Tamil News | Online Tamil News |
- முறையாக வேட்பு மனு தாக்கல் செய்யாத பா.ஜ.,: அசட்டையால் நீலகிரி வேட்பாளர் மனு தள்ளுபடி
- எதிர்க்கட்சியினர் குழப்பத்தை ஏற்படுத்தலாம்: தே.மு.தி.க.,வினருக்கு விஜயகாந்த் எச்சரிக்கை
- தேர்தல் பணியில் கட்சியினர் தொய்வு : ரகசிய கூட்டங்களுக்கு ஜெயலலிதா உத்தரவு
- பா.ஜ., மதவாத கட்சி: ஸ்டாலின் 'அறிவிப்பு'
- 'தீப்பொறி' ஆறுமுகம் போல் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்
- "தேசிய பாதுகாப்பில் இனி சமரசம் இல்லை' : பா.ஜ. தேர்தல் அறிக்கையில் தகவல்
- ஒரே பாரதம் உன்னத பாரதம்
- அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? பா.ஜ. தேர்தல் அறிக்கையில் தகவல்
- மூன்று மாதத்தில் ரூ.50 கோடி சம்பாதித்தது எப்படி? : சோனியா மருமகனுக்கு நரேந்திர மோடி கேள்வி
- முக்கிய பிரபலங்களின் வருமான வரி கணக்கு வேவு பார்ப்பு: மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்
- மதச்சார்பற்ற அரசுக்கு 'கை' கொடுக்க தயார்: சேலம் கூட்டத்தில் கருணாநிதி அறிவிப்பு
| முறையாக வேட்பு மனு தாக்கல் செய்யாத பா.ஜ.,: அசட்டையால் நீலகிரி வேட்பாளர் மனு தள்ளுபடி Posted: நீலகிரி லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர், குருமூர்த்தியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முறையாக மனு தாக்கல் செய்யாமல், அசட்டையாக நடந்து கொண்டதே, மனு தள்ளுபடியானதற்கு காரணம் என, கூறப்படுகிறது. இதனால், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி (தனி) லோக்சபா தொகுதியில் போட்டியிட, கோபால கிருஷ்ணன் (அ.தி.மு.க.,), ராம்குமார் (அ.தி.மு.க., மாற்று), ராஜா (தி.மு.க.,), குருமூர்த்தி (பா.ஜ.,), அன்பரசு (பா.ஜ., மாற்று), காந்தி (காங்.,) ராணி (ஆம் ஆத்மி), ரமேஷ் பாபு (ஆம் ஆத்மி மாற்று) உட்பட, 16 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் நேற்று ... |
| எதிர்க்கட்சியினர் குழப்பத்தை ஏற்படுத்தலாம்: தே.மு.தி.க.,வினருக்கு விஜயகாந்த் எச்சரிக்கை Posted: ""ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும், நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, கூட்டணி கட்சிகள் இடையே பிரச்னையை உருவாக்கலாம். எனவே, அதை முறியடித்து, தே.ஜ., கூட்டணி வெற்றி அடைய செய்ய வேண்டும்,'' என, தே.மு.தி.க., தொண்டர்களுக்கு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதியுள்ள கடித விவரம்:நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக, லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் இணைந்துள்ளோம். கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி உள்ளோம். நிபந்தனை இல்லாமல்...:இந்தத் தேர்தலில், தே.மு.தி.க., ... |
| தேர்தல் பணியில் கட்சியினர் தொய்வு : ரகசிய கூட்டங்களுக்கு ஜெயலலிதா உத்தரவு Posted: சென்னை : அ.தி.மு.க.,வினரை உற்சாகப்படுத்தவும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தவும், நால்வர் அணி அமைச்சர்களில் மூவர், தொகுதி வாரியாக, நிர்வாகிகளை ரகசியமாக, சந்தித்து பேசி வருகின்றனர்.லோக்சபா தேர்தலில், முதன் முறையாக, அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அனைத்து கட்சிகளுக்கும் முன், அ.தி.மு.க., சார்பில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது; தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து, முடிவெடுப்பதற்கு முன், மார்ச் 3ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா, பிரசாரத்தை துவக்கினார்.தொகுதி வாரியாக...அனைத்து கட்சிகளுக்கும் ... |
| பா.ஜ., மதவாத கட்சி: ஸ்டாலின் 'அறிவிப்பு' Posted: ''பா.ஜ., மதவாத கட்சி என்பதால், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றும் அறிவிப்பு இடம் பெறவில்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.சென்னை அறிவாலயத்தில், நேற்று, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தி.மு.க.,வில் இணைந்தனர். அப்போது, ஸ்டாலின் அளித்த பேட்டி: பா.ஜ., தேர்தல் அறிக்கையில், 'ராமர் கோவில் கட்டுவோம்' என, அறிவித்திருப்பது பற்றி? அதனால் தான் கருணாநிதி, மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.பா.ஜ., தேர்தல் ... |
| 'தீப்பொறி' ஆறுமுகம் போல் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் Posted: புதுடில்லி: ''யார் மகளையும் நான் இழுத்துச் செல்லவில்லை,'' என, மிக மோசமாக பேசிய, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.டில்லியில் உள்ள சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அஷுதோஷுக்கு ஆதரவாக, நேற்று முன்தினம் ஓட்டு சேகரித்த கெஜ்ரிவால், பிரசார கூட்டம் ஒன்றில் பேசும் போது, ''டில்லியில் நான், 49 நாட்கள் முதல்வராக இருந்து விட்டு ஓடிவிட்டேன் என, கூறுகின்றனர். யாருடைய மகளையும் இழுத்துக் கொண்டா ஓடிவிட்டேன்... இல்லையே! இந்தியாவில் தானே இருக்கிறேன். பாகிஸ்தானுக்கு ... |
| "தேசிய பாதுகாப்பில் இனி சமரசம் இல்லை' : பா.ஜ. தேர்தல் அறிக்கையில் தகவல் Posted: நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஏராளமான விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தேசிய பாதுகாப்பில் இனி சமரசம் இல்லை':பா.ஜ., தேர்தல் அறிக்கையில் தேசிய பாதுகாப்பு குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:தேசிய பாதுகாப்பு என்பது, எல்லைகளை மட்டும் பாதுகாப்பது அல்ல. ராணுவ பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, இணைய தள பாதுகாப்பு, எரிசக்தி, உணவு, தண்ணீர் மற்றும் சுகாதார பாதுகாப்பு என, அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியது. கடந்த காலங்களில், பல அதிகார மையங்கள் இருந்ததால், தேசிய ... |
| Posted: ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அனைத்து கட்சிகளும் அறிக்கை வெளியிட்ட பின், முதல் கட்ட தேர்தல் துவங்கிய பின் வெளியிடப்பட்ட அறிக்கை, "ஒரே பாரதம், உன்னதமான பாரதம்' மற்றும் "அனைவருக்கும் அரவணைப்பு, அனைவருக்கும் முன்னேற்றம்' என்ற, கோஷங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, ஊழல், அரசு சேவைகள் கிடைப்பதில் மக்களுக்கு உள்ள சிரமங்கள், கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்களை அமல்படுத்துவதில் அரசு இயந்திரங்களின் மெத்தன போக்கு, அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்துவருவது ... |
| அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? பா.ஜ. தேர்தல் அறிக்கையில் தகவல் Posted: பா.ஜ., தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் அரசின் செயல்பாடுகள், அணுகுமுறை, மின்னணு நிர்வாகம் உள்ளிட்டவை பற்றி கூறப்பட்டுள்ளது. அதில்,அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?அரசின் அனைத்து திட்டங்களும் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து, தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். சமூக மற்றும் சுற்றுச்சூழல் தணிக்கைகளும் கட்டாயமாக்கப்படும்.நடைமுறையில் இல்லாத அல்லது நடைமுறைக்கு ஒவ்வாத சட்டங்கள், விதிகள் மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் நடைமுறைகள் மாற்றி அமைக்கப்படும்.தரமான மற்றும் பலன் தரக்கூடிய பொதுச்சேவைகள் மூலமே, ... |
| மூன்று மாதத்தில் ரூ.50 கோடி சம்பாதித்தது எப்படி? : சோனியா மருமகனுக்கு நரேந்திர மோடி கேள்வி Posted: சண்டிகார்: ""சோனியாவும், அவர் குடும்பத்தினரும், அரியானா விவசாயிகளிடம், நிலத்தை அபகரித்து, ஏஜென்ட் மூலமாக, அந்த நிலங்களை விற்பனை செய்கின்றனர். இதன் மூலம், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, மூன்றே மாதங்களில், 50 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இது எப்படி சாத்தியம் என, அவர் விளக்குவாரா?'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.அரியானா மாநிலத்தில், முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஒரே கட்டமாக, வரும், 10ம் தேதி, 10 தொகுதிகளுக்கு, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, ... |
| முக்கிய பிரபலங்களின் வருமான வரி கணக்கு வேவு பார்ப்பு: மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் Posted: புதுடில்லி: முக்கிய பிரபலங்களின் ஆன்-லைன் மூலம் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை, ஒரு சிலர் அனுமதியின்றி வேவு பார்த்தது உண்மை தான் என, மத்திய நிதியமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.இது குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள விவரம்:வருமான வரித் துறையின் வலைதளம் வாயிலாக சிலர் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை, அவர்களின் அனுமதியின்றி, வேறு சிலர் பார்வையிட்டுள்ளனர். இதில், வலைதள பாதுகாப்பு அரணை உடைத்து, தகவல்களை கொள்ளையடிக்கும், "ஹாக்கர்கள்' (கம்ப்யூட்டரில் நாசவேலை செய்வோர்) கைவரிசை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ... |
| மதச்சார்பற்ற அரசுக்கு 'கை' கொடுக்க தயார்: சேலம் கூட்டத்தில் கருணாநிதி அறிவிப்பு Posted: சேலம்: ''எதிர்காலத்தில், நாடு போகிற போக்கில், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதை தான் விரும்புகிறேன். மதச்சார்பற்ற அரசுக்கு யார் கை கொடுத்தாலும், அவர்களிடம், 'கை' குலுக்கி வரவேற்க தயாராக இருக்கிறேன்,'' என்று சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.சேலம், போஸ் மைதானத் தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:என்னுடைய கலை வாழ்க்கை துவங்கியது, கோவைக்கு அடுத்தபடியாக, சேலத்தில் தான். 'மந்திரிகுமாரி' படத்துக்கு திரைக்கதை எழுதியது இங்கு தான். என்னுடைய நண்பர் எம்.ஜி.ஆரை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 08,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |