Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'காசியில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எரித்து விடுவார்கள்', - எல்.முருகராஜ் -மூத்த புகைப்பட கலைஞர், தினமலர்

Posted:

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி போட்டியிடும் வாரணாசியில், அவருக்கான வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை அறிய நேரில் போய் இறங்கிய போது, ஒரு ஆச்சரியம் வரவேற்றது. அங்கு தேர்தல் நடைபெறுவதற்கான சுவடே இல்லை என்பது தான் அது!மூன்று நாட்கள் நகரை சுற்றிச்சுற்றி வந்தபோதும், இரண்டே இடங்களில் தான், மோடியின் படம் போட்ட சிறிய விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. இதை அடுத்து, ஆம் ஆத்மி தலைவரும் வேட்பாளருமான கெஜ்ரிவால் படம் போட்ட தட்டி ஒன்று மட்டும் தான் தென்பட்டது.மற்றபடி, கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கொடி தோரணங்கள், நடைபாதையில் யாரையும் நடக்கவிடாத ராட்சத விளம்பர ...

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் 1,318: கடைசி நேரத்தில் காங்., வேட்பாளர் அறிவிப்பு

Posted:

சென்னை:தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளிலும், நேற்று வேட்பு மனு தாக்கல் முடிந்தது. இத்தொகுதிகளில், 118 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட, 1,318 பேர், மனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக, வட சென்னையில், 58 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். தென் சென்னை மற்றும் ஆலந்தூர் சட்டசபை தொகுதிகளுக்கு, காங்கிரஸ் வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டனர்.தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், வரும், 24ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில், மார்ச், 29ம் தேதி மனு தாக்கல் துவங்கியது. முதல் நாள், 67 பேர் மனு தாக்கல் செய்தனர். ...

மூத்த தலைவர் அத்வானியும், பிரதமர் வேட்பாளர் மோடியும் ஒரே குரல்: 'பா.ஜ., தலைமையிலான ஆட்சி நிச்சயம்' என முழக்கம்

Posted:

காந்திநகர் : பா.ஜ.,வில், அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும், பனிப்போர் நடப்பதாக வெளியான தகவலை முறியடிக்கும் வகையில், குஜராத்தில், நேற்று, இருவரும், ஒன்றாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். ''மோடி செயல்திறன்மிக்கவர்,'' என, அத்வானி பாராட்டி பேசினார். காந்திநகர் தொகுதி வேட்பாளரான அத்வானி வேட்பு மனு தாக்கல் செய்தபோது, நரேந்திர மோடியும் உடனிருந்தார்.'குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, அந்த கட்சியின் மூத்த தலைவரான, அத்வானிக்கு பிடிக்கவில்லை' என, முதலில் தகவல் வெளியானது.இதற்கு பின், லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேச ...

வாக்குறுதிகளை அள்ளி விடுபவர்களை நம்பாதீர்: காங்., தலைவர் சோனியா பேச்சு

Posted:

புவனேஸ்வர்:''தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி விடும் கட்சிகளை நம்பி விடாதீர்கள்,'' என, காங்கிரஸ் தலைவர், சோனியா தெரிவித்துள்ளார்.ஒடிசா மாநிலம், காரியர் பகுதியில், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற சோனியா பேசியதாவது:தேர்தல் நேரத்தில், வானளாவ வாக்குறுதிகளை அள்ளி விடும் கட்சிகளை நம்பி, மோசம் போகாதீர்கள். அவர்கள் உங்களுடன் என்றும் இருக்க மாட்டார்கள். அவர்களது நோக்கமெல்லாம், நாற்காலியை பிடிப்பது மட்டும் தான்.எனவே, ஓட்டு போடுவதற்கு முன், உங்கள் மூளையை பயன்படுத்துங்கள்.ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு ஆதரவாக உள்ளது காங்கிரஸ் ...

தஞ்சை நெற்களஞ்சியம் பாலைவனமாகும் அபாயம்! டி. ஆர்.பாலுவை வேரோடு வீழ்த்த ஜெ., வேண்டுகோள்

Posted:

"தஞ்சை விளைநிலத்தை பாலைவனம் ஆக்க தேவையான நடவடிக்கையை எடுத்த, தி.மு.க., மற்றும் தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலுவையும், மத்திய காங்., கூட்டணி அரசையும் வேரோடும், வேரடி மண்ணோடும் இத்தேர்தலில் வீழ்த்த வேண்டும்," என, தஞ்சை பிரசார கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.தஞ்சை புதிய பஸ் நிலையம் பின்புறம் மