Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வெள்ளைக் கொடி சம்பவம்! நவநீதம்பிள்ளைக்கு விசேஷ அறிக்கை சமர்ப்பிப்பு!

Posted: 19 May 2014 11:37 PM PDT

Navaneetham-pillai

Navaneetham-pillaiவெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விசேட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையர் உள்ளிட்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்களினால் 42 பக்கங்களைக் கொண்ட போலி அறிக்கை நேற்று நவநீதம்பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த இலங்கையருக்கு சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச, மேஜர் ஜெனரல்களான சாவேந்திரா சில்வா, ஜகத் டயஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹனே ஆகியோர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தயாரித்த இலங்கையரை புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர். குறித்த நபர் நவநீதம்பிள்ளைக்கு தகவல்களை வழங்குபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட போரின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்த புலி உறுப்பினர்களை படையினர் சுட்டுக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சிறிலங்காவுக்கு பதிலடியாக பட்டியலை வெளியிட்டது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: சந்திரிக்காவும் உள்ளடக்கம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சட்டம் சமாதானம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க விசேஷ ஆணைக்குழு!

Posted: 19 May 2014 11:29 PM PDT

Rajabakshe

Rajabaksheசட்டம் சமாதானம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க விசேட ஆணைக்குழுவொன்று நிறுவப்பட உள்ளது. தற்போது நிலவி வரும் கடும்போக்குவாத பிரச்சினைகள், இன, மதப் பிரச்சினைகள் போன்றன தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தவும் ஆலோசனை வழங்கவும் இந்த ஆணைக்குழு நிறுவப்பட உள்ளது. சட்டம் சமாதானம் தொடர்பான அமைச்சரான ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு தொடர்பிலான யேசானைத் திட்டம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 9 எனவும், உச்சபட்ச எண்ணிக்கை 11 எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் எனவும், அமைச்சின் செயலாளர் இதற்கு தலைமை தாங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சட்டவல்லுனர்கள், போலிஸ் அதிகாரிகள், சமூக விஞ்ஞானம் தொடர்பிலான நிபுணத்துவ அறிவு கொண்டவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த ஆணைக்குழுவில் அங்கம் வகிக்க உள்ளனர். எனினும் இதற்கான பிரதிநிதிகள் பெயரிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்! மனித உரிமை கண்காணிப்பகம்

Posted: 19 May 2014 11:20 PM PDT

ina-sabai

ina-sabaiஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் விசாரணை ஆணைக்குழு ஒன்றை நிறுவி குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பரிந்துரையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் வலய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். போர்க் குற்றச் செயல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் முனைப்புக்களுக்கு இலங்கை அரசாங்கம் இடமளிக்க வேண்டும். நாட்டில் ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் ஒடுக்கப்படுகின்றனர். உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை விளங்கிக்கொண்டு அவற்றுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்களை வழங்க வேண்டுமென பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மஹிந்த ராஜபக்ச பயந்துகொண்டு சீனாவுக்கு செல்லவில்லை: ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல!

Posted: 19 May 2014 11:13 PM PDT

Rajabaksa

Rajabaksaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயந்துகொண்டு சீனாவுக்கு செல்லவில்லை. ஜனாதிபதி செல்லாவிட்டால் சீனா கோபித்துக் கொள்ளும் என்தற்காகவே செல்கிறார் என இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அத்துடன் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்த விஜயம் அமைந்துள்ளது. இந்நிலையில், ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், இந்தியாவில் புதிய பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு செல்வதற்கான காரணம் என்ன என்று வினவினர். அதற்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சீனாவில் இன்று ஆரம்பமாகி 22 ம் திகதி நிறைவடையவிருக்கின்ற ஆசிய நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நான்காவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அங்கு நேற்று பயணமானார் என தெரிவிக்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

போர் வெற்றி நிகழ்வைப் புறக்கணித்ததை உறுதிப்படுத்திய கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட்!

Posted: 19 May 2014 11:06 PM PDT

John-Baird

John-Bairdஇலங்கைய அரசாங்கத்தின் 5ம் ஆண்டு போர் வெற்றி நிகழ்வைப் புறக்கணித்ததை கனடா அரசாங்கம், உறுதி செய்துள்ளது. போர் வெற்றி நிகழ்வை கனடா புறக்கணித்ததாக இலங்கைக்கான கனடா தூதுவர் ஷெல்லி வைற்றிங் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தநிலையில், கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் அதனை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றார். அரசாங்கத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டங்களை கடந்த வருடங்களிலும் கனடா புறக்கணித்தது எனத் தெரிவித்த கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட், இதற்கான காரணத்தை கொழும்பிலுள்ள கனடிய தூதுவர் ஷெல்லி வைட்டிங் உள்ளுர் ஊடகங்களுக்கு விளக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். தற்போதைய நிலையில் இலங்கைக்கு தேவையாக இருப்பது நல்லிணக்க முயற்சிகளே எனத் தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர், அதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் உதவப்போவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார். இருந்தபோதிலும் மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளின் இந்தக் கருத்தைப் புறக்கணித்ததுடன், ஒவ்வொரு வருடமும் இந்த வெற்றி விழா நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்ரோவ் தடாகத்திற்குள் இருந்து எடுக்கப்பட்ட குழந்தை கனடாவில் பரபரப்பு!

Posted: 19 May 2014 11:02 PM PDT

Accident

Accident21-மாத ஆண் குழந்தை ஒன்று கட்டுமான பணி நடந்துவரும் தடாகம் ஒன்றிற்குள் இருந்து எடுக்கப்பட்டதாக யோர்க் பிராந்திய போலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் திங்கள்கிழமை மாலை 5.30-மணியளவில் ஸ்ரோவ்வில் என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் நடந்துள்ளது. குழந்தைக்கு மூச்சும் இதயதுடிப்பும் இருப்பதாகவும் ஆனால் ஆபத்தான நிலையில் உள்ளதெனவும் கூறப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர். வன்முறை சம்பவம் எதுவும் நடந்ததாக சந்தேகம் இல்லை என போலிசார் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இசையில் வன்முறையைப் புகுத்தாதீர்கள் இளையராஜா வேண்டுகோள்!

Posted: 19 May 2014 05:38 AM PDT

illayaraja

illayarajaஇசையில் வன்முறையைப் புகுத்தாதீர்கள் என்று இசைஞானி இளையராஜா கேட்டுக் கொண்டார். ஈழப் போரில் சிங்கள ராணுவத்தால் சிதைத்துக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கையை, போர்க்களத்தில் ஒரு பூ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளனர். இந்தப் படத்தை தெலுங்குத் தயாரிப்பாளர் குருநாத் சல்சானி தயாரித்துள்ளார். கன்னடத்தில் பல படங்கள் இயக்கிய கு கணேசன் இயக்கியுள்ளார். ஒரு தமிழ்ப் பெண் போராளியின் வீர வரலாற்றைப் பதிவு செய்ய ஒரு தமிழ்த் தயாரிப்பாளர் கூட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 5 பாடல்கள். ஈழ மண்ணில் நேர்ந்த கோர அவலங்களை தன் குரலிலேயே ஒரு பாடலாகப் பதிவு செய்துள்ளார் இளையராஜா. பாடலைக் கேட்ட அத்தனைபேரும் கண்கலங்கிவிட்டனர். விழாவில் இளையராஜா பேசுகையில், "ஒரு படத்துக்கு இசையமைக்க நான் ஒப்புக்கொள்ள ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன்.. கேட்டவுடன் அந்தப் படத்தை ஒப்புக் கொள்ளலாம் என்று தோன்றியதும் சரி என்று சொல்லிவிடுவேன். அப்படித்தான் இந்தப் படத்தின் கதையைப் பற்றி இயக்குநர் கணேசன் சொன்னதும் நான் ஒப்புக் கொண்டேன். இதில் ஒரு பாட்டு, 'எனைத் தேடி வந்து கொஞ்சுகின்ற இசையே... கைமாறு என்ன நானுக்கு தருவேன்-னு ஆரம்பிக்கும். அது நானே எழுதிய வரிகள்தான். அதாவது என்னைத் தேடிவந்து, என் மூலம் வெளிப்படுகிற இசைக்கு நான் என்ன கைம்மாறு தரமுடியும். இசையை நான் தேடிப் போகவில்லை. அப்படியெல்லாம் போகவும் முடியாது. அதுதான் தேடி வரவேண்டும். அது என்னைத் தேடிவந்து என் மூலம் வெளிப்படுகிறது... இங்கே பேசிய பலரும் புத்தம் புதுக் காலை மாதிரி எனது பாடல்களில் ஏதாவது ஒன்றைக் கேட்ட பிறகுதான் அன்றைய நாளைத் தொடங்குவதாகச் சொன்னார்கள். எல்லோருக்கும் ஏதோ ஒரு பாட்டு நிச்சயம் இருக்கும். உங்களுக்கு என் பாட்டுதான். அதைவிட்டால் வேறு இல்லை. இந்த உலகில் இசைதான் ஒரு மனிதனுக்கு இதமான ஆறுதல். எந்த வன்முறையையும் சமாதானமாக்கும் வலிமை கொண்டது இசை. அதில் வன்முறைக்கு இடமே இல்லை. ஆனால் சிலர் வலிந்து வன்முறையைத் திணிக்கிறார்கள். ஒரு பாடலில் தேவையே இல்லாமல் ஒரு கடுமையான சத்தம் சேர்ப்பார்கள்.. இதுதான் வன்முறை. இசையில் எதுக்குய்யா வன்முறை?," என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மலையாளப் படங்களில் நடிக்க ஆசைப்படும் சமந்தா!

Posted: 19 May 2014 05:32 AM PDT

Samantha

Samanthaநடிகை சமந்தாவுக்கு மலையாளப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளதாம். தமிழில் சொல்லிக் கொள்கிற மாதிரி வெற்றிப் படங்களைக் கொடுக்காவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவு என்னவோ சமந்தாவுக்கு அதிகமாகத் தான் உள்ளது. அதனால் தான் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளது போலவே தமிழிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது தமிழில் விஜய்யுடன் 'கத்தி' படத்திலும், சூர்யாவுடன் 'அஞ்சான்' படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் சமந்தா. இது போக கோலி சோடா படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரமை வைத்து விஜய் மில்டன் இயக்கவுள்ள புதிய படத்திற்கும் சமந்தா தான் நாயகி எனச் சொல்லப் படுகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு தற்போது மலையாளத்திலும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளதாம். இதனால் மலையாளத்திலும் கதைகளை கேட்டு வருகிறாராம் சமந்தா. நல்ல சவாலான கதாபாத்திரம் கிடைத்தால் விரைவில் நல்ல அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. சமந்தாவின் அம்மா கேரளாவின் ஆலப்புலாவைச் சேர்ந்தவர். அப்பா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

காதலிக்கு காதலன் கொடுத்த பயங்கர ஷாக்..

Posted: 19 May 2014 05:25 AM PDT

Novio-cae-y-muere-en-plena-propuesta-de-matrimonio

Novio-cae-y-muere-en-plena-propuesta-de-matrimonio

This posting includes an audio/video/photo media file: Download Now

எத்தனையோ மார்க்கெட் பார்த்திருப்பீங்க….. ஆனால் பணம் மார்க்கெட் பார்த்துண்டா?

Posted: 19 May 2014 05:21 AM PDT

Money

Money

This posting includes an audio/video/photo media file: Download Now

சன்ரைசர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Posted: 19 May 2014 05:16 AM PDT

Kolkata-knight-riders

Kolkata-knight-ridersசன்ரைசர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷிகர் தவான் விலகிக் கொண்டதை அடுத்து, அவருக்கு பதிலாக டேரன் சம்மி தலைமை பொறுப்பேற்றார். எஞ்சியுள்ள ஆட்டங்களுக்கும் அவரே கேப்டனாக நீடிப்பார் என ஐதராபாத் அணி நிர்வாகம் அறிவித்தது.தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், தவான் களமிறங்கினர். பிஞ்ச் 8 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் மார்கெல் வசம் பிடிபட்டார். தவான் 19 ரன் எடுத்த நிலையில், சுனில் சுழலில் கம்பீரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நமன் ஓஜா 22 ரன், லோகேஷ் ராகுல் 14 ரன்னில் வெளியேறினர்.அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 34 ரன் விளாசி (18 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) உமேஷ் வேகத்தில் யூசுப் பதானிடம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் இர்பான் - டேரன் சம்மி ஜோடி ஸ்கோரை உயர்த்த போராடியது. சம்மி 7 ரன், கரண் 4, ஸ்டெயின் 1 ரன்னில் வெளியேறினர். ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்தது.இர்பான் 23 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் உமேஷ் 3, ஷாகிப் 2, சுனில், சாவ்லா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே எளிய இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. அந்த அணி 19.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக உத்தப்பா 40, யூசுப் பதான் 39 ரன்கள் எடுத்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சூப்பர் கிங்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது பெங்களூர்

Posted: 19 May 2014 05:07 AM PDT

super-kings-RCB

super-kings-RCBசென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது. ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ஸ்மித், மெக்கல்லம் களமிறங்கினர். மெக்கல்லம் 19 ரன் எடுத்து ஆரோன் வீசிய 5வது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 4வது பந்தில் ஸ்மித்தும் (9 ரன்) வெளியேற, சென்னை அணி 29 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.இந்த நிலையில், சுரேஷ் ரெய்னா - டேவிட் ஹஸி ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் இணைந்து 75 ரன் சேர்த்தனர். ஹஸி 25 ரன் எடுத்து (29 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) முரளி சுழலில் ஸ்டார்க் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் டோனி 7 ரன் மட்டுமே எடுத்த நிலையில், அபு நேச்சிம் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடி காட்டிய ரெய்னா 35 பந்தில் அரை சதம் விளாசினார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது. ரெய்னா 62 ரன் (48 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் பந்துவீச்சில் ஆரோன் 2, முரளிதரன், அபு நேச்சிம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. கிறிஸ் கேல், பார்திவ் பட்டேல் இருவரும் துரத்தலை தொடங்கினர். பார்திவ் 10 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ரெய்னா வசம் பிடிபட்டார். கேல் - கேப்டன் கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்தது. ஆடுகளம் சுழலுசுக்கு சாதகமாக இருந்ததால் அஷ்வின், பத்ரி, ரெய்னா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூர் வீரர்கள் திணறினர். கோஹ்லி 27 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் விக்கெட் கீப்பர் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து, கிறிஸ் கேலுடன் இணைந்த டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாட பெங்களூர் ஸ்கோர் வேகம் எடுத்தது. இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறிய கேல் 46 ரன் எடுத்து (50 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) அஷ்வின் சுழலில் கிளீன் போல்டானார். டிவில்லியர்ஸ் 28 ரன் விளாசி (14 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்க, சென்னை அணிக்கு சற்று நம்பிக்கை துளிர்த்தது.ஜடேஜா வீசிய 19வது ஓவரில் 4 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து நெருக்கடியை அதிகரித்தார். கடைசி ஓவரில் பெங்களூர் வெற்றிக்கு 10 ரன் தேவை என்ற பரபரப்பான நிலையில், டேவிட் ஹஸி வீசிய முதல் பந்தையே யுவராஜ் சிக்சருக்கு தூக்கி அசத்தினார். அடுத்தடுத்த பந்துகளில் 2, 1 ரன் கிடைத்தது. 4வது பந்தில் ராணா அவுட் ஆனார். இரண்டு பந்தில் ஒரு ரன் தேவைப்பட, அபு நேச்சிம் அபாரமாக பவுண்டரி விளாசி வெற்றியை வசப்படுத்தினார். பெங்களூர் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து வென்றது. யுவராஜ் 13 ரன், அபு நேச்சிம் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் அஷ்வின், ஹஸி தலா 2, ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர். டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 5வது வெற்றியை பதிவு செய்த பெங்களூர் 10 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் போகோ ஹரம் தீவிரவாதிகளுக்கு எதிராக போர்!

Posted: 19 May 2014 05:01 AM PDT

Naigiriya

Naigiriyaநைஜீரியாவில் 223 பள்ளி சிறுமிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ளனர். தீவிரவாதிகளை அழிக்க முழு அளவில் போர் நடத்தப்படும் என்று ஆப்ரிக்க நாடுகள் அறிவித்துள்ளன. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடக்கு பகுதியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். நைஜீரியாவை முழு இஸ்லாமிய நாடாக அறிவிக்க வேண்டும். மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்ற கூடாது என்று கூறி, போகோ ஹரம் தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு முதல் இதுவரை தீவிரவாதிகளின் தாக்குதலில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து 223 சிறுமிகளை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். சிறையில் உள்ள சில கூட்டாளிகளை விடுவித்தால் சிறுமிகளை விடுவிக்கிறோம். இல்லாவிட்டால், அவர்களை செக்ஸ் அடிமைகளாக சந்தையில் விற்று விடுவோம் என்று தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டனர். இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சிறுமிகளின் இருப்பிடத்தை அறிந்து மீட்க, நைஜீரிய படைகளுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் உதவ முன் வந்தன. இந்த சூழ்நிலையில், போகோ ஹரம் தீவிரவாதிகள் மீது முழு அளவில் போர் நடத்தி அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க நைஜீரியாவுடன் ஆப்ரிக்க நாடுகளான பெனின், கேமரூன், நைஜர் கூட்டாக அறிவித்துள்ளன. இந்த நாடுகளுக்கு அமெரிக்கா உள்பட பல வளர்ந்த நாடுகள், புலனாய்வு தகவல்களை அளித்து உதவும். போகோ ஹரம் தீவிரவாதிகள் நைஜீரியாவில் மட்டுமல்ல. அவர்கள் அல் கய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்படுகின்றனர். அவர்களை ஒடுக்க வேண்டும் என்று நைஜீரிய அதிபர் குட்லக் ஜோனாத் தன் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

போர்டலேஷாவில் பஸ் விபத்து: 20 பேர் பலி

Posted: 19 May 2014 04:26 AM PDT

Braze-bus-accident

Braze-bus-accidentபிரேசில் நாட்டில் உள்ள கடற்கரை நகரான போர்டலேஷாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென ப்ரேக் போட்டதால் பஸ் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதாக விபத்தில் இருந்து தப்பிய ஓட்டுனர் கூறினார். பஸ் விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 2பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன. மேலும் காயமடைந்த 17 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தொலைபேசியில் விடுதலைப் புலிகளின் பாட்டு! ஒருவர் கைது

Posted: 19 May 2014 04:18 AM PDT

Arrest

Arrestவிடுதலைப் புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மட்டக்களப்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கைப்பற்றிய கையடக்க தொலைபேசியில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் சேமித்து வைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் மகிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதிகள் பங்கேற்பு!

Posted: 19 May 2014 04:14 AM PDT

modi-Rajabaksa

modi-Rajabaksaஇந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதிகள் குழு கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. ஜனாதிபதியின் இந்த விசேட தூதுக்குழுவினர் இந்தியாவின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடந்த புதன் கிழமை பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த உரையாடல் இருவருக்கும் இடையில் சுமூமுகமான உரையாடலாக இருந்தது என ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். இந்த நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நரேந்திர மோடிக்கு உத்தியோகபூர்வமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அதிகரிப்பது இருநாடுகளுக்கும் நலன்களுக்கு காரணமாக அமையும் என அதில் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடா வீட்டில் 19 வெடிக்கக்கூடிய சாதனங்கள் இளைஞர் ஒருவர் கைது!

Posted: 19 May 2014 03:33 AM PDT

Canada-house

Canada-houseமொன்றியலிலுள்ள ஒரு வீட்டில் 19 வெடிக்கக்கூடிய சாதனங்கள் கனடிய வெடிகுண்டுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என Toronto Sun தெரிவித்திருக்கின்றது. குறிப்பிட்ட சம்பவமானது சனிக்கிழமை மொன்றியலின் வடபகுதியிலுள்ள வீடொன்றில் கண்டெடுத்திருக்கின்றார்கள் எனத் தெரிகிறது. குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார் எனவும் தெரிவித்திருப்பதுடன் அங்கிருந்து ஒரு கணனி மற்றும் தொடர்பு சாதனங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டிருப்பதாகப் பொலிசார் தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றிpல் சமுகமளிப்பார் எனவும் தெரியவருகிறது. மொன்றியல் பொலிசார் கருத்துத் தெரிவிக்கையில் 911 இலக்கத்திற்குக் கிடைத்த தொலைபேசி அழைப்பினால் குறிப்பிட்ட இடத்தை தாம் அடையக்கூடியதாகவிருந்தது எனத் குறிப்பிட்டுள்ளார்கள். குறிப்பிட்ட வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் உடனடியாக அருகிலுள்ள 50 வீடுகளிலுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் எனவும் அவர்கள் ஞாயிறு காலை வரையில் தத்தமது வீடுகளுக்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லையெனவும், அவர்கள் தாபனத்தினால பராபரிக்கப்பட்டார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிறு மாலைவரையில் சந்தேக நபர் விசாரிக்கப்படுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பக்கட்ட விசாரணையில் குறிப்பிட்ட சந்தேக நபர் தனித்துச் செயற்பட்டிருக்கின்றார் எனவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் தோன்றுகின்றார் எனப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

எர்ரோபிக் பிட்னஸ் சென்டர் உடற்பயிற்சி நிலையத்தில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Posted: 19 May 2014 03:12 AM PDT

Etobicoke-fitness-centre

Etobicoke-fitness-centreஎர்ரோபிக்கோவில் இயங்கிய உடற்பயிற்சி நிலையத்திலிருந்து 6 நபர்கள் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட நிலையத்தில் சனிக்கிழமை மாலையில் நச்சு வாயு பரவியதால் குறிப்பிட்ட நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது. அத்துடன் அனுமதிக்கப்பட்டவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானதாகவும் இருக்கின்றது எனவும் தெரியவருகிறது. குறிப்பிட்ட சம்பவம் கிட்டத்தட்ட சனிக்கிழமை 3 மணியளவில் நிகழ்ந்திருக்கின்றது எனத் தெரிகிறது. மாலை 3 மணியளவில் அவசர மருத்துவப் பிரிவினர் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. முதலில் ஒருவர் மட்டும் மூச்சுவிடமுடியாது அவதிப்பட்டிருக்கின்றார் எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்த கிட்டத்தட்ட 12 பேர் வரையில் வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது. இந்தச் சம்பவமானது GoodLife Fitness at 185 The West Mall எனுமிடத்தில் நடந்திருக்கின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™