Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு முஸ்லிம் பேரவை கடிதம்!

Posted: 01 May 2014 11:11 PM PDT

Mahinda_rajapaksa

Mahinda_rajapaksaஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இடம்பெயர் முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 16 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம். பௌசீ, ரிசாத் பதியூதீன், எ.எம்.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட பல முக்கிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். முஸ்லிம் மக்கள் உரிய முறையில் மீள்குடியேற்றப்படாத காரணத்தினால் முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு சிங்கள பௌத்த அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. சிங்கள ராவய, பொதுபலசேனா மற்றும் ராவணா பலய போன்ற பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 11531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இலங்கையில் அட்டூழியம்!

Posted: 01 May 2014 10:55 PM PDT

Sex

Sexஇலங்கையில் கடந்த ஆறு ஆண்டுகளில் பெண்கள் மீது 11531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக போலிஸ் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2007ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 11531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவங்கள் தொடர்பில் 12229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆயிரம் பெண்களில் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் வடக்கில் 119 பாலியல் வன்முறைச் சம்பவங்களும், 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் 256 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பில் 332 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பத்து பேர் இராணுவ உத்தியோகத்தர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை வடக்கில் இடம்பெற்ற பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 17 இராணுவ உத்தியோகத்தர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மைக்ரோசாப்ட் நிறுவனம் வன்கூவரில் புதிய பயிற்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை தொடங்குகிறது !

Posted: 01 May 2014 10:48 PM PDT

microsoft

microsoftகனடாவின் வன்கூவர் பகுதியில் சில வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு Microsoft நிறுவனமானது முன்வந்திருக்கின்றது எனத் தெரியவருகிறது.

கிட்டத்தட்ட உடனடியாக 400 பேரளவில் வேலைவாய்பினைப் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தகவலை Microsoftநிறுவனமே வியாழக்கிழமை தெரிவித்திருக்கின்றது எனத் தெரிகிறது.

அத்துடன் குறிப்பிட்ட நிறுவனம் வன்கூவரில் ஒரு புதிய பயிற்சி, மற்றும் அபிவிருத்தி மையம் ஒன்றினைத் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கின்றது.

குறிப்பிட்ட நிறுவனத்தினால் கிட்டத்தட்ட 90 மில்லியன் டொலர்கள் பிரிட்டிஸ்கொலம்பியா மாகாணத்தினது பொருளாதாரத்தில் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உருவாகியிருக்கின்றது. அதைத்தொடர்ந்து 2015ல் Vancouver's Pacific Centre ல் புதிய கலை மையம் ஒன்று திறக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Microsoft நிறுவனத்தின் தலைவரான துயநெவ முந நெனல மிசசாக்காவில் தமது நிறுவனத்தின் தலமைக் காரியாலயம் தற்போது இருந்தாலும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட நகரமாக வன்கூவர் திகழப்போகின்றது எனத் தெரிவித்திருக்கின்றார்.

Microsoft நிறுவனம் வன்கூவரில் காலடி வைப்பதுடன் வருடாவருடன் கனடியப் பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு 16 கிழமை காலத்தில் குறிப்பாக கோடைகாலத்தில் வேதனத்துடன் கூடிய பயிற்சியும் அளிக்கவிருக்கின்றது எனத் தெரிகின்றது.

இந்தத் திட்டமானது Foundry Vancouver என்ற பெயரினால் அழைக்கப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி கோபத்திற்கு ஆளான சிம்பு!

Posted: 01 May 2014 05:55 AM PDT

Simbu-hansika

Simbu-hansikaதனது மகள் ஜெயபிரதாவின் மகன் சித்துவை காதலிப்பதாக சிம்பு தான் செய்தியை பரப்பிவிடுவதாக ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி கடுப்பில் உள்ளாராம். வாலு படப்பிடிப்பில் ஹன்சிகா சிம்பு மீது காதல் வயப்பட்டார். ஆனால் ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானிக்கு இந்த காதல் பிடிக்கவில்லை. இந்நிலையில் வாலு படப்பிடிப்பு முடிவதற்குள் சிம்புவும், ஹன்சிகாவும் பிரிந்துவிட்டனர். இந்த காதல் முறிவால் மோனா தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. ஹன்சிகாவுக்கும் ஜெயபிரதாவின் மகன் சித்துவுக்கும் காதல் என்ற செய்தி தீயாக பரவியது. இதை கேட்ட ஹன்சிகா பதறி அடித்து மறுப்பு தெரிவித்தார். தனது மகளின் பெயரை கெடுக்க சிம்பு தான் இது போன்ற காதல் செய்திகளை பரப்புவதாக ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி கடுப்பில் உள்ளாராம். சித்துவுக்கு ஏகப்பட்ட சொத்து இருப்பதால் தான் ஹன்சிகா அவரை காதலிக்கிறார் என்ற செய்தியும் பரவியுள்ளது. அதற்கு மோனா, மும்பையில் எங்களுக்கு இல்லாத சொத்தா. நாங்களே ஜமீன் குடும்பத்தினர் தான் என்று கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறாராம். சிம்பு தனது காதல் தோல்வி அடைந்தால் தான் காதலித்த பெண்கள் பற்றி வதந்தியை பரப்பி விடுவதும், அவர்கள் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவதும் வழக்கம் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மெய்சிலிர்க்க வைக்கும் மனிதரின் சாகசம்!

Posted: 01 May 2014 05:44 AM PDT

Ant-Burgess-World-Champion

Ant-Burgess-World-Champion

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆங்கிலத்தில் கதைத்து அசத்தும் கிளி!

Posted: 01 May 2014 05:39 AM PDT

My-parakeet-talking

My-parakeet-talking

This posting includes an audio/video/photo media file: Download Now

அபுதாபிக்கு குட்-பை: இனி இந்தியாவில் போட்டிகள் தொடரும்!

Posted: 01 May 2014 05:22 AM PDT

Ipl-season-7

Ipl-season-7ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கிய ஐபிஎல் டி20 சீசன்-7 தொடரின் முதற்கட்ட லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. இனி அடுத்தகட்ட போட்டிகள் இந்தியாவில் நாளை தொடங்க உள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து வருவதால், ஐபிஎல் டி20 சீசன்-7 கிரிக்கெட் தொடருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனால், முதற்கட்ட லீக் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்டது. கடந்த மாதம் 16ம் தேதி அபுதாபியில் துவங்கிய முதல் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதின. தொடர்ந்து துபாய், ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 5 போட்டிகளில் விளையாடியுள்ளன. பஞ்சாப் அணி விளையாடிய 5 போட்டியிலும் அசத்தல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நேற்று கடைசி போட்டியாக துபாய் மைதானத்தில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. மொத்தம் 20 போட்டிகளுடன் முதற்கட்ட ஆட்டம் ஐக்கிய அரபு நாடுகளில் முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து நாளை முதல் இந்தியாவில் போட்டிகள் நடக்க உள்ளன. இன்று ஒருநாள் ஓய்வு நாளாக உள்ளது. நாளை ராஞ்சியில் நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்தியாவில் 36 லீக் போட்டிகள் நடக்க உள்ளன. அரை இறுதி போட்டிகள் வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும், இறுதிப் போட்டியில் மும்பையில் ஜூன் 1ம் தேதியும் நடக்க உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டது!

Posted: 01 May 2014 05:14 AM PDT

Train-Accident

Train-Accidentஅமெரிக்காவில் கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு தீப்பிடித்தது. டேங்கர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் லின்ச்பர்க் நகர் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிய டேங்கர் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. ஜேம்ஸ் நதிக்கரையோர தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த போது, ரயிலின் சில பெட்டிகள் திடீரென தடம்புரண்டன. இதில் கச்சா எண்ணெய் சிந்தியதில் திடீரென தீப்பிடித்தது. கொழுந்து விட்டு எரிந்த டேங்கர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி நதியில் கவிழ்ந்தன. தீ விபத்தால் எழுந்த கரும்புகையில் லின்ச்பர்க் நகரமே மூழ்கியது. விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் வசித்த மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. நதியில் கச்சா எண்ணெய் கலந்து உள்ளதால் அந்த தண்ணீரை குடிக்க பயன்படுத்த வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்தில் ரயிலில் இருந்த 1,90,000 லிட்டர் எண்ணெய் நாசமாகி உள்ளது. அமெரிக்காவின் குய்பெக் நகரில் கடந்த ஜுலை மாதம் எண்ணெய் ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு தீப்பிடித்து வெடித்தது. இதில் 47 பேர்ளளள பலியானார்கள். 30 கட்டிடங்களும் தீக்கிரையானது. இந்நிலையில் தற்போது மீண்டும் எண்ணெய் ரயில் விபத்துக்கு உள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிளிநொச்சி மாவட்டத்திற்கான எழுச்சி மே நாள் நிகழ்வு: தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு!

Posted: 01 May 2014 05:03 AM PDT

Kilinochi

Kilinochiதமிழ் தேசிய மே நாளின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான எழுச்சி நிகழ்வு கிளிநொச்சி அக்கராயன் ஸ்கந்தபுரம் பிரதேசசபை வளாகத்தில் பிரதேசசபை உறுப்பினர் தயாபரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. முன்னதாக உழைப்பால் ஒன்றிணைவோம் எம்மண்ணில் நிலைபெறுவோம் என்ற மகுடத்தின் கீழ் அக்கராயன் இத்தியடி அம்மன் ஆலய முன்றலில் இருந்து ஊர்திகள் சகிதம் ஆரம்பமான மேநாள் நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் வடமாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை அரியரத்தினம் மற்றும் பிரதேசசபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் பெண்கள் அமைப்புக்களின் உறுப்பினர்கள் விவசாய பெருமக்கள் என திரளாக கலந்துகொண்டனர். பின்னர் மேநாள் மேடையில் மக்கள் பிரதிநிதிகள் பலரும் சிறிப்புரைகளை ஆற்றியிருந்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையின் மூத்த ஆதிவாசி தலைவர் 114 வயதில் காலமானார்!

Posted: 01 May 2014 04:34 AM PDT

aathivasi_leader

aathivasi_leaderநான்கு தலைமுறைகளின் 105 பேர பேத்திகளை கண்ட இலங்கையின் மூத்த ஆதிவாசி தலைவர் தனது 114 வயதில் காலமானார். தெய்யத்தகண்டிய ஹென்னானிகல ஆதிவாசிகளின் முன்னாள் தலைவரான தலாவரிகே களுஅப்பு நேற்று உயிரிழந்தார். 14 பிள்ளைகளின் தந்தையான அவர் நான்கு தலைமுறைகளை கண்ட 104 பேரின் கொள்ளு பாட்டனார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமண ஆதிவாசி கிராமங்களில் வசித்து வந்த இவர் முன்னாள் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் கோரிக்கையை ஏற்று மகாவலி காணியை பெற்று ஹெனானிகல பிரதேசத்திற்கு சென்று குடியேறினார். தமண பிரதேசத்தில் வேட்டையாடி வாழ்ந்து வந்த ஆதிவாசிகளை காமினி திஸாநாயக்க விவசாயத்தில் ஈடுபட செய்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையில் நடைபெற்ற கடத்தல்: 25 நபர்கள் கைது!

Posted: 01 May 2014 04:12 AM PDT

tobacco

tobaccoகனடாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையில் நடைபெற்ற கடத்தலின் விளைவாக கிட்டத்தட்ட 25 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்குமிடையில் புகையிலை கடத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் போலிசார் குறிப்பிட்ட கடத்தல் மாப்பியா குழுவுடன் தொடர்புடைய சம்பவம் எனத் தெரிவித்திருக்கின்றது. இந்தக் கடத்தலில் ஈடுபட்டவரகளை குவிபெக் மாகாணப் பொலிசார், RCMP யினருடன் இணைந்து மற்றும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் போலிசார் ஆகியயோர் இணைந்து செயற்பட்டு 25 நபர்களைக் கைது செய்திருக்கின்றார்கள் என கனடியச் செய்தித்தாபனமாகிய CBC தெரிவித்திருக்கின்றது. அத்துடன் 18 துப்பாக்கிகள், 10 வாகனங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. புதன்கிழமை காலையில் நடைபெற்ற இக் கைது நடவடிக்கையின்போது கிட்டத்தட்ட 400 போலிசார் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள் எனவும் மொன்றியலுக்கு அண்மையில் கைது நடந்திருக்கின்றது எனவும் தெரியவருகிறது. மாப்பியா குழவினர் புகையிலையை அமெரிக்காவில் வாங்கி கனடாவிற்குள் சட்டவிரோதமாகக் கடத்தியிருக்கின்றார்கள் எனப் பாதுகாப்புத் துறையினர் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள். அத்துடன் 40,000கிலோகிராம் புகையிலை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவைகள் கிட்டத்தட்ட சந்தை நிலவரப்படி 7 மில்லியன் டொலர்கள் பெறுமதிவாய்ந்தவை எனவும் போலிசார் தெரிவித்திருக்கின்றனர். இவற்றுடன் 450,000 டாலர்கள் காசும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன எனத் தெரியவருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

424 தனிப்பட்ட நபர்களையும் இலங்கை அரசாங்கம் தடை: வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் கருத்து!

Posted: 01 May 2014 03:58 AM PDT

John-Baird

John-Bairdபுலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையானது நல்லிணக்க முனைப்புக்களை மேலும் பாதிக்கும் என கனடா அறிவித்துள்ளது. 16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தி வருவதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் தடை கனடாவில் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் கருத்துக்களை வெளியிட கனடாவில் எவ்வித தடையும் கிடையாது என அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள கனேடியர்களிடம் கேள்வி எழுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் முக்கிய பங்காற்றி வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான சகல நடவடிக்கைகளும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். சகலவிதமான பயங்கரவாத செயற்பாடுகளையும் கனடா எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™