மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- வதேராவுக்கு ரூ.324 கோடி சொத்து எப்படி வந்தது?: அருண்ஜெட்லி கேள்வி
- ஹேமா மாலினி பேசிக்கொண்டிருந்த பொதுக்கூட்ட மேடை சரிந்தது
- மதுராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை
- திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் நகைகளை கடத்திய வி.ஐ.பி.க்கள்
- பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதியில் வேட்பாளரை நிறுத்திய சந்திரபாபு நாயுடு
- 120 தொகுதிகளுக்கு குறி வைக்கும் காங்: பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு
- 64 தொகுதிகளில் 8–வது கட்ட தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது
- குஜராத்தில் சோனியா–ராகுல் தீவிர பிரசாரம்
- சுனங்காடு அருகே சித்திரை திருவிழாவுக்கு சென்ற 2 போலீஸ்காரர்கள் பலி
- ஓட்டு போடாதவர்களுக்கு அடுத்த தேர்தலில் தடை விதிக்க அத்வானி யோசனை
- ஊழல் அணியின் தலைவர் சரத்பவார்: உத்தவ் தாக்கரே கடும் தாக்கு
- குஜராத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பிரசாரம் செய்யமாட்டார்
- ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை: வி.எஸ்.சம்பத் எச்சரிக்கை
- கெஜ்ரிவால் மே 24-ந்தேதி ஆஜராக டெல்லி கோர்ட்டு உத்தரவு
- மோடி மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்காதீர்கள்: கெஜ்ரிவால்
- நாடு கடினமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: ராஜ்நாத் சிங்
- காங். ஆட்சிக்கு வந்தால் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றும்: ஹரிஷ் ராவத்
- அஜித் பவார் எந்த பொதுக் கூட்டத்தையும் நடத்தவில்லை: போலீஸ் விளக்கம்
- கடும் பனிப்பொழிவு: கேதார்நாத் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடை
- நாடு அனைவருக்கும் சொந்தம்: ராகுல் காந்தி
| வதேராவுக்கு ரூ.324 கோடி சொத்து எப்படி வந்தது?: அருண்ஜெட்லி கேள்வி Posted: 19 Apr 2014 11:24 PM PDT அமெரிக்காவில் ''வால் ஸ்ட்ரீட் ஜர்னல்'' வெளியாகி வருகிறது. அந்த பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா திடீர் பணக்காரராக மாறியது எப்படி என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ராபர்ட் வதேரா, சோனியா காந்தியின் மகள் பிரியங்காவை திருமணம் செய்த காலகட்டத்தில் சாதாரண பணக்காரராகவே இருந்தார். 2009–ம் ஆண்டு அவர் |
| ஹேமா மாலினி பேசிக்கொண்டிருந்த பொதுக்கூட்ட மேடை சரிந்தது Posted: 19 Apr 2014 11:20 PM PDT பாலிவுட்டின் 'கனவுக்கன்னி' என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட நடிகை ஹேமா மாலினி உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். மதுரா தொகுதிக்கு உட்பட்ட ரிஃபைனரி நகரில் நேற்று அவர் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரைக் காண |
| மதுராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை Posted: 19 Apr 2014 11:13 PM PDT மதுரா அருகே மேஹ்ராவ்லி என்ற கிராமத்தில் உள்ள கலனா தனா என்ற பகுதியில் குடிசையில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களான காலித், அஜீஸ், முவின், நிஜ்ஜு ஆகியோர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த அதே குடும்பத்தை சேர்ந்த பெண்ணான மவ்சம் என்பவர் மருத்துவமனையில் |
| திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் நகைகளை கடத்திய வி.ஐ.பி.க்கள் Posted: 19 Apr 2014 10:41 PM PDT கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் ஒன்று பத்மநாபசுவாமி கோவில். திருவனந்தபுரத்தை ஆண்ட திருவி தாங்கூர் மன்னரால் இந்த கோவில் நிர்வகிக்கப்பட்டு வந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின்பும் மன்னர் பரம்பரையினரே கோவிலை நிர்வகித்து வந்தனர். இதில் சமீபத்தில் மரணம் அடைந்த மார்த்தாண்ட வர்மா கோவிலின் நிர்வாகியாக இருந்தபோது, கோவிலின் விலை மதிப்பற்ற நகைகள் |
| பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதியில் வேட்பாளரை நிறுத்திய சந்திரபாபு நாயுடு Posted: 19 Apr 2014 10:41 PM PDT ஆந்திராவில் பாரதீய ஜனதா–தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தெலுங்கானாவில் இரு கட்சிகள் இடையே குழப்பம் இன்றி தொகுதி பங்கீடு நடந்தது. ஆனால் சீமாந்திராவில் இருக்கட்சிகள் இடையே குழப்பம் நீடித்து வருகிறது. சீமாந்திராவில் இருகட்சிகளிடையே கூட்டணி முடிவாகும் போது பாரதீய ஜனதாவுக்கு 15 சட்டசபை தொகுதியையும், 5 பாராளுமன்ற |
| 120 தொகுதிகளுக்கு குறி வைக்கும் காங்: பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு Posted: 19 Apr 2014 10:35 PM PDT பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 90 முதல் 100 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக சோர்வடைந்துள்ளனர். மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்ற எண்ணம் காங்கிரசார் மனதில் ஏற்பட்டுவிட்டது. கடந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் சுமார் 100 |
| 64 தொகுதிகளில் 8–வது கட்ட தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது Posted: 19 Apr 2014 10:16 PM PDT பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7–ந்தேதி தொடங்கி இதுவரை 5 கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 6–வது கட்ட தேர்தல் வரும் 24–ந்தேதி நடைபெற உள்ளது. 7–வது கட்ட தேர்தல் 30–ந்தேதி நடைபெறுகிறது. அடுத்த மாதம் (மே) 7–ந்தேதி 8–வது கட்ட தேர்தல் நடைபெறும். ஆந்திரா (25), பீகார் (7), இமாச்சலபிரதேசம் (4), காஷ்மீர் (2), உத்தரபிரதேசம் (15), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்காளம் (6) ஆகிய 7 மாநிலங்களில் 8–வது கட்ட தேர்தலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அன்று 64 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும். கடந்த ஒருவாரமாக இந்த 64 தொகுதிகளிலும் மனுதாக்கல் நடந்து வந்தது. நேற்று மனுதாக்கல் முடிந்தது. |
| குஜராத்தில் சோனியா–ராகுல் தீவிர பிரசாரம் Posted: 19 Apr 2014 10:08 PM PDT குஜராத் மாநிலத்தில் வரும் 30–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத்தில் நரேந்திர மோடிக்கு அதிக செல்வாக்கு இருந்தாலும் சவுராஷ்டிரா பகுதியில் மட்டும் காங்கிரசுக்கு சற்று ஆதரவு உள்ளது. அந்த மண்டலத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த தடவையும் அந்த 4 தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத்தலைவர் ராகுல்காந்தியும் அடுத்தடுத்து குஜராத் மாநிலத்துக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். |
| சுனங்காடு அருகே சித்திரை திருவிழாவுக்கு சென்ற 2 போலீஸ்காரர்கள் பலி Posted: 19 Apr 2014 10:06 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பாலக்காடு நகர் ஏ.ஆர். போலீஸ் கேம்பில் போலீசாக வேலை செய்து வந்தவர் ரெஜிமோன். இவரும் பொள்ளாச்சி பரம்பிக்குளத்தில் போலீசாக இருந்த ரதீசும் நேற்று இரவு 12.30 மணிக்கு காரில் பாலக்காட்டில் இருந்து ஒற்றப்பாலம் புறப்பட்டனர். காரை ரெஜிமோன் ஓட்டினார். முன் பக்கம் ரதீஸ் அமர்ந்திருந்தார். சுனங்காடு என்ற இடத்தில் வந்தபோது எதிரே டிப்பர் லாரி வந்தது. |
| ஓட்டு போடாதவர்களுக்கு அடுத்த தேர்தலில் தடை விதிக்க அத்வானி யோசனை Posted: 19 Apr 2014 08:08 PM PDT ஒரு தேர்தலில் ஓட்டுப்போடாத வாக்காளர்கள், அடுத்த தேர்தலில் ஓட்டளிக்க தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு அத்வானி யோசனை தெரிவித்தார். அபராதம் மத்தியபிரதேச மாநிலம் ஜபுவா அருகே தண்ட்லா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- சில வெளிநாடுகளில், ஓட்டுப்போடாத வாக்காளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது. நான் இங்கு அபராதம் விதிக்க |
| ஊழல் அணியின் தலைவர் சரத்பவார்: உத்தவ் தாக்கரே கடும் தாக்கு Posted: 19 Apr 2014 05:00 PM PDT பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா சார்பில் நாசிக் தொகுதியில் போட்டியிடும் ஹேமந்த் கட்சே மற்றும் பா.ஜனதா சார்பில் திண்டோரி தொகுதியில் போட்டியிடும் சவான் ஆகியோரை ஆதரித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, நாசிக் ஆனந்த் கன்ஹரே நினைவு மைதானத்தில் தேர்தல் பிரசாரம் |
| குஜராத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பிரசாரம் செய்யமாட்டார் Posted: 19 Apr 2014 03:03 PM PDT குஜராத்தில் வரும் 30 ஆம் தேதி தேர்தல் துவங்க உள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் அங்கு பிரசாரம் செய்யப் போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநில காங்கிரஸ், பிரதமர் மன்மோகன் சிங்கை பிரசார நட்சத்திரமாக அங்கு களமிறக்க விரும்பிய போதிலும் |
| ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை: வி.எஸ்.சம்பத் எச்சரிக்கை Posted: 19 Apr 2014 02:25 PM PDT ஆந்திராவில் வரும் 30-ந்தேதியும், அடுத்த மாதம் 7-ந்தேதியும் இரண்டு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளன. தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட ஐதராபாத் வந்த தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் |
| கெஜ்ரிவால் மே 24-ந்தேதி ஆஜராக டெல்லி கோர்ட்டு உத்தரவு Posted: 19 Apr 2014 02:13 PM PDT மத்திய மந்திரி கபில் சிபலின் மகன் அமித் சிபல் தனது தந்தையின் மந்திரி பதவியை பயன்படுத்தி ஆதாயமடைந்துள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த மணிஷ் சிசோடியா, பிரசாந்த் பூஷன், சாஷியா இல்மி ஆகியோர் கடந்த ஆண்டு புகார் கூறியிருந்தனர் |
| மோடி மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்காதீர்கள்: கெஜ்ரிவால் Posted: 19 Apr 2014 01:11 PM PDT நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், 'ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதை பார்த்து பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்து விடாதீர்கள்' என வாரணாசி வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் |
| நாடு கடினமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: ராஜ்நாத் சிங் Posted: 19 Apr 2014 12:28 PM PDT நாடு கடினமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக லக்னோ தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். இதுகுறித்து லக்னோ தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசுகையில், "பொருளாதார துறையாக இருந்தாலும் சரி, விவசாயிகளின் நிலையாக இருந்தாலும் சரி அல்லது நாட்டில் |
| காங். ஆட்சிக்கு வந்தால் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றும்: ஹரிஷ் ராவத் Posted: 19 Apr 2014 12:20 PM PDT உத்தரகாண்ட் முதல்வரும் பூரி தெகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான ஹரிஷ் ராவத் நேற்று முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் சென்று வேட்புமனுதாக்கல் செய்தார். அதன்பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஹரிஷ் ராவத் கலந்துக்கொண்டார் |
| அஜித் பவார் எந்த பொதுக் கூட்டத்தையும் நடத்தவில்லை: போலீஸ் விளக்கம் Posted: 19 Apr 2014 11:19 AM PDT தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுப்ரியா சுலேவுக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால், குடிநீர் சப்ளை நிறுத்தப்படும் என மசால்வாடி கிராம வாக்காளர்களை மிரட்டியதாக மகராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார் மீது குற்றச்சாட்டு எழுந்தது |
| கடும் பனிப்பொழிவு: கேதார்நாத் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடை Posted: 19 Apr 2014 10:45 AM PDT உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதனால் 373 கி.மீ நீளமுள்ள ரிஷிகேஷ்-பத்ரிநாத் மற்றும் ருத்ரபிரயாக்-கேதார்நாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மந்தமாக இருந்து வந்தது |
| நாடு அனைவருக்கும் சொந்தம்: ராகுல் காந்தி Posted: 19 Apr 2014 08:52 AM PDT அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்துக்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "எதிர்க்கட்சியான பா.ஜ.க மக்களிடையே பிரிவினையை உருவாக்கி மோதலை ஏற்படுத்துவதையே தனது சித்தாந்தமாக கொண்டிருக்கிறது. மேலும் மகாராஷ்டிர மக்கள் பீகார் மக்களுடனும் உத்திரபிரதேச மக்களுடனும் மோதலை ஏற்படுத்துவதை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |