Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது

Posted: 17 May 2014 01:59 PM PDT

கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சியே, மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் எந்த கட்சி அல்லது எந்த கூட்டணியில் உள்ள கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பது சென்டிமெண்டாக இருந்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் ஏற்பட்டது. எனவே, கன்னியாகுமரி தொகுதியை யார் கைப்பற்றுகிறார்கள் ...

ராணி மகாராணி - ஜெயலலிதா

Posted: 17 May 2014 01:47 PM PDT

நம்ப முடிகிறதா? நாட்டின் மூன்றாவது தனிப்பெரும் கட்சி அ.தி.மு.க. "தமிழ்நாடு ஒருவேளை உத்தரப் பிரதேசத்தைப் போல பெரிய மாநிலமாக 80 தொகுதிகளுடன் இருந்திருந்தால், நாட்டின் பிரதான எதிர்க் கட்சியே இன்றைக்கு அ.தி.மு.க-தான்" என்கிறார்கள் கட்சிக்காரர்கள். உண்மை. இது வரலாறு. எப்போதும் தமிழ்நாட்டு அரசியல் போக்கை முன்னெடுக்கும் முதல் அடியைத் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி எடுத்துவைப்பார் என்று சொல்லப்படுவது உண்டு. இந்த முறை சந்தேகத்துக்கே இடம் இல்லாமல் முதல் அடியை எடுத்துவைத்தார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. ...

200 தீவிரவாதிகளை வெறித்தனமாக கொன்று குவித்த நைஜீரிய மக்கள்

Posted: 17 May 2014 01:37 PM PDT

கடந்தமாதம் 300 பள்ளிமாணவிகளை கடத்திச் செனற தீவிரவாத குபம்பலைச் சேர்ந்த 200 தீவிரவாதிகளை நைஜீவிய கிராம மக்கள் வெறித்தனமாக கொன்று குவித்துள்ளனர். பள்ளி மாணவிகள் 300 பேரை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்தி சென்று சிறை வைத்துள்ளனர். அவர்களை இன்னும் விடுவிக்கவில்லை. மேலும் அவர்களை செக்ஸ் அடிமைகளாக விற்க போவதாக மிரட்டல் விடுத்துவந்தனர்.அவர்களை மீட்கும் முயற்சியில் நைஜீரிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த தீவிரவாதிகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைந்து அவர்கள் மீது கடுமையாக ...

தேர்தல் தோல்வி: பீகார் முதல்வர் நிதிஷ் ராஜினாமா!

Posted: 17 May 2014 01:36 PM PDT

பாட்னா: நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநில ஆளுனர் டி.ஒய். பாட்டீலை இன்று நேரில் சந்தித்து அவர் தமது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜனதா உடனான 17 ஆண்டுகால கூட்டணியை கடந்த ஆண்டு முறித்துக்கொண்டார். பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ஏற்பட்ட மோதலை தொடர்ந்தே அவர் கூட்டணியில் இருந்து விலகினார். இந்நிலையில் ...

திருவோடு மரம்!

Posted: 17 May 2014 01:33 PM PDT

வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களின் கைகளில் கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை திருவோடு, அட்சய பாத்திரம், கபாலம் என்ற பெயர்களில் அழைப்பார்கள். இந்து மத துறவிகள் உடுப்புக்கு அடுத்து கொடுக்கும் முக்கியத்துவம் திருவோட்டுக்கே. சரி... இந்த திருவோடு எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது? எந்த நாட்டைச் ...

மக்களவைத் தேர்தல்: மாநிலங்களின் நிலவரப் பட்டியல்

Posted: 17 May 2014 01:22 PM PDT

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மாநிலங்கள் வாரியாக உள்ள நிலவரப் பட்டியலின் தொகுப்பு.

காய்கறி விலை கிடுகிடு உயர்வு: பீன்ஸ் ரூ.60ஐ தொட்டது!

Posted: 17 May 2014 01:01 PM PDT

சென்னை: தமிழகத்தில் காய்கறி விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் காய்கறி விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த வாரத்திற்கு முன்னர் ஒரு கிலோ 30 ரூபாயாக இருந்த பீன்ஸ், இன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே சில்லரை கடைகளில் கிலோ ரூ. 80 முதல் 85 வரை விற்கப்படுகிறது 30 ரூபாய்க்கு விற்ற அவரைக்காய் இப்போது 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ...

தமிழக தேர்தல் முடிவுகள் 2014

Posted: 17 May 2014 01:00 PM PDT

வடசென்னை தொகுதி வடசென்னை தொகுதியில் 40 வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 40 பேர் போட்டியிட்டனர். அவர்கள் பெற்ற இறுதி ஓட்டு விவரம் வருமாறு:– 1. டி.ஜி.வெங்கடேஷ்பாபு (அ.தி.மு.க.)– 4,06,704 2. வக்கீல் ஆர்.கிரிராஜன் (தி.மு.க.)– 3,07,00 3. எம்.சவுந்திரபாண்டியன் (தே.மு.தி.க.)– 86,989 4. பிஜூ சாக்கோ (காங்கிரஸ்)– 24,190 5. உ.வாசுகி (மா.கம்யூ)– 23,751 6. எஸ்.சீனிவாசன் (ஆம் ஆத்மி)– 6,819 7. ஜெ.ஜனார்த்தனன் (பகுஜன்சமாஜ்)– 4,960 8. எம்.நிஜாம் ...

நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது

Posted: 17 May 2014 12:57 PM PDT

மும்பை: விக்ராந்த் கப்பலை காப்பாற்ற தீவிரமாக போராடிய சமூக ஆர்வலர் கிரண் பயாங்கரின் முயற்சிகள் பயனளிக்கவில்லை. தற்போது மும்பையில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விக்ராந்தை உடனே கப்பல் உடைக்கு தளத்துக்கு(ஸ்கிராப் யார்டு) அனுப்ப அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது. பிரிட்டன் கடற்படையில் எச்எம்எஸ் ஹெர்குலிஸ்' என்ற பெயரில் இயங்கி வந்த விமானத் தாங்கி கப்பலை 1957ல் இந்தியா வாங்கியது. பின்னர், அது நவீனப்படுத்தப்பட்டு ஐஎன்எஸ் விக்ராந்த்' என்ற பெயரில் இந்திய கடற்படையில் ...

காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்?

Posted: 17 May 2014 12:28 PM PDT

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வியை தொடர்ந்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்களது கட்சி பதவியை ராஜினாமா செய்ய முன்வரலாம் என செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், அதனை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 206 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு தாங்கள் ...

ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர்

Posted: 17 May 2014 11:46 AM PDT

இந்தியாவின் 'இரும்பு மனிதராக' போற்றப்படும் வல்லபாய் படேலை போல, துணிச்சலாக பல முடிவுகளை எடுக்கக் கூடியவர் மோடி. குஜராத் வளர்ச்சியில் இதை நிரூபித்துள்ள இவர், இரண்டாவது 'இரும்பு மனிதராக' ஜொலிக்கிறார். இந்தியாவின் 14வது பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை, பட்டு விரிப்பிலும், பண செழிப்பிலும் திளைத்தது அல்ல! தன் பாதையல் கண்ட கரடு, முரடான கற்களை கூட, சிலைகளாய் மாற்றிதன் பின்னால் வருவோரின் பயணத்தை ரசனையாக்கியவர். ஒவ்வொரு முறை உயரத்திற்கு வரும் போதும், தான் கீழிருந்த போது இருந்த ...

தேர்தல் நகைச்சுவை

Posted: 17 May 2014 11:20 AM PDT

தினமலர் தளத்தில் வந்த தேர்தல் பற்றிய நகைச்சுவை படங்கள் இவை , இது போல வேறு பத்திரிகைகளில் வருவதையும் இங்கு பதிவிடுங்கள் நண்பர்களே






நிறங்கள்

Posted: 17 May 2014 11:18 AM PDT

கறுப்பு
துக்கம், துயர அடையாளமுமல்ல
வெள்ளை
சுத்தம், சுக அடையாளமுமல்ல
நிறங்கள்
பார்வைக்கு அழகாக இருக்கட்டும்
நிறங்களுக்கு
பொருள் கற்பிக்க வேண்டாம்
தன்னம்பிக்கை தான்
எம் வலிகளைப் போக்கிட
நல்ல மருந்து என்பேன்!

திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்!

Posted: 17 May 2014 11:18 AM PDT

மக்களவைத் தேர்தல் முடிவுகள் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ள வேளையில், தேர்தலில் போட்டியிட்ட சுமார் 1,650 கட்சிகள் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாமல் படு தோல்விகளைச் சந்தித்துள்ளது. திமுக, பகுஜன் சமாஜ் கட்சி, சிபிஐ, தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் பூஜ்ஜியப் பட்டியலில் உள்ள கட்சிகளாகும். தற்போது நாட்டில் 1,687 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. 8,200க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் 5007 வேட்பாளர்கள் பல்வேறு கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். மீதமுள்ளவர்கள் சுயேட்சை வேட்பாளர்கள். இதில் ...

பாரதிக்கு - கோரிக்கை (கவிதை )

Posted: 17 May 2014 11:17 AM PDT

பாரதிக்கு - கோரிக்கை



சாதித்தீ. . . . . . இல்லையென. .ஓதியேநீ. . . . . .சென்றாலும்
ஊதியதை. . . வளரவிட்டு. . . . .மோதுகின்ற. .உன்மத்தர்
ஆதிக்கம். . . . .நீக்கியே. . . . . . . .அமைதியை. . நாட்டிட
மேதினியில். .மீண்டும்நீ. . . . . . வா



அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து

காமராஜருக்கு செய்யும் பெரிய சேவை

Posted: 17 May 2014 11:06 AM PDT

காமராஜருக்கு  செய்யும் பெரிய சேவை ] நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழக காங்கிரஸ் மொத்தத்தில் 17.5 லக்ஷம் (மொத்த வோட்டில் 4.3%) வோட்டுகள் தான் பெறமுடிந்தது. போட்டி இட்ட 39 இடங்களில் 38 இடங்களில் டெபாசிட்டை இழந்து விட்டது. கன்னியாகுமரியில்  போட்டி இட்ட வசந்த் & கோ வின் வசந்தகுமார் மட்டுமே டெபாசிட்டை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இனிமேலும் தமிழக காக்ராஸ் திரு காமராஜ் பெயரை கூறி அவர் பெயருக்கு இழுக்கு சேர்க்காமல் இருப்பதே காமராஜருக்கு அவர்கள் செய்யும் பெரிய சேவை. ரமணியன் நன்றி :TOI

உனனையே வேண்டுகிறேன்!!

Posted: 17 May 2014 10:46 AM PDT

மலர் தந்தாய் - அதற்குள் நல்ல மணம் தந்தாய்! - துவண்டே சடுதியாய் வாடவும் செய்தாய்! சந்தமதை இழக்கவும் செய்தாய்! உயிர் தந்தாய் - உளம் களிக்க உரமும் தந்தாய்! உடன் நோயும் தந்தாய்! உறங்கிடும் இறப்பும் தந்தாய்! இரு பால் படைப்பும் தந்தாய்! இரண்டையும் சேரவும் செய்தாய்! பிரிக்கவும் செய்தாய் - ஊடே பிரிவுத் துயரும் தந்தாய்! உணர்வைத் தந்தாய் - நல்ல உயர் பண்பைத் தந்தாய் - ஊடே உடன் சேரா பகைவனைப் படைத்தாய்! உலகம் அழிக்கவும் செய்தாய்! நல்லதும் செய்தாய்! நன்றல்லாததும் செய்தாய்! எதனால் ...

தன்னம்பிக்கை வார்த்தைகள்

Posted: 17 May 2014 10:04 AM PDT

தாழ்வுமனப்பான்மை வேண்டாம்.அனைத்தையும் வெல்ல முடியும்.வெற்றியைப்பற்றிய சிந்தனையுடன் செயல்படுங்கள். தோல்வி, வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடமளிக்காமல் வெற்றியை மட்டுமே சிந்தித்து உயர்வடையுங்கள். உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சியத்தை நோக்கித்தான் இருக்க வேண்டும். தடைகள் எதிர்படும்பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள் மனத்தையும், செயலையும் பின்வாங்கவிடாதீர்கள். இவையெல்லாம் உங்கள் உறுதியை சோதிகக வந்தவை என்று கருதி அந்தத் தடைகளையும் தாண்டி உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடையுங்கள். ...

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து

Posted: 17 May 2014 03:35 AM PDT

தமிழகத்தில், ''மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி'' என்று பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து தெரிவித்து உள்ளார். பணப்பட்டுவாடா தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு மாற்றாக தங்களுடைய அதிகார பலம், பண பலம் மூலம் இந்த தேர்தலை சந்தித்துள்ளனர். கடைசி ...

கடவுளை காண விலகி போ

Posted: 17 May 2014 02:30 AM PDT

ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ? நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் . உடனே புறப்பட்டான் . போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான் அவர் கேட்டார் . " எங்கே போகிறாய் ?" " கடவுளை காண போகிறேன் !" " எங்கே ? " " கோவிலில் !" " அங்கே போய் ........" " அவரை வழிபட போகிறேன் ! " " அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?" " தெரியாது " " எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட ...

நேர்மறை எண்ணங்கள்

Posted: 17 May 2014 01:11 AM PDT

எனக்குள் திறன் இருக்கிறது! எனக்குள் திறன் இருக்கிறது..! எனக்குள் திறன் இருக்கிறது...! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்...! என்னிடம் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கின்றன.....! இதெல்லாம் என்ன? மேலே படிக்கல்லாம், என் பார்வையின் மிகுதியில் சிக்குவது எல்லாம் பாஸிட்டிவான விசயங்கள்..மட்டுமே...! எல்லா சூழ்நிலைகளுக்கும் தீர்வினை எட்டும் தீர்க்க முடிவுகள் மட்டுமே நான் எடுக்கிறேன் என்று கூறுகிறேன்! மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் விசயங்களையும் சிக்கலை கொடுக்கும் ...

பாமரர் தேவாரம்

Posted: 16 May 2014 11:30 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

தேர்தல் 'தமாசு'

Posted: 16 May 2014 11:04 PM PDT

நபர் 1: அந்த வீட்ல ஏதோ போர்டு மாட்டியிருக்கே என்னது? நபர் 2: இங்கு 'தட்கால்' முன்பதிவில் ஓட்டுகள் கிடைக்கும்னு போட்டு இருக்கு! பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி தொண்டர்-1: 'நம்ம வேட்பாளருக்கு ஓரளவு இருந்த மக்கள் ஆதரவையும் தலைவர் பேசி கெடுத்துட்டாரு...!' தொ. 2: 'என்ன பேசினார்...?' தொ. 1: 'நானே இந்த தொகுதியில வேட்பாளரா நிக்கறதா நினைச்சிக்குங்க வாக்காளர்களேன்னு தான்...!' ரா. திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர் நபர் 1: இவர் ஓட்டு புரோக்கர்னு எதை வச்சு சொல்றே? நபர் 2: ...

கட்சி தொடங்கிய வரலாற்றில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக அ.தி.மு.க. வெற்றி

Posted: 16 May 2014 09:24 PM PDT

மதுரை கட்சி தொடங்கிய வரலாற்றில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் முதல்முறையாக அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 424 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இரா.கோபாலகிருஷ்ணன் அமோக வெற்றி பெற்றார். துப்பாக்கி பாதுகாப்பு மதுரை பாராளுமன்ற தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்தி, மேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. கடந்த மாதம் (ஏப்ரல்) 24–ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. 68.4 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மதுரை பாராளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை ...

டீச்சரைப் பார்தததும்... { கவிதை }.

Posted: 16 May 2014 08:25 PM PDT

குழந்தையின் சிரிப்போ
செம்பருத்திப் பூ சிரிப்பூ.
*
திருவிழாவுக்குப் போய்
சிரித்து வந்தார்கள் குழந்தைகள்.
*
எப்பொழுதும் குழந்தைகளோடு
துணையிருக்கிறாள் பாட்டி.
*
ஓட்டலில் டீச்சரைப் பார்த்ததும்
மெல்ல சிரித்தது குழந்தை.
*
பாய்ந்துப் போய்ப் பிடித்தது குழந்தை
பஸ்ஸில் சன்னலோரம் சீட்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™