Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 26 May 2014 01:46 PM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்

Posted: 26 May 2014 01:37 PM PDT

எதிர்பாராதது, பிரமிக்கத்தக்கது, பேரலை, சுனாமி, புதிய வரலாறு.. என்றெல்லாம் பல்வேறாக வர்ணிக்கப்பட்டிருக்கிற பாஜகவின் தேர்தல் வெற்றி, 30 ஆண்டுகளாக நடக்காத ஒரு அரசியல் அதிசயம்தான். லோக்சபையில் ஒரு தனிக் கட்சி மெஜாரிட்டி பலம் பெறுவது என்பது இப்போதுதான் நடந்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 336 இடங்களைப் பெற்றிருக்கிற பாஜக தானாகப் பெற்றுள்ள இடங்கள் 282. இந்த வெற்றி சாதாரணமாக அடையப்பட்டது அல்ல. காங்கிரஸ் மீது ஏற்பட்ட அதிருப்தி ஓட்டு இது என்று இதை சாதாரண அரசியல் நிகழ்ச்சியாகவும் ...

நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Posted: 26 May 2014 01:32 PM PDT

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றனர். மத்திய அமைச்சர்களாக 23 பேரும், மத்திய இணையமைச்சர்களாக 22 பேரும் என மொத்தம் 45 பேர் பதவியேற்றனர். பதவியேற்பு ...

புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் விவரம்

Posted: 26 May 2014 01:23 PM PDT

புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு விவரம் வருமாறு:– பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அளத்தங்கரை கிராமத்தில், பொன்னையா ஐயப்பன் – தங்ககனி தம்பதிக்கு மகனாக 1952–ம் ஆண்டு மார்ச் மாதம் 1–ந் தேதி பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்தார். நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், கல்லூரி படிப்பை விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லூரியில் முடித்தார். இங்கு பி.ஏ. பட்டம் பெற்று, பின்னர் ...

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964

Posted: 26 May 2014 01:21 PM PDT

ஜவகர்லால் நேரு உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1889-ஆம் ஆண்டு நவம்பர் 14-இல் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக பிறந்தார். சிறுவயதிலேயே ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெறவேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். ஜவகர்லால் நேரு, ஹார்ரோவிலுள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் ...

மோடியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்

Posted: 26 May 2014 01:12 PM PDT

நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி தனது அமைச்சர்களுக்கு பல்வேறு முக்கிய துறைகளை ஒதுக்கியுள்ளார். பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அமைச்சர்களின் துறைகள் பற்றிய விவரங்கள் கீழ்கண்டவாறு கேபினட் அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் - வெளியுறவுத்துறை, ஆனந்த் குமார் - பாராளுமன்ற விவகாரம் மற்றும் உரம், நிதின் கட்காரி - தரை வழி போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து துறை, சதானந்த கவுடா - ரயில்வே துறை, வெங்கைய நாயுடு - ஊரக வளர்ச்சி, ரவிசங்கர் பிரசாத் - தொலைத்தொடர்பு மற்றும் ...

' ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா... தன் பிள்ளை தானே வளரும் '

Posted: 26 May 2014 12:40 PM PDT

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்று ஒரு பழமொழி உண்டு. வழக்கம்போல் இந்த பழமொழிக்கும் பல வழிகளில் பொருள் கொள்கிறார்கள். இதன் உண்மையான பொருள் : இன்னொருவரின் மகளான மருமகளுக்கு சத்தான உணவுகளை உண்ணக்கொடுத்தால், அவள் வயிற்றில் வளரும் தன் பிள்ளையான பேரப்பிள்ளை நன்றாக வளரும் என்பதுதான் இந்த பழமொழியின் ஆழ்ந்த பொருள். அதாவது, கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணை நன்றாக கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்த பழமொழி. ஒரு கர்ப்பிணிப் பெண் கர்ப்பக்காலத்தில் 10 கிலோ எடை ...

பெண்குழந்தைக்கு "அ" மற்றும் "ஆ" வில் தொடங்கும் நல்ல தமிழ் பெயர்கள்

Posted: 26 May 2014 12:33 PM PDT

எங்கள் பெண்குழந்தைக்கு "அ" மற்றும் "ஆ" வில் தொடங்கும் நல்ல தமிழ் பெயர்கள் இருந்தால் கூறவும் .
நன்றி

விட்டதை பெற வேண்டும் பெற்றதை விட வேண்டும்

Posted: 26 May 2014 10:54 AM PDT

அடுத்தவர் குறை கூறி தன் குறை மறைத்து வாழ்ந்துடுவர் வளம் பெற்றிடுவார் பல பேர்!! பிறர் சிந்தனையில் வாழ்ந்து தன் சிந்தனை ஒடுக்கி தலை நிமிர்ந்து வாழ்வேன் என்று ஏமாறும் பல பேர்!! மற்றவருக்காய் தனை மாற்றி தன் சுகமிழந்து பெருமை காட்டி தாழ்ந்திடுவார் பல பேர்!! தினம் பல கடந்தும் திங்கள் பல தேய்ந்தும் தன்னிலை மாற்றாமல் தான்தோன்றியாய் வாழும் திருந்திடா ​ஜென்மமிவர்!! பிறந்ததின் பயனை பெற்றிடாது மாற்றான் குறை கூறி மனமதை நோகச் செய்து மதி கலங்கியே ...

கழற்சிங்க நாயன்மார்

Posted: 26 May 2014 10:29 AM PDT

பல்லவ நாட்டை கழற்சிங்கர் என்பவர் மணிகண்டப் பெருமானின் பேரருளால் அறநெறி குன்றாது அரசோச்சி வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களை வென்று வாகை சூடி பொன்னும் பொருளும் பெற்றார். இவ்வாறு பெற்ற பெரு நவநிதிகளை ஆலய வழிபாட்டிற்கும், அடியார்கள் வழிபாட்டிற்கும் பயன்படுத்தினார். ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானைச் சந்திக்க எண்ணினார். தமது பிராட்டியாருடனும், பரிவாரங்களுடனும் புறப்பட்டார். திருவாரூரை அடைந்த நாயன்மார் பிறைமுடிப் பெருமான் குடிகொண்டிருக்கும் பூங்கோயிலை அடைந்தார். ...

நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!!

Posted: 26 May 2014 09:40 AM PDT

புதுடில்லி: இது வரை இல்லாத வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று பா.ஜ., தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி பீடத்தில் அமர்கிறது. பா.ஜ.,வில் குஜராத்தை சேர்ந்த நரேந்திரமோடி இன்று மாலை 6.10 மணிக்கு பிரதமராக பதவியேற்று கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் திறந்த வெளி பந்தலில் மோடியுடன் அமைச்சர்களாக 44 பேர் பொறுப்பேற்று கொண்டனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மோடி பதவியேற்பு விழாவில் , மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரதீபாபாட்டீல் , துணை ஜனாதிபதி அன்சாரி, காங்கிரஸ் ...

நெசவாளி

Posted: 26 May 2014 08:45 AM PDT

காலையில் நாங்கள் தட்டும் கடப்பாறையின் ஓசையில்தான் அந்த கதிரவனே கண் விழித்துக் கொள்கிறான். நாடாக்கள் பாடும் போதெல்லாம் நாங்கள் ஆடுகிறோம். எங்கள் பாதங்கள்தான் மாறி மாறி மிதிக்கின்றன ஆனால் எங்களுக்கான பாதைகள் மட்டும் மாறாமலிருக்கின்றன. ஆள்பாதி ஆடைபாதி பழமொழி பழக்கப்பட்டதுதான் ஆனால் நாங்கள் ஆள் மட்டும் பாதியாய் போய்விட்டவர்கள் ஆடை ஆடையாய் "நெய்து நெய்தே" இழைக்கு இழை மணமுடித்து வைக்கும் பதிவுதி திருமணத்தை எங்கள் மனைவி முதல் சகோதரி வரை செய்து வைக்கின்றார்கள்.

தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து)

Posted: 26 May 2014 08:06 AM PDT

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''. மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' ...

பாண்டா கரடிக்கு தாதி தேவை: ரூ 19 லட்சம் சம்பளம்

Posted: 26 May 2014 04:02 AM PDT

சீனாவின் சிச்சுவான் மாகாண நிர்வாகம் சுவாரஸ்யமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்குள்ள ஒரு தீவில் பாண்டா கரடிகளை பராமரித்து, பாதுகாக்கும் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் உள்ள ஒரு கரடிக்கு 'தாதி'யாக இருந்து பராமரிக்க 22 வயதுக்கு மேற்பட்ட நபர் வேலைக்கு தேவை என்றும், தனது பராமரிப்பில் உள்ள பாண்டா கரடியின் சுக-துக்கங்களில் பங்கேற்கக்கூடிய மனநிலையும், தகுதியும் படைத்தவராக அந்தப் பணியாளர் இருக்க வேண்டும் என்றும் அந்த காப்பகம் அறிவித்துள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு கடந்த சனிக்கிழமை தொடங்கி, ...

பாதுஷா

Posted: 26 May 2014 01:47 AM PDT

பாதுஷா..மிகச்சிலரைத் தவிர பெரும்பாலானவர்களின் விருப்பமான இனிப்பு ..சந்தேகமில்லாமல் நான் பெரும்பாலானவர் பக்கம்தான்! இங்கே தென்னிந்திய இனிப்புகள் அதிகள் கிடைப்பதில்லை..இணையத்தின் உதவியோடு நான் செய்யும் மூன்றாவது பாதுஷா எக்ஸ்பெரிமென்ட் ...இது தான் பொங்கலுக்கு எங்க வீட்டு ஸ்வீட்! நல்லாயிருக்கா? பாதுஷா தேவையான பொருட்கள் மைதா மாவு / ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர் - 1கப் பேக்கிங் சோடா - 1/4ஸ்பூன் வெண்ணை - 115 கிராம் சர்க்கரை - 1 1/2கப் தண்ணீர் - 1/4 கப் கேசரி பவுடர் - 1/4 ஸ்பூன் எண்ணெய் ...

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!

Posted: 26 May 2014 01:26 AM PDT

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான். மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு ...

உதவி - wifi Modem is connected but not the internet -அருண்!

Posted: 26 May 2014 01:05 AM PDT

உறவுகளுக்கு வணக்கம்!

நன் Tilgin HG 1131 வைபி ரௌட்டர் உபயோகிறேன் கடந்த சில நாட்களாக வைபி கனெக்ட் ஆகுது ஆனால் நோ இன்டர்நெட் என்று மெசேஜ் வருகிறது கூகுளில் தேடி முயற்சி செய்து ஒன்றும் பலன் இல்லை.

கேபிள் ரௌட்டர் எல்லாம் unplug செய்து மீண்டும் இணைத்தேன்
1ஹௌர் கனெக்ட் ஆகியது மீண்டும் நோ இன்டெர் நெட் என்று வருகிறது .

தெரிந்தவர் உதவுங்கள் உறவுகளே! 

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Posted: 25 May 2014 11:11 PM PDT

*
நிர்மலமான பரந்த ஆகாயம்
எண்ணங்கள் கடந்த மனம்
வார்த்தைகளற்ற மௌனம்.
*
விசும்பை எட்டும்
குசும்புப் பேச்சு
கலக மொழி.
*
யார் வெறுத்தாலும் சரி
என்னைக் கவரும் அழகு நிறம்
காக்கையின் கருமை.
*
சொல்லடி படுவான் மனிதன்
கல்லடி படுவான்
கனி தரும் மாமரம்.
*
குறைந்தால் குறைபடுவார்கள்
மிகுந்தால் சபிப்பார்கள்
மண்ணில் இறங்கும் மழை.
*

ஆன்மீகச் சிந்தனைகள்...!!

Posted: 25 May 2014 09:51 PM PDT

*
ஆன்மீகச் சிந்தனைகள்
*
தெய்வத்தின் சொரூபம் அறிவுதான். இதை தெரிந்துக் கொள்வதற்கு தெய்வத்தின் அனுக்கிரகம் தேவை. – ஸ்ரீ நாராணய குரு.
*
மௌனமும் அமைதியும் நோய்க்கு மருந்து. – ஸ்ரீ அன்னை.
*
அருளின் உயர்ந்த வடிவம் மௌனம், அதுவே மிக உயர்ந்த உபதேசம்.-ஸ்ரீரமணர்.
*
பூரண மௌனமே உயர"ந்தப் பிராரத்தனை – ஓ'ஷோ.
*
சி்க்கலிலிருந்து சிக்கலற்று இரு. – தாவோ.
*
தொகுப்பு ; ந.க. துறைவன். வேலுர்.
*

பூக்களை அறிவோம்...!!

Posted: 25 May 2014 09:35 PM PDT

* பூ இல்லாமலேயே பழந்தோன்றும் அதிசயம் தெரியுமா? திருநெல்வேலி மாவட்டத்தில் ' பூவில்லாச் சுண்டன் ' என்ற பெயருடைய ஒரு வகை வாழைப் பழம் மிகவும் சிறப்பானது. இந்தப் பழம் {வாழைப் பழம்} வாழைப்பூ இல்லாமலேயே தோன்றுகின்றதாம். * மண்ணுக்குள் கரி, தங்கம், வைரம் இருப்பதைக் கண்டிருக்கிறீர்கள். மண்ணுக்குள் மலரும் மலரைக் கண்டதுண்டா? ரீசன் டோலியா கார்ட்னர் என்ற செடி மண்ணுக்குள் மணம் வீசும் மலரைக் கொண்டது. இதை ஆஸ்திரேலியா காடுகளில் நாம் காணலாம். * மத்திய சீனாவில் உகாஸ் என்னும் மலைப்பாங்கான காடுகளில் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (29)

Posted: 25 May 2014 09:28 PM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

தெய்வப் புலவர் சேக்கிழார்!

Posted: 25 May 2014 08:36 PM PDT

தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த செல்வம்மலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி சேர, சோழ, பாண்டிய மண்டலங்களோடு கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் ஆகியவற்றுடன் ஐந்து மண்டலங்களாகப் பண்டைத் தமிழகம் விளங்கிற்று. இது தென்னார்க்காடு மாவட்டத்தின் வட பகுதி தொடங்கி, சித்தூர் மாவட்டம் வரை விரிந்து பரந்து விளங்கியது. சோழமன்னர் ஆட்சியில் சயங்கொண்ட சோழமண்டலம் என வழங்கப்பெற்றது. பாலாறு பாய்ந்து வளம்பெருக்கும் ...

ந.க. துறைவன் புதுக்கவிதைகள்.

Posted: 25 May 2014 08:32 PM PDT

* மஞ்சள் வெயில்…!! * மழை நின்ற பின் அழகாகவிருந்தது அந்தி மஞ்சள் வெயில் *. கூடு திரும்பின இரைதேடி அலுத்தப் பறவைகள். ஆடுகள் மாடுகள் வீடு திரும்பின பொழுதோடு மேய்ந்து வயிறு நிரம்பிய திருப்தியோடு, * வேலைக்குச் சென்றவர்கள் களைப் போடுத் திரும்பினார்கள் தேவையானப் பொருட்களை வாங்கிச் சுமந்து இரவு உணவு சமைப்பதற்கு, * மழை வரும் போல மேகமூட்டம் விலகவில்லை இன்னும், மழையில் நனைந்து சுகிக்கலா மென்று எதிப்பார்த்திருக்கின்ற மௌன மரங்கள். * விடிய விடிய பெய்து தீர்த்தது நள்ளிரவு தொடங்கிய ...

கோயில்களில் தாய்மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும்

Posted: 25 May 2014 06:10 PM PDT

கோயில்களில் தாய்மொழியில் அர்ச்சனை செய்வதுதான் சிறந்த வழிபாட்டு முறை என எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழ துணை வேந்தர் பொன்னவைக்கோ கூறினார். சென்னை வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) பட்டயப் படிப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொன்னவைக்கோ பேசியது: மனிதன் தன்னை நல்வழிப்படுத்துவதற்காக கடவுள் வழிபாடு செய்து வருகிறான். அதன் மூலம் ஒருவன் தனது ஐம்புலன்களையும் அடக்கி, செம்மையடைய முடியும். இந்த வழிபாட்டு முறைக்கு அவசியமாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™