ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இந்த ஜென்மம் போதுமே!
- பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பயணம்
- மகளிர் ஏர் பிஸ்டல் உலகத் தரவரிசை: இந்தியாவின் ஹீனா சித்து முதலிடம்
- விளம்பரமே வெல்லும்...
- போடுங்கம்மா ஓட்டு...
- இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !
- ஹைக்கூ ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !
- கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?
- நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்தால் எலும்பு நோய்: ஆய்வில் தகவல் !
- கவிஞர் எழிலவன் கவிதைகள்
- அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை
- வீட்டிற்குள்...
- இந்த வார நகைச்சுவை _ தொடர் பதிவு
- 3000 மதிப்பீடுகள் கடந்த கிருஷ்ணாம்மா...
- வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்
- ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்., போதும்!
- புது நாத்து….!!!
- சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை
- கோடையைச் சமாளிக்க...
- தெரிஞ்சுக்கோங்க!..............தொடர் பதிவு ! குளிர்ந்த காற்று ஏ.சி.யில் இருந்து எப்படி வெளிவருகிறது?
- பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்!
- நகுலன் கவிதைகள்
- இசுன் புறப்பாடு { ஜென் கதை }
- மறக்காத ஒன்று
- ஆண்டிராய்டு இயங்குதளத்தில் தொலைக்காட்சி – கூகுள் முயற்சி
- உலகச் செய்திகள்!
- நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
- பெண்களை மதியுங்கள்!
- யார் இவர்? - நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை !
- இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீரழித்த சிதம்பரம்
- படித்ததில் பிடித்தது :) - மனித நேயம் பெருகட்டுமே!
- வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!
- தேர்(தல்) திருவிழா!
- தொடத் தொடத் தொல்காப்பியம் (231)
- இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்)
- T20 இலங்கை உலக சாம்பியன்!
- கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது
- ந.க.துறைவன் புதுக் கவிதைகள்
- பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்
- தேர்{ஆறு}தல் கவிதைகள்
| Posted: 07 Apr 2014 01:19 PM PDT http://kaviyinkavi.blogspot.in/2014/03/blog-post.html#links இந்த ஜென்மம் போதுமே!!! தீ மூட்டும் காதல்வத்திக்குச்சி, நீதானே! – அது நீ தானே! என்னை நனைக்கும் காதல் மழையும், நீதானே! – அது நீ தானே! உன்னை நான் தேடுகிறேன்! என்னை நான் தேடுகிறேன்! பசலையும் என்னைத் தீண்டுதே அன்பே! என் அன்பே!!! காதல் விளையாட்டில் சேர்ந்தே தானே – நாம் தொலைந்து போனோமே! - அங்கே காதல் சடுகுடு நாமும் ஆடினோமே! கண்ணில் உன்னை சுமந்தேனே! உன் தோளில் நானும் சாய்ந்தேனே! ஜென்மம் போதுமே- எனக்கு இந்த ஜென்மம் ... |
| பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பயணம் Posted: 07 Apr 2014 11:07 AM PDT பௌர்ணமியின்போது பால் போன்ற வெளிச்சத்தை அள்ளித் தரும் நிலாவை நம் எல்லோருக்கும் மிகப் பிடிக்கும். பூமிக்கும் நிலாவுக்கும் என்ன உறவு? பூமியைச் சுற்றிவரும் நிலா ஒரு துணைக்கோள். இயற்கையாக அமைந்த துணைக்கோள். இதே மாதிரியான துணைக்கோளை நாமே உருவாக்கி பூமியைச் சுற்றவைத்தால் என்ன என விஞ்ஞானிகள் யோசித்தனர். அதன் விளைவால் செயற்கைக் கோளை உருவாக்கினர். இப்படிச் செயற்கைக் கோளை உருவாக்கி அதை ஏன் பூமியைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட வட்டப் பாதையில் சுற்றவைக்க வேண்டும்? காரணம் இருக்கிறது. பூமி தொடர்பான ஆராய்ச்சிகளை ... |
| மகளிர் ஏர் பிஸ்டல் உலகத் தரவரிசை: இந்தியாவின் ஹீனா சித்து முதலிடம் Posted: 07 Apr 2014 10:46 AM PDT இந்தியாவின் முன்னணி துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்றினார். பஞ்சாப்பின் லூதியானாவை சேர்ந்த ஹீனா சித்து (24), உலகக் கோப்பை துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப் (சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு) உலகக் கோப்பை போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அதன் மூலம், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் ... |
| Posted: 07 Apr 2014 10:24 AM PDT விஞ்ஞான யுகம்! இதிலே விரல்களுக்கு தங்கமுலாம் பூசிக்கொண்டு விற்றால்தான் பொருள்களுக்கு விலை போகும் - சோப்புக்கும் சீப்புக்கும் சொட்டு நீலம் தனக்கும் வாய்ப் பூக்கள் தூவி வைத்தால் வரவேற்பு அதிகரிக்கும் - சொகுசாகக் கண்சிமிட்டும் சுவரொட்டி விளம்பரங்கள் திட்டமிட்டு தெருக்களிலே கட் அவுட் பல ரகங்கள - வானொலியில் வாயுரைகள் வழியும் திரை நுரைகள் அலைவரிசைச் சலதோஷம் உலவி வரும் பல காதம் - ஒளிக்காட்சி ஊடகங்கள் ஒலி நாடா ஊர்வலங்கள் பளிச்சிடும் மின் விளக்குப் பலகை மேற் பந்தயங்கள் - ஆடை ... |
| Posted: 07 Apr 2014 10:22 AM PDT முன்பெல்லாம் தேதி அறிவிக்கப்பட்டதுமே திருவிழாக்கோலம் தீயும் தென்றலும் சேர்ந்தே பிடிக்கும். தார்ச்சட்டியுடன் ரோடு பெருக்கி சின்னம் வரைந்த நடுநிசி காலம்.வச்சிரம் கலந்து பசை காய்ச்சி எடுத்துக்கொண்டு சுவரொட்டிகள் ஒட்டிய குதூகலம். சொற்சிலம்பம் ஆடும் சுவாரசியத் தமிழ் துள்ளும் மேடை மேதமைகளை வியந்து ரசித்துக் களித்த நாட்கள் இப்போதெல்லாம் எங்கும் காணவியலவில்லை. திசையும் தெரிவும் மாறிவிட்டாலும் இப்போதும்கூட "வாக்காளப் பெருமக்களே…" வாகனக் குரல் கேட்டதும் வரும் அந்தப் பழைய ஆனந்தம் இன்னும் எங்கோ ... |
| இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! Posted: 07 Apr 2014 09:59 AM PDT இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி ! மட்டை விளையாட்டில் இலங்கையோடு ! மட்டமாக விளையாடித் தோற்றதற்கு நன்றி ! தோல்வி உண்மையா ? பொய்யா ? என்பது ! தோற்றவர்கள் மட்டும் அறிந்த உண்மை ! ஒருவேளை பந்தையத்திற்காகவும் தோற்று இருக்கலாம் ! ஒருவேளை பணத்திற்காகவும் தோற்று இருக்கலாம் ! பார்வையாளர்களை முட்டாளாக்கி பிடித்த ! பந்தை தரையில் விட்டு தோற்றமைக்கு நன்றி ! ஒரு வேளை இந்தியா வென்று இருந்தால் ! இலங்கை விளையாட்டில் தோற்று இருந்தால் ! இஞ்சி தின்ன குரங்காக சிங்களன் மாறிடுவான் ... |
| ஹைக்கூ ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி ! Posted: 07 Apr 2014 09:12 AM PDT ஹைக்கூ ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி ! காரணமாகின்றன நூலும் வாலும் பட்டம் பறக்க ! கட்டாயமாக்குங்கள் எதிர்காலம் செழிக்கும் மழை நீர் சேகரிப்பு ! குழந்தைக்கு ரணம் பெற்றோருக்குப் பணம் காதணி விழா ! காதலுக்கான மலரானதில் மகிழ்ச்சி ரோஜா ! தண்ணீர் இல்லை குப்பைகள் உள்ளன கிணறு ? உணரவில்லை மாட்டின் ரணம் புண் கொத்தும் காகம் ! இன்று விடுமுறை திருடர்களுக்கு பௌர்ணமி ! வரப்புச் சண்டை சகோதரர்களிடையே வருந்தியது வரப்பு ! அறியவில்லை உழைக்காமல் உண்பது ... |
| கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா? Posted: 07 Apr 2014 08:53 AM PDT மனிதர்களில் சிலருக்கு ஏற்படும் நட் அலர்ஜி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைத்துவகையான கொட்டைகளையும், பருப்புகளையும் சாப்பிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஒவ்வாமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள். மனிதர்களில் சிலருக்கு இந்தமாதிரியான கொட்டைகளையும் பருப்புகளையும் ... |
| நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்தால் எலும்பு நோய்: ஆய்வில் தகவல் ! Posted: 07 Apr 2014 08:49 AM PDT கணினியில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இதனால், ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்புமுறிவு போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் நார்வே ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சிறுவர்கள் ஓடி, ஆடி விளையாடுவதைவிட கம்ப்யூட்டரில் விளையாடுவது இன்று அதிகரித்துள்ளது. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும். உடலில் எலும்பிலிருக்கும் எலும்புத் தாது குறையும்போது, எலும்புகள் வலுவிழந்து முறிய நேரிடும். உட்கார்ந்தே ... |
| Posted: 07 Apr 2014 08:48 AM PDT - செவ்வானம் - இருளின் சுரண்டலை எதிர்த்து வைகறைத் தொழிலாளர் நடத்தும் செங்கொடிப் போராட்டம்! - --------------------------------- |
| அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை Posted: 07 Apr 2014 08:40 AM PDT இத்தனை காலங்களில், அப்பாவின் மீது ராமுக்கு மிஞ்சி இருந்தது, வெறுப்பு... வெறுப்பு... வெறுப்பு மட்டும்தான். ராமுக்கு அவர் மீது இருந்த அதே வெறுப்பு, அவருக்கும் அவன் மீதும், அவன் அம்மாவின் மீதும் இருந்தது. அம்மா, ஒரு பூஞ்சை; சிறு வயதிலிருந்தே உழைக்கப் பழகியவள். கண்களைச் சுற்றி எப்போதும் கருவளையங்களும், இந்த ஜென்மத்தில் துடைத்தெடுக்க முடியாத தனிமை உணர்ச்சியும் அவள் முகத்தில் நிறைந்திருக்கும். தனிமை அடர்ந்த முகம், சக மனிதனுக்கு எப்போதும் அந்நியமான ஒன்றுதான். அப்பா, அவளுடன் நடந்த திருமணத்தை ஒரு ... |
| Posted: 07 Apr 2014 08:17 AM PDT அரிதாய் வீட்டிற்குள் இருக்கிறேன் வீட்டிற்குள்ளிருக்கும் எம்மிடம் எப்பொழுதும் வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டிருக்கும் எங்கள் நிலை கொஞ்சமாச்சும் நினைப்பிங்களா? ஆதங்கமாய் கேட்கும் இல்லாளிடம் உனக்கென்ன எவ்வளவு பத்திரமாய் சகலமும் அருகிருக்க என்னைச்சொல் அலைந்து திரிந்து போதும் போதும் என்றாகிறது சொல்லிக்கொண்டாலும் வெறும் ஆளாய் வீட்டிற்குள் மனம் முழுதும் வெளியில் வலம் வர… |
| இந்த வார நகைச்சுவை _ தொடர் பதிவு Posted: 07 Apr 2014 07:56 AM PDT கண்கள் பேசும் வார்த்தகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் - கண்கள் பேசும் வார்த்தகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள், உதாரணத்துக்கு…. - நீங்க ஒரு பொண்ணைப் பார்த்து சிரிக்கிறீங்க. அப்போ… - அந்தப் பொண்ணு வானத்தைப் பார்த்தா, இந்த மூஞ்சிக்கு லவ் ஒண்ணுதான் கொறைச்சல்'னு நினைக்கிறான்னு அர்த்தம் - காலைப் பார்த்தாள்னா, உங்களுக்கு செருப்படி நிச்சயம் - சைடுல பார்த்தா – அவ அப்பன் வெப்பனோட வரான்னு அர்த்தம் - உங்களைப் பார்த்து சிரிச்சுட்டா – உங்களுக்கு குவார்ட்டர் கன்பார்ம்..! - ————————– >பிரியாபத்மா (முக ... |
| 3000 மதிப்பீடுகள் கடந்த கிருஷ்ணாம்மா... Posted: 07 Apr 2014 07:23 AM PDT 3000 மதிப்பீடுகள் கடந்த நம் ஈகரை சமையல் ராணி கிருஷ்ணாம்மாவை வாழ்த்துவோம் வாங்க மென்மேலும் பல்லாயிரம் மதிப்பீடுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா |
| Posted: 07 Apr 2014 07:10 AM PDT இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம். வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். வியட்னாமில் ... |
| Posted: 07 Apr 2014 07:01 AM PDT ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்., போதும்! வாக்காளர்கள், தாங்கள் ஓட்டுப்போட செல்ல வேண்டிய, ஓட்டுச்சாவடி எது என்பதை தெரிந்து கொள்ள, தேர்தல் கமிஷன் தரப்பில் பிரத்யேகமாக மொபைல் போன் சேவை துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருப்பூரில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு. இதன்படி, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் போதும்; ஒரு நிமிடத்தில் ஓட்டுச்சாவடி விவரம் அளிக்கப்படுகிறது. நன்றி தினமலர் |
| Posted: 07 Apr 2014 06:58 AM PDT - நனைந்து மிதந்து வந்து கண்ணில் ஓரு வெளிச்சம் தந்தாயோ…!!! பூட்டிய கல் இதயத்தில் உன்னிதளால் தான் வஞ்சம் தீர்த்தாயோ…!!! நேர்த்திக் கடன்கள் தீர்க்கத்தான் என் பக்கம் மலரானாயோ…!!! உதயம் ஓய்ந்ததில்லை உன் வரவு காணாமல் தேய்ந்ததில்லை…!!! தினம் ஒரு மாறுதல் அவளால் வந்த ஆறுதல்…!!! வயக்காட்டில் புதுத் தளிர் போல் என்ன மினுமினுப்பு…!!! திமிர் நடையும் திகட்டாத வதனமும் உனக்கு மட்டும் சொந்தமானதோ…!! ஊரே கும்மி அடிக்கின்றதே உன் வரவைக்கண்டு ஊர்கோலமாய்…!!! என் வீட்டுக்கதவுகள் உன் வரவுக்காக ஏங்கி ... |
| Posted: 07 Apr 2014 06:50 AM PDT சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை "சார்! ரொம்ப நாளா உங்களை ஒண்ணு கேக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்" "என்ன அது.. எதுவா இருந்தாலும் கேளுங்க..." " சமீபகாலமா நீங்க சட்டையே போடுறதில்லையே... வெறும் வேட்டியோட வெளியில திரியறீங்களே...அது ஏன்?" "சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை" "மகான்கள் மாதிரி பேசுறீங்களே..." "உண்மை தான்... ஒரு ராஜா எப்பவும் துன்பப்பட்டுக்கிட்டே இருந்தாராம். ஒரு வேதாந்திரியைக் கூப்பிட்டு, என் துன்பம் தீர என்ன வழின்னு கேட்டாராம். அதுக்கு அந்த வேதாந்திரி ... |
| Posted: 07 Apr 2014 06:39 AM PDT * மோரில் லெசிதீன் எனும் ஒருவகை சத்து இருக்கிறது. இச்சத்து கல்லீரல், சிறுகுடல் முதலியவற்றைப் பலப்படுத்தும். * மூளைச்சூடு உள்ளவர்கள், ரத்தநாளத் துடிப்பு உள்ளவர்கள் மோரை அதிகமாகப் பருக வேண்டும். * வெயிலில் அலையும் சிலருக்கு வியர்வை மற்றும் சிறுநீர் போன்றவை சரியாகப் பிரியாது. இதனால் கீல்பிடிப்பு நோய் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் கோடைகாலம் முடியும்வரை தினமும் மோர் குடித்தால் நோய் விலகும். *பசு மோருடன் தோல் நீக்கிய இஞ்சியைத் துண்டு துண்டுகளாக வெட்டிப்போட்டு அதனுடன் எலுமிச்சம்பழ ரசத்தையும் ... |
| தெரிஞ்சுக்கோங்க!..............தொடர் பதிவு ! குளிர்ந்த காற்று ஏ.சி.யில் இருந்து எப்படி வெளிவருகிறது? Posted: 07 Apr 2014 06:35 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்! Posted: 07 Apr 2014 06:26 AM PDT பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை இன்று டெல்லி யில் வெளியிடப்பட்டது அதன் முக்கிய அமசங்கள் வருமாறு:- * பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும். * நிர்வாகம், நீதித்துறை, பாதுகாப்பு துறைகளில் மறுசீரமைப்பு செய்யப்படும். 'ஒரே இந்தியா-பெரிய இந்தியா' என்ற நிலை ஏற்படுத்தப்படும். * நாட்டில் புதிய வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சிறு பான்மை மக்கள் கல்வி, தொழிலில் முன்னுரிமை பெற வாய்ப்புகள் ஏற்படுத்தப் படும். * அனைவருக்கும் ... |
| Posted: 07 Apr 2014 05:40 AM PDT * வீட்டிற்குள் இருந்தோம் வெளியில் நல்ல மழை் ஒரு சொரூப நிலை. * நேற்று ஒரு கனவு முதல் பேற்றில் சுசீலாவின் கர்ப்பம் அலசிவிட்டதாக இந்த மனதை வைத்துக் கொண்டும் ஒன்றும் செய்ய முடியாது. * ,இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம். * ஆதாரம்:- " நகுலன் கவிதைகள் " என்ற நூலிலிருந்து. |
| Posted: 07 Apr 2014 05:27 AM PDT * இசுன் புறப்பாடு { ஜென் கதை } * ' இசுன் ' ஒரு பெண் துறவி. அறுபது ஆண்டுகள் நிறைந்த பின், மடாலயத்தின் முன்னால் விறகுக் கட்டைகளை அடுக்கி தீமூட்டச் சொன்னாள். மற்ற துறவிகளிடம். அவ்வாறே செய்யப்பட்டது. இசுன் அதன் நடுவில் போய் அமர்ந்து கொண்டாள்.! 'ஐயோ ! இது என்ன ? தீ உங்களைப் பற்றிக் கொண்டதே சுடுமே ! ' என்று கத்தினார்கள் எல்லோரும். " முட்டாள்தனமாய் உளறாதீர்கள் " என்று சொல்லிவிட்டு நெருப்பானாள் இசுன். -ஆதாரம் :- " மீண்டும் ஜென் கதைகள் " – என்ற நூலிலிருந்து. |
| Posted: 07 Apr 2014 04:53 AM PDT மறக்காத ஒன்று 'மறந்து விட்டேன்' 'மறந்து விட்டேன்', "மன்னித்துவிடு" என மருகிடும் மனிதனே, இனிதான செய்தி ஒன்று , இதோ உனக்கு. மறக்காததும் ஒன்றுண்டு, "மறந்து விட்டேன்" என்றிடும் , மறவா மொழி. ரமணியன் |
| ஆண்டிராய்டு இயங்குதளத்தில் தொலைக்காட்சி – கூகுள் முயற்சி Posted: 07 Apr 2014 03:17 AM PDT தொழிநுட்பத்தில் முன்னோடிகளான கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் ஏற்பட்ட தொழில் போட்டிகளினால் நித்தமும் பல புதிய கண்டுபிப்புகளை மக்களுக்கு அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், 'ஆண்டிராய்டு' (Android) மூலம் செல்பேசிகளில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய கூகுள், தற்போது அதனை தொலைக்காட்சிப் பெட்டியில் புகுத்த இருக்கிறது. இது பற்றி கூகுள் வட்டாரங்களில் கசிந்த தகவலின் அடிப்படையில் கூறப்படுவதாவது:- அமேசான் நிறுவனத்தின் Fire Tv க்கு போட்டியாக உருவாக ... |
| Posted: 07 Apr 2014 03:14 AM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்! Posted: 07 Apr 2014 02:54 AM PDT ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள். இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும். இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். ... |
| Posted: 07 Apr 2014 02:35 AM PDT விடும் பாணங்களுக்கு, யாரும் தப்ப முடியாது. கரன், தூஷணன் மாண்டு விட்டனர்; நான் எப்படியோ தப்பி வந்தேன்...' என்று சொல்லி, தலை குனிந்தான்.'நீ மட்டும் எப்படி தப்பித்தாய்...' என்று, கேட்டான் ராவணன். 'ராமன், தன் மனைவியைத் தவிர, பிற பெண்களை ஏறெடுத்து பார்க்காத, ஏகபத்தினி விரதன். அதையே எனக்கு சாதகமாக்கி, ஒரு பெண்ணைப் போல வேடமிட்டேன். ராமன் என்னை ஏறிட்டும் பார்க்கவில்லை. என்னைப் பெண் என்று நினைத்து ஏமாந்து போனான். இதைப் பயன்படுத்தி தப்பி வந்து விட்டேன்...' என்றான். பெண் வேடமிட்ட காரணத்தால், ஒரு ... |
| யார் இவர்? - நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை ! Posted: 07 Apr 2014 01:26 AM PDT அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ... |
| இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீரழித்த சிதம்பரம் Posted: 07 Apr 2014 01:13 AM PDT ஐக்கிய முற்போக்கு ( காங்கிரஸ்) கூட்டணி அரசில், இந்திய பொருளாதாரம் செழிப்பாக இருந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மை நிலை அதற்கு மாறானது. இந்திய பொருளாதாரத்தை நிலைப்படுத்த, முந்தைய தேசிய ஜனநாயக ( பா.ஜ.,) கூட்டணி கடுமையாக உழைத்ததை அனைவரும் மறந்து விட்டனர். இந்திய பொருளாதாரத்தை நிலைப்படுத்த பா.ஜ., அரசு எடுத்த பல நடவடிக்கைகளின் பலனை, அடுத்து வந்த காங்கிரஸ் அரசு தனக்குச் சாதகமாக்கி கொண்டது. இதனால் காங்கிரஸ் அரசு சிறப்பாக செயல்பட்டது போல் தோன்றினாலும், உண்மையில், காங்கிரஸ் அரசின் கடந்தகால ... |
| படித்ததில் பிடித்தது :) - மனித நேயம் பெருகட்டுமே! Posted: 07 Apr 2014 01:11 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Posted: 07 Apr 2014 01:01 AM PDT Stopping by Woods on a Snowy Evening Whose woods these are I think I know. His house is in the village, though; He will not see me stopping here To watch his woods fill up with snow. My little horse must think it queer To stop without a farmhouse near Between the woods and frozen lake The darkest evening of the year. He gives his harness bells a shake To ask if there is some mistake. The only other sound's the sweep Of easy wind and downy flake. The woods are lovely, ... |
| Posted: 07 Apr 2014 12:52 AM PDT - மற்றுமொரு தேர்(தல்) திருவிழா வந்துவிட்டது! சாமியெல்லாம் கூடி தேரிழுக்க ஆசாமிகள் வீதியுலா வரும் அதிசயத் திருவிழா! - குடிமக்கள் காணாமல் போகும் கோலாகலத் திருவிழா! வாருங்கள் மக்களே வேடிக்கை பார்ப்போம்! - (அந்த)ரங்க ராட்டினம் குடை (சாயும்) ராட்டினம் பாம்பு, கீரி சண்டை மனித முகமும் ஓநாயின் உருவமுமாய் வினேத விலங்கு... அதிர்வேட்டாய் வெடிக்கும் புஸ்வாணங்கள் புஸ்வாணமாய் சிதறும் அதிர்வேட்டுகள் கண்க(கா)ட்டு வித்தை எல்லாம் உண்டு திருவிழா கடைகளும் ஏராளம்; ஏராளம்! - தலையை விற்றால் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (231) Posted: 07 Apr 2014 12:44 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்) Posted: 07 Apr 2014 12:02 AM PDT - அஜித்தை இயக்கும் படத்தில், 'தீபிகா படுகோனேயை கமிட் செய்து, இந்தியிலும் படத்தை ரிலீஸ் செய்யும் ஐடியாவில், இருக்கிறாராம் கவுதம் மேனன். - அதோடு, ஒரு பாடலில் நடனமாட, சன்னி லியோனியிடம் பேசுகிறார். ஆக, கோச்சடையானில் நடித்துள்ள தீபிகா, வடகறியில் நடனமாடியுள்ள சன்னி லியோன் ஆகிய இருவரும், மீண்டும் தமிழுக்கு வருகின்றனர். - ------------------------------------------- — சி.பொ.,(வாரமலர்) |
