ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
- ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி?
- போய் வாருங்கள் பிரதமரே...! - தமிழருவி மணியன்
- இந்தியா பொக்ரானில் அணு சோதனை நடத்திய நாள்: மே 11- 1998
- கவிதை-ஹைக்கூ
- சாப்பாட்டுக்காக க்யூவில் நின்ற அதே இடத்திற்கு பின்னாளில் கோடீஸ்வரராக நுழைந்த ஒருவர் கதை!
- ஒரு நிமிட சந்திப்பு tamil kathal kavithai
- கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)
- சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்: மே 11- 1897
- அன்னைக்கு வாழ்த்து
- இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
- யுக புருஷன் கிரிஷ்ணரின் ``யோக சூத்திரங்கள் ``
- வெட்கமில்லை...
- இட்லி வகைகள் - வெந்தய இட்லி Photo வுடன்
- சுக்கில் இருக்கு சூட்சுமம் !!!
- குற்ற உணர்வு!!
- திருமண தடை நீக்கும் 10 டிப்ஸ் !
- தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!
- குழந்தைகளுக்கு அவசியமான உணவு முட்டை
- அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை
- பெண்ணடிமை
- கோழையாய் வாழ்ந்திடாதே !!
- திரு ரமணீயன் ஐயா அவர்கள் இன்று முதல் ஈகரை நிர்வாகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்!
- இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பவன்ராஜ்
- மேலாடை அணியாமல் பார்க்கில் அமர்ந்து படிக்கும் பெண்கள் – நியூயார்க்
- ஊரில் திருவிழா...!! { கவிதை }.
- 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
- கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!
- இதோ, நானும் என்னைப் பற்றி ! -- எம்கேஆர்சாந்தாராம்.
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (13)
- பிக்னிக் & டூர் ரெசிபிகள்
- சிவகங்கை மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 40 பள்ளிகள்
- சிப்பாய் கிளர்ச்சி ஆரம்பபான நாள்: மே 10- 1857
- நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994
- அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம்
| மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Posted: 10 May 2014 02:42 PM PDT கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ... | |
| ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி? Posted: 10 May 2014 02:01 PM PDT கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிக் கொண்டு வலம் வருகின்ற டாக்டர்களை இன்னும் கொஞ்ச காலம்தான் பார்க்க முடியும். அது மட்டுமல்ல... ஸ்டெதாஸ்கோப்பையே வருங்காலத்தில் மியூசியத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும். இது மருத்துவ அறிவியல் நிகழ்த்தப் போகும் மாயாஜாலம்! கால் நூற்றாண்டுக்கு முன்பு கிராமபோனில்தான் பாட்டுக் கேட்டோம். பிறகு ஆடியோ கேசட் வந்தது; அது போய் சி.டி. வந்தது; இப்போது எம்.பி. 3, எம்.பி.4 என தொழில்நுட்பம் எகிறிக் கொண்டிருக்கிறது. அது மாதிரியே மருத்துவ உபகரணங்களிலும் அப்டேட் நிகழ்ந்து கொண்டே ... | |
| போய் வாருங்கள் பிரதமரே...! - தமிழருவி மணியன் Posted: 10 May 2014 02:01 PM PDT மாண்புமிகு பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு... உங்கள் பத்தாண்டு கால ஆட்சியால் பாதிக்கப்பட்ட பலகோடி சாமான்ய இந்தியக் குடிமக்களில் ஒருவன் மிகுந்த பணிவோடும் நிறைந்த நல்லன்போடும் எழுதும் கடிதம். உங்கள் நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழ்ந்த அறிவுள்ளவர். இந்தக் கடிதத்தின் சாரத்தை அவர் மூலம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுகிறேன்! ஒருவகையில் நீங்கள் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; வேறு வகையில் மிக மோசமாகச் சபிக்கப்பட்டவர். நாட்டில் ... | |
| இந்தியா பொக்ரானில் அணு சோதனை நடத்திய நாள்: மே 11- 1998 Posted: 10 May 2014 01:44 PM PDT பொக்ரான் என்ற நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மெர் மாவட்டத்தில் ஜெய்சால்மெரில் இருந்து ஜோத்பூர் செல்லும் சாலையில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இவ்விடம் மலைப்பாறைகளாலும், மணலாலும் சூழ்ந்துள்ளது, மேலும் சுற்று வட்டாரத்தில் ஐந்து உப்புக்கற்கள் கொண்ட வீச்சுகள் உள்ளன. பொக்ரான் தற்பொழுது இந்திய அரசின் அணுக்கரு வெடிப்புப் பரிசோதனைத் தளமாக இயங்கி வருகிறது. 18-5-1974 அன்று இங்கு முதல் அணுககரு வெடிப்புப் பரிசோதனை (சிரிக்கும் புத்தர்) நடந்தேறியது. பிறகு 1998-ம் ஆண்டு மே ... | |
| Posted: 10 May 2014 01:38 PM PDT அவன் கவி இவன் கவி எழுது நீ கவி. அதுஇது மோசம் என்றெழுது சிறக்கும் கவி. என்ன யோசனை பொறுக்கிப்போடு வார்த்தை பிறக்கும் கவி. எதுகைக்கு மோனை எட்டா சொல்லிருந்தால் ஆகும் புதுகவி. | |
| சாப்பாட்டுக்காக க்யூவில் நின்ற அதே இடத்திற்கு பின்னாளில் கோடீஸ்வரராக நுழைந்த ஒருவர் கதை! Posted: 10 May 2014 01:07 PM PDT ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகையும் சமீபத்தில் கையெழுத்தான ஒரு ஒப்பந்தம் அதிரவைத்துள்ளது. ஏனெனில், சில ஆண்டுகளுக்கு முன்னர் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட இளைஞர் ஒருவரை இன்று உலகின் பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவராக ஆக்கிய ஒப்பந்தமாயிற்றே அது. WHAT'S APP நிறுவனத்தை வாங்குவதாக பேஸ்புக் வெளியிட்ட அறிவிப்பு தான் அது. செல்போன்களிடையே குறுந்தகவல் படங்கள் உள்ளிட்டவற்றை எஸ்.எம்.எஸ்., அனுப்பும் தகவல் தொடர்பில் முன்னணியில் உள்ளது வாட்ஸ்ஆப். இந்த வாட்ஸ்ஆப்பை உருவாக்கியவர்களுக்கும், தற்போது அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கும் ... | |
| ஒரு நிமிட சந்திப்பு tamil kathal kavithai Posted: 10 May 2014 01:00 PM PDT "> காதல் வலி ஓர் உணர்வு "< ! " நாம் சந்திப்பதோ ஒரு நிமிடம் அந்த ஒரு நிமிடத்திற்காக நான் எத்தனை மணி நேரம் உனக்காக காத்து இருப்பேன் என்று உனக்கு தெரியுமா! " அந்த நேரத்தில் என் இதயம் உன்னை நினைத்து எத்தனை முறை துடிக்கிறது தெரியுமா!! " என் நெஞ்சில் கை வைத்துப்பார் தெரியும்!! " நான் உன்னை சும்மா ஏமாத்துவதற்காக மறைந்து நிற்பதை கூட எப்படி கண்டு பிடிக்கிறாய் என்று இது வரைக்கும் எனக்கு தெரியவில்லை " நாம் பேசும் வார்த்தைகளை என்னிக்கொண்டே இருக்கின்றாய் மனதில்!! " ஒரு நொடியை கடப்பது ... | |
| கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) Posted: 10 May 2014 12:41 PM PDT ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறும் உரிமை கருணாநிதிக்கு இல்லை: ஜெயலலிதா தான் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கருணாநிதி ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்துக் கூறும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை: இந்திய நாடே அதிர்ச்சியுறும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் கோவையில் நடைபெற்ற போது, அதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய அன்றைய முதல்வர் கருணாநிதி; ... | |
| சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்: மே 11- 1897 Posted: 10 May 2014 12:28 PM PDT ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக 1897 மே 11 இல் தமிழ்நாடு சிவகங்கையில் சுத்தானந்தர் பிறந்தார். அவரின் இயற்பெயர் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் 'பாரத சக்தி' எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று இரண்டாம் அகவையில் காலமானார். திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் ... | |
| Posted: 10 May 2014 12:27 PM PDT இறைவன் பார்வையும் வினைவழிச் செல்லும் உறவின் முறைமையும் சிலவழி நில்லும் பருவக் காதலும் கதைபல சொல்லும் குறையிலாத் தாய்மையே தரணியில் வெல்லும் கருவில் உயிர்தந்து உடம்பும் தந்தாய் மருவில்லா அன்பை மழையாய்ப் பொழிந்தாய் துயரேற்றுத் துன்பமிலா வாழ்வை ஈந்தாய் உயிருடல் யாவும் உனக்கே தாயே பயனேதும் நினையாத நிகரற்ற உயிரே கதிர்போல வாழ்க்கைக்கு ஒளிதரும் சுடரே எனதருகே நீயிருந்தால் சொர்க்கத்தின் நிழலே பயமில்லை என்றென்றும் அன்னையின் அருளே | |
| இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Posted: 10 May 2014 12:00 PM PDT பங்குனி உத்திரம் தினத்தன்று நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு விட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே அப்பிக் கிடந்தது. தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு ... | |
| யுக புருஷன் கிரிஷ்ணரின் ``யோக சூத்திரங்கள் `` Posted: 10 May 2014 11:49 AM PDT கீதை 6:11 யோகத்தை அப்பியாசிக்க ஒருவர் தனித்த ஒரு இடத்தை தேர்ந்து கொள்ளவேண்டும் ! அங்கு ஒரு ஆசணத்தை அமைக்க தரையின் மீது தர்ப்பை புல்லை பரப்பவேண்டும் !அதன் மீது மான் தோலை விரித்து அதன் மீது மெல்லிய துணியால் மூட வேண்டும் ! இந்த ஆசணம் உயரமாகவோ தாழ்வாகவோ இருக்க கூடாது !முக்கியமாக அந்த இடத்தில் தூய்மையான சிந்தனைகள் மட்டுமே சிந்திக்கபட்டதால் தூய்மை நிறம்பியதாக மாற்றம் பெறவேண்டும் ! கீதை 6:12 அதன் மீது சாதகன் அமர்ந்து தன் மனத்தை ஒன்றின் மீது குவித்து அப்பியாசிப்பதால் மனதையும் ;புலன்களையும் ; செயல்களையும் ... | |
| Posted: 10 May 2014 11:40 AM PDT 'யாருக்கும் வெட்கமில்லை' இப்படிச் சொல்லிச் சொல்லியே இவரைவிட அவர்- அவரைவிட இவர் சிறந்த குறைந்த திருடர்(ன்)?! என்று ஒவ்வொரு முறையும் மாற்றிமாற்றிப் போட்டுவிட்டு மாற்றிமாற்றிக் கவிழ்க்கிறோமே... 'யாருக்கும் வெட்கமில்லை' என்பதை மாற்றுவோம் 'நமக்கும் வெட்கமில்லை' என்றே! | |
| இட்லி வகைகள் - வெந்தய இட்லி Photo வுடன் Posted: 10 May 2014 11:34 AM PDT தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே ! இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப. அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ... | |
| சுக்கில் இருக்கு சூட்சுமம் !!! Posted: 10 May 2014 11:07 AM PDT மூலிகைப் பொருட்களில் ''சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் ''சுக்கு'' முதலிடம் பெறுகிறது. சுக்கிலிருக்குது சூட்சுமம்'' என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில் சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது. சுக்கு, கருப்பட்டி இட்டு ''சுக்கு நீர்'' தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டைக்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர். சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்: இஞ்சியை பக்குவம் ... | |
| Posted: 10 May 2014 10:46 AM PDT தோலிலே தனது சால்வையை போட்டபடி வயற்காட்டு வரம்பால் சிந்தனை செய்தபடி நடந்து சென்று கொண்டிருந்தான் வேலாயுதம். படுத்த படுக்கையாகக் கிடக்கும் தனது நோயாளி மனைவி.வயசுக்கு வந்திட்ட இரண்டு மகள்மார்,கடைக்குட்டி செல்வம். படிப்பை முடித்துவிட்டு காத்திருக்கும் மகள்மாருக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்யும் வயசு.அதற்காக அவன் சேமித்து வைத்ததெல்லாம் ஒரு சிறிய மண் குடிசைமட்டும்தான். தூரத்து உறவு சொந்தம் ஒன்று பக்கத்து ஊரில் வசிக்கிறது,அங்கு திருமண வயதில் ஒரு ஆண்பிள்ளை இருப்பதை கேள்வியுற்று அங்கு சென்றுதான் ... | |
| திருமண தடை நீக்கும் 10 டிப்ஸ் ! Posted: 10 May 2014 10:06 AM PDT 1. துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும். 2. ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும். 3. சென்னை - திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. பல்வேறு புராணச் சிறப்புகள் மிக்கது. இந்த ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது. 4. வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணை நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ... | |
| தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! Posted: 10 May 2014 09:56 AM PDT கோவை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததையடுத்து 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், தலைகுண்டா பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கவிதா. இவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் கவிதா தோல்வி அடைந்ததையடுத்து, அவர் மன வேதனை அடைந்தார். இதனையடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், உபதலையை சேர்ந்த சர்மிளா என்ற மாணவி, அரசு உதவிபெறும் ... | |
| குழந்தைகளுக்கு அவசியமான உணவு முட்டை Posted: 10 May 2014 09:51 AM PDT சத்துள்ள உணவுப் பட்டியலில் முட்டைக்கு முக்கிய இடம் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு சக்தி தரும் உணவாகவும், சத்து நிறைந்த உணவாகவும் முட்டை விளங்குகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்… நாம் முட்டை என்று பொதுவாக சொல்வதும், அதிகமாக சாப்பிடுவதும் கோழி முட்டையைத்தான். அதிக புரதச்சத்து வழங்கும் உணவாகவும், அத்தியாவசிய வைட்டமின்கள், தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் நிறைந்த உணவாகவும் முட்டை விளங்குகிறது.100 கிராம் முட்டைத் திரவத்தில் 75 கிராம் ... | |
| அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை Posted: 10 May 2014 09:45 AM PDT மே 1 -ம் தேதி முதல் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய நாடுகள் தடை விதிதத் நிலையில் இந்தியாவிலிருந்து மிளகாய் இறக்குமதி செய்ய சவூதி அரேபியா தடை விதித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகத்திலுள்ள அதிகாரி சுரேந்தர் பகத் கூறியதாவது: மே 30 ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து மிளகாய் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் முடிவை சவூதி வேளாண்மை அமைச் சகம் எடுத்துள்ளது என்ற தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண சவூதி அதிகாரி களிடம் பேசி வருகிறோம் என பி.டி.ஐ.க்கு ... | |
| Posted: 10 May 2014 09:30 AM PDT என் அம்மாவுக்கு தங்கச்சி பாப்பா பிறந்தநாளில் எங்க வீட்டு பசுவும் கன்று ஈன்றது தங்கச்சி பிறந்ததாய் அம்மாவை பொட்டபுள்ளையா பெத்துக்கிறா திட்டிய பாட்டி பொறந்த குழந்தை பொண்ணா போச்சுன்னு ஒருவாரம் பத்துநாள் அம்மாவிடம் பேசாத அப்பா பசு பொட்டை கன்னு போட்டதுன்னு சொல்லி குதூகலித்துப் போனார்கள் தங்கைக்கு ஒரு பெயர் வைத்தது போலவே அதற்கும் ஒரு பெயர் வைத்துக் கொண்டோம். எல்லாருக்கும் கன்று வெறும் கன்றல்ல செவில் நிறத்தில் வெள்ளை புள்ளியோடு மான்போல தோன்றிற்று கொஞ்சநாள் போக கன்றுக்கு கழுத்தில் ... | |
| Posted: 10 May 2014 07:01 AM PDT உன் உயர்வுக்காய் பலர் கூறும் பாராட்டு நீ உறங்க தாலாட்டாய் நினைத்திடாதே! போராடி முயன்றிடவே பல பேரின் தூண்டுதலை முழு மனதாய் ஏற்றிடாதே! வாழ்ந்திடவே பல வழிகள் உவப்பில்லா வழியதனை உன் வழியாய் கொண்டிடாதே! வாழ்வு உனை பயமுறுத்தும் வலு விழந்து நீ அதனை பயந்தவனாய் பதுங்கிடாதே! நீதிக்கு தலை வணங்கு வலிமை கண்டு நீ அதனை வெறுமையாய் விட்டிடாதே! இளமை உனை விரட்டும் கடமை முன் நிற்க இளமைக்காய் விழுந்திடாதே! உன் முன்னே பல பணிகள் உனை நம்பி பல இருக்க பகட்டுக்காய் பணிந்திடாதே! உலகெங்கும் ... | |
| திரு ரமணீயன் ஐயா அவர்கள் இன்று முதல் ஈகரை நிர்வாகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்! Posted: 10 May 2014 06:32 AM PDT ஈகரை தமிழ் களஞ்சியத்தின் தூணாக விளங்கும் திரு ரமணீயன் ஐயா அவர்களை ஈகரை நிர்வாகக் குழுவில் ஒருவராக நியமிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்! உங்களின் ஆசீர்வாதத்தால் இத்தளம் மேலும் பல சிறப்புக்களைப் பெறட்டும் ஐயா! | |
| இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பவன்ராஜ் Posted: 10 May 2014 06:09 AM PDT
| |
| மேலாடை அணியாமல் பார்க்கில் அமர்ந்து படிக்கும் பெண்கள் – நியூயார்க் Posted: 10 May 2014 06:08 AM PDT புத்தம் படிப்பதை ஊக்குவிப்பதற்காக பெண்கள் மேலாடை அணியாமல், மக்கள் கூடும் இடங்களில் புத்தகமும் கையுமாக அலைந்ததால் நியூயார்க் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டு வருகிறது. இதை ஊக்கப்படுத்துவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எழுத்தறிவு குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர்கள் நோக்கமே வாசிப்பை செக்ஸியாக மாற்றுவதுதான். இதற்காக அந்த எழுத்தறிவு குழுவைச் சேர்ந்த இளம் பெண்கள் மேலாடை அணியாமல் உடலை காண்பித்தபடி நியூயார்க் பூங்காவில் புத்தகமும் கையுமாக அலைந்தனர். இதை ... | |
| ஊரில் திருவிழா...!! { கவிதை }. Posted: 10 May 2014 05:58 AM PDT * உங்க ஊரு திருவிழாவுக்கு அழைத்துப் போ தம்பி !. * தீமிதி வைபவத்தை கிட்ட நின்னுப் பார்க்கணும் திரௌபதி கூந்தல் முடித்து அக்னி மடியேந்தும் காட்சியை அருகிருந்துப் பார்க்கணும் எனைக் கரம்பிடித்து அழைத்துச் சென்று அத்தனையும் காட்டு தம்பி.!. * வாணவேடிக்கை கொஞ்சம் தொலைவிலிருந்துக் காட்டு தம்பி !. * வெப்பம், புழுக்கம் போக்கிடவே சில்லுன்னுக் கோலி சோடா ஒண்ணு வாங்கி கொடு தம்பி !. * பஞ்சு மிட்டாய் பொரிகடலை சவ்வு மிட்டாய் கரும்பு சாறு வாங்கி கொடு தம்பி !. * பாம்புத் தலைப் பெண் ... | |
| 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Posted: 10 May 2014 05:56 AM PDT அருவி கவிதை இலக்கிய காலாண்டிதழ் - ஆசிரியர் - காவனூர். ந. சீனிவாசன் நன்றி – அருவி இதழின் ஆசிரியருக்கும் கவிஞர்களுக்கும் அருவியின் இதழ் எண் 20 – ஹைக்கூ சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஹைக்கூக்களில் எனக்குப் பிடித்த மிகச் சிறந்த 100 ஹைக்கூக்களை மட்டும் இப்பகுதியில் தொகுத்திருக்கிறேன். இந்த ஹைக்கூக்களைப் படித்தால் நீங்களும் நிச்சயம் சிறந்த தமிழ் ஹைக்கூ கவிஞராகலாம் என்பது என் திடமான நம்பிக்கை. நீங்களும் மரபு, புது கவிதைகளையும் ஹைக்கூக் கவிதைகளையும் அருவி – க்கு அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சலில் ... | |
| கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! Posted: 10 May 2014 05:48 AM PDT இளநீர் நுங்கு தேங்காய்ப் பால் சர்பத் என்னென்ன தேவை? வழுக்கையாக உள்ள இளநீர் - 1, இளம் நுங்கு - 1/2 கப், தேங்காய்ப் பால் - அரை கப், பொடித்த வெல்லம் - அரை கப், ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? இளநீரை உடைத்து, அதன் வழுக்கை, நுங்கு, வெல்லம், தேங்காய்ப் பால் எல்லாம் சேர்த்து அடிக்கவும். சுவையான இளநீர் சர்பத் ரெடி! * இதை அருந்துவதால் பருக்கள் வராது. இளமைத் தோற்றத்தோடு முகம் பொலிவு பெறும். | |
| இதோ, நானும் என்னைப் பற்றி ! -- எம்கேஆர்சாந்தாராம். Posted: 10 May 2014 04:49 AM PDT பெயர்: எம்கேஆர்சாந்தாராம் சொந்த ஊர்: தமிழ் நாடு, சென்னை.. ஆண் : ஈகரையை அறிந்த விதம்: கவிஞர் திரு . பொன் செல்ல முத்து அவர்கள் என்னை நம் ஈசரை யை அறிமுகப் படுத்தினார் - அவருக்கு என் நன்றி ! பொழுதுபோக்கு: பழைய தமிழ்த்திரைப்படப் பாடல்கள்கேபது - புத்தகங்கள் படிப்பது. தொழில்: மருத்துவன் ! மேலும் என்னைப் பற்றி: "பழைய தமிழ்த் திரைப்பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! " இந்த தலைப்பில் : தமிழ்த் திரைப்படங்கள், ... | |
| Posted: 10 May 2014 03:59 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 | |
| Posted: 10 May 2014 03:01 AM PDT பாக்கர் வாடி தேவையானவை: கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன், புளித் தண்ணீர் - கால் கப், கொப்பரைத் துருவல் - அரை கப், வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், சர்க்கரை, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, செய்முறை: கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, ... | |
| சிவகங்கை மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 40 பள்ளிகள் Posted: 10 May 2014 02:49 AM PDT தேவகோட்டை பெத்தாள் ஆச்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை செயின்ட் ஜான்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை ஜெயின்ட் மேரீஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை இன்பென்ட் சீசஸ் மெட்ரிக்.,மேல்நிலைப்பள்ளி, பீர்க்கலைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, செம்பனூர் எம்.கே.,அரசு மேல்நிலைப்பள்ளி, முத்துப்பட்டிணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏரியூர் அரசு மேல் நிலைப் பள்ளி, கானாடுகாத்தான் எம்.சி.டி.எம்.சி.சி., மேல் நிலைப்பள்ளி. புதுவயல் எஸ்.எஸ்.வி., மேல் நிலைப்பள்ளி, கோட்டையூர், ... | |
| சிப்பாய் கிளர்ச்சி ஆரம்பபான நாள்: மே 10- 1857 Posted: 10 May 2014 01:42 AM PDT இந்தியாவில் உள்ள உத்தர பிரதேசம் மாநிலம் மீரட் என்ற இடத்தில் 1857-ம் ஆண்டு மே 10-ந்தேதி முதன் முதலாக சிப்பாய்கள் பிரித்தானிக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இதன்மூலம் இந்திய விடுதலைப்போராட்டம் ஆரம்பமானது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1810 - ஆர்ஜெண்டீனாவின் தலைநகரான புவெனஸ் அயரெஸ் நகர மண்டபத்தை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். * 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் ... | |
| நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994 Posted: 10 May 2014 01:20 AM PDT நெல்சன் மண்டேலா (18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013) தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் ... | |
| அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Posted: 09 May 2014 11:18 PM PDT புதுடெல்லி: உலகில் அசுத்தமான காற்று நிறைந்த அபாயகரமான நகரங்களில் முதன்மையானதாக டெல்லி கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் 1600 நகரங்களில் நடத்திய ஆய்வில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. டெல்லி மட்டுமில்லாது ராய்ப்பூர், ஆக்ரா போன்றவையும், மிக அசிங்கமான காற்று நிறைந்த நகரங்களாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நகரங்களில் வாழும் மக்கள் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துகளுக்கு ஆளாவது அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டீசல், பெட்ரோல், வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |