Tamil Star |
- ஹைதராபாத் சன் ரைசர்ஸ் 184 டெல்லி டேர்டெவில்ஸ் 180 ; 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
- மும்பையை வீழ்த்திய சென்னை : தொடரும் வெற்றி
- கிறிஸ் லின் கேட்ச் கொல்கத்தாவுக்கு வெற்றி
- ஐ.பி.எல். போட்டிகளில் ‘டக்கு’ மன்னன் பட்டம் வென்ற ‘கவுதம் கம்பீர்!
- குஜராத்தில் மோடிக்கு கோச்சடையான் சிறப்பு காட்சி – ரஜினி ஏற்பாடு
- ராணி வேடத்தில் ரூ.5 கோடி நகையுடன் நடிக்கும் அனுஷ்கா
- விஜய், அனுஷா, நியூசிலாந்து நாட்டு மக்கள் -‘சேர்ந்து போலாமா’
- பிலிம் சேம்பர் தேர்தலில் மோதல்: கே. ராஜன் பேட்டி
- ரொறொன்ரோ பெண் ஒருவரை கற்பழித்த குற்றத்திற்காக 4- பொலிஸ் அதிகாரிகள் காவல்
- தாய் தன்னையும் கொன்று மனஇறுக்கத்தில் இருந்த தனது மகனையும் கொன்ற கொடூரமான சோக சம்பவம்
- பிரதமர் மன்மோகன் சிங் மீது எஸ்எப்ஜே வழக்கு? சம்மன்ஸ் அனுப்பிய அமெரிக்க நீதி மன்றம்
- பிறப்புறுப்பில் துப்பாக்கியுடன் வந்த அமெரிக்க யுவதி!
- தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைகளை மறுத்தது இலங்கை
- காலணித்துவ சக்திகள் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சி : ஜனாதிபதி
- பௌத்த பிக்கு ஒருவருக்கு அடைக்கலம் வழங்குவதில் தவறில்லை: ரவூப் ஹக்கீம்
- சிறுநீரக வியாபார குற்றச்சாட்டை மறுத்தது நவலோக மருத்துவமனை
- கஜபாபுரம் வட மாகாணசபைக்கு சொந்தமானது!- துரைராசா ரவிகரன்
- பெரியவரின் அதிரடி, துப்பாக்கி இருந்தும் பயந்தோடிய திருடன்!
- ஒசாமா பின்லேடன் பாரில் பராக் ஒபாமா!!!
- கால்பந்தாட்ட போட்டியை ரசித்த முன்னாள் வெனிசுலா அதிபர் ஆவி…
| ஹைதராபாத் சன் ரைசர்ஸ் 184 டெல்லி டேர்டெவில்ஸ் 180 ; 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Posted: 25 Apr 2014 11:06 PM PDT
7வது ஐ.பி.எல். போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வீழ்த்தியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மாலை டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக தவானும், ஆரோன் பிஞ்ச்சும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ரன்களை குவித்தனர். டெல்லி அணியின் நதீம் வீசிய 7 வது ஓவரில் 22 பந்துகளில் 33 ரன்களை குவித்த தவான் ஆட்டமிழந்தார். இதனால் 3வது ஆட்டக்காரராக டேவிட் வார்னர் களமிறங்கினார். ஆரோன் பிஞ்ச்சும், வார்னரும் டெல்லி அணியின் பந்துகளை வெளுத்து வாங்கினர். இருவரும் கடைசி வரை விளையாடி ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிஞ்ச் 53 பந்துகளில் 88 ரன்களும், வார்னர் 45 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தனர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 184 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய டெல்லியின் டி காக்கும், முரளி விஜயும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தனர். 12வது ஓவரில் 30 பந்துகளில் 48 ரன்களை குவித்த டி காக் அவுட்டானார். சிறிது நேரத்தில் முரளி விஜய்யும் 52 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த பீட்டர்சன்னும், கார்த்திக்கும் வெற்றி இலக்கு கடினமானதால் அடித்து ஆட முயன்று தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியின் டுமினியும், திவாரியும் இணைந்து கடைசி வரை போராடினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் இருவரும் அதிரடியாக ரன்களை குவித்தனர். கடைசி இரண்டு பந்துகளில் 13 ரன்கள் தேவை என்றிருந்தபோது கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் டுமினி சிக்ஸர் அடித்தார். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் ஆட்டத்தை டை செய்யலாம் என்ற விறுவிறுப்பான நிலையில் கடைசி பந்தில் 2 ரன்களை மட்டுமே டுமினியால் எடுக்க முடிந்தது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மும்பையை வீழ்த்திய சென்னை : தொடரும் வெற்றி Posted: 25 Apr 2014 11:04 PM PDT
7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. நடப்பு ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணி தொடர்ந்து 3 போட்டிகளில் வென்று வெற்றி நடை போட்டு வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லை. மும்பையில் ஜஸ்பிரித் பம்ராவுக்கு பதிலாக சிதம்பரம் கவுதம் சேர்க்கப்பட்டார். டாஸ் ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக மைக் ஹஸ்சி, ஆதித்ய தாரே ஆகியோர் களமிறங்கினர். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செம அதிர்ச்சி காத்திருந்தது. மைக் ஹஸ்சி 7 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ஒரே ஒரு ரன் எடுத்து கிளீன் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ஆதித்ய தாரே 19 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். இதன் பின்னர் கோரி ஆண்டர்சனும், கேப்டன் ரோகித் ஷர்மாவும் இணைந்து மும்பை இந்தியன்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஆனாலும் பெரும் போராட்டமாகத்தான் இருந்தது. 10 ஓவர் முடிவடைந்த நிலையில் மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 57 ரன்களே எடுத்திருந்தது. கடைசி 10 ஓவர்களில் ரன்களைக் குவிப்பதில் மும்பை இந்தியன்ஸ் அணி வேகம் காட்டியது. அந்த அணியின் ஸ்கோர் 109 ரன்களை எட்டிய போது கோரி ஆண்டர்சன் அவுட் ஆனார். அவர் 31 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார். இதில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். அரைசதம் அடித்த கையோடு ரோகித் ஷர்மா அவுட் ஆனார். அவர் 41 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். இதில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். 19-வது ஓவரை மொகித் ஷர்மா வீசி 3 விக்கெட்டுகளை அள்ளினார் பொல்லார்ட் 12 ரன்களிலும் அம்பத்தி ராயுடு 1 ரன்னிலும் அவுட் ஆகினர். ஹர்பஜன்சிங் டக் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொகித் ஷர்மா 4 விக்கெட்டுகளும், ல்பனாஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 142 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெய்ன் சுமித், 22 பந்துகளில் 4 சிக்சர்கள் அடித்த கையோடு 29 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் ரெய்னா 1 ரன்னில் அவுட் ஆனார். ஆனால் ஸ்மித்துடன் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர் மெக்கல்லம் அபாரமாக விளையாடி அரைசதத்தை கடந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன் பின்னர் மெக்கல்லமும், கேப்டன் டோணியும் இணைந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சென்னை அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரன்டன் மெக்கல்லம் 53 பந்துகளை எதிர்கொண்டு 71 ரன்களை எடுத்திருந்தார். இதில் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். கேப்டன் டோணி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தார். ஏற்கனவே டெல்லி, ராஜஸ்தான் அணிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்து இருந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோல்வியை எதிர்கொண்டது சென்னை அணி. தற்போது மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி 3வது வெற்றியைப் பெற்றுள்ளது. நடப்பு தொடரில் இதுவரை சந்தித்த அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணிக்கு இது 3-வது தோல்வியாகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கிறிஸ் லின் கேட்ச் கொல்கத்தாவுக்கு வெற்றி Posted: 25 Apr 2014 11:02 PM PDT
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு நேற்று எங்கேயோ மச்சம் போல. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸிடம் சிக்கி அவுட்டாகவிருந்த அந்த அணி கிறிஸ் லின் புண்ணியத்தால் 2 ரன்களில் தப்பிப் பிழைத்தது. உண்மையிலேயே லின் கேட்ச் ரி்ன் சோப்பு போட்டு வெளுத்ததைப் போல அப்படி ஒரு பளீச் கேட்ச்.. பயங்கரமான கேட்ச்சும் கூட.. படு லாவகமாக லின் பிடித்த விதம் சிம்ப்ளி சூப்பர்ப். அட்டகாசமான அந்த கேட்ச்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதனால் ஒரே கேட்ச்சில் உச்சிக்குப் போய் விட்டாார் லின். ஸ்டன்னிங் என்று சொல்வார்களே அதற்கு லின் பிடித்த இந்த கேட்ச்சை உதாரணமாக கூறலாம். அப்படி ஒரு அபாயகரமான கேட்ச் இது. கடைசி ஓவர் அது. பேட்டிங் செய்கிறது பெங்களூர் அணி. 3 பந்துகளே கையில். வெற்றிக்குத் தேவையோ 6 ரன்கள். ஒரே ஒரு சிக்ஸர் போட்டால் போதும் என்ற நிலை.. பீல்டர்களை படு புத்திசாலித்தானமாக பார்டர் கட்டி நிற்க வைத்திருந்தார் கொல்கத்தா கேப்டன் கம்பீர். ஆப் டி வில்லியர்ஸ் பந்தை அடிக்கிறார். பந்து எல்லைக் கோட்டை நோக்கி பாயந்தோடி வருகிறது. சரிதான் .. பெங்களூர் வெல்லப் போகிறது என்று எல்லோரும் முடிவே செய்து விட்டனர். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் லின் அட்டாகசமாக எல்லைக் கோட்டுக்கு முன்பு வைத்து தனது உடலை வில்லாக வளைத்து புலி போல பின்பக்கமாக பாய்ந்து பந்தைப் பிடித்து சிறைப் பிடித்து கீழே விழுந்தார். லின் பிடித்த அந்த கேட்ச் பெங்களூர் அணியின் வெற்றியை தடுத்து நிறுத்தி கொல்கத்தாவுக்கு வெற்றி தேடிக் கொடுத்தது. லின் சூப்பர் மேன் ஆகி வி்ட்டார் ஒரே கேட்ச்சில். 7 ஐபிஎல் தொடர்களிலும் எத்தனையோ அட்டாசமான கேட்ச்சுகளை ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஆனால் லின் பிடித்த இந்த கேட்ச் போல யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு அக்மார்க் அட்டகாச கேட்ச் இது. லின்தான் பின்னர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். அப்போது அவர் கூறுகையில், நான் பந்தை பிடித்தேனா அல்லது விட்டேனா என்பது கூட அப்போது எனக்குத் தெரியாது. காரணம் நான் விழுந்து விட்டேன் என்றார். லின் பிடித்த கேட்ச்சால் வெற்றி தனது அணிக்கு சாதகமாக வந்ததால் கேப்டன் கம்பீர் குஷியாகி விட்டார். சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். பின்னர் அவர் கூறுகையில், எங்களுக்கு அதிர்ஷ்டம்தான் துணை இருந்தது. அதேசமயம், லின் பிடித்த கேட்ச்சை எங்களால் நம்பவே முடியவில்லை. அபாரமான கேட்ச் அது என்றார் கம்பீர். ஆனால் கம்பீர் நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆகி புதிய வரலாறு படைத்தார். அதை லின் கேட்ச்சில் பலரும் மறந்திருக்கலாம். ஆனால் நாம மறக்க முடியாதே..ஐபிஎல் போட்டிகளில் டக் அவுட்டில் புதிய சாதனையை நேற்று கம்பீர் படைத்தார். கம்பீர் நேற்று போட்டது இந்தத் தொடரில் அவர் எடுத்த 3வது தொடர் டக் ஆகும். அதாவது விளையாடிய 3 போட்டிகளிலும் கம்பீர் ரன்னே எடுக்கவில்லை. அதை விட கேவலமானது இதுவரை ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 11 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.இது ஒரு சாதனையாகும். அதேபோல கொல்கத்தாவின் கல்லிஸ் 9 முறையும், அமீத் மிஸ்ரா 9 முறையும் ஐபிஎல் போட்டிகளில் டக் அவுட் சாதனை படைத்த பிறர் ஆவர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.பி.எல். போட்டிகளில் ‘டக்கு’ மன்னன் பட்டம் வென்ற ‘கவுதம் கம்பீர்! Posted: 25 Apr 2014 10:59 PM PDT
ஐ.பி.எல். போட்டிகளில் அதிகமுறை ரன் ஏதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆன "நாயகர்களின்" பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர்! ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2012-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் கேப்டன் கவுதம் கம்பீர். ஹீரோவாக திகழ்ந்த அவர் ஜீரோவாகி கொண்டிருக்கிறார். 7-வது ஐ.பி.எல். சீசனில் இன்னமும் ரன் கணக்கை தொடங்காத ஒரே நட்சத்திர பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் தான். மும்பைக்கு எதிரான போட்டி.. மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 8 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காத அவர் மலிங்காவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். டெல்லிக்கு எதிரான ஆட்டம்.. அதேபோல் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்தில் ரன் எடுக்காத நிலையில், நாதன் கவுல்டர் நிலேவின் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பெங்களூருக்கு எதிராகவும் டக் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் டக்-அவுட் ஆகி "ஹாட்ரிக்" சாதனை படைத்தார். இதில் மிட்செல் ஸ்டார்க்கின் ஓவரில், எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். மூன்று ஆட்டங்களிலும் அவரை வெளிநாட்டை சேர்ந்த பவுலர்களேகாலி செய்து இருக்கிறார்கள். டக் அவுட் ஹாட்ரிக் மன்னன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'டக்-அவுட்'டில் ஹாட்ரிக் படைத்த மோசமான வீரர் கவுதம் கம்பீர்தான். 10 முறை டக் அவுட் மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக முறை டக்-அவுட் ஆன பரிதாபமானவர்களின் வரிசையிலும் முதலிடத்தை பிடித்துள்ளார் கம்பீர். அவர் 91 ஆட்டங்களில் 10 முறை ரன் ஏதுமின்றி டக்-அவுட்டில் வீழ்ந்திருக்கிறார். மிஸ்ரா- காலிசுக்கு 2வது இடம்This posting includes an audio/video/photo media file: Download Now |
| குஜராத்தில் மோடிக்கு கோச்சடையான் சிறப்பு காட்சி – ரஜினி ஏற்பாடு Posted: 25 Apr 2014 10:21 PM PDT
