Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் உணரவேண்டும் இந்த காட்சியை பார்த்து!!

Posted: 07 Apr 2014 11:32 PM PDT

Truth

Truth http://www.youtube.com/watch?v=cZGghmwUcbQ

This posting includes an audio/video/photo media file: Download Now

கோஹ்லி, அஷ்வின் முன்னேற்றம் : ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் வெளீயீடு!!

Posted: 07 Apr 2014 11:01 PM PDT

dhoni

dhoniடி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் கோஹ்லி,அஷ்வின் இருவரும் முதல் முறையாக 2வது மற்றும் 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளனர். வங்கதேசத்தில் நடந்த உலக கோப்பை டி20 போட்டித் தொடரின் பைனலில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இலங்கை அணி, தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா 2வது இடத்தில் உள்ளது. தொடர் நாயகன் விருது பெற்ற கோஹ்லி, பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 889 ரேட்டிங் புள்ளிகளுடன் முதல் முறையாக 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். சக வீரர் சுரேஷ் ரெய்னா 10வது இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய சுழல் அஷ்வின், பாகிஸ்தானின் சயீத் அஜ்மலுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர்கள் சாமுவேல் பத்ரீ, சுனில் நரைன் இருவரும் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர். பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், ஷாகித் அப்ரிடி 9வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக டி20 அணி கேப்டனாக டோனி

Posted: 07 Apr 2014 10:48 PM PDT

dhoni

dhoni வங்கதேசத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்ட உலக டி20 அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது. இந்த அணியின் கேப்டனாக இந்தியாவின் டோனி தேர்வு செய்யப்பட்டார். இந்திய வீரர்கள் ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, ஆர்.அஷ்வின் ஆகியோரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். நெதர்லாந்தின் ஸ்டீபன் மைபர்க் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக டி20 அணி: ரோகித் ஷர்மா (இந்தியா), ஸ்டீபன் மைபர்க் (நெதர்லாந்து), விராத் கோஹ்லி (இந்தியா), ஜீன் பால் டுமினி (தென் ஆப்ரிக்கா), கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), டோனி (இந்தியா, கேப்டன்), டேரன் சம்மி (வெஸ்ட் இண்டீஸ்), ஆர்.அஷ்வின் (இந்தியா), டேல் ஸ்டெயின் (தென் ஆப்ரிக்கா), சாமுவேல் பத்ரீ (வெஸ்ட் இண்டீஸ்), லசித் மலிங்கா (இலங்கை). 12வது வீரர்: கிரிஷ்மர் சான்டோகி (வெஸ்ட் இண்டீஸ்).

This posting includes an audio/video/photo media file: Download Now

பெட்கோவிக் சாம்பியன்!! சார்ல்ஸ்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி

Posted: 07 Apr 2014 10:43 PM PDT

Andrea-pedguick

Andrea-pedguickஅமெரிக்காவில் நடந்த சார்ல்ஸ்டன் பேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனி வீராங்கனை ஆண்ட்ரியா பெட்கோவிக் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஸ்லோவகியாவின் ஜானா செபலோவாவுடன் நேற்று மோதிய பெட்கோவிக் முதல் செட்டில் 4-5, 30-40 என பின்தங்கினார். இந்த நிலையில் கடுமையாகப் போராடி செட் பாயின்ட்டை தவிர்த்ததுடன் தொடர்ச்சியாக 8 கேம்களை கைப்பற்றி 7-5, 5-0 என முன்னிலை பெற்று 7-5, 6-2 என நேர் செட்களில் செபலோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். செபலோவா, முதல் சுற்றில் நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்சை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அசைவம் சாப்பிடுபவர்களை அசிங்கப்படுத்திய பார்த்திபன்!! 'சைவம்' விழாவில் பரபரப்பு

Posted: 07 Apr 2014 10:28 PM PDT

Ayankaran

Ayankaran பணம் வாங்காம ஓட்டுப் போட்டா அது சைவம்.... வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டால் அசைவம்... என்றார் பார்த்திபன். பொய் சொல்ல போறேன், கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா ஆகிய படங்களை டைரக்ட்டு செய்த விஜய் இயக்கி இருக்கும் புதிய படம் 'சைவம்.' இந்த படத்தில் நடிகர் நாசர், சிறுமி சாரா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். ஏ.எல்.அழகப்பன் படத்தை தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. பாடல்களை இயக்குநர் கவுதம் வாசுதேவ்மேனன் வெளியிட, நடிகைகள் அனுஷ்கா, அமலா பால் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள். பார்த்திபன் விழாவில், இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கலந்து கொண்டு பேசுகையில், "நான் இந்த விழாவுக்கு, வேட்டி கட்டி வந்ததை பார்த்து, என்னிடம் சிலர் என்ன? வேட்டி கட்டி இருக்கீங்க? என்று கேட்டார்கள். கட்டாவிட்டால் அவிழ்ந்து விடும் என்று சொன்னேன். சைவ - அசைவ ஜோக் 'ஜோக்'கில் கூட சைவ 'ஜோக்', அசைவ 'ஜோக்' என்று இரண்டு உண்டு. அதேபோல முத்தத்திலும் சைவ முத்தம், அசைவ முத்தம் என இரண்டு வகை முத்தம் இருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறி இருக்கிறார். சிங்கத்தின் கதை சிங்கம், சைவமா? அசைவமா? என்று கேட்டால் எல்லோரும், அசைவம் என்று தான் சொல்வார்கள். நான் யு.டியூப்பில் ஒரு படம் பார்த்தேன். ஒரு சிங்கம் குரங்கை கடித்து வாயினால் கவ்வி இழுத்துக்கொண்டு வந்தது. அப்போது குரங்கின் வயிற்றில் இருந்து ஒரு குட்டி கீழே விழுந்தது. அந்த குட்டி தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயன்றது. உடனே சிங்கம் குரங்கை விட்டுவிட்டு அதன் குட்டியை கவ்வியபடி தன் குட்டிகள் இருக்கும் இடத்துக்கு கொண்டு வந்தது. அந்த குரங்குக் குட்டியை சிங்கம் தடவிக் கொடுத்தது. உணர்வுதான் முக்கியம் குரங்குக் குட்டியை இன்னொரு சிங்கம் கடிக்க வந்தபோது அந்த சிங்கத்தை இந்த சிங்கம் விரட்டி அடித்தது. இப்போது சொல்லுங்கள், சிங்கம், சைவமா, அசைவமா?. உணவால் சைவமா, அசைவமா? என்பது முக்கியம் அல்ல. உணர்வால் சைவமா, அசைவமா? என்பது தான் முக்கியம். ஓட்டு பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால் அதற்கு பெயர், அசைவம். வாங்காமல் ஓட்டுப்போட்டால் சைவம். இயக்குநர்களில் விஜய் மாதிரி சைவமான ஆளைப் பார்தத்தில்லை. அவர் உணர்வுகளின் அடிப்படையில் படம் எடுக்கிறவர். ''திருவள்ளுவருக்கு கூட அறத்துபால், பொருட்பால், காமத்துபால் ஆகிய 3 பால்களைத் தான் தெரியும். திருவள்ளுவரை விட, விஜய் பெரிய ஆள். அவருக்கு அமலா பாலையே தெரியுமே... விஜய், திருமணத்துக்கு பின் முத்தத்தில் சைவமாக இருந்தால், 'அமலா'க்கப்பிரிவினர் வந்து கைது செய்து விடுவார்கள்!'' என்றார். சரீ... ஓட்டுக்கு பணம் வாங்கும் சட்டவிரோதமும், அசைவம் சாப்பிடுவதும் ஒன்றாகிவிடுமா.. என்னங்க பார்த்திபன்?

This posting includes an audio/video/photo media file: Download Now

விடிய விடிய ஆட்டம் போட்ட விஜய், சித்தார்த்: பிரபுதேவா கொடுத்த மது விருந்து!

Posted: 07 Apr 2014 10:16 PM PDT

Prabhu-deva

Prabhu-deva நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா கொடுத்த மது விருந்தில் விஜய், சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நயன்தாராவை பிரிந்த பிறகு மும்பை சென்ற பிரபுதேவா அப்படியே அங்கேயே தங்கிவிட்டார். ரீமேக் படங்களை எடுப்பதில் வல்லவராக உள்ளதால் அவரை பாலிவுட் கொண்டாடுகிறது. இந்நிலையில் பிரபுதேவா திடீர் என்று சென்னை வந்து தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து மது விருந்து அளித்துள்ளார். அந்த விருந்தில் இளைய தளபதி விஜய், சித்தார்த், இயக்குனர் ஷங்கர், நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மது விருந்து விடிய விடிய நடந்துள்ளதாம். நாசர், ஷங்கர் ஆகியோரை ஓரமாக உட்கார வைத்துவிட்டு யூத் ஹீரோக்களுடன் விஜய் பார்ட்டியை என்ஜாய் செய்துள்ளார். ஒரு காலத்தில் நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்லாமல் இருந்தவர் விஜய். அண்மை காலமாக விஜய் நள்ளிரவு பார்ட்டிகளில் விடிய விடிய தூள் கிளப்பி வருகிறார் என்று செய்திகள் வெளியாகின.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமலா பால் திடீர் அறிக்கை – இயக்குநர் விஜய்யுடன் என் எதிர்காலம்…!

Posted: 07 Apr 2014 10:06 PM PDT

AmalaPaul

AmalaPaulஇயக்குநர் விஜய்யுடனான எனது எதிர்காலம் குறித்து விரைவில் விரிவாக மீடியாவிடம் பேசப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை அமலா பால். இயக்குநர் விஜய்யின் தெய்வத் திருமகள் படம்தான் அமலா பால் முதலில் நடித்தது. ஆனால் படத்தில் நடிக்கும்போதே, அமலா பால் - விஜய் நெருக்கம் குறித்து ஏகப்பட்ட செய்திகள் வந்தன. விஜய்யின் குடும்பத்தில் ஒருவராகவே மாறி, அவர்கள் வீட்டு விசேஷங்களில் அமலா பாலும் கலந்து கொண்டார். இதுகுறித்து கேட்டபோது, சினிமா வழக்கப்படி, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். வேறு ஒன்றுமில்லை என்று கூறி  இந்த நிலையில் விஜய்க்கும் அமலாவுக்கும் திருமணம் என்று சில தினங்களாக கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வ செய்தி எனும் அளவுக்கு உறுதியான செய்திகள் வெளியாகின. விஜய் தரப்பில் இதுகுறித்து எந்த விளக்கமும் இல்லை. ஆனால் அமலா பால் திடீரென நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "இயக்குநர் விஜய்யுடனான எனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து, அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் மீடியா நண்பர்களிடம் நேரில் பேசவிருக்கிறேன். என்னைப் பற்றியும், இயக்குநர் விஜய் பற்றியும் எங்கள் இருவரின் எதிர்காலம் குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல் தரும் வரை பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

டெண்டுல்கர் ஆறுதல்! யுவராஜ்சிங்.. உங்க அத்தியாயம் முடியலை!!

Posted: 07 Apr 2014 09:54 PM PDT

Yuvraj-Singh-Sachin-Tendulkar

Yuvraj-Singh-Sachin-Tendulkar20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய யுவராஜ்சிங் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் முன்னாள் வீரர் டெண்டுல்கர் யுவிக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தமது 'பேஸ்புக்' பக்கத்தில் யுவராஜ்சிங் பற்றி எழுதியிருப்பதாவது: யுவி... ஒரு நாள் நீங்கள் சோபிக்காமல் போய் இருக்கலாம். அதற்காக கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் அணிக்கு அளித்த மிகப்பெரிய பங்களிப்புகள், பல மறக்க முடியாத இனிமையான நினைவுகளை அழித்து விட முடியாது. இன்று உங்களது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம். இந்த தொய்வு நிரந்தரமானது அல்ல. 2015-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியில் நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் மட்டுல்ல, உலகில் உள்ள இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். நேற்று முன்தினம் மாலை உங்களுக்கு கடுமையான நாள். உங்களை எல்லோரும் விமர்சித்து இருக்கலாம். அதற்காக உங்களுடைய கிரிக்கெட் அத்தியாயம் முடிந்து விட்டதாக அர்த்தமல்ல. யுவராஜ்சிங்கின் முழுமையான உத்வேகத்தை கண்டு மெச்சுபவர்களில் நானும் ஒருவன். அவர் பல்வேறு சவால்களை களத்திலும், வெளியிலும் கடந்து வந்துள்ளார். அவரது மனஉறுதியும், போராட்ட குணமும் அவரை இன்னும் வலிமையான மனிதராக வெளிக்கொண்டு வரும். தன் மீதான விமர்சனங்கள் தவறு என்பதை மீண்டும் நிரூபித்து காட்டுவார். இவ்வாறு தெண்டுல்கர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்னும் கண்டுபிடிக்கவில்லை: மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதமாச்சு!!

Posted: 07 Apr 2014 09:46 PM PDT

Malasiya

Malasiya மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. ஆனால் இன்னும் விமானத்தை கண்டுபிடிக்கவில்லை. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.370 239 பேருடன் கடந்த மாதம் 8ம் தேதி சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது. ஆனால் அந்த விமானம் மாயமானது. இரண்டு வார தேடலுக்கு பிறகு விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணியில் 14 விமானங்கள் மற்றும் 14 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இன்றைய தேடலில் கூடுதலாக 11 ராணுவ விமானங்கள், 3 பயணிகள் விமானங்கள் மற்றும் 14 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய பெருங்கடலில் 2 மணிநேரத்திற்கும் மேலாக கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலி போன்று கேட்டதாக ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் தெரிவித்தது. இதையடுத்து ஒலி வந்த இடத்தில் தேடல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றுடன் விமானம் மாயமாகி ஒரு மாத காலம் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சீனாவின் ஷான்சி பிராந்தியத்தில் நிலச் சரிவு : இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பலி

Posted: 07 Apr 2014 09:38 PM PDT

tsunami-house

tsunami-house பீஜிங்-சீனாவின் வடபகுதியில் உள்ள ஷான்சி பிராந்தியத்தில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியானார்கள். சீனாவின் ஷான்சி பிராந்தியத்தில் பள்ளத்தாக்கு பகுதியான ஜியான் கவுன்டியில் உள்ள ஜிகுவான் கிராமத்தில் நேற்று அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. பூமியில் 2 ஆயிரம் மீட்டர் அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டதால், கிராமத்தில் இருந்த பல கட்டிடங்கள் நொறுங்கி தரைமட்டமாயின. ஒரு கட்டிடத்தின் இடிபாடுகளில் 8 பேர் உயிருடன் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இடிபாடுகளில் சிக்கி பலியான 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். நிலச்சரிவு அபாயம் இருப்பதால் கிராமத்தில் இருந்த மற்றவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு மாவட்ட அதிகாரிகளால் கேட்டு கொள்ளப்பட்டனர்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோடைகாலத்தில் வீதியைச் செப்பனிடுவதற்கு 215 மில்லியன் ஒதுக்கீடு!கனடா நகரங்களில் ஒன்றான டொரண்டோவில்!!

Posted: 07 Apr 2014 09:23 PM PDT

canada-road

canada-roadவரவிருக்கின்ற கோடைகாலத்தில் ரொற்ன்ரோப் பகுதியில் வீதிகளைச் செப்பனிட வேண்டியிருக்கின்றதெனவும் அதற்காக கிட்டத்தட்ட 215 மில்லியன் செலவில் நடைபெறவுள்ளதெனவும் தெரியவருகிறது. கிட்டத்தட்ட 185 கிலோமீற்றர் நீளமாளவிலான வீதியினது மேல் தளமானது திருத்தி அமைக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும் அவற்றை அவசியம் திருத்த வேண்டும் எனவும் பொதுப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்புக் குழவினது தலைவரான Coun. Denzil Minnan-Wong என்பவர் பத்திரிகை மாநாடொன்றில் திங்கட்கிழமை தெரிவித்திருக்கின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்தத் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்குப் பெரிதும் சவாலாக நிதி நிலையிருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். திருத்தியமைக்கப்படவுள்ள வீதிகளின் விபரங்கள் இதோ. Markham Road—— from Kingston Road to Lawrence Avenue Victoria Park Avenue————– from Eglinton Avenue to Lawrence Avenue Wilson Avenue ———–from Bathurst Street to Dufferin Street Finch Avenue———————- from Kipling Avenue to Highway 27 Kipling Avenue —————from Bloor Street to Dixon Road

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடா பொருளாதாரம் சீராக உள்ளது:கனடா வங்கியினால் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் தகவல்

Posted: 07 Apr 2014 09:17 PM PDT

canada-bank

canada-bank கனடிய வங்கியினது ஆய்வு தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துதல், செலவு செய்தல் பேன்றவற்றில் நம்பிக்கை தெரிவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடியப் பொருளாதாரம் நம்பிக்கையளிப்பாதாகவும் இந்த நிலையானது பணி புரிபவர்களுக்கு உற்சாகத்தையளிக்கவல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியினது 100 தொழில் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலின் பிரகாரமே கனடியப் பொருளாதரம் சாதகமான நிலையில் இருக்கின்றது எனக் கூறுகின்றது எனத் தெரிகிறது. குறிப்பிட்ட 100 நிறுவனங்கள் மார்ச் மாதத்தில் புதிய தொழிலாளர்களுக்கு வேலைவழங்குவறதற்கான உத்தேசத்தில் இருக்கின்றார்கள் எனவும் அந்த நிறுவனங்களில் கடந்த வருடத்திலும் விற்பனை சிறந்து விளங்கியிருக்கின்றது எனவும் தெரிவித்திருக்கின்றது. வங்கி தெரிவித்திருக்கின்ற அதே வேளை கனடியப் பொருளியலாளர்களும் கனடியப் பொருளாதாரம் பற்றி நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் உற்பத்தியாளர்கள் தாம் தமது தொழில்கள்மேல் செலவிடும்தொகையை அதிகரிக்கவுள்ளாதாகவும் அதன் மூலமாக மேலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும் எனவும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

முத்தான சத்துக்களை கொண்ட மாதுளை!!

Posted: 07 Apr 2014 08:30 AM PDT

Madhulai

Madhulai

முத்து முத்தான முத்துக்களைக் கொண்டு சத்துக்களை சுமப்பது மாதுளை. சுவையிலும் சிறந்தது. ஆரோக்கியத்திற்கும் உதவுவது..

100 கிராம் மாதுளையில் 83 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இது ஆப்பிள் வழங்கும் ஆற்றலை விட அதிகமாகும். கொழுப்பு வகையான கொலஸ்டிரால் கிடையாது.

நார்ச்சத்துக்கள் மாதுளையில் உண்டு. 100 கிராம் மாதுளையில் 4 கிராம் நார்ச்சத்து கிடைக்கிறது. இது ஜீரணத்திற்கும், குடல் செயல்பாட்டிற்கும் நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது மாதுளை. ஏனெனில் கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. வழக்கமாக மாதுளையை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கும்.

ரத்த ஓட்டம் சீராக இருக்கும். புற்றுநோய் தொற்றாது. புனிகலாஜின் எனும் நோய் எதிர்ப்பு மூலக்கூறு மாதுளையில் காணப்படுகிறது. இதய பாதிப்புகளை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களில் இருந்து உடலைக் காக்க வல்லது இது.சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் வைட்டமினான வைட்டமின் சி சிறந்த அளவில் உள்ளது. தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 17 சதவீதத்தை 100 கிராம் மாதுளை வழங்கிவிடும்.

இதனால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியும் உடலுக்கு கிடைக்கும். தொடர்ந்து மாதுளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நீரிழிவு, லிம்போமா போன்ற நோய்களும் அண்டாது. பி குழும வைட்டமின்களும், வைட்டமின் கேயும் மாதுளையில் நிறைந்துள்ளது.தாது உப்புக்களான கால்சியம், காப்பர், பொட்டாசியம், மாங்கனீசு குறிப்பிட்ட அளவில் கிடைக்கிறது.

100 கிராம் மாதுளையில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையை கணக்கிட்டால் 2 ஆயிரத்து 341 மைக்ரோ மூலக்கூறு டி.இ. அளவில் நன்மை தருவதாக கணிக்கப்பட்டுள்ளது. புத்துணர்ச்சியுள்ள மாதுளை அலாதியான சுவை வழங்கும். தோலை நீக்கி முத்துக்களை சாப்பிடலாம். மாதுளை ஜூஸ் உடலுக்கு ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும் வழங்கும். சூப், ஜெல்லி, சாஸ் தயாரிப்பிலும் மாதுளை பயன்படுகிறது.

கேக் உற்பத்தியிலும் சேர்க்கப்படுகிறது. மாதுளை சேர்த்து செய்யப்படும் ஈரான் உணவான பெசன்ஜன் பிரபலம். இது மாதுளை பழச்சாற்றுடன் அக்ரோட்டு கொட்டைகள், பிலாப் அரிசியுடன் சேர்த்து சமைக்கப்படுகிறது. மத்திய ஆசிய நாடுகளிலும் மாதுளைச் சாறு பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இது உணவுக்கு இன்சுவை அளிப்பதுடன், தனியாக சுவைப்பதைவிட இரண்டரை மடங்கு சத்து வழங்குகிறதாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இரு மதகுருமாரும் கன்னியாஸ்திரியும் கடத்தல் :கெமெரூனில் பரபரப்பு!

Posted: 07 Apr 2014 07:21 AM PDT

Italian-Priests

Italian-Priests கெமெரூனில் இரு இத்தாலிய மதகுருமாரும் கனேடிய கன்னியாஸ்திரியொருவரும் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சனிக்கிழமை கடத்தப்பட்டுள்ளதாக இத்தாலிய வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. கெமெரூனின் வடமேற்கேயுள்ள மரோவா மாவட்டத்திலுள்ள கட்டடமொன்றை கொள்ளையிட்ட ஆயுததாரிகள், மேற்படி மதகுருமாரையும் கன்னியாஸ்திரியையும் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட மதகுருமாரில் ஒருவர் கெமெரூனில் கடந்த 6 வருடங்களாக தங்கியிருந்ததாகவும் மற்றைய மதகுரு அந்நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு முன்பே வந்ததாகவும் இத்தாலிய ஊடகமொன்று அறிக்கையிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கா கண்டுபிடித்ததா? மலேசிய விமான கருப்புப் பெட்டியை!!

Posted: 07 Apr 2014 07:12 AM PDT

Army-USA

Army-USA இந்திய பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடி வரும் நிலையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அதிநவீன கருவி கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் 239 பேருடன் விழுந்த மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல் ஹைசுன் 01 கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டுபிடித்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று வேறு ஒரு பகுதியில் ஒலியை கண்டறிந்தது. இந்நிலையில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிய அமெரிக்க கடற்படை அதிநவீன கருவியை பயன்படுத்தி வருகிறது. அந்த கருவி கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை இன்று கண்டறிந்துள்ளது. இந்த 3 ஒலிகளும் மாயமான விமானத்தினுடையது தானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் விமானம் ஒன்று கடலுக்கு அடியில் கிடப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஒலிகள் வந்த பகுதியில் விமானத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மிக்கி ரூனி பழம்பெரும் அமெரிக்க நடிகை காலமானார் !

Posted: 07 Apr 2014 07:05 AM PDT

Mickey-Rooney

Mickey-Rooney பழம்பெரும் அமெரிக்க நடிகை மிக்கி ரூனி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார் அவருக்கு வயது 93, 1930-1940ம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட இவர் உடல் நலம் சரியில்லாம சில காலம் இருந்தார். இந்நிலையில் நேற்று காலமானார். 1944ம் ஆண்டு எலிசபெத் டெய்லருடன் இவர் இணைந்து நடித்துள்ளார். பெரும்பாலும் எதிர்மறையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அவர் 8 முறை திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

குழந்தையின் அறிவுத்திறன் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது!

Posted: 07 Apr 2014 06:54 AM PDT

Baby

Baby http://youtu.be/0MdCIL622yo

This posting includes an audio/video/photo media file: Download Now

நமது உடலில் உணவு ஜீரணம் ஆவது எப்படி என்று தெரியுமா?

Posted: 07 Apr 2014 06:29 AM PDT

Human-Body

Human-Body https://www.youtube.com/watch?v=_yfYYI2NM_4

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் உபேந்திரா சுற்றுபயணம்! கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மருமகளுக்காக பிரச்சாரம்!!

Posted: 07 Apr 2014 03:56 AM PDT

Ubendra

Ubendraநாடாளுமன்ற தேர்தலில் ஷிமோகாவில் போட்டியிடும் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதாவுக்கு ஆதரவாக நடிகர் உபேந்திரா பிரச்சாரம் செய்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கீதாவுக்கு ஆதரவாக யார் பிரச்சாரம் செய்தார்கள் என்று பார்ப்போம். கன்னட நடிகர் உபேந்திரா தனது நண்பர் சிவராஜ்குமாருடன் சேர்ந்து நேற்று ஷிமோகாவில் கீதாவுக்கு வாக்கு சேகரித்தார். திறந்த காரில் வந்த உபேந்திரா வரும் தேர்தலில் கீதாவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொண்டார். ஷிமோகாவில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தனது ரசிகர்களுடன் உபேந்திரா நிற்பதை சிவராஜ்குமார் போட்டோ எடுத்தார். 1994ம் ஆண்டு சூப்பர் ஹிட்டான ஓம் படத்தில் ஒன்று சேர்ந்து நடித்ததில் இருந்தே சிவராஜ்குமாரும், உபேந்திராவும் நல்ல நண்பர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள முதல் நபர் கீதா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை சோனாக்‌ஷி அதிரடி: மோடி ஊழலற்ற ஆட்சியை தருவார்….

Posted: 07 Apr 2014 03:42 AM PDT

sonakshi-sinha

sonakshi-sinhaஇது மாற்றத்திற்கான நேரம், அதனால் ஊழலற்ற ஆட்சியை நரேந்திரமோடி தருவார் என பிரபல நடிகை சோனாக்‌ஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தி பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், பிரபல இந்தி நடிகரும், பா.ஜ.க தலைவர்களில் ஒருவருமான சத்ருகன் சின்காவின் மகள் சோனாக்‌ஷி. லோக்சபா தேர்தலில் சத்ருகன் சின்கா பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுகிறார். தனது தந்தைக்காக தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள சோனாக்‌ஷி, ஆனால் தனது ஆதரவு மோடிக்குத் தான் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது :- தற்போது நாட்டிற்கு சவாலான, பெரும் பிரச்சினையாக இருப்பது, லஞ்சமும், ஊழலும்தான். இதேபோல் பெட்ரோல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இவற்றிலிருந்து நாடு விடுபடவேண்டும். அதற்கான மாற்றம் நாடாளுமன்ற தேர்தலில் நடக்கும் என்று தெரிகிறது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நிச்சயம் நாட்டுக்கு நல்லது செய்வார் என்றும் ஊழலற்ற ஆட்சியை தருவார் எனவும் நம்புகிறேன். என்னை போன்றவர்கள் நாட்டில் மாற்றம் நிகழவேண்டும் என்று தீவிரமாக நம்புகிறோம். இது மாறுதலுக்கான நேரம். நிச்சயம் மாற்றம் நிகழும் என்று கருதுகிறேன். எனக்கும், எனது தந்தைக்கும் ஒரே மாதிரியான அரசியல் சிந்தனைகள் உண்டு என்றாலும் அவரைப்போல நான் அரசியலில் சேர மாட்டேன். அப்படியொரு ஆர்வமோ, விருப்பமோ என்னிடம் இல்லை. யார் நல்லது செய்கிறார்களோ அல்லது நல்ல பணிகளை நிறைவேற்றுகிறார்களோ, அவர்களுக்கே ஓட்டுப் போடவேண்டும் என்று தனது தந்தை சொல்வார். இதை அவரும் பின்பற்றுவார். எனவே அவரது இதயம் சரியான இடத்தில் இருக்கிறது என்றுதான் சொல்வேன். அவர்களை போன்றவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும். எனது தந்தை அரசியலில் இருக்கிறார் என்பதற்காக நானும் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவசியமில்லை. அதை நோக்கி ஒருவரை தள்ளி விடவும் கூடாது. எனது வேலை சினிமாவில் நடிப்பது. அந்த வகையில் நான் இங்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எனது தந்தை போட்டியிடும் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டேன். எனது தந்தை தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னைவிட எனது தந்தையிடமிருந்து மக்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். எனவே நான் அங்கே வருவதை அவர் விரும்பமாட்டார். மேலும், நான் ஒரு அரசியல் பிரமுகர் அல்ல. அங்கே போவதும் எனது வேலை கிடையாது. இங்கிருந்து நடிப்பு சம்பந்தமான வேலை கவனிப்பதுதான் எனது வேலை. அவருக்கு என்னுடைய ஆதரவு உண்டு. அவர் தேர்தலில் சிறப்பாக செயல்பட பிரார்த்திக்கிறேன்' என இவ்வாறு சோனாக்‌ஷி கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™