Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அஜீத் படத்தில் வில்லனா? அரவிந்த்சாமி ஆவேசம்

Posted: 04 Apr 2014 08:20 AM PDT

Aravindsamy

Aravindsamy அஜீத் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றார் அரவிந்த்சாமி.தளபதி, தாலாட்டு, மறுபடியும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் அரவிந்த்சாமி. சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். மீண்டும் கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கடல் என்ற படம் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். அதன்பிறகு புதிய படங்களை ஏற்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில் வில்லன் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக இணைய தளங்களில் பரபரப்பாக தகவல் பரவிவருகிறது. இதையறிந்து அரவிந்த்சாமி, வில்லன் வேடத்தில் நடிக்கவில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார். மேலும்,நான் வில்லன் வேடத்தில் நடிப்பதாக முட்டாள்தனமாக யாரோ வதந்தி கிளப்பி விடுகிறார்கள். வில்லன் வேடத்தில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நான் ஏற்கும் வேடம் குறித்து எனது டுவிட்டர் பக்கத்தில் நானே வெளியிடும்வரை அதுபற்றி யாரும் நம்ப வேண்டாம் என்று கோபமாக கருத்து தெரிவித்திருக்கிறார். வீரம் படத்தையடுத்து கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்க உள்ளார். ஆரம்பம், வீரம் போன்ற படங்களில் பெப்பர்&சால்ட் ஸ்டைலில் நரைத்த தலைமுடியுடன் நடித்துவந்த அஜீத் இப்படத்திற்காக தனது ஹேர் ஸ்டைலை முன்புபோல் கருப்பு நிறத்துக்கே மாற்றி இருக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை சுஜிபாலா புகார்: டைரக்டர் ரவிக்குமாரிடம் போலீசார் விசாரணை

Posted: 04 Apr 2014 08:10 AM PDT

Sujibala

Sujibala சந்திரமுகி,கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, கலவரம் உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் சுஜிபாலா. இவர் நேற்று இரவு வடபழனி போலீஸ் நிலையத்தில் டைரக்டர் ரவிக்குமார் மீது புகார் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் சுஜிபாலா கூறியதாவது: கடந்த 2011ல், உண்மை படத் தில் ரவிக்குமார் ஜோடியாக நடித்தேன். திடீரென ஒரு நாள் அவர் என்னை காதலிப்பதாக கூறினார். என் பெற்றோர் ஒப்பு கொள்ள மாட்டார்கள் என்று மறுத்தேன். இதையடுத்து ரவிக்குமார் என் பெற்றோரை சந்தித்தார். 2012ல் நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. எனினும், எனக்கு திருமணம் வேண்டாம் என்று மறுத்தேன். தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். ஆனால், என்னை காப்பாற்றி விட்டார்கள். நீ என்னை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றால், நான் செத்துவிடுவேன் என்றும், உன்னை அசிங்கப்படுத்துவேன் என்றும் போனில் ரவிக்குமார் மிரட்டுவார். ஆபாசமாகவும் பேசுவார். எனக்கும், அவருக்கும் திருமணம் நடக்கவில்லை. ரவிக்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பது எனக்கு தெரிந்து விட்டது. விலாசம் படத்தில் நடிக்கும் என்னை சிலருடன் சம்பந்தப்படுத்தி தப்புத் தப்பாக பேசுகிறார். அவர் பேசியதை செல்போனில் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன். ரவிக்குமார் வாங்கியுள்ள கடன்களை அடைக்க என் பெயரை பயன்படுத்துவதாக நினைக்கிறேன். கடன்காரர்கள் என்னிடம் வந்து கேட்கிறார்கள். ரவிக்குமாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமீபத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடிய போது, ரவிக்குமார் என்னை அடித்தார். இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செய லாளர் ராதாரவியிடம் புகார் அளித்தேன். இனி ரவிக்குமாரின் படத்தில் நான் நடிக்க மாட்டேன். என் உயிருக்கும், என் பெற்றோர் உயிருக்கும் ரவிக்குமாரால் ஆபத்து ஏற்படும் என்று பயப்படுகிறேன். இதுகுறித்து போலீசில் புகார் கூறிஉள்ளேன். இவ்வாறு நடிகை சுஜிபாலா கூறினார். அதன் அடிப்படையில் இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சுஜிபாலா அளித்தது பொய் புகார் என்று தெரிந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிளானோவில் இசைப் பள்ளி ஆண்டு விழா

Posted: 04 Apr 2014 07:54 AM PDT

Divyathwani

Divyathwani பிளானோ பகுதி திவ்யத்வானி இசைப் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம் மார்ச் 23ம் தேதியன்று நடைபெற்றது. பள்ளியின் நிறுவனர் பத்மா அசோக் கிருஷ்ணன், விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார். பல்வேறு வயதுடைய குழந்தைகளின் இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. நிகழ்ச்சியில் சுமார் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். வர்ணம், இசை மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள் மற்றும் உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள் உள்ளிட்டவற்றை குழந்தைகள் தங்கள் இனிய மழலை குரலில் பாடி அசத்தினர். ஜெய் மற்றும் கிருஷ்ணனின் மிருந்தங்க இசையும், ஸ்ரீதர் மற்றும் ஸ்ரேயா அசோக் கிருஷ்னின் வயலின் இசையும் நிகழ்ச்சிக்கு பக்கபலமாக அமைந்தது. இந்திய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், இந்திய நண்பர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர். மங்கலத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது. விழாவின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் சம்யுக்தா அசோக் கண்ணன் தொகுத்து வழங்கினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடலுக்கு புத்துணர்வு தரும் 'மங்குஸ்தான்' பழம்

Posted: 04 Apr 2014 07:30 AM PDT

Mangusthaan

Mangusthaan

மங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில், உருண்டை வடிவில் பார்க்க அழகாகவும், சுவைக்க இனிதாகவும் இருக்கும். ஜூன் முதல் அக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் 'சீசன்' ஆகும்.

இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். மங்குஸ்தான் பழம், குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் சதைப்பற்றில் 63 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகள் மங்குஸ்தான் பழத்தில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது. 100 கிராம் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.

பி-குழும வைட்டமின்களான தயாமின், நியாசின், போலேட் போன்றவையும் கணிசமான அளவில், மங்குஸ்தானில் காணப்படுகிறது. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளில் இந்த வைட்டமின்கள் துணைக்காரணியாக உதவுகின்றன.அதிக அளவில் தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளது. உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது அவசியமானது. பக்கவாதம் மற்றும் இதயவியா திகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.

இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கம்பியூட்டரில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது.

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரோக்கியப் பெட்டகம்: வேர்க்கடலை

