதுடில்லி: பிரதமர் பதவிக்காலம் முடிவடைந்ததும், தற்போது வசிக்கும், டில்லி ரேஸ்கோர்ஸ் சாலை, 7ம் நம்பர் பங்களாவிலிருந்து, மோதிலால் நேரு சாலையில் உள்ள, 3ம் நம்பர் பங்களாவில் குடியேற உள்ளார், மன்மோகன் சிங்.பராமரிப்பு பணிகள்இதுதொடர்பாக, பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:மன்மோகன் சிங் புதிதாக குடியேற உள்ள பங்களாவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளன. தற்போது, ரேஸ்கோர்ஸ் சாலை வீட்டில் உள்ள, உபயோகமற்ற பொருட்களையும், சில தட்டுமுட்டு சாமான்களையும் மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் ...

லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு இன்றுடன் நிறைவு: 606 வேட்பாளர்களின் தலை விதி நிர்ணயமாகிறது

Posted:

புதுடில்லி: ஒன்பதாவது மற்றும் கடைசி கட்ட லோக்சபா தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இன்றைய தேர்தலின் போது, 41 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.நாட்டின், 16வது லோக்சபாவுக்கான எம்.பி.,க்களை தேர்வு செய்ய, ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல்கட்ட தேர்தல், ஏப்ரல், 7ம் தேதி நடந்தது. எட்டாவது கட்ட தேர்தல், கடந்த, 7ம் தேதி நடந்த போது, ஆந்திராவில், 25 தொகுதிகள் உட்பட, ஏழு மாநிலங்களில் உள்ள, 64 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.பீகாரில் 6இதையடுத்து, ஒன்பதாவது மற்றும் கடைசி கட்ட லோக்சபா தேர்தல் இன்று ...

ரூ.1,600 கோடி ஹெராயினுடன் குஜராத்திலிருந்து சென்ற கப்பல் : கடலோர பாதுகாப்பில் மோடி அலட்சியம் என காங்., குற்றச்சாட்டு

Posted:

புதுடில்லி : குஜராத் மாநிலத்திலிருந்து, 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளுடன் சென்ற கப்பலை, வெளிநாட்டு கூட்டு போதை தடுப்பு கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என, காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் போவதாக பேசி வரும் நரேந்திர மோடி, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும், கேள்வி எழுப்பி உள்ளது. காங்கிரஸ் தகவல் தொடர்பாளர், அபிஷேக் மனு சிங்வி இதுதொடர்பாக நேற்று கூறியதாவது: குஜராத் மாநிலத்திலிருந்து, கடந்த மாதம், 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளுடன் கப்பல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™