| Posted: 06 Apr 2014 11:27 PM PDT வங்கதேசத்தில் நடைபெற்றுவந்த உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் ஒரு நபர் ஒரே நபர் ஒரு அணியின் வாய்ப்புகளைக் காலி செய்ய முடியும் என்றால் அது யுவ்ராஜ் சிங்தான்! 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து தடவலோ தடவல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு தோல்வியை ஏற்படுத்தினார். குமார் சங்கக்கார இன்றுடன் T20 உலகக் கோப்பையிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவர் இந்தச் சிறிய இலக்கை விட்டு விடுவாரா என்ன? 35 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் 52 நாட் அவுட். இதன் மூலம் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ... |
| கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Posted: 06 Apr 2014 10:55 PM PDT கணக்காயிருக்கணும் என்ற வார்த்தைகளைத் தமிழ் நாட்டில், பண்டிதர், பாமரர் எல்லோரும் உபயோகிக்கின்றார்கள். எனக்கு முன்னால் இங்கே அக்கவுன்டண்ட் ஜெனரல் ஆபீசிலிருந்து பலர் வந்து உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தவுடன் அவர்கள் பணக் கணக்குகளை சரி பார்க்கிறவர்கள் அல்லவா. எனக்கு இந்த வாசகம் நினைவுக்கு வருகிறது. பண விஷயத்தில் பெரும்பாலும் நாம் கணக்காகவே இருக்கிறோம். இதை நமக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. ஒரு வஸ்துவுக்கு அதன் விலையைவிட ஒரு பைசா அதிகம் கொடுப்போமா ? மட்டோம். பணத்தில் கணக்காக இருப்பது உண்மை. ... |
| Posted: 06 Apr 2014 10:05 PM PDT பெரும் தயக்கம்{புதுக் கவிதை} * ஊரிலிருந்து வந்தவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. நீங்க யாரென்று கேட்டதற்கு உறவினர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர்களுக்குச் சொந்த மென்று விவரமாய்ச் சொன்னார். என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்டேன். தேடி வந்தச் செய்தியைச் சொன்னார். * ஊர்காரர் என்றாலும் அறிமுகமில்லாதவர்க்கு எப்படி உதவி செய்வ தென்று பெரும் தயக்கம். சரி பார்க்கலாம் என்றேன். "கொஞ்சம் பார்த்து செய்யுங்க" என்று கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார். மறு முனையிலிருந்து போன் வந்தது. "நம்ம ... |
| பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம் Posted: 06 Apr 2014 08:42 PM PDT பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன் |
| Posted: 06 Apr 2014 08:34 PM PDT * வெற்றி பெறுவதற்கு யாகம் செய்கிறார்கள் வேட்பாளர்கள் * சுறுசுறுப்பாகச் சுற்றிய சுயமரியாதைப் பம்பரம் தாமரையிடம் தஞ்சம். * வாரிசுகள் வருகை வரவேற்கிறதா? வெறுக்கிறதா? வருங்கால அரசியல். * கையெடுத்து கும்பிடுகிறார்கள் காலில் விழுந்து எழுகிறார்கள் ஐந்தாண்டுகளுக் கொரு முறை. * எதிர்ப்பு, குழப்பம், மௌனம் மூத்தத் தலைவர்கள் தத்தளிக்கிறார்கள் தாமரை இலைத் தண்ணீராய்… |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |