Tamil Star |
- உதயநிதியின் ஜோடி லட்சுமி மேனன்
- மேரிகோமை எதிர்த்து சண்டை போட்ட வீராங்கனை… ப்ரியங்கா முகத்தை தாக்கினார்?
- இயக்குனர் விஜய் காதல் அறிக்கை
- கின்னஸ் ரெக்கார்ட், உலக ரெக்கார்ட் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது! – இளையராஜா
- ஆப்பிளின் ஐ போன் 6 செப்டம்பரில் வெளியீடு….!
- வாழைப்பழத்தை சாப்பிட்டால் தீமைகளையும் சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா?
- கோடை வெயிலின் தாக்கத்திற்கு கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்!!!
- ஓடும் விமானத்தில் ‘பேக்’ சீட் வழியாக கை விட்டு பெண்ணிடம் சில்மிஷம்.. இந்தியர் கைது
- உலக மக்களுக்கு பிடித்த டாப் 10 எண் எது தெரியுமா?
- 3வது உலகப் போரை தொடங்க முயல்கிறது ரஷ்யா’ – உக்ரைன் பிரதமர்
- மரத்தில் கொன்று தொங்கவிடப்பட்ட 25 பூனைகள் – சைக்கோ கொலையாளிக்கு 5 ஆண்டு சிறை?
- பஸ் நிறுத்தத்தில் ஜோடி உல்லாசம் – ஜோடிக்கு அபராதம்
| உதயநிதியின் ஜோடி லட்சுமி மேனன் Posted: 26 Apr 2014 04:22 AM PDT
தொடர்ந்து விஷாலுடன் ஜோடி போட்ட லட்சுமி மேனன், அடுத்து உதயநிதியின் கையைப் பிடிக்கப் போகிறார், "இது கதிர்வேலன் காதல்" படத்துக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் படத்தில்,. அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்தான். இந்தப் படத்துக்காகவே, இப்போது நடித்து வரும் "நண்பேன்டா" படத்தின் படப்பிடிப்பை வேகப்படுத்தியிருக்கிறார் உதயநிதி. இந்தப் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை, இது கதிர்வேலன் காதல் என்ற சுமார் படம் தந்த எஸ்.ஆர்.பிரபாகரனுக்கே கொடுத்திருப்பதுதான் ஸ்பெஷல். இந்த முறை பிரபாகரன், உதயநிதிக்காக பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட் ஒன்றை பிடித்து அதற்கான டிஸ்கஷனில் தீவிரமாக இருக்கிறார். இதில் உதயநிதியின் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இது வில்லேஜ் படம் என்பதால் சந்தானத்துக்கு பதில் சூரி நடிப்பார் என்கிறார்கள். ஆனால் இன்னும் உறுதியான தகவல் இல்லை. கிராமத்து படம் என்றாலே பொள்ளாச்சி, தேனி, திருநெல்வேலி, மதுரை ஏரியா என்பதை மாற்றி திருவாரூர், நாகப்பட்டினம் ஏரியாவில் கதை பிடிக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மேரிகோமை எதிர்த்து சண்டை போட்ட வீராங்கனை… ப்ரியங்கா முகத்தை தாக்கினார்? Posted: 26 Apr 2014 04:22 AM PDT நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில் வீராங்கனை ஒருவர் விட்ட குத்து காயத்தை ஏற்படுத்தியது. படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டும், தொடர்ந்து நடித்து ஆச்சரியமூட்டினார் பிரியங்கா சோப்ரா. பிரபல இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம். இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையிலும் கடுமையான பயிற்சி, போராட்டம் மூலம் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர். மேரி கோம் என்ற பெயரிலேயே அவரது வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தி சினிமாவின் நம்பர்-1 நடிகை ப்ரியங்கா சோப்ரா, தனது கமர்ஷியல் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 26 Apr 2014 04:20 AM PDT
நடிகை அமலா பாலும், நானும் சில பொறுப்புகளை முடிக்க வேண்டி இருப்பதால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார். இயக்குனர் விஜய்யும், நடிகை அமலாபாலும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் அடுத்தமாதம் 7ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் விஜய் காதல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் கூறியிருப்பதாவது; "ஒருவராக இருந்து இருவராக மாற உள்ள எனது நிலையைப் பற்றி சொல்வதற்கு இதை ஒரு சிறந்த சந்தர்ப்பமாகக் கருதுகிறேன். எனது வாழ்க்கைத் துணையை தேடியது முடிவடைந்து, எனது மனம் கவர்ந்த காதலை அமலாவிடம் கண்டேன். அவர் ஒரு நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். அவர் உண்மையாகவே ஒரு பொக்கிஷம். அதை கண்ணும் கருத்துமாக காதலுடன் பாதுகாப்பேன். எங்களது திருமண திட்டத்தை கண்ணியமாகவும், முறையாகவும் நாங்களே அறிவிக்க வேண்டும் என்று இருந்தோம். ஆனால், எங்களுக்குத் தெரியாமலே அந்த செய்தி வெளியில் வந்து விட்டது. மீடியாக்களிடமும், நண்பர்களிடமும், எங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடமும் எங்களது திருமண திட்டத்தைப் பற்றி நாங்கள் மூடி மறைக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை. மீடியாக்களையும், நண்பர்களையும் தனிப்பட்ட அழைப்புடன் எங்களது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் சந்திப்போம். அமலா பால் சில பொறுப்புக்களை முடிக்க வேண்டும். நானும் எனது மனதுக்கு நெருக்கமான 'சைவம்' படத்தின் வெளியீட்டை விரைவில் எதிர்நோக்கியுள்ளேன். அதன் பின்தான் எங்களது வாழ்க்கையின் மிக முக்கியமான கொண்டாட்டத்திற்கு நேரம் ஒதுக்க முடியும். அதுவரை என்றென்றும் உங்களது வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும், ஆதரவையும் வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார். விஜயை, கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி அமலாபால் வலியுறுத்தி வருவதால் திருமணம் தாமதமாகலாம் என்று செய்தி வெளியாகியிருந்தது. அதற்கேற்ப இந்த அறிக்கை வந்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கின்னஸ் ரெக்கார்ட், உலக ரெக்கார்ட் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது! – இளையராஜா Posted: 26 Apr 2014 04:19 AM PDT
ஆயிரம் படங்களைக் கடந்ததையெல்லாம் ஒரு சாதனையாக நான் நினைக்கவில்லை, என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். சமீபத்தில் அவர் தமிழ் இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவரது ஆயிரம் பட சாதனை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் பேட்டி எடுத்த தேனி கண்ணன். இதற்கு இளையராஜா அளித்துள்ள பதில்: "இதையெல்லாம் நான் சாதனையாகவே நினைக்கவில்லை. ஏதோ வாழ்க்கையை ஒட்டி வந்திருப்பதாகவே நினைக்கிறேன். காரணம் நான் செய்கிற வேலையில் இருக்கும் தவறு எனக்குத் தெரியும். அதனால் நான் அமைதியாக இருந்துவிடுகிறேன். நீங்கள் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கும் பாடல்களில்கூட அந்தத் தவறு இருக்கிறது. இது எனக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். சரிகமபதநி என்கிற ஏழு ஸ்வரங்களைத்தான் நான் திரும்பத் திரும்பப் போட்டுக் கொண்டிருக்கிறேன். என்னால் புதிதாக ஒரு ஷட்ஜமத்தை உருவாக்க முடியுமா? ஏற்கனவே இருந்தவற்றிலிருந்துதான் பாடல்களை அமைக்கிறேன். இதில் என்ன சாதனை இருக்கிறது. இந்தக் கின்னஸ் ரெக்கார்ட், உலக ரெக்கார்ட் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது. இதையெல்லாம் மிஞ்சிய சாதனைகள் பதிவு செய்யப்படாமலே இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை சாதனை என்பது இசையில் நான் அதைச் செய்திருக்கிறேன் இதைச் செய்திருக்கிறேன் அவார்டு வாங்கியிருக்கிறேன் என்பதல்ல!" ஜெயகாந்தன் இந்தப் பேட்டியின்போது, தனது ஆதர்ச எழுத்தாளராக ஜெயகாந்தனைக் குறிப்பிட்டுள்ள இளையராஜா, அவரது வாழ்க்கையை ஒரு ஆவணப் படமாக தான் பதிவு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆப்பிளின் ஐ போன் 6 செப்டம்பரில் வெளியீடு….! Posted: 26 Apr 2014 03:57 AM PDT இன்றைக்கு ஆண்ட்ராய்டில் எத்தனையோ வகையான மொபைல்கள் வந்தாலும் ஆப்பிளின் ஐ போன்களுக்கு எப்போதுமே உலகம் முழுவதுமே ஒரு வரவேற்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஐ போனின் கடைசி வரவுகளான 5C மற்றும் 5S ஆகியவை விற்பனையில் சக்கை போடு போட்டன எனலாம் அந்த அளவுக்கு அனைத்து மொபைல்களுமே விரைவில் விற்று தீர்ந்தன. தற்போது அனைவரது பார்வையும் விரைவில் வெளிவர இருக்கும் ஆப்பிளின் ஐ போன் 6 மீது திரும்பியுள்ளது எனலாம். வரும் செப்டம்பரில் இந்த மொபைலை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாழைப்பழத்தை சாப்பிட்டால் தீமைகளையும் சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா? Posted: 26 Apr 2014 03:49 AM PDT பொதுவாக முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால், நன்மைகள் மட்டுமின்றி, சில தீமைகளையும் சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா? ஆம், எப்போதுமே அளவுக்கு மிஞ்சினால் அது தீமைகளை விளைவிக்கும். வாழைப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! அதிலும் எவ்வளவு பெரிய நல்ல உணவுப்பொருளாக இருந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இங்கு அப்படி விலை மலிவில் கிடைக்கும் மற்றும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| கோடை வெயிலின் தாக்கத்திற்கு கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்!!! Posted: 26 Apr 2014 03:48 AM PDT கோடை வெயிலின் தாக்கத்தினால், அதிகம் வியர்த்து, உடல் அதிகமாக வெப்பமடைகிறது. இந்த நிலை வீட்டை விட்டு வெளியே சென்றால் மட்டுமின்றி, வீட்டிற்குள்ளேயே இருக்கும் போதும் அப்படி தான் உள்ளது. மேலும் இக்காலத்தில் சருமத்தில் அதிகப்படியான பிரச்சனையை சந்திக்கக்கூடும். அவற்றில் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் முகப்பரு போன்றவை முக்கியமானவை. அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் என்றால் அவர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கும். இந்த நிலையில் அவர்கள் அந்த முகப்பருக்களை போக்கவும், சருமத்தில் உள்ள அதிகப்படியான […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஓடும் விமானத்தில் ‘பேக்’ சீட் வழியாக கை விட்டு பெண்ணிடம் சில்மிஷம்.. இந்தியர் கைது Posted: 26 Apr 2014 03:22 AM PDT லண்டனிலிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு சக ஆண் பயணி, அந்தப் பெண்ணின் மார்புகளை ஐந்து நிமிடத்திற்கும் மேலாக பிடித்து சில்மிஷம் செய்து சிக்கினார். அந்த ஆண் ஒரு இந்தியர் ஆவார். அவரது பெயர் வினய் போச்சம்பள்ளி. ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் அந்தப் பெண்ணின் பின் சீட்டில் அமர்ந்து பயணித்துள்ளார். பின்னால் இருந்து எக்கி அந்தப் பெண்ணின் மார்புகளைப் பிடித்து அநாகரீகமாக நடந்துள்ளார். இவரது இந்த […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலக மக்களுக்கு பிடித்த டாப் 10 எண் எது தெரியுமா? Posted: 26 Apr 2014 03:21 AM PDT உலக மக்களில் பலருக்கும் பிடித்த எண் ஏழு என்று பிரேசிலைச் சேர்ந்த கணித மேதை கண்டுபிடித்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பெல்லாஸ். கணித மேதை, எழுத்தாளர். அவர் உலக மக்களில் பெரும்பாலானோருக்கு பிடித்த எண் குறித்த ஆய்வு நடத்தினார். ஆய்வின் முடிவில் 7 தான் பலருக்கு பிடித்த எண் என்பது தெரிய வந்துள்ளது. உலக மக்களுக்கு பிடித்த டாப் 10 எண்களை பார்ப்போம் உலகில் பலருக்கும் பிடித்த 10 எண்களில் முதல் இடத்தில் இருப்பது ஏழு. எண் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| 3வது உலகப் போரை தொடங்க முயல்கிறது ரஷ்யா’ – உக்ரைன் பிரதமர் Posted: 26 Apr 2014 03:20 AM PDT “ரஷ்யா உலகில் ஒரு புதிய போரை, ஆரம்பிக்க விரும்புகிறது. அதாவது 3வது உலகப் போரை தொடங்க முயல்கிறது” என்று உக்ரைன் நாட்டுப் பிரதமர் அர்செனி டெய்சென்யுக் கூறியுள்ளார். தனது ராணுவ மற்றும் அரசியல் பலத்தால் உக்ரைனை ஆக்கிரமித்து புதிய போரைத் தொடங்க முயல்கிறது ரஷ்யா என்பதும் இவரின் குற்றச்சாட்டாகும். தனது இடைக்கால அமைச்சரவையின் கூட்டத்தில் அர்செனி பேசுகையில், ” 2ம் உலகப் போரை உலகம் மறக்கவில்லை. ஆனால் ரஷ்யாவோ 3 ஆவது உலகப் போருக்குத் திட்டமிடுகிறது” என்றார். […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மரத்தில் கொன்று தொங்கவிடப்பட்ட 25 பூனைகள் – சைக்கோ கொலையாளிக்கு 5 ஆண்டு சிறை? Posted: 26 Apr 2014 03:19 AM PDT
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் அருகே 25 பூனைகளை அடித்துக்கொன்று அதை பாலத்தின் பைகளில் அடைத்து மரத்தில் கட்டி தொங்கவிட்ட நபரை போலீசார் தேடிவருகிறார்கள். நியூயார்க் நகரின் அருகேயுள்ள யோன்கர்ஸ் பகுதியில் ஹட்சன் நதி ஓடுகிறது. அதையெட்டினாற்போல மரங்கள் அடர்ந்த காடு உள்ளது. இதில் நியூயார்க் நகர துப்புரவு பணியாளர்கள் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மரத்தின் கிளைகளில் பல பாலத்தீன் பைகள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதை பார்த்து ஏதோ வித்தியாசமாக உள்ளதே என்று அருகில் சென்று பார்த்துள்ளனர். அந்த பேக்குகளை திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அதற்குள் பூனைகள் கொன்று வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 25 பேக்குகளில் பூனைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. உடனடியாக போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அப்பகுதியில் சோதனை நடத்தியதில் மரக்கட்டை, இரும்பு கம்பிகள் கிடந்தது தெரியவந்தது,. மருத்துவ குழுவும் வரவழைக்கப்பட்டு பூனைகளுக்கு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. சில பூனைகள் மூன்று வருடங்களுக்கு முன்பே கொல்லப்பட்டிருப்பதும், சில பூனைகள் இரு தினங்களுக்கு முன்புதான் கொல்லப்பட்டிருந்ததும் தெரியவந்தது. பூனைகளின் தலையில் பலமாக தாக்கப்பட்டு அதன் மண்டை எலும்புகள் உடைந்திருப்பதை பார்க்கும்போது இரும்பு கம்பியாலோ அல்லது கட்டையாலோ தாக்கி கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பூனையை கொன்று தொங்கவிடும் சமய வழிபாட்டு முறைகள் எதுவும் நியூயார்க் பகுதியில் இல்லை என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே இது சைக்கோ கொலையாளி வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் பூனைகளை கொன்றால் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனையும், 5ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பஸ் நிறுத்தத்தில் ஜோடி உல்லாசம் – ஜோடிக்கு அபராதம் Posted: 26 Apr 2014 03:18 AM PDT
பஸ் நிறுத்தத்தில் தனது காதலியுடன் திடீரென வாலிபர் ஒருவர் உல்லாசமாக இருக்க தொடங்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஐரோப்பிய நாடான கங்கேரியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது மர்ஸ்கோ ஸ்ரிடிஸ்க் என்ற சிறுநகரம். இங்குள்ள பஸ் நிறுத்தம் ஒன்றில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் சில பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஜோடி யாரைப்பற்றியும் சிறிதும் சட்டை செய்யாமல், பஸ் நிறுத்தத்தின்பின்புறமுள்ள பிளாட்பாரத்தில் படுத்து உல்லாசமாக இருக்க தொடங்கினர். பஸ் நிறுத்தத்தில் நின்ற பயணிகள் இதைப்பார்த்து அருவருப்படைந்தனர். சிலர் ஆச்சரியப்பட்டு தங்களது செல்போன்களில் படம் எடுக்க ஆரம்பித்தனர். இச்சம்பவம் நடந்த இடத்தில் முதியோருக்காக செயல்படும் ஒரு கிளப்பும் உள்ளது. அதில் இருந்த முதியவர் ஒருவர் இந்த கொடுமையை பார்த்து போலீசாருக்கு போன் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்குள் போலீசார் அங்கு வந்துள்ளனர். ஆனால் அதற்குள் மேற்படி ஜோடி தங்களது 'வேலையை' முடித்துவிட்டு ஆடைகளை உடுத்திக்கொண்டு ஹாயாக வெட்கமே இல்லாமல் அதே பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்தனர். போலீசார் வந்ததும், ஜோடிகளின் கூத்தை செல்போனில் படம் எடுத்த சிலர் அதை காண்பித்து முறையிட்டுள்ளனர். இதையடுத்து ஜோடிகள் இருவரின் அடையாள அட்டைகளை பரிசோதி்த்து முகவரியை எழுதிக்கொண்ட போலீசார் அங்கிருந்து கிளம்பி சென்றனர். ஐரோப்பிய சட்டப்படி பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொண்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். இந்த ஜோடிக்கும் அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அடக் கருமமே! This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |









