Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காந்தாரியின் பதிவிரதா தன்மை

Posted: 08 May 2014 02:53 PM PDT

"மரணம் என்பது நிச்சயமான ஒன்று, அது வந்து விட்டுப் போகட்டும். எனக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது.. அது நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் என்பதும் தெரியும். உயிருக்கு பயந்தவன் நானில்லை.. ஆனால் அவமானப்பட்டு உயிரிழப்பதை நான் விரும்பவில்லை.. 99 தம்பிகள், பாசமிக்க ஒரு மைத்துனன், உயிருக்கு உயிரான நண்பர்கள், மேலான உறவுகள், ரத கஜ தூரக பதாதிகள், நாடு நகரம் என கௌரவமாக வாழ்ந்தவன்.. என் மரணம் இழிந்த நிலையை அடைந்து விடக்கூடாது. காலம் என்னை அவமானத்தின் சின்னமாய் பேசிவிடக் விடக்கூடாது. அதற்காகத்தான் ...

மணிபல்லவம் - நா. பார்த்தசாரதி

Posted: 08 May 2014 12:01 PM PDT

முதல் பருவம் தோரணவாயில் பூரணமான இந்தக் கதை மாளிகையின் தோரணவாயிலில் ஆவல் பொங்க நிற்கும் வாசக அன்பர்களுக்குச் சில வார்த்தைகள்; சற்றே கண்களை மெல்ல மூடிக் கொள்ளுங்கள்! மணிமேகலையும், சிலப்பதிகாரமும் நிகழ்ந்த காலத்துப் பூம்புகார் நகரத்தையும், மதுரையையும், வஞ்சி மாநகரையும் ஒரு விநாடி உருவெளியில் உருவாக்கிக் காணுங்கள். பழைய பெருமிதத்தோடு சார்ந்த எண்ணங்களை நினைத்துக் கொண்டே காணுங்கள். அடடா! எவ்வளவு பெரிய நகரங்கள். எத்துணை அழகு! மாட மாளிகைகள் ஒரு புறம், கூட கோபுரங்கள் ஒருபுறம். ...

பணம் தரும் விருந்து!!

Posted: 08 May 2014 10:27 AM PDT

வலிந்து நளிந்து மனமுவந்து வாழ்வில் உயர்ந்து நிற்கிறேன் சிறந்து ஆனால் தனிந்து குணிந்து இரந்து வாழ்வில் இகழ்ந்து நிற்கிறேன் தலை குணிந்து. இருப்பினும் ஊரிலே சிறந்து மிளிர்ந்து தலை நிமிர்ந்து நிற்கிறேன் உயர்ந்து அதனால் பல பேர் வந்து தாழ் பணிந்து சேவகம் புரிந்து பெருமை சேர்ந்து நிற்கிறேன் தலை நிமிர்ந்து சமுகத்தில் இன்று பல பேர் சேர்ந்து எனைத் தெரிந்து தலைவனென உணர்ந்து நிற்கிறேன் சிறந்து ஆகவே எவ்வழியாயினும் பணம் சேர்த்து பிணம் வாய் திறந்து பேசும் ...

வரதட்சணை ஒழிப்புச் சட்டம்

Posted: 08 May 2014 09:44 AM PDT

இந்தியப் பெண்கள் சிலரின் வாழ்வில் திருமணம் என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது வரதட்சணை என்ற அரக்கன்தான். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சமுதாயத்தில் புரையோடியிருந்த வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கும் வகையில், பெண்களுக்குச் சொத்து உரிமை தர அன்றைய அரசு முடிவெடுத்தது. 'இந்து வாரிசுரிமை சட்டம் 1956' இயற்றப்பட்ட போது பெண்களுக்கான சொத்துரிமை ஓரளவுக்குக் கொடுக்கப்பட்டது. இருப்பினும், இன்று வரை வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். ...

மிஷன் வெற்றி பெற வேண்டி

Posted: 08 May 2014 09:42 AM PDT

மிஷன் வெற்றி பெற வேண்டி

நைஜீரியாவில் கடத்தப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்களை மீட்க பல நாடுகள் முயற்சி எடுத்து வரும் நிலையில் ..தற்போது உள்ள தகவலின் அடிப்படையில் இங்கிலாந்தின் SAS மற்றும் பிரெஞ்சு நாட்டின் GIGN சிறப்பு படைகள் அமரிக்காவின் உதவியுடன் அவர்களை மீட்க புறப்பட்டுள்ளனர் ..

அவர்களின் ஆபரேஷன் வெற்றி பெற நாம் கடவுளை பிரார்த்திப்போமாக ..

மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Posted: 08 May 2014 09:42 AM PDT

மேஷம் மேஷம்:உழைப்பால் உயர விரும்புபவர்களே! சிறிது முன்கோபம் இருக்கிறது, அதை மட்டும் விட்டொழித்தால் மிகவும் நல்ல பெயர் எடுப்பீர்கள். தற்போதைய கிரகங்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. பொருளாதார வளமும், பெண்களால் அனுகூலமும் கிடைக்கும். இருந்தாலும் அவ்வப்போது பொருள் இழப்பும், சிறுசிறு உடல் உபாதைகளும் ஏற்படலாம். பிள்ளைகளால் ஏற்பட்டிருந்த பிரச்னை நீங்கும்; தீயோர் சகவாசம் முற்றிலும் ஒழியும். குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் வந்தாலும் மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவும். முயற்சிகளால் அனுகூலம் உண்டு. ...

கனவிலே இவன் கணவனாவான்!!

Posted: 08 May 2014 09:20 AM PDT

பெண்ணுக்காய் தன்னிலை மாற்றி! பொங்கிடும் உணர்வுகள் ஏற்றி! பாதையில் தன் அழகினைக் காட்டி! பரிதாபம் இவன் நிலை இன்று! அவளுக்காய் செல்வந்தனாகி! அப்பாவின் பணத்தினை காவி! அருமை அணிகலன் வாங்கி! அலைகிறான் பித்தனாகி! சொல்லிலே நவீனம் சேர்த்து! சொல்லாங்கிலம் பலதை திணித்து! சொர்க்கமாம் அவளை நினைத்து! சிணுங்கிடும் அவன் மொழியிது! அவள் பெயர் அவனுக்கழகு! அவள் மொழி அவனுக்குலகு! அவளே என்றும் அவன் நினைவு! ஆசைக்கு அவளின் தெரிவு! நினைவிலே என்றும் அவளுக்கு! நிரந்நதர இட ஒதுக்கீடு! நிலையான ...

சுஜாதாவின் 25 சிறு கதைகள்

Posted: 08 May 2014 09:07 AM PDT

சுஜாதாவின் 25 சிறு கதைகள் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . 25 சிறு கதைகளும் ஒரே தொகுப்பான டவுன்லோட் லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/eekb1j07bwrhk99/sujatha_short_stories_%28part-1%29%28OrathanaduKarthik.blogspot.com%29.rar

பிளஸ் 2: தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

Posted: 08 May 2014 08:55 AM PDT

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. மாணவர்களின் மதிப்பெண்கள் அனைத்தும் பலமுறை சரிபார்க்கப்பட்டு தேர்வு முடிவுகளை வெளியிட தயார் நிலையில் உள்ளதாக அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ரகசிய பார்கோடு எண்களின் மூலம் மாணவர்களுக்குரிய மதிப்பெண் அந்தந்த மாணவருக்குரிய பதிவெண்ணுக்கு வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண்ணை சரிபார்க்கும் பணிகள் அனைத்தும் புதன்கிழமை மாலையில் நிறைவடைந்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. தமிழகத்தில் மார்ச் 3 முதல் மார்ச் ...

விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை

Posted: 08 May 2014 08:19 AM PDT

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை, அணை கட்டி தேக்கி, தமிழகத்திற்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்த உருவான திட்டம்தான் முல்லைப்பெரியாறு அணை. இத்திட்டத்திற்காக, அன்றைய ஆங்கிலேய அரசின், சென்னை மாகாண செயலருக்கும், அன்றய திருவாங்கூர் சமஸ்தான மகாராஜாவிற்கும் இடையே 1886 அக்.,29 ல் 999 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் எழுதப்பட்டது.ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அணை கட்டுமானப் பணிகள் துவங்கியது. ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக் வசம், அணை கட்டுமானப் ...

படித்ததில் பிடித்தது :) -

Posted: 08 May 2014 06:34 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

முல்லைப் பெரியாறு அணை

Posted: 08 May 2014 06:18 AM PDT

முல்லைப் பெரியாறு அணை சென்னை : முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் வழங்கிய, தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள, முதல்வர் ஜெயலலிதா, ' வரலாற்று சிறப்பு மிகுந்த, இந்த வெற்றியை, தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்' என, தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, என் தலைமையிலான அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கு, அரசியல் சாசனப் பிரிவிற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த, அரசியல் சாசனப் பிரிவு, ஐந்து பேர் கொண்ட குழுவை ஏற்படுத்த உத்தரவிட்டது. அப்போது, ...

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Posted: 08 May 2014 05:51 AM PDT

புதுடில்லி : தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான, 'ஜல்லிக்கட்டு' போட்டிகளை நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. 'மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கும் சில அடிப்படை உரிமைகள் உள்ளன. அவை மீறப்படுவதை ஏற்க முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பாரம்பரிய விளையாட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில், காளைகளை அடக்கும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரதான இடம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையின் போது, தமிழகத்தின் பல பகுதிகளில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது ...

ரமணியின் கவிதைகள்

Posted: 08 May 2014 05:21 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்

Posted: 08 May 2014 04:49 AM PDT

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகம் வந்து மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசியத் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜாகீர் உசேன் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் தன்னை சென்னைக்கு உளவு பார்க்க அனுப்பியதாக ஜாகீர் உசேன் தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து ஜாகீர் உசேனிடம் ...

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை

Posted: 08 May 2014 03:47 AM PDT

சிவகங்கை : சிவகங்கையில், நாளுக்கு நாள் மழை அதிகளவில் பெய்து வருவதால், கண்மாய்களுக்கு மழை நீர் சேகரமாகி வருகிறது. விவசாயிகளும் கோடை உழவுகளை தைரியமாக மேற்கொண்டு வருகின்றனர். அக்னி நட்சத்திரம் துவங்கும் நாள் வரை, மழையின்றி சிவகங்கை மாவட்டமே, வறட்சியில் சிக்கி தவித்தன. இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என, மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், வருணபகவான் மக்கள் மீது கருணை மழை பொழிந்தார். இதையடுத்து, கடந்த 4ம் தேதியில் இருந்தே, தொடர்ந்து 4 நாட்களாக சிவகங்கை ...

வளமான இந்தியாவை உருவாக்குவோம்!

Posted: 08 May 2014 02:54 AM PDT

தனக்கு ஒப்புமை அனுகூலமோ, போட்டியிடும் திறனோ இல்லாத நடவடிக்கைகளில் தனது சக்தியை விரயம் செய்ததால், அரசாங்கம் தான் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களை அலட்சியம் செய்துவிட்டது. சட்ட வடிவமைப்பு மற்றும் அமலாக்கம், ஒப்பந்தங்கள் ஏற்படவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் தேவையான சூழல் ஆகியவற்றை உருவாக்குவதில் கோட்டை விட்டது. பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய எடுத்த முயற்சிகளில் போதிய திறனோடு செய்ய முடியாமல் அரசாங்கம் அடைந்த தோல்விகள் ஏராளம். அதற்கு இணையான அல்லது அதைவிட பெரிய தோல்வியும் ஒன்று ...

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Posted: 08 May 2014 01:29 AM PDT

ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள். இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும். இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். ...

EEGARAI FLASH NEWS

Posted: 08 May 2014 01:22 AM PDT

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி



உலக செஞ்சிலுவை நாள்: மே 8- 1948

Posted: 08 May 2014 01:20 AM PDT

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8-ம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948-ம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது. முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது. செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922-ல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது. இதுவே பின்னர் ...

5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் கண்டுபிடிப்பு

Posted: 08 May 2014 01:10 AM PDT

விழுப்புரத்தை அடுத்த சிறுவாலை என்ற கிராமத்தில் 5000 ஆண்டு களுக்கு முந்தைய தொல் பழங்கால ஓவியங்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. உலகெங்கிலும் வரலாற்றுக்கு முந்திய கால மனிதர்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கற்கால மனிதர்களின் கலை உணர்வையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் வாழ்க்கை முறையையும் சித்தரிக்கும் இம்மாதிரியான தொல்பழங்கால ஓவியங்கள் தமிழகம் முழுதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, செத்தவரை போன்ற இடங்களில் கிடைத்த ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (11)

Posted: 08 May 2014 01:02 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

கோககோலா, பெப்சி குளிர்பானங்களில் வேதிப்பொருட்களை நீக்க அந்நிறுவனங்கள் முடிவு!

Posted: 07 May 2014 11:49 PM PDT

நியூயார்க், மே 8 – அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குளிர்பான நிறுவனங்களான கோககோலா மற்றும் பெப்சி பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன. கோககோலா நிறுவனத்தின் பவரேட், ஃபாண்டா, பெப்சியின் கடோரேட், மவுண்டன் டியு போன்ற பல பானங்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கின்றன. இத்தகைய பானங்களில் குறிப்பிடப்படும் பழத்தின் சுவை சமமாகப் பரவுவதற்காக இவற்றில் பிராமினேட்டட் தாவர எண்ணெய் என்ற மூலப்பொருள் உபயோகிக்கப்பட்டு வருகின்றது. இந்த எண்ணெய் தீ பரவாமல் இருப்பதற்காக மர சாமான்களின் ...

நம் நாட்டு தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உலக அரசியல் - Heelar Baskar

Posted: 07 May 2014 10:54 PM PDT

ஈகரை நபர்களுக்கு காலை வணக்கம். நான் இந்த ஆடியோ கேட்டேன் வியப்பாக இருந்தது. அனைவரும் கேட்டு கருத்து கூறவும். உலக அரசியல் (பீஸ் ஓ மாஸ்டா்) பகுதி-1 தமிழ் வீடியோ உலக அரசியல் (பீஸ் ஓ மாஸ்டா்) பகுதி-2 தமிழ் வீடியோ உலக அரசியல் (பீஸ் ஓ மாஸ்டா்) பகுதி-3 தமிழ் வீடியோ உலக அரசியல் (பீஸ் ஓ மாஸ்டா்) பகுதி-4 தமிழ் வீடியோ உலக அரசியல் (பீஸ் ஓ மாஸ்டா்) பகுதி-5 தமிழ் வீடியோ உலக அரசியல் (பீஸ் ஓ மாஸ்டா்) பகுதி-6 தமிழ் வீடியோ உலக அரசியல் (பீஸ் ஓ மாஸ்டா்) பகுதி-7 தமிழ் வீடியோ உலக அரசியல் (பீஸ் ...

இதய நோயாளிகளின் உணவு முறை

Posted: 07 May 2014 10:52 PM PDT

இதயத் துடிப்பு உயிருக்கு முக்கியம். இதயம் நன்றாக வேலை செய்ய வேண்டுமானால், இதயத் தசைகள் நன்றாக வேலை செய்வது அவசியம். வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இதய நோய் பிரச்னை பல பேருக்கு உள்ளது. வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இன்றைய இளைஞர்களும் இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகத் தொடங்கியுள்ளனர். பெரியவர்களுக்கு ரத்தக் குழாயின் குறுக்கு விட்ட அளவு குறையத் தொடங்கி, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இந்த இடத்தில்தான் இதய நோயாளிகளுக்கு கொழுப்புச் சத்து குறைவான உணவு முக்கியத்துவம் பெறுகிறது. ...

பொட்டல்காடுகளும் பூங்காக்களும்

Posted: 07 May 2014 10:51 PM PDT

இரண்டு பக்கமும் புளிய மரங்கள் நிறைந்திருந்த பாதையைத்தான் அந்தக் கிழவன் கைகாட்டியிருந்தான். வெயிலின் வெம்மை புளியமர நிழலோடு சேர்ந்து தகித்தது. பூபாலனுக்கு வழியைப் பார்த்ததுமே அழுகை வந்தது. ஏதோ சுடுகாட்டுக்குப் போகிற வழி மாதிரி பொட்டலாய்க் கிடக்கிறதே.. இங்கு போயா ஆரம்பப் பள்ளிக்கூடம் இருக்கிறது? ஊரைத்தாண்டி ஒதுக்குப்புறமாய் இருக்கிற பள்ளி இதுவாகத்தான் இருக்கும். கவர்மெண்ட் வந்து பார்த்துவிட்டா பள்ளி ஆரம்பித்தது… இருந்திருந்து ஆறு வருஷம் கழித்து இந்தக் காட்டில்தானா வேலை கிடைக்க வேண்டும். ஊருக்கு ...

மொய் விருந்து வைபவங்கள்: கடனாளியாகும் குடும்பங்கள்

Posted: 07 May 2014 10:45 PM PDT

தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இது மொய் விருந்து சீசன். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த மொய்விருந்து வைபவங்கள் இப்போது, ஒன்றுக்கு இரண்டாய் வசூலிக்கும் 'வசூல் மேளா'வாக மாறிவிட்டது. குறிப்பிட்ட சாதியில் மட்டுமே இருந்து வந்த இந்த மொய் விருந்து கலாச்சாரம் இப்போது பல சாதிகளுக்கும் பரவிவிட்டது. மற்றவர்களுக்கு செய்த மொய் பணத்தை வட்டியும் முதலுமாய் வசூலிப்பதற்காகவே இப்போது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொய் விருந்து வைக்கிறார்கள். ஃபிளக்ஸ் போர்டு, பத்திரிகை ஃபிளக்ஸ் ...

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Posted: 07 May 2014 10:07 PM PDT

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்? தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ...

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Posted: 07 May 2014 10:00 PM PDT

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிநேரத்திலேயே வகுப்பில், ஆசிரியை ஒருவரை, மாணவரே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்மேனியன் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரி. இவர் வகுப்பறையில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவன் முகமது இர்பான், உமாமகேஸ்வரியை கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உமாமகேஸ்வரி பலியானார். வகுப்பறையில், மாணவர் ஒருவரால் ஆசிரியை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமலர்

பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்

Posted: 07 May 2014 09:57 PM PDT

வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோக-மூர்த்தி நம் நாட்டை 'தாய் நாடு' என்றும், நதிகளை 'கங்கா, யமுனா, காவிரி' என்று பெண்ணாகப் பாவிக்கும் அதே சமுதாயம்தான் ரத்தமும் சதையுமான பெண்களை போகப் பொருட்களாகப் பார்க்கிற அவலத்தையும் செய்கிறது. இன்று இந்த தேசத்தின் மூலை முடுக்கிலெல்லாம் பேசப்படும் செய்தியாகிவிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, நாம் அனைவரும் சேர்ந்து களை எடுக்க வேண்டிய ஒரு விஷச்செடியாக வளர்ந்து நிற்கிறது. பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இவ்வாறு ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால், ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 07 May 2014 09:16 PM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

நரேந்திர மோடி ஆட்சியைப் பாராட்டி 285 விருது வழங்கிய மத்திய காங்கிரஸ் அரசு

Posted: 07 May 2014 09:08 PM PDT

காந்திநகர் : பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத், நாட்டின் முன்மாதிரி மாநிலமாக திகழவில்லை எனவும், அங்கு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் அதிகம் எனவும், அம்மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது போன்ற மாய தோற்றத்தை மோடி ஏற்படுத்தி உள்ளார் எனவும் பல வகைகளில் மோடியை பற்றியும் மோடியின் அரச குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து, கோடை வெயிலையும் மிஞ்சும் அளவிற்கு அனல் பறக்கும் பிரசாரம் செய்தனர். ஆனால் மத்திய அரசு நேற்று வெளியிட்ட புள்ளிவிபர ...

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

Posted: 07 May 2014 09:03 PM PDT

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்! மந்திரிகளின் பதவியையும் பறித்து கோர்ட்டு தீர்ப்பு அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்து அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. அவரது மந்திரிகளின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் தாய்லாந்து நாட்டின் பிரதமராக யிங் லக் ஷினவத்ரா (வயது 46). கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5–ந்தேதி பொறுப்பேற்றார். ...

கனவு பலன்

Posted: 07 May 2014 08:14 PM PDT

இன்று காலை 6மணி முதல் 7மணிக்குள் நான் ஒரு கெட்ட கனவு கண்டேன்,,சுடுகாட்டில் என்னை உயிருடன் புதைப்பது போல்,அதாவது என் தந்தையிடம் நானே என்னை உயிருடன் புதைக்கும் படி கூருகிறேன்,நான் இந்து ஆனால் என்னை சவப்பெட்டியில் புதைக்கிறார்கள்.முதலில் 4 1/2 அடி சவபெட்டியில் என்னை படுக்கச் சொன்னார்கள்,,பிறகு அது வேண்டாம் என்று 6 அடி சவபெட்டியில் படுக்கச்சொல்லி உயிருடன் புதைக்கிறார்கள்.என்னை புதைக்கும் பொழுது மயக்க மருந்து கொடுக்கச் சொல்லி கேட்கிறேன்,தர மறுத்து விட்டனர்.என்னை புதைத்து விட்டு சென்ற பிறகு நான் ...

ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்: மே 7- 1861

Posted: 07 May 2014 08:11 PM PDT

இரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கன மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பர். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். ...

சுவாமி சின்மாயானந்தா பிறந்த தினம்: மே 8- 1916

Posted: 07 May 2014 08:10 PM PDT

சுவாமி சின்மாயானந்தா (மே 8, 1916 - ஆகஸ்ட் 3, 1993) ஒரு இந்திய ஆன்மீகவாதி. சின்மயா மிஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் உலகெங்கும் ஆன்மீக வேதாந்த கருத்துக்களை பரப்பியவர். சின்மயானந்தா இந்தியாவின் கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் என்ற இடத்தில் பூதம்பள்ளி என்ற பெயரைக் கொண்ட ஓர் இந்துக் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலகிருஷ்ண மேனன் என்பதாகும். லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து வெளியேறியவர் ஊடகவியல் துறையில் நுழைந்து இந்திய அரசியல், பொருளாதார மற்றும் சமூகவியலில் ...

இப்படியும் சில மனிதர்கள்!!

Posted: 07 May 2014 07:56 PM PDT

புத்தி பல கூறிடுவார்! புதுமை பல செய்திடுவார்! புனை கதையும் யாத்திடுவார்! பொதுப் பணி என்றழைத்தால்! புற முதுகு காட்டிடுவார்!! சீர் திருத்தம் பேசிடுவார்! சினமின்றிக் கனிந்திடுவார்! சிரம் தாழ்த்தியும் பணிந்திடுவார்! தொண்டுக்காய் பணமென்றால்! சீ..என்று விரட்டிடுவார்!! இன் சொல் பேசிடுவார்! இனங்கிப் பல உரைத்திடுவார்! இகழ்வதையும் வெறுத்திடுவார்! இல்லார்க்கு உதவி என்றால்! ஏரெடுத்தும் பார்க்கமாட்டார்!! வௌ்ளை உடை உடுத்திடுவார்! விளம்பரங்கள் தேடிடுவார்! வளம் பலவும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™