Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பவார் கட்சிக்கு ரூ.34 கோடி கொடுத்தது யார்? விளக்கம் கேட்கிறது வருமானவரி துறை

Posted:

புதுடில்லி: 'மத்திய விவசாய அமைச்சர், சரத் பவார் கட்சியின் வங்கிக் கணக்கில், 34 கோடி ரூபாய் செலுத்தியது யார்?' என, வருமான வரித் துறை கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, அந்த கட்சிக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.முக்கியமான அரசியல் கட்சிகள் அனைத்தும், தங்களுக்கு தேவையான நிதிகளை, நன்கொடை பெறுவது, தொழில் அதிபர்களிடம் இருந்து நிதி பெறுவது போன்ற வழிகளில் திரட்டுகின்றன. இதற்காக, வருமானவரித் துறையிடம், சம்பந்தப்பட்ட கட்சிகள், முறையாக கணக்கு காட்ட வேண்டும். மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான, தேசியவாத காங்கிரஸ் கட்சியும், ...

சென்னையில் டீசல் விலை ரூ.1.32 உயர்வு

Posted:

புதுடில்லி: டீசல் விலை, லிட்டருக்கு, 1.09 ரூபாய் நேற்று உயர்த்தப்பட்டது. தமிழகத்தில், உள்ளூர் வரிகள் சேர்த்து, இந்த விலை உயர்வு, 1.32 ரூபாயாக இருக்கும். நேற்று நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும், வருவாய் இழப்பை ஈடுகட்ட, ஒவ்வொரு மாதமும் குறைவான அளவில், டீசல் விலையை உயர்த்துவது என, 2013 ஜனவரியில் முடிவு செய்யப்பட்டது. அப்படி, கொஞ்சம் கொஞ்சமாக டீசல் விலை உயர்த்தப்பட்டும், ஏப்ரல் மாத நிலவரப்படி, டீசல் விற்பனையில், லிட்டருக்கு, 6.80 ரூபாய் அளவுக்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வந்தன. ...

தனியார் பஸ்கள் தட்டி எடுக்குது 'பேட்டா!': அரசு பஸ்களுக்கு மக்கள் டாட்டா

Posted:

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், அரசு நிர்ணயித்ததை விட அரசு பஸ்களில் அதிக கட்டணமும், தனியார் பஸ்களில் குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படுகிறது; இதனால், பெரும்பாலான மக்கள், அரசு பஸ்களைப் புறக்கணித்து வருகின்றனர்.தமிழகத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, ஐந்தாண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை; இதன் காரணமாக, அரசு போக்குவரத்துக்கழகம் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வந்தது; இதைச் சமாளிப்பதற்காக, அரசு பஸ்களுக்கு 'எல்.எஸ்.எஸ்.,' 'எக்ஸ்பிரஸ்', சொகுசு பேருந்து என பல விதமான பெயர்களைச் சூட்டி, கூடுதல் கட்டணத்தை வசூலித்து வந்தது.அப்போது ...

மழை நீர் சேகரிப்பு புத்துயிர் பெறுமா? ஒவ்வொரு துளியிலும் ஓராயிரம் பலன்கள்

Posted:

மழை நீர் சேகரிப்பு... இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் தராமல், விட்டதன் பலனை, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் நன்றாக அனுபவித்தார்கள். விவசாய சாகுபடிக்கு உயிர் அளித்து வந்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கைவிட்ட போது, நிலத்தடி நீர் கைகொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், மழை நீரை சேகரிக்காமல், நிலத்தடி நீரை தொடர்ந்து உறிஞ்சியதால், நீர் மட்டம் அகல பாதாளத்திற்கு சென்று, விவசாயிகளுக்கு அதிர்ச்சியளித்தது. ஆயிரம் அடிக்கு மேல் போர்வெல் அமைத்தும், நாளொன்று நூறு லிட்டர் தண்ணீர் கூட கிடைக்காததால், பல ஆயிரம் ...

தேர்தல் முடிவுக்கு பின் தே.மு.தி.க., பிளவுபடுமா?

Posted:

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன், அ.தி.மு.க.,- - தி.மு.க.,விடம், தே.மு.தி.க., வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பேரம் நடத்தி வருவதாக பரவியிருக்கும் செய்தி, அக்கட்சி தலைமையை, கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தே.மு.தி.க., தலைமையால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது முதலே, சில தொகுதிகளில் பிரச்னை எழுந்தது. நாமக்கல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் மாநில மாணவரணி செயலர் மகேஸ்வரன், போட்டியில் இருந்து விலகி, பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.கடலூர் தொகுதிக்கு பேராசிரியர் ராமானுஜம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் செலவுக்கு நிதி ஆதாரம் ...

நெருங்கியது தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: கட்சியினர் மத்தியில் பதற்றம் அதிகரிப்பு

Posted:

லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாள், நெருங்கியுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், நிர்வாகிகள் மத்தியில், பதற்றம் அதிகரித்துள்ளது.தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. அக்கட்சிக்கு சிறிய கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தந்தன.வாக்குறுதிகளை அள்ளி வீசிஅ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, 40 தொகுதிகளிலும், முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரம் செய்தார். கூட்டணி தலைவர்கள், நடிகர், நடிகைகள், கட்சி பேச்சாளர்களும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ...

கருணாநிதி பிறந்த நாள் பரிசு: ஸ்டாலினுக்கு பதவி உயர்வு?

Posted:

லோக்சபா தேர்தல், முடிவில், தி.மு.க., இரட்டை இலக்கத்தில், வெற்றி பெற்றால், அடுத்த மாதம், கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் பரிசாக, பொருளாளர் ஸ்டாலினுக்கு, கட்சியின், 'செயல்' தலைவர் அல்லது 'துணை' தலைவர் பதவியை வழங்கலாம் என்றும், ஒற்றை இலக்கத்தில், வெற்றி பெற்றால், பொதுக் குழு கூடுவது, செப்டம்பர் மாதம் வரை தள்ளிப் போகலாம் எனவும், அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களை, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தேர்வு செய்தார். தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தில், ஸ்டாலின் பேச்சு, ...

லோக்சபா தேர்தலில் 66 சதவீத ஓட்டு பதிவு முந்தைய சாதனைகள் முறியடிப்பு

Posted:

புதுடில்லி : ஒன்பது கட்டங்களாக நடந்த, லோக்சபா தேர்தலின் மாரத்தான் ஓட்டுப் பதிவு, நேற்றுடன் முடிவடைந்தது. இதற்கு முன், எந்த லோக்சபா தேர்தலிலும் இல்லாத அளவாக, தற்போதைய தேர்தலில், 66 சதவீத ஓட்டுகள் பதிவாயின.'நாட்டின், 16வது லோக்சபாவுக்கான எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஒன்பது கட்டங்களாக நடக்கும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்தது.இதன்படி, முதல் கட்டமாக, ஏப்ரல், 7ல், துவங்கிய ஓட்டுப் பதிவு, நேற்றுடன் முடிவடைந்தது. ஒன்பதாவது கட்டமாக, நேற்று, உ.பி.,யில், 18, மேற்கு வங்கத்தில், 17, பீகாரில் ஆறு என, 41 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர ...

கட்சிகள், அணிகள் போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு?

Posted:

நாட்டின், மிக நீண்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, நேற்றுடன் முடிந்துவிட்டது. 16ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. பலமுனை போட்டி போன்ற, பல்வேறு புதிய சாதனைகள், இந்த லோக்சபா தேர்தலில் நிகழ்த்தப்பட்டு உள்ளன.8,163 வேட்பாளர்கள்16வது லோக்சபாவை தேர்வு செய்ய, ஏப்., 17ம் தேதி துவங்கிய ஓட்டுப்பதிவு, ஒன்பது கட்டங்களாக நடந்து, நேற்றுடன் இறுதி கட்டத்தை முடித்து உள்ளது. 543 எம்.பி.,க்களை தேர்வு செய்ய நடந்த தேர்தலில், 8,163 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இவர்களுக்காக, நாடு முழுவதும், 9.30 லட்சம் ஓட்டுச்சாவடிகளும், 1.40 கோடி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் ...

வாரணாசி தொகுதியை விட்டு கொடுத்ததில் அதிருப்தியா? முரளி மனோகர் ஜோஷி மறுப்பு

Posted:

வாரணாசி: ''பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக, மக்கள் மத்தியில் மிகப் பெரிய அலை உருவாகி உள்ளது. அந்த அலையின் உச்சியில், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உள்ளார்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, முரளி மனோகர் ஜோஷி கூறினார்.மோடிக்காக: வாரணாசி லோக்சபா தொகுதியில், நேற்று தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், ஓட்டளித்த பின், நிருபர்களிடம் பேசிய ஜோஷி கூறியதாவது: கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், வாரணாசி தொகுதியில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இம்முறை அந்தத் தொகுதியை, மோடிக்கு விட்டுக் கொடுத்து விட்டு, கான்பூர் தொகுதியில் ...

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் திட்டவட்டம்: காங்கிரசுக்கு பெரும் அடி காத்திருக்கிறது என கருத்து

Posted:

புதுடில்லி: மத்தியில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரசுக்கு பெரும் அடி காத்திருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.நாட்டின், 16வது லோக்சபாவுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்ய, இதுவரை இல்லாத வகையில், லோக்சபா தேர்தல், ஒன்பது கட்டங்களாக நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல்கட்ட தேர்தல், ஏப்ரல், 7ம் தேதியும், ஒன்பதாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல், நேற்றும் நடந்தது. ஒன்பது கட்டமாக நடந்த தேர்தலில், ...

குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்? நரேந்திர மோடி இன்று ஆலோசனை

Posted:

காந்திநகர்: குஜராத்தின் அடுத்த முதல்வராக, யாரை தேர்வு செய்வது என்பது குறித்து, அம்மாநில முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி, கட்சி நிர்வாகிகளுடன், இன்று அவசர ஆலோசா னை நடத்த உள்ளார்.நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக, தொடர்ச்சியாக, நான்காவது முறையாக பதவி வகிக்கிறார். இதுவரை அவர், லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் இருந்தார். தற்போதைய தேர்தலில், அவர், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து, குஜராத் மாநிலம் வதோதரா, உ.பி., மாநிலம் வாரணாசி ஆகிய லோக்சபா தொகுதிகளில், அவர் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில், பா.ஜ., வெற்றி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™