Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

Posted: 24 Apr 2014 10:47 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு நளினியின் தண்டனை கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது 10 ஆண்டுகளுக்கும்

வாரணாசியில் மோடி மாலை அணிவித்த சிலையை புனிதநீரால் கழுவிய சமாஜ்வாடி கட்சியினர்

Posted: 24 Apr 2014 10:19 PM PDT

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று உத்தரபிரதேசம் மாநிலம் சென்று வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் பனாரஸ் இந்து பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பண்டிட் மதன்மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பனாரஸ் இந்து பல் கலைக்கழக வளாகத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர்

பத்மநாபசுவாமி கோவில்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கம்யூனிஸ்டு வரவேற்பு

Posted: 24 Apr 2014 10:17 PM PDT

கேரளாவில் உள்ள பிரசித்திப்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இக்கோவிலில் ரகசிய அறைகள் இருப்பதாகவும், அங்கு பல கோடி மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள் இருப்பதாகவும், இதனை மன்னர் பரம்பரையினர் அனுபவித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தெலுங்கானாவில் ராகுல்காந்தி இன்று பிரசாரம்

Posted: 24 Apr 2014 10:13 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். தெலுங்கானாவில் வருகிற 30–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானாவில் இன்று 2

கர்நாடகாவில் தேவேகவுடா கட்சி வேட்பாளர் மாரடைப்பால் மரணம்

Posted: 24 Apr 2014 10:09 PM PDT

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் கிருஷ்ணப்பா. இவர் தும்கூர் பாராளு மன்ற தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதிக்கு கடந்த 17–ந்தேதி தேர்தல் நடந்தது. இந்த நிலையில் கிருஷ்ணப்பா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68. தேர்தல் நடந்து முடிந்திருக்கும் வேளையில் கிருஷ்ணப்பா மரணம் அடைந்த தால் தும்கூர் தொகுதிக்கு மறு தேர்தல் நடைபெறுமா?

போலீஸ் நிலையத்தில் நர்சு தற்கொலை: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு

Posted: 24 Apr 2014 10:05 PM PDT

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பானூர் என்ற பகுதியில் உள்ள கோட்டம் கண்டியை சேர்ந்தவர் சைனுதீன். இவரது மகள் ஹனிஷா (வயது 23). இவர் கோட்டைக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் எடப்பால் நகரை சேர்ந்த ஒரு பெண் சங்கரம்குளம் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் பஸ்சில் வந்தபோது தனது கை பையை யாரோ திருடிவிட்டனர். அதில் அதில் 10 பவுன் நகை மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்தது என்றும் அதை கண்டு பிடித்து தருமாறு கேட்டிருந்தார்.

மோடி மீது வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் வற்புறுத்தல்

Posted: 24 Apr 2014 05:17 PM PDT

குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, வாரணாசி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதையும், அதற்கு முந்தைய அவரது வாகன ஊர்வலத்தையும் டெலிவிஷனில் ஒளிபரப்பியது, அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், மத்திய மந்திரியுமான ஆனந்த் சர்மா கூறினார்

நரேந்திர மோடிக்கு ரூ.1.65 கோடி சொத்து

Posted: 24 Apr 2014 04:37 PM PDT

குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் அவர் தாக்கல் செய்த சொத்து பட்டியலில், தனக்கு ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். அவற்றில் கையிருப்பு ரூ.32 ஆயிரத்து 700, வங்கி கணக்கில் ரூ.26 லட்சம், வைப்புநிதி ரூ.32 லட்சம் ஆகியவையும் அடங்கும்

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்

Posted: 24 Apr 2014 03:11 PM PDT

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று

நாட்டில் எங்கும் மோடி அலை இல்லை: மன்மோகன் சிங் பேட்டி

Posted: 24 Apr 2014 12:55 PM PDT

பிரதமர் மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது வீடு கவுகாத்தி பாராளுமன்ற தொகுதியில் உள்ள சருமட்டோரியா பகுதியில் அமைந்துள்ளது

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை ஆவார்களா?: இன்று தீர்ப்பு

Posted: 24 Apr 2014 11:59 AM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக கடந்த பிப்ரவரி 18-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது

மத்தியில் புதிய அரசுக்கான அஸ்திவாரம் அமைக்கப்பட்டுவிட்டது: மோடி

Posted: 24 Apr 2014 09:28 AM PDT

மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று தாக்கல் செய்தார். அதன்பிறகு பீகார் மாநிலம் மதுபானியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:- மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியை அகற்றிவிட்டு புதிய அரசு அமைப்பதற்கான அஸ்திவாரத்தை மக்கள் அமைத்துவிட்டார்கள்.

