Tamil Star |
| கொபோ தாபனம் 63 பேரை பதவியிலிருந்து நீக்கியது: கனடாவில் அதிரடி!! Posted: 24 Apr 2014 10:49 PM PDT
ரொறன்ரோவில் அமைந்துள்ள kobo என அழைக்கப்படுகின்ற நிறுவனமானது வியாழக்கிழமை தனது பணியாளர்களில் 63 பேரைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட செயலுக்கு அந்த நிறுவனமானது நிறுவன ரீதியாக மாற்றங்கள் செய்ததன் பொருட்டு 63 பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்திருக்கின்றது. அத்துடன் குறிப்பிட்ட நிறுவனமானது smartphones , tablets போன்ற தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ள பொருட்களின் வரவினால் பெரும் போட்டியை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதெனவும் தெரியவருகிறது. குறிப்பிட்ட kobo தாபனத்தினது தலைப்பொறுப்பிற்கு சில கிழமைகளுக்கு முன்பாக புதிய நபர் பதவியேற்றிருக்கின்றார் எனவும், அவர் வந்து சிறிது காலத்திற்குள் நிறுவனத்தில் பல மாற்றங்களை மேற்கொண்டிருக்கின்றார் எனவும் தெரியவருகிறது. குறிப்பிட்ட தாபனத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் காரணமாக அந்த நிறுவனத்தை மறு சீரமைக்கவேண்டியிருந்திருக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட நிறுவனத்தின் பணியாளர்கள் தமது இயக்கத்திற்கு ஒத்துழைப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. kobo தூபனமானது 2009ம் ஆண்டில்தான் ஆரம்பிக்கப்பட்டதாகவம் அத்துடன் அதில் தற்போது உலகம் பூராவுமாக 400 பேர் மட்டுமே பணியாற்றுவதாகத் தெரியவருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடா ஓய்வூதியம் புதிய சீர்திருத்தத் திட்டங்கள் முன்மொழியப்பட்டது! Posted: 24 Apr 2014 10:40 PM PDT
ஒட்டாவாவினால் ஓய்வூதியம் சம்பந்தமாக புதிய சீர்திருத்தத் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன எனவும் அந்தச் சீர்திருத்தத் திட்டங்கள் பொதுவாகப் பல தொழிலாளர்களினால் விரும்பப்படக் கூடியவை எனவும், மற்றும் தொழில் வழங்குனர்களினாலும் விரும்பப்படக் கூடியவை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட சீர்திருத்தங்கள் சந்தை நிலவரம், வட்டி வீதம், பணியாளர்கள் மற்றும் தொழில் வழங்குனர் ஆகிய இருசாராருக்கும் ஓத்துப் போகத்தக்க நிலை போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு வரையப்பட்டள்ளன என நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்கள் தொழலாளர்களுக்கும் தொழில் வழங்குனர்களுக்கும் தத்தமது வழங்கல்கள், தாம் அடையவிருக்கும் பயன்பாடுகள் என்பவற்றை தமது தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்கமைத்துக்கொள்வதற்குமான சாத்திய நிலைப்பாடு உள்ளதென ஒட்டாவா தெரிவித்திருக்கின்றது. குறிப்பிட்ட சீர்திருத்தத் திட்டம் பற்றிய பொது ஆலொசனைக் கூட்டம் அடுத்து வரவிருக்கின்ற 60 நாட்களுக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

