Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


முள்ளிவாய்க்கால் பிரமுகர்நடராஜன் கனடா நிகழ்வில் சிறப்புரை!

Posted: 15 May 2014 11:03 PM PDT

tamilmakkalkural_blogspot_genosideq

tamilmakkalkural_blogspot_genosideqகனடா டொராண்டோ அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் நடைபெறவுள்ள மே 18 தமிழ் இனப்படுகொலை நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் முற்ற நிறுவனர்களில் ஒருவரான திரு.நடராஜன் சிறப்புரை ஆற்றவுள்ளார் .

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை கொண்டாட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை! கனடா நிராகரிப்பு

Posted: 15 May 2014 10:55 PM PDT

canada-srilanka

canada-srilankaஇலங்கையில் நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டதனை கொண்டாடும் வகையில் மாத்தறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பிரதான நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என இலங்கைக்கான கனேடிய உயாஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் (Shelley Whiting) தெரிவித்துள்ளார். ஆண்டு தோறும் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை நடாத்துவது தேசிய நல்லிணக்கத்திற்கு வழியமைக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை நிராகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்காமையை சிலர் புலிகளுடன் தொடர்புபடுத்தக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படும் காரணத்தினால் வெற்றிக் கொண்டாட்டங்களை புறக்கணிப்பதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் நாட்டுக்கு சொல்லொனா துயரங்களை ஏற்படுத்தியமை மறுப்பதற்கில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்தனர், அரசியல் அபிலாஷைகளை புறக்கணித்தனர், ஒரு தலைபட்சமாக செயற்பட்டனர் என்பதனை கனடா ஒப்புக்கொள்கின்றது எனவும், 2009ம் ஆண்டு புலிகளுக்கு எதிரான வெற்றியை கனடா வரவேற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2006ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளை கனடா தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலிலேயே உள்ளடக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனை முனைப்பாக கொண்டே செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இன சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சஸ்கச்சுவான் பல்கலைக்கழத்தில் விமர்சித்த பேராசியர் பக்கிங்காங் பதவிநீக்கம்!

Posted: 15 May 2014 10:47 PM PDT

Robert-Buckingham

Robert-Buckinghamசஸ்கச்சுவான் பகுதி பல்கலைக்கழத்தில் dean of the School of Public Health at the University of Saskatchewan ஆக 2009ம் ஆண்டிலிருந்து பணியாற்றிய Dr. Buckingham கடந்த புதன்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவி நீக்கம் செய்யப்பட்டமைககு பாடசாலையினது மறுசீரமைப்புச் சம்பந்தமாக Robert Buckingham மேற்கொண்ட மோசமான விமர்சனங்களே முக்கியமான காரணம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்கலைக்கழகமானது தற்போது Robert Buckingham னது தலைமைப்பதவியைத் தவிர கல்விசமபந்தமான பணியை திரும்ப வழங்க முன்வந்துள்ளதாகத் தெரியவருகிறது. பல்கலைக்கழகத்தின் தலைவரான Ilene Busch-Vishniac றொபேட்டிற்கு அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடாது, அது ஒரு புத்திசாலித்தனமான முடிவு அல்ல என CBC செய்தித் தாபனத்திற்குத் தெரிவித்திருக்கின்றார். ஆனால் குறிப்பிட்ட முடிவானது தனித்த ஒருவாரால் எடுக்கப்பட்டது அல்லவெனவும், அந்த முடிவானது ஒரு குழவினரால் எடுக்கப்பட்டது எனவும அதிகாரியொருவர் தெரிவித்திருக்கின்றார். எது எவ்வாறாக இருப்பினும் றொபேட்டிற்குத் திரும்பவும் குறிப்பிட்ட தலமைப் பதவி கொடுக்கப்படமாட்டாது என சஸ்கச்சுவான் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் செலவீனத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் மறுபரிசீலனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் அவற்றை றொபேட் வெகுவாகக் கண்டித்திருக்கின்றார் எனத் தெரியவருகின்றது. ஆனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட றொபேட் அவர்களும் தனது உணர்வுகளைத் தெரிவித்திருக்கின்றார். தன்னுடைய பதவி நீக்கம் காரணமாக தான் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் அதிருப்தி கொள்ளவில்லையெனவும் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் தான் திரும்பவும் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு தயாராகவே இருப்பதாவும் தெரிவித்திருக்கின்றார். றெபேட் செலவு குறைப்புக்கு எதிரான கருத்தினைக் கூறுவதற்குத் தனக்கு உரிமை இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். குறிப்பிட்ட பதவி நீக்கத்தினைத் தொடர்ந்து உயர்மட்ட அதிகாரிகள் தொடக்கம் கல்வி அமைச்சர் வரை குறிப்பிட்ட விடையத்தில் அக்கறை செலுத்துவதாகவும் அவசர சந்திப்புக்கள் நடாத்தப்படவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கன் ஏர்வேஸ் விமானத்தில் குடிபோதையில் கலாட்டா செய்த பயணி: இறக்கிவிட்ட பயணிகள்

Posted: 15 May 2014 03:09 AM PDT

american-airways-flight

american-airways-flightவிமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் செய்த கலாட்டவை தாங்காமல் அவரை இறக்கிவிட்டு பயணத்தை தொடர்ந்துள்ளனர் பிற பயணிகள். அமெரிக்கன் ஏர்வேஸ் விமானம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டது. இதில் பயணம்செய்தவர்களில் 40 வயதான ராபர்ட் கொபக் என்பவரும் ஒருவர். போதையில் சேட்டை சரியான போதையில் இருந்த கொபக் தனது சேட்டையை தொடங்கியுள்ளார். விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவரது அருகில் அமர்ந்திருந்த இரண்டு பெண் பயணிகள் குடிபோதையில் இருந்த கொபக்கின் நடவடிக்கை குறித்து விமான ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர். கடைசிக்கு போப்பா இதனைத் தொடர்ந்து அவரை அங்கிருந்து எழுப்பிய ஊழியர்கள் விமானத்தின் பின்பகுதியில் இருந்த இருக்கை ஒன்றில் அவரை அமர வைத்தனர். பணிப்பெண் மீது சாய்ந்தார் அங்கேயும் எழுந்து நடந்தபோது தடுமாறிய கொபக் அங்கிருந்த ஒய்வு பெற்ற பணிப்பெண் ஒருவர் மீது சாய்ந்துள்ளார். திரும்பிய விமானம் இதனைத் தொடர்ந்து ஊழியருக்கு அச்சமேற்படுத்தியதாகக் கூறி விமான அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை விமான நிலையக் காவல்துறையிடம் ஒப்படைப்பதற்காக புறப்பட்ட இடத்திற்கே விமானம் மீண்டும் திரும்பியது. கைவிட்ட உறவினர்கள் அவரால் கொடுக்கப்பட்ட கலிபோர்னியா முகவரி உறவினர்களோ, பொது பாதுகாப்பு உதவியாளரோ தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை. இறக்கிவிடப்பட்ட பயணி கொபக்கை இறக்கிவிட்ட பின்னர் கிளம்பிய இந்த விமானம் நான்கு மணி நேரம் தாமதமாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை அடைந்தது என்று விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பாளரான மிச்சேல் மொஹர் தெரிவித்தார். போதை ஆசாமிகள் நம் ஊரில் பேருந்தில் பயணம் செய்யும் போது போதையில் உளறி கலாட்டா ஏற்படுத்தும் குடிகார ஆசாமிகளை நடுவழியில் இறக்கிவிட்டு அலறவைப்பார்கள் கண்டக்டர்கள். இது விமானம் என்பதால் சொந்த ஊரில் இறக்கிவிடப்பட்டார் அந்த பயணி.  

This posting includes an audio/video/photo media file: Download Now

சாந்தா மரியா கொலம்பஸ் பயணித்த கப்பல் சிதைவுகள் கண்டுபிடிப்பு!

Posted: 15 May 2014 03:01 AM PDT

Columbus-Ship

Columbus-Shipஇத்தாலியில் பிறந்த கொலம்பசின் கனவு, கடல் கடந்து சென்று பல்வேறு தேசங்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக 500 ஆண்டுகளுக்கு முன் அவர் மூன்று கப்பல்களில் பயணம் செய்தார். இந்த பயணத்தின் போதுதான் அவர் அமெரிக்காவை கண்டுபிடித்தார். இதனால் அவர் வரலாற்று நாயகன் என்று இன்றளவும் பாராட்டப்படுகிறார். இந்த பயணத்தின்போது அவர் பயன்படுத்திய கப்பல்களில் ஒன்று சாந்தா மரியா. இந்த கப்பலின் சிதைவு என்று நம்பக்கூடிய ஒரு சிதைந்த பாகம், கரீப்பியன் தீபகற்பத்தில் அடங்கியுள்ள ஹைதி நாட்டின் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தின் கீழே உள்ள கற்பாறை ஒன்றின் அருகில் 10–15 அடி ஆழத்தில் இந்த சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை வெளியிட்ட மஸ்சாசூசெட்ஸ் கடல் ஆராய்ச்சியாளர் கிளிப்போர்டு, ''சாந்தா மரியா கப்பலின் சிதைவு என இந்த சிதைவை நம்புவதற்கு ஆதாரங்கள் உள்ளன. இதை முழுமையாக தோண்டிப்பார்த்து ஆராய்கிறபோது, அது அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்ததற்கு தொல்லியல் சார்ந்த ஆதாரமாக அமையும்'' என கூறி உள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்துடன் மீண்டும் நடிப்பது இனிய அனுபவம்! விவேக் அதிரடி

Posted: 15 May 2014 01:16 AM PDT

actro-vivek

actro-vivekஅஜீத்துடன் மீண்டும் நடிப்பது மிகவும் எளிமையாக உள்ளது, இனிய அனுபவத்தைத் தந்துள்ளது என்கிறார் நடிகர் விவேக். 'வீரம்' படத்தை தொடர்ந்து, ஏ எம் ரத்னம் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜீத். ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா. இந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கு தற்காலிகமாக 'சத்யா' என்று பெயரிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எண்பதுகளில் கமல் ஹாஸன் நடித்த படத்தின் தலைப்பு இது. படத்தில் அஜீத்தின் கேரக்டர் சத்யா என்பதால், அதையை தலைப்பாக வைக்க அஜீத்துக்கும் விருப்பம்தான். இந்தப் படத்தில் அஜீத்துடன் நடிக்கிறார் விவேக். ஏற்கெனவே வாலி உள்பட பல படங்களில் அஜீத்துடன் நடித்தவர்தான் விவேக். ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார். மின்னலே படத்துக்குப் பிறகு கவுதம் மேனன் படத்தில் இப்போதுதான் மீண்டும் நடிக்கிறார் விவேக். இந்தப் படத்தில் முறுக்கு மீசை வைத்து காமெடி செய்கிறார். அஜீத்துடன் இணைந்து நடிப்பது சுலபமாக இருக்கிறது என்று விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். கவுதம் மேனன் - அஜீத்துடன் நான் இப்படத்தில் இணைந்தது இனிய அனுபவம் என்றும் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

யான் படத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைக் காட்சிகள்?

Posted: 15 May 2014 01:08 AM PDT

yaan-deals-with-balachandiran-murder

yaan-deals-with-balachandiran-murderயான் படத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைக் காட்சிகள் இடம்பெறுவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர் ரவி கே சந்திரன். ஜீவா, துளசி நடிப்பில், எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் யான். இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இதுகுறித்து ரவி கே சந்திரன் கூறுகையில், "குறிப்பிட்ட சம்பவங்கள் எதையும் மையப்படுத்தாமல், உலகளாவிய மனித உரிமை மீறல்களைத்தான் இந்தப் படத்தில் படமாக்கியுள்ளோம். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலைச் சம்பவம் பற்றியோ, தீவிரவாதம் அல்லது எந்த நாட்டின் உள்நாட்டுப் போர் குறித்தோ இந்தப் படம் பேசவில்லை. கதையின் ஒரு பகுதி மொராக்கோவில் நடப்பதால் அங்கும் படப்பிடிப்பு நடந்துள்ளது. முழுக்க முழுக்க கலகலப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த பொழுதுபோக்குப் படமாக யான் இருக்கும்," என்றார் இயக்குநர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் திட்டமில்லை: அமலாபால் பேட்டி!

Posted: 15 May 2014 01:02 AM PDT

director-vijay-amala-paul

director-vijay-amala-paulதிருமணத்திற்குப் பிறகு நடிக்கும் திட்டமில்லை, ஆனால், நல்ல கதை அமைந்தால் நடிப்பது குறித்து யோசிக்கலாம் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். மைனா படம் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அமலாபால். கேரளாவைச் சேர்ந்த அமலாபாலும், இயக்குநர் விஜயும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் வரும் ஜூன் மாதம் 12-ந்தேதி திருமணம் நடக்கிறது. முன்னதாக 7-ந்தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. அமலாபால் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். எனவே, திருமணத்திற்குப் பின் அமலாபால் நடிப்பைத் தொடருவாரா அல்லது சினிமாவை விட்டு விலகுவாரா? என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் திருமண அழைப்பிதழ் வைக்கத் தொடங்கியுள்ள அமலாபால், இந்த சந்தேகத்திற்கு விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கும் திட்டம் இல்லை. திருமணமானதும் குடும்பத்துக்குதான் நான் முக்கியத்துவம் அளிப்பேன். நடிப்பு என் ரத்தத்தில் கலந்துள்ளது. எனவே, திருமணத்துக்கு பின் ஏதேனும் பிரமாதமான கதை அமைந்தால் நடிப்பது குறித்து அப்போது யோசிக்கலாம். தற்போது திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளேன். எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள நான் எடுத்த முடிவில் எந்த குழப்பமும் இல்லை. திருமணத்துக்கு யாரும் என்னை நிர்ப்பந்திக்கவும் இல்லை. முழு மனதோடுதான் இந்த முடிவை எடுத்தேன். இப்போது 'மிலி' என்ற ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டு இருக்கிறேன். வேறு புதுபடங்கள் எதற்கும் ஒப்பந்தம் ஆகவில்லை' என இவ்வாறு அமலாபால் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை சங்கீதா மீது கொலை மிரட்டல் வழக்கு: முன்னாள் பிரதமரின் பெண் ஆலோசகர் போலீசில் புகார்!

Posted: 15 May 2014 12:54 AM PDT

actress-sangeetha

actress-sangeethaநடிகை சங்கீதா தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் பிரதமரின் ஆலோசகரான உஷா சங்கர நாராயணன் போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஜானகி நகரைச் சேர்ந்தவர் உஷா சங்கர நாராயணன்(60). முன்னாள் பிரதமர் ஒருவரின் ஆலோசகராக இருந்தவர். அவர் நடராஜன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். திருமணமாகாத அவர் தெருநாய்களை வளர்த்து வருகிறார். அவரது வீட்டுக்கு அருகில் தனது மனைவி கலையுடன் வசிக்கும் பாஸ்கரன் என்பவர் உயர் ரக நாய் ஒன்றை வளர்க்கிறார். இந்நிலையில் உஷா வளர்க்கும் நாய்கள் பாஸ்கரன் வீட்டு நாயை பார்த்து குரைத்துள்ளன. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உஷாவை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு பாஸ்கரனும், கலையும் நடராஜனை வற்புறுத்தினார்களாம். உஷா, பாஸ்கரன் வீடுகளுக்கு அருகில் தான் நடிகை சங்கீதா தனது கணவர் க்ரிஷுடன் வசித்து வருகிறார். அவரும் உஷா வளர்க்கும் நாய்களால் பாதிகக்ப்பட்டுள்ளார் போன்று. இதையடுத்து பாஸ்கரன், கலைக்கு ஆதரவாக சங்கீதா பேசியுள்ளார். பின்னர் உஷா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சங்கீதாவும், அவரது கணவரும் தன்னை நடுத்தெருவில் வைத்து தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வீட்டை காலி செய்யாவிட்டால் நாய்களை கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாகவும் உஷா போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தை அணுகினார் உஷா. அதன் பிறகு சங்கீதா, க்ரிஷ், பாஸ்கரன், கலை, நடராஜன், அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் பற்றி சங்கீதா போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க இன்று வருகிறார் என்று கேள்விப்பட்டு அங்கு செய்தியாளர்கள் கூடினர். ஆனால் அவர் வரவில்லை. இந்நிலையில் சங்கீதா தனது வீட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் மீது புகார் கொடுத்த உஷாவுக்கு 70 வயது இருக்கும். அவ்வளவு வயதானவருக்கு நான் எப்படி கொலை மிரட்டல் விடுப்பேன். அவர் வளர்க்கும் நாய்களால் எங்கள் தெருவில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் வீட்டு நாய்கள் என் வீட்டுக்குள் புகுந்து என் குழந்தையை கடிக்க முயன்றன. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தேன். மேலும் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் போனில் பேசினேன். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து உஷாவிடம் நானும், எங்கள் தெருவில் வசிப்போரும் கேட்டபோது அவர் தான் எங்களை மிரட்டுவது போன்று பேசினார். தனக்கு அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிலரை தெரியும் என்று கூறிய அவர் சிலரின் பெயர்களையும் தெரிவித்தார். அதனால் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் என் மீதும், பிறர் மீதும் நாய்களை ஏவி விடுகிறார். இந்த பிரச்சனையை பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை. ஆனால் அவர் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். அதனால் தான் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க முடிவு செய்தேன். நான் தயார் செய்துள்ள புகார் மனுவில் பாதிக்கப்பட்ட அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கடத்தப்பட்ட 200 மாணவிகளை பத்திரமாக மீட்கும் முயற்சி: நைஜீரியா திட்டம்!

Posted: 15 May 2014 12:34 AM PDT

nigeria

nigeriaகடத்தப்பட்ட 200 மாணவிகளை பத்திரமாக மீட்கும் முயற்சியாக போகோ ஹரம் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நைஜீரிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தனி நாடு கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலம் சிபோக் கிராமத்தின் பள்ளியில் இருந்து 200 சிறுமிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அதனைத் தொடர்ந்து, போகோ ஹரம் தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் ஷேகாவ் வெளியிட்ட வீடியோவில், 'நான்தான் சிறுமிகளை கடத்தி இருக்கிறேன். அவர்களை மார்க்கெட்டில் செக்ஸ் அடிமைகளாக விற்பேன்'என மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது. கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்கும் பணியில் நைஜீரிய அரசுக்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளன. இதற்கிடையே கடத்தப் பட்ட சிறுமிகளில் சிலர், தங்களது சாமர்த்தியத்தால் அங்கிருந்து தப்பி வந்தனர். நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநில கவர்னரும் கூட கடத்தப்பட்ட சிறுமிகள் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபுபக்கர் ஷேகாவ் 17 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு புதிய வீடியோ ஒன்றை அனுப்பினார். அதில், சிறையில் உள்ள தங்களது இயக்கத்தை உள்ளவர்களை விடுதலை செய்தால், கடத்தப்பட்டுள்ள மாணவிகளை தானும் விடுதலை செய்வதாக தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு நைஜீரிய அரசு சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தகவல் வெளியானது. இதற்கிடையே கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் பணியில் அமெரிக்காவும் இணைந்தது. கண்காணிப்பு விமானம் மூலம் மாணாவிகளைத் தேடும் பணியை நைஜீரிய அரசின் சம்மதத்துடன் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. மேலும், மாணவிகளை மீட்கும் பணியில் நைஜீரியாவின் அண்டைநாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் நாடுகளும் ஒத்துழைப்பு அளித்துள்ளன. இந்நிலையில் தற்போது போகோ ஹரம் தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த நைஜீரியா ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக தலைநகர் அபுஜாவில் 'ரெயிட்டர்ஸ்' செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி வழியாகப் பேசிய அந்நாட்டு அமைச்சர் டானிமு துராகி, 'போகோ ஹரம் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார். அந்நாட்டு மூத்த அதிகாரிகள் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது' எனக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் மாணவிகளை விடுவிப்பது தொடர்பாக அவர்கள் எந்த உறுதியும் அளிக்கவில்லை. எனவே இந்தப் பிரச்சினையில் தீவிரவாதிகளுடன் நைஜீரிய அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ள சிறுமிகள் இருக்கும் இடம் பற்றியும், தீவிரவாதிகள் பற்றியும் தகவல் அளித்தால் 3 லட்சம் டாலர் பரிசு வழங்கப்படும் என நைஜீரிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சுற்றும் காமக்கொடூரன்கள்: துண்டு பிரசுரத்தால் பரபரப்பு!

Posted: 15 May 2014 12:28 AM PDT

Columbia_University

Columbia_Universityகொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றவாளிகள் என்று கூறி நான்கு பேரின் பெயர்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வினியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பிரசுரங்களை மாணவர்கள் தான் வினியோக்கித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அந்த பிரசுரத்தில் 3 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரயரின் பெயரை குறிப்பிட்டு இவர்கள் எல்லாம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வருபவர்கள். அதனால் பெண்களே இவர்களிடம் உஷாராக இருந்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியா பல்கலைக்கழகம் பாலியல் பலாத்காரம் நடப்பதை தடுக்கவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தவறிவிட்டதாக 23 மாணவர்கள் இந்த மாத துவக்கித்தில் புகார் அளித்தனர். ஆனால் பல்கலைக்கழகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. துண்டு பிரசுரங்கள் தவிர பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நான்கு கட்டிடங்களில் இருக்கும் கழிவறைகளிலும் அந்த 4 பேரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. பாலியல் குற்றங்கள் செய்து வரும் அந்த 4 பேரையும் பல்கலைக்கழகம் பாதுகாப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

காதலிக்காக நடுத்தெருவில் சண்டை போட்ட ஜேம்ஸ் பெக்கர்: பார்த்து சிரித்த மனைவி

Posted: 15 May 2014 12:14 AM PDT

billionaire_brawl

billionaire_brawl

This posting includes an audio/video/photo media file: Download Now

முயல் தனது குட்டியை எப்படி பாதுகாக்கும்?…. நெகிழ வைக்கும் தாய்ப்பாசம்

Posted: 15 May 2014 12:11 AM PDT

Muyal

Muyal

This posting includes an audio/video/photo media file: Download Now

கொடூர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பும் மனிதனின் ஷாக்கான நிமிடம்

Posted: 15 May 2014 12:02 AM PDT

studen-accident

studen-accident

This posting includes an audio/video/photo media file: Download Now

குப்பைகளை பெட்ரோலாக்கிய தமிழ் மாணவி!

Posted: 14 May 2014 11:56 PM PDT

Mother-of-all-invention

Mother-of-all-invention

This posting includes an audio/video/photo media file: Download Now

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் கால் இறுதியில் சானியா ஜோடி

Posted: 14 May 2014 11:50 PM PDT

Sania-Mirza

Sania-Mirzaரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இத்தாலியின் ரோம் நகரில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில், மகளிர் இரட்டையர் பிரிவு 2ம் சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, சுலோவாகியாவின் ஹன்டுசோவா, குரோஷியாவின் லூசிக் பரோனியை எதிர்த்து விளையாடியது. இதில், சானியா ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றில் இத்தாலியின் சாரா எர்ரானி 6-2, 6-3 என்ற செட்களில் ரஷ்யாவின் மகாரோவாவையும், போலந்தின் ரத்வன்ஸ்கா 6-3, 6-2 என்ற செட்களில் அர்ஜென்டினாவின் ஆர்மேசியாவையும் வீழ்த்தி, 3வது சுற்றுக்கு முன்னேறினர். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 2-6 என்ற செட்களில் ஸ்பெயினின் கர்லா சாரஸ் நவர்ரோவிடம் தோல்வி அடைந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக கோப்பை ஹாக்கி தொடர் இந்திய அணி அறிவிப்பு!

Posted: 14 May 2014 11:38 PM PDT

Haaki-team

Haaki-teamஉலக கோப்பைக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.உலக கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்தில் வரும் 31ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், இந்தியா, ஸ்பெயின், மலேசியா அணிகளும், 'பி' பிரிவில் ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, அர்ஜென்டினா, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நடுகள ஆட்டக்காரர் ஜஸ்ஜித் சிங் அறிமுக வீரராக அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், 2 ஆண்டுக்கு பிறகு குர்பஜ் சிங் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணி: ஸ்ரீஜேஷ், ஹர்ஜோத் சிங் (கோல்கீப்பர்கள்), குர்பஜ் சிங், ரூபிந்தர் சிங் (துணை கேப்டன்), ரகுநாத் (தடுப்பு ஆட்டக்காரர்கள்), சர்தர் சிங் (கேப்டன்), பிரிந்திரா லக்ரா, கோதஜித் சிங், மன்பிரீத் சிங், உத்தப்பா, தரம்வீர் சிங், ஜஸ்ஜித் சிங், சிங்லன்சனசா சிங் (நடுகள ஆட்டக்காரர்கள்), சுனில், ராமன்தீப் சிங், அகாஷ்தீப் சிங், நிகின் திம்மையா, மன்தீப் சிங் (முன்கள ஆட்டக்காரர்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

205 ரன் எடுத்தும் ஐதராபாத் ஏமாற்றம்: பஞ்சாப் அட்டகாசமான வெற்றி!

Posted: 14 May 2014 11:32 PM PDT

kings-batting

kings-battingசென்னையை வீழ்த்தியது போல, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராகவும் 205 ரன் இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் அட்டகாசமான வெற்றியை ருசித்தது. வழக்கம் போல் சிக்சர் மழை பொழிந்த மேக்ஸ்வெல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினர். பிஞ்ச் (20), தவான் (45) முதல் விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தனர். அடுத்து வந்த ஓஜா, வார்னர் ஜோடியும் அசத்தியது. ஓஜா அபாரமாக ஆடி 7 சிக்சர்கள் விளாசி அரைசதம் அடித்தார். வார்னர் 23 பந்தில் 44 ரன் எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். கடைசி வரை சிறப்பாக ஆடிய ஓஜா 36 பந்தில் 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், ஐதராபாத் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது. அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. சென்னைக்கு எதிரான முதல் லீக் போட்டியிலும் பஞ்சாப் அணி இதே இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது. அந்த போட்டியை போலவே இம்முறையும் பஞ்சாப் வீரர்கள் அடித்து நொறுக்கினர்.சேவக் 4 ரன்னில் வெளியேறிய போதும், அடுத்து ஜோடி சேர்ந்த ஓஹ்ரா, சாஹா இருவரும் அடித்து விளாசினர். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறந்தது. 22 பந்தில் அரைசதம் அடித்த சாஹா 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பட்டையை கிளப்பிய மேக்ஸ்வெல் சிக்சர் மழை பொழிந்தார். 13 ஓவரில் பஞ்சாப் 160 ரன்களை எட்டியது. மேக்ஸ்வெல் 5 சிக்சர் அடித்து 22 பந்தில் 43 ரன்களுடன் வெளியேறினார். ஆனாலும், பஞ்சாப்பின் ரன் வேகம் குறையவில்லை. கடைசி கட்டத்தில் பெய்லி 19 பந்தில் 35 ரன் குவித்து வெற்றியை உறுதி செய்தார். பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை கைப்பற்றியது. மேக்ஸ்வெல்லுக்கு அடித்த யோகம் மேக்ஸ்வெல் 23 ரன் எடுத்திருந்த நிலையில், 11வது ஓவரை வீசிய மிஸ்ரா பந்தை உயர தூக்கி அடித்தார். இதனை ஸ்டெய்ன் கேட்ச் பிடிக்க அரங்கம் முழுவதும் கூடியிருந்த ஐதராபாத் ரசிகர்கள் பயங்கர குஷியாயினர். ஆனால், இந்த பந்து 'நோ&பால்' என மேக்ஸ்வெல், அம்பயரிடம் முறையிட்டார். 3வது அம்பயர் சோதித்து பார்த்ததில், மிஸ்ரா கோட்டை தாண்டி கால் வைத்து பந்துவீசியது தெரிந்தது. இதனால், மேக்ஸ்வெல் தப்பினார். இது சரியான அவுட்டாக இருந்திருந்தால், ஆட்டத்தின் முடிவு மாறியிருக்க வாய்ப்புள்ளது. பின்னர், அதே மிஸ்ரா பந்திலேயே மேக்ஸ்வெல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தடைச் சட்டத்தினை ரத்து செய்ய பிரிட்டன் விடுத்த கோரிக்கை! இலங்கை நிராகரிப்பு!

Posted: 14 May 2014 11:23 PM PDT

british-goverment

british-govermentபயங்கரவாத தடைச் சட்டத்தின் ரத்து செய்யுறுமா பிரிட்டன் அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கோபி என்ற புலி உறுப்பினருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் கைது செய்யபபட்டமைக்கும் பிரிட்டன் அதிருப்தி வெளியிட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் மற்றும் வெளிவிவார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்கள் தடை செய்யப்பட்டமைக்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் இலங்கையில் சட்டத்தை நீக்குமாறு கோருவது எந்த வகையில் நியாயமாகும் என இலங்கை அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™