Tamil Star |
- கனடாவில் சிறப்புப் படையினரின் புதிய வண்டிகள்
- திசைதிருப்ப பட்ட வாகனம் செலுத்துவதற்கான அபராத தொகை 280 டொலர்?
- பொதிகளுடன் சம்பந்தப்பட்ட பணியாளர்களைப் பதவி நீக்க Air Canada முடிவு?
- கனடிய மத்தியரசானது கிட்டத்தட்ட 9,000 பேரை வேலைநீக்கும் அபாயம்?
- சுற்றுலா வரும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்
- ராஜபக்சவின் தொலைபேசி அழைப்பை நிராகரித்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்?
- விடுதலைப் புலிகளை கைது செய்ய சர்வதேச சமூகத்திடம் இலங்கை கோரிக்கை…
- பொதுபலசேனாவின் நிறைவேற்று அதிகாரிக்கு கொலை மிரட்டல்…
- மோடி பிரதமரானால் இலங்கைக்கு எதிராக கடும்போக்கை கடைப்பிடிப்பார்?
- என்னதடா ஷூட் பண்றிங்க!!!
- ஆபத்தில் இருந்த பெண்ணை காப்பாற்றிய சாகச வீரர்
- கொரில்லாவுடன் கல்யாணம்!! அட இத பாருங்க
- கமல், ரஜினி, அஜித் படங்களோடு மோத வேண்டாம் – நாசர் அட்வைஸ்
- செஞ்சோலை சிறுவர்களுக்கான புதிய இல்லம் திறப்பு
- இன்னைக்கு 4 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் VS ராயல் சேலஞர்சர்ஸ் பெங்களூர்
- மாயமான மலேசிய விமான தேடுதலில் முக்கிய கட்டம் வந்துவிட்டது
- மோடியுடனான சந்திப்பு, அரசியல் பற்றி பேசாத விஜய்
- விற்பனையிலும் சக்கை போடு போடும் : லினோவாவின் வைப் Z
- ஆரோக்கியத்தை தரும் வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ்
- பாதம் பாலின் மாகிமை…
| கனடாவில் சிறப்புப் படையினரின் புதிய வண்டிகள் Posted: 19 Apr 2014 11:31 PM PDT
கனடாவில் சிறப்புப் படையினரின் தேவைக்காக புதிய வண்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதெனவும் அதே நேரம் இராணுவத்தினருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லையெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் குறிப்பிட்ட சிறப்புப் படைகளுக்கு புதியரக ஆயுதம் தரித்த வாகனங்களாக 17 marginal terrain வாகனங்கள் வாங்குப்படவுள்ளன எனவும் அவைகள் குறிப்பாக ஆட்டிக் பகுதிகளில் அதிகமாகப் பாவனைக்கு விடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வகையான வாகனங்கள் குறும் நிலப்பரப்பினுள் பாவனை செய்யக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முறையில் இராணுவத்தின் தேவைக்காக வாங்கப்படவில்லையெனவும் அதற்கு முக்கியமான காரணம் அரசின் நிதி நிலமையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வாகனங்களுக்கான திட்டத்திற்கான செலவு 60 மில்லியன் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் குறிப்பிட்ட வாகனங்கள் பன்முகத் தேவைக்குப் பயன்படுத்தக் கூடியதாக அமைகின்றது எனவும் தெரியவருகிறது. குறிப்பாக பாலவனத்திலுள்ள குறு நிலப்பரப்புள்ள இடங்களிலும், பனியுள்ள பகுதிகளிலும் பணியாற்றக்கூடிய தகைமையைக் கொண்டுள்ளன எனத் தெரிவித்திரு;ககின்றார். குறிப்பிட்ட கனடிய விசேட படைப்பிரிவினர் 2016ம் ஆண்டின் ஆராம்பத்தில் இந்த வாகனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் தென்படுகின்றது. குறிப்பிட்ட தன்மை கொண்ட வாகனங்களை இராணுவத்திற்கும் வாங்குவதற்கு 2011ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அவற்றை 2023ம் ஆண்டளவில்தான் வாங்குவது எனப் பின்னர் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் கனடிய இராணுவமானத தற்போது அனேகமான சிறிய BV-206s என அழைக்கப்படுகின்ற வாகனங்களை அதிகமாகப் பாவிக்கின்றன. குறிப்பிட்ட இந்த வகை வாகனங்கள் கிட்டத்தட்ட 1980களில் வாங்கப்பட்டிருக்கின்றன எனத் தெரியவருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| திசைதிருப்ப பட்ட வாகனம் செலுத்துவதற்கான அபராத தொகை 280 டொலர்? Posted: 19 Apr 2014 11:24 PM PDT
ஈஸ்ரர் நீண்ட வாரஇறுதி நாட்களில் வழமையை விட அதிக வாகனங்கள் வீதிகளில் காணப்படக்கூடிய காலமாகையால் ஒன்ராறியோ மாகாண பொலிசார் மாகாணம் பூராகவும் உள்ள பெருந்தெருக்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நியு யோர்க், வெமவுன்ட், மெயின் மற்றும் நியு ஹாம்ஸ்பயர் {Sûreté du Québec}. கியுபெக் மாகாண பொலிசார் போன்றவர்களுடன் கூட்டுச்சேர்ந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் இருக்கை பட்டி அணியாதவர்கள், போதையில் வாகனம் செலுத்துபவர்கள், மூர்க்கதனமாக மற்றும் திசைதிருப்ப பட்ட நிலையில் வாகனம் செலுத்துபவர்கள் மீது குறிவைத்திருப்பார்கள் என கூறப்படுகின்றது. இந்ந வருடம் இதுவரையில் ஒன்ராறியோ பெருந்தெருக்களில் 58-பேர்கள் இறந்துள்ளதாகவும் இவர்களில் 9 பேர்கள் வரையில் இருக்கை பட்டி அணியாததால் மரணம் அடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 18-ந் திகதியிலிருந்து திசைதிருப்ப பட்ட வாகனம் செலுத்துவதற்கான அபராத தொகை 155 டொலர்களிலிருந்து 280 டொலர்களாக உயர்த்தப் பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பொதிகளுடன் சம்பந்தப்பட்ட பணியாளர்களைப் பதவி நீக்க Air Canada முடிவு? Posted: 19 Apr 2014 11:18 PM PDT
ஒருசில தினங்களுக்கு முன்பாக Air Canada நிறுவனத்தில் பயணிப்போரின் பொதிகள் சம்பந்தப்பட்ட சர்ச்சை கிளம்பியிருந்தது. குறிப்பிட்ட சம்பவத்திற்காக அந்த விமான சேவை நிறுவனம் பகிரங்கமாக பயணிகளிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது. ஆனால் அதைத் தொடர்ந்து உள்ளக விசாரணைகள் நடைபெற்றதாக ஆதாரமற்ற தகவல்கள் தெரிவித்துள்ளன. பொதிகளை கையாண்ட விதம் பற்றிய சம்பவத்தைக் குறிப்பிட்ட விமானத்தில் பயணித்த நபர் ஒருவர் வீடியோ எடுத்திருக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரிய Air Canada விமான சேவை அதிகாரி தாம் குறிப்பிட்ட சம்பவத்தை மேற்கொண்ட பணியாளரை அடையாளம் கண்டுகொள்வதற்கான முயற்சி நடைபெறுவதாகவும், கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அந்தப் பணியாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்திருக்கின்றார். குறிப்பிட்ட சம்பவத்தில் எத்தனை பணியாளர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் போன்ற விபரங்கள் வெளிவரவில்லையெனத் தெரிகிறது. அத்துடன் குறிப்பிட்ட பொதி சம்பந்தமான விடையத்தை மட்டும் வைத்துக்கொண்டு விமான சேவை நிறுவனத்தைப் பற்றி எந்த ஒரு முடிவிற்கும் வரமுடியாது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடிய மத்தியரசானது கிட்டத்தட்ட 9,000 பேரை வேலைநீக்கும் அபாயம்? Posted: 19 Apr 2014 11:12 PM PDT
கனடிய மத்தியரசானது கிட்டத்தட்ட 9,000 பேரை குறிப்பாகப் பொதுத் துறையில் இருந்து பதவி நீக்கம் செய்வதற்கான சாத்தியம் பற்றி Treasury Board President Tony ஊடகத்திற்குத் தெரிவித்திருப்பதாகத் தெரியவருகிறது. இத் தகவலை அவர் மார்ச் மாதம் 26ம் திகதி ஒட்டாவில் ஊடகமொன்றிற்குத் தெரிவித்திரு;கின்றார். பாராளுமன்றத்தின் வரவுசெலவுக் காரியாலயத்தினால் கடைசியாக வெளியிட்ட அறிக்கையில் கொன்சவேட்டிவ் அரசானது வருகின்ற 3 வருடங்களில் கிட்டத்தட்ட 30,000 மத்தியரசின் பணியாளர்களைப் பதவி நீக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நோக்குகையில் 2016 தொடக்கம் 2017 வரையுள்ள காலப்பகுதியில் பொதுசேவையில் இருந்து கிட்டத்தட்ட 8, 900 தொழில்கள் குறைக்கப்படும் எனவும் இவ்வாறு குறைக்கப்பட்டு 2006 காலப்பகுதியிலிருந்த தொகையளவிற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பணியாளர்கள் குறைப்பு நடைபெறுவது செலவீனத்தைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் பதவிகள் குறைக்கப்படுகின்றபோது எவ்வாறு தரமான சேவையைக் குறிப்பிட்ட திணைக்களங்களினால் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என்ற பாரிய கேள்வியும் எழுகின்றது. 2006 ம் ஆண்டு தொடக்கம் 2011வரையில் கொன்சவேட்டிவ் அரசானது 45,000 தொழிலாளர்களைப் பொதுத் துறையில் இணைத்திருக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுற்றுலா வரும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் Posted: 19 Apr 2014 11:05 PM PDT
வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த வாரம் மாத்தறை பொல்ஹேன பகுதியில் 22 வயதான பிரித்தானிய பெண், தாம் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கை சுற்றுலா சபையில் அறிக்கைப்படி இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 43 வீதமானோர் பெண்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமக்கு சுற்றுலா வழிகாட்டியாக வந்த ஒருவரே தம்மை துன்புறுத்தியதாக குறித்த பெண் முறையிட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் 22 வயதான சுவீடிஸ் பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருட ஆரம்பத்தில் இரண்டு பொலிஸ்காரர்கள், பதுளை எல்ல பகுதியில் வைத்து ஜேர்மனின் இரண்டு யுவதிகளை துன்புறுத்திய சம்பவம் பதிவு செய்யப்பட்டது. அம்பாலங்கொட பகுதியில் வைத்து படிப்பின் நிமித்தம் வந்திருந்த அவுஸ்திரேலிய பெண், அவரின் வழிகாட்டியால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானார். இவ்வாறு தமது நாட்டு பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் காரணமாகவே பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தமது சுற்றுலா அறிவுறுத்தலில் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராஜபக்சவின் தொலைபேசி அழைப்பை நிராகரித்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்? Posted: 19 Apr 2014 10:44 PM PDT
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தொலைபேசி அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிராகரித்துள்ளார் என தெரியவந்துள்ளது. அண்மையில் மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்னவிற்கு ஜனாதிபதியின் பிரதிநிதியொருவர் தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளார். அதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தொலைபேசியில் அழைக்கின்றார், என்ன செய்வது? என எரான் விக்ரமரட்ன சக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேராவிடம் கேட்டுள்ளார். அதற்கு, "போனை கட் பண்ணவும், பேச வேண்டாம்" என அஜித் பெரேரா, எரானிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அழைப்பிற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்காது, நேரடியாக கொழும்புக்குச் சென்று பொலிஸ் தலைமையகத்தில் தாக்குதல் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| விடுதலைப் புலிகளை கைது செய்ய சர்வதேச சமூகத்திடம் இலங்கை கோரிக்கை… Posted: 19 Apr 2014 10:40 PM PDT
சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போலின் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை கைது செய்ய உதவுமாறு சர்வதேச சமூகத்திடம் இலங்கை கோரிக்கை விடுக்கவுள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அடுத்த வாரத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை கொழும்பில் சந்திக்கும் போது இதற்கான கோரிக்கையை விடுப்பார் என்று அரசாங்க ஆங்கில பத்திரிகை தெரிவித்துள்ளது. அதேநேரம் இலங்கையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புக்களின் நடவடிக்கைகள் குறித்தும் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளிக்கவுள்ளதாக பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஜீ.எல் பீரிஸ். இராஜதந்திரிகளை எதிர்வரும் வியாழக்கிழமை சந்திக்கவுள்ளார். இந்தநிலையில் அரசாங்க பத்திகை செய்தியின் படி விடுதலைப்புலிகளின் நெடியவன் நோர்வேயிலும் விநாயகம் பிரான்ஸிலும் இருப்பர் என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பொதுபலசேனாவின் நிறைவேற்று அதிகாரிக்கு கொலை மிரட்டல்… Posted: 19 Apr 2014 10:34 PM PDT
பொதுபல சேனா இயக்கத்தின் நிறைவேற்ற அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் நிறைவேற்று அதிகாரி டொக்டர் திலந்த விதானகே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். பல்வேறு தரப்பினர் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாக தம் மீது சிலர் பழி சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொறுப்புணர்ச்சி மிக்க பிரஜை என்ற காரணத்தினால் தாம் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லவில்லை என தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கம் நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோடி பிரதமரானால் இலங்கைக்கு எதிராக கடும்போக்கை கடைப்பிடிப்பார்? Posted: 19 Apr 2014 10:25 PM PDT
இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளர் நரேந்திர மோடி, கடந்த சில நாட்களாக தமது பிரசாரத்தின்போது இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து வருவதாக ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரிஐ, தெ ஹிந்து போன்ற பத்திரிகைகளை கோடிட்டு இந்த செய்தியை இலங்கையின் ஆங்கில பத்திரிகை இன்று பிரசுரித்துள்ளது. இந்தநிலையில் மோடி தேர்தலில் வெற்றிப்பெற்று பிரதமரானால் இலங்கைக்கு எதிராக கடும்போக்கை கடைப்பிடிப்பார் என்று அந்த பத்திரிகை எதிர்வுகூறியுள்ளது. பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சியமைந்தால் அயல்நாடுகளான இலங்கை, மலேசியா, பிஜி ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு இந்திய முன்னுரிமை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளமையை அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் குறித்தும் குஜராத் மீனவர்கள், பாகிஸ்தான் படையினரால் தாக்கப்படுவது குறித்தும் மோடி தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதல்கள் தொடர்வதற்கு மத்திய காங்கிரஸ் நிர்வாகத்தின் உரிய செயற்பாடின்மையே காரணம் என்று மோடி குற்றம் சுமத்தியுள்ளார். ஏற்கனவே இலங்கையில் அதிகாரப் பரவாலாக்கத்தின் அவசியம் குறித்து பாரதீய ஜனதாக்கட்சி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ளமையையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 19 Apr 2014 10:18 PM PDT |
| ஆபத்தில் இருந்த பெண்ணை காப்பாற்றிய சாகச வீரர் Posted: 19 Apr 2014 10:15 PM PDT |
| கொரில்லாவுடன் கல்யாணம்!! அட இத பாருங்க Posted: 19 Apr 2014 10:10 PM PDT |
| கமல், ரஜினி, அஜித் படங்களோடு மோத வேண்டாம் – நாசர் அட்வைஸ் Posted: 19 Apr 2014 03:50 AM PDT
இளம் நடிகர்கள் ரஜினி, கமல், அஜீத் படங்களுடன் போட்டி போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் நடிகர் நாசர். ஒன்பது குழி சம்பத் இசை வெளியீட்டு விழா மற்றும் முதல் திரையரங்கை நிறுவிய சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற நாசர் பேசியதாவது: எனக்கு நானே விழாவில் நடிகர் நாசர் பேசுகையில், "இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்த திருவுக்கு நன்றி. அதே நேரத்தில் என்னை அழைக்கும்போது இப்படத்தின் இசை வெளியீடு பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. இருந்தாலும் எனக்கு கோபம் இல்லை. சமீப காலமாக நான் மிக அதிகமாக பேச ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு நானே தனியாககூட பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரே மாதிரி... எனக்கு சுதந்திர தினம், மகளிர் தினம், புத்தாண்டு தினம் இவற்றிற்கெல்லாம் வித்தியாசங்கள் தெரியவில்லை. எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் தோன்றுகிறது. இதனால்தான் இந்தப் படக் குழுவிடம், சாமிக்கண்ணு அய்யாவின் பிறந்தநாளை திரை அரங்கு தினமாக அறிவிக்க வேண்டியிருப்பதற்கு தேவையான நடைமுறை சாத்தியங்களில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுமாறு சொல்லி இருக்கிறேன். அவருக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், எந்த அளவுக்கு சினிமாவின் மேல் காதல் இருந்திருந்தால் அந்தக் காலத்திலேயே திரையரங்கைக் கட்டியிருக்க வேண்டும். அழிவில் தியேட்டர்கள் இப்போது தியேட்டர்கள் அழிந்து வருவதைக் கண்டு நாம் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது இங்கு மட்டும்தான். நான் லண்டனில் நடைபெற்ற 'தாண்டவம்' படத்தின் ஷூட்டிங்கின்போது, அங்கே நாடகங்களுக்கு சென்றேன். அங்கே சாதாரணமாக வருடத்திற்கு குறைந்தது 100 நாடகங்கள் நடைபெறும். ஒரு காட்சியின் டிக்கட்டின் விலை நம்மூர் மதிப்பின்படி ரூபாய் 2000 முதல் 7500 வரை ஆகும். மல்டிப்ளெக்ஸ்கள்... நான் நடிக்க வாய்ப்பு தேடி அலையும் காலகட்டத்திலேயே தியேட்டர் இடிப்பதைக் கண்டு "நம் எதிர்காலம் என்னவாகுமோ?" என்று பயந்துள்ளேன். ஆனால் இப்போது அப்படியல்ல. காரணம் தியேட்டர்கள் இடிக்கப்பட்டாலும் நிறைய மல்டிப்ளக்ஸ்கள் வந்துகொண்டிருப்பது சந்தோஷமாக உள்ளது. திருட்டு டிவிடியை அழிக்க முடியாது திருட்டு டிவிடியை நாம் அழிக்க முடியாது. ஆனால் நாம் கண்டிப்பாக நல்ல படம் எடுத்தால் நிச்சயம் மக்கள் தியேட்டருக்கு வந்துதான் பார்ப்பார்கள். மேலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் நல்ல படங்கள் கமல், ரஜினி, அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களோடு மோத வேண்டாம். காரணம் வெகுஜன சினிமாக்களோடு மோத வேண்டிய சூழ்நிலையால் கதைக்குத் தேவையில்லாத காதல், பாட்டு, சண்டை போன்றவற்றைத் திணிக்க வேண்டியுள்ளது. சினிமா இல்லாமல் தமிழன் இல்லை தமிழர்களின் வாழ்க்கையை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று அரசியல் இன்னொன்று சினிமா. தமிழர்கள் சோறு தண்ணியில்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால் சினிமா இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. தியேட்டர்கள் இடிப்பதை நான் பொருளாதார சிக்கலாகப் பார்க்கவில்லை. கலாச்சார சீரழிவாகத்தான் பார்க்கிறேன். தயவு செய்து சினிமாவை வியாபாரமாகப் பார்க்க வேண்டாம். பொதுவாக ஒரு நடிகரின் படம் ரிலீசாகும்போது தியேட்டரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். ஆனால் நான் அதை வெறுக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், படம் பார்க்கும்போது ரசிகனின் மனதில்தான் திருவிழாக்கோல உணர்வு இருக்க வேண்டும்," என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| செஞ்சோலை சிறுவர்களுக்கான புதிய இல்லம் திறப்பு Posted: 19 Apr 2014 03:38 AM PDT
இலங்கை போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலி போராளிகள் மற்றும் பொதுமக்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான செஞ்சோலை சிறார் இல்லம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் செஞ்சோலை சிறுவர் இல்லம் செயல்பட்டது. அந்த இல்லத்தின் மீதும் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்தது. போருக்கு பின்பு கேபி என்ற செல்வராசா பத்மநாதன் நடத்தி வரும் நெர்டோ நிறுவனத்தின் சார்பில் கிளிநொச்சியில் ஆண் சிறுவர்களுக்கான செஞ்சோலை சிறுவர் இல்லம் கடந்த 16-ந் தேதி காலை 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வின் தலைமை விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வணிகத்துறை பேராசிரியர் கந்தையா தேவராஜா கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேள், கனடா இராஜதுரை தம்பதியினர், யாழ். நதியா ஜீவலர்ஸ் உரிமையாளர் என்.சத்யரூபன், யாழ். ஹரிகணன் அச்சக உரிமையாளர் எஸ்.ராஜ்குமார், ஒட்டுசுட்டான் புரமோர்ட்டர்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் கிறேசன் பெர்ணான்டோ, இந்திக யாகண்டவெல, யாழ். சர்வீஸ் நிலைய உரிமையாளர் ரி.புஸ்பகரன், யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த எஸ்.ஞானலோஜினி, யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த போட்டோ சிறீ உரிமையாளர் எஸ்.மீரா, லண்டன் கதிரவேலு கோமலேஸ்வரன், யாழ்ப்பாணம் தயாபரன், சர்வமத பெரியோர்களான கிளிநொச்சி மாவட்ட அருட்தந்தை எம்.கான்ஸ்போவர், கிளிநொச்சி சிவத்தமிழ் வித்தகர் அமுத லக்ஸ்மிகாந்த குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முல்லைத்தீவு முத்தையன்கட்டு அன்பு இல்லத்தைச் சேர்ந்த சிறுவர்களின் காவடி, நடன நிகழ்வுகளுடன் நாதஸ்வர மேளவாத்தியம் முழங்க விருந்தினர்கள் "செஞ்சோலை சிறுவர் இல்லம் (ஆண்கள்)" கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளை விறுவிறுப்பு இணையத்தள தலைமை செய்தி ஆசிரியர் ரிசி தொகுத்து வழங்கினார். உணவு கூடத்தை கந்தையா தேவராஜா, இந்திக யாகண்டவெல திறந்து வைத்தனர். புலம்பெயர் தமிழர்கள் பங்கேற்பு கனடா ஈழநாடு பத்திரிகை மூலமாக கனடாவாழ் தமிழ் மக்களின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட சமையல் கூடத்தையும், களஞ்சிய அறையையும் சரத் சந்திரன் திறந்து வைத்தார். ஆனந்தவேல்(வல்வெட்டித்துறை) ஞாபகார்த்தமாக சிவகுமார் நிதியுதவியில் கட்டப்பட்ட சிறுவர்களுக்கான தங்கும் இடத்தின் முதலாவது கட்டடத்தொகுதியை கிளிநொச்சி மாவட்ட கல்விப்பணிப்பாளர் .முருகவேல் திறந்து வைத்தார். லண்டனைச் சேர்ந்த சிவகாந்தன் நிதியுதவியுடன் கட்டப்பட்ட சிறுவர்களுக்கான தங்கும் இடத்தின் இரண்டாவது கட்டடத் தொகுதியை யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த வழங்கறிஞர் எஸ்.ஞானலோஜினி திறந்துவைத்தார். கம்பர்மலை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தம்பு வல்லிபுரம் சோதிடர் ஞாபகார்த்தமாக யாழ். சர்வீஸ் நிலைய உரிமையாளர் .புஸ்பகரன் நிதியுதவியுடன் கட்டப்பட்ட சிறுவர்களுக்கான தங்கும் இடத்தின் மூன்றாவது கட்டடத் தொகுதியை .புஸ்பகரன் திறந்து வைத்தார். அச்சுவேலி வடக்கு அமரர்களான தங்கவேலாயுதம்-சரஸ்வதி ஞாபகார்த்தமாக கனடாவைச் சேர்ந்த இராஜதுரை-தெய்வீகராணி நிதியுதவியுடன் கட்டப்பட்ட அலுவலகத்திற்கான கட்டடத்தொகுதியை இராஜதுரை-தெய்வீகராணி திறந்து வைத்தனர். கே.பியால் ஏற்கெனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முத்தையன்கட்டில் அன்பு ஆண் சிறுவர் இல்லம், முள்ளிவளையில் பாரதி பெண் சிறுவர் இல்லம், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுவில் செஞ்சோலை பெண் சிறுவர் இல்லம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இன்னைக்கு 4 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் VS ராயல் சேலஞர்சர்ஸ் பெங்களூர் Posted: 19 Apr 2014 03:29 AM PDT
நடப்பு ஐ.பி.எல்.7வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்திய மகிழ்ச்சியுடன் இன்று நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. 7வது ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகின்றன. இதில் 2வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியிருந்தது. உலககோப்பை இறுதி போட்டியில் மரண மொக்கை போட்டு விமர்சனத்துக்கு ஆளான பெங்களூர் அணியின் யுவராஜ்சிங், டெல்லியுடனான போட்டியில் பழைய பன்னீர்செல்வமாக மாறி 52 பந்துகளில் 84 ரன்களை குவித்து அவல்மென்றவர்கள் வாய்க்கு பூட்டுப்போட்டார். விராத் கோஹ்லியும் தன்பங்குக்கு 49 ரன்களை அடித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த உற்சாக பார்முடன் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவிய வெறியில் இருக்கும் மும்பை இந்தியன்ஸை இன்று எதிர்கொள்கிறது பெங்களூர். மும்பை அணியில் ஜாகீர்கான் மற்றும் மலிங்கா ஆகிய இருவரையும் தவிர்த்துப்பார்த்தால் பவுலிங் மகா மோசமாக உள்ளது. பேட்டிங் வரிசையும் சொல்லிக்கொள்வதைப்போல இல்லை. கொல்கத்தாவின் சுனில் நரைன் சுழலை சந்திக்க முடியாமல் திருதிருவென முழித்துக்கொண்டிருந்தனர். அம்பத்தி ராயுடு, ரோகித் ஷர்மா, ஆதித்யா தாரே ஆகியோரை தவிர மும்பையின் வேறு எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்னை அடிக்க முடியாமல் அவுட்டாகினர். இந்த நிலையில் இன்றைய போட்டியில் இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாலை 4 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டி துவங்குகிறது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி: விராத் கோஹ்லி, ஏ.பி. டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், யுவராஜ்சிங், மிச்சேல் ஸ்டார்க், அல்பி மோர்க்கல், வருண் ஆரோன், அசோக் டிண்டா, பார்த்திவ் பட்டேல், முத்தையா முரளிதரன், ரவி ராம்பால், நிக் மட்டின்சன், லர்ஷல் பட்டேல், விஜய் ஜோல், அபு நெக்கிம், சச்சின் ரானா, ஜகாட்டி, சந்தீப் பாரியர், தன்மே மிஸ்ரா, யோகேஷ் டேகாவாலே, யுஸ்வேந்திரா சகால். மும்பை இந்தியன்ஸ் அணி: ரோகித் ஷர்மா, மலிங்கா, பொல்லார்டு, ஹர்பஜன்சிங், அம்பத்தி ராயுடு, மைக்கேல் ஹஸ்சி, ஜாகீர்கான், பிரக்யான் ஓஜா, கோரி ஆன்டர்சன், ஜோஸ் ஹஸ்லிவுட், சிஎம் கவுதம், ஆதித்ய தாரே, அபூர்வ்வான்கடே, மார்சன்ட் டி லன்கே, கிருஷ்மர் சந்தோகி, பென் டன்க், பவான் சுயல், சுஷாந்த் மராதே, ஜஸ்பிரிட் பும்ரா, ஸ்ரேயாஷ் கோபால், ஜலாஜ் சக்சேனா.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாயமான மலேசிய விமான தேடுதலில் முக்கிய கட்டம் வந்துவிட்டது Posted: 19 Apr 2014 03:17 AM PDT
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளோம் என்று அந்த நாட்டு போக்குரத்து அமைச்சர் ஹிஸ்முதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மார்ச் 8ந் தேதி திடீரென மாயமானது. இதுவரை விமானம் என்ன ஆனது, அதிலிருந்த பயணிகளின் கதி என்ன என்பது குறித்த மர்மம் விலகவில்லை. இதுகுறித்து மலேசிய அமைச்சர் லிஸ்முதீன் ஹூசைன் இன்று கூறுகையில், இன்றும் நாளையும் நடைபெறும் தேடுதல் பணிகள் முக்கிய கட்டத்தை எட்டிவிட்டது என்பதை உலகுக்கு உணர்த்துவோ. உலகம் எங்கும் உள்ள மக்கள் அதிசயம் நடக்க வேண்டிக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார். ஆஸ்திரேலிய கடற்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மர்மப்பொருள் கடலுக்கு அடியில் இருப்பது போன்ற தகவல் கிடைத்திருந்தது. ஆனால் அதுகுறித்த தேடுதலில் எந்த பொருளையும் கண்டெடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் மேற்கு கடலோர பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நிலையில் மலேசிய அமைச்சரின் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோடியுடனான சந்திப்பு, அரசியல் பற்றி பேசாத விஜய் Posted: 19 Apr 2014 03:01 AM PDT
ஜில்லா பட 100வது நாள் விழாவில் மோடியுடனான சந்திப்பு குறித்தோ, வேறு அரசியல் பற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை நடிகர் விஜய். அதே நேரம் என்னுடைய வெறித்தனமான ரசிகர்கள் உடனிருக்கும்வரை என்னை ஒன்றுமே செய்ய முடியாது என்ற அர்த்தம் வரும் வகையில் பேசினார் விஜய். ஜில்லா படத்தின் 100 வது நாள் விழாவில் விஜய் பங்கேற்கிறார் என்றதுமே, அவர் ஏதாவது அரசியல் பேசுவார் என்றுதான் எதிர்ப்பார்த்தனர். சமீபத்தில்தான் மோடியை அவர் தேடிப் போய்ப் பார்த்துவிட்டு வந்திருந்ததால், நிச்சயம் அதுபற்றியாவது பேசுவார் என்று மீடியா காத்திருந்தது. ஆனால் விஜய் அப்படியெல்லாம் எதுவுமே பேசவில்லை. தலைவா படம் குறித்துப் பேசியபோது கூட, அந்தப் பிரச்சினைகளைப் பேசாமல் தவிர்த்தார். அதே நேரம், 'என்னோட ஒவ்வொரு படமும் ரிலீசாகும் போதும் இது நல்லா ஓடணும்கிறதுல என்னை விட ஆர்வமாகவும், வெறியாகவும் இருக்காங்க. அப்படிப்பட்ட ரசிகர்கள் என் கூட இருக்கிற வரைக்கும்....? சரி விடுங்க...!' என்று தன் பேச்சின் நடுவே குறிப்பிட்டதில் வேண்டுமானால் அரசியல் இருக்குமோ.. இது தலைவாவுக்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்களுக்கு எதிரான குரலா... என்றெல்லாம் அர்த்தம் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் மீடியாக்காரர்கள்!This posting includes an audio/video/photo media file: Download Now |
| விற்பனையிலும் சக்கை போடு போடும் : லினோவாவின் வைப் Z Posted: 19 Apr 2014 02:54 AM PDT
இன்றைக்கு மொபைல் சந்தையில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பிடித்துவிட்டது லினோவா மொபைல்கள் எனலாம். தற்போதைய லினோவாவின் மிகப்பெரும் ஹிட் மொபைல் எது என்றால் அது லினோவாவின் வைப் Z மொபைல் தாங்க இது தற்போது விற்பனையிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறதுங்க. அந்த மொபைலில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பதை பற்றி கொஞ்சம் பார்க்கலாமாங்க இதோ. 5.5 இன்ச் நீளம் இருக்கும் இந்த மொபைல் ஸ்கீரின்களில் ஸ்கேரட்ச் ஆகாத கொரில்லா கிளாஸூடன் வெளிவருதுங்க மற்றும் இந்த மொபைலில் 13 MP கேமரா கொண்டுள்ளது, இதன் பிரன்ட் கேமரா 5MP அளவிலும் உள்ளது இதனால் இதன் கேமரா கிளாரிட்டி நிச்சயம் நன்றாக இருக்கும் என கூறலாம்ங்க. மேலும், அடுத்து இதில் 2.2GHz ஸ்னேப்டிராகன் பிராஸஸர் உள்ளது இது மிகவும் வேகமாக இயங்கக்கூடிய பிராஸஸர்களில் ஒன்றாகும். இந்த மொபைல் ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.3 இல் இயங்கக்கூடியதாகும் அதனுடன் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் மெகா ஹிட் வரவான கிட்கேட் அப்டேட்டும் இதில் கிடைக்கும். அடுத்து இதில் மற்றொரு புதிய வசதி இதில் என்னவென்றால் 4G வசதியும் உள்ளது என்பது இந்த மொபைலின் சிறப்பு எனலாம்ங்க மேலும் 16GB இன்பில்டு மெமரியுடன் வெளிவரும் இந்த மொபைலில் மெமரி கார்டு ஆப்ஷனும் இருக்குங்க இதன் பேட்டரி திறன் 3000mAh ஆகும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆரோக்கியத்தை தரும் வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் Posted: 19 Apr 2014 02:42 AM PDT
கொளுத்தும் வெயிலால் உடலின் வெப்பநிலையானது அதிகரித்து, சூடு பிடிக்க ஆரம்பித்து, மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆகவே வெயிலின் தாக்கம் தெரியாமல் உடல் குளிர்ச்சியாக இருக்க, காலையில் வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் குடியுங்கள். இதனால் வெள்ளரிக்காய் உடலின் வெப்பத்தை தணிக்கவும், இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்ற நோய்கள் வராமலும் தடுக்கும். இங்கு வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் - 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது) இஞ்சி - 1 இன்ச் சர்க்கரை - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை: முதலில் பிளெண்டரில் வெள்ளரிக்காய் துண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, கருப்பு உப்பு, சர்க்கரை மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து பரிமாறினால், வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் ரெடி!!!This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 19 Apr 2014 02:38 AM PDT பலருக்கு சாதாரண பாலை விட, பாதாம் பால் மிகவும் பிடிக்கும். அப்படி பாதாம் பால் குடிப்பதாலும் பல நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், பாதாம் பாலில் சாதாண பாலை விட கால்சியம் மற்றும் புரோட்டீன் குறைவாக இருந்தாலும், ஒரு கப் பாதாம் பாலில் ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் உள்ளன. சிலருக்கு பால் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் பாதாம் பாலை தினமும் குடிப்பது நல்லது. ஏனெனில் இதனால் பாலினால் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





































