Daily Thanthi |
- யுவராஜ் விஸ்வரூபம், பெங்களூர் அணி 190 ரன்கள் குவிப்பு
- பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்றுநோய்?
- பிரபுல் படேலுக்கு பா.ஜ.க.வில் இடம் கிடையாது: கோபிநாத் முண்டே
- வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்கள் விடுவிப்பு
- பிரதமர் இல்லத்தை காலி செய்கிறார் மன்மோகன் சிங்: புதிய பங்களா தயார் ஆகிறது
- தினம் ஒரு தகவல் - நயாகரா நீர்வீழ்ச்சி
- மக்களவை தேர்தலையொட்டி இந்திய-நேபாள எல்லைகள் மூடப்பட்டது
- குருவியார் பதில்கள்
- ஐபிஎல் கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா
- மேற்கு வங்காளத்தில் மறுவாக்குப்பதிவு: 88 சதவீத வாக்குகள் பதிவாகின.
| யுவராஜ் விஸ்வரூபம், பெங்களூர் அணி 190 ரன்கள் குவிப்பு Posted: 11 May 2014 09:16 AM PDT பெங்களூர் 7 வது ஐபில் கிரிக்கெட் தொடரின் 35 லீக் ஆட்டம் இன்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி முதல் படி பெங்களூர் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியில் வழக்கத்திற்காக மாறாக கெய்லுடன் விராட் கோக்லி தொடக்க ஆட்டக்ககாரகா களம் இறங்கினார். இருப்பினும் இந்த மாற்றம் பலனளிக்கவில்லை. 9 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் விரட் கோக்லி ரிட்சர்டுசன் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கெய்லும் தனது வழக்கமான தாக்குதல் ஆட்டத்தை தொடுக்க முடியாமல் திணறினார். இதனால் 25 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில் தேம்பே பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் முன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஷோல் 16 ரன்களில் ஆட்டம் இழந்தார். அப்போது 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து பெங்களூர் அணி தடுமாறி வந்துகொண்டிருந்தது. இதன் பிறகு நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி டி வில்லியர்சும் யுவராஜ்சிங்கும் ஜோடி சேர்ந்தனர். வித்தியாசமான அதிரடி ஷாட்களால் பந்துவீச்சாளர்களை நிலைகுலையை செய்யும் டி வில்லியர்ஸ் இந்த முறை சற்று தடுமாறினார். இருப்பினும் மறுமுனையில் நின்ற யுவராஜ் சிங் களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். அவ்வப்போது சிக்ஸர்களயும் பறக்கவிட்ட அவர் பழைய ஆட்டத்தை நினைவு கூர்ந்தார். இதனால் பெங்களூர் அணியின் ரன் ரேட் எகிற தொடங்கியது. 38 பந்துகளில் 7 சிக்ஸர்க்ள் உடபட 83 ரன்கள் குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த யுவராஜ் சிங் 18 ஓவர் முடிவில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து 32 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உட்பட 58 ரன்கள் குவித்த டி வில்லியர்ஸ் 19.4 வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு 191 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்றுநோய்? Posted: 11 May 2014 09:01 AM PDT டாக்கா, வங்கதேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர், தஸ்லிமா நஸ்ரின் (வயது 51). இவர் எழுதிய லஜ்ஜா நாவல் கடும் சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து, வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார். தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வரும் தஸ்லிமா நஸ்ரின், கோடை விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தஸ்லிமா மிகுந்த சோகத்தில் உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் கூறுகையில், பிரியமுள்ள இந்தியர்களே, எனக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், இதனால் நான் இறந்தால், தயவு செய்து எனது பூனை மினுவை பார்த்துக் கொள்ளுங்கள். உலகிலேயே மிகச்சிறந்த பூனை அது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.தஸ்லிமாவின் தாய் ஏற்கனவே புற்றுநோயால் இறந்துள்ளதும், அவரது சகோதரர் ஒருவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. image: category:Tagging:News Group Category: |
| பிரபுல் படேலுக்கு பா.ஜ.க.வில் இடம் கிடையாது: கோபிநாத் முண்டே Posted: 11 May 2014 08:32 AM PDT ஷீர்டி, இந்நிலையில், பிரபுல் படேலுக்கு பா.ஜ.க.வில் இடம் கிடையாது என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கோபிநாத் முண்டே இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சென்ற வாரம் மராத்திய நாளிதழ் ஒன்றில் பிரபுல் படேல் பா.ஜ.க.வில் சேரப்போவதாக செய்தி வெளியாகியிருந்தது. இதுபோன்ற வதந்திகளுக்கு பின்னால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தான் உள்ளார். படேலுக்கே இடமில்லை என்கிற போது அவரது குருநாதர் சரத்பவாருக்கு நிச்சயமாக இங்கு இடம் கிடையாது. மத்தியில் ஆட்சியமைக்க பா.ஜ.க.வுக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு தேவையில்லை.'' என்றார்.
image: category:News Group Category: |
| வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்கள் விடுவிப்பு Posted: 11 May 2014 08:27 AM PDT வாரணாசி, குஜராத் முதல்–மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி, வதோதராவுடன், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியிலும் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.இதையொட்டி, நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்தது. இந்நிலையில், நேற்று வாரணாசியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் தேர்தல் கமிஷனின் பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் 'திடீர்' சோதனை நடத்தினர். அங்கிருந்த டி–சர்ட், துண்டு பிரசுரங்கள், பேட்ஜ் உள்ளிட்ட பிரசார உபகரணங்களை கைப்பற்றினர்.ஆனால், இந்த சோதனைக்கு பா.ஜனதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கைப்பற்றிய உபகரணங்கள், உபயோகிக்காமல் வெறுமனே வைக்கப்பட்டிருந்ததாக அவர்கள் கூறினர். அந்த பொருட்களை உற்பத்தியாளர்களுக்கே திருப்பி அனுப்பிக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் கூறினர். இந்த நிலையில் பறிமுதல் செய்த உபகரகணங்கள் விநியோகத்திற்காக வைக்கப்பட்டவை அல்ல என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அங்கு இருந்த உபகரணங்கள் வினியோகத்திற்கு வைக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.எனவே அவை விடுவிக்கப்பட்டுள்ளன என்று வாரணாசி தொகுதி சிறப்பு தேர்தல் பார்வையாளர் பீரவீண் குமார் தெரிவித்துள்ளார். category:Tagging:News Group Category: |
| பிரதமர் இல்லத்தை காலி செய்கிறார் மன்மோகன் சிங்: புதிய பங்களா தயார் ஆகிறது Posted: 11 May 2014 08:00 AM PDT புதுடெல்லி, பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 7-ம் எண் பங்களாவில் வசித்து வருகிறார். தான், பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிட போவதில்லை என்று ஏற்கனவே அவர் அறிவித்து விட்டதால் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு அவருக்கு அரசு சார்பில் புதிய பங்களா ஒதுக்கப்படவேண்டும். இதற்காக டெல்லி, மோதிலால் நேரு சாலையில் 2.5 ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ள மத்திய பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 3-ம் எண் பங்களா ஒதுக்கப்பட்டு உள்ளது.டெல்லி முதல்-மந்திரியாக பதவி வகித்த ஷீலா தீட்சித் இதே பங்களாவில் கடந்த பிப்ரவரி மாதம் வரை குடியிருந்தார். இந்த பங்களாதான் தற்போது மன்மோகன் சிங்கிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 3 மாதங்களாக இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணி துரிதமாக நடந்து வந்தது. இங்கு 4 படுக்கை அறைகள் உள்ளன. முன்னாள் பிரதமர் தன்னை பார்க்க வருகிறவர்களை சந்திப்பதற்காக தனி அரங்கும் உள்ளது. இந்த பங்களாவின் நுழைவாயிலில் புதிய சோதனைச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. பங்களாவின் தோட்டங்களை அழகுபடுத்தும் வேலைகள் மட்டுமே மீதம் உள்ளது. இதனை வேலைக்காரர்கள் அழகுபடுத்தி வருகிறார்கள்.