மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ராம்தேவ் உருவ பொம்மை எரிப்பு
- வேகமான விமான தரையிறக்க சோதனை செய்யவுள்ள மும்பை விமான நிலையம்
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா பொறுப்பேற்றார்
- காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: சென்னை ராணுவ அதிகாரி பலி
- ராகுல் பேச்சால் திருப்பம்: தெலுங்கானாவுக்கு விஜயசாந்தி முதல்-மந்திரி?
- 100 நாள் வேலை திட்டம்: அமிதாப்பச்சன்–தெண்டுல்கர் பெயரில் துணிகர மோசடி
- சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தம் அளிக்கிறது: மன்மோகன் சிங்
- அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி கட்டாயம்: கல்வி இயக்ககம்
- பாபா ராம்தேவ்வின் தேன்நிலவு விமர்சனம் எதிரொலி: தேர்தல் கமிஷன் திடீர் கெடுபிடி
- சோனியா-ராகுல் இடையே பொய் சொல்வதில் போட்டாப் போட்டி: மோடி
- தோல்வி பயத்தால் 2 தொகுதிகளில் போட்டியிடும் மோடி: மம்தா காட்டம்
- குஜராத்தில் லோக் ஆயுக்தா அமைந்தால் மோடி ஜெயிலுக்கு போவார்: ராகுல்
- மோடியின் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு வலுவடையும்: சுப்பிரமணிய சாமி
- பூஜ்ஜியம் ரூபாய் நோட்டுக்களை வழங்கி ஆம் ஆத்மி ஓட்டு வேட்டை
- ஊழல்,பணவீக்கம் எதுவுமே தெரியாத பிரதமருக்கு அலை எப்படி தெரியும்?: மோடி கேலி
- மோடி மாடலில் இருந்து நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: சோனியா
- சாதி மோதலை உருவாக்கும் பாஜக.வுக்கு ஓட்டு போக வேண்டுமா?: பிரதமர் கேள்வி
- அமேதியில் ஆம் ஆத்மி தொண்டர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா
- வதோதராவில் தொடரும் முதலைகள் அட்டகாசம்
- 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி பிரணாப்
| Posted: 26 Apr 2014 10:59 PM PDT ராகுல் காந்தி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த யோகா குரு ராம்தேவுக்கு எதிராக பாட்டியாலாவில் வால்மீகி சமாஜ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள் |
| வேகமான விமான தரையிறக்க சோதனை செய்யவுள்ள மும்பை விமான நிலையம் Posted: 26 Apr 2014 10:54 PM PDT இந்தியாவில் உள்ள பிரதான விமான நிலையங்களில் பரபரப்பாக இருக்கும் முக்கிய நேரங்களில் தரையிறங்கும் விமானங்களினால் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க வரும் மே 5ஆம் தேதி முதல் மும்பை விமான நிலையத்தில் ஒரு புதிய சோதனை முயற்சி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுநாள் வரை ஓடுதளத்தில் ஒரு விமானம் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வந்த நடைமுறை மாற்றப்பட்டு ஓடுதளத்தின் ஒரு முனையில் ஒரு விமானம் இறங்கும்போது மறுமுனையில் மற்றொரு விமானம் கிளம்பும் முறையை செயல்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் அனுமதி அளித்துள்ளது. |
| உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா பொறுப்பேற்றார் Posted: 26 Apr 2014 10:50 PM PDT உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் ஓய்வு பெற்றதையடுத்து, அந்த பதவிக்கு ராஜேந்திர மால் லோதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு இன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற ஆர்.எம்.லோதா ராஜஸ்தான், மும்பை உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக |
| காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: சென்னை ராணுவ அதிகாரி பலி Posted: 26 Apr 2014 10:47 PM PDT காஷ்மீர் மாநிலத்தில் 6 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்குள்ள சோபியான் மாவட்டத்தில், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரி ஒருவர் உயிர் இழந்ததுடன், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அங்குள்ள கரேவா மலினோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. |
| ராகுல் பேச்சால் திருப்பம்: தெலுங்கானாவுக்கு விஜயசாந்தி முதல்-மந்திரி? Posted: 26 Apr 2014 10:13 PM PDT காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெலுங்கானா பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கியது காங்கிரஸ்தான். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் புதிதாக உதயமாகும் தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண்தான் முதல் முறையாக முதல்– மந்திரி பதவி வகிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று கூறினார். ராகுல் காந்தி இப்படி பகீரங்கமாக அறிவித்ததால் மேடையில் இருந்த மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். |
| 100 நாள் வேலை திட்டம்: அமிதாப்பச்சன்–தெண்டுல்கர் பெயரில் துணிகர மோசடி Posted: 26 Apr 2014 10:13 PM PDT கிராமப்புறத்தில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கும் விதமாக மத்திய அரசு வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்கப்பட்டு வந்தது. இதற்கான தினசரி சம்பளம் ரூ.150 ஆகும். இதன்மூலம் கிராமபுரத்தில் உள்ளவர்கள் பயன்பெற்று வந்தனர். இந்த நிலையில் இந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர், அமிதாப்பச்சன் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பலன் பெற்றதாக கூறிய துணிகர மோசடி கோவாவில் நடந்துள்ளது. |
| சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தம் அளிக்கிறது: மன்மோகன் சிங் Posted: 26 Apr 2014 08:56 PM PDT பிரதமர் மன்மோகன்சிங் தந்தையின் 2-வது மனைவிக்கு பிறந்தவர் தல்ஜீத் சிங் கோலி. இவர், நேற்று முன்தினம் அமிர்தசரஸ் நகரில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். அவரது வருகை கட்சிக்கு பலம் சேர்த்திருப்பதாக அப்போது, நரேந்திரமோடி வர்ணித்தார். நாட்டில் மோடி அலை வீசவில்லை என்று காங்கிரஸ் கூறிவரும் நிலையில் பிரதமரின் சகோதரரே பா.ஜனதாவில் இணைந்தது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. |
| அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி கட்டாயம்: கல்வி இயக்ககம் Posted: 26 Apr 2014 08:37 PM PDT இந்தியாவில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி கட்டாயம் தேவை என்ற சுற்றறிக்கை ஒன்றை கல்வி இயக்ககம் இந்த மாதம் 4ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் குறைந்தது இரண்டு விளையாட்டு அணிகளையாவது உருவாக்கி மண்டல போட்டிகளில் பங்கு பெறவேண்டும் என்று அரசு அறிக்கை குறிப்பிடுகின்றது. அதுமட்டுமின்றி, இடைவேளை நேரங்களில் மாணவர்களுக்கான சிரிப்பு சிகிச்சை பயிற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் |
| பாபா ராம்தேவ்வின் தேன்நிலவு விமர்சனம் எதிரொலி: தேர்தல் கமிஷன் திடீர் கெடுபிடி Posted: 26 Apr 2014 05:11 PM PDT உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக தாக்கி பேசினார். 'உல்லாசப் பயணம் மற்றும் தேன்நிலவுக்கு போவது போல் தலித் வீடுகளுக்கு ராகுல் காந்தி சென்று வருகிறார். |
| சோனியா-ராகுல் இடையே பொய் சொல்வதில் போட்டாப் போட்டி: மோடி Posted: 26 Apr 2014 03:26 PM PDT குஜராத் மாநிலம் சூரத் ஆருகே நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அம்மாநில முதல் மந்திரியும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பொய் சொல்வதில் சோனியாவுக்கும் ராகுலுக்கும் இடையில் போட்டாப் போட்டி தொடங்கியுள்ளது. தாய் ஒரு பொய்யை சொன்னால், மகன் 2 |
| தோல்வி பயத்தால் 2 தொகுதிகளில் போட்டியிடும் மோடி: மம்தா காட்டம் Posted: 26 Apr 2014 02:56 PM PDT திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி வங்காள மொழி செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெரும்பான்மையான அரசியல்வாதிகளிடையே வெளிப்படையான தன்மை இல்லை. மக்களின் நம்பகத்துக்கு உகந்தவர்களாகவும் அவர்கள் இருப்பதில்லை. குஜராத்தில் ஒரு தொகுதியிலும் |
| குஜராத்தில் லோக் ஆயுக்தா அமைந்தால் மோடி ஜெயிலுக்கு போவார்: ராகுல் Posted: 26 Apr 2014 02:35 PM PDT குஜராத் மாநிலம், பவாநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவ்கத் பரியா என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:- இங்கே (குஜராத்) லோக் ஆயுக்தாவோ, போதுமன அளவு தகவல் அறியும் உரிமை கமிஷனர்களோ இல்லை. 10 தகவல் அறியும் உரிமை கமிஷனர்களை நியமிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டும் 5 பேர் மட்டுமே உள்ளனர். |
| மோடியின் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு வலுவடையும்: சுப்பிரமணிய சாமி Posted: 26 Apr 2014 12:52 PM PDT மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால், தற்போது 61 ரூபாயாக உள்ள அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டே ஆண்டுகளில் 35 ரூபாயாக மாறும் என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். வாரணாசியில் ஒரு கருத்தரங்கில் பேசிய அவர், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்ப்பது ஏன்? என்ற தனது நிலைப்பாட்டுக்கு |
| பூஜ்ஜியம் ரூபாய் நோட்டுக்களை வழங்கி ஆம் ஆத்மி ஓட்டு வேட்டை Posted: 26 Apr 2014 11:54 AM PDT ஆந்திர மாநிலம் கர்ணூலில் உள்ள பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியினர் கர்ணூல் மாவட்டத்தில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர். |
| ஊழல்,பணவீக்கம் எதுவுமே தெரியாத பிரதமருக்கு அலை எப்படி தெரியும்?: மோடி கேலி Posted: 26 Apr 2014 10:55 AM PDT பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரப் பேச்சு '3-டி' தொழில்நுட்ப வீடியோ மூலம் 7 மாநிலங்களில் உள்ல 125 நகரங்களில் ஒரே நேரத்தில் இன்று ஒளிபரப்பானது. மக்களின் முன்னர் வீடியோவில் தோன்றிய மோடி, பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக தாக்கிப் பேசினார். |
| மோடி மாடலில் இருந்து நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: சோனியா Posted: 26 Apr 2014 09:17 AM PDT பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:- குஜராத் பெயரில் நரேந்திர மோடியின் மாடல் என்று விற்பனை செய்து வருகிறார்கள். குஜராத்தில் இந்த மாடலில் என்ன நடந்துகொண்டிருக்கிறது. 50 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் சீக்கியர்கள் வெளியேறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குஜராத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஒவ்வொரு வினாடிக்கும் 5 வயது குழந்தை ஒன்று ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகிறது. மோடி மாடலில், தினமும் 11 ரூபாய் வருவாய் பெறுபவர்கள் |
| சாதி மோதலை உருவாக்கும் பாஜக.வுக்கு ஓட்டு போக வேண்டுமா?: பிரதமர் கேள்வி Posted: 26 Apr 2014 08:52 AM PDT தெலுங்கானா பிராந்தியத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜனதா கட்சியை கடுமையாகச் சாடினார். போங்கிரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:- பா.ஜனதா கட்சியின் தேர்தல் கொள்கை என்பது, ஒரு தனிநபரை மையப்படுத்துவதுதான். உரத்த குரலில் அடிப்படையில்லாதவற்றை பேசி வருகின்றனர். அதுபோன்ற வாக்குறுதிகளை அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. |
| அமேதியில் ஆம் ஆத்மி தொண்டர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா Posted: 26 Apr 2014 04:58 AM PDT காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக அமேதி தொகுதியில் பிரச்சாரம் செய்து வரும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி இன்று பிரச்சார சென்ற பாதையில் ஆம் ஆத்மி தொண்டர்கள் வந்தனர். அவர்கள் பிரியங்காவைப் பார்த்ததும் அவருடன் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். தலையில் காந்தி தொப்பி அணிந்து வந்த ஆம் ஆத்மி தொண்டர்களை, காங்கிரசில் இணையும்படி பிரியங்கா சிரித்துக்கொண்டே கூறினார். அமேதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் களமிறங்கியுள்ளார். ராகுல் காந்தியை வெளியேற்றுவதுடன் |
| வதோதராவில் தொடரும் முதலைகள் அட்டகாசம் Posted: 26 Apr 2014 04:17 AM PDT குஜராத் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமான வதோதராவில் ஓடும் விஷ்வாமித்ரி நதிக்கரையை ஒட்டி நவிநகரி என்ற குடிசைப் பகுதி உள்ளது. நேற்று அந்தப் பகுதியில் வசித்து வந்த 60 வயது முதியவர் ஒருவர் மதியம் 2.30 மணி அளவில் ஆற்றுப்பக்கம் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள முதலை ஒன்று அவரைக் கடித்துக் குதறியதில் அவர் இறந்துள்ளார். அந்த வழியே சென்ற வழிப்போக்கர் ஒருவர் இதனைப் பார்த்து தீயணைப்புத்துறைக்குத் தகவல் தர அவரகள் சம்பவ இடத்திற்கு வந்து முதலையிடமிருந்து இறந்தவரின் உடலைப் பெற முயற்சி செய்தனர். |
| 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி பிரணாப் Posted: 26 Apr 2014 03:42 AM PDT பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு 2 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 24 பேருக்கு பத்ம பூஷண் விருது, 101 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது என மொத்தம் 127 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் தலைவர் மஷேல்கர் மற்றும் யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட், முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா, கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |