Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பிளஸ்-2 தேர்வில் அபார சாதனை ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவி எஸ்.சுஷாந்தி மாநிலத்தில் முதல் இடம் 1,200-க்கு 1,193 மதிப்பெண் பெற்றார்

Posted: 09 May 2014 01:12 PM PDT

பிளஸ்-2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவி எஸ்.சுஷாந்தி, 1,200-க்கு 1,193 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பிடித்தார்.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு 8 லட்சத்து 80 ஆயிரத்து 352 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

தேர்வு முடிவு வெளியீடு

சென்னை டி.பி.ஐ. அலுவலக வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் நேற்று காலை 10 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிட்டார். அப்போது, இணை இயக்குனர்கள் ராஜ ராஜேஸ்வரி, ராமராஜன் ஆகியோர் உடன் இருந்தார்கள். இந்த ஆண்டு பள்ளிக்கூடங்களில் இருந்து 8 லட்சத்து 21 ஆயிரத்து 671 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 215 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 43 ஆயிரத்து 456 பேர் மாணவிகள்.

மாணவ-மாணவிகள் சேர்த்து, 7 லட்சத்து 44 ஆயிரத்து 698 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.6 ஆகும். பள்ளிக்கூடங்களில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 487 மாணவர்களும், 4 லட்சத்து 14 ஆயிரத்து 211 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி

வழக்கம்போல இந்த ஆண்டும், மாணவிகளே அதிக அளவில் (93.4) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 87.4 சதவீதம்.

இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், மாணவிகளின் தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது.

எஸ்.சுஷாந்தி முதல் இடம்

பிளஸ்-2 தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களில், இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.சுஷாந்தி 1200-க்கு 1,193 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார். இவர் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஆவார்.

எஸ்.சுஷாந்தி தமிழ் பாடத்திலும் மாநில அளவில் முதல் இடம் பெற்று உள்ளார். தமிழில் அவர் 200-க்கு 198 மதிப்பெண் பெற்று இருக்கிறார். இவர் பாடவாரியாக எடுத்த மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ் - 198

ஆங்கிலம் - 196

கணிதம் - 200

இயற்பியல் - 200

வேதியியல் - 199

உயிரியல் - 200

------
மொத்தம் - 1193
------

மாநில அளவில் 2-வது இடம்

பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் 2-வது இடத்தை தர்மபுரியைச் சேர்ந்த ஸ்ரீவிஜய் வித்யாமந்திர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.எல்.அலமேலு பிடித்து உள்ளார். இவர் 1,200-க்கு 1,192 மதிப்பெண் எடுத்துள்ளார். ஏ.எல்.அலமேலு பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-

தமிழ் - 197

ஆங்கிலம் - 196

கணிதம் - 200

இயற்பியல் - 200

வேதியியல் - 200

உயிரியல் - 199

------
மொத்தம் - 1192
------

2 பேருக்கு 3-வது இடம்

பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் 3-வது இடத்தை 2 பேர் பிடித்து உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

நாமக்கல் பொதுப்பட்டியை சேர்ந்த கிரீன்பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் டி.துளசிராஜன், சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.நித்யா ஆகியோர் 1,200-க்கு தலா 1,191 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.

டி.துளசிராஜன் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ் - 195

ஆங்கிலம் - 197

கணிதம் - 199

இயற்பியல் - 200

வேதியியல் - 200

உயிரியல் - 200

------
மொத்தம் - 1191
------

மாணவி எஸ்.நித்யா எடுத்த மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ் - 195

ஆங்கிலம் - 197

கணிதம் - 200

இயற்பியல் - 200

வேதியியல் - 199

கம்ப்யூட்டர் சயின்ஸ் - 200

-------
மொத்தம் - 1191
-------

'தினத்தந்தி' பரிசு

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை வளர்க்கும் வகையில், மாணவர் பரிசுத்திட்டத்தை 'தினத்தந்தி' செயல்படுத்தி வருகிறது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதலாவது தேர்ச்சி பெறும் மாணவர் அல்லது மாணவிக்கு தினத்தந்தி ரூ.10 ஆயிரம் பரிசும், தங்கப்பதக்கமும் வழங்குகிறது.

இதேபோல், பிளஸ்-2 தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுத்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர் அல்லது மாணவிக்கு ரூ.10 ஆயிரம் பரிசும், தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தமிழ் நாட்டிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்த மாணவி எஸ்.சுஷாந்திக்கு ரூ.10 ஆயிரமும், தங்கப்பதக்கமும் வழங்கப்படும்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

பிளஸ்-2 தேர்வில் மடிப்பாக்கம் மாணவி நித்யா, மாநில அளவில் 3-வது இடம் பெற்று சாதனை

Posted: 09 May 2014 12:55 PM PDT

ஆலந்தூர்,

பிளஸ்-2 தேர்வில் மடிப்பாக்கம் மாணவி நித்யா, மாநில அளவில் 3-வது இடத்தை பெற்று சாதனை படைத்து உள்ளார். அவர் கலெக்டராகி பொதுமக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக கூறினார்.

மாநிலத்தில் 3-வது இடம்

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மடிப்பாக்கம்-புழுதிவாக்கம் பிரின்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி எஸ்.நித்யா 1,191 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 3-வது இடத்தை பெற்றார். இவர், காஞ்சீபுரம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று உள்ளார்.

மாணவி நித்யா, பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ்-195, ஆங்கிலம்-197, கணிதம்-200, இயற்பியல்-200, வேதியியல்-199, கம்ப்யூட்டர் சயின்ஸ்-200.

மாணவி நித்யாவுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் கே.வாசுதேவன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் இனிப்பு வழங்கி பாராட்டினர். இவருடைய தந்தை சண்முகசுந்தரம். தாயார் விஜயகல்யாணி. சண்முகசுந்தரம், சென்னை மத்திய கலால் மற்றும் சுங்கத்தீர்வை பிரிவில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

கலெக்டராக விருப்பம்

மாநிலத்தில 3-வது இடத்தை பிடித்த மாணவி நித்யா, நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் 10-ம் வகுப்பு தேர்வில் 488 மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் வரவேண்டும் என எனது பெற்றோரும், பள்ளி நிர்வாகமும், எனது தோழிகளும் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். ஆசிரியர், பெற்றோர் உதவியுடன் படித்தேன்.

இங்குள்ள ஆசிரியர்கள், நண்பர்கள் போல் பழகி எங்களுக்கு படிக்க சொல்லி கொடுத்தார்கள். நான் தினமும் நடத்தப்படும் பாடங்களை அன்றே படித்துவிடுவேன். பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வுகளும் எனக்கு உறுதுணையாக இருந்தது. தினமும் அதிகாலையில் எழுந்து தான் படிப்பேன். டி.வி. பார்ப்பேன். பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்வேன். படிக்கும் போது எந்தவித சிந்தனையும் இன்றி கவனத்துடன் படித்தேன்.

எனக்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் மிகவும் பிடிக்கும். நான் தற்போது என்ஜினீயராக படிக்க இருக்கிறேன். வருங்காலத்தில் கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது ஆசை.

இவ்வாறு அவர் கூறினார்.

மகிழ்ச்சி கடலில் தள்ளிவிட்டாள்

மாணவியின் பெற்றோர் கூறுகையில், "எங்கள் மகள் அதிக மதிப்பெண் பெறுவாள் என நினைத்து இருந்தோம். ஆனால் மாநில அளவில் 3-வது இடத்திற்கு வந்து எங்களை மகிழ்ச்சி கடலில் தள்ளிவிட்டாள். இந்த சாதனை படைக்க உதவிய பள்ளி நிர்வாகிகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றனர்.

பள்ளி தாளாளர் டாக்டர் கே.வாசுதேவன் கூறும்போது, "எங்கள் பள்ளியில் மாணவ- மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பல்வேறு கட்ட பயிற்சிகளை தருகிறோம். நித்யா, அதிக மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3-வது இடம் வந்து எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்ததற்கு பாராட்டுகிறோம்" என்றார்.

மேலும் இந்த பள்ளியை சேர்ந்த மாணவி கார்த்திகா, 4 பாடங்களில் 200-க்கும் 200 எடுத்திருந்தார். அவரையும் சக மாணவ-மாணவிகள் பாராட்டினார்கள்.

சென்னையில், இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் கிடையாது? இரண்டு லீக் ஆட்டங்கள் ராஞ்சிக்கு மாற்றம்

Posted: 09 May 2014 12:33 PM PDT

புதுடெல்லி,

சென்னையில் இந்த ஆண்டு ஐ.பி.எல். ஆட்டங்கள் எதுவும் நடத்தப்படாது என்று தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக இரண்டு லீக் ஆட்டங்கள் ராஞ்சிக்கு மாற்றப்பட்டு உள்ளன.

4 ஆட்டங்கள்

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், 4 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (மே 18), சென்னை சூப்பர் கிங்ஸ் – ஐதராபாத் சன் ரைசர்ஸ் (மே 22) மற்றும் இறுதிஆட்டத்திற்கான முதலாவது தகுதி சுற்று (மே 27), வெளியேற்றுதல் சுற்று (மே 28) ஆகிய ஆட்டங்கள் சென்னையில் நடத்த வேண்டிய போட்டி அட்டவணையாகும்.

கேலரி சர்ச்சை

இந்த நிலையில் இந்த போட்டிகளை சென்னையில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2011–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று கேலரிகள் புதிதாக இடித்து கட்டப்பட்டன. ஆனால் இது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி, இவற்றுக்கு தடையில்லா சான்றிதழை வழங்க சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் மறுத்து விட்டது. சில ஆண்டுகளாக இந்த விவகாரம் நீடித்து வருகிறது.

இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, இந்திய கிரிக்கெட் வாரியமும், சென்னை மாநகராட்சியும் கோர்ட்டிற்கு வெளியே பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக் கொள்ளுபடி அறிவுரை வழங்கியது. ஆனால் இரண்டு தரப்பினர் இடையே எந்தவித உடன்பாடு எட்டப்பட்டதாக தெரியவில்லை.

ராஞ்சிக்கு மாற்றம்

இதையடுத்து முதற்கட்டமாக, மே 18 மற்றும் மே 22–ந்தேதி இங்கு நடக்க இருந்த இரண்டு லீக் ஆட்டங்களும் டோனியின் சொந்த ஊரான ராஞ்சிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

எஞ்சிய இரு ஆட்டமும் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் மும்பையில் இன்று கூடி ஆலோசனை நடத்துகிறது. அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் எழுந்ததால் கொல்கத்தா–மும்பை அணிகள் இடையே மே 14–ந்தேதி கொல்கத்தா ஈடன்கார்டனில் நடக்க இருந்த ஆட்டம் கட்டாக்கிற்கு மாற்றப்பட்டது. அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் சென்னையில் நடக்க இருந்த தகுதி சுற்று அல்லது வெளியேற்றுதல் சுற்றில் இரண்டில் ஒரு ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது.

சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், மூன்று முறை 2–வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஆனால் முதல் முறையாக சென்னையில் ஒரு ஆட்டம் கூட இல்லாமல் போவது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

category:

பெங்களூரை வீழ்த்தி பஞ்சாப் அணி 7-வது வெற்றி

Posted: 09 May 2014 12:33 PM PDT

பெங்களூர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரை தோற்கடித்து பஞ்சாப் அணி 7-வது வெற்றியை சுவைத்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி வழக்கம் போல் பந்து வீச முடிவு செய்தது. இங்கு (பெங்களூரில்) 15 முறை டாஸ் ஜெயித்திருக்கும் பெங்களூர் அணி எல்லா தடவையும் முதலில் பந்து வீச்சையே தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேக்ஸ்வெல் 25 ரன்

இதன்படி ஷேவாக்கும், மன்தீப்சிங்கும் பஞ்சாப்பின் இன்னிங்சை தொடங்கினர். பவுண்டரியுடன் இன்னிங்சை அமர்க்களமாக ஆரம்பித்த ஷேவாக் நல்ல தொடக்கம் தந்த கையோடு 30 ரன்களில் (24 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார். மன்தீப்சிங் 21 ரன்களில் (15 பந்து, 2 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், யுவராஜ்சிங்கின் சுழல் ஓவரில் 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் புரட்டியெடுத்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். இந்த ஆட்டத்தின் முதல் சிக்சரை மேக்ஸ்வெல் அடித்த போது, அது நடப்பு தொடரின் 300-வது சிக்சராக பதிவானது. ஆனால் இந்த முறை மேக்ஸ்வெல்லின் வாணவேடிக்கைக்கு ஆயுசு குறைவு. அவர் 25 ரன்களில் (11 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார்.

மில்லரின் மிரட்டல்

மேக்ஸ்வெல்லை ஓரளவு கட்டுப்படுத்திய பெங்களூர் பவுலர்களால், டேவிட் மில்லரை அடக்க முடியவில்லை. அவரது பேட் கதகளி ஆடியது. இதனால் ரன்ரேட் விகிதம் 10 ரன்களுக்கு குறையாமல் சென்று கொண்டிருந்தது. முதல் 10 ஓவர்களில் மட்டும் பஞ்சாப் அணி 107 ரன்கள் திரட்டியது. விக்கெட் சரிவை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தில் ஈடுபட்ட தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 24 வயதான டேவிட் மில்லர், மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி ஓடவிட்டார். ஹர்ஷால் பட்டேலை துவம்சம் செய்த அவர் அந்த ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை தூக்கியடித்து அரைசதத்தை கடந்தார். இதற்கிடையே கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

198 ரன் குவிப்பு

அணியின் ஸ்கோர் 170 ரன்களாக (16.3 ஓவர்) உயர்ந்த போது, டேவிட் மில்லர் 66 ரன்களில் (29 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அவர் களத்தில் நின்ற வரை பஞ்சாப் அணி 210 ரன்களை தாண்டும் போல் தோன்றியது. ஆனால் கடைசி 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் விழுந்ததுடன், பஞ்சாப்பின் ரன்வேகமும் ஒரேயடியாக தளர்ந்து போனதால், 200 ரன்களை எட்ட முடியாமல் போய் விட்டது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது.

பெங்களூர் தரப்பில் மிட்செல் ஸ்டார்க், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷால் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பெங்களூர் தோல்வி

199 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களம் புகுந்த பெங்களூர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து சீர்குலைந்தது. கெய்ல் (4 ரன்), கேப்டன் விராட் கோலி (0), யுவராஜ்சிங் (3 ரன்) ஒற்றை இலக்கில் நடையை கட்டிய போதே தோல்வியும் உறுதியானது. டிவில்லியர்ஸ் (53 ரன், 26 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) மட்டும் கொஞ்சம் ஆறுதல் அளித்தார். 20 ஓவர்களில் பெங்களூர் அணி 9 விக்கெட்டுக்கு 166 ரன்களே எடுத்தது. இதனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி கண்டது. பஞ்சாப் தரப்பில் சந்தீப் ஷர்மா 3 விக்கெட்டுகளும், பாலாஜி, அறிமுக வீரர் ஷிவம் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

8-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப்புக்கு இது 7-வது வெற்றியாகும். இதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை பஞ்சாப் அணி நெருங்கியுள்ளது. 8-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூருக்கு இது 5-வது தோல்வியாகும்.

category:

தேசிய ஜூனியர் தடகளம் தொடங்கியது 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 3 வீரர்கள் ஆசிய போட்டிக்கு தகுதி

Posted: 09 May 2014 12:32 PM PDT

சென்னை,

தேசிய ஜூனியர் தடகள போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 3 வீரர்கள் ஆசிய ஜூனியர் போட்டிக்கான தகுதி இலக்கை எட்டினார்கள்.

தேசிய ஜூனியர் தடகளம்

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 12–வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள சாம்பியன்ஷிப்போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது.

விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் வி.கே.ஜெயக்கொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து வீரர்–வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அரியானா வீரர் அசத்தல்

விழாவில் இந்திய தடகள சம்மேளன தலைவர் அடிலே சுமாரிவாலா, செயலாளர் சி.கே.வல்சன், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் டி.கே.ராஜேந்திரன், பொருளாளர் சி.லதா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் கே.முருகன், இந்திய தடகள சம்மேளன நிர்வாக அதிகாரி மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் அரியானா வீரர் ஷர்வான் கார் (14:54.51 வினாடி), பஞ்சாப் வீரர் ஜதிந்தர்குமார் (14:55.24 வினாடி), அசாம் வீரர் அபிஷேக்பால் (14:56.23 வினாடி) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். இதன் மூலம் மூவரும் ஆசிய ஜூனியர் போட்டிக்கான தகுதி இலக்கை (14:58.23 வினாடி) எட்டினார்கள். இருப்பினும் 2 பேருக்கு தான் ஆசிய போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

மராட்டிய வீராங்கனை சாதனை

20 வயதுக்கு உட்பட்ட 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் மராட்டிய வீராங்கனை சஞ்சிவினி ஜதா 17 நிமிடம் 11.27 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டி நாளை வரை நடக்கிறது.

category:

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையின் ‘கோட்டை’யை தகர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? இன்று மீண்டும் மோதல்

Posted: 09 May 2014 12:32 PM PDT

மும்பை,

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ்– சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்

8 அணிகள் இடையிலான 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே–ஆப்' சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு (சனிக்கிழமை) நடைபெறும் 33–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை?

இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6–ல் வெற்றியும், 2–ல் தோல்வியும் சந்தித்துள்ளன. இரண்டு தோல்வியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக நிகழ்ந்தது.

பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 231 ரன்களை வாரி இறைத்தது. பந்து வீச்சு தான் சென்னை அணிக்கு தொடர்ந்து கவலைக்குரிய அம்சமாக உள்ளது. இதில் கூடுதல் கவனம் செலுத்தி, இறுதி கட்டத்தில் கட்டுக்கோப்புடன் பந்து வீச வேண்டியது அவசியமாகும்.

பேட்டிங்கை பொறுத்த மட்டில் வெய்ன் சுமித், பிரன்டன் மெக்கல்லம் ஆகியோர் அளிக்கும் தொடக்கத்தையே சென்னை அணி பெரிதும் நம்பி இருக்கிறது. இவர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து விட்டால், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு சுமை குறைந்து மெகா ஸ்கோரை எளிதில் எட்டி விடலாம். ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கக்கூடியது என்பதால், அதிரடி ஜாலத்தை எதிர்பார்க்கலாம்.

சொந்த ஊரில் ஜாம்பவான்

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த முதல் 5 ஆட்டங்களிலும் வரிசையாக தோல்வியை தழுவிய மும்பை அணி சொந்த மண்ணில் நடந்த இரு ஆட்டங்களிலும் (பஞ்சாப் மற்றும் பெங்களூருக்கு எதிராக) வெற்றி பெற்றிருந்தது. இதே உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் வியூகங்களை அமைத்துள்ளது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த ஆண்டில் நடந்த 8 ஆட்டங்களிலும் மும்பை அணி வெற்றியை ருசித்தது. அந்த 'வீறுநடை'யை இப்போதும் தொடர்வது மட்டுமின்றி இது தங்களின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா, கீரன் பொல்லார்ட், அம்பத்தி ராயுடு, கோரி ஆண்டர்சன் உள்ளிட்டோர் பேட்டிங்குக்கு வலு சேர்க்கக்கூடியவர்கள். பந்து வீச்சில் 'யார்க்கர் மன்னன்' மலிங்கா அச்சுறுத்த காத்திருக்கிறார். ரசிகர்களின் அமோக ஆதரவு, உள்ளூர் சூழல் ஆகியவை மும்பைக்கு சாதகமான விஷயமாகும்.

கோட்டையை தகர்க்குமா?

ஆனாலும் ஏற்கனவே துபாயில் சந்தித்த தொடக்க லீக்கில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை தோற்கடித்து இருந்தது. இதனால் சென்னை அணி வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். சொந்த மண்ணில் வலுவான சக்தியாக திகழும் மும்பையின் கோட்டையை சென்னை சூப்பர் கிங்ஸ் உடைக்குமா? என்பதை பொறுத்திருந்து ரசிப்போம்.

சென்னை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நேற்று அளித்த பேட்டியில், 'நாங்கள் சரிவில் இருந்து மீண்டெழுந்து இந்த ஆட்டத்தில் வெற்றி காண்பது மிகவும் முக்கியம். புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிப்பதே எங்களது இலக்கு. அதற்கு அடுத்து வரும் 3 ஆட்டங்கள் மிகவும் முக்கியமானது என்பதை அறிவோம்' என்றார்.

இவ்விரு அணிகளும் இதுவரை 16 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 7–ல் சென்னையும், 9–ல் மும்பையும் வெற்றி கண்டுள்ளன.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

சென்னை: பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித், சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), பாப் டு பிளிஸ்சிஸ், ரவீந்திர ஜடேஜா, மிதுன் மன்ஹாஸ், அஸ்வின், மொகித் ஷர்மா, ஈஸ்வர் பாண்டே, ஹில்பனாஸ்.

மும்பை: பென் டங், சிதம்பரம் கவுதம், அம்பத்தி ராயுடு, ரோகித் ஷர்மா (கேப்டன்), கோரி ஆண்டர்சன், பொல்லார்ட், ஆதித்ய தாரே, ஹர்பஜன்சிங், ஜஸ்பிரித் பம்ரா அல்லது பிரக்யான் ஓஜா, மலிங்கா, பவான் சுயல்.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

--–

மற்றொரு ஆட்டத்தில் டெல்லி–ஐதராபாத் சந்திப்பு

முன்னதாக மாலை 4 மணிக்கு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் 32–வது லீக் ஆட்டத்தில் கெவின் பீட்டர்சன் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் எதிர்கொள்கின்றன.

8 ஆட்டங்களில் விளையாடி வெறும் 2 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள டெல்லி அணி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே 'பிளே–ஆப்' சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். எனவே இது அவர்களுக்கு வாழ்வா–சாவா? மோதல் என்பதில் சந்தேகமில்லை. சொந்த ஊரில் 3 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியிருக்கும் டெல்லி அணிக்கு, இந்த ஆட்டமும் எளிதாக இருக்காது.

7 ஆட்டத்தில் 3–ல் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணியில் பந்து வீச்சு பிரமிக்க வைக்கிறது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் இதுவரை 14 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அவரது ஓவர்களில், 95 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. எந்த ஒரு பவுலரும் இந்த அளவுக்கு கட்டுப்படுத்தியதில்லை. இதே போல் ஸ்டெயினும் (8 விக்கெட்) மிரட்டுகிறார். இவர்களின் துணையால் தான் ராஜஸ்தானுக்கு எதிராக 134 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும் வெற்றி பெற முடிந்தது. இந்த ஆட்டத்திலும் இவர்களின் தாக்கம் அதிகமாக இருந்தால், அது ஐதராபாத்திற்கு அனுகூலமாக முடியும். ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

category:

தோல்வியில் இருந்து மீளுமா டெல்லி ? ஐதராபாத்தை இன்று சந்திக்கிறது

Posted: 09 May 2014 12:32 PM PDT

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று மாலை 4 மணிக்கு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் 32–வது லீக் ஆட்டத்தில் கெவின் பீட்டர்சன் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் எதிர்கொள்கின்றன.

8 ஆட்டங்களில் விளையாடி வெறும் 2 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள டெல்லி அணி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே 'பிளே–ஆப்' சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். எனவே இது அவர்களுக்கு வாழ்வா–சாவா? மோதல் என்பதில் சந்தேகமில்லை. சொந்த ஊரில் 3 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியிருக்கும் டெல்லி அணிக்கு, இந்த ஆட்டமும் எளிதாக இருக்காது.

 7 ஆட்டத்தில் 3–ல் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணியில் பந்து வீச்சு பிரமிக்க வைக்கிறது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் இதுவரை 14 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அவரது ஓவர்களில், 95 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. எந்த ஒரு பவுலரும் இந்த அளவுக்கு கட்டுப்படுத்தியதில்லை. இதே போல் ஸ்டெயினும் (8 விக்கெட்) மிரட்டுகிறார். இவர்களின் துணையால் தான் ராஜஸ்தானுக்கு எதிராக 134 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும் வெற்றி பெற முடிந்தது. இந்த ஆட்டத்திலும் இவர்களின் தாக்கம் கணிசமாக இருந்தால், அது ஐதராபாத்திற்கு அனுகூலமாக முடியும். ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

category:

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கேப்டனாக ராம்டின் நியமனம்

Posted: 09 May 2014 12:32 PM PDT

கிங்ஸ்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த டேரன் சேமியிடம் இருந்து அந்த பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் 3 டெஸ்டில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்டின் நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் இனி அந்த அணியில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டும் தனித்தனி கேப்டன்கள் இருப்பார்கள். ஒரு நாள் போட்டி அணிக்கு வெய்ன் பிராவோவும், 20 ஓவர் அணியின் கேப்டனாக டேரன் சேமியும் தொடருவார்கள். 'டுவிட்டர்' வாயிலாக ராம்டினுக்கு, டேரன் சேமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

category:

துளிகள்

Posted: 09 May 2014 12:32 PM PDT

'தலையில் குட்டுவேன்'  பொல்லார்ட்டை எச்சரித்த கெய்ல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில், மும்பை இந்தியன்ஸ் –பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இடையே கடந்த 6–ந்தேதி நடந்த ஆட்டத்தின் போது கீரன் பொல்லார்ட் (மும்பை), மிட்செல் ஸ்டார்க் (பெங்களூர்) இடையே பயங்கர தகராறு ஏற்பட்டது. ஸ்டார்க் அவரை திட்ட பதிலுக்கு பொல்லார்ட் அவரை நோக்கி ஆவேசமாக பேட்டை வீசினார். பிறகு நடுவர்கள் சமாதானப்படுத்த முயன்றாலும், பெங்களூர் வீரர் கிறிஸ் கெய்ல்(இவரும், பொல்லர்ட்டும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்) தான் பொல்லார்ட்டை அமைதிப்படுத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார். களத்தில் கேவலமாக நடந்து கொண்ட பொல்லார்ட், ஸ்டார்க் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிறிஸ் கெய்லிடம், பொல்லார்ட்டின் ஆத்திரத்தை எப்படி தணித்தீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் பொல்லார்ட்டின் அருகில் சென்று, உனது தலையில் குட்டுவேன்' என்று சத்தம் போட்டேன். இப்படி சொன்னதும் அவர் அமைதியானார். ஆட்டம் பரபரப்பாகவும், தீவிரமாகவும் இருந்த சமயத்தில் சட்டென்று இந்த மாதிரியான சம்பவம் நிகழ்ந்து விட்டது' என்றார்.

மும்பை–கொல்கத்தா ஆட்டம் இடம் மாற்றம்

மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டம் மே 14–ந்தேதி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில், ஓட்டு எண்ணிக்கை பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கும் என்பதால், போட்டிக்கு பாதுகாப்பு அளிப்பது இயலாது என்று கொல்கத்தா போலீசார், பெங்கால் கிரிக்கெட் சங்கத்திடம் கூறினர். இந்த நிலையில் பாதுபாப்பு பிரச்சினை காரணமாக இந்த ஆட்டம் ஈடன்கார்டன் மைதானத்தில் இருந்து ஒடிசா மாநிலம் கட்டாக் பராபதி ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. மற்றபடி மே 20, மே 22, மே 24 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் நடக்கும் ஆட்டங்களுக்கு முழு பாதுகாப்புஅளிக்கப்படும் என்று கொல்கத்தா போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

முதலிடத்தை பிடித்து சீனத்தைபே வீராங்கனை சாதனை

சர்வதேச டென்னிசில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சீனாவின் ஷூய் பெங், சீனத்தைபேயின் ஹிசை சு–வெய் ஜோடி கலக்கி வருகிறது. கடந்த 12 மாதங்களில் இவர்கள் 7 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளனர். இந்த நிலையில் மாட்ரிட் ஓபன் டென்னிசில், அரைஇறுதிக்கு முன்னேறியதன் மூலம் இவர்கள் 'நம்பர் ஒன் ஜோடி' அந்தஸ்தை அடைந்துள்ளனர். நாளை மறுதினம் வெளியிடப்படும் புதிய தரவரிசைப் பட்டியலில் ஹிசை–பெங் ஜோடிக்கு முதலிடம் வழங்கப்படுகிறது. சீனத்தைபே வீராங்கனை ஒருவர் முதலிடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

category:

முதல் 3 இடங்களை பிடித்து செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

Posted: 09 May 2014 12:17 PM PDT

ராமநாதபுரம்,

பிளஸ்-2 பொதுத்தேர் வில் ராமநாதபுரம் செய் யது அம்மாள் மேல் நிலைப்பள்ளி மாணவ- மாணவி மாவட்ட அள வில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத் துள்ளனர்.

பிளஸ்-2 தேர்வு

ராமநாதபுரம் மாவட்டத் தில் கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற பிளஸ்-2 தேர்வு முடி வுகள் வெளியிடப்பட்டுள் ளன. ராமநாதபுரம் மாவட்ட அளவில் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவ -மாணவிகள் முதல் 3 இடங் களை பிடித்து சாதனை படைத் துள்ளனர். இதில் மாணவி மில்காகாட்பெல் 1200க்கு 1183 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முத லிடம் பிடித்துள்ளார். அவர் பாடம் வாரியாகபெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:-

தமிழ் - 195

ஆங்கிலம் - 191

இயற்பியல் - 200

வேதியியல் - 197

உயிரியல் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1183

மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த மாணவி மில்கா காட்பெல்லின் தந்தை லாசரஸ் டிக்கிகஸ் மானாமதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாண வியின் தாய் எலிசபெத் ராணி ராமநாதபுரம் புனித ஆந்திரேயா பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வரு கிறார். சாதனை குறித்து மாணவி கூறியதாவது:-எனது சாதனைக்கு இறைவன், பெற் றோர், பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர்,அனைத்து பாட ஆசிரியர்களே கார ணம். அடிக்கடி நடத்திய தேர்வுகளும் உதவியது. மாவட்ட அளவில் முதலி டம் பிடிப்பேன் என்று எதிர் பார்க்கவில்லை. பாட புத்த கங்களை மட்டுமே படித்தேன்.படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் டி.வி.பார்ப்பேன்.நான் டாக்டருக்கு படித்து இதயநோய் நிபுணராக ஆசை இவ்வாறு அவர் கூறினார்.

2-வது இடம்

மாணவி ஹர்சினி 1200க்கு 1179 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தை பிடித்த £ர். அவர் பாடம் வாரியாகபெற்ற மதிப்பெண் விவரம் வரு மாறு:-

தமிழ் - 190

ஆங்கிலம் - 195

இயற்பியல் - 199

வேதியியல் - 198

உயிரியல் - 199

கணிதம் - 198

மொத்தம் - 1179

2-வது இடம்பிடித்த ஹர்சினியின் தந்தைநாக ரெத்தினம் பொதுப்பணித் துறையில் உதவி பொறியா ளராக உள்ளார். தாய் கஸ்தூரி ராமநாதபுரம்சக்கரக் கோட்டை மேல்நிலைப்பள் ளியில் சமூக அறிவியல் ஆசிரி யராகபணி யாற்றிவருகிறார்.மாணவி ஹர்சினி கூறிய தாவது:- பள்ளிநிர் வாகம், ஆசிரியர்கள் கொடுத்த உற்சாகம்,ஊக்கம் ,ஆதரவு தான் அதிக மதிப் பெண் பெற முடிந்தது. ஒரு பாடத்தை மட்டும் அடிக்கடி படிக்காமல் அனைத்து பாடங் களையும் தொடர்ந்து படிக்கவேண்டும். படிக்க வேண்டும் என்பதற்காக டி.வி. பார்ப்பதைதவிர்த்து விட்டேன். பள்ளியில் ஆசிரி யர்கள் சொல்லிக் கொடுத் ததை கவனமாக படித்தேன். 3 பாடங்களில் 200 மதிப் பெண் பெறவேண்டும்என்று எதிர்பார்த்தேன். ஆனால் மாவட்ட அளவில் இடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கி றது. டாக்டராக ஏழைக ளுக்கு இதயநோய் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

இவ்வாறுஅவர் கூறினார்.

3ம் இடம்

மாணவன் சரவணகுமார் 1178 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார். அவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு-

தமிழ் - 192

ஆங்கிலம் - 190

இயற்பியல் - 196

வேதியியல் - 200

உயிரியல் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1178

3-வது இடம் பிடித்த மாணவர் சரவணக்குமாரின் தந்தை பிரபாகர் உச்சிப் புளி யில் காய்கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். தாய்சண் முகவள்ளி. மாணவர் கூறிய தாவது:- எனக்குபள்ளி யில் பாடங்களைசொல்லிக் கொடுத்ததும் தேர்வுகள்நடத் தியதும்தான் அதிக மதிப் பெண்கள் பெற உதவியாக இருந்தது. ஆசிரியர்கள் உற்சா கப்படுத்தி படிக்க வைத்தனர். இரவில் 11 மணி வரை படிப் பேன்.படித்ததை எழுதி பார்ப் பேன். தேர்வு சமயத்தில் மட்டும் படிக்காமல் பள்ளி தொடங்கிய நாள் முதல் படிக்க வேண்டும். அப்போது தான் தவறை திருத்தி மதிப் பெண்களை அதிகரிக்க முடியும். எனது தந்தையின் கஷ்டத்தை நான் நிச்சயம் போக்குவேன் எனது சாதனை குறித்து அறிந்து அவர் மகிழ்ச்சி அடைந்தார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கவிரும் புகிறேன்.குறைந்த கட்டணத் தில் டாக்டருக்கு படிக்க இடம் கிடைத்தால் படிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட அளவில் 3-வது இடம் பிடித்த மற்றொருமாண வர் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளி மாணவன் சோபன்மனோஜ். பாடம் வாரி யாகபெற்ற மதிப் பெண் விவரம் வருமாறு:-

தமிழ் - 188

ஆங்கிலம் - 194

இயற்பியல் - 200

வேதியியல் - 200

உயிரியல் - 199

கணிதம் - 197

மொத்தம் - 1178

இவரின் தந்தை பால முருகன் ராமேசுவரம்கூட் டுறவு வீட்டுவசதி சங்கத் தில் அலுவலக உதவியாள ராக பணியாற்றி வருகி றார். இவரின் தாய் ராஜேஸ்வரி ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்கணித ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். மாணவர் சோபன் மனோஜ் கூறியதாவது:- பள்ளி நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் எனதுபெற் றோர்களும் என்னை தேர் வுக்காக முழுமையாக தயார் படுத்தினர். நான் தேர் வுக்காக அதிக பதட்டம் இல்லாமல் எப்போதும்போல் படித்து தேர்வு எழுதினேன். இது எனது சாதனைக்கு உறுதுணையாக இருந்தது. நான் படித்து டாக்டராக விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறி னார்.

பாராட்டு

மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்தமாணவ- மாணவிகளை மாவட் கலெக்டர் நந்தகுமார், மவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகாமசுந்தரி, பள்ளிதாளா ளர் டாக்டர் பாபுஅப் துல்லா, தலைமை ஆசிரியர் ஹாஜாமுகைதீன், உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர் உசேன், ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர். இதே போல மாவட்ட அளவில் 3-வது இடம் பெற்ற ராமநாதபுரம் செய்துஅம்மாள் மெட் ரிக்கு லேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர் சோபன் மனோஜை பள்ளி தாளாளர் ராஜாத்தி, முதல்வர் நாகலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

image: 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™