Daily Thanthi |
- பா.ஜனதா கூட்டணிக்கு 249 தொகுதி, காங். கூட்டணிக்கு 148 தொகுதி, ஜெயலலிதாவுக்கு மூன்றாவது இடம் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
- சவுதி அரேபியாவில் சுவாசநோய் பரவுகிறது: ஒட்டகம் வளர்ப்போருக்கு கட்டுப்பாடு
- சென்னை விமானநிலையத்தில் 2½ கிலோ தங்கம் பறிமுதல்
- பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணும் முறைக்கு எதிராக வழக்கு தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
- பீகாரில் வாக்காளரை தாக்கியதாக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
- உ.பி., மராட்டியம், குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் கருத்துக்கணிப்பு
- வீடு கிடைக்க பரிகார பூஜை செய்வதாக ஏமாற்றி நடிகையை கற்பழித்த மந்திரவாதி கைது; ரூ.26 லட்சம் மோசடி செய்ததும் அம்பலம்
- டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.09 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- தமிழகத்தில் அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெறும் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
- சீமாந்திராவில் பா.ஜனதா கூட்டணியும், தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்.சும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்
| Posted: 12 May 2014 09:09 AM PDT மும்பை, 543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக 502 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் முடிவடைந்ததை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக்கணிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் டிவி சேனல் வெளியிட்டுள்ள, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 249 தொகுதியிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 148 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பிற கட்சிகள் 146 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது. டைம்ஸ் நவ் டிவி சேனல் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தமிழகத்தில் அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெற்று ஜெயலலிதா மூன்றாவது இடத்தை பிடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும். பாரதீய ஜனதா தலைமையில் அமைந்துள்ள கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா 52 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் 10 தொகுதியிலும், பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 12 தொகுதிகளிலும் வெற்றி பெறும். 48 தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் பாரதீய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளிலும் வெற்றி பெறும். குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளில் பாரதீய ஜனதா 4 தொகுதியிலும், காங்கிரஸ் 4 தொகுதியிலும் வெற்றி பெறும். மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பாரதீய ஜனதா 16 தொகுதியிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதியிலும் வெற்றி பெறும். டெல்லியில் ஆம் ஆத்மிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதியில் பாரதீய ஜனதாவும், ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெறும். அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 8 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெறும். இதனை அம்மாநில முதல் மந்திரி தருண் கோகாய் மறுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் 42 பாராளுமன்றத் தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளில் வெற்றி பெறும். இடதுசாரிகள் 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாரதீய ஜனதா 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மாநிலத்தில் மொத்தம் 42 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதீய ஜனதா 7 தொகுதிகளையும், காங்கிரஸ் 6 தொகுதிகளையும், ஜெ.பி.எஸ்.பி. கட்சி ஒரு தொகுதியையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணி ஒரு தொகுதியிலும், ஐக்கிய ஜனதா தளம் 6 தொகுதியிலும் வெற்றி பெறும். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 9 தொகுதியிலும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், பாரதீய ஜனதா கூட்டணி 18 தொகுதியிலும் வெற்றி பெறும். கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி 16 தொகுதியிலும், மற்ற கட்சிகள் 4 தொகுதியிலும் வெற்றி பெறும். ஒடிசாவில் 15 தொகுதிகளில் பிஜு ஜனதா தளமும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாரதீய ஜனதா ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும். ஜம்மு காஷ்மீரில் 6 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளிலும், பாரதீய ஜனதா ஒரு தொகுதியில் வெற்றி பெறும். சத்தீஷ்காரில் பாரதீய ஜனதா 10 தொகுதியிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும். பஞ்சாப்பில் காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதியிலும், பாரதீய ஜனதா கூட்டணி 7 தொகுதியிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. image: News Group Category: |
| சவுதி அரேபியாவில் சுவாசநோய் பரவுகிறது: ஒட்டகம் வளர்ப்போருக்கு கட்டுப்பாடு Posted: 12 May 2014 08:43 AM PDT துபாய், சவுதி அரேபியாவில் 'மெர்ஸ்' என்னும் புதிய சுவாச நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயால் இதுவரை 500–க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தாக்கி நேற்றுமுன்தினம் 4 பேர் உயிரிழந்ததாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளுக்குநாள் நோய் தாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. சவுதி அரேபியாவில் பாலைவனக்கப்பல் என்று கூறப்படும் ஒட்டகம் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. ஒட்டகம் மூலமாக மெர்ஸ் நோய் பரவும் அபாயம் இருப்பதால், ஒட்டகம் வளர்ப்போருக்கு அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, ஒட்டகம் வளர்ப்பவர்கள் கண்டிப்பாக முகமூடி மற்றும் கை உறை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| சென்னை விமானநிலையத்தில் 2½ கிலோ தங்கம் பறிமுதல் Posted: 12 May 2014 08:32 AM PDT ஆலந்தூர், வெளிநாடுகளில் இருந்து 2½ கிலோ தங்கத்தை கடத்தி வந்த கேரள வாலிபர்கள் உள்பட 6 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பால்பவுடரில் தங்கம் கடத்தல் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்திக் கொண்டு வருவதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்துக்கொண்டு இருந்தனர். சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. இதில் சென்னையைச் சேர்ந்த பெருமாள் (வயது 42) என்பவர் வந்தார். சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பெருமாள் சுற்றுலா விசாவில் சென்று விட்டு சென்னைக்கு திரும்பி வந்ததை கண்டனர். அவரது சூட்கேசை சோதனை செய்து பார்த்தபோது அதில் எதுவும் இல்லை. அவரிடம் குழந்தைகளுக்கு வழங்கும் பால்பவுடர் டப்பாக்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது அதில் 500 கிராம் எடையுள்ள 4 தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். சூட்கேசில் கடத்தல் இதேபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலந்தர்உசேன்(37), நெல்லையை சேர்ந்த முகமது இஸ்மாயில்(32) ஆகியோர் மீது சந்தேகம் கொண்டு தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது ஆசனவாய் பகுதியில் மறைத்து வைத்திருந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த சஜன்(31) உள்பட 3 பேர் தங்களின் சூட்கேசில் ரகசிய அறை வைத்து மறைத்து வைத்திருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் ரூ.78 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கேரளா வாலிபர்கள் உள்பட 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். image: category:Tagging:News Group Category: |
| Posted: 12 May 2014 08:29 AM PDT புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் வரும் 16–ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், ஓட்டு எண்ணும் முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வக்கீல் யோகேஷ் குப்தா ஒரு பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில் அவர், ''பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு ஓட்டு எந்திரத்திலும் பதிவான ஓட்டுக்கள் முடிவை தனித்தனியாக அறிவிக்கக்கூடாது. ஒட்டுமொத்த தொகுதியிலும் கிடைத்துள்ள வாக்குகள் விவரத்தையே வெளியிட வேண்டும். அதுதான் தொகுதி சம அளவிலான வளர்ச்சி பெற உதவும். அரசியல் ரீதியில் பழிவாங்கும் வாய்ப்பையும் குறைக்கும். எனவே வார்டு வாரியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்'' என கூறி உள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஷ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் தேர்தல் கமிஷன் வரும் 21–ந்தேதிக்குள் பதில் மனுதாக்கல் செய்யத்தக்க வகையில் நோட்டீசு அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். image: News Group Category: |
| பீகாரில் வாக்காளரை தாக்கியதாக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு Posted: 12 May 2014 08:15 AM PDT கோபால்கஞ்ச், பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு பீகார் மாநிலத்தில் 6 தொகுதிகளில் நடந்தது. இதில் கோபால்கஞ்ச் மாவட்டம் நயாகவுன் துல்சியா கிராமத்தில், ஓட்டுப்போட்டு விட்டு வெளியே வந்த தன்னை, குச்யகோட் தொகுதியின் ஐக்கிய ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ. அம்ரேந்திர குமார் பாண்டே தாக்கியதாக வாக்காளர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். அவர் காங்கிரஸ் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இந்த புகார் தொடர்பாக எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக கோபால்கஞ்ச் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அனில் குமார் தெரிவித்தார். இந்த தாக்குதலை மறுத்துள்ள எம்.எல்.ஏ. அம்ரேந்திர குமார் பாண்டே, தாக்குதலின் போது தொகுதியை தான் சுற்றிப் பார்த்ததாகவும், ஆனால் தாக்குதல் நடந்ததாக கூறப்படும் இடத்தில் தான் இல்லை என்று தெரிவித்தார்.
image: Tagging:News Group Category: |
| உ.பி., மராட்டியம், குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் கருத்துக்கணிப்பு Posted: 12 May 2014 08:06 AM PDT மும்பை, டைம்ஸ் நவ் டிவி சேனல் வெளியிட்டுள்ள, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா 52 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 10 தொகுதியிலும், பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 12 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் பாரதீய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளில் பாரதீய ஜனதா 4 தொகுதியிலும், காங்கிரஸ் 4 தொகுதியிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பாரதீய ஜனதா 16 தொகுதியிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதியிலும் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதியில் பாரதீய ஜனதாவும், ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. image: News Group Category: |
| Posted: 12 May 2014 07:54 AM PDT மும்பை, மகாடாவில் வீடு கிடைக்க பரிகார பூஜை செய்வதாக ஏமாற்றி, டி.வி. நடிகையை ஏமாற்றி கற்பழித்த போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.26 லட்சம் மோசடி செய்ததும் அம்பலமானது. மகாடா குலுக்கல் மும்பை சார்க்கோப் பகுதியை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை ஒருவர் மராட்டிய அரசு கட்டிவரும் மகாடா குடியிருப்பில் வீடு வாங்க ஆசைப்பட்டு, அதற்கான விண்ணப்ப படிவத்தை அனுப்பி முடிவுக்காக காத்து இருந்தார். ஆனால் நடிகைக்கு மகாடா குடியிருப்பில் வீடு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆன்மிக பூஜை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என பலர் கூறியதன் பேரில், கடந்த 2013–ம் ஆண்டு பகவான்தாஸ் என்ற மந்திரவாதியை சந்தித்தார். பூஜை செய்தால் மகாடா குலுக்கலில் உங்களுக்கு கட்டாயம் வீடு கிடைக்கும் என கூறி, மந்திரவாதி பகவான்தாஸ் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு பூஜைகள் செய்தார். ஆனால் அடுத்த குலுக்கலிலும் டி.வி. நடிகைக்கு மகாடா வீடு கிடைக்கவில்லை. டி.வி. நடிகை கற்பழிப்பு இதனையடித்து டி.வி. நடிகை மாகிம் பகுதியை சேர்ந்த இப்ராகிம் அசிம்கான்(வயது35) என்ற மற்றொரு மந்திரவாதியை சந்தித்து அவரது உதவியை நாடினார். இதனையடுத்து மந்திரவாதி இப்ராகிம் அசிம்கான் சக்தி வாய்ந்த பரிகார பூஜை செய்தால் உங்களுக்கு குலுக்கலில் நிச்சயம் வீடு கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய நடிகையிடம் இருந்து மந்திரவாதி இப்ராகிம் அசிம்கான் பூஜை செய்வதாக கூறி, பல்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.26 லட்சத்தை பெற்றுக்கொண்டார். மேலும் பூஜை என்ற பெயரில் இப்ராகிம் அசிம்கான் கடந்த 2 வருடமாக டி.வி. நடிகையை ஏமாற்றி கற்பழித்தார். போலி மந்திரவாதி கைது இதற்கிடையில் 4–வது முறையாக மகாடா அறிவித்த குலுக்கலிலும் டி.வி. நடிகைக்கு வீடு கிடைக்கவில்லை. இதனையடுத்து மந்திரவாதி இப்ராகிம் தலைமறைவு ஆனார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நடிகை கடந்த 9–ந்தேதி சார்க்கோப் போலீஸ் நிலையத்தில் மந்திரவாதி இப்ராகிம் அசிம்கான் மீது புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மந்திரவாதி இப்ராகிம் அசிம்கானை தேடி வந்தனர். இந்தநிலையில் மாகிம் தேவாலயம் அருகே உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று முன்தினம் போலி மந்திரவாதி இப்ராகிம் அசிம்கானை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். image: category:Tagging:News Group Category: |
| டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.09 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது Posted: 12 May 2014 07:37 AM PDT புதுடெல்லி, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.09 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. image: category:Tagging:News Group Category: |
| தமிழகத்தில் அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெறும் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு Posted: 12 May 2014 07:32 AM PDT சென்னை, டைம்ஸ் நவ் டிவி சேனல் வெளியிட்டுள்ள, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தி.மு.க. 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா தலைமையில் அமைந்துள்ள கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.என்.என். ஐ.பி.என். கருத்துக்கணிப்பின் படி, அ.தி.மு.க. 22 முதல் 28 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும், தி.மு.க., 7 முதல் 11 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் பாரதீய ஜனதா கூட்டணி 4 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. image: category:News Group Category: |
| சீமாந்திராவில் பா.ஜனதா கூட்டணியும், தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்.சும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் Posted: 12 May 2014 07:17 AM PDT மும்பை, டைம்ஸ் நவ் ஆங்கில சேனல் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இரண்டாக பிரிக்கப்பட உள்ள ஆந்திரவில் சீமாந்திரா பகுதியில் பாரதீய ஜனதா கூட்டணியே அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் முக்கிய கட்சியான தெலுங்கு தேசம் பாரதீய ஜனதா இடம் பெற்றுள்ளது. மாநிலத்தில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 17 தொகுதிகளும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதியும், பாரதீய ஜனதாவுக்கு 2 தொகுதியும், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு 9 தொகுதிகளும், இடதுசாரிகளுக்கு 2 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. image: News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |