Daily Thanthi |
- மத்திய மந்திரி பிரபுல் படேல் பா.ஜ.க.வில் இணைகிறாரா?
- உத்தராகண்ட் மாநிலத்தில் பஸ் பள்ளத்தில் விழுந்து 17 பேர் பலி, 7 பேர் படுகாயம்
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பணிகள் தொடங்கியது: தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழுவீச்சில் நடவடிக்கை
- தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள கைதியை 2 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு
- ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு
- மக்களவை தேர்தலில் கடைசி கட்ட பிரசாரம் ஓய்ந்தது.
- ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்கு 144 ரன்கள்
- ஐகோர்ட்டு உத்தரவு; பணி நிரந்தரமான 3 நாளில் ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம்
- மோடியை விட மிகப்பெரிய ஆம் ஆத்மி ஒன்று இருக்க முடியாது: ராஜ்நாத் சிங்
- மம்தா அரசுக்கு பின்னடைவு: சாரதா சிட்பண்ட் மோசடி பற்றி சி.பி.ஐ. விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
| மத்திய மந்திரி பிரபுல் படேல் பா.ஜ.க.வில் இணைகிறாரா? Posted: 10 May 2014 08:36 AM PDT புதுடெல்லி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரபுல் படேல் பா.ஜ.க.வில் இணைய போவதாக அண்மையில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தான் பா.ஜ.க.வில் இணையப்போவதாக ஊடகங்கள் வெளியிட்டு வரும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளார். அண்மையில், சில ஊடகங்கள் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு பிரபுல் படேல் பா.ஜ.க.வில் சேரப்போவதாகவும், அதன்பிறகு கோண்டியா தொகுதியிலிருந்து அவர் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க. டிக்கெட் பெற்று மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என்றும் செய்திகள் வெளியிட்டிருந்ததாக கூறப்பட்டது. அதேபோல், மராட்டியத்தில் போட்டியிடுபவர்களில் பணக்கார வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தை பிடித்த மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.217 கோடியே 90 லட்சம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging:News Group Category: |
| உத்தராகண்ட் மாநிலத்தில் பஸ் பள்ளத்தில் விழுந்து 17 பேர் பலி, 7 பேர் படுகாயம் Posted: 10 May 2014 07:52 AM PDT கோபேஷ்வர், உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் 300 மீ்ட்டர் பள்ளத்தில் தனியார் பஸ் ஒன்று உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். பள்ளத்தில் விழுந்த பேருந்து துண்டு துண்டாக சிதறியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில், அந்த பேருந்து ரிஷிகேஷில் இருந்து காட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும், பகல் 12.45 மணி அளவில் அது செல்ல வேண்டிய இடத்துக்கு அருகாமையில் வந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 மீட்டர் ஆழமான மலை பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதும் தெரிய வந்துள்ளது. இந்தப் பேருந்தில் பயணம் செய்த மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். சிலர் காணாமல் போயுள்ளனர். மலைச்சரிவு என்பதால் அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இறுதியில், இந்த பஸ் கர்ஹ்வால் மோட்டார் கம்பெனிக்குச் சொந்தமானது என்றும், இந்த பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் காட் ப்ளாக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த கோர சம்பவத்திற்கு உத்தராகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத், ஆளுநர் ஆஷிஷ் குரேஷி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். image: category:News Group Category: |
| Posted: 10 May 2014 07:50 AM PDT தேனி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகளில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர். முல்லைப்பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் உச்சநீர்மட்டம் 152 அடி ஆகும். இந்த அணை பலவீனம் அடைந்து விட்டதாக கூறி கேரள மாநில அரசு அணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் விளைவாக கடந்த 1979–ம் ஆண்டு அணை நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டு மதகுகள் 136 அடிக்கு நிலை நிறுத்தப்பட்டன. அதன்பிறகு அணையை பலப்படுத்தும் பணியை தமிழக பொதுப்பணித்துறை தீவிரமாக மேற்கொண்டது. இதன் எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது அங்கீகாரம் பெற்ற உயர்மட்ட குழுவை நியமித்து அணையின் பலத்தை சோதனையிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அந்த குழு பல்வேறு கட்ட சோதனைகளை முடித்து ஆய்வறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 7–ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறியது. அந்த தீர்ப்பில், முல்லைப்பெரியாறு அணை பலமாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. பணிகள் தொடக்கம் இருப்பினும் அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பணிகளை தீர்ப்பு வந்த மறுநாளில் இருந்தே தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அணையின் மதகு பகுதியில் 136 அடிக்கு பதிலாக 142 அடி அளவில் மதகை நிலை நிறுத்த அளவீடு மற்றும் குறியீடு செய்யும் பணிகளில் தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்கள் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை விரைந்து முடித்து மதகை 142 அடிக்கு நிலை நிறுத்த தமிழக அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது,' சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பணியை கடந்த 8–ந்தேதியே தமிழக பொதுப்பணித்துறை தொடங்கி விட்டது. முதற்கட்டமாக அணை மதகு பகுதியில் 142 அடியாக மதகை நிலை நிறுத்த அளவீடு மற்றும் குறியீடு செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இந்த பணியில் 5 பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகளை துரிதமாக முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார். image: category:Tagging:News Group Category: |
| தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள கைதியை 2 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு Posted: 10 May 2014 07:39 AM PDT மதுரை, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் விக்ரம் (வயது 26). கத்தியை காட்டி ஒருவரிடம் பணம் பறிக்க முயன்றதாக இவரை பட்டுக்கோட்டை போலீசார் கடந்த 6–ந் தேதி கைது செய்து திருச்சி ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் விக்ரமின் தாயார் மணிமேகலை இன்று திடீரென்று இறந்து போனார். தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விக்ரமை ஒரு வாரம் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று விக்ரமின் சகோதரி சங்கீதா, மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று அவசர மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட்டு கிளைக்கு இன்று விடுமுறை நாளாக இருந்த போதிலும் கூட நீதிபதி பி.என்.பிரகாஷ் அந்த மனுவை விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆர்.வெங்கடேசன், வெங்கடேஸ்வர், இளையராஜா ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அரசு தரப்பில் வக்கீல் ஏ.பி.பாலசுப்பிரமணி ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணை கைதியான விக்ரம் அவருடைய தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள 2 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று திருச்சி ஜெயில் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார். image: category:Tagging:News Group Category: |
| ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு Posted: 10 May 2014 07:27 AM PDT மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 33வது போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. இதில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. image: category:Tagging:News Group Category: |
| மக்களவை தேர்தலில் கடைசி கட்ட பிரசாரம் ஓய்ந்தது. Posted: 10 May 2014 06:51 AM PDT புதுடெல்லி, மக்களவை தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. வாரணாசி தொகுதியில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். 9 கட்டங்களாக நடந்து வரும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கியது. தற்போது கடைசி கட்டமாக உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்பட 41 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதில் பீகார் மாநிலத்தின் 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தின் 18 தொகுதிகள் மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தில் 17 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தல் என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தன. இரு தினங்களுக்கு முன்பு வாரணாசியில் மோடியின் இரு கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்திருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி வாரணாசியில் பிரமாண்ட பேரணியில் கலந்து கொண்டார். இந்நிலையில், ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ஆகியோர் இன்று மோடியை எதிர்த்து அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. image: category:News Group Category: |
| ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்கு 144 ரன்கள் Posted: 10 May 2014 06:40 AM PDT டெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 32வது போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான காக் (7) மற்றும் பீட்டர்சன் (35) ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்பு விளையாடிய அகர்வால் (25), கார்த்திக் (39), சுக்லா (21) டுமினி (4) மற்றும் ஜாதவ் (5) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ராகுல் சுக்லா (2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி அணி 143 ரன்கள் எடுத்துள்ளது. ஐதராபாத் அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. image: category:Tagging:News Group Category: |
| ஐகோர்ட்டு உத்தரவு; பணி நிரந்தரமான 3 நாளில் ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம் Posted: 10 May 2014 06:22 AM PDT மதுரை, பணி நிரந்தரம் செய்யப்பட்டு 3 நாட்கள் மட்டுமே பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அலுவலக உதவியாளர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளம் அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் மரியபெனடிக்ட்(வயது 63). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:– நான், கடந்த 15.6.1980 அன்று வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வணிக வரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு சேர்ந்தேன். கடந்த 1.1.2006 அன்று 10 ஆண்டுகள் பணி முடித்த தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய 2008–ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி 26.3.2010 அன்று அலுவலக உதவியாளராக பணி நிரந்தரம் செய்யப்பட்டேன். 3 நாட்கள் மட்டுமே பணியாற்றிய நான் 29.3.2010 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். மறுத்து விட்டனர் அதன்பின்பு, எனக்கு ஓய்வூதியம் வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். நான், மொத்தம் 29 ஆண்டுகள் 3 மாதம் பணியாற்றி உள்ளேன். இதில், பெரும்பாலான நாட்கள் தினக்கூலி பணியாளராகவே இருந்துள்ளேன். நான், தினக்கூலி பணியாளராக இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எனக்கு ஓய்வூதியமும், ஓய்வூதிய பலன்களும் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. ஓய்வூதியம் வழங்க உத்தரவு இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் நெல்லை வக்கீல் வி.கண்ணன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:– மனுதாரர் நீண்டகாலத்துக்கு பின்பு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது. குறிப்பிட்ட காலத்துக்குள் அவரை பணி நிரந்தரம் செய்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது நியாயமற்றது. அரசு அலுவலர்கள் தற்காலிகமாக பணியாற்றிய காலத்தில் 50 சதவீத காலத்தை ஓய்வூதியத்துக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விதி உள்ளது. அதன்படி, மனுதாரர் தினக்கூலி பணியாளராக பணியாற்றிய மொத்த காலத்தில் 50 சதவீத காலத்தை ஓய்வூதியத்துக்காக எடுத்துக்கொண்டு அவருக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை 3 மாதத்துக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| மோடியை விட மிகப்பெரிய ஆம் ஆத்மி ஒன்று இருக்க முடியாது: ராஜ்நாத் சிங் Posted: 10 May 2014 05:32 AM PDT வாரணாசி, தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் மோடியை விட மிகப்பெரிய ''ஆம் ஆத்மி'' (பாமர மனிதன்) ஒன்று இல்லை. அவர் 'டீ' யை விற்று வந்த சாதாரண மனிதர் என்று தெரிவித்துள்ளார். நாளை மறுநாளுடன் தேர்தல் முடிவடையும் நிலையில், பா.ஜ.க.வின் கடைசி செய்தியாளர்கள் சந்திப்பு வாரணாசியில் இன்று நடைபெற்றது. அதில் பேசிய ராஜ்நாத் சிங் வாரணாசியில் ஆம் ஆத்மியை போட்டியாக கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது அப்படியா? அது எந்த கட்சி? ஆம் ஆத்மி என்ற ஒரு கட்சி இருக்கிறதா? என்பது போல் காட்டிக் கொண்டார். அப்போது பேசிய அவர், ''நாம் எல்லோரும் ஆம் ஆத்மிதான். நானும் கூட ஆம் ஆத்மிதான். ரயில்வே பிளாட்பாரங்களில் டீ விற்று வந்த மோடியை விட மிகப்பெரிய ஆம் ஆத்மி (பாமர மனிதன்) ஒன்று இருக்க முடியாது.'' என்றார். வாரணாசியில் பிறந்த ராஜ்நாத் சிங் அங்கு மோடி அதிகபட்ச வாக்குகள் சதவீத வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டுகளை இழப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். image: category:Tagging:News Group Category: |
| மம்தா அரசுக்கு பின்னடைவு: சாரதா சிட்பண்ட் மோசடி பற்றி சி.பி.ஐ. விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 10 May 2014 05:12 AM PDT புதுடெல்லி, மேற்கு வங்காளத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனம், முதலீட்டாளர்களிடம் ரூ.2,500 கோடி மோசடி செய்தது. இவ்வழக்கில், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த மோசடி மற்றும் ஒடிசா, அசாம் மாநிலங்களில் நடந்த சிட்பண்ட் மோசடிகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற மம்தா அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான பெஞ்ச், மேற்கண்ட 3 மாநிலங்களில் நடந்த சிட்பண்ட் மோசடி வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற நேற்று உத்தரவிட்டது. மேலும், சிட்பண்ட் நிறுவனங்களுக்கு எதிரான விசாரணையை விரைவுபடுத்துமாறு அமலாக்கப்பிரிவுக்கு உத்தரவிட்டது. image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |