Tamil News | Online Tamil News |
- ஆந்திர தேர்தலில் வேட்பாளர்கள் செலவழித்த பணம் 8,000 கோடி: தனியார் அமைப்பின் அறிக்கையில் 'திடுக்' தகவல்
- தேர்தல் ஆணையர்களுக்குள் மோதலா? இல்லவே இல்லை என சம்பத் மறுப்பு
- ஜூன் 2ல் மலரும் 16வது லோக்சபா : புதிய எம்.பி.,க்களுக்காக தயாராகும் பார்லி.,
- கடைசி 41 தொகுதிகளிலும் பிரசாரம் முடிந்தது: நாளை ஓட்டுப்பதிவு; 16ல் 'ரிசல்ட்!'
- கூடங்குளம் அணு உலை தீர்ப்பு: அடக்கிவாசித்த அரசியல் தலைவர்கள்
- விரைவில் கட்சியிலும் அமைச்சரவையிலும் மாற்றம்:அ.தி.மு.க., தலைமை அதிரடி முடிவு
- அரசியல் வேண்டாம்: ஜெ.,வுக்கு கருணாநிதி பதில்
- அரசியலால் அல்லாடும் ஐ.பி.எஸ்., அதிகாரி அர்ச்சனா
- இதுவரை இல்லாத அளவுக்கு அரிசி விலை எகிறும்: தொடர் வறட்சி, விளைச்சல் குறைவு காரணம்
- உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் பிரிவு உபசார கடிதம் அனுப்பிய பிரதமர்
| Posted: ஆந்திராவில் நடந்து முடிந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 8,000 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், வாக்காளர்களுக்கு, பணம், பொருட்கள் மற்றும் மதுபானங்களை வழங்க, இந்த தொகை செலவழிக்கப்பட்டுள்ளது.கடும் போட்டிஆந்திராவில், கடந்த மாதம், 30 மற்றும் இம்மாதம், 7ல் லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல் நடந்தன. 'ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும்' என்ற, மத்திய அரசின் அறிவிப்புக்குப் பின் நடந்த, முதல் ... |
| தேர்தல் ஆணையர்களுக்குள் மோதலா? இல்லவே இல்லை என சம்பத் மறுப்பு Posted: புதுடில்லி : ''தேர்தல் ஆணையர்களுக்குள் எந்த விதமான கருத்து வேறுபாடும், மோதலும் இல்லை,'' என, தலைமை தேர்தல் ஆணையர், சம்பத் கூறினார்.உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், சமீபத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால், அந்தப் பொதுக்கூட்டத்திற்கு, பாதுகாப்பு விஷயங்களை காரணம் காட்டி, வாரணாசி லோக்சபா தொகுதியின் தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்து விட்டார்.பாரபட்சமாகஅதே நேரத்தில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், நேற்று வாரணாசியில் வீதிவீதியாகச் சென்று பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையம் அனுமதி ... |
| ஜூன் 2ல் மலரும் 16வது லோக்சபா : புதிய எம்.பி.,க்களுக்காக தயாராகும் பார்லி., Posted: லோக்சபா தேர்தல் முடிவுகள், அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், தற்போதைய 15வது லோக்சபாவை கலைப்பதற்கான, ஜனாதிபதியின் உத்தரவு, இம்மாதம், 18ல் வெளியாகலாம். புதிய, 16வது லோக்சபாவை அமைக்க, வரும் ஜூன் 2ல், பார்லிமென்ட் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மிகப்பெரிய பணிகள் லோக்சபா தேர்தல் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வரும், 16ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது. அன்று மாலையே, அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்விக்கான தெளிவான விடை தெரிந்து விடும்.இதனால், புதிய அரசு அமைக்க ஜனாதிபதி மாளிகையும், புதிய எம்.பி.,க்களை வரவேற்க ... |
| கடைசி 41 தொகுதிகளிலும் பிரசாரம் முடிந்தது: நாளை ஓட்டுப்பதிவு; 16ல் 'ரிசல்ட்!' Posted: புதுடில்லி: ஒன்பதாவது மற்றும் இறுதி கட்ட லோக்சபா தேர்தல், நாளை நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள, 41 தொகுதிகளிலும், அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், நேற்று மாலையுடன் ஓய்ந்தது. வரும், 16ல், ஓட்டு எண்ணிக்கை நடப்பதால், அன்று மாலையே, 'அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்' என்பது தெரிந்து விடும்.நாட்டின், 16வது லோக்சபாவுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய, லோக்சபா தேர்தல், ஒன்பது கட்டங்களாக நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. இதைஅடுத்து தேர்தல் திருவிழா சூடுபிடிக்கத் துவங்கியது.இறுதி கட்ட தேர்தல்இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி ... |
| கூடங்குளம் அணு உலை தீர்ப்பு: அடக்கிவாசித்த அரசியல் தலைவர்கள் Posted: கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வந்த அரசியல் கட்சிகள், அணு உலை உற்பத்தியை தடையில்லாமல் தொடருவதற்கு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அதுகுறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், அமைதி காத்து வருகின்றன.திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்ய நாட்டின் உதவியுடன், தலா, 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஓர் அணு உலையில், 900 மெகாவாட் அளவிற்கு, மின் உற்பத்தி நடந்து வருகிறது. இரண்டாம் அணு உலையில், மின் உற்பத்தி துவங்குவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது.கூடங்குளம் அணு மின் ... |
| விரைவில் கட்சியிலும் அமைச்சரவையிலும் மாற்றம்:அ.தி.மு.க., தலைமை அதிரடி முடிவு Posted: லோக்சபா தேர்தல் முடிந்ததும், சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சியிலும், ஆட்சியிலும் மாற்றங்களை மேற்கொள்ள, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், தமிழகத்திற்கு சாதகமாக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, முதல்வர் ஜெயலலிதாவிற்கு, பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலிலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் உள்ளார். மத்தியில் பா.ஜ., கூட்டணிக்கு, தனி மெஜாரிட்டி கிடைக்கா விட்டால், மற்ற கட்சிகள் துணையோடு, பிரதமராக முயற்சிப்பது, இல்லையெனில், மத்தியில் அமையும் ஆட்சியில் அங்கம் ... |
| அரசியல் வேண்டாம்: ஜெ.,வுக்கு கருணாநிதி பதில் Posted: சென்னை : 'முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், அரசியல் ஆதாயம் தேடாமல், விவசாயிகளின் வாழ்வாதாரம், மக்களின் குடிநீர் பிரச்னையை முன்னிறுத்தி, நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை, முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முல்லைப் பெரியாறு அணை தீர்ப்பு குறித்து கருத்து கூறுகையில், 'மகிழ்ச்சிக்குரியது' என, தெரிவித்தேன். ஆனால், இந்த தீர்ப்பு பற்றி, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், அரசியல் ரீதியாக என் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.முதல்வரின் குற்றச்சாட்டுக்கு, நான் பதில் ... |
| அரசியலால் அல்லாடும் ஐ.பி.எஸ்., அதிகாரி அர்ச்சனா Posted: தமிழக, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அரசியல் சதுரங்க விளையாட்டில் சிக்கித் தவிப்பது, தொடர்கதையாகி வருகிறது. இதற்கு, அர்ச்சனா ராமசுந்தரமும் விதிவிலக்கல்ல. எந்த சிக்கல் பட்டியலிலும் இடம்பெறாத அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, மத்திய, மாநில அரசு பணியில் சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அரசு நிர்வாகத்தை செம்மையாக நடத்த, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனரோ இல்லையோ, தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை சரிகட்ட, குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்குகள் பாயாமல் இருக்க, அனுதாபிகளை காப்பாற்ற, தங்களின் ... |
| இதுவரை இல்லாத அளவுக்கு அரிசி விலை எகிறும்: தொடர் வறட்சி, விளைச்சல் குறைவு காரணம் Posted: தமிழகத்தில் தொடர் வறட்சி காரணமாக, நெல் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. விளைச்சல் குறைவு காரணமாக, நெல் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகா டீலக்ஸ் மற்றும் தமிழக பி.பி.டி.,- பொன்னி ரக அரிசி வரத்தும் குறைந்து வருகிறது. பற்றாக்குறை காரணமாக, அரிசி விலை, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் காவிரி பாசன பகுதிகளில், அதிக அளவில் நெல் பயிரிடப்படுகிறது. ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி மற்றும் துணை ஆறு பாயும் மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கர்களில், ஐ.ஆர்., 20, ஏ.டி.டீ., 36, ... |
| உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் பிரிவு உபசார கடிதம் அனுப்பிய பிரதமர் Posted: புதுடில்லி: பிரதமர் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன முன்னாள் அதிபர் வென் ஜியாபாவோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் உட்பட, உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும், பிரதமர் மன்மோகன் சிங் பிரிவு உபசார கடிதம் எழுதி உள்ளார்.நல்ல நட்பு : பிரதமராக பதவி வகித்த காலத்தில், தன்னுடன் இணக்கமாக செயல்பட்டதை நினைவு கூர்ந்துள்ள மன்மோகன் சிங், அதற்காக அந்தத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கின் பிரிவு உபசார கடிதத்திற்கு, சீனா முன்னாள் அதிபர் வென் ஜியாபாவோ, தன் கைப்பட பதில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 11,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |