Tamil Star |
- சம்பளத்தை கூட குறைக்கிறேன், நான் டேட்ஸ் தருகிறேன் என்ற நயன்: ஏற்க மறுத்த இயக்குனர்!
- முஷ்டாக் அலி டிராபி டி20 பைனலில் உ.பி. – பரோடா
- கால்பந்து அணிகள் ஏலம்! ஐ.பி.எல். போன்று இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள்!!
- இன்டர்போலிசிடம் கோரிக்கை: நெடியவன், விநாயகம் ஆகியோரை கைது செய்ய தீவிரம்!!
- குழாய் அமைப்பதை எதிர்த்துப் பேரணி: கனடாவின் பர்னாபை நகரில் போராட்டம்!
- ருஸ்யா மீது கனடா மேலும் தடைகளைஅதிகரிக்கவுள்ளது என ஜான் பாரைட் தகவல்!
- கனடா- Jim Flaherty யின் மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் : அரசாங்கம் இணையத்தளத்தில் புத்தகம் வெளீயீடு!
- கனடா- பெல்லிவிலி பகுதியில் வெள்ள எச்சரிக்கை!
| சம்பளத்தை கூட குறைக்கிறேன், நான் டேட்ஸ் தருகிறேன் என்ற நயன்: ஏற்க மறுத்த இயக்குனர்! Posted: 13 Apr 2014 02:41 AM PDT
ரோமியோ ஜூலியட் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததுடன் சம்பளத்தையும் குறைக்க தயாராக இருந்த நயன்தாராவை விட்டுவிட்டு ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்ததாக இயக்குனர் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார். இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவிடம் துணை இயக்குனராக இருந்த லக்ஷ்மண் இயக்குனராகியுள்ளார். ஜெயம் ரவியை வைத்து அவர் எடுக்கும் படத்திற்கு ரோமியோ ஜூலியட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் குறித்து லக்ஷ்மண் கூறுகையில், ஜெயம் ரவியிடம் நான் ரோமியோ ஜூலியட் கதையைக் கூறினேன். அவர் தனி ஒருவன் படப்பிடிப்பில் அந்த கதையை நயன்தாராவிடம் தெரிவித்துள்ளார். ரவி சொன்ன கதை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த படத்தில் நானே நடிக்கிறேன். என் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். தனி ஒருவன் படத்தை அடுத்தும் ரவியும், நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்வது நன்றாக இருக்காது என்று எனக்கு தோன்றியது. இதை நயன்தாராவிடம் தெரிவித்தேன் அவரும் புரிந்து கொண்டார். நயன்தாரா வேண்டாம் என்று நினைத்ததால் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தோம் என்றார் லக்ஷ்மண். ரவியும், ஹன்சிகாவும் ஏற்கனவே எங்கேயும் காதல் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முஷ்டாக் அலி டிராபி டி20 பைனலில் உ.பி. – பரோடா Posted: 13 Apr 2014 02:29 AM PDT
சையது முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கான இறுதிப் போட்டியில் விளையாட உத்தரப்பிரதேசம், பரோடா அணிகள் தகுதி பெற்றன.சூப்பர் லீக் ஏ பிரிவில் அரியானா அணியுடன் நேற்று மோதிய உத்தரப்பிரதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராஜ்கோட், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற உ.பி. அணி முதலில் பந்துவீசியது. அரியானா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. கேப்டன் ராகுல் திவான் 46, அவி பரோட் 35, தலால் 24*, குந்தாஷ்வீர் 21 ரன் எடுத்தனர்.அடுத்து களமிறங்கிய உ.பி. அணி 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீரர் பிரஷாந்த் குப்தா அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 102 ரன் விளாசினார் (58 பந்து, 5 பவுண்டரி, 7 சிக்சர்). இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் கோவா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது (குஜராத் 20 ஓவரில் 180/6; கோவா 15 ஓவரில் 181/6). சூப்பர் லீக் ஏ பிரிவில் உத்தரப்பிரதேசம், கோவா இரு அணிகளுமே தலா 12 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தாலும், உ.பி. அணி மொத்த ரன்ரேட் அடிப்படையில் கோவா அணியை முந்தி முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது. முன்னதாக, பி பிரிவில் பரோடா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கேரள அணியிடம் 22 ரன் வித்தியாசத்தில் தோற்றாலும், ரன்ரேட் அடிப்படையில் பைனல் வாய்ப்பை உறுதி செய்தது. மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், கேரளா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பரோடா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன் மட்டுமே எடுத்து தோற்றது. டெல்லி, ராஜஸ்தான் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் 3வது, 4வது இடம் பிடித்து வெளியேறின. பெங்கால் அணி 4 லீக் ஆட்டத்திலும் பரிதாபமாக தோற்று கடைசி இடம் பிடித்தது. மும்பை வாங்கடே மைதானத்தில் நாளை காலை 9.30க்கு தொடங்கும் இறுதிப் போட்டியில் பரோடா - உத்தரப்பிரதேச அணிகள் மோதுகின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கால்பந்து அணிகள் ஏலம்! ஐ.பி.எல். போன்று இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள்!! Posted: 13 Apr 2014 02:21 AM PDT
கால்பந்து லீக் போட்டியில் விளையாட உள்ள கொல்கத்தா அணியை கங்குலியும், கொச்சி அணியை, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் விலைக்கு வாங்கினர். நடிகர்கள் சல்மான் கான், ரண்பீர் கபூர், ஜான் ஆபிரகாமும் அணிகளை வாங்கினர். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் செப்டம்பர்- அக்டோபரில் நடைபெற உள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இன்டர்போலிசிடம் கோரிக்கை: நெடியவன், விநாயகம் ஆகியோரை கைது செய்ய தீவிரம்!! Posted: 13 Apr 2014 02:09 AM PDT
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க உதவிகளை வழங்கும் நபர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர். வெளிநாடுகளில் இருந்து அவ்வாறு செயற்படும் சில நபர்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார். நெடியவன் மற்றும் விநாயகம் ஆகிய நபர்களை கைது செய்ய சர்வதேச போலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப வவுனியாவில் நேற்று முன்தினம் கொல்லப்பட்ட கோபி உட்பட மூவருக்கு நெடியவன் மற்றும் விநாயகம் ஆகியோரே ஐரோப்பாவில் இருந்து நிதி வழங்கியதாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| குழாய் அமைப்பதை எதிர்த்துப் பேரணி: கனடாவின் பர்னாபை நகரில் போராட்டம்! Posted: 13 Apr 2014 01:57 AM PDT
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் Burnaby என அழைக்கப்படுகின்ற நகரில் குழாய்கள் அமைப்பதனை எதிர்த்துப் பேரணியொன்று சனிக்கிழமை நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேராணியில் நூற்றுக்காணக்கான பொதுமக்கள் வீதியில் நின்று தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது. குறிப்பாக Trans Mountain Pipeline expansion projectஎன அழைக்கப்படுகின்ற குழாய் அமைப்பதற்குத் தமது எதிர்ப்பினை அரசிற்குத் தெரிவித்திருக்கின்றார்கள் எனக் கருதப்படுகின்றது. இந்த எதிர்ப்புப் பேரணியின் ஒழுங்கமைப்பாளர்கள் குறிப்பிட்ட குழாய் அமைப்பதனால் பொதுமக்கள் எதிர்நோக்க வேண்டிய இடையூறுகள் பற்றித் தாம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது. குறிப்பிட்ட பேரணியானது Forest Grove Park எனுமிடத்திலிருந்து புறப்பட்டு Kinder Morgan plant வரை பதாகைகள் பலவற்றைத் தாங்கிச் சென்றிருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது. குறிப்பிட்ட பேரணியில் பங்கெடுத்த ஒரு நபர் இரண்டாவது குழாய் இங்கு அமைக்கப்பட வேண்டாம் எனவும் ஒரு குழாயினால் வருகின்ற தீமைகள் மட்டுமே போதும் எனத் தெரிவித்திருப்பதாகப் ஊடகத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ருஸ்யா மீது கனடா மேலும் தடைகளைஅதிகரிக்கவுள்ளது என ஜான் பாரைட் தகவல்! Posted: 13 Apr 2014 01:06 AM PDT
கனடா ருஸ்யாமீது ஏற்கனவே சில தடைகளை விதித்திருக்கின்றது. ருஸ்யாவானது உக்கிரைன் நாட்டின் மேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து இவ்வாறான தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது கனடாவானது ருஸ்யாமீது மேலும் தடைகளைக் கொணர்வதற்கு முயல்கின்றது எனக் கனடிய வெளிவிவகார அமைச்சரான பியேட் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சர் கனடாவின் நிலைப்பாட்டை வெளியிட்ட அதேவேளை கனடாவுடன் இணைந்து கனடாவின் நட்பு நாடுகளும் ருஸ்யாவைத் தனிமைப்படுத்துவதற்கான சில நிலைப்பாடுகளை மேற்கொள்வதற்கு முனைகின்றன என்ற தகவலையும் வெளியிட்டிருக்கின்றார் எனத் தெரிகிறது. கிருமியாவினது எரிவாயு நிறுவனம் உடபட குறிப்பிட்ட சில அதிகாரிகளிற்கான பயணத் தடைகளும் மோலதிகமாக விதிக்கப்படவுள்ளன என ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவ்வாறான தடைகள் விதிக்கப்படுவதற்கான காரணம் ருஸ்யாவிற்கு உக்கிரைன் விவகாரத்தின் காரணமாக அதிகளவு அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு எனவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 13 Apr 2014 12:38 AM PDT
கனடா- மத்திய அரசாங்கம் மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் Jim Flaherty அவர்களுக்கு அனுதாபச் செய்திகளை தெரிவிக்க விரும்புபவர்கள் இணையத்தளத்தின் ஊடாக அதனை தெரிவிக்கலாமென கூறியுள்ளது. அரசாங்கத்தின் மாநில மரண சடங்குகள் மற்றும் தேசிய நினைவு வலைத்தளமான www.commemoration.gc.ca-ல் சென்று தெரிவிக்கலாமெனவும், அனுதாப செய்திகள் அச்சிடப்பட்டு Flaherty யின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும் என அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரங்கல் செய்தி புத்தகம் ஒன்று பாராளுமன்ற ஹில்லிலுள்ள கௌரவ மண்டபத்திலும் வைக்கப்படும். அரச மரியாதையுடனான இறுதிச்சடங்குகள் புதன்கிழமை ரொறொன்ரோவில் இடம்பெறும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடா- பெல்லிவிலி பகுதியில் வெள்ள எச்சரிக்கை! Posted: 13 Apr 2014 12:08 AM PDT
ஒன்ராறியோவின் கிழக்கு நகர ஆறுகள் பெருக்கெடுக்கலாமென அதிகாரிகள் அஞ்சுவதால் மணல் மூட்டைகளை நிரப்ப தொணடர்களின் உதவியை கோரியுள்ளது. நகராட்சியில் ஏற்கனவே அவசரகால நிலைமை பிறப்பிக்க பட்டுள்ளதாகவும் அதே நேரம் மேலதிக மழை வீழ்ச்சி ஏற்பட்டால் ஆறுகள் அணைகளை உடைத்துக் கொண்டு பாயலாம் என்ற அச்சத்தில் அதிகாரிகள் வானிலை முன்னறிவிப்புக்களை நெருக்கமாக அவதானித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பதிவான பகுதிகளில் உள்ள வீடுகள் மிகப் பெரிய வெள்ள ஆபத்தை எதிர்நோக்க நேரிடும். வெள்ளிக்கிழமை இரவு ஒரு ஆறு உச்சத்தை தொட்டுவிட்டதாகவும் வேறு இரண்டு மெதுவாக உயர்ந்து வருவதாகவும் குயின்ரே பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் ஏரி ஒன்று 24-மணித்தியாலங்களிற்குள் 12-சென்டிமீட்டர்கள் வரை உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வார இறுதிநாட்களில் பலத்த மழை பெய்தால் 2008-ல் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பெருக்கை விட மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்படுமென கருதப்படுகின்றது. இதன் காரணமாக தொண்டர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் முக்கிய பகுதிகளில் மணல் மூட்டைகளை அணைகளாக கட்ட உதவுவதற்காக கையுறைகளையும் ரபர் பூட்சுகளையும் அணிந்து வரும்படியும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