வெள்ளையர் காலத்து பங்களாவான இதனை மெருகூட்டுவதற்காக சுவர்களுக்கும், மேற்கூரைகளுக்கும் புதிய வண்ணமும் பூசப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| தினம் ஒரு தகவல் - நயாகரா நீர்வீழ்ச்சி Posted: 11 May 2014 07:18 AM PDT அமெரிக்காவுக்கு எப்பவுமே தான் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கு இயற்கையும் கூட விதிவிலக்கு இல்லை. உலகின் மிக நீளமான நதி என்றால் அது எகிப்தில் ஓடும் நைல் நதிதான். இதன்நீளம் 4 ஆயிரத்து 160 மைல்கள்.அமெரிக்காவால் இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. உலகிலேயே நீளமான நதி தங்கள் நாட்டில் ஓடும் மிஸோரி மிஸி- ஸிபி நதிதான் என்று அடம்பிடித்தது. இதன் நீளம் 4 ஆயிரத்து 945 மைல்கள் என்று கூறியது. அதன் கூற்று உண்மையாக இருந்தாலும் புவியியல் வல்லுனர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. நைல் என்பது ஒரே நதி. ஆனால் அமெரிக்காவில் ஓடும் மிஸோரி, மிஸிஸிபி நதிகள் தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளில் இருந்து தோன்றுபவை. மிஸோரி நதி 2 ஆயிரத்து 475 மைல் நீளமும், மிஸிஸிபி நதி 2 ஆயிரத்து 470 மைல் நீளமும் கொண்டவையாக இருந்தன. இதனால் தான் புவியியல் வல்லுனர்கள் இந்தக் கூற்றை ஏற்கவில்லை. ஆனால் நயாகராவில் ஒரு விநாடிக்கு ஆயிரத்து 300 காலன் நீர் தான் விழுகிறது. உயரத்தை கணக்கெடுத்தாலும் நயாகரா கிடையாது. வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி தான் மிக அதிக உயரமாக 2 ஆயிரத்து 648 அடி உயரத்தில் இருந்து விழுகிறது.அகலமான நீர்வீழ்ச்சி என்று பார்த்தால் அதுவும் இல்லை. லாவோஸ் நாட்டில் உள்ள கோனே நீர்வீழ்ச்சி தான் அகலமான நீர் வீழ்ச்சி. இப்படி உயரத்தில், நீளத்தில், அகலத்தில், கொள்ளளவில் என்று எந்த ஒரு அளவீடிலும் நயாகராவுக்கு முதலிடம் இல்லை தான். ஆனாலும் நீர்வீழ்ச்சி என்ற உடன் அனைவரின் மனக் கண்முன் தோன்றி மகிழ்விப்பது நயாகரா நீர்வீழ்ச்சி தான். அதிலும் அதன் இருப்பிடத்திலும் அது பிற நீர்வீழ்ச்சிகளை பின்னுக்குத் தள்ளி விடுகிறது. எப்படியோ இந்த விஷயத்தில் அமெரிக்கா நினைத்தது போல் நயாகரா முதன்மையான நீர்வீழ்ச்சியாகவே இருக்கிறது. image: category: |
| மக்களவை தேர்தலையொட்டி இந்திய-நேபாள எல்லைகள் மூடப்பட்டது Posted: 11 May 2014 07:14 AM PDT காத்மண்டு, பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் நாளை இறுதிக்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் நேபாளத்தின் இந்திய எல்லைகளை அந்நாட்டு அரசு மூட உத்தரவிட்டுள்ளது. இருநாட்டு எல்லைகளிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நாசவேலைகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேபாளம் தெரிவித்துள்ளது. அதேபோல் பீகாரின் ரக்சால்-பிர்கஞ்ச் எல்லை மற்றும் அந்த பகுதியிலுள்ள பிற எல்லைகளும் நேற்று மாலை 4.30 மணி அளவில் மூடப்பட்டன. தேர்தலையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் மூடப்பட்டுள்ள எல்லைகள் மூன்று நாட்கள் வரை திறக்கப்படமாட்டாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் இருநாடுகளுக்குமிடையே எந்தவித போக்குவரத்து நடைபெறாமல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கபில்வஸ்து, ரூபாந்தேகி, நாவல்பாரசி மாவட்டங்களிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளுக்கிடையேயான எல்லை பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக கடந்த மாதம் 7 ஆம் தேதி இருநாட்டு அதிகாரிகளும் சந்தித்து கொண்ட பிறகு தற்போது எல்லைகளில் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. image: category:News Group Category: |
