ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நயந்தினி - ஒரு சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்டவள்!
- டெல்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள்: மே 13- 1648
- இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர்: மே 13- 1967
- இதய துடிப்பை கூட எண்னி விடலாம் tamil kathal kavithai
- தவிப்பு என்பது உனக்கு மட்டும் தானா tamil kathal kavithai kavithaigal
- பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- புலவி நுணுக்கம்!
- 'வட கறி' படங்கள் - by கிருஷ்ணாம்மா
- வெட்கமில்லை...
- குரு பெயர்ச்சி பலன்கள் !
- வருக. வருக. வணக்கம்.
- தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
- 'ரூபே' அட்டை !
- தந்தி டிவி அடிக்கும் புதிய தந்தி...
- பச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
- அவசரக் குடுக்கை!
- எது காமம்?
- மூச்சு திணறப் போகிறது...
- சிசு
- கிணறு வெட்டுவோம்!
- விஸ்வரூபம் !
- மாய கண்ணனின் அறிமுகம்
- சொல் புதிது தேடுவோம் வாருங்கள்...
- பக்திக் கதைகள்!
- கபிலரின் வானியலறிவு!
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (17)
- மன அழுத்தம் குணமாக...
- ரமணியின் கவிதைகள்
- இனியவனின் அறிமுகம்
- தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து)
- ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்?
- திருவேதிக்குடி வேதபுரீசுவரர் கோவில்
- கிராமத்துக் கைமணம் – கம்பு
- ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
- முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள்
| நயந்தினி - ஒரு சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்டவள்! Posted: 12 May 2014 03:46 PM PDT அவனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு மட்டுமில்ல எங்க ஊருல எல்லாருக்கும் அவனைப் பிடிக்கும். எனக்கும் அவனைப் பிடிச்சிருந்தது. என் வயசுல உள்ள எல்லாப் பொண்ணுங்களும் பெரிசானவுடனே அவனைத்தான் கட்டிக்குவேன்னு சொல்லுவாங்க. நானும் அப்படித்தான் சொல்லிக்கிட்டுத் திரிஞ்சேன். காதல்னா என்னன்னே எனக்குத் தெரியாது. ஆனா நான் அவனைக் காதலிச்சிருக்கேன். என் வயசுப் பொண்ணுங்க எல்லாரும் அவன்கிட்ட "நான் உன்னைத்தான் கட்டிக்குவேன்னு" சொல்லுவாங்க. அவன் சிரிப்பான். நானும் ஒருநாள் அவன்கிட்ட அப்படித்தான் ... |
| டெல்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள்: மே 13- 1648 Posted: 12 May 2014 03:44 PM PDT முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638-ம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார், மேலும் 1648-ம் ஆண்டு மே மாதம் 12-ந்தேி இந்தக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இந்த செங்கோட்டை உண்மையில், "குயிலா-ஐ-முபாரக்" (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்பட்டது, ஏனெனில் இது அரசக் குடும்பங்களின் வசிப்பிடமாக இருந்தது. செங்கோட்டையின் தளவரை படமானது சலிம்கர் கோட்டையின் தளத்துடன் ஒருங்கிணைத்து அமையும்படி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோட்டையானது, இடைக்கால வரலாற்று நகரமான ஷாஜகானாபாத்தின் முக்கிய மையமாக ... |
| இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர்: மே 13- 1967 Posted: 12 May 2014 03:43 PM PDT சாகிர் உசேன் (8 பெப்ரவரி 1897 - 3 மே 1969). இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967இல் இருந்து 1969 இல் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிருவாகியாகவும் விளங்கினார். ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் 1897 பெப்ரவரி 8 ஆம் நாள் அவர் பிறந்தார். உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார். அலிகார் முஸ்லிம் பலகலைக் கழகத்தில் ... |
| இதய துடிப்பை கூட எண்னி விடலாம் tamil kathal kavithai Posted: 12 May 2014 01:29 PM PDT "இதய துடிப்பை கூட எண்னி விடலாம் ஆனால் நான் உன்னை நினைத்து துடிக்கும் துடிப்பை யாராலையும் எண்னிவிட முடியாது!!! ! "idhaya dhudippai kooda ennni vidalaam aanaal naan unnai ninaiththu dhudikkum dhudippai yaaraalaiyum ennnivida mudiyaadhu!!! ! ! % எழுதியவர் % by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை |
| தவிப்பு என்பது உனக்கு மட்டும் தானா tamil kathal kavithai kavithaigal Posted: 12 May 2014 01:24 PM PDT "தவித்தேன் தவித்தேன் என்றாயே !! தவிப்பு என்பது உனக்கு மட்டும் தானா எனக்குள் இருக்கும் தவிப்பை நான் யாரிடம் சொல்வேன் !! என் இதயத்திடம் கேள் உன்னை நினைத்து எப்படி தவிக்கிறது என்று புரியும்!!! ! "thaviththeen thaviththeen enraayee !! thavippu enpadhu unakku maddum thaanaa enakkul erukkum thavippai naan yaaridam solveen !! en idhayaththidam keel unnai ninaiththu eppadi thavikkiradhu enru puriyum!!! ! ! % எழுதியவர் % by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை |
| பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு Posted: 12 May 2014 01:14 PM PDT புதுடெல்லி: நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு 289 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்களும், தமிழகத்தில் அதிமுகவுக்கு 27 இடங்களும் கிடைக்கும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ( Exit poll ) தெரியவந்துள்ளது. C Voter என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவை பொறுத்தவரை அக்கட்சிக்கு தனியாக 249 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு தனித்து 78 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பா.ஜனதா ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 12 May 2014 01:10 PM PDT ![]() |
| Posted: 12 May 2014 11:42 AM PDT புலவி நுணுக்கம் பற்றி முதன்முதல் புலப்படுத்தியவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர். "உப்பு அமைந்தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்'' (குறள்:1302) கறி காயின் அளவறிந்து உப்பிட்டுச் சமைத்ததற்கு ஒக்கும்; புலவியும் கலவியும் மிகாமலும் குறையாமலும் இருக்கவேண்டும் என்று உரைக்கிறார் பரிதியார் என்ற உரைகாரர். இப்புலவி இன்ப நுகர்ச்சிக்குத் துணை நின்று அதனை மிகுவிப்பதென்பது தமிழ் அக நூல்களில் பேசப்படும் உண்மை. அக வாழ்க்கையின் அன்பு தோய்ந்த உணர்வுகளை அவை அழகாகப் பட்டியலிட்டன. "குறள் என்ற இலக்கணத்தை ... |
| 'வட கறி' படங்கள் - by கிருஷ்ணாம்மா Posted: 12 May 2014 11:38 AM PDT |
| Posted: 12 May 2014 11:35 AM PDT 'யாருக்கும் வெட்கமில்லை' இப்படிச் சொல்லிச் சொல்லியே இவரைவிட அவர்- அவரைவிட இவர் சிறந்த குறைந்த திருடர்(ன்)?! என்று ஒவ்வொரு முறையும் மாற்றிமாற்றிப் போட்டுவிட்டு மாற்றிமாற்றிக் கவிழ்க்கிறோமே... 'யாருக்கும் வெட்கமில்லை' என்பதை மாற்றுவோம் 'நமக்கும் வெட்கமில்லை' என்றே! |
| Posted: 12 May 2014 11:28 AM PDT திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும். கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும். தொழில் கூடங்கள் நல்ல லாபகரமாக நடக்க ஏதுவாகும். மத ஒற்றுமை ஓங்கும். ... |