கோச்சடையான் படத்தை நரேந்திரமோடி பார்க்கிறார். குஜராத்தில் இதற்கான சிறப்பு காட்சிக்கு ரஜினி ஏற்பாடு செய்துள்ளார். ரஜினிக்கு நரேந்திர மோடிக்கும் நெருக்கமான நட்பு உள்ளது. ரஜினி உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது மோடி நேரில் போய் நலம் விசாரித்தார். சமீபத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த போதும் ரஜினியை அவரது வீட்டில் போய் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் மோடி வெற்றி பெற ரஜினி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கோச்சடையான் படத்தை பார்க்க நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குஜராத்தில் மோடி பார்ப்பதற்காக சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது போல் இந்தி நடிகர், நடிகைகள் பார்ப்பதற்காகவும் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது. கோச்சடையான் படம் வருகிற 9–ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. 3500–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வருகிறது. இதில் ரஜினி தந்தை, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். ரஜினி மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படங்களான அவதார், டின்டின் படங்கள் போன்று அனிமேஷன் படமாக இது தயாராகியுள்ளது. இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைய்லரை சமீபத்தில் வெளியிட்டனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. படம் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். கோச்சடையான் ரிலீசாகும் நாளில் தியேட்டர்களில் கட்–அவுட்கள், கொடி தோரணங்கள் அமைத்து விழா போல் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராணி வேடத்தில் ரூ.5 கோடி நகையுடன் நடிக்கும் அனுஷ்கா Posted: 25 Apr 2014 10:20 PM PDT
அனுஷ்கா ருத்ரமாதேவி என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். தமிழிலும் இப்படம் வருகிறது. இதில் அனுஷ்கா ராணி வேடத்தில் வருகிறார். இதற்காக வாள் சண்டை கற்றுள்ளார். குதிரையேற்றம் பயிற்சியும் எடுத்துள்ளார். ராணி கேரக்டர் என்பதால் அனுஷ்காவுக்கு பிரத்யேகமாக தங்கத்தில் நகைகள் வடிவமைக்கப்பட்டது. ரூ.5 கோடிக்கு நகைகள் வாங்கப்பட்டன. இவற்றை அணிந்து அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த படத்தில் அனுஷ்காவுடன் ராணா, கிருஷ்ணம் ராஜூ, பாபாசேகர், கேத்ரினா திரேஷா, ஹம்சநந்தினி போன்றோரும் நடிக்கின்றனர். குணசேகர் இயக்குகிறார். அனுஷ்கா ஏற்கனவே அருந்ததி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ருத்ரமாதேவி படமும் அனுஷ்கா திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்கின்றனர். அரண்மனை அரங்குகள் அமைத்து அதிக பொருட்செலவில் இப்படத்தை எடுக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| விஜய், அனுஷா, நியூசிலாந்து நாட்டு மக்கள் -‘சேர்ந்து போலாமா’ Posted: 25 Apr 2014 10:19 PM PDT
ஐஸ்வர்யா எண்டர் டெய்ன் மெண்ட்ஸ் சார்பில் சசி நம்பீசன் முதன்முதலாக தயாரிக்கும் படம் 'சேர்ந்து போலாமா'. இப்படத்தில் நாயகனாக வினய் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இந்தி, தெலுங்கு படங்களில் நடித்த மதுரிமா நடிக்கிறார். முக்கிய பாத்திரத்தில் ப்ரீத்திபால், நந்துவும் நடித்திருக்கிறார்கள். மேலும் அருண், தம்பிராமையா, தலைவாசல் விஜய், அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். நியூசிலாந்து நாட்டு மக்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அனில் குமார் இயக்குகிறார். இவர் மலையாளத்தில் மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம் போன்ற நட்சத்திரங்களை வைத்து பல படங்களை இயக்கியவர். குறிப்பாக ஜெயராமை வைத்து 10 படங்கள் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை சஞ்சீவ் சங்கர் செய்திருக்கிறார். விஷ்ணு மோகன் சித்தாரா இசையமைத்திருக்கிறார். நியூசிலாந்தின் தெற்கு தீவைச் சேர்ந்த இளைஞர்கள் ஏழுபேர் கால ஓட்டத்தில் பிரிந்து போகிறார்கள். ஒரு கட்டத்தில் தொலைந்து போன நட்பை தேடிப் புறப்படுகிறார்கள். வடக்கே ஆக்லேண்டிலிருந்து தெற்கு தீவுக்கு பயணப்படுகிறார்கள். இடையில் ஒரு இக்கட்டில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆபத்தைக் கடந்து அவர்கள் நட்பு வென்றதா? அவர்களில் சிலருக்குள் துளிர்விட்ட காதல், தளிர் விட்டு வளர்ந்ததா? என்பதே கதை. 'சேர்ந்து போலாமா' படம் முழுக்க முழுக்க நியூசிலாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் வசிக்கும் முக்கிய நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இங்கு ஆக்லேண்ட் என்பது அழகான நகரமாகும். இந்நகரத்திலிருந்து சவுத் ஐலண்ட் எனப்படும் தெற்கு தீவுக்குக் கதை நகர்கிறது. நியூசிலாந்தின் பெரிய நகரங்கள், வெலிங்டன் துறைமுகம், லைட்ஹவுஸ் போன்ற பல முக்கிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து விட்டநிலையில், இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் வெளிவரவுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிலிம் சேம்பர் தேர்தலில் மோதல்: கே. ராஜன் பேட்டி Posted: 25 Apr 2014 10:18 PM PDT
