மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் வாரணாசியில் நாளை பிரசாரம்
- சீமாந்திரா வளர்ச்சிக்கு உதவினால் பா.ஜனதாவுக்கு ஆதரவு: ஜெகன்மோகன் ரெட்டி
- காங்கிரஸ் முதல்வர்களுக்கு சோனியாகாந்தி எச்சரிக்கை
- கேரளாவில் பாரதீய ஜனதா கால்ஊன்ற முடியாது: உம்மன்சாண்டி பேட்டி
- கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆதரித்து நரேந்திர மோடி பிரசாரம்
- நாட்டில் நரேந்திர மோடி அலை இல்லை: முரளி மனோகர் ஜோஷி
- மோடியின் மனைவிக்கு பாரத ரத்னா விருது: அசாம் முதல்வர் கிண்டல்
- ஒரே நேரத்தில் 100 நகரங்களில் மோடி பிரசாரம்
- இந்திய அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, பாபா சாகேப் அம்பேத்கர்
- அமேதி தொகுதியில் பிரியங்கா, நாளை தேர்தல் பிரசாரம்
- ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் வெட்டிக் கொலை
- புதுமாப்பிள்ளை போல பிரதமராவதற்கு அவசரப்படும் மோடி: சரத் பவார் காட்டம்
- தேர்தல் ஆணையம் மத்திய அரசின் செல்வாக்கில் இயங்குகிறது: அசாம் கான்
- மோடி பிரதமரான பிறகு உ.பி. அரசு வீழ்ச்சியடையும்: உமாபாரதி
- பா.ஜ.க. ஊடக விளம்பரம் மூலம் மோடி அலையை உருவாக்குகிறது: ராஜீவ் சுக்லா
- சஞ்சய பாருவின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது: பிரதமர் அலுவலகம் மறுப்பு
- தேர்தலுக்கு பின் கட்சி வழங்கும் எப்பொறுப்பையும் ஏற்க தயார்: அத்வானி
- காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 2 போலீசார் பலி
- ஐக்கிய முற்போக்கு கூட்டணி ரிமோட் கண்ட்ரோலால் இயக்கப்படுகிறது: மோடி பேச்சு
- பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து கற்பனையானது: மம்தா
| மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் வாரணாசியில் நாளை பிரசாரம் Posted: 13 Apr 2014 10:54 PM PDT பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் வதோதரா, உ.பி.யில் உள்ள வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த இரு தொகுதியிலும் காங்கிரஸ் தவிர ஆம்ஆத்மி கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. வாரணாசி தொகுதியில் ஆம்ஆத்மி வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக நரேந்திர மோடியுடன் தேர்தல் களத்தில் மோதுகிறார். நரேந்திர மோடியை தேர்தலில் வீழ்த்துவேன் என்று ஆவேசமாக அறிவித்து இருந்த அவர் ஏற்கனவே வாரணாசி சென்று தொகுதி மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். முன்னதாக கங்கையில் புனித நீராடி பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்று சாமி கும்பிட்டார். |
| சீமாந்திரா வளர்ச்சிக்கு உதவினால் பா.ஜனதாவுக்கு ஆதரவு: ஜெகன்மோகன் ரெட்டி Posted: 13 Apr 2014 10:37 PM PDT சீமாந்திரா வளர்ச்சிக்கு உதவினால் மத்தியில் நரேந்திர மோடி உள்பட எந்த அரசையும் ஆதரிக்க தயார் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறினார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ஆந்திர மாநில வளர்ச்சிக்காக மத்தியில் யார் உதவி செய்வதாக இருந்தாலும் அந்த அரசுக்கு ஆதரவு அளிக்க ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் |
| காங்கிரஸ் முதல்வர்களுக்கு சோனியாகாந்தி எச்சரிக்கை Posted: 13 Apr 2014 10:21 PM PDT காங்கிரஸ் கட்சி இந்தியாவின் 11 மாநிலங்களில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்த 11 மாநிலங்களிலும் 151 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்கள்கூட கிடைக்காது என்று கருத்துகணிப்புகள் கூறியுள்ளன. இதை மாற்றி காட்டவேண்டும் என்று சோனியா விரும்புகிறார். 11 மாநிலங்களில் உள்ள 151 தொகுதிகளில் கணிசமான இடங்களைப் பிடித்தாலே போதும், ஓரளவு கவுரவமான இடங்களை கைப்பற்றி விடலாம் என்று சோனியா கருதுகிறார். இதை அமல்படுத்த அவர் தன் ஆலோசகர்கள் மூலம் 11 மாநில காங்கிரஸ் முதல்– மந்திரிகளுக்கும் ஒரு ரகசிய உத்தரவை எச்சரிக்கையாக விடுத்துள்ளார். |
| கேரளாவில் பாரதீய ஜனதா கால்ஊன்ற முடியாது: உம்மன்சாண்டி பேட்டி Posted: 13 Apr 2014 09:11 PM PDT கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா என்று இந்த முறை மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஓட்டுப்பதிவு நாளன்று மோட்டார் சைக்கிளில் சென்ற கோவளத்தை சேர்ந்த 2 காங்கிரஸ் தொண்டர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள். இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் வீட்டுக்கு கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி சென்று ஆறுதல் கூறினார். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:– |
| கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆதரித்து நரேந்திர மோடி பிரசாரம் Posted: 13 Apr 2014 09:00 PM PDT கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் நடந்த பிரசார கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்று எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பிரசார கூட்டத்தில் பேசிய பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு பட்டுக்கூடு மற்றும் பல்வேறு வகை |
| நாட்டில் நரேந்திர மோடி அலை இல்லை: முரளி மனோகர் ஜோஷி Posted: 13 Apr 2014 08:03 PM PDT நாட்டில் பாரதீய ஜனதா அலைதான் வீசுகிறது என்றும், நரேந்திர மோடி அலை இல்லை என்றும் முரளி மனோகர் ஜோஷி கூறி உள்ளார். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு அக்கட்சியில் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி. முன்னாள் மத்திய மந்திரியான இவர், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் |
| மோடியின் மனைவிக்கு பாரத ரத்னா விருது: அசாம் முதல்வர் கிண்டல் Posted: 13 Apr 2014 03:32 PM PDT பாராளுமன்ற தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடி கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தன்னைப் பற்றிய சுய விபரத்தில் திருமணம் ஆனவர் என்றும், தனது மனைவி பெயர் யசோதா பென் எனவும் குறிப்பிட்டிருந்தார். தனது திருமணம் குறித்து முதன்முதலாக நரேந்திரமோடி தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை தான் திருமணம் ஆனவர் என்றோ, தனது மனைவி பெயர் பற்றியோ மோடி பகிரங்கமாக அறிவித்தது இல்லை. |
| ஒரே நேரத்தில் 100 நகரங்களில் மோடி பிரசாரம் Posted: 13 Apr 2014 03:15 PM PDT குஜராத் மாநில முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திரமோடி, தனது பிரசாரத்துக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் முப்பரிமாண (3டி) வீடியோ லிங்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இன்று பிரசாரம் செய்கிறார். இதன்மூலம், ஒரே நேரத்தில் 100 நகரங்களில் அவரது பிரசாரத்தை |
| இந்திய அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, பாபா சாகேப் அம்பேத்கர் Posted: 13 Apr 2014 02:48 PM PDT பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14-ம் தேதி ராம்ஜி-பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒருமுறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்த போது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போல், வண்டியை கீழே கவிழ்த்து கொட்டிய கொடுமை நிகழ்ந்தது. 1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் |
| அமேதி தொகுதியில் பிரியங்கா, நாளை தேர்தல் பிரசாரம் Posted: 13 Apr 2014 01:18 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே, பிரியங்கா தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தனது சகோதரரான ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்கள் அவர் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்த பிரசாரத்தின் போது, தொகுதியின் 16 பிளாக்குகளிலும் வாக்காளர்களை சந்திக்கும் பிரியங்கா, ராகுலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். மேலும் பிரசார பொதுக்கூட்டங்கள், காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் ஆகியவற்றிலும் அவர் கலந்து கொள்வார் என, அமேதி தொகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளர் சந்திரகாந்த் துபே தெரிவித்தார். |
| ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் வெட்டிக் கொலை Posted: 13 Apr 2014 12:23 PM PDT ஆந்திர மாநிலத்தில் உள்ள தெனாலி நகர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் மடிசெட்டி கிருஷ்ணா(30) நேற்று தெனாலியில் உள்ள பஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை பற்றிய தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு |
| புதுமாப்பிள்ளை போல பிரதமராவதற்கு அவசரப்படும் மோடி: சரத் பவார் காட்டம் Posted: 13 Apr 2014 11:16 AM PDT பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராவதற்கு 'புதுமாப்பிள்ளை' போல அவசரப்படுகிறார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இன்று விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் அருகே காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயண் ரானேயின் மகன் நிலேஷ் ரானேயை ஆதரித்து பிரசாரம் செய்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியதாவது:- புதுமாப்பிள்ளை எப்படி திருமணம் செய்து கொள்ள அவசரப்படுவாரோ அதைப் போன்று பிரதமராவதற்கு நரேந்திர மோடி அவசரப்படுகிறார். குஜராத்தில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர்கள் பலர் மோடியை விட |
| தேர்தல் ஆணையம் மத்திய அரசின் செல்வாக்கில் இயங்குகிறது: அசாம் கான் Posted: 13 Apr 2014 09:56 AM PDT உத்தர பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு பொதுக் கூட்டங்கள், பிரசாரங்களில் கடுமையான விமர்சனங்கள், கருத்துக்கள் அடங்கிய பேச்சுக்களுக்காக பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, உத்தர பிரதேச மந்திரி அசாம் கான் மீது நடவடிக்கை எடுத்துள்ள தேர்தல் ஆணையம் அவர்கள் இருவருக்கும் பொதுக்கூட்டம் மற்றும் பிரசாரம் நடத்த தடை விதித்துள்ளது. மேலும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
| மோடி பிரதமரான பிறகு உ.பி. அரசு வீழ்ச்சியடையும்: உமாபாரதி Posted: 13 Apr 2014 09:02 AM PDT ''நரேந்திர மோடி பிரதமரான பிறகு உத்தரபிரதேச அரசு வீழ்ச்சியடைந்து விடும்'' என பா.ஜ.க. தலைவர் உமா பாரதி இன்று கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உமாபாரதி கூறுகையில், ''உத்தர பிரதேச மாநில மக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அகிலேஷ் யாதவ் |
| பா.ஜ.க. ஊடக விளம்பரம் மூலம் மோடி அலையை உருவாக்குகிறது: ராஜீவ் சுக்லா Posted: 13 Apr 2014 06:55 AM PDT ''நாட்டில் எங்கேயும் 'மோடி அலை' இல்லை. பா.ஜ.க. ஊடகங்களின் விளம்பரம் மூலம் 'மோடி அலை' இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறது.'' என காங்கிரஸ் தலைவரும், மத்திய மந்திரியுமான ராஜீவ் சுக்லா இன்று கூறியுள்ளார். |
| சஞ்சய பாருவின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது: பிரதமர் அலுவலகம் மறுப்பு Posted: 13 Apr 2014 06:16 AM PDT பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பாரு, 'தற்செயலான பிரதமர் - மன்மோகன் சிங் செய்ததும், செய்யாததும்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அவர் அந்த புத்தகத்தில் பிரதமர் பற்றி குறிப்பிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. |
| தேர்தலுக்கு பின் கட்சி வழங்கும் எப்பொறுப்பையும் ஏற்க தயார்: அத்வானி Posted: 13 Apr 2014 05:53 AM PDT பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி தனது தொகுதியான காந்திநகரில் நடந்த பேரணி ஒன்றில் இன்று கலந்துகொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர் கூறியதாவது; |
| காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 2 போலீசார் பலி Posted: 13 Apr 2014 05:45 AM PDT காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் இளைஞரணி தலைவராக உள்ள யாவர் மசூதி என்பவரது வீட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் பலியானார்கள். புல்வாமாவில் உள்ள மசூதியின் வீட்டிற்குள் புகுந்து இரு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் அப்துல் ஹமீது மற்றும் காவலர் வினோத் குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தார்கள். இவர்களை |
| ஐக்கிய முற்போக்கு கூட்டணி ரிமோட் கண்ட்ரோலால் இயக்கப்படுகிறது: மோடி பேச்சு Posted: 13 Apr 2014 05:08 AM PDT பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- ''காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ரிமோட் கண்ட்ரோலால் இயக்கப்படுகிறது. இம்முறை காங்கிரசால் பல்வேறு |
| பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து கற்பனையானது: மம்தா Posted: 13 Apr 2014 04:33 AM PDT தேர்தல் கருத்துக் கணிப்புகள் பிரதமர் பதவிக்கான போட்டியில் நரேந்திர மோடி முன்னிலையில் இருப்பதாக கூறி வரும் நிலையில் ''பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து கற்பனையானது, அரசியலமைப்பில் அது போன்ற ஒன்றே கிடையாது'' என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |