Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பரம்பரை ஆட்சியை நிராகரித்த மக்கள்: பா.ஜனதா கருத்து

Posted: 16 May 2014 12:04 AM PDT

மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு ஒரு சில தொகுதிகளில் முடிவுகள் வெளியாகி உள்ளன. பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, வருண் காந்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். இந்த இமாலய வெற்றி பரம்பரை ஆட்சியை மக்கள் நிராகரித்திருப்பதை காட்டுவதாகவும், கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என்றும் பா.ஜனதா

சபாநாயகர் மீராகுமார், ராப்ரிதேவி, பரூக் அப்துல்லா தோல்வி முகம்

Posted: 15 May 2014 11:45 PM PDT

சபாநாயகர் மீராகுமார், பீகார் மாநிலம் சாசரம் தொகுதியில் போட்டியிட்டார். முதல் சுற்று முடிவில் அவர் பா.ஜனதா வேட்பாளர் சீடிபால்வானிடம் 17,279 ஓட்டு வித்தியாசத்தில் பின் தங்கி இருந்தார். பீகார் முன்னாள் முதல்– மந்திரியும், லல்லுபிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரிதேவி முதல் சுற்று முடிவில் பா.ஜனதா வேட்பாளரிடம் 1650 ஓட்டுகள் பின் தங்கி இருந்தார்.

சீமாந்திராவில் சந்திரபாபுநாயுடு மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார்

Posted: 15 May 2014 11:29 PM PDT

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடை பெற்றது. சீமாந்திராவில் 25 பாராளுமன்ற தொகுதியும், 175 சட்டசபை தொகுதியும் உள்ளது. இங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. ஓட்டு எண்ணிக்கையின் போது தொடக்கத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்– தெலுங்குதேசம் இடையே இழுபறி நிலையே நீடித்தது. பின்னர் தெலுங்குதேசம் முன்னணி பெற்றது. 12 மணி நிலவரப்படி தெலுங்குதேசம் 97 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. ஜெகன் மோகன் ரெட்டி

மோடிக்கு ராஜ்நாத்சிங் வாழ்த்து

Posted: 15 May 2014 11:29 PM PDT

பா.ஜனதா வரலாறு காணாத வெற்றி பெற்றதற்கு பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராஜ்நாத்சிங், நரேந்திர மோடியின் பிரசாரத்தில் பாரதீய ஜனதா அபார வெற்றியை

மைன்புரி தொகுதியில் முலாயம்சிங் யாதவ் முன்னணி

Posted: 15 May 2014 11:11 PM PDT

சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் உத்தரபிரதேச மாநிலத்தில் மைன்புரி மற்றும் அசம்கார் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் தனது சொந்த தொகுதியான மைன்புரியில் முன்னணியில் உள்ளார். அதே நேரத்தில் மற்றொரு தொகுதியான அசம்காரில் 1449 ஓட்டுகள் குறைவாக பெற்று பின்தங்கியுள்ளார்.

வதோதராவில் நரேந்திர மோடி வெற்றி

Posted: 15 May 2014 11:00 PM PDT

மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா மற்றும் வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இரண்டு தொகுதிகளிலும் மோடி முன்னிலை பெற்றிருந்தார். இந்நிலையில், வதோதராவில் மோடி சுமார் 5 லட்சம் வாக்குகள்

பஞ்சாப்பில் வினோத் கன்னா வெற்றி முகம்

Posted: 15 May 2014 10:48 PM PDT

பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னாவை பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் பா.ஜ.க. நிறுத்தியது. அந்த தொகுதியில் அவர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதாப்சிங் பஜ்வாலை எதிர்த்து போட்டியிட்டார். இன்று ஓட்டு எண்ணிக்கையின் முதல் சுற்றிலேயே வினோத் கன்னா, சுமார் 10 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில்

அம்பிகா சோனி பின்னடைவு

Posted: 15 May 2014 10:42 PM PDT

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அம்பிகா சோனி பஞ்சாப் மாநிலம் அனந்தபூரில் போட்டியிட்டார். இவர் சிரோன்மணி அகாலிதளம் வேட்பாளர் பிரேம்சிங் சஞ்ஜீவமஜ்ராவை

டெல்லியின் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளர்கள் முன்னிலை

Posted: 15 May 2014 10:38 PM PDT

மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பா.ஜனதா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை ருசிக்க உள்ளது. வடமாநிலங்களில் மோடி அலையால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியைப் பொருத்தவரையில் 7 தொகுதிகளிலும் பா.ஜனதா முன்னிலையில் உள்ளது. 2009ல் நடந்த தேர்தலில் 7 தொகுதிகளிலும் வென்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை அனைத்து தொகுதிகளிலும்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

Posted: 15 May 2014 10:33 PM PDT

பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் பாரதீய ஜனதா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதை தொடர்ந்து புதிய அரசு அமைய உள்ளது. இந்த நிலையில் வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 காசு உயர்ந்துள்ளது. அதன் மூலம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.58.88

பஞ்சாபில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் முன்னணி

Posted: 15 May 2014 10:30 PM PDT

பஞ்சாபில் மொத்தம் 13 தொகுதிகள் உள்ளன. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கையில் அதிசய தக்க வகையில் ஆம் ஆத்மி கட்சி பரீத்கோட், பதேகார் சாதிப், பாட்டியாலா மற்றும் சாங்கரூர் ஆகிய 4 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. அதே நேரத்தில் சிரோமணி அகாலிதளம் கட்சி பெரோஸ்ரா, அனந்தபூர் சாகிப், கதார் சாதிப், பதிண்டா ஆகிய 4 தொகுதிகளில் முன்னையில் உள்ளது.

ஆந்திராவில் வெயிலுக்கு 9 பேர் பலி

Posted: 15 May 2014 10:25 PM PDT

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் சுட்டெரிக்கிறது. விசாகப்பட்டினம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெயில் 110 டிகிரியை தாண்டி உள்ளது. ஒங்கோலில் அதிக பட்சமாக 112.1 டிகிரி வெயில் கொளுத்தியது. நெல்லூரில் 110 டிகிரி வெயில் வாட்டி வதைக்கிறது. கடும் வெயில் காரணமாக பகலில் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

சோனியா காந்தி முன்னிலை

Posted: 15 May 2014 10:22 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே சோனியா காந்தி முன்னிலையில் இருந்தார். முதல் சுற்றில் சோனியா காந்தி பா.ஜனதா வேட்பாளர் அஜர் அகர்வாலைவிட 1,293 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார்.

திருப்பதி: பக்தர்கள் தலைமுடி ஏலம் மூலம் ரூ.41 கோடி வருமானம்

Posted: 15 May 2014 10:17 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 35,120 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன் பிறகும் தர்மதரிசன வரிசையில் 24 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆனது. ஏழுமலையானுக்கு உண்டியல் மூலம் தினமு

10 மணி நிலவரம்: பா.ஜனதா 304 தொகுதிகளில் முன்னிலை

Posted: 15 May 2014 09:39 PM PDT

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதர கட்சிகள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

அமேதி தொகுதியில் ராகுல்காந்தி பின் தங்குகிறார்

Posted: 15 May 2014 09:32 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் 3–வது முறையாக போட்டியிட்டார். 2004–ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் அவர் 3 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ஸ்ம்ருதி இரானியும், ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாசும், பகுஜன் சமாஜ் கட்சி

9 மாநிலங்களில் தாக்குதல் நடத்த நக்சலைட்கள் சதி

Posted: 15 May 2014 09:17 PM PDT

டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜி.என். சாய்பாபா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். நக்சலைட்டுகளுடன் அவருக்கு தொடர்பு இருந்ததால் அவர் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. 9 மாநிலங்களில் தாக்குதலை நடத்த நக்சலைட்டுகள் திட்டமிட்டு இருப்பது தெரிய வந்தது. ஆந்திரா, பீகார், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட, மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மராட்டியம் ஆகிய 9 மாநிலங்களி

நடிகை ரோஜா முன்னணி

Posted: 15 May 2014 09:13 PM PDT

சீமாந்திராவில் உள்ள நகரி தொகுதியில் ஓய்.எஸ். ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தெலுங்கு தேசம் சார்பில் முன்னாள் மந்திரி முத்துகிருஷ்ணம்ம நாயுடு போட்டியிட்டார். இன்று காலை தபால் ஒட்டுக்கள் எண்ணப்பட்டதில் நடிகை ரோஜா 475 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.

9.30 மணி நிலவரம்: பா.ஜனதா 261 தொகுதிகளில் முன்னிலை

Posted: 15 May 2014 09:09 PM PDT

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதர கட்சிகள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

திருவனந்தபுரத்தில் சசிதரூர் பின்தங்குகிறார்

Posted: 15 May 2014 09:03 PM PDT

கேரளாவில் 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்தது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் 13 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றது. 7 தொகுதிகளில் கம்யூனிஸ்டு கூட்டணி முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் முதல் சுற்று ஓட்டுகள் முடிவில் காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களில் முன்னிலையில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™