Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


9 வயது சிறுமியை மானபங்கம் செய்த பாதிரியார்

Posted: 25 Apr 2014 11:26 PM PDT

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள புனித பவுல் ஆலயத்தில் பாதிரியாராக இருப்பவர் ராஜு கொக்கன். இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் பெற்றோர் திருச்சூர் பெண் போலீசாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், பாதிரியார் ராஜு கொக்கன் தங்கள் மகளை அவரது இல்லத்திற்கு புத்தாடைகள் வாங்கி தருவதாக அழைத்துச் சென்றுள்ளார்.

மராட்டியம்: வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் பேர் நீக்கம் - தேர்தல் கமிஷன் மன்னிப்பு

Posted: 25 Apr 2014 11:16 PM PDT

மும்பையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் ஓட்டுப்போட வந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதனால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஓட்டுப்போட வந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டுப்போட முடியவில்லை. மும்பை போரி வள பகுதியில் மட்டும் 50 ஆயிரம் வாக்காளர்களின் பெயர் விடுபட்டு இருந்தது. நகரம் முழுவதும் 15 லட்சம் பேருக்கு ஓட்டு இல்லை. இதனால் பொதுமக்கள் அடையாள அட்டையுடன் வாக்குச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

தேர்தலுக்கு பிறகு மோடிக்கு ஆதரவு கிடையாது: மம்தா திட்டவட்டம்

Posted: 25 Apr 2014 10:55 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மாநில கட்சிகளின் ஆதரவை பெற வேண்டிய நிலை பா.ஜனதாவுக்கு ஏற்படும். தேர்தலுக்கு பிறகு மம்தா பானர்ஜியின் ஆதரவை பெற பாரதீய ஜனதா முயற்சி மேற்கொள்ளலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே தேர்தலுக்கு பிறகு மோடியை ஆதரிக்க மாட்டேன் என்று மேற்கு வங்காள முதல்–மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆட்சி அமைக்க மூன்றாவது அணியுடன் காங்கிரஸ் கூட்டணி

Posted: 25 Apr 2014 10:50 PM PDT

பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 7–வது கட்ட தேர்தல் வருகிற 30–ந்தேதியும், 8–வது கட்ட தேர்தல் மே 7–ந்தேதியும், 9–வது இறுதிகட்ட தேர்தல் மே 12–ந்தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. அடுக்கடுக்கான ஊழல்கள், விலைவாசி உயர்வு, நிர்வாகத்திறமையின்மை

ஆந்திர சட்டசபையை கலைக்க சிபாரிசு: மத்திய மந்திரிசபை முடிவு

Posted: 25 Apr 2014 10:47 PM PDT

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலத்தை பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி அவரது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கடந்த மார்ச் 1–ந்தேதி ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. வருகிற 30–ந்தேதியோடு இது முடிவடைகிறது. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாராளுமன்றத்தில் முறைப்படி ஒப்புதல் பெற வேண்டும். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. எனவே பாராளுமன்றத்தை கூட்ட முடியாது.

வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்திய ரூ.8 கோடி சிக்கியது: 2 பேர் கைது

Posted: 25 Apr 2014 10:37 PM PDT

பெங்களூரில் இருந்து ஐதராபாத் செல்லும் 2 தனியார் பஸ்களில் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க அதிக அளவில் பணம் கடத்தப்படுவதாக ஐதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கமிஷனர் சி.வி.ஆனந்த் உத்தரவின் பேரில் போலீசாரும் பறக்கும் படை அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் அருகே நடுரோட்டில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை

Posted: 25 Apr 2014 10:26 PM PDT

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது கேடனூர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் ராஜேஸ் (வயது 28), அய்யப்பதாஸ் (29), பிஜோ (28). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் மட்டுமல்ல ரவுடிகள். சேர்ப்பு போலீஸ் நிலையத்தில் 13 வழக்குகள் இவர்கள் மீது உள்ளது. நேற்று 3 பேரும் கேடனூர் ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது 5 பேர் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். திடீரென ராஜேஸ், அய்யப்பதாஸ், பிஜோ

மோடி, கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் நடிகர்–நடிகைகள்

Posted: 25 Apr 2014 10:20 PM PDT

வாரணாசி தொகுதியில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் களம் இறங்கி உள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக அஜய்ராய், சமாஜ் வாடி கட்சி சார்பில் கைலாஷ் சங்ரசி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் விஜய் பிரகாஷ் ஆகியோரும் வாரணாசியில் நிற்கிறார்கள். இதனால் இங்கு 5 முனை போட்டி உருவாகி

விசாகப்பட்டினம்: ஒரே இதயத்துடன் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்

Posted: 25 Apr 2014 10:10 PM PDT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மாரவள்ளி ஏர்ரய்யா. கட்டுமான கூலி தொழிலாளி. இவரது மனைவி நூகாலம்மா. நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை விசாகப்பட்டினத்தில் உள்ள கோசா மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்தனர். அப்போது அவருக்கு 2 ஆண் குழந்தைகள் ஒட்டிப்பிறந்தன. குழந்தையின் கழுத்து முதல் மார்பு பகுதி வரை ஒன்றாக

பெண்களுக்காக மோடி செய்தது என்ன?: பிரியங்கா கேள்வி

Posted: 25 Apr 2014 10:04 PM PDT

பிரியங்காகாந்தி ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:– நரேந்திரமோடி எங்கள் குடும்பத்தை விமர்சனம் செய்து வருகிறார். தனிப்பட்ட விமர்சனத்தை அவர் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். குஜராத் முன்மாதிரி வளர்ச்சி மாநிலம் என்று மோடி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆனால் உண்மையில் அவர் செய்தது என்ன? தனது நண்பர்களுக்கு

மோசடி வழக்கு: நடிகை விஜயசாந்தி மீது சி.பி.ஐ. விசாரணை

Posted: 25 Apr 2014 09:53 PM PDT

ஐதராபாத்தை சேர்ந்த பாலாஜி வதேரா என்பவர் ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு மனுதாக்கல் செய்தார். அதில் நடிகை விஜயசாந்தி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், அவரது மருமகன் ஹரிஷ் ராவ் எம்.எல்.ஏ. ஆகியோர் தெலுங்கானா போராட்டத்தின் போது பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டனர்.

திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு 24 மணி நேரம் ஆகிறது: பக்தர்கள் அவதி

Posted: 25 Apr 2014 09:50 PM PDT

திருப்பதி கோவிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். தர்ம தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 20 முதல் 24 மணி நேரம் ஆகிறது

குருவாயூர் கோவிலில் 29 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தங்க நகைகள் கண்டுபிடிப்பு

Posted: 25 Apr 2014 09:41 PM PDT

கேரளாவில் உள்ள பிரசித்திப்பெற்ற கோவில் களில் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலும் ஒன்று. கடந்த 1985–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1–ந்தேதி கோவில் மேல்சாந்தியாக இருந்த தாமோதரன் நம்பூதிரி மாற்றப்பட்டு கிருஷ்ணன் நம்பூதிரி பொறுப்பேற்றார். அப்போது கோவில் பொக்கிஷ அறையில் இருந்த நகைகளை

மான்செஸ்டர் கால்பந்து பள்ளி தேர்வு செய்துள்ள 11 இந்திய சிறுவர்கள்

Posted: 25 Apr 2014 08:26 PM PDT

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் இயங்கிவரும் கால்பந்து பயிற்சிப் பள்ளி ஒரு பிரபலமான உறைவிடப் பள்ளியாகும். இங்கு ஆங்கில மொழிப் புலமையுடன் கால்பந்து விளையாட்டுக்குரிய சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பள்ளியில் நடைபெறும் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிலிருந்து 16 வயதிற்குக் கீழே உள்ள 11 சிறுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில்

லோக்பால் அமைப்பின் தலைவர் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்வேன்: சதாசிவம்

Posted: 25 Apr 2014 08:13 PM PDT

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ஓய்வுக்கு பின்பு என்ன செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள்? ஏதேனும் முக்கிய பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? பதில்:- ஓய்வு பெற்ற பின்பு தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் அல்லது லோக்பால் அமைப்பின் தலைவர் என்று எந்த பதவியையும் ஏற்பதில் எனக்கு வெறுப்பு இல்லை. எந்தவொரு முன்னாள் தலைமை நீதிபதிக்கும் அது பொருத்தமான ஒன்றுதான். எனினும், எந்த முடிவு என்றாலும் அது ஒருமனதாக இருக்கவேண்டும். அப்படி இருந்தா

இந்த ஆண்டின் ஜனநாயகத் திருவிழா செலவு 3500 கோடியை எட்டும்

Posted: 25 Apr 2014 03:18 PM PDT

மக்களாட்சி தத்துவத்தின் மகத்துவத்தை விளக்கும் ஜனநாயகத் திருவிழாவாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் வருகின்றன. அன்றைய ஒரு நாளில் மட்டும் ஒவ்வொரு வாக்காளரும், வேட்பாளர்களின் எஜமானர்களாகி பூரிப்படைகின்றனர்.

சீமாந்திராவுக்கான சிறப்பு தகுதி 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: பா.ஜ.க.வாக்குறுதி

Posted: 25 Apr 2014 01:58 PM PDT

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித்தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியப் பின்னர் பழைய ஆந்திராவான சீமாந்திரா பகுதிக்கு எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு சிறப்பு தகுதி வழங்குவதாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நேற்று பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து சாலையோர கூட்டத்தில் பேசிய அக்கட்சியின்

மோடியை தாக்கி பேசிய நடிகர் சிரஞ்சீவி மீது முட்டை வீச்சு

Posted: 25 Apr 2014 01:39 PM PDT

நடிகரும், மத்திய மந்திரியுமான சிரஞ்சீவி ஆந்திர மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டணத்தில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். பா.ஜ.க., தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிலைப்பாடுகளை இந்த கூட்டத்தில் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர்

காஷ்மீர்: போராளிகளுடன் துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் பலி

Posted: 25 Apr 2014 12:47 PM PDT

காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள சோபியான் மாவட்டத்தில் இருக்கும் ஒரு வீட்டில் ஒரு வெளிநாட்டு நபருடன் போராளிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அம்மாவட்டத்தின் கரேவா மலினோ கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்ட ராணுவத்தினர் உள்ளே இருந்தவர்களை

பணம் கையாடல்: முன்னாள் வங்கி மானேஜருக்கு 5 ஆண்டு சிறை

Posted: 25 Apr 2014 12:27 PM PDT

மத்தியப்பிரதேசம் மாநில தலைநகர் இந்தூரில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் மேனஜராக பணியாற்றியவர், அனில் யாதவ்(58). தனது பதவியை தவறாக பயன்படுத்தி, கடந்த 2006 மற்றும் 2009-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு பணமான 17.3 லட்சம் ரூபாயை ப்ரீத்தி மாளவியா(38) என்ற பெண்ணின்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™