Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பா.ஜ.க. நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மோடி பிரதமராக தேர்வு

Posted: 19 May 2014 11:45 PM PDT

மோடியை பிரதமராக தேர்வு செய்வதற்கான பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம் டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் தொடங்கியது. இக்கூட்டத்தில் அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நரேந்திரமோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மோடி பிற்பகலில்

காங்கிரஸ் தோல்விக்கு பவன்கல்யாண் காரணமில்லை: சிரஞ்ஜீவி

Posted: 19 May 2014 11:26 PM PDT

சீமாந்திரா மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இங்கு மொத்தம் உள்ள 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் பெரும்பான்மையான காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். மாநிலத்தை பிரித்ததால் கோபம் அடைந்த ஆந்திர மக்கள் காங்கிரசை தோற்கடித்து சமாதி கட்டி விட்டதாக கூறப்பட்டது. மேலும் ஜனசேனா என்ற புதிய கட்சியை தொடங்கி காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்த மத்திய

சீமாந்திரா தலைநகர் விஜயவாடா: டெல்லியை போல் வடிவமைக்க திட்டம்

Posted: 19 May 2014 10:50 PM PDT

சீமாந்திரா மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு சீமாந்திரா மாநிலத்தின் முதல்–மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் அங்கு பதவி ஏற்க சந்திரபாபுநாயுடு விரும்புவில்லை. சீமாந்திராவில் உள்ள விஜயவாடாவில் பதவி ஏற்க திட்டமிட்டு உள்ளார். இதற்கான ஏற்பாடுகள்

பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் ஆதரவாளர் தேர்வு

Posted: 19 May 2014 10:44 PM PDT

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. மோடி பிரதமராக எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கூட்டணியை அக்கட்சி முறித்துக் கொண்டதால் தான் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நிதிஷ்குமார் முதல்–மந்திரி பதவியில் இருந்து விலகினார். அவரது ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிதிஷ்குமாரையே மீண்டும் முதல்– மந்திரியாக தேர்வு செய்தனர். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.

காஷ்மீரில் 400 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் சாவு

Posted: 19 May 2014 10:35 PM PDT

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் புறப்பட்து. டிக்தோல் என்ற இடத்தில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மலைப்பாதையில் சென்ற போது திடீர் என்று நிலை தடுமாறி 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 17 பேல் உடல் நசுங்கி பலியானார்கள். இவர்களில் 6 பேர் பெண்கள். 34 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவம் ரிசர்வ் போலீஸ் படை மற்றும்

கொல்லம் அருகே ரெயிலில் சிறுமியை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது

Posted: 19 May 2014 10:34 PM PDT

கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி நேற்று இரவு ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தவர்களிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்களை வாங்கி சரி பார்த்து கொண்டிருந்தார். அப்போது முன்பதிவு செய்யாத டிக்கெட் வைத்திருந்த ஒரு வாலிபர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தது தெரிய வந்தது. கொல்லம் பகுதியை சேர்ந்த

புதிய மந்திரிகள் யார்?: சூதாட்டம் சூடு பிடித்தது

Posted: 19 May 2014 10:27 PM PDT

16வது பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்த போது, அதை அடிப்படையாக வைத்து சூதாட்டம் நாடெங்கும் விறுவிறுப்பாக நடந்தது. நிறைபேர் பா.ஜ.க. எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்து கூறி பணத்தை வென்றனர்.

குஜராத் புதிய முதல்–மந்திரியாக ஆனந்திபென் தேர்வாக அதிக வாய்ப்பு

Posted: 19 May 2014 10:26 PM PDT

குஜராத் முதல்–மந்திரியாக இருக்கும் நரேந்திர மோடி இன்று முறைப்படி பிரதமர் பதவிக்கு பா.ஜ.க. எம்.பி.க்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியல் சட்டப்படி ஒரு நபர் ஒரே நேரத்தில் எம்.பி.யாகவும் எம்.எல்.ஏ.யாகவும் பதவி வகிக்க முடியாது. எனவே மோடி குஜராத் முதல்–மந்திரி பதவியையும் மணிநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளார்.

கேரளாவில் பஸ் கட்டணம் உயர்வு

Posted: 19 May 2014 10:19 PM PDT

கேரள மந்திரிசபை கூட்டத்தில் கடந்த வாரம் நடந்த பஸ் கட்டண உயர்வு தொடர்பான தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. டீசல் விலை உயர்வு காரணமாகவும், போக்குவரத்து கழகம் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் கட்டண உயர்வு 20–ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பிரதமர் பதவி ஏற்கும் 3-வது முதலமைச்சர் மோடி

Posted: 19 May 2014 10:05 PM PDT

பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று எம்.பி.க்கள் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமராக) முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அவர் அடுத்த வாரம் தொடக்கத்தில் பிரதமராக பதவி ஏற்கிறார். 28–ந்தேதி அமாவாசை என்பதால் அதற்குள் அவர் பிரதமராக பதவி ஏற்பார். மோடி தற்போது குஜராத் மாநில முதல்–மந்திரியாக இருக்கிறார். பிரதமராக பதவி ஏற்கும் முன் முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறார். நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடி 3–வது முதல்–மந்திரியாவார். இதற்கு முன் தேவேகவுடா, நரசிம்மராவ் ஆகியோர் முதல்–மந்திரியாக இருந்து பின்னர் பிரதமராக பொறுப்பேற்றுள்ளனர்.

பா.ஜனதா கூட்டணி கட்சி கூட்டம்: விஜயகாந்த்–அன்புமணி பங்கேற்பு

Posted: 19 May 2014 10:03 PM PDT

டெல்லியில் இன்று பா.ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டணியில் கலந்து கொள்ள கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்து இருந்தது. தமிழ்நாட்டில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்திருந்த தே.மு.தி.க, ம.தி.மு.க., பா.ம.க., ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றின் தலைவர்களுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடப்பட்டிருந்தது.

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மறு ஆய்வு மனு தமிழக அரசு தாக்கல்

Posted: 19 May 2014 08:33 PM PDT

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, மத்திய அரசு, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பேரவை, மிருக நல வாரியம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய

சந்திரபாபு நாயுடு திருப்பதியில் சாமி தரிசனம்

Posted: 19 May 2014 04:53 PM PDT

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் ஆகியோருடன் நேற்று ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, காலை 6 மணியளவில் திருமலைக்கு

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமா?

Posted: 19 May 2014 04:42 PM PDT

தமிழகத்தில் இருந்து பாரதீய ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பாராளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து தெரிவித்து விட்டு பிற்பகல் மோடியையும் சந்தித்தார். பின்னர் டெல்லியில் நிருபர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது

உலக தலைவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த மோடி

Posted: 19 May 2014 01:50 PM PDT

இந்தியாவின் புதிய பிரதமராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தனது 'டுவிட்டர்' பக்கம் மூலம் மோடி நன்றி தெரிவித்துள்ளார்

நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் தூதர் பேட்டி

Posted: 19 May 2014 01:27 PM PDT

புதுடெல்லி, மே 20- இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் நேற்று டெல்லியில் இந்திய பத்திரிகையாளர் சங்க கூட்டத்தில் பேசியதாவது:- பாகிஸ்தானுக்கு விருந்தினராக வர இருக்கும் நரேந்திரமோடியை வரவேற்க நாங்கள் (பாகிஸ்தான்) தயாராக இருக்கிறோம். எங்களது பிரதமர் நவாஸ் செரீப்

நாட்டின் பாதுகாப்பு நிலைமை: மத்திய உள்துறை செயலாளர் மோடியுடன் ஆலோசனை

Posted: 19 May 2014 12:33 PM PDT

நாட்டின் பிரதமராக பொறுபேற்கவுள்ள நரேந்திர மோடியை நேற்று சந்தித்த மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அனில் கோஸ்வாமி, நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் நக்சல்களின்

சந்திரபாபு நாயுடுவின் அயராத உழைப்பு: ஆந்திர கவர்னர் பாராட்டு

Posted: 19 May 2014 12:25 PM PDT

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் அயராத உழைப்புக்கு ஆந்திர கவர்னர் நரசிம்மன் பாராட்டு தெரிவித்துள்ளார். சீமாந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு

ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் மோடி

Posted: 19 May 2014 11:55 AM PDT

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மோடி தலைமையிலான அமைச்சரவையில் யார், யாரை மந்திரிகளாக சேர்ப்பது என்பது தொடர்பான ஆலோசனை

ஜாமின் கிடைத்தும் தாயின் சிதைக்கு கொள்ளி போட முடியாமல் தேஜ்பால் ஏமாற்றம்

Posted: 19 May 2014 11:26 AM PDT

பிரபல பத்திரிகையாளரும் தெகல்கா ஆசிரியருமான தருண் தேஜ்பால், தன்னிடம் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட தேஜ்பால் தற்போது கோவா சிறையில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™