Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உலக செவிலியர் தினம்: மே.12, 1974

Posted: 11 May 2014 02:55 PM PDT

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக செவிலியர் அமைப்பு இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. ஜனவரி 1974-இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் மே 12-ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ...

வாடிக்கையாளர்களுக்கு ரூ.200 கோடியை திருப்பி தரும் "ஆப்பிள்'

Posted: 11 May 2014 02:48 PM PDT

வாஷிங்டன் : உலகப் புகழ்பெற்ற, "ஆப்பிள்' நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு, 200 கோடி ரூபாயை திருப்பி அளிக்கிறது. ஆப்பிள் நிறுவன மொபைல் போன்களை பயன்படுத்தும் குழந்தைகள், தங்களுக்குத் தேவையான மென்பொருட்களை, அதன், "ஆப் ஸ்டோரில்' இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டணம் வசூலிப்பதை, வாடிக்கையாளர்கள், அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரில், குழந்தைகள் தங்களுடைய அனுமதியின்றி, மென்பொருட்களை வாங்குவதாக கூறியுள்ளனர். இதையடுத்து, ...

போலந்து வதை முகாமில் 1500 யூதர்கள் நச்சு வாயு செலுத்தி கொல்லப்பட்ட நாள்: மே 12, 1942

Posted: 11 May 2014 02:45 PM PDT

அவுஸ்விட்ஸ் வதை முகாம் 1940-1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜெர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும். இது ஜெர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் கிராக்கோவ் நகரிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தூரத்தில், வார்சாவிலிருந்து 286 கிமீ தூரத்தில் அவுஸ்விட்ச் என்ற நகரருகில் அமைந்திருந்தது. இம்முகாம் மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. முதலாவது, அவுஷ்விட்ஸ் I, இது நிர்வாக மையம்; இரண்டாவது, அவுஷ்விட்ஸ் II (பிர்க்கெனாவு), கொலை முகாம்; மூன்றாவதாக, அவுஷ்விட்ஸ் III (மொனோவிட்ஸ்), தொழில் முகாம். முதல் ...

நிறத்தில் வேற்றுமை...

Posted: 11 May 2014 11:41 AM PDT

ஒரு வெள்ளைகாரன் நம்ம நாட்டுகாரனை பார்த்து கேட்டான், "ஐரோப்பாவில இருந்து வருகின்ற நாங்க சிவப்பா இருக்கோம்.  ஆப்பிரிக்காகாரன் கருப்பா இருக்கான் . சீனாகாரன் மஞ்சள் நிறத்தில் இருக்கான். ஆனா, இந்தியாவில இருக்கறவங்க ஒருத்தன் சிவப்பா இருக்கான், ஒருத்தன்கருப்பா இருக்கான், இன்னொருவன் மாநிறமா இருக்கான் உங்களுக்குள் நிறத்தில் ஒற்றுமை இல்லையே...?" என்றான். உடனே நம்மாளு சொன்னான், "கழுதைங்க தான் ஓரே நிறத்தில் இருக்கும் குதிரைகள் பல நிறத்தில் தான் இருக்கும்". # கி.ராஜநாரயணனின் ­ நாட்டுபுற கதைகள்.

ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம்

Posted: 11 May 2014 11:16 AM PDT

முதலில் ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தத்திற்க்கு வாழ்த்துக்கள்..! உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களில் ஒருவராக அமெரிக்காவின், 'டைம்' பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் முருகானந்தம். வரும் 29ம் தேதி, அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் விருது பெறவுள்ளார். சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில், இந்தியாவிலிருந்து நரேந்திரமோடி, கெஜ்ரிவால், அருந்ததிராய் போன்ற பிரபலங்களும் அடங்குவர். இவர்களுடன் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார், கோவையில் சேர்ந்த முருகானந்தம். அவர் சாதித்த ...

அம்மா

Posted: 11 May 2014 10:27 AM PDT

தேடினேன் தேடினேன் தெகிட்டாத சுவையைத் தேடினேன் அம்மா தந்த அரிசிக் கஞ்சின் சுவையை தேடினேன் கிடைக்கவில்லை எந்தனுக்கு! தேடினேன் தேடினேன் பாசாங்கில்லா அன்பைத் தேடினேன் அன்னை அவள் கனிந்தருளும் அன்பைத் தேடினேன் கிடைக்கவில்லை என் செய்வேன்!! தேடினேன் தேடினேன் காருண்ய விழிகள் தேடினேன் பெற்றவளின் கரங்கள் தொடும் அரவணைப்பைத் தேடினேன் கிடைக்குமோ என் சொல்வேன்! தேடினேன் தேடினேன் சுகமான உறக்கம் தேடினேன் அவள் மடியில் படுத்துறங்கும் சுகத்தைத் தேடினேன் பாவியானேன் என் செய்வேன்! தேடினேன் ...

பயனுள்ளவை.... முகநூலிருந்து

Posted: 11 May 2014 10:21 AM PDT

எடை குறைய 7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை Weight Loss Successஒரே வாரத்தில் உடல் எதையை சுமார் 5 கிலோ வரை குறைப்பதற்காக ஆரோக்கியமான வழிமுறை. ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்) நாள் 2: முழு ...

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

Posted: 11 May 2014 10:00 AM PDT

"அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை - அவள் அடிதொழ மறப்பவர் மனிதரில்லை' மற்றும் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே' ஆகிய பாடல் வரிகள் அன்னையின் சக்தியை உலகுக்கு வெளிப்படுத்துகிறது. மனித வடிவில் வந்த தெய்வமாக அன்னையர் கருதப்படுகின்றனர். நாம் இவ்வுலகை காண காரணமும் அன்னை தான். பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த அன்னைக்கு, அன்பை வெளிப்படுத்தும் விதமாக மே மாதம் 2வது ஞாயிற்றுகிழமை (மே 11), சர்வேதச அன்னையர் தினம் காண்டாடப்படுகிறது. இன்று அன்னைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுங்கள். எப்படி வந்தது :பண்டைய ...

சிவப்பழகு கிரீம்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்கள் !

Posted: 11 May 2014 09:52 AM PDT

தோல் அழகுக்காக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சிவப்பழகு கிரீம்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்கள் கலந்துள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் தன்னார்வ நுகர்வோர் அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் தங்களின் தோல் அழகுக்காக சந்தையில் கிடைக்கும் பல வகை கிரீம்களை அன்றாடம் பயன்படுத்துகின்றனர். நம் சமூகத்தில் ஆண்களை விட பெண்கள் மத்தியில் இந்த கீரிம்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. மணம், தோற்றம், தோலுக்கு சிவப்பு நிறம் தருதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இவ்வகை கிரீம்களில் பலவித ரசாயனப் பொருள்கள் ...

இதுவே வெற்றி!

Posted: 11 May 2014 09:46 AM PDT

ஆயிரம் பேர் மார்க் எடுக்கலாம் , கேமராவுக்கு உதடு நடுங்க வாயை திறந்துக்கொண்டு இனிப்பு வாங்க போஸ் கொடுக்கலாம்.. ஆனாலும் சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து 1168, மதிப்பெண் பெற்று , மாநகராட்சி பள்ளிகளிலேயே இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கும் சவுஜன்யாவுக்கு அம்மா இல்லை.. ரத்தபுற்றுநோயால் இறந்து போய் விட்டார்… அப்பாவுக்கு கண் தெரியாது… தம்பி தங்கைகளுடன் சொற்பமாக வரும் வீட்டு வாடகையில் படித்து வெற்றி பெற்று இருக்கின்றார்… மதிப்பெண் ரிசல்ட் பார்த்து விட்டு பார்வையற்ற தகப்பனை அழைத்துக்கொண்டு நடந்து ...

' கடி'

Posted: 11 May 2014 09:31 AM PDT

* அம்மா (மகனிடம்) : ""ஏன்டா... பாயைப் பார்த்து ரொம்ப பயப்படறே...!?'' மகன்: ""எங்க டீச்சர்தான் சொன்னாங்க... "பாயும் புலி'ன்னு...!'' -லட்சுமி ஆவுடைநாயகம், சென்னை. * ""ஏம்பா ராப்பிச்சை இவ்வளவு சாப்பாடு வாங்கறயே கெட்டுப் போயிடாதா...?'' ""வீட்ல பிரிட்ஜ் இருக்கு தாயே...!'' -க. நாகமுத்து, திண்டுக்கல். * ""எதுக்காக இண்டர்வியூ நடக்கிற இடத்துல வந்து "எனக்கு கண்ணில கோளாறு இருக்கு'ன்னு சொல்றே?'' ""இங்கே நல்லா "ஐ வாஷ்' பண்றதா சொன்னாங்களே..'' -ம. அக்ஷயா, அரூர். * நண்பன் 1: டேய்! தினமும் ...

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Posted: 11 May 2014 09:29 AM PDT

பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன்

துபாயில் பேருந்து விபத்து: 9 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி

Posted: 11 May 2014 09:02 AM PDT

துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பேருந்து ஒன்று டிரக்குடன் மோதி விபத்துக்குள்ளானதில் 9 இந்தியர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். துபாயின் பிரதான நெடுஞ்சாலையான துபாய் எமிரேட்ஸ் சாலையில் இன்று காலை ஜெபல் அலி பகுதியில் வேலை செய்யும் 27 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றது. பேருந்தில் இந்தியர்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் இருந்தனர். எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் எமிரேட்ஸ் சாலையில் பேருந்து வேமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் ...

வேரில்லா மரம்!

Posted: 11 May 2014 08:32 AM PDT

அடுப்பிலிருந்த சாம்பாரை தாளித்து, இறக்கி வைத்தாள் வத்சலா. ஹாலில் மகள் அபியும், கணவன் மாதவனும் சிரிக்கும் சப்தம், கேட்டது. கையை டவலால் துடைத்தபடி வந்தாள். ''அப்பா, இந்த ப்ராஜெக்ட இன்னும் ஒரு வாரத்தில முடிச்சாகணும்.'' அப்பாவும், மகளும், லேப் - டாப்பில் தலையைக் கவிழ்த்திருந்தனர். ''என்ன செய்றீங்க,'' என்று கேட்டாள் வத்சலா. ''டவுன்லோடு செய்துகிட்டு இருக்கோம்,'' கண்களை எடுக்காமல், பதில் சொன்னான் மாதவன். ''அப்படின்னா என்னங்க?''''ஐயோ அம்மா... நீ வேற, 'தொண தொண'ன்னு. உனக்கு இதைப்பத்தி எல்லாம் ...

அமைதி பூங்கா மலர

Posted: 11 May 2014 08:23 AM PDT

அமைதி பூங்கா மலர



சின்னத் தாய் *
சின்னதாய் மாறினாள்
மகன் மணந்த பிறகு !

அன்னையர் தினமும்
அன்னியர் தினமானது
அவள் வந்த பிறகு !

அன்னையர் தினம்,
அனுதினமானால் தான்,
அமைதி பூங்கா மலரும்

அவளும் அவனும் ,
அதை  அறிந்துகொண்டால் ,
ஆனந்தம் என்றுமே !

ரமணியன்

*ikon mother

வாழைப் பழத்தின் புதிய அவதாரம்!

Posted: 11 May 2014 07:55 AM PDT

வாழைப்பழத்தை சிப்ஸ் செய்து உண்பதைக் காட்டிலும் உலர வைத்து அத்தியாக மாற்றி உணவுப் பொருளாகப் பயன்படுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. வாழைப் பழத்தை உலர வைக்கும் புதிய முறையாக தற்போது அறிமுகமாகியுள்ளது பாலிகார்பனேட் சீட் மூலம் அமைக்கப்பட்ட சஸ்டெய்ன் பசுமை இல்ல சூரிய வெப்ப உலர்விப்பான். இதைப் பற்றிக் கூறுகிறார் தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் ஜி. அஜிதன்: ""இந்தியாவிலேயே முன்மாதிரி திட்டமாக தொட்டியத்தில் பசுமை இல்ல சூரிய வெப்ப உலர்விப்பான் அமைக்கப்பட்டுள்ளது. ...

கிரிஸ்டல் உலகம்!

Posted: 11 May 2014 07:34 AM PDT

'சுவரோஸ்கி கிரிஸ்டல் உலகம்' எனும் அருங்காட்சியம், ஆஸ்திரியா நாட்டில், வாட்டன்ஸ் நகரில் உள்ளது. இந்த கிரிஸ்டல் உலகை உருவாக்கியவர், மல்டி மீடியா நிபுணர், ஆன்டிரி ஹலர். இதன் நுழைவு வாயிலில், ஒருவரின் வாயிலிருந்து தண்ணீர் கொட்டுவது போன்று வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர். இந்த கிரிஸ்டல் உலகில் நுழைந்தால், கிரிஸ்டல்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். மேலும், பல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கிரிஸ்டல் பொருட்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வைரம் போன்று ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் ...

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

Posted: 11 May 2014 07:08 AM PDT

சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14-ஆம் தேதி வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை "அக்னி நட்சத்திரம்' என்று சொல்வர். அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறும். இந்த காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக பூமியின் வெப்பம் ...

புடவை-ஹைக்கூ

Posted: 11 May 2014 06:56 AM PDT

சிவப்பா அழகா
எத்தனை நாள் உழைக்கும்
மயில் பார்டர் புடவை.

அம்மாவின் புடவை
மாற்றம் கண்டது
அக்காவின் தாவணி.

காலமாற்றம்
தெரியவில்லை
கொசுவம் வச்சு கட்ட புடவை.

என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம்

Posted: 11 May 2014 06:42 AM PDT

இது என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம். என் உறவினரின் தந்தை சமீபத்தில் இறந்து விட தாயார் மட்டும் தனித்து விடபட்டார்.இரண்டு மகன்கள் இருந்தும் அவருக்கு இந்த நிலையா என்று நினைத்தேன். அப்புறம் தான் என் அம்மா விசயம் என்ன என்று கூறினார். அதை இங்கு பகிர நினைக்கிறேன். மூத்த மகன் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து இருக்கிறார். அந்த பெண் எத்தனையோ நல்ல விதமாக நடந்து கொண்டும் அந்த அம்மாவுக்கு அவளை பிடிக்காமல் போய்விட்டது. அவளை பற்றி அக்கம் பக்கத்தில் தவறாக பேசி வந்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் ...

சுஜாதாவின் கணேஷ்-வசந்த் கலக்கும் சில்வியா

Posted: 11 May 2014 06:05 AM PDT

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Posted: 11 May 2014 05:49 AM PDT

பிறந்த குழந்தையை போட்டோ எடுக்க கூடாது என பரவலான கருத்து உள்ளது.தவறு என்றால் ஏன் ? அறிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்

அது ஒரு பொடா காலம் -சுப.வீரபாண்டியன்

Posted: 11 May 2014 05:48 AM PDT

ஏழ்மை நிலையிலும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியின் கல்விக்கு உதவுங்களேன்...

Posted: 11 May 2014 05:47 AM PDT

சென்னை: சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் பயின்று 1168 மதிப்பெண் பெற்று சென்னையில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி எம்.சௌஜன்யா. இவர் ஆதி ஆந்திரர் வகுப்பை சேர்ந்த துப்புரவு தொழிலாளியின் மகள். மாணவியின் தந்தை மாலகொண்டைய்யா (50), கண்பார்வையற்றவர். மாதம்தோறும் அரசு தரும் 1000 ரூபாய் உதவி பணம் மற்றும் கூலி வேலை செய்து மகளை படிக்க வைத்துள்ளார். தாயார் 2007ம் ஆண்டு இறந்து விட்டார். தந்தையும் கண்பார்வையற்றவர். இந்நிலையில் வீட்டு வேலைகளையும் முடித்து இடைவேளையில் படித்து இவ்வளவு பெரிய சாதனையை எட்டியுள்ளார். தான் ...

சொகுசுப் பேருந்துப் பயணம் - ஹைக்கூ

Posted: 11 May 2014 04:00 AM PDT

என் சாய்வு நாற்காலி
உன் முட்டியை உடைத்தால்
என்னை குறை சொல்லாதே
எனக்குத் தெரியும்
என் சுதந்திரம்
உன் மூக்கு நுனிவரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (15)

Posted: 11 May 2014 03:08 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 11 May 2014 01:41 AM PDT

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

பாஸ்வேர்டு்-கோபிநாத்

Posted: 11 May 2014 01:01 AM PDT


பதிவிறக்க
https://www.mediafire.com/?yjgrhaacr172rgf

உயிர் மொழி -டாக்டர் ஷாலினி

Posted: 11 May 2014 01:01 AM PDT


பதிவிறக்க

உயிர் மொழி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™