பிலிம் சேம்பர் தேர்தலில் மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தலை புறக்கணிக்க தமிழ் திரையுலகினர் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளருமான கே. ராஜன் கூறியதாவது:– தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தேர்தல் நாளை மறுதினம் (27–ந்தேதி) நடக்கிறது. இதில் எங்கள் அணி சார்பில் தலைவராக விஜயகுமார் நிற்கிறார். துணை தலைவராக நானும் செயலாளராக கமீலா நாசரும், பொருளாளராக உட்லண்ட்ஸ் வெங்கடேசும் மேலும் 16 செயற்குழு உறுப்பினர்களும் போட்டியிடுகிறோம். இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவரே 150 ஓட்டுகள் போடும் பிராக்சி முறை மூலம் கல்யாண் ஆதரிக்கும் அணியினர் வெற்றி பெற முயற்சிக்கின்றனர். 650 பிராக்சிகளை அவர்கள் வைத்துள்ளனர். கல்யாண் தொடர்ந்து இந்த பிராக்சி முறை மூலம்தான் தலைவராக இருக்கிறார். கல்யாண் சினிமா நூற்றாண்டு விழா நடத்தியதில் முறைகேடு நடந்துள்ளது. விழா நடந்த நேரு ஸ்டேடியத்தை சுத்தம் செய்ய ரூ.75 லட்சம் செலவிட்டதாகவும் பிஸ்கட் வாங்க ரூ.20 லட்சம் செலவிட்டதாகவும் கணக்கு எழுதி உள்ளனர். தெலுங்கு நடிகர்களை அழைத்து வரவும் பல கோடி செலவு செய்துள்ளனர். முதல்வர் ரூ.10 கோடி கொடுத்தார், ரூ.12 கோடி வசூலானது. இவ்வளவுக்கு பிறகும் ரூ.2½ கோடி நஷ்ட கணக்கு காட்டி உள்ளனர். எனவே பிலிம் சேம்பர் தேர்தலை புறக்கணிக்க தமிழ் திரையுலகினர் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொறொன்ரோ பெண் ஒருவரை கற்பழித்த குற்றத்திற்காக 4- பொலிஸ் அதிகாரிகள் காவல் Posted: 25 Apr 2014 10:01 PM PDT
பரிஸ் பொலிஸ் தலைமையகத்தில் வைத்து கனடிய பெண் ஒருரை கற்பழித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 4- பரிஸ் பொலிஸ் அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடக அறிக்கை ஒன்றில் வெளியாகி உள்ளது. வெளியிடப்பட்ட அறிக்கை கனடிய பொலிஸ் அதிகாரியின் மகளான 34-வயதுடைய ரொறொன்ரோ பெண் இவர் எனவும் இவரும் ஒரு பொலிஸ் அதிகாரியாக இருக்கலாமெனவும் கூறுகின்றது. இப்பெண் விரோத கும்பல் படையின் ஒரு பகுதியினரான குறிப்பிட்ட அதிகாரிகளை ஒரு ஐரிஸ் பப்பில் செவ்வாய்கிழமை இரவு சந்தித்து அவர்களுடன் தலைமையக யுனிட்டிற்கு சென்றார் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அடுத்தநாள் காலையில் வேறொரு அதிகாரியிடம் தான் கற்பழிக்கப் பட்டதாக தெரிவித்தார் எனவும் கூறப்படுகின்றது. 3- அதிகாரிகள் நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும் மற்றவர் சம்பவம் நடந்த பின்னர் பெண்ணுடன் கதைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாட்டின் பொலிஸ் கண்காணிப்பு பிரிவினரால் கையாளப்படுகின்றதெனவும் டிஎன்ஏ சோதனைகள் நடாத்தப் படுவதாகவும் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர். பிரான்ஸ் உள்துறை மந்திரி Bernard Cazeneuve குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று தெரியவருமானால் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென உறுதி அளித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தாய் தன்னையும் கொன்று மனஇறுக்கத்தில் இருந்த தனது மகனையும் கொன்ற கொடூரமான சோக சம்பவம் Posted: 25 Apr 2014 09:58 PM PDT
பிறின்ஸ் றுப்பேட்டில் இடம்பெற்ற கொடூரமான ஒரு குடும்ப சோக சம்பவம், தங்கள் பிள்ளைகளின் மன இறுக்கத்தையும் அதனை குணப்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றாக்குறையும் எத்தகைய மன அழுத்தத்தை பெற்றோர்கள் எதிர்கொள்ள முடியும் என்பதை வெளிபடுத்தியுள்ளன. அஞ்சி றொபின்சன் என்பவரின் 16-வயது மகன் றொபி மன இறுக்க நோய்க்கு ஆளாகி வன்முறைமிக்கவராகவும் கட்டுப்படுத்த முடியாதவராகவும் மாறினார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஓய்வு பாதுகாப்பும் பலனளிக்கவில்லை. அதனால் றொபிக்கு சிறப்பு தேவைகளுடனான வதிவிட வசதியை வழங்குமாறு கேட்டதாகவும் ஆனால் தற்போது எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் தாயார் தன் மகனை கொன்று விட்டு தன்னையும் கொன்றுள்ளார். இச்சம்பவம் இன்னுமொரு சோக உதாரணமெனவும் மன இறுக்கத்திற்கும் குடும்பத்தினருக்கும் உதவுவதற்கு போதிய அளவு நிதி வசதி இல்லை என்பது தெரியவருகின்றதென மன இறுக்க வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய மோசமான சூழ்நிலையில் இருக்கும் குடும்பத்தினருக்கு உண்மையிலேயே ஆதரவு கிடைக்கும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. அமைச்சினால் வழங்கப்படும் சகல சேவைகளும் மாகாணம் பூராகவும் கிடைக்க கூடியதாக உள்ளதென குழந்தை மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரெபனி காடியக்ஸ் தெரிவித்துள்ளார். மரணமடைந்த அஞசி மற்றும் றொபி றொபின்சனின் மரணம் சம்பந்தமாக பொது விசாரனைக்கு உத்தரவிடுவாரா என கேட்கப்பட்டபோது இக் கேள்விக்கு பதில் கூறமுடியாதென கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரதமர் மன்மோகன் சிங் மீது எஸ்எப்ஜே வழக்கு? சம்மன்ஸ் அனுப்பிய அமெரிக்க நீதி மன்றம் Posted: 25 Apr 2014 09:55 PM PDT
பிரதமர் மன்மோகன்சிங் மீது அமெரிக்காவில் வாஷிங்டன் மாவட்ட கோர்ட்டில், நியூயார்க் நகரைச் சேர்ந்த நீதி தேடும் சீக்கிய அமைப்பு (எஸ்எப்ஜே) ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது. அவர், 1990–களில் இந்திய நிதி மந்திரி பதவி வகித்தபோது பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்குவதாகக்கூறி, நீதித்துறை நெறிமுறைக்கு அப்பாற்பட்டு சீக்கியர்களை கொன்று குவிப்பதற்காக பாதுகாப்பு படையினருக்கு ரொக்கப்பரிசு அளிக்க வகை செய்தார், நிதியும் தந்தார், பிரதமரான பிறகு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியினரை பாதுகாத்து வந்தார் என்று அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு வாஷிங்டன் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி ஜேம்ஸ் போஸ்பெர்க் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வரும் ஜூன் மாதம் 18–ந்தேதிக்குள் மன்மோகன் சிங்கிடம் வழக்குதாரர்கள் சம்மன் வழங்க வேண்டும் என்ற உத்தரவிட்டார். அப்படி சம்மனை வழங்காவிட்டால், வழக்கு தள்ளுபடி செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிறப்புறுப்பில் துப்பாக்கியுடன் வந்த அமெரிக்க யுவதி! Posted: 25 Apr 2014 09:49 PM PDT
டலஸ் அர்சா என்ற மேற்படி 19 வயது யுவதி இரத்துச் செய்யப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தில் காரை செலுத்திய குற்றசாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தனது பிறப்புறுப்பில் துப்பாக்கியொன்றை மறைத்து வைத்து சிறைச்சாலைக்குள் கடத்த முயற்சித்த சம்பவம் அமெரிக்க தென்னஸி மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்படி யுவதியை பரிசோதித்த இரு பெண் அதிகாரிகள் 4 அங்குல நீளமான சிறியரக துப்பாக்கி அவரது பிறப்புறுப்பில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளார். மேற்படி 250 டொலர் பெறுமதியான துப்பாக்கி கார் விற்பனை நிலையமொன்றிலான கொள்ளையின் போது அங்கிருந்த உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து களவாடப்பட்டது என நம்பப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைகளை மறுத்தது இலங்கை Posted: 25 Apr 2014 09:36 PM PDT
இலங்கையின் போரின் போதும், பின்னரும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வா இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். பெண்கள் மற்றும் சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்ற விடயம் தொடர்பில் நியூயோக்கில் இடம்பெற்ற கருத்தரங்கில் அவர் இந்த மறுப்பை வெளியிட்டார். இலங்கையில் போரின் போதும் பின்னரும் இடம்பெற்ற பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பில் படையினர் மீது குறைந்தளவான குற்றச்சாட்டுக்களே சுமத்தப்பட்டுள்ளன. சமாதானம், பாதுகாப்பு இன்மையும் போரின் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தமையும் பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக அமைந்திருந்தன. எனினும் இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான கொள்கைகளை அந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் 2007 -2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளில் 7 படைவீரர்களே தொடர்பு கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதில் 5 சம்பவங்கள் வடக்கில் இடம்பெற்றவையாகும். எனினும் வடக்கையும் சேர்த்து இலங்கையில் குறித்த காலப்பகுதியில் 119 பாலியன் வன்முறைகள் இடம்பெற்றிருந்தன. 2009- 2012 ஆம் ஆண்டு காலத்தில் இலங்கையில் 256 பாலியல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன. எனினும் வடக்கில் இடம்பெற்ற 6 சம்பவங்களில் மாத்திரமே இலங்கை படையினர் தொடர்புக்கொண்டிருந்தனர். அதாவது இது மொத்த பாலியல் வன்முறையில் 3.3 வீதமாகும் என்று சவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார். இந்தநிலையில் இலங்கைக்கு எதிராக இந்த விடயத்தில் தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். எனவே பாலியல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும் உறுப்பு நாடுகளின் இறைமையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்தார். இந்த வாரத்தில் ஐக்கிய நாடுகளின் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான ஆய்வுகளில் 21 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் இலங்கையும் உள்ளடங்குகிறது. அத்துடன் இலங்கையில் தமிழ் பெண்கள் மீது போரின் போதும் போரின் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹனவிடம் தாம் பேச்சு நடத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான பிரதிநிதி பங்காரா நேற்று முன்தினம் நியூயோர்க்கில் வைத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| காலணித்துவ சக்திகள் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சி : ஜனாதிபதி Posted: 25 Apr 2014 09:35 PM PDT
வெளிநாட்டு நிதி வழங்கல் தொடர்பான சட்ட மூலத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதி சம்பந்தமான கணக்கு வழக்குகளை ஆய்வு செய்வதற்கு ஏதுவான வகையில் இந்த சட்ட மூலம் திருத்தி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கும், செய்தி ஆசிரியர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பில் வைத்து இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதன் போது பதில் வழங்கிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ், 1977ம் ஆண்டுக்கு முன்பிருந்த சட்டத்தின் படி அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி வழங்கப்பட்ட தரப்பு மற்றும் அதன் செலவினங்கள் தொடர்பிலான கணக்குகள் அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது அந்த சட்டம் மாற்றப்பட்டுள்ளதால், அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதிவளங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் ஆய்வு செய்ய முடியாதிருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இந்த சட்டத்தை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார். காலணித்துவ சக்திகள் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சி: ஜனாதிபதி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு காலணித்துவ சக்திகள் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலணித்துவ சக்திகள் பல்வேறு வழிகளில் அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறான முயற்சிகளுக்கு இடமளிக்காது மே தினக் கூட்டத்தை வெற்றிகரமாக நடாத்த அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. அரசாங்க சேவையில் தொழிலாளர்களை இணைத்துக் கொள்ளும் போது சில நியதிகளை பின்பற்ற வேண்டியுள்ளது. சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டம் தொடர்பில் தொழிற்சங்கத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பௌத்த பிக்கு ஒருவருக்கு அடைக்கலம் வழங்குவதில் தவறில்லை: ரவூப் ஹக்கீம் Posted: 25 Apr 2014 09:34 PM PDT
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சில அமைப்புக்கள் எவ்வாறான பிரச்சினைகளை நாட்டில் ஏற்படுத்த முயற்சித்தாலும், நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த சகல வழிகளிலும் முயற்சிக்கப்படும். வில்பத்து வனவிலங்கு சரணாலயத்தில் மக்கள் குடியேறியிருந்தால் அவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட வேண்டும். நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. சட்டத்திற்கு முரணான வகையில் ஏதேனும் இடம்பெற்றிருந்தால் அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர அனைவருக்கும் அதிகாரமுண்டு. இதேவேளை, வட்டரக்கே விஜித தேரருக்கு அமைச்சர் பதியூதீன் அடைக்கலம் வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. நாட்டின் அரசியல் தலைவர்களில் ஒருவர் என்ற ரீதியில் அவ்வாறு பௌத்த பிக்கு ஒருவருக்கு அடைக்கலம் வழங்குவதிலும் தவறில்லை எனவும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறுநீரக வியாபார குற்றச்சாட்டை மறுத்தது நவலோக மருத்துவமனை Posted: 25 Apr 2014 09:33 PM PDT
இந்தியாவிலிருந்து வந்து சிறுநீரகங்களை பணத்திற்கு விற்ற நபர்களுக்கும் அவர்களின் ஏஜண்டுகளுக்கும் இலங்கையிலுள்ள சில மருத்துவமனைகளில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கையின் பிரபல தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான நவலோக மறுத்துள்ளது. சிறுநீரகத்தை பணத்திற்கு விற்பதற்காக கொழும்புக்கு ஆட்களை அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் இந்தியாவில் ஹைதராபாத் நகரில் மூன்று பேரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த 'கிட்னி ஏஜண்டுகளுக்கு' இந்தியப் பணத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபா வரை செலுத்தப்பட்டிருக்கிறது. சிறுநீரகத்தை விற்றவர்களுக்கு, ஊடகங்களுக்கு வந்த தகவலின்படி, ஒருவருக்கு எட்டரை லட்சம் ரூபா வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறுநீரகங்களை விற்றவர்களுக்கும் அந்த வியாபாரத்தை ஏற்பாடு செய்த தரகர்களுக்கும் மருத்துவர்களே நேரடியாக பணம் கொடுத்துள்ள சம்பவங்கள் நடந்துள்ளதாக கொழும்பிலுள்ள சில மருத்துவமனைகளின் பெயர்களையும் ஹைதராபாத் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். ஆனால், இலங்கையில் பிரபலம் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான நவலோக மருத்துவமனையின் இயக்குநர் லால் சமரசிங்க, சிறுநீரகங்கள் விற்கப்பட்டமைக்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று கூறினார். அப்படி பணத்திற்கு சிறுநீரகம் விற்பது சட்டவிரோதம் என்றும் அவர் ஏற்றுக்கொண்டார். இந்தியர்களைக் கொண்டு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளை தமது மருத்துவர்கள் நடத்தியுள்ளார்கள் என்ற போதிலும், இரண்டு அரசாங்கங்களினதும் சட்டத்தரணிகளினதும் அனுமதியுடன் தான் அவை நடந்துள்ளன என்றும் லால் சமரசிங்க கூறினார். அதுவும் ஒரு இந்தியரிடமிருந்து பெறப்படும் சிறுநீரகம் இன்னொரு இந்தியருக்கே பொருத்தப்படுவதாகவும், சிறுநீரக கொடையாளிகளை தம்முடனேயே அழைத்து வந்தவர்களுக்கே அதுவும் சாத்தியம் என்றும் நவலோக மருத்துவமனை இயக்குநர் பிபிசியிடம் கூறினார். இதற்கிடையே, இலங்கை மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளில் கடைபிடிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நாட்டின் சுகாதார அமைச்சு மருத்துவர் ஒருவரை நியமித்துள்ளது. இந்தியாவில் கைதான மூன்று ஏஜண்டுகளும் 21 பேரை சிறுநீரகத்தை விற்பதற்கு அனுப்பியிருப்பதாக கூறும் இந்தியக் காவல்துறையினர், இலங்கைக்கு விசாரணைக்காக குழுவொன்றை அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தியாவிடமிருந்து அதிகாரபூர்வமான கோரிக்கை வந்தால் இந்திய காவல்துறையின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண கூறினார். இலங்கைப் பொலிசாரும் இதுபற்றி தகவல்களைத் திரட்டி வருகின்றனர். இன்னும் எங்களுக்கு வெற்றிகரமான தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. இலங்கையில் தனியார் மருத்துவமனைகள் பல இருக்கின்றன. எங்குமே சிறுநீரகங்கள் பணத்திற்காக விற்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றார் அஜித் ரோஹண.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கஜபாபுரம் வட மாகாணசபைக்கு சொந்தமானது!- துரைராசா ரவிகரன் Posted: 25 Apr 2014 09:31 PM PDT
கஜபாபுரம் வட மாகாணசபைக்கு சொந்தமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெலிஓயா கஜபாபுரம் வட மாகாணசபைக்கு சொந்தமானது என மாகாணசபை உறுப்பினரான துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். கஜபாபுரத்தை ஈழ இராச்சியத்தின் ஓர் பகுதியாக அடையாளப்படுத்திய விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர் என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக கஜபாபுரத்திலிருந்து சிங்கள மக்கள் வெளியேறியிருந்தனர். தற்போது குறித்த பிரதேசத்தில் மக்கள் மீளவும் குடியேறி வருகின்றனர். இவ்வாறு குறித்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெரியவரின் அதிரடி, துப்பாக்கி இருந்தும் பயந்தோடிய திருடன்! Posted: 25 Apr 2014 08:55 PM PDT |
| ஒசாமா பின்லேடன் பாரில் பராக் ஒபாமா!!! Posted: 25 Apr 2014 08:45 PM PDT |
| கால்பந்தாட்ட போட்டியை ரசித்த முன்னாள் வெனிசுலா அதிபர் ஆவி… Posted: 25 Apr 2014 08:40 PM PDT |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







































