Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பா.ஜ.க. கூட்டணிக்கு 259 இடங்கள் கிடைக்கும்: புதிய கருத்து கணிப்பு

Posted: 04 Apr 2014 11:07 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது பற்றி என்.டி.டி.வி, சி.என்.என்– ஐ.பி.என் ஆகிய இரு தொலைக்காட்சிகளும் நாடு முழுவதும் தனி தனியே கருத்து கணிப்பு நடத்தின. அந்த கருத்து கணிப்பு முடிவுகளை நேற்று அந்த இரு தொலைக்காட்சிகளும் வெளியிட்டன. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில்

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி வேட்பாளர் போட்டி

Posted: 04 Apr 2014 10:49 PM PDT

வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளராக மிஸ்திரி நிறுத்தப்பட்டுள்ளார். இப்போது நரேந்திர மோடியை எதிர்த்து சமாஜ்வாடி கட்சியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பை உ.பி. மாநில முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.

எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்

Posted: 04 Apr 2014 10:48 PM PDT

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றம், மக்களவை (லோக்சபா), மாநிலங்களவை (ராஜ்யசபா) என்ற இரு அவைகளை உள்ளடக்கியது ஆகும். மக்களவை என்பது மக்களின் வாக்குரிமையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்கள், 2 நியமன எம்.பி.க்கள் என மொத்தம் 545 உறுப்பினர்களை கொண்டது.

மும்பையில் இருந்து கேரளாவுக்கு 15 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு

Posted: 04 Apr 2014 10:42 PM PDT

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் இருந்து 15 வயது சிறுமி ஒருவர் நேற்று காலை அழுதுகொண்டே ரோட்டில் ஓடினார்.

நாளை பாஜக 34-வது ஆண்டு விழா: வீடு வீடாக சென்று மருதாணி இடும் மகளிர் அணியினர்

Posted: 04 Apr 2014 08:55 PM PDT

பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி தோன்றிய 34-வது ஆண்டு தினம் நாளை (6-ம் தேதி) 'விஜய் சங்கல்ப் திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வின் பூத் ஏஜெண்ட்டுகளாக செயலாற்றவுள்ள சுமார் 6 லட்சம் தொண்டர்களுடன் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்சிங்

மோடி, ராகுல், கெஜ்ரிவால் விரும்பி சாப்பிடும் உணவுகள்

Posted: 04 Apr 2014 08:38 PM PDT

நாடு முழுவதும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், பிரதான கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களாக கருதப்படும் மோடி, ராகுல், கெஜ்ரிவால் ஆகியோரின் உணவு பழக்கவழக்கங்கள் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன. நரேந்திர மோடி

கோப்ரா போஸ்ட் அல்ல... காங்கிரஸ் போஸ்ட்... : பா.ஜ.க. கண்டனம்

Posted: 04 Apr 2014 05:20 PM PDT

பாபர் மசூதி இடிப்பு சதியை கோப்ரா போஸ்ட் இணையதளம் அம்பலப்படுத்தியதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்துடன் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ள 'கோப்ரா போஸ்ட்' இணையதளம், விஸ்வ ஹிந்து பரிஷத்தும், சிவசேனா அமைப்பும் சேர்ந்து பாபர் மசூதியை இடிப்பது தொடர்பாக சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில்,

பாபர் மசூதி இடிப்பு - நரசிம்மராவ் பான்ஜாவை அமைதி காக்க சொன்னார்: மம்தா

Posted: 04 Apr 2014 05:15 PM PDT

1992ல் நரசிம்மராவ் அமைச்சரவையில் தகவல்துறை மந்திரியாக இருந்த அஜித் பான்ஜா பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது தன்னை அமைதியாக இருக்குமாறு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் கேட்டுக்கொண்டார் என தன்னிடம் கூறியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 'கோப்ரா போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தி குறித்து மேற்கு வங்காளம் ராணிகஞ்ச் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில்

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மையான முகத்தை கோப்ரா போஸ்ட் காட்டிவிட்டது: காங்கிரஸ்

Posted: 04 Apr 2014 05:09 PM PDT

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக 'கோப்ரா போஸ்ட்' என்ற இணையதளம் பா.ஜ.க. மூத்த தலைவர்களை தொடர்புபடுத்தி வெளியிட்டுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், விஸ்வ ஹிந்து பரிஷத்தும், சிவசேனா அமைப்பும் சேர்ந்து பாபர் மசூதியை இடிப்பது தொடர்பாக சதித்திட்டம் தீட்டியதாகவும், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு இது பற்றி முன்கூட்டியே தெரியும் என்றும், அவர்கள் முன்னிலையில்தான்

மலேசிய விமானம்: சென்சார் தொழில்நுட்பம் மூலம் கருப்பு பெட்டியை தேடும் 2 கப்பல்கள்

Posted: 04 Apr 2014 04:55 PM PDT

கடந்த மாதம் 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் (எம்.ஹெச். 370) இந்திய பெருங்கடலுக்குள் (தெற்கு) விழுந்துவிட்டது என்று மலேசியா அறிவித்தது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. விமானத்தின் கறுப்புப் பெட்டி பாட்டரியின் மூலம் இயங்குவதால் அதன் பாட்டரிகள் 30 நாட்களுக்கு மட்டுமே இயங்கக்கூடிய சக்தி பெற்றவை. இதையடுத்து, பேட்டரியின் ஆயுள் முடிவதற்குள் அதை கண்டுபிடிக்க தேடும் குழுக்களுக்கு இன்னும் ஒரு சில நாட்களே மீதமுள்ளதால் தேடல் பணியில் புதிய சென்சார் தொழில்நுட்பம்

தேர்தலை மதவாதமாக மாற்றுவதில் காங்கிரஸ் வெற்றி பெறாது: ராஜ்நாத் சிங்

Posted: 04 Apr 2014 11:29 AM PDT

புகாரி தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினர். அப்போது வரும் மக்களவை தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிந்து விடாமல் பார்த்துக்கொள்ளுமாறு சோனியா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முஸ்லிம் தலைவர்களிடம் சோனியா விடுத்த இந்த வேண்டுகோள் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல், எனவே தேர்தல் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை விடுத்திருந்தது.

சோனியாகாந்தியின் வீடு மிகப்பெரிய நில அபகரிப்பாகும்: சிவராஜ் சவுகான்

Posted: 04 Apr 2014 11:13 AM PDT

சோனியா காந்தி, சிதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இந்திரஜித் பட்டேலை ஆதரித்து தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மத்திய பிரதேச வேலைவாய்ப்பு தேர்வு மையத்தில் பல கோடிகள் முறைகேடுகள் நடந்துள்ளது என சிவராஜ்சிங் சவுகான் அரசு மீது கடுமையாக தாக்குதல் நடத்தினார். இந்நிலையில் சிவராஜ்சிங் சவுகான்

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும்: உமாபாரதி

Posted: 04 Apr 2014 11:01 AM PDT

"பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு இன்றி தீர்வு காணப்படும், நரேந்திர மோடி, ஷா நவாஸ் ஹூசைன், மற்றும் என்னால் மட்டுமே இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முடியும்" என பா.ஜ.க. துணைத் தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சாகர் மக்களவை தொகுதி வேட்பாளர் லட்சுமி நாராயண் யாதவ்-ஐ ஆதரித்து மால்தவுனில் நடைபெற்ற பிரசாரத்தில் உமா பாரதி கூறியதாவது:-

கெஜ்ரிவால் மீது மீண்டும் தாக்குதல்: பிரசாரம் ரத்து

Posted: 04 Apr 2014 08:30 AM PDT

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இன்று பிரசாரம் மேற்கொண்டபோது அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்கினார். தெற்கு டெல்லியில் வாகனத்தில் சென்று பிரசாரம் செய்த அவர், தனது ஆதரவாளர்களுடன் கைகுலுக்கிக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் நின்றிருந்த ஒரு நபர் திடீரென அவரது முதுகில் குத்தினார். மீண்டும் அடிக்க முயன்ற அந்த நபரை, ஆம் ஆத்மி தொண்டர்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பீகாரில் வளர்ச்சி இல்லையா?: ராகுலுக்கு நிதிஷ்குமார் பதிலடி

Posted: 04 Apr 2014 08:04 AM PDT

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலம் அவுரங்காபாத் பகுதியில் ஏப்ரல் 1ந் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது, நிதிஷ்குமார் தலைமையிலான அரசை கடுமையாக தாக்கினார். பீகார் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ளது என பேசி வரும் நிதிஷ்குமார், எந்த ஒரு நிறுவனமாவது மாநிலத்திற்கு வந்ததா? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், கயா மாவட்டத்தின் ஷேர்காதி பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் நிதிஷ்குமார், ராகுல் காந்தியின்

ரெயில் பெட்டியின் இருக்கையின் அளவுக்கே காங்கிரசுக்கு வெற்றி: திரிணாமுல்

Posted: 04 Apr 2014 07:35 AM PDT

நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ரெயில் பெட்டியின் இருக்கையான 72 இருக்கைகள் அளவுக்கே காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான டெரிக் ஓ பிரையன் கூறியுள்ளார். தெற்கு கோவா தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரே வேட்பாளரான சர்ச்சில் அலிமாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை பிடிக்கும் மூன்றாவது பெரிய கட்சியாக திரிணாமுல் உருவெடுக்கும் என்றும் தங்கள் கட்சியின்

நாட்டில் மத்திய அரசுக்கு எதிரான அலை வீசுகிறது: தேசியவாத காங்கிரஸ்

Posted: 04 Apr 2014 07:18 AM PDT

நாட்டின் சில பகுதிகளில் மத்திய அரசுக்கு எதிரான அலை வீசுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அதே சமயத்தில் மோடி அலையும் வீசவில்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் திரிபாதி கூறுகையில், "நாட்டில் 10 வருடங்களாக ஆட்சி நடத்தி வரும் கட்சிக்கு எதிராக அலை வீசுவது இயற்கை தான்" என்று கூறினார். "பா.ஜ.க. அணிக்கு 230 இடங்கள் கிடைக்கும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மெஜாரிட்டிக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில் ஊடகங்களின் இந்த கணிப்பின் மூலம் நாட்டில் மோடி அலை வீசவில்லை

முசாபர்நகர் முஸ்லிம்களிடம் ஆதரவு கேட்ட மாயாவதி

Posted: 04 Apr 2014 06:41 AM PDT

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, இன்று முசாபர்நகரில் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "முஸ்லிம்கள் தங்கள் வாக்குகள் பிரிவதை தவிர்க்க வேண்டும். அத்துடன், பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க எங்களது கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைத்துவிட்டது. நான் முதல்வராக இருந்தபோது கலவரம் இல்லாமல்

கான்பூர் தொகுதியில் ஜோஷி மனுதாக்கல் செய்தார்

Posted: 04 Apr 2014 05:57 AM PDT

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி கான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இன்று மனு தாக்கல் செய்தார். பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோரை வாழ்த்தி கோஷம் எழுப்பிய தொண்டர்களின் ஆரவாரத்திற்கிடையே ஜோஷி மனுதாக்கல் செய்தார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்ரீ

மோடியை பிரதமராக்கும் பிரசார வியூகம் தோல்வியில் முடியும்: அகிலேஷ் யாதவ்

Posted: 04 Apr 2014 05:43 AM PDT

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மக்களவைத் தொகுதி, பகோதரில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடிக் கட்சி தலைவரும், உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பா.ஜ.க. பிரசார வியூகங்களால் நரேந்திர மோடியை பிரதமராக்க முடியாது. நாங்கள் அதை தடுத்து நிறுத்துவதுடன், மூன்றாவது அணி அரசை உருவாக்குவோம். வகுப்புவாதத்தை திருப்புவது எளிதானது. ஆனால் அதை தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம். நாங்கள் தடுத்து நிறுத்துவோம். மேலும் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை விட உத்தர பிரதேச மாநிலம் நல்ல வளர்ச்சி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™