| Posted: 11 May 2014 07:07 AM PDT குருவியாரே, விஜய், சிம்பு, தனுஷ் மூன்று பேரும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும்? (வே.கவுதம், பெரம்பூர்) அந்த படத்தை தயாரிக்கும் பட அதிபர், வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர், திரையிட்ட தியேட்டர் அதிபர்கள் ஆகியோருக்கு பெருமையும், பெரும் லாபமும் கிடைக்கும். ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்! *** பிரபு, 'சின்ன தம்பி' படத்தை மறுபடியும் தயாரித்து, தனது மகனை அதில் நடிக்க வைப்பாரா? (சை.ஞானமுத்து, வீரசோழகன்) 'சின்ன தம்பி'யாக பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை நடிக்க வைப்பது நல்ல யோசனைதான். ஆனால், தூரியிலே ஆட வந்த வானத்து மின்விளக்காக யாரை நடிக்க வைப்பது? *** குருவியாரே, எத்தனை கதாநாயகிகள் வந்தாலும், உடற்கட்டும், முகவெட்டும் நயன்தாரா அளவுக்கு யாருக்கும் இல்லையே...? (பி.ஸ்ரீதர்ராஜன், சேலம்) அதனால்தான் 'நகல்கள்' காணாமல் போகின்றன. 'அசல்' மட்டும் அப்படியே இருக்கிறது! *** ஸ்ரீதேவி மீண்டும் தமிழ் பட உலகுக்கு வருகிறாராமே...அவருக்கு என்ன வேடம் கொடுப்பார்கள்? (வே.கவுதம், ராணிப்பேட்டை) கதாநாயகி வேடமா கொடுப்பார்கள்? அக்கா, அண்ணி, அம்மா வேடங்கள்தான் கொடுப்பார்கள்! *** குருவியாரே, ஜெயம் ரவி, ஆர்யா, விஷால், ஜீவா ஆகியோர் நல்ல நண்பர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் நான்கு பேரும் சேர்ந்து நடிக்காதது ஏன்? (வி.அன்பரசன், ஜெயம்கொண்டம்) நட்பு வேறு, தொழில் வேறு என்பதை நான்கு பேருமே மிக நன்றாக புரிந்து கொண்ட புத்திசாலிகள். நண்பர்களாக பழகுவார்கள். ஆனால், தொழில் என்று வரும்போது தனியாகத்தான் ஜெயிக்க விரும்புவார்கள்! *** சுகன்யா சின்ன வேடங்களில் கூட நடிக்க ஆரம்பித்து விட்டாரே...? 'என்னமோ நடக்குது' படத்தில் இரண்டு அல்லது மூன்று சீன்களில் மட்டும் தலைகாட்டியிருந்தாரே? (கே.தேசிங்குராஜா, டெங்கனிக்கோட்டை) சுகன்யாவுக்கு பெரிய வேடத்தை விட, 'சின்ன' வேடம்தான் சவுகரியமாக இருக்கிறது போலும்! *** பரத்துக்கு திருமணமாகி சில மாதங்கள் ஆகிவிட்டதே...வீட்டில் ஏதாவது விசேஷம் உண்டா? (ஜே.டேவிட், சத்துவாச்சாரி) இன்னும் இல்லை. ஆறு மாதங்கள் போகட்டும். அப்புறம் பார்க்கலாம் என்கிறார், பரத்! *** ஆர்யா தயாரிப்பில், சுகா இயக்கிக்கொண்டிருந்த 'படித்துறை' படம் என்ன ஆனது? (ஜெ.பிரபாகரன், நெல்லை–7) அந்த படம் கிடப்பில் போடப்பட்டு சில வருடங்கள் ஆகிவிட்டன. ஆர்யா அவருடைய தம்பியை வைத்து வேறு ஒரு புதிய படத்தை தொடங்கி விட்டார்! *** குருவியாரே, 'ஆதவன்' படத்தைப்போல் படம் முழுவதும் தோன்றும்படியான ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் சரோஜாதேவியை தரிசிக்க முடியுமா? (எஸ்.மந்திரமூர்த்தி, நாகர்கோவில்) படம் தயாரிக்க தயாரிப்பாளர் தயாராக இருந்தால், தரிசனம் கொடுக்க சரோஜாதேவி தயாராகவே இருக்கிறார்! *** 'வைகை புயல்' வடிவேல் மீண்டும் திரைவானில் சிறகடித்து பறப்பாரா? (எச்.பகதூர், பெரம்பூர்) புயல் எப்போதுமே ஒரேயடியாக ஓய்ந்து போகாது. அவ்வப்போது வீசும்...சூறாவளியாக சுழன்று அடிக்கும்...சுனாமியாக தூள் பறத்தும்...தும்! *** குருவியாரே, 'கத்தி'யை அடுத்து விஜய் நடிக்கும் அடுத்த படம் எது, அதை டைரக்டு செய்பவர் யார்? (சி.ஜெய்குமார், காஞ்சிபுரம்) 'கத்தி'யை அடுத்து விஜய், சிம்புதேவன் டைரக்ஷனில் தயாராகும் படத்தில் நடிக்க இருக்கிறார்! *** திரிஷாவின் எதிர்கால கணவர் யார்? என்று கூற முடியுமா? (கே.தனசிங், கோவை) நிச்சயமாக, ஒரு கொழுத்த பணக்காரர்தான் என்று உறுதியாக சொல்ல முடியும்! *** குருவியாரே, இதுவரை அதிகமுறை தேசிய விருது பெற்ற கவிஞர் யார்? (மு.ரா.பாலாஜி, கோலார் தங்க வயல்) வைரமுத்து! *** சிவகார்த்திகேயன்–ஹன்சிகா மீண்டும் ஜோடி சேருவார்களா? (ஜி.ஸ்டீபன்ராஜ், ஈரோடு) ஏன் சேர மாட்டார்கள்? அவர்களுக்குள் சண்டை ஒன்றும் இல்லையே...! *** நமீதா, ஷகிலா ஆகிய இரண்டு பேரில் யாரை கதாநாயகியாக போட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளருக்கு அதிக லாபம் கிடைக்கும்? (ஏ.பெரிய கருப்பன், சிவகங்கை) நமீதாவை கதாநாயகியாகவும், ஷகிலாவை கவர்ச்சி நாயகியாகவும் நடிக்க வைத்து படம் தயாரித்தால், தயாரிப்பாளர் நிறைய கல்லா கட்டுவார்! *** குருவியாரே, ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும்? (பி.சி.மதியழகன், மதுரை) முதலில் அவருடைய தாயாரை, ''மாதாஜி'' என்று அழைத்து தினமும் மரியாதை செய்ய வேண்டும். அவர், ''நில்'' என்றால் நிற்க வேண்டும். ''உட்கார்'' என்றால் உட்கார வேண்டும்...மாதாஜியிடம் எதையும் மறைக்கக்கூடாது. அவருக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது! *** கே.பாலசந்தர் இயக்கிய முதல் திரைப்படம் எது, இதுவரை எத்தனை படங்களை இயக்கியுள்ளார்? (கார்த்திகை முத்து, திருப்பூர்) கே.பாலசந்தர் இயக்கிய முதல் படம், 'நீர்க்குமிழி.' அவர் இதுவரை 102 படங்களை டைரக்டு செய்திருக்கிறார்! *** மைனா, கும்கி ஆகிய படங்களை டைரக்டு செய்த பிரபுசாலமன் இதுவரை ஏதாவது படத்தில் நடித்து இருக்கிறாரா? (ஜெ.மைதிலி, தஞ்சை) பிரபுசாலமன் முதன்முதலாக, 'பேரழகி' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது! *** குருவியாரே, சம்பள விஷயத்தில் பிரபுதேவா, ஷங்கரை மிஞ்சி விட்டாராமே...உண்மையா? (இரா.ரஜினி முருகன், புதுச்சேரி) உண்மைதான்! *** இனியா தொடர்ந்து வில்லி வேடங்களில் நடிப்பாரா? (எஸ்.ராமகிருஷ்ணா, திருவொற்றியூர்) வில்லியுடன் கொஞ்சம் கவர்ச்சியும் கலந்த கதாபாத்திரமாக இருந்தால், உடனே ஒப்புக்கொள்வாராம்! *** category:Tagging:News Group Category: |
| ஐபிஎல் கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா Posted: 11 May 2014 07:01 AM PDT கட்டாக், 7வது ஐபிஎல் கிரிக்கெட் ஐபிஎல் தொடரில் வலுவான அணியாக வலம் வந்த பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 7வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 34 வது லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் கம்பீர் தனது அணி முதலில் பந்து வீசும் என்று தெரிவித்தார். இதன் படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும் மந்தீப் சிங்கும் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே கொல்கத்தா பந்து வீச்சாளர்களை கதிகலங்க வைத்த சேவாக், ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இருப்பினும் மறுமுனையில் நின்ற மந்தீப்சிங் ரன் ஏதுவும் இன்றி ஆட்டம் இழந்தார். முன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சகா 15 ரன்கள் எடுத்த நிலையில் மார்க்கல் பந்தில் போல்டு ஆனார்.பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட அதிரடி புயல் மேக்ஸ்வெல் இம்முறை ஏமாற்றம் அளித்தார். 14 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலயில் சாவ்லா பந்தில் மார்க்கலிடம் கேட்ச் எடுத்து ஆட்டம் இழந்தார். இருப்பினும் மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். அணியின் ஸ்கோர் 112 ரன்களாக இருந்த போது சேவக் 50 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த வீரர்கள் பெரிய அளவில் அதிரடி காட்டாமல் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் நிர்ணையிக்கபப்ட்ட 20 ஓவரில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. இதையடுத்து, ஆடிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ராபின் உத்தப்பா ருத்ர தாண்டவம் ஆடி பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார்.28 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 46 ரன்கள் எடுத்து இருந்த உத்தப்பா, அவனா பந்தில் கேட்ச் ஆனார். இருப்பினும் அவர் விட்டுச்சென்ற பணியை கச்சிதமாக கொல்கத்தா கேப்டன் கம்பீரும், மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய மனிஷ் பாண்டேவும் தொடரந்ததால் அந்த அணி 18 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. கம்பீர் 45 பந்துகளில் 63 ரன்களும் பாண்டே 35 பந்துகளில் 36 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். image: category:Tagging:News Group Category: |
| மேற்கு வங்காளத்தில் மறுவாக்குப்பதிவு: 88 சதவீத வாக்குகள் பதிவாகின. Posted: 11 May 2014 06:45 AM PDT பங்கூரா, மேற்கு வங்காள மாநிலத்தின் பங்கூரா மாவட்டத்திலுள்ள பிஷ்னுபூர் மக்களவை தொகுதியில் இன்று மறுவாக்குப்பதிவு நடந்தது. அதில் 88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி பிஜயா பாரதி தெரிவித்தார். சாகாபூரிலுள்ள வாக்குச்சாவடி எண் 27ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ தீபலி சாகா வாக்காளர்களை கட்டாயப்படுத்தி 100 வாக்குகளை போடவைத்ததாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டு இவ்விவகாரத்தை விசாரித்து அறிக்கை அளித்தது. அதன்பேரில், மாநில தலைமை தேர்தல் ஆணையர் சுனில் குப்தா அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டார். மறுவாக்குப்பதிவுக்கு காரணமான எம்.எல்.ஏ தீபலி சாகா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. image: category:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |