Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சோனியா மருமகனுக்கு ரூ.300 கோடி எப்படி வந்தது? பா.ஜ.க. கேள்வி

Posted: 27 Apr 2014 10:51 PM PDT

பாரதீய ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் நடத்தி வரும் தேர்தல் பிரசாரம் தற்போது தனிநபர் மீதான விமர்சன தாக்குதலாக மாறி வருகிறது. முதலில் காங்கிரஸ் தரப்பில் இருந்து நரேந்திர மோடியின் மனைவி தொடர்பான விமர்சனம் எழுப்பபட்டது. பிறகு மோடியை அழிவுசக்தி என்று மேடை தோறும் காங்கிரசார் பேசினார்கள்.

ஓட்டு கேட்க சென்றபோது புரந்தரேஸ்வரி மீது மிளகு ஸ்பிரே வீச்சு

Posted: 27 Apr 2014 10:33 PM PDT

ஆந்திர முன்னாள் முதல்– மந்திரி என்.டி.ராமராவ் மகள் புரந்தரேஸ்வரி. பாரதீய ஜனதா வேட்பாளராக சீமாந்திராவில் உள்ள ராஜபேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று வித்தூர் மாவட்டம் சோமளா பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அந்த பகுதி மக்கள் மாடியில் நின்றபடி அவர் மீது பூ தூவினார்கள்.

காங்கிரசை யாரும் தோற்கடிக்க முடியாது: சிரஞ்சீவி

Posted: 27 Apr 2014 10:11 PM PDT

மத்திய மந்திரி சிரஞ்சீவி சீமாந்திரா பகுதி காங்கிரஸ் தேர்தல் பிரசார கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். சீமாந்திராவில் உள்ள தெனாலி பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:– தெலுங்கானா தனி மாநிலம் அமைத்ததற்கு காங்கிரஸ் கட்சி மட்டும் காரணம் இல்லை. எல்லா கட்சிகளும் தான் காரணம்.

கேரளாவில் பலத்த மழை

Posted: 27 Apr 2014 09:38 PM PDT

கேரளாவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சில நாட்களாக ஓய்ந்திருந்த மழை நேற்று மாலை மீண்டும் கொட்டத் தொடங்கி உள்ளது. இதனால் திருவனந்தபுரம் நகரில் சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது

வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிடுவது ஏன்?: அமித்ஷா பதில்

Posted: 27 Apr 2014 09:14 PM PDT

பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா தொகுதிகளில் போட்டியிடுகிறார். தோல்வி பயம் காரணமாகத்தான் மோடி, வாரணாசியில் போட்டியிடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தநிலையில், மோடியின் தீவிர ஆதரவாளரும், உத்தரபிரதேச பா.ஜனதா மேலிட பொறுப்பாளருமான அமித்ஷா, நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மோடி வாரணாசியில் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்தது,

நகரி தொகுதியில் நடிகை ரோஜா பிரசாரம்

Posted: 27 Apr 2014 09:09 PM PDT

ஆந்திரா மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டதையடுத்து 2 மாநிலங்களுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி சட்டசபை தொகுதியில் நடிகை ரோஜா போட்டியிடுகிறார். அவர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

போர்டிங் பாஸ் இல்லாமலே விமானத்தில் பயணம் செய்த பயணி

Posted: 27 Apr 2014 05:18 PM PDT

போர்டிங் பாஸ் இல்லாமல் மூன்று பாதுகாப்பு சோதனைகளைக் கடந்து கடந்த 25ஆம் தேதியன்று 37 வயதுடைய ஒருவர் மும்பையிலிருந்து ராஜ்கோட் வரை சென்றது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மிகப் பெரிய கேள்வியை தற்போது எழுப்பியுள்ளது. லிஜூ வர்கீஸ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச விமானம் ஒன்றின்மூலம் மும்பை வந்தார். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 4.11 மணிக்கு நாக்பூர் செல்லவிருந்த ஜெட் நிறுவனத்தின் 9டபிள்யு 2165 என்ற

மோடி, சோனியா போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் இன்று ஓய்கிறது

Posted: 27 Apr 2014 04:37 PM PDT

543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி மே 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுவரை 6 கட்டமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள 348 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்து உள்ளது.

மும்பை அருகே பணம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் துண்டுத் துண்டாக வெட்டிக் கொலை

Posted: 27 Apr 2014 04:04 PM PDT

மகாராஷ்ட்டிரம் மாநிலம் பிவாண்டி பகுதியில் நகைக்கடை வைத்திருப்பவர் உத்தம். இவரது மகன் ரோகன்(12) அங்குள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 17-ம் தேதி காலை அவனை கடத்திச் சென்ற சிலர், 'உன் மகனை விடுவிக்க வேண்டும் என்றால் ஐம்பது லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்து வைத்துக் கொள்' என்று உத்தமை தொலைபேசியில் மிரட்டியுள்ளனர். இது

மே.வங்காளம்: தேர்தல் மோதலில் 6 பேர் படுகொலை

Posted: 27 Apr 2014 02:52 PM PDT

மேற்கு வங்காளம் மாநிலத்தில் 5 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மே 12-ம் தேதி நிறைவடையவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் நிகழ்ந்த தேர்தல் தொடர்பான மோதல்களில் இது வரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அசாமில் முன்னாள் ஜனாதிபதி வீட்டில் தீ விபத்து

Posted: 27 Apr 2014 02:22 PM PDT

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள லக்தொகியா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் பழைய வீடு உள்ளது. 100 ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்ட அந்த வீட்டில் தற்போது யாரும் வசிக்கவில்லை. அந்த வீட்டின் அருகில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பகல் தீ பிடித்தது.

மதசார்பான நாடானால் இந்தியாவுடன் காஷ்மீர் இருக்காது: பரூக் மிரட்டல்

Posted: 27 Apr 2014 01:34 PM PDT

காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று ஸ்ரீநகருக்கு வந்தார்.

குஜராத்தில் 10 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

Posted: 27 Apr 2014 01:17 PM PDT

குஜராத் மாநிலத்தில் கடந்த நில நாட்களாக வருவாய் புலனாய்வுத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் சுமார் 82 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சுரேந்தர்நகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட

குஜராத்தின் கசாப்புக்காரர்: மோடி மீது திரிணாமுல் கடும் தாக்கு

Posted: 27 Apr 2014 01:00 PM PDT

மேற்கு வங்காள மாநிலம் சேரம்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார். மேற்கு வங்காளத்தை உலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடியில் மம்தாவை தொடர்புப்படுத்தி பேசிய அவர், 'சாரதா என்பது எல்லா

எங்கள் ஆட்சியில் வங்காளதேசத்தினர் விரட்டப்படுவார்கள்: மோடி ஆவேசப் பேச்சு

Posted: 27 Apr 2014 12:11 PM PDT

மேற்கு வங்காள மாநிலம் சேரம்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார். ஓட்டு வங்கி அரசியலுக்காக வங்காள தேசத்தினரை சிகப்பு கம்பளம் விரித்து மம்தா பானர்ஜி வரவேற்பதாக குற்றம் சாட்டிய அவர், தேசிய ஜனநாயகக்

பீகாரில் மறுவாக்குப்பதிவு அமைதியாக நடந்தது

Posted: 27 Apr 2014 11:27 AM PDT

வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று பீகார் மாநிலத்தின் 3 பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 30 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

திருப்பதி கோயிலில் மே 1-ம் தேதி மோடி வழிபாடு

Posted: 27 Apr 2014 10:41 AM PDT

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி மலைக் கோயிலில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடி மே 1-ம் தேதி வழிபாடு செய்கிறார். இதற்காக, ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 30-ம் தேதி திருப்பதி நகரை வந்தடையும் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் தேர்தல்

சோனியாகாந்தி செல்ல இருந்த ஹெலிகாப்டரில் கோளாறு

Posted: 27 Apr 2014 08:45 AM PDT

தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி தேர்தல் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து மேடக் மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று பிரசார கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் ஹெலிகாப்டரில்

ராபர்ட் வதேராவின் நில மோசடிகள் குறித்த வீடியோ: பி.ஜே.பி. வெளியிட்டது

Posted: 27 Apr 2014 06:36 AM PDT

மோடியை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேராவின் நில மோசடி குறித்த தகவல்களை வீடியோவில் தொகுத்து பா.ஜ.க தனது பதில் தாக்குதலை தொடுத்துள்ளது.

இந்தியாவின் ஒரே கொரில்லாவான போலோ 43வது வயதில் மரணமடைந்தது

Posted: 27 Apr 2014 05:02 AM PDT

இந்தியாவில் உள்ள ஒரே கொரில்லாவான "போலோ" தனது 43 வயதில் நேற்று மரணமடைந்தது. மைசூர் வனவிலங்குகள் பூங்காவில் வாழ்ந்து வந்த இந்த கொரில்லா சுவாச தொற்று காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் பலவீனமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™