Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


போடோ தீவிரவாதிகள் தாக்குதல்: அசாமில் 10 பேர் சுட்டுக் கொலை

Posted: 01 May 2014 10:56 PM PDT

அசாமில் பூர்வீக குடிமக்களுடன் போடோ இன மக்களும் வசித்து வருகிறார்கள். போடோ மக்களுக்கு தனி 'போடோ லேண்ட்' மாநிலம் கேட்டு தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். கடந்த வாரம் 2012–ம் ஆண்டு இங்கு போடோ மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இனக் கலவரம் ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் பணிபுரிந்த அசாம் போடோ இன மக்கள் ஓட்டு மொத்தமாக சொந்த

கேரளாவில் கொலை வழக்கில் சினிமா டைரக்டர் திடீர் கைது

Posted: 01 May 2014 09:50 PM PDT

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் சங்கீத் லூயிஸ். இவர் மலையாள சினிமாவில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்யும் பொறுப்பு இவருக்கு கிடைத்தது. அந்த படத்தில் சமீபத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் சில நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு கொல்லம்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 84 வயது மூதாட்டி பலி

Posted: 01 May 2014 08:25 PM PDT

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சவாரா பகுதியில் தனியாக வாழ்ந்து வந்த 84 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று முன்தினம் தனது வீட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார். கொல்லம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது பிரேதத்தை பரிசோதித்த டாக்டர்கள், மயக்க நிலைக்கு செல்லும் முன்னர் அந்த மூதாட்டி பாலியல்

2-வது திருமணம்: திக்விஜய்சிங்குக்கு மகன் முழு ஆதரவு

Posted: 01 May 2014 08:21 PM PDT

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்கிற்கும் (வயது 67) டெலிவிஷன் பெண் நிருபர் அம்ரிதாராய்க்கும் (43) காதல் மலர்ந்தது. இதை இருவருமே ஒப்புக் கொண்டனர். திக்விஜய்சிங்கின் மனைவி ஆஷா, புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு இறந்தார். அவருக்கு 4 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மகன் ஜெய்வர்தன், மத்தியபிரதேசம் ரகோகார் தொகுதி எம்.எல்.ஏ.வாக

சென்னை குண்டு வெடிப்பு எதிரொலி: மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு

Posted: 01 May 2014 08:13 PM PDT

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நேற்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததில் சுவாதி என்ற பெண் பலியானார். மேலும் 14 பேர் காயமடைந்தனர். அமைதிப் பூங்கா என்று வர்ணிக்கப்படும் தமிழகத்தின் தலைநகரில் உள்ள முக்கிய ரெயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம், மத்திய

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம்: மோடி அறிவிப்பு

Posted: 01 May 2014 05:04 PM PDT

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி என்ற இடத்தில் நேற்று பிரசாரம் செய்தார். ராஜம்பேட்டை தொகுதியில் பா. ஜனதா சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி புரந்தேசுவரியை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை

குண்டு வெடிப்புக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கண்டனம்

Posted: 01 May 2014 12:57 PM PDT

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- கோழைகள் நடத்திய வன்முறை தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்துக்கு

தொழில்நுட்பக் கோளாறினால் ஜெட்டா விமான நிலையத்தில் தவித்த 350 பயணிகள்

Posted: 01 May 2014 11:26 AM PDT

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்தில் உள்ள மன்னர் அப்துல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோட்டிற்கு வரவேண்டிய ஏஐ-962 விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால் நேற்று அந்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்யவிருந்த இந்திய முஸ்லிம் யூனியன் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.டி முகமது பஷீர் உட்பட 350க்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேர

2ஜி ஊழல்: கனிமொழி, ராசாவுக்கு மீண்டும் சிக்கல்

Posted: 01 May 2014 10:36 AM PDT

2ஜி ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் கடந்த வாரம் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உட்பட கனிமொழி, ராசா மற்றும் எட்டு பேருக்கு மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜாமீன் பெறுவது கடினமாக இருக்கும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிபதிக்கு திருப்தி

பாடப்புத்தகத்தில் மோடி வாழ்க்கை குறிப்பு: ராஜஸ்தான் மந்திரி

Posted: 01 May 2014 08:59 AM PDT

ராஜஸ்தானில் வசுந்தர ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கல்வித்துறை மந்திரியாக இருப்பவர் காளி சரண் ஷரப். மோடி பிரதமரானால் அவரது வாழ்க்கை குறிப்பு பாடப்புத்தகத்தில் இணைக்கப்படும் என்று ஷரத் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- மோடி தனிமனித உத்வேகத்தை தூண்டும் ஆளுமை படைத்தவர்.

பரம்பரை ஆட்சியை ஒழிக்க ராகுலை தோற்கடியுங்கள்: கெஜ்ரிவால்

Posted: 01 May 2014 06:33 AM PDT

அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் குமார் விஷ்வாஸ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று ஜக்திஷ்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால், ஊழலை அடியோடு அழிக்கவும் பரம்பரை ஆட்சியை அகற்றவும் ராகுலை தோற்கடியுங்கள் என்று அவர் கூறினார்.

பொருளாதாரம் குறித்த மோடியின் கருத்து முற்றிலும் பொய்: குலாம் நபி ஆசாத்

Posted: 01 May 2014 06:04 AM PDT

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து மோடி முற்றிலும் பொய்யான கருத்தை தெரிவித்து வருகிறார் என்று மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- உலக வங்கி சார்பில் சர்வதேச ஒப்பிட்டு திட்டம் என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் அறிக்கை

திருப்பதி அருகே ரூ.1½ கோடி மதிப்பிலான செம்மரம் கடத்தல்

Posted: 01 May 2014 05:49 AM PDT

திருப்பதி அருகே உள்ள வி.கோட்டா சோதனை சாவடியில் இன்று காலை ஆந்திர மாநில போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தில் இருவந்து வந்த லாரி ஒன்றை மறித்தனர். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். போலீசார் லாரியை விரட்டி மடக்கினர். லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.லாரியில் சோதனை செய்த போது மருந்து பெட்டிகள், துணிகளை வைத்து மூடி 5 டன்

கார்–லாரி நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

Posted: 01 May 2014 05:14 AM PDT

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் காவநாடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மனைவி தங்கம்மாள் (வயது 55). இவர்களது மகன் மோகனன் (40). மோகனனின் மகன் மனு (8), இவர்களும், இவர்களது உறவினர்கள் குஞ்சுமோன், அம்பிகா, சரஸ்வதி ஆகியோர் குருவாயூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் புறப்பட்டனர். காரை மோகனன் ஓட்டினார். பரவூர் ரோடு துரத்திக்புரம் என்ற இடத்தில்

ஜூன் மாதம் ஸ்டார் அலையான்சுடன் இணைய உள்ள ஏர்-இந்தியா நிறுவனம்

Posted: 01 May 2014 04:50 AM PDT

உலகளவில் விமானப் போக்குவரத்தில் முன்னணியில் இருக்கும் மூன்று நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது ஸ்டார் அலையான்ஸ் நிறுவனம் ஆகும். இதனைத் தொடர்ந்து ஒன் வேர்ல்ட், ஸ்கை டீம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 26 விமான நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் 195 நாடுகளில் உள்ள 1,328 விமான நிலையங்களுக்கு தினசரி 22,000 விமான

கறுப்பு பணம் வழக்கு: புதிய சிறப்பு புலனாய்வுக்குழு தலைவர் நியமனம்

Posted: 01 May 2014 04:26 AM PDT

கறுப்பு பணம் வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது. இதன் தலைவராக ஜீவன் ரெட்டி இருந்தார். இவர் விலகியதால் எம்.பி.ஷாவை புதிய தலைவராக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார்.

மோடி கண்டிப்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ப. சிதம்பரம்

Posted: 01 May 2014 03:52 AM PDT

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பா.ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளரான மோடி வாக்களித்த பின், வாக்குச்சாவடிக்கு வெளியே தாமரை சின்னத்துடன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்று அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார் விபத்தில் மரணம் அடைந்த வேட்பாளருக்கு ஆதரவாக மகள் ஓட்டு வேட்டை

Posted: 01 May 2014 03:02 AM PDT

ஆந்திர சட்டசபையில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஷோபா நாகிரெட்டி. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் நடைபெறும் தேர்தலில் அனந்தபுரம் மாவட்டம் ஆலகட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். கடந்த வாரம் பிரசார கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய போது கார் விபத்தில் பலியானார். இதையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என

சென்னையில் குண்டுவெடிப்பு: பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 01 May 2014 03:02 AM PDT

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ரகசிய அறைகளில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி ரகசிய அறைகளில் உள்ள நகைகளின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பின்போது கோவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு

நான் ராஜீவ்காந்தி மகள்: மோடிக்கு பிரியங்கா பதில்

Posted: 01 May 2014 02:48 AM PDT

கடந்த மாத இறுதியில் ஒரு தொலைக்காட்சி மோடியை பேட்டி எடுத்தது. இந்த பேட்டி, கடந்த மாதம் 26-ந்தேதி ஒளிபரப்பானது. பின், 27-ந்தேதி மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த பேட்டியில், பிரியங்கா எனது மகள் போன்றவர். எனது அரசியல் எதிரிகளான சோனியா, ராகுல் போல அவரை கருதவில்லை என திரும்ப திரும்ப கூறியிருந்தார். ஆனால், மோடியின் பேட்டி எடிட் செய்யப்பட்டதாக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™