Posted: 04 Apr 2014 07:18 AM PDT

Verkadalai

Verkadalai பசியால் துடிப்பவர்களுக்கு பர்ஸை பதம் பார்க்காமல் பத்தே ரூபாயில் வயிறை நிறையச் செய்கிற ஒரு உணவு வேர்க்கடலை. கைப்பிடி வேர்க்கடலையை தின்றுவிட்டு தண்ணீர் குடித்தால், அடுத்த சில மணி நேரத்துக்கு பசித்த வயிறு அமைதி காக்கும். எல்லா பருப்பு வகைகளையும் போன்ற துதான் வேர்க்கடலையும். அதிக புரதச் சத்து நிறைந்தது. அதே நேரம் மற்ற பருப்பு வகைகளைவிட, இதில் அதிகக் கொழுப்புச் சத்தும் உண்டு. உடலுக்குத் தேவையான ஆற்றலையும் புரதச் சத்தையும் கொடுப்பதில் வேர்க்கடலைக்கு இணையே இல்லை எனலாம். அதனால்தான் மகாத்மா காந்தி வெறும் வேர்க்கடலையை மட்டுமே சாப்பிட்டு, பல வேளைகள் பசியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால், வேர்க்கடலையை அளவோடுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். 20 கடலைகளுக்கு மேல் எடுக்க வேண்டாம். என்ன இருக்கிறது? 100 கிராமில்... பச்சை மற்றும் வேக வைத்த வேர்க்கடலை ஆற்றல் 567 கிலோ கலோரிகள் புரதம் 25.3 கிராம் கொழுப்பு 40 கிராம் வறுத்தது ஆற்றல் 570 கிலோ கலோரிகள் புரதம் 26.2 கிராம் கொழுப்பு 39.8 கிராம் கடலைப் புண்ணாக்கு ஆற்றல் 386 கிலோ கலோரிகள் புரதம் 40.9 கிராம் கொழுப்பு 7.4 கிராம் எண்ணெய் ஆற்றல் 900 கிலோ கலோரிகள் புரதம் 0 கிராம் கொழுப்பு 100 கிராம். இவை தவிர 100 கிராம் வேர்க்கடலையில் கரோட்டின் என்கிற வைட்டமின் ஏ சத்தானது 37 மி.கி. அளவும், தயாமின் 1 மி.கி. அளவும் இருக்கின்றன. வேர்க்கடலையில் தாதுச்சத்துகளும் வைட்டமின்களும் மிக அதிகம். தயாமின் மற்றும் நிகோடினிக் அமிலமும் அதிகம் கொண்டது. உணவுத் தேவைக்கு அடுத்தபடியாக, வேர்க்கடலையை எண்ணெய் எடுக்கவே அதிகம் பயன்படுத்துகிறோம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற புண்ணாக்கில், வேர்க்கடலையைவிட அதிக புரதச்சத்து இருக்கிறது. அதனால்தான் அதை மாட்டுத்தீவனமாக உபயோகிக்கிறோம். அத்தனை அதிக புரதச்சத்து உள்ளதை நாம் ஏன் சாப்பிடக் கூடாது என்கிற கேள்வி வரலாம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற புண்ணாக்கு பெரும்பாலும் தரமாகவோ, சுத்தமாகவோ பதப்படுத்தப்படுவதில்லை என்பதே காரணம். அரிதாக சில இடங்களில் தரமாக பதப்படுத்திய புண்ணாக்கை குழந்தைகளுக்கான உணவிலும், விளையாட்டு வீரர்களுக்கான உணவிலும் சிறிது சேர்க்கிறார்கள். லைசின் எனப்படுகிற மிகச்சிறந்த அமினோ அமிலம் அதில் அபரிமிதமாக உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உடல் பலத்துக்கு மிகவும் உதவும். வேர்க்கடலையில் இருந்து பெறப்படுகிற எண்ணெய் நல்லதா, கெட்டதா என்றால், அது பாமாயிலை விட சிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும். கடலை எண்ணெயில் எசென்ஷியல் அமினோ ஆசிட் எனப்படுகிற அத்தியாவசிய அமினோ அமிலம் இருப்பதே காரணம். ஆனாலும், கடலை எண்ணெய்தான் பெஸ்ட் என்று சொல்ல முடியாது. எண்ணெய்களில் நம்பர் 1 இடம் நல்லெண்ணெய்க்குத்தான். வேர்க்கடலையை சரியாகப் பாதுகாக்காமல், சரியாகக் காய வைக்காமல் எண்ணெய் தயாரித்தால் அது ஆரோக்கியமானதாக இருக்காது. வேர்க்கடலையில் எளிதில் பூஞ்சை பிடிக்கும். அத்தகைய கடலையில் எண்ணெய் தயாரித்தால், அதில் 'ஆஃப்லாடாக்சின்' எனப்படுகிற நச்சுத்தன்மை உருவாகும். அது கல்லீரலுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது. வேர்க்கடலையை மிகப் பக்குவமாக வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிட வேண்டும். ஒருநாளைக்கு நமக்குத் தேவையான சக்தியில் 20 சதவிகிதம் கண்ணுக்குத் தெரிகிற எண்ணெயில் இருந்து கிடைக்கிறது. அந்த எண்ணெய் உபயோகத்தில் 15 முதல் 20 சதவிகிதம் கடலை எண்ணெயாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளலாம். வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன பலன்? இதில் மக்னீசியம் அதிகம் என்பதால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தவிர்க்கும். மாங்கனீசு என்கிற தாது உப்பும் அதிகமாக இருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்காக வைக்கும். வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் பி3, நினைவாற்றலுக்குப் பெரிதும் உதவக்கூடியது. அதிலுள்ள தாமிரச் சத்தானது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதுடன் புற்றுநோய் வராமலும் பார்த்துக் கொள்கிறது. எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளோருக்கும் வேர்க்கடலை உதவுகிறது. தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு பச்சை வேர்க்கடலை கொடுத்தால் பால் சுரப்பு அதிகமாகும். தீவிரமான மன அழுத்தத்தில் இருப்போருக்கும் வேர்க்கடலை உடனடி நிவாரணம் தரும் மருந்து. ரொம்ப விரக்தி யான மனநிலையில் இருக்கும்போது சிறு துண்டு கடலைமிட்டாய் சாப்பிட்டுப் பாருங்கள்... மாற்றம் உணர்வீர்கள் !

This posting includes an audio/video/photo media file: Download Now

சாம்சங் கேலக்ஸி S3 நியோ நிறுவனத்தின் இந்தியா இணையதளத்தில் பட்டியல்!!

Posted: 04 Apr 2014 06:57 AM PDT

Samsung

Samsung

சாம்சங் நிறுவனம் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இல்லாமல் அதன் இந்தியா இணையதளத்தில் சமீபத்திய ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S3 நியோ ஸ்மார்ட்போனை பட்டியலிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S3 நியோ ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குகின்றது. கேலக்ஸி S3 நியோ ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம் ஆதரவு கொண்ட இரட்டை சிம் சாதனம் ஆகும். இது ஒரு 4.8 இன்ச் HD (720x1280 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

கேலக்ஸி S3 நியோ சிப்செட் பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை, என்றாலும் 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

குறிப்பாக, கேலக்ஸி எஸ் III நியோ+ வேரியன்ட் 1.4GHz ப்ராசசர் கொண்டுள்ளது. கேலக்ஸி S3 நியோ ரேம் 1.5GB உடன் வருகிறது மற்றும் உள்ளடக்கிய சேமிப்பு பற்றி எந்த வார்த்தையும் இல்லை, ஆனால் 64GB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஆதரிக்கிறது. எல்இடி ப்ளாஷ் மற்றும் CMOS சென்ஸார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. 1.9 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

கேலக்ஸி S3 நியோ இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ் / எ -ஜி.பி. எஸ், மைக்ரோ-USB மற்றும் 3 ஜி ஆகியவை அடங்கும். கேலக்ஸி S3 நியோ மெஷர்ஸ் 136.6x70.7x8.6mm மற்றும் 132 கிராம் எடையுடையது. கேலக்ஸி S3 நியோ ஒரு 2100mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. ப்ளாக், ப்ளூ, பிரவுன், கிரே, மரூன், பிங்க் மற்றும் வைட் ஆகிய ஏழு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி S3 நியோ ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

4.8 இன்ச் HD (720x1280 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே,
1.2GHz குவாட் கோர் ப்ராசசர்,

இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்),
ரேம் 1.5GB,
64GB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு,

எல்இடி ப்ளாஷ் மற்றும் CMOS சென்ஸார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,

1.9 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,

Wi-Fi,

ப்ளூடூத்,

ஜிபிஎஸ் / எ -ஜி.பி. எஸ்,

மைக்ரோ-USB,

3 ஜி,

ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன்,

2100mAh பேட்டரி,

132 கிராம் எடை.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தானில் வினோதம்: 9 மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு!

Posted: 04 Apr 2014 06:45 AM PDT

Baby

Baby பாகிஸ்தானில் ஒன்பது மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்தவர் அகமது. இவரது 9 மாத குழந்தை மூசா. கடந்த சில தினங்களுக்கு முன்பு லாகூரில் உள்ள ஒரு பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது அகமதுவுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அகமது போலீசாரை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக அகமது மற்றும் அவரது 9 மாத குழந்தை மூசா மீது அப்பகுதி சப் இன்ஸ்பெக்டர் காசிப் அகமது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில் அகமதுவையும், மூசாவையும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஏப்ரல் 12 வரை குழந்தை மூசாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் குழந்தையிடம் 'வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி' போலீசாருக்கு கிண்டலாக உத்தரவிட்டார். இது குறித்து குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் இர்பான் தரர், நீதிமன்றத்தில் தெரிவிக்கும் போது, அடுத்த முறை விசாரணையின் போது குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று தெரிவித்தார். இதுகுறித்து எஸ்பி ரானா ஜப்பார் கூறுகையில், இந்த வழக்கில் ஏதோ தவறு நடந்துள்ளது. போலீசார் தவறாக புரிந்து கொண்டு 9 மாத குழந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே குழந்தை மீது வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் காசிப் அகமது சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து குழந்தை மூசாவின் தந்தை அகமது கூறுகையில், மின்வெட்டை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக 9 மாத குழந்தை உள்பட 27 பேர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியன் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் : கால் இறுதியில் சாய்னா !

Posted: 04 Apr 2014 06:33 AM PDT

Saina

Saina இந்தியன் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் கால் இறுதியில் விளையாட, நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் தாய்லாந்தின் நாட்சா சேங்சோட்டுடன் நேற்று மோதிய சாய்னா 21-15, 21-12 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 35 நிமிடம் மட்டுமே நீடித்தது. காஷ்யப் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் சக வீரர் குருசாய்தத்துடன் மோதிய காஷ்யப் 21-15, 16-21, 21-11 என்ற செட் கணக்கில் 59 நிமிடம் போராடி வீழ்த்தினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா  அஷ்வினி பொன்னப்பா ஜோடி ஏமாற்றத்துடன் வெளியேறியது.

This posting includes an audio/video/photo media file: Download Now

முதல்ல எவனோ கல்லை விட்டு அடிக்கிறாங்களோன்னு நினைச்சுட்டாராமே சமி…??

Posted: 04 Apr 2014 06:25 AM PDT

india

india திடீரென பெய்த மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் போட்டி பாதியிலேயே நின்று போய், டக்வொர்த்தி லூயிஸ் முறையில் போட்டியை இலங்கை வென்று கொண்டு போனதை மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சமியால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். நடப்பு டுவென்டி 20 உலக சாம்பியன் மேற்கு இந்தியத் தீவுகள் என்பது நினைவிருக்கலாம். போட்டியின்போது திடீரென கல் மாதிரி ஆலங்கட்டி வந்து விழுந்தபோது யாரோ பார்வையாளர் வரிசையிலிருந்துதான் கல்லைத் தூக்கி எறிவதாக முதலில் நினைத்து விட்டாராம் சமி. பிறகுதான் தெரிந்தது அது ஆலங்கட்டி மழை என்று. டக்வொர்த்தி லூயிஸ் முறை எங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டதாக வருத்தப்பட்டுக் கருத்து தெரிவித்துள்ளார் சமி.

This posting includes an audio/video/photo media file: Download Now

நவி பிள்ளையை உள்ளே விட மாட்டோம்.. இலங்கை திமிர்ப் பேச்சு!

Posted: 04 Apr 2014 06:12 AM PDT

Navi pillai

Navi pillai ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவி பிள்ளை தலைமயிலான விசாரணைக் குழு இலங்கைக்கு அனுமதிக்கப்பட மாட்டாதென்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், இந்தியாவின் குள்ளநரித்தனத்தையும் மீ்றி வெற்றி பெற்றது. இதையடுத்து ஆணையத் தலைவர் நவி பிள்ளை தலைமையில் ஒரு விசாரணைக் குழு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. நவி பிள்ளையும் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள ஒரு அறிக்கையில் போரின் இறுதிக் கட்டத்தினபோது கொலை செய்யப்பட்ட 40,000 பேர் குறித்த விவரத்தை நடுநிலையுடன் கூடியதாக விசாரிக்க வேண்டியது அவசியம். அவர்கள் கொல்லப்பட்ட விதம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில், நவி பிள்ளை தலைமையிலான குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை கூறியுள்ளது. போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்ளுக்குச் சென்று சாட்சியங்களை திரட்டுவதற்கு அனுமதியளிக்குமாறு நிபுணர் குழு இலங்கையிடம் கோரியுள்ளது. ஆனால் இலங்கையை போர்க்குற்றவாளியாக்க முயற்சிக்கும் சிலரின் முயற்சியே இது என்று கூறியுள்ள இலங்கை அரசு இந்த விசாரணைக்கு அனுமதி தர முடியாது என்று தெரிவித்துள்ளது. எனவே இலங்கைக்கு நவி பிள்ளை போவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், வெளியில் இருந்தபடியே இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான முழுமையான ஆதாரங்களையும் திரட்டி இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க நவி பிள்ளை தலைமையிலான குழு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

16 அமைப்புகள், 424 வெளிநாடு வாழ் ஈழத் தமிழருக்கு தடை- இலங்கை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Posted: 04 Apr 2014 06:05 AM PDT

mahinda rajapaksa

mahinda rajapaksaவெளிநாடுகளில் செயல்படும் 16 ஈழத் தமிழர் அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 424 பேரை தடை செய்வதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட உடனேயே வெளிநாடு வாழ் ஈழத் தமிழர் அமைப்புகளை தடை செய்யப் போவதாக இலங்கை தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மார்ச் 21-ந் தேதியிட்ட கெஜட் அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், நாடு கடந்த தமிழீழ அரசு உட்பட 16 ஈழத் தமிழர் அமைப்புகள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக பட்டியலிடப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்த அமைப்புகளின் நிர்வாகிகள், அவற்றுடன் தொடர்புடைய 424 பேர் பெயர், வாழும் நாடு, தொலைபேசி இலக்கங்கள் ஆகியவற்றை வெளியிட்டு அனைவரும் தடை செய்யப்பட்டவர்களாகவும் இலங்கை அரசு அந்த கெஜட் அறிவிப்பில் கூறியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சமுக முன்னேற்றங்கள் ரீதியாக உலகில் 7வது இடத்தில் கனடா இருக்கின்றது!!

Posted: 04 Apr 2014 05:44 AM PDT

canada

canada நாட்டினது உள்நாட்டு உற்பத்தி, தனிமனிதனது மாதாந்திர வருமானம் போன்ற விசயங்களுக்கு அப்பால் கனடா உலகில் மனித முன்னேற்றங்கள் சம்பந்தமாக 7 இடத்தை வகிக்கின்றது. என இரு வேறு உலக அமைப்புக்கள் இணைந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்கள் எனத் தெரிகிறது.பெறப்பட்ட தரவுகள் மனித வாழ்வுடன் தொடர்புடைய பல்வேறு விடையங்களையுள்ளடக்கியதாக இருப்பதாவும் தெரிகிறது. குறிப்பாக சர்வதேச ரீதியக மனிதர்கள் மகிழ்வுடன் வாழ்கின்றார்களா என்பது பெரும் கேள்விக்குரிய விடையமாக உள்ளது. இந்தத் தரவில் அவ்வாறான விடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனத் தெரிகிறது. மனிதர்கள் மகிழ்வுடன் வாழ்கின்றார்களா என்ற தரவின்படி கனடா 6 வது இடத்தை வகிக்கின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் மனித வாழ்விற்க உகந்த இடங்கள். மற்றும் மனித வாழ்க்கைத் தரம், மந்தகதியில் செல்லும் பொருளாதார நிலையின்போதும் மனித வாழ்வு, சமுக ரீதியாக அவர்களது இயக்கம் போன்ற பல்வேறு விடையங்கள் கருத்தில் எடுக்கப்பட்டு அந்தத் தரவுகளின் அடிப்படையில் A U.S. non-profit group, the World Economic Forum என அழைக்கப்படுகின்ற இருவேறு அமைப்புகள் இணைந்து 132 நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கனடா 7வது இடத்தை வகிக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தரப்படுத்தப்பட்டுள்ள 20 நாடுகளின் விபரங்களை வாசகர்கள் பார்வைக்கு வைக்கின்றோம். 1. New Zealand 2. Switzerland 3. Iceland 4. Netherlands 5. Norway 6. Sweden 7. Canada 8. Finland 9. Denmark 10. Australia 11. Austria 12. Germany 13. United Kingdom 14. Japan 15. Ireland 16. United States 17. Belgium 18. Slovenia 19. Estonia 20. France மனித வாழ்விற்கு அத்தியவசியமான அடிப்படைத் தேவைகளான உணவு, உறையுள். தங்குமிடம் மற்றும் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பம், மற்றும் தனிமனித உரிமை, தரமான வழ்க்கையை வாழ்வதற்கான சந்தர்ப்ம் போன்ற பல்வேறு காரணங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. வெறும் பொருளாதாரக் காரணங்களை மட்டும் கருத்தில் கொண்டு இந்த முடிவு கொடுக்கப்படவில்லையென்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த வருடத்தில் 50 நாடுகளைக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தார்கள். இந்த வருடம் 132 நாடுகள் உலகில் தெரிந்தெடுக்கப்பட்டு அதில் கனடா 7வது இடம் பிடித்திருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவில் உள்நாட்டு மொத்த உற்பத்தித் துறையானது GDP உயர்வாக இருக்கின்றது. ஆனால் தரமான கல்விக்கான வாய்ப்பு, சுகாதாரத்துறை, தனிமனித பாதுகாப்பு போன்ற விடையங்களை ஒப்பிடுகையி;ல் அமெரிக்காவினால் முன்னணியில் நிற்க முடியவில்லையெனத் தெரிகிறது. அதே நேரம் கனடாவில் தனிமனித சுதந்திரத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்து.

This posting includes an audio/video/photo media file: Download Now

பனிக்கட்டியில் புல்லட்டால் விளையாடும் வீரர்

Posted: 04 Apr 2014 05:26 AM PDT

ice

ice https://www.youtube.com/watch?feature=player_embedded&v=foZlciP6gUQ

This posting includes an audio/video/photo media file: Download Now

லட்சுமிமேனன் அதிரடி: அனைத்து ஹீரோக்களுடனும் உதட்டு முத்தக்காட்சிகளில் நடிப்பேன்!

Posted: 04 Apr 2014 03:43 AM PDT

Laxmi menan

Laxmi menan நான் குடும்ப குத்துவிளக்கு என்று தன்னைச்சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டு நடித்து வந்தவர் லட்சுமிமேனன். அதனால் மாடர்ன் கேரக்டர்களில் நடிக்கிறபோதுகூட அவரிடம் கிளாமர் பற்றி வாய்திறக்க டைரக்டர்கள் தயங்கினர். ஆக, அதுவே லட்சுமிமேனனின் பாலிசியாகவும் மாறிவிட்டது. இருப்பினும் நான் சிகப்பு மனிதன் படத்தில் அதற்கு நேர்மாறான வேடத்தை அவருக்கு கொடுத்து பரபரப்பை உண்டு பண்ணி விட்டார் விஷால். முதலில் ஒரு முத்தக்காட்சி இருக்கிறது என்று மட்டுமே பட்டும் படாமலும் லட்சுமிமேனனிடம் சொன்னவர், பின்னர் படப்பிடிப்பு நடந்தபோது அது உதட்டு முத்தக்காட்சி என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதற்கடுத்து, தண்ணீருக்குள்ளும் ஒரு சூடான காட்சி உள்ளது என்று அடுத்த அதிர்ச்சியை கொடுத்தவர், அடுத்தடுத்து அந்த காட்சிகளையும் படமாக்கி படத்துக்கே பரபரப்பு கூட்டியிருக்கிறார். இந்தநிலையில், விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? இல்லை மற்ற ஹீரோக்களுடனும் நடிப்பீர்களா? என்று லட்சுமிமேனனிடம் கேட்டபோது, முத்தக்காட்சி வேண்டுமா, வேண்டாமா? என்பதை கதையும், காட்சிகளும்தான் முடிவு செய்கின்றனர். அந்த வகையில், கதைக்கு அவசியம் தேவை என்கிறபேது எல்லா ஹீரோக்களுடனும் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க தயாராக இருக்கிறேன். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சமந்தாவின் அவசர டுவிட்! அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை!!

Posted: 04 Apr 2014 03:32 AM PDT

samantha

sam பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால், நடிகர்-நடிகைகளை பிரசாரத்துக்கு பயன்படுத்துவதில் அனைத்து அரசியல் கட்சிகளுமே தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், நடிகை சமந்தாவின் தந்தை ஆந்திராவிலுள்ள ஜெகன்மோகன் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படப்போவதாகவும், அதனால் அக்கட்சிக்காக சமந்தா தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாகவும் ஆந்திராவில் பரபரப்பு செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து ஆந்திராவிலுள்ள மீடியாக்கள் சமந்தாவை அணுகி விவரம் கேட்டபோது, அப்படியா, இந்த விசயமே நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது. தற்போது ஒரே நேரத்தில் 5 படங்களில் நடித்துக்கொண்டிருககும் எனக்கு ஆந்திராவில் போட்டியிடும் வேட்பாளர்களே யார் யார் என்பது தெரியாது. அந்த அளவுக்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறேன். அப்படியிருக்க நானாவது , கட்சிக்காக பிரசாரம் செய்வதாவது என்று அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டாராம். அதையடுத்து சமீபகாலமாக தனக்கு தோன்றும் விசயங்களை தனது டுவிட்டரில் தவறாமல் பதிவு செய்து வரும் சமந்தா, இந்த விசயத்தையும் உடனடியாக பதிவு செய்து தன்னைப்பற்றிய எழுந்துள்ள வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளாராம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்தானம் சைக்கிளில் இருந்து பல்டி அடித்தார்!

Posted: 04 Apr 2014 03:15 AM PDT

Santhanam

Santhanam 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் நாயகனாக நடிக்கும் சந்தானம், வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேடத்தில் நடிக்கிறார். அப்படி தண்ணீர் கேன் சப்ளை செய்ய செல்லும்போது பெரும்பாலும் காலி கேன்களை வைத்துதான் லோடு அடித்தபடி நடித்துள்ளாராம். ஆனால் ஒரு காட்சியில் நிஜமாகவே தண்ணீர் இருக்க வேண்டும் என்பதற்காக, பல கேன்களை அவரது சைக்கிளில் ஏற்றி விட்டிருக்கிறார்கள். அதையடுத்து, அவர் சைக்கிளில் ஏறும் வரை உதவி இயக்குனர்கள் பிடித்துக்கொள்ள பின்னர் சைக்கிளை அழுத்தியிருக்கிறார் சந்தானம். ஆனால், தண்ணீர் கேன்களில் வெயிட் அதிகமாக இருந்ததால், எதிர்பாராதவிதாக பின்புறமாக லோடு இழுத்து விட, பல்டி அடித்து விழுந்திருக்கிறார் சந்தானம். நல்லவேளையாக பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லையாம். ஆனபோதும், சிறிது நேரம் அவரிடம் பதற்றம் காணப்பட்டதாம். அதனால் அதையடுத்து தண்ணீர் வேணாம் என்று காலி கேனே வைத்தே வழக்கம்போல் படமாக்கினார்களாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்-கெளதம் மேனன் படம் துவக்கம் ஏப்ரல் 9ம் தேதி அதிகாரபூர்வமான அறிவிப்பு !

Posted: 04 Apr 2014 02:35 AM PDT

Ajith

Ajith

'வீரம்' படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 55-வது படத்தை ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இந்தப் படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. இது பற்றி தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் என்ன சொல்கிறார்?

"ஆரம்பம் படத்தை தயாரித்த ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் அஜித்தின் 55-வது படத்தையும் தயாரிக்கிறது. கெளதம் வாசுதேவ் மேனன் டைரக்ட் செய்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி புதன்கிழமை ஆரம்பமாக உள்ளது.

அஜித்துடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும்." என்று ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார். படம் தொடங்கும்போது அஜித் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுவதில்லை. அதுபோலவே அஜித்தின் 55 வது படமாக உருவாகவிருக்கும் இந்தப்படத்தின் தலைப்பும் அறிவிக்கப்படவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™