Tamil Star |
- ஒக்கலாகமாவில் சீற்றங்கொண்டு வீசிய புயல்காற்று: இருவர் பலி!
- விபத்தில் தப்பித்த அதிர்ஷ்டசாலி!!!
- சிங்கத்திடம் இருந்து காப்பாற்றிய கன்றின் தாய்
- அஜீத்தின் பிறந்தநாள் அன்று தொலைக்காட்சி சேனல்களில் ஆரம்பம், வீரம்
- துபாயில் தங்கமீன்கள் சாதனா கௌரவிப்பு
- ‘பாவம், இல்லாதவர்கள் எடுத்துக் கிட்டுப் போகட்டுமே – இளையராஜா
- யுவிக்கும் நெருக்கடியே பிடிக்காது : யுவராஜ் சிங் தாயார் ஷப்னம்
- 70 ரன்களில் சுருண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி
- ப்ரீத்தி ஜிந்தாவின் சொத்து மதிப்பு 30 மில்லியன் டாலர்தான்….!
- ரித்திக் ரோஷன் பம்பரமாய் ஆட ஈடு கொடுக்க முடியாமல் கத்ரீனா கைஃப்
| ஒக்கலாகமாவில் சீற்றங்கொண்டு வீசிய புயல்காற்று: இருவர் பலி! Posted: 27 Apr 2014 11:06 PM PDT
அமெரிக்காவில் ஒக்கலாகமாவில் சீற்றங்கொண்டு வீசிய புயல்காற்றானது இருவரின் உயிர்களைப் பறித்துச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகவும் சக்தி வாய்ந்த புயல்காற்று அமெரிக்காவின் மத்திய, மேற்கு மற்றும் தென் பகுதியிலுள்ள சமவெளிப் பகுதிகளில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோற்றம் பெற்ற புயலானது பலத்த மழை, ஆலங்கட்டி மழை ஆகியவற்றினால் பாரியளவிலான சேதத்தை விழைவித்திருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் இடி மில்னலுடன் தோன்றிய புயலானது பெரும் நாசத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல இரு உயிர்களையும் பறித்துச் சென்றுள்ளது எனத் தெரியவருகிறது. ஒக்கலாமாவின் வடகிழக்குப்பகுதியல் .இந்தச் சம்பவம் நடந்திருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புயலானது கிட்டத்தட்ட ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 அளவில் பாரிய தாக்கத்ததை ஏற்படுத்தியிருக்கின்றது எனவும் இன்னமும் சேத விபரம் சரியான முறையில் தெரியவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓக்கலாமாப் பகுதிக்கான அவசர உதவிப் பிரவினர் அதிகளவு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளுர் தகவல்களின்படி Quapaw என அழைக்கப்படகின்ற இடத்தில் அமைந்திருந்த தீயணைக்கும் நிலையம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியிருக்கின்து எனத் தெரியவருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விபத்தில் தப்பித்த அதிர்ஷ்டசாலி!!! Posted: 27 Apr 2014 04:17 AM PDT |
| சிங்கத்திடம் இருந்து காப்பாற்றிய கன்றின் தாய் Posted: 27 Apr 2014 04:13 AM PDT |
| அஜீத்தின் பிறந்தநாள் அன்று தொலைக்காட்சி சேனல்களில் ஆரம்பம், வீரம் Posted: 27 Apr 2014 04:08 AM PDT
அஜீத்தின் பிறந்தநாள் அன்று தொலைக்காட்சி சேனல்களில் ஆரம்பம், வீரம் ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அஜீத் குமாரின் பிறந்தநாள் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி வருகிறது. அஜீத் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அவரது ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர். அஜீத் பிறந்தநாள் ஸ்பெஷல்களை பார்ப்போம். அஜீத்தின் பிறந்தநாளை கொண்டாட தொலைக்காட்சி சேனல்களும் தயாராகிவிட்டன. மே 1ம் தேதி அஜீத் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. அஜீத் நடிப்பில் வெளியான ஆரம்பம் மற்றும் வீரம் ஆகிய படங்கள் வரும் மே 1ம் தேதி ஜெயா டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பபடவிருக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு அஜீத், ஷாலினி ஜோடியாக நடித்த அமர்க்களம் படம் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு வரும் மே மாதம் 1ம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அஜீத் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தலடே என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்டாகவிட்டுள்ளனர். மேலும் தலடே ஃபேஸ்புக்கிலும் பிரபலமாகி வருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| துபாயில் தங்கமீன்கள் சாதனா கௌரவிப்பு Posted: 27 Apr 2014 04:07 AM PDT
துபாயில் டிடிஎஸ் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சித்திரைத் திருவிழா 25.04.2014 அன்று மாலை 6 மணிக்கு துபாய் இந்தியப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ராஷித் அரங்கில் வெகு சிறப்புற நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவிற்கு டிடிஎஸ் ஈவென்ட்ஸ் தலைவர் ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். சித்திரைத் திருவிழா சீரோடும் சிறப்போடும் நடைபெற உதவி வரும் அனைத்து நல்லுங்களுக்கும் வாழ்த்துக்க்ளை தெரிவித்தார். சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் துணைச் செயலாளராக உயர் பதவி வகித்து வரும் தமிழர் முனைவர் ராஜன் நடராஜன் பங்கேற்றார். அவர் தனது உரையில், சமீபத்தில் சர்வதேச வர்த்தகப் பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அமீரக வர்த்தகப் பிரமுகர்களும் பங்கேற்றனர். அவர்கள் தங்களது நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியர்களே முக்கியப் பங்கு வகித்து வருவதாக குறிப்பிட்டார். நமது தமிழ்நாட்டை நம்பர் ஒன்னாக கொண்டு வர முடியாது. இத்தகைய முயற்சியினை டிடிஎஸ் ஈவென்ட்ஸுடன் இணைந்து தமிழகத்தில் 2015 ஆம் ஆண்டு உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து செயல் திட்டம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் அமீரகத் தமிழர்கள் முக்கியப் பங்கு வகிப்பர் எனக் குறிப்பிட்டார். ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும துணைத் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் அவர்கள் தனது உரையில், தன்னை அமீரகத் தமிழர்களின் முகவரி எனக் கூறினார். தமிழ் தான் நம் அனைவருக்கும் முகவரி எனக் குறிப்பிட்டார். பும்கா குரூப் மேலாண்மை இயக்குநர் சித்தார்த் பாலச்சந்திரன், சமூக சேவகர் கே. குமார், அமீரக வர்த்தகப் பிரமுகர் சைஃப் அல் ஜலால், சௌக்கத் அலி உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ் தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஞாபகம் வருதே, ஒவ்வொரு பூக்களுமே உள்ளிட்ட பாடல்களை நினைவு கூர்ந்து ரசிகர்களின் பாராட்டினைப் பெற்றார். தங்க மீன்கள் படத்திற்காக தேசிய விருது பெற்ற செல்வி சாதனா நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். தன்னை கௌரவித்த அமீரகத் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். இந்த நினைவு தனது வாழ்நாள் உள்ளவரை நீங்காத நினைவுகளாக இருக்கும் என உணர்ச்சி மேலிட கூறினார். ஸ்டார் கல்வி நிறுவன மேலாளர் மர்யம் ஸலாஹுத்தீன் பூங்கொத்து வழங்கி கௌரவிக்கப்பட்டார். சின்னத்திரை சூப்பர் சிங்கர்ஸ் கிருஷ்ணமூர்த்தி, ரவிசங்கர், யாழினி, நவீன், கோகுல், ஆசிஃப் மீரான் உள்ளிட்டோர் பாடல்கள் பாடினர். மெல்லிசை நிகழ்வினை சந்திரா கீதா கிருஷ்ணன் குழுவினர் வழங்குகினர். கவிதா பிரசன்னா குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. சின்னத்திரை மிமிக்ரி புகழ் சேதுவின் மிமிக்ரியில் சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் நடைபெற்ற காமெடிகளை அரங்கு அதிரும் வண்ணம் பகிர்ந்து கொண்டார். நிகழ்விற்கான அணுசரனையினை பும்கா குரூப், பிளாக் துளிப் பிளவர், ராயல் செஃப், சௌந்தர்யம் ஜெனரல் டிரேடிங், வேதாரண்யம் பாய்ண்ட் காலிமர் சர்வதேசப் பள்ளி, சூப்பர் டெக்ஸ், பேங்க் ஆஃப் பரோடா, வோஸ்டாக், அப்கிரேட் டயர் சேஞ்சிங், டிரான்ஸ்கான், ரமீ குரூப் ஆஃப் ஹோட்டல், வெஸ்டர்ன் ஆட்டோ, கிராஃபிக் எகுப்மெண்ட், பெர்செப்ட் பிரிண்ட், சன் குரூப், வாஃபி ஹோட்டல்ஸ், அல் வஹா, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கின. நிகழ்விற்கான ஏற்பாடுகளை டிடிஎஸ் ஈவென்ட்ஸின் முஹம்மது தாஹா, கீதா கிருஷ்ணன், சுந்தர், பாலா, விஜயேந்திரன், விஜயராகவன், பிரசன்னா உள்ளிட்ட குழுவினர் சிறப்புற செய்திருந்தனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ‘பாவம், இல்லாதவர்கள் எடுத்துக் கிட்டுப் போகட்டுமே – இளையராஜா Posted: 27 Apr 2014 04:05 AM PDT
தான் இசையமைக்காத பல படங்களில் தன் பாடல்கள் எடுத்தாளப்படுவது குறித்து இளையராஜாவிடம் கேட்டபோது, 'பாவம், இல்லாதவர்கள் எடுத்துக் கிட்டுப் போகட்டுமே,' என்று பதிலளித்துள்ளார். இளையராஜா இசையின் தாக்கம் இல்லாமல் இன்றைக்கு இசையமைப்பது சாத்தியமில்லாத விஷயமாகிவிட்டது. அந்த அளவு அவரது இசை நீக்கமற நிறைந்துள்ளது. இளமையின் ஆரம்பத்திலிருப்பவரும் சரி, இறுதிக் கட்டத்திலிருப்பவரும் சரி... இளையராஜா இசையோடுதான் வாழ்கிறார்கள். முன்பெல்லாம், இந்தி இசையமைப்பாளர்கள் குறிப்பாக அனுமாலிக் போன்றவர்கள் இளையராஜாவின் புகழ் பெற்ற மெட்டுக்களை அப்படியே சுட்டு இந்திப் பாடலாகப் போடுவது வழக்கம். ஓ ப்ரியா ப்ரியா... பாடலை, போல் ராதா போல் படத்தில் ஓ ப்யா ப்யா என்று போட்டிருந்தார் அனுமாலிக். ஆனால் ஒப்புக்குக் கூட ராஜாவுக்கு அவர் நன்றி சொல்லவில்லை. இது அப்பட்டமான காப்புரிமைத் திருட்டு. பேட்டா படத்தில் தக் தக் கர்னே லகா என்ற பாட்டும் இளையராஜாவின் தெலுங்கு - தமிழ் பாடல் (சம்மதம் தந்துட்டேன்...) ஒன்றின் காப்பிதான். விராசத் படத்தில் இஞ்சி இடுப்பழகாவை அப்படியே உருவிக் கொண்டார்கள். இதற்கும் இசை அனுமாலிக்தான். இதுகுறித்து இளையராஜாவிடம் ஒரு முறை கேட்டபோது, 'இதுக்கெல்லாம் வழக்குப் போடனும்னு போனா, இசையமைக்க எனக்கு நேரமே பத்தாது' என்றார் கிண்டலாக. பேட்டா படத்தில் தக் தக் கர்னே லகா என்ற பாட்டும் இளையராஜாவின் தெலுங்கு - தமிழ் பாடல் (சம்மதம் தந்துட்டேன்...) ஒன்றின் காப்பிதான். விராசத் படத்தில் இஞ்சி இடுப்பழகாவை அப்படியே உருவிக் கொண்டார்கள். இதற்கும் இசை அனுமாலிக்தான். இதுகுறித்து இளையராஜாவிடம் ஒரு முறை கேட்டபோது, 'இதுக்கெல்லாம் வழக்குப் போடனும்னு போனா, இசையமைக்க எனக்கு நேரமே பத்தாது' என்றார் கிண்டலாக. அதன் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளின் இறுதியில் ரீமேக் என்ற பெயரில் ராஜாவின் பாடல்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். அவரது எத்தனையோ தேவாமிர்தப் பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்தார்கள். இப்போது வேறு ட்ரெண்ட். இது சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமார் ஆரம்பித்து வைத்தது. அதாவது காட்சிகளுக்கான பின்னணி இசையாக ராஜாவின் பாடல்களை அப்படியே பயன்படுத்திக் கொள்வது. கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 படங்களிலாவது ராஜாவின் பாடல்களை அப்படியே பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள், குறைந்தபட்ச நன்றி அறிவிப்பு கூட போடாமல். அதுவும் குட்டிப்புலியில் பொன்னோவியம்.. என்ற ராஜாவின் பாடலை முழுமையாக ஒலிக்க விட்டு, ஒரு பாடல்காட்சியாக மாற்றியிருந்தனர். இதற்கும் ராஜாவின் அனுமதி கேட்கவில்லை. குக்கூ படத்திலோ, பெருமளவு இசையே ராஜாவின் பழைய பிஜிஎம்களிலிருந்துதான் எடுத்திருந்தனர். அவ்வப்போது ராஜாவின் பாடல்களையும் உருவியிருந்தார்கள். ஆனால் நன்றி - இளையராஜா என டைட்டிலில் போடக்கூட அவர்களுக்கு மனசு வரவில்லை. இந்தப் போக்கு குறித்து இளையராஜாவிடமே நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது. "இன்று வரும் திரைப்படங்களில் உங்களின் பாடல்களை பின்னனியில் ஒலிக்க விட்டு படத்தை நகர்த்தி விடுகிறார்களே...", என்று கேட்டிருந்தார் தேனி கண்ணன். அதற்கு ராஜா அளித்த பதிலில், "பாவம்... இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் இருக்கும் இடத்திலிருந்துதானே எடுப்பார்கள். எடுத்து விட்டுப்போகட்டும். எங்கு போனாலும் இங்குதானே வந்தாக வேண்டும்," என்று கூறியிருந்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| யுவிக்கும் நெருக்கடியே பிடிக்காது : யுவராஜ் சிங் தாயார் ஷப்னம் Posted: 27 Apr 2014 04:04 AM PDT
என் மகனுக்கு நெருக்கடியுடன் விளையாடுவது அறவே பிடிக்காது. எனவேதான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாட அவன் ஆர்வம் காட்டினான். இங்கு அனைத்து வீரர்களுமே கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறார்கள் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங். பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆடுவதற்கு முன்பு இந்தப் பேட்டியை அளித்திருந்தார் ஷப்னம். இப்போட்டியில் பெங்களூர் அணி படு தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. மிகப் பெரிய விலைக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங், ஒரே ஒரு போட்டியைத் தவிர மற்ற போட்டிகளில் சோபிக்காமல் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷப்னம் சிங் இதுகுறித்து பெங்களூர் அணியின் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து.... பெங்களூர் அணிக்காக தேர்வானது யுவராஜுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. காரணம், மகிழ்ச்சிக்குப் பெயர் போனது பெங்களூர் அணி என்பதால். பெங்களூர் அணி் வீரர்கள் அனைவருமே ஜாலியாக, கேஷுவலாக, விளையாட்டை ரசித்து விளையாடுபவர்களாக உள்ளனர். யுவிக்கும் நெருக்கடியே பிடிக்காது. நெருக்கடி இல்லாமல் விளையாடத்தான் அவனும் விரும்புவான். அவனுக்கு எப்போதெல்லாம் சோர்வு வருகிறதோ அப்போதெல்லாம் அவனை தனியாக விட்டு விடுவேன். அதுவே அவனை நார்மலாக்கி விடும். கொஞ்சம் நார்மல் ஆன பிறகுதான் அவனிடம் செல்வேன். வெற்றியைப் போலவே, தோல்வியும், தொய்வும் ஒரு அங்கம்தான் என்பதை அவனுக்குப் புரிய வைப்பேன். அதன் பிறகு அவன் நார்மலாகி விடுவான். எல்லா தாயாரையும் போலத்தான் நானும். எல்லாப் பெற்றோருமே குழந்தைகளை இப்படித்தான் அணுகுவார்கள். நானும் அப்படித்தான். அம்மாக்கள் பிள்ளைகளிடம் பாசத்தைக் கொட்டுவார்கள். அப்பாக்கள் கண்டிப்பார்கள். இது வழக்கமானதுதான். This posting includes an audio/video/photo media file: Download Now |
| 70 ரன்களில் சுருண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி Posted: 27 Apr 2014 04:02 AM PDT
ஐ.பி.எல். தொடர் வரலாற்றில் மிக மோசமாக விளையாடி 15 ஓவர்களில் 70 ரன்களுக்குள் சுருண்டு போனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. 7வது ஐ.பி.எல். போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டக்வாலே முதல் ஓவரிலேயே 1 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்த பந்தில் படேல் அவுட் ஆனார். 2வது ஓவரில் அந்த அணி 5 ரன்கள் எடுத்த நிலையில் ரூ14 கோடி விலைக்கு வாங்கப்பட்ட யுவராஜ்சிங் அவுட் ஆனார். டிவில்லியர்ஸ் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆனார். அந்த அணியில் கேப்டன் கோஹ்லி மட்டும் 25 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்களை எடுத்தார். ஸ்டார்க் 18 ரன்களையும் ராம்பால் 13 ரன்களையும் எடுத்திருந்தனர். 15 வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்களை மட்டுமே பெங்களூர் அணி எடுத்திருந்தது. ஐ.பி.எல். வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஸ்கோர் பட்டியலில் 3வது ரன் குவிப்பு இது. இதற்கு முன்பு 2009ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ்- பெங்களூர் இடையேயான போட்டியில் 58 ரன்களும் 2008ல் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியில் 67 ரன்களும் எடுக்கப்பட்டிருந்தது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ப்ரீத்தி ஜிந்தாவின் சொத்து மதிப்பு 30 மில்லியன் டாலர்தான்….! Posted: 27 Apr 2014 04:00 AM PDT
ஐபிஎல் அணி உரிமையாளர்களியே ஏழ்மையானவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தாதான் ஏழையானவராம். வெல்த் எக்ஸ் என்ற இதழ் இதைத் தெரிவித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கியப் பங்குதாரர் ப்ரீத்திதான். ஆனால் எட்டு ஐபிஎல் உரிமையாளர்களின் சொத்துப் பத்துக்களைப் பார்க்கும்போது கொஞ்சமாக வைத்திருப்பவர் ப்ரீத்தி மட்டுமே. ப்ரீத்தி ஜிந்தாவின் சொத்து மதிப்பு 30 மில்லியன் டாலர்தான். அதாவது ரூ. 183 கோடியாம். மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளன முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்போ ரூ. 1.29 லட்சம் கோடியாகும். 2வது இடத்தில் இருப்பவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளரான கலாநிதி மாறன். இவரது சொத்து மதிப்பு ரூ. 13 ஆயிரத்து 340 கோடியே, 80 லட்சமாகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விஜய் மல்லையா 640 மில்லியன் டாலருடன் 3வது இடத்தில் இருக்கிறார். இவர் வங்கிகளுக்குக் கட்ட வேண்டிய கடன் தொகை ரூ. 7000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரித்திக் ரோஷன் பம்பரமாய் ஆட ஈடு கொடுக்க முடியாமல் கத்ரீனா கைஃப் Posted: 27 Apr 2014 03:59 AM PDT
பாங் பாங் படப்பிடிப்பில் நடிகர் ரித்திக் ரோஷனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஆட முடியாமல் கத்ரீனா கைஃப் காயம் அடைந்தார். ரித்திக் ரோஷன், கத்ரீனா கைஃப் ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் பாங் பாங். இந்த படத்தின் படப்பிடிப்பில் ரித்திக்கின் தலையில் அடிபட்டு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு சென்றது. அறுவை சிகிச்சை முடித்து ரித்திக் பாங் பாங் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். பாடல் பாங் பாங் படத்தில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கினர். ரித்திக் ரோஷன் பம்பரமாய் ஆட அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கத்ரீனா கைஃப் திணறினார். ரித்திக்கிற்கு டான்ஸ் ஆடுவது கை வந்த கலை. அவர் வளைந்து நெளிந்து ஆட அவருக்கு ஏற்றது போல் ஆட முயன்ற கத்ரீனாவுக்கு காயம் ஏற்பட்டது. பாங் பாங் படத்தில் ரித்திக், கத்ரீனா லிப் டூ லிப் கொடுக்கும் காட்சி உள்ளதாம். இந்த காட்சிக்காகவே ஒரு நாள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் கத்ரீனா. மனைவி சூசனை பிரிந்து கவலையில் இருக்கும் ரித்திக் ரோஷனுக்கு கத்ரீனா தான் ஆறுதல் கூறி வருகிறார் என்று கூறப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


















