Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 07 May 2014 03:31 PM PDT

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு உருவாக்கிய அணை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் அணை பாதுகாப்பை ஆராய மூன்று பேர் குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு பிறப்பித்த அணை பாதுகப்புச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்பட 5 நீதிபதிகள் கொண்ட ...

இதோ, நானும் என்னைப் பற்றி ! -- எம்கேஆர்சாந்தாராம்.

Posted: 07 May 2014 03:03 PM PDT

பெயர்:    எம்கேஆர்சாந்தாராம் சொந்த ஊர்:   தமிழ் நாடு, சென்னை.. ஆண் : ஈகரையை அறிந்த விதம்: கவிஞர் திரு . பொன் செல்ல முத்து அவர்கள் என்னை நம் ஈசரை யை அறிமுகப் படுத்தினார் -  அவருக்கு என் நன்றி ! பொழுதுபோக்கு: பழைய  தமிழ்த்திரைப்படப் பாடல்கள்கேபது -  புத்தகங்கள் படிப்பது. தொழில்:  மருத்துவன் ! மேலும் என்னைப் பற்றி:      "பழைய  தமிழ்த் திரைப்பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! "         இந்த தலைப்பில் : தமிழ்த் திரைப்படங்கள், ...

இரண்டறக் கலந்த பேஸ்புக் !

Posted: 07 May 2014 01:47 PM PDT

கடந்த சில ஆண்டுகளாக, அபரிதமான வளர்ச்சி பெற்று, பேஸ்புக், அனைவரின் வாழ்க்கையோடு இணைந்து இயங்கி வருகிறது. பல பயனாளர்கள், இது ஓய்ந்து போகக் கூடாதா என்று எண்ணி வந்தாலும், எந்த வகையிலும் இது நம்மை விட்டுப் போகாது என்ற நிலையில் தான், பேஸ்புக் செயல்பாடும் அதன் பயனாளர்களும் உள்ளனர். ஏனென்றால், மனிதனின் பலவகையான தேவைகளை அது நிறைவு செய்கிறது. நம்மை உற்சாகப்படுத்துகிறது, எண்ணங்களைச் செலுத்துகிறது, எரிச்சலையும் தருகிறது, மனச்சோர்வையும் அளிக்கிறது - ஆம் அனைத்து வகையான உணர்வுகளையும் தருகிறது. பேஸ்புக் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (10)

Posted: 07 May 2014 10:49 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

எச்சரிக்கை!! . . .

Posted: 07 May 2014 10:06 AM PDT

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு! பெண் சமூகத்தின் உயிர்ப்பு அவள் குடும்பத்திற்குஉயிர்ப்பூ அன்பினால் அவளுக்கு என்றுமே தவிப்பு நிலவிற்கு ஒப்பான பெண்மை அவள் என்ன கறை கொண்டவளா இல்லை பாசத்தின் கரை கண்டவள் அநியாயத்தை தீயிடும் தீ அவள் அடக்கு முறைக்கு தலைவணங்காதவள் எச்சரிக்கிறேன் ஆண்குலமே எப்போதும் இருப்பது போல் எதுவும் இருப்பதில்லை மாற்ம் ஒன்றே மாறாதது எத்தனை காலம் பணிவாள் ஆணின் குட்டுக்கு குனிவாள் என்றேனும் ஓர் நாள் அவள் துணிவாள் அன்றந்த பெண்மையின் மெண்மை மாறி போகும் தன்னை நிரூபிக்க ...

பிரியாணி பிரியர்களே!..... இந்த பிரியாணியை எல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!.....

Posted: 07 May 2014 09:52 AM PDT

பிரியாணி பிரியர்களே!..... இந்த பிரியாணியை எல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!..... பிரியாணியின் வரலாற்றை பற்றி ஆராய்ந்தால் அது நம்மை கி.பி 2-ஆம் நூற்றாண்டுக்கு இழுத்துச் செல்கிறது. அதாவது அந்தக் காலங்களில் அரிசி, இறைச்சி, நெய், மஞ்சள், கொத்துமல்லி தூள், மிளகு, புன்னை இலை ஆகியவற்றை சேர்த்து செய்யப்பட்ட 'ஊன் சோறு' எனும் உணவு வகை இன்றைய பிரியாணியோடு ஒத்துப்போகிறது. இதைத் தவிர்த்து பார்த்தால் பிரியாணியின் தோற்றம் குறித்தும், அது இந்தியா வந்து சேர்ந்த விதம் பற்றியும் நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. இவற்றில் ...

2ஜி-ஹைக்கூ

Posted: 07 May 2014 09:50 AM PDT

காவு கொண்டது
செல்போன் டவர்
சிட்டுக்குருவி.

ஓயாத பேச்சு
செல்போனில்
வளரும் பிரச்னை.

நீதிமன்ற சாட்சி
உறவுக்கு
செல்போன் பேச்சு.

காந்திஜி நேருஜி
விடுதலை பெற
2ஜி 3ஜி சிறைசெல்ல.

எப்படியும் நீ வருவாய்...

Posted: 07 May 2014 09:35 AM PDT

எனக்குத் தெரியும் எப்படியும் நீ வருவாய் என்னைத் தேடி எப்போதுமே  எனக்கிருக்கும் ஈகோ உனக்கிருப்பதில்லை எனவே  எப்படியும் நீ வருவாய் எனக்குத் தெரியும் நீ  வீட்டுக்குள் வராமலே வருவாய் தொடாமலே தொடுவாய் படாமலே படுவாய் ஜன்னல் இல்லாவிடத்திலும் சகஜமாய் வந்து சந்திப்பு நடத்துவாய் வெளியே இருந்தபடியே உள்ளுக்குள் ஒழுகி உயிரின் மனவெளிகள் வரை ஊடுறுவி நனைப்பாய் உன்னிடம் பெறும் சுகம் உலக சுகம் உயிர் சுகம் உயர் சுகம் சில்லென்றிருந்தபடியே சில்மிஷச் சூடேற்றும் வித்தை பெண்களுக்குக் ...

முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Posted: 07 May 2014 08:17 AM PDT

சிம்மாசனம்


லஞ்சத்தின் லகான்

சிம்மாசனம்

ஆடிப் போனார்கள் ஜனங்கள்.

கண்ணைக் கசக்கும்

வெங்காயம்

மூக்கைத்துளைக்கும் சாம்பார்.

பொரியும் கோபம்

மறைக்குமா?

துடிக்கும் நெற்றிக்கண்.

நெருப்பு

மூச்சு வாங்கும்

புகை.

நின்று பார்வையிடும்

நெருப்பு

எரிமேடை.

30 வகை பிரியாணி

Posted: 07 May 2014 08:11 AM PDT

1. பைனாப்பிள் பிரியாணி [noguest]  தேவையானவை: பச்சரிசி - 2 கப், வில்லைகளாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, லெமன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், மில்க்மெய்ட் - அரை கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: பைனாப்பிளை மிக்ஸியில் நைஸாக அரைத்து நீர் சேர்த்து சக்கையை வடிகட்டி, 2 கப் அளவு சாறு தயாரித்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பச்சரிசியை லேசாக வறுத்து, ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். சர்க்கரையுடன் ...

ஒரு குடையில் இருவர்...!! { கவிதைகள் }.

Posted: 07 May 2014 07:36 AM PDT


*
கோடை மழை
கோடி நன்மை.
*
அறைகுறையாய் நனைந்து
ஒரு குடையில் இருவர்.
*
மழையில் நனைந்து ஒடுகிறார்கள் மனிதர்கள்
மெல்ல நகர்ந்துப் போகின்றன எருமைகள்.
*
வயல்கள் நிறைய தண்ணீர்
நன்றி சொல்கின்றன தவளைகள்.
*
வானம் வெளுத்து விட்டது
மீண்டும் வருகிறது மேகக் கூட்டம்.
*

30 வகை கொழுக்கட்டை

Posted: 07 May 2014 07:35 AM PDT

புரோட்டீன் கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு  -  ஒரு கப், சோயா பீன்ஸ் - அரை கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை, தண்ணீர் - ஒன்றரை கப்,  எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சோயா பீன்ஸை ஊற வைத்து, ரவை போல கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து இதனுடன் கலக்கவும். கடாயில் ...

பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை

Posted: 07 May 2014 07:30 AM PDT

இயற்கை மருத்துவமுறைகளில் பழமையானவை சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளாகும். இவை அனைத்தும் ஒன்று சேர அமைந்திருக்கும் ஒரேயொரு மருத்துவமனை அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை. 1970ம் ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து அரும்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. இந்தியாவிலேயே இயற்கை மருத்துவ முறையில் சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி ஆகியவை ஒன்றாக அமைந்திருக்கும் ஒரே மருத்துவமனை. இங்கு தினமும் சுமார் 2 ஆயிரத்திற்கும் ...

வாழ்க்கை என்பது யாதெனில் . . . . .

Posted: 07 May 2014 07:21 AM PDT

வாழ்க்கை என்பது யாதெனில் . . . . .
சிலருக்கு வரம்!
பலருக்கோ சாபம்!
சில வேளைகளில்!
ஆனந்தம் அரங்கேறும் அரங்கம்!
பல வேளைகளில்!
பகிர முடியாத அந்தரங்கம்!
கிடைக்காது என்றபோது கிடைக்கும் வரம்!!
கிடைக்கும் என்றபோது தொலையும் சாபம்!! . . . .  .

ஆண்டவனே அனுபவம்!

Posted: 07 May 2014 07:07 AM PDT


- எழுத்தாளர் பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' நாவலில் இடம் பெற்ற கவிதை.

மீதமான உணவு பொருட்கள் வைக்க தெருவில் பிரிட்ஜ் வைத்த சவூதி அரேபிய நாட்டவர்!

Posted: 07 May 2014 06:46 AM PDT

கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய ஒரு செயல்: மீதமான உணவு பொருட்கள் வைக்க தெருவில் பிரிட்ஜ் வைத்த சவூதி அரேபிய நாட்டவர்! மிகுதியான உணவு பொருட்களை வீணாக குப்பை தொட்டியில் எறிவதை தவிர்க்கவும் உணவில்லாத ஏழைகளுக்கு உதவும் வகையில் தனது வீட்டுக்கு முன்பாக ஒரு குளிர் சாதன பெட்டியை வைத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் மீதமுள்ள உணவுகளை கொண்டு வந்து இந்த குளிர் சாதனபெட்டியில் வைக்கும்படியான வசதியை செய்து கொடுத்திருக்கிறார்... உண்மையில் இவரது சிந்தனையும் மனித நேயமும் பாராட்டத்தக்கது...! இந்தியாவிலும் ...

மழை .. . . .

Posted: 07 May 2014 06:34 AM PDT

மழை மனித குலத்தின் வளமையின்
வறுமை தீர ! . . . .
தெய்வம் தந்த கொடை
மனிதா அதற்கு எதிராக பிடிக்காதே
. . . . கறுப்பு குடை!
உன்னோடு கோபித்துக் கொண்டு அது கட்டினால் நடை!
நம் இயற்கை வளத்திற்கு கிடைக்குமோ விடை!! . . . .
நாம் கட்டிய அனணகளில் திறக்குமோ மடை!! . . . . .

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 07 May 2014 06:22 AM PDT

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 07 May 2014 02:41 AM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 07 May 2014 02:38 AM PDT

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

உறவு...!! { ஹைபுன் }

Posted: 06 May 2014 08:56 PM PDT


*
வீடு, பூட்டியிருந்தது. " எங்கே போயிருக்கிறார்கள் " என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தரார். " தெரியலேயே சார், எங்கே போறேன்னு யாரிடம் சொல்லிட்டுப் போறாங்க " என்று கொஞ்சம் கடுப்பாகவே பதில் சொன்னார். அவருக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ' நன்றி சார் ' என்று சொல்லிவிட்டு நகர்ந்தவர், பக்கத்திலிருந்த மரத்தடியின் அடியில் ஒதுங்கி நின்றார்.
*
பக்கத்து வீட்டுக்காரன் பகை
எதிர் வீட்டுக்காரன் நண்பன்
உறவுக்கு கைகொடுக்கிறது மரங்கள்.
*

ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Posted: 06 May 2014 07:26 PM PDT

ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதைவிட நுண்ணறிவியல் (Micro Science) என்பதுதான் என் முடிவு. இந்த அறிவியலைப் பற்றி தெரியாமல், பஞ்சாங்கத்தில் உள்ள சில அடிப்படை தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டுள்ள அரைகுறை ஜோதிடர் என்றுகூட அழைக்கத் தகுதியற்ற சில பேர்வழிகள் மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள். ஜோதிடப் பயிற்சி மையம் என்ற பெயரில் சில நபர்கள் தவறான வழியுடன் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களைமட்டும் சொல்லித் தருகின்றனர் நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல, கடந்த 14 ஆண்டுகளாக ஜோதிடத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™