பணத்திற்காக நான் என்றும் அரசியல் செய்ததில்லை: மம்தா

Posted: 24 Apr 2014 09:24 AM PDT

மக்களவை தேர்தல் துவங்கியுள்ள நிலையில், சாரதா சிட்பண்டு ஊழலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, 'பணத்திற்காக நான் என்றும் அரசியல் செய்தது கிடையாது' என்று கூறியுள்ளார்.

சபரிமலையை தேசிய யாத்ரீக மையமாக அறிவிக்க வலியுறுத்தல்

Posted: 24 Apr 2014 09:22 AM PDT

சபரிமலையை தேசிய யாத்ரீக மையமாக அறிவிக்க வேண்டும் என சபரிமலை ஐய்யப்ப சேவ சமஜம் இன்று கேரள மனித உரிமைகள் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது. இதுகுறித்து சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ துணைத்தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் மேலும் கூறியதாவது:-

தமிழகத்தில் 73 சதவீத வாக்குப்பதிவு: மகாராஷ்டிராவில் 55 சதவீதம்

Posted: 24 Apr 2014 08:57 AM PDT

நாடாளுமன்றத் தேர்தலில் இன்று 11 மாநிலங்கள், புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவின்போது சில வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. இதன் காரணமாக சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: தேர்தல் அதிகாரி சாவு

Posted: 24 Apr 2014 08:20 AM PDT

காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தேர்தல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். தெற்கு காஷ்மீரின் நக்பால் கிராமத்தில் இருந்து சோபியான் நகருக்கு தேர்தல் அதிகாரிகள் வந்துகொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள், அந்த

ஊழல் நிறைந்த காங்கிரஸ், பா.ஜ.க.வை அகற்ற வேண்டும்: யோகேந்திர யாதவ்

Posted: 24 Apr 2014 08:09 AM PDT

ஆம் ஆத்மிக் கட்சி தலைவர் யோகேந்திர யாதவ் இன்று பாட்டியாலா மக்களவை தொகுதி வேட்பாளர் தரம்வீரா காந்தியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- பஞ்சாபில் தந்தை, மகன் ஆட்சி செய்கின்றனர். மாநிலம் பொதுமக்களுக்கு உரியது. தந்தை, மகன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியல்ல. எனவே,

ஜூம்மா மசூதி மீதான தாக்குதல்: யாசின் பட்கலுக்கு ஜாமின் மறுப்பு

Posted: 24 Apr 2014 07:57 AM PDT

இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலான ஜூம்மா மசூதியில் நடந்த கடந்த 2010ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தலைவன் யாசின் பட்கலுக்கு ஜாமின் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மோடியின் கவலை பதவி நாற்காலி மட்டுமே: சோனியா காந்தி

Posted: 24 Apr 2014 07:04 AM PDT

குஜராத் மாடல் குறித்து நரேந்திர மோடியை விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கடுமையான சிந்தனை மற்றும் வெறுப்புணர்வை அடிப்படையாக கொண்ட கொள்கையை பின்பற்றும் சக்திகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பீகாரில் பணம் பறிப்பு வழக்கில் லோக் ஜனசக்தி பொதுச்செயலாளர் கைது

Posted: 24 Apr 2014 06:27 AM PDT

பீகார் மாநிலத்தில் மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக லோக் ஜனசக்தி கட்சி மாநில பொதுச் செயலாளர் லாலன் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு சம்பரன் மாவட்டம் நார்கதியகஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படை முகாம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள மத்திய பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களை அச்சுறுத்தி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™