| Posted: 12 May 2014 11:16 AM PDT நயந்தினி..... கண்ணீரில் நனைந்தவள்..... கற்பனைகள் சுமந்தவள்..... பொல்லாத உலகத்தில் போராடி வாழ்பவள்....... |
| தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Posted: 12 May 2014 11:14 AM PDT மனித உடல் ஆரோக்கியத்துக்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றைச் செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு தினசரி அரை கிலோ காய், கனிகளை உண்பது அவசியம் என்கிறார்கள். சுமார் 65 ஆயிரம் பேரிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை, 25 வயதுள்ள ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவாவது காய்கறி மற்றும் பழங்களை உண்ண வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் ... |
| Posted: 12 May 2014 11:12 AM PDT டெல்லி: உலகளாவிய பண பரிவர்த்தனை அட்டை நிறுவனங்களான விஸா மற்றும் மாஸ்டர் கார்டுகளைப் போன்று இந்தியாவிற்கு சொந்தமாக ரூபே என்ற இந்திய பண பரிவர்த்தனை அட்டையை வியாழக்கிழமையன்று இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இந்த அட்டைகள் ஏ.டி.எம் இயந்திரங்களிலும், எல்லா கடைகளிலும் பயன்படத்தக் கூடிய வகையில் இருக்கும். (ரஷ்யாவின் நிலையை வரைவில் உணர்ந்தது இந்தியா!!) கூட்டணி இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வங்கித் துறையினரின் நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National ... |
| தந்தி டிவி அடிக்கும் புதிய தந்தி... Posted: 12 May 2014 11:07 AM PDT தந்தி டிவி இன்று இரவு வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்: அ.தி.மு.க. : 24 தொகுதிகள் தி.மு.க. : 5 தே.ஜ.கூ. : 4 சமபல வாய்ப்புள்ள தொகுதிகள் : 7 (அ.தி.மு.க. சாதகம் - 5 தொகுதிகள் ; தே.ஜ.கூ. சாதகம் -2 தொகுதிகள்) ஒட்டுமொத்த இறுதி நிலவரம் : அ.தி.மு.க. : 24 (+ 5) தி.மு.க. : 05 தே.ஜ.கூ. : 04 (+ 2) கொஞ்சம் பொறுங்க சாமீகளா...மூடிய தொறப்பாங்க...அப்ப தெரியும்...மோடிக்கு எத்தனை/லேடிக்கு எத்தனை/டாடிக்கு எத்தனைன்னு... |
| பச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! Posted: 12 May 2014 11:03 AM PDT மே 10 – "தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், எந்த நோயும் அண்டாது", என்று வழக்கத்தில் சொல்லுவதுண்டு. அது நிச்சயமாக பச்சை ஆப்பிளுக்குக் கூட உண்மையாகின்றது. இயற்கை தாய் நமக்கு வழங்கிய மிகவும் அற்புதமான பழங்களில் ஒன்று தான் ஆப்பிள். ஆப்பிள்களில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய இருப்பதால், ஒவ்வொருவரும் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆப்பிள்கள் என்று வரும் போது, பல்வேறு வகையான ஆப்பிள்கள் உள்ளன. சிவப்பு வகை ஆப்பிள்கள் மிகவும் பொதுவாக காணப்படுகின்றன ... |
| Posted: 12 May 2014 10:34 AM PDT என்றுமில்லாதவாறு அவசர அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருந்தான் அகிலன்.தனது உடைகளைக் கூட சரிசெய்யாதவனாக தோலிலே பாடசாலை பேக்கை போட்டவனாக ஓட்டமும் நடையுமாக வீட்டைவிட்டு வௌியேறினான்.அவனது அம்மா உணவுண்ண அழைத்ததுகூட அவனது காதில் விழவில்லை. முதல் நாள் அவனது வகுப்பாசிரியர் அவனை அழைத்து நாளை நேரத்துக்கு வந்து நீதான் வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டும்.அப்படி நடக்காவிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்ததே அவனது அவசரத்துக்கு காரணமாகும். அவனது அவசரம் புரியாமல் அன்றைக்கென்று பேருந்தும் தாமதித்துக் ... |
| Posted: 12 May 2014 10:23 AM PDT சங்க இலக்கியங்களில் காமத்தைப் பற்றி பலவாறு சுவைபட புலவர்கள் பலர் பாடியுள்ளனர். கபிலர் ""சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள் உயிர்தவச்சிறிது; காமமோபெரிது'' என்று குறுந்தொகை பாடல் 18-இல் தோழி கூறுவதாகப் பாடியுள்ளார். இதன் உட்பொருள் "சிறிய உயிர்க்கிளையில் பெரிய காமக்கனி தொங்குகிறது. அது எப்போது வேண்டுமானாலும் ஒடிந்துவிடும் - அதாவது தலைவியின் உயிர் போய்விடும்' என்கிறார். இங்கு "காமம்' என்பது புத்தியில் விதையாகி தடுமாற்றத்தைத் தரும் என்கிறார். குதிரை என மடல் ஊர்வர், பூ என எருக்கம் பூவைச் ... |
| Posted: 12 May 2014 10:21 AM PDT சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசடைதல் பற்றிய சர்வதேச அறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகி இருக்கிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 178 நாடுகளில் இந்தியாவும் அடக்கம். அந்த 178 நாடுகளில் காற்று மாசைப் பொருத்தவரை பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் மட்டும்தான் இந்தியாவைவிட மோசமாக இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. உலக நகரங்களிலேயே மிக அதிக அளவில் சுற்றுப்புறக் காற்று மாசடைந்திருக்கும் நகரம் என்று இதுவரை குறிப்பிடப்படும் சீனத் தலைநகரம் பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி விட்டு ... |
| Posted: 12 May 2014 10:17 AM PDT தாயின் வயிற்றுச் சிசு தரணிக்கு வரும் வரைக்கும் தன்னிலை அறியாத தரமறியாக் குழந்தை! கருப்பையே தொட்டிலாக்கி காவலரண் பல வாக்கி காரிருள் படர்ந்திருக்க கனிந்திருக்கும் அக்குழந்தை! சிறு உலகம் தாய் வயிறு சிறந்திருக்கும் அழகுயிறு சீதமிகும் உலகைக் காண சிணுங்கியேயிருக்கும் அக்குழந்தை! காலினாலே எட்டியுதைத்து கோதையவள் மகிழ வைத்து கரும்பின் சுவை இனிமையாக்கி காட்டிடுமே அக்குழந்தை! எண்ணம் பல உருவாக்கி எதிர்பார்க்கை பலதாக்கி என்றும் பல கனவாக்கி ஏற்றிவிடும் அக்குழந்தை! புது ... |
| Posted: 12 May 2014 10:11 AM PDT இப்போதெல்லாம் மூன்று கிலோமீட்டர் பயணிப்பதற்குள் நான்கு இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதைப் பார்க்க முடிகிறது. பல இடங்களில் ஆயிரம் அடி வரை ஆழ்குழாய் கிணறு தோண்டியும் தண்ணீர் கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததுதான். ஆழ்குழாய் கிணறு என்ற பெயரில் பூமித்தாயின் உடல் முழுவதும் துளை போட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால்தான் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சேமிப்பதைவிட சேமித்ததை பாதுகாப்பது மிக முக்கியம். நகரங்களில்தான் ஆழ்குழாய் கிணறுகள் அதிகரிக்கின்றன என்பதில்லை. ... |
| Posted: 12 May 2014 10:02 AM PDT காலை மணி 7.30. பிரேமா பூஜைக்கு வேண்டிய பூக்களைப் பறிக்க வாசல் பக்கம் வந்தாள். கண்கள் தெருக்கோடியை அடிக்கடி நோக்கின. நடுநடுவே வீட்டின் உள்பக்கம் ஒரு கடைக்கண் வீச்சு. அவள் கணவர் பச்சை மிளகாய் பத்மநாபன் ஹால் சோபாவின் அமர்ந்திருக்கிறார். தான் உண்டு, தன் பேப்பர் உண்டு என்றில்லாமல் எதற்கெடுத்தாலும் பச்சை மிளகாய் காரம் ஏறப் பேசுவார். பாவக்காயின் கசப்பு, பாம்புக்கடி, பட்டாஸ் கட்டு என்று எல்லா ரஸமும், காரமும் இணைய பேசுவார். பெரிய கம்பெனி அதிகாரி. செக்கிங் அதிகாரியாக இருந்ததால் வேலை பொருத்தமாக இருந்திருக்கும். ... |
| Posted: 12 May 2014 10:01 AM PDT பெயர்: மாய கண்ணன் சொந்த ஊர்:மதராசபட்டினம் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:இணைய உலாவல் மூலம் பொழுதுபோக்கு:வலைபூ வாசிப்பு தொழில்:படித்து கொண்டிருக்கிறேன் மேலும் என்னைப் பற்றி: நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றிருப்பவன்,தமிழ் விரும்பி,மேலும் சொல்வதற்கில்லை. |
| சொல் புதிது தேடுவோம் வாருங்கள்... Posted: 12 May 2014 09:41 AM PDT நமக்கு எப்போதும் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது. எல்லோரிடமும் சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால் யாரிடமாவது சொல்லாமல் இருக்க முடிவதில்லை. தாய் மொழியில் சொல்லுவதில் தனிச் சுகம் உண்டு. ""காணி நிலம் வேண்டும்'' என்று கேட்ட பாரதியார், ""தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்'' என்றும் சொல்லி இருக்கிறார். சொல் வேண்டும்... வேறொரு சொல்லால் வீழ்த்தமுடியாத சொல் வேண்டும். சொல் சண்டை போடும், வெற்றி பெறும். "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து'' என்ற வள்ளுவருக்குக் ... |
| Posted: 12 May 2014 09:34 AM PDT 1) கங்கையில் நீராடினால் பாவம் போய்விடுமா? கைலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, மக்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களில் எல்லொரது பாவமும் போய்விடுமா? ….. என்பதுதான் அந்த கேள்வி. அதற்க சிவபெருமானோ அதற்கான பதிலை ஒரு சிறு நாடகமாக நடத்தி காட்ட எண்ணி பார்வதி என்ன செய்யவேண்டும் என்று கூறினார். அதன்படி சிவன் வயதான ரிஷி போலவும், பார்வதி ரிஷி ... |
| Posted: 12 May 2014 09:26 AM PDT 'கற்றறிந்தோர் ஏத்தும் கலி' என்று சிறப்பிக்கப்பெற்ற கலித்தொகையில் குறிஞ்சிக் கலியில் கார்த்திகை நட்சத்திரத்தின் வடிவம் மிக அழகாகக் குறிக்கப்பெற்றுள்ளது. தலைவி நுண்ணிய நூலால் கட்டப்பெற்ற பூக்களைக் கொண்ட மாலையைத் தன் கூந்தலில் அணிந்திருந்தாள். அவ்வாறு அவள் அணிந்திருந்த அம் மலர்மாலை கார்த்திகை நட்சத்திரத்தைப் போல விளங்கியதாம். இக்கருத்தைக் குறிஞ்சிக் கபிலர், "விரிநுண்ணூல் சுற்றிய ஈரித ழலரி அரவுக்கண் அணியுறழ் ஆரல்மீன் தகையொப்ப'' (கு.கலி 28,அடி 3,4) என்றவாறு குறித்துள்ளார். மேற்பாடலடியின் ... |
| Posted: 12 May 2014 09:15 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 12 May 2014 07:07 AM PDT மன அழுத்தம் இப்போது ஒரு நோயாகக் கருதப்படுகிறது. ஆண்களை விட பெண்களே அதிக மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். மன நெருக்கடி ஏன் ஏற்படுகிறது, வராமல் எப்படி தடுப்பது, வந்தால் என்ன வைத்தியம் செய்வது? ஓய்வில்லாத நெருக்கடியால்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆண்களுக்கு பெரும்பாலும் வேலைச்சுமையால் இது ஏற்படுகிறது. தொழில் தோல்வியாலும் மனம் பாதிக்கும். மனைவியாலும் சிலருக்கு மனக் கவலை ஏற்படும். இதுவே மனநோயாக ஆகிவிடும். கணவன் - மனைவி உறவில் ஏற்படும் சிக்கலால் பெண்கள் மன நோயாளி ஆகின்றனர். இதை வெளியில் சொல்ல ... |
| Posted: 12 May 2014 05:24 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 12 May 2014 05:20 AM PDT பெயர்: கிருஷ்ண சிவம் (சுருக்கமாக) சிவம் சொந்த ஊர்: தஞ்சை இப்போது வசிக்குமிடம் சென்னை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: தமிழ் இழைகளை தேடிக்கொண்டிருந்த போது வலையில் கிடைத்த பொக்கிஷம் பொழுதுபோக்கு: சினிமா, பாடல்கள், புத்தகம் முக்கியமாக வரலாறு மற்றும் அரசியல் தொழில்: வியாபாரி மேலும் என்னைப் பற்றி: நான் இளைஞனல்ல, முதியவனுமல்ல, வாழ்க்கை பாதையில் பாதி பயணித்து, கடமை முடிக்க மேலும் சில வருடங்களுக்காக காத்திருப்பவன். தமிழ் பிரியன், சிவாஜிகணேசனின் பரம ரசிகன். MSV யின் இசை சுசிலா TMS குரலுக்கு ... |
| தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து) Posted: 12 May 2014 04:55 AM PDT ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''. மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' ... |
| ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Posted: 12 May 2014 04:37 AM PDT ஒரு பொருளை நீங்கள் எவ்வளவு தூரம் வரை பார்க்க முடியும் என்பது உங்கள் கண் இருக்கும் உயரத்தைப் பொறுத்ததுதான். எவ்வளவு தூரம் உங்களால் பார்க்க முடியுமோ அதைத்தான் தொடுவானம் என்கிறோம். கடலில் ஒரு படகில் நின்றுகொண்டே செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது வானிலை சாதாரணமாக இருந்தால் உங்களால் ஐந்து கி.மீ. தூரம் வரை பார்க்க முடியும். அதே நேரம் அந்தப் படகில் நீங்கள் உட்கார்ந்துவிட்டால் மூன்று கிலோமீட்டர் தூரம்தான் பார்க்க முடியும். ஒரு கப்பல் உங்களிடம் இருந்து விலகி தொடுவானத்தை நோக்கிச் செல்கிறது ... |
| திருவேதிக்குடி வேதபுரீசுவரர் கோவில் Posted: 12 May 2014 04:23 AM PDT ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம். கி.பி. 900 ஆண்டில், தஞ்சையை ஆண்ட ஆதித்த சோழன், போரில் தான் பெற்ற வெற்றிகளுக்கு காணிக்கையாக காவிரியின் இருபுறத்திலும் இருந்த ஆலயங்களைப் புதுப்பித்தான். அப்படி புதுப்பிக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் திருவேதிக்குடி வேதபுரீசுவரர் ஆலயம். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் 10 கி.மீ. அங்கிருந்து 3 கிலோ மீட்டரில் திருவேதிக்குடி கிராமம். சிற்றுந்து அல்லது தானி மூலம் அருள்மிகு வேதபுரீசுவரர் ஆலயத்தை அடையலாம். பிரம்மனுக்கு "வேதி' என்ற ஒரு பெயரும் உண்டு. அந்த வேதியன் ... |
| Posted: 12 May 2014 03:21 AM PDT கம்பு என்றாலே அதனைக்கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிடவேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. கஞ்சியாக மட்டுமல்ல; சாதமாக அவலாக பொரியாக...எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம். > கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். > கம்பில் உள்ள லோகிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கனவே உள்ள கூடுதல் நார்ச்சத்தினாலும் காலை/மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டைதீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும், கம்பஞ்சோறும் பிரச்சினையைத்தராது. > அரிசியைப்போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி ... |
| ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு Posted: 12 May 2014 02:19 AM PDT குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால், மார்கழிப் பனி வெதுவெதுப்பாய் குளம் என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் "ஐயப்ப பக்தர்கள்" ... |
| முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள் Posted: 12 May 2014 12:54 AM PDT நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கிய முதலாம் உலகப் போர் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்தியது என்றாலும், அது சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகுத்தது. போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், உலகளவில் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன. பெண்களுக்கான மாதவிடாய் காலத்து நாப்கின்கள், பேப்பர் கைக்குட்டைகள், தேயிலை துணிப்பொட்டங்கள், ஸிப், துருப்பிடிக்காத எஃகுக் கருவிகள், புறவூதா விளக்கு சிகிச்சை போன்றவற்றை முதலாம் உலகப் போரின் விளைவாய் உருவான முக்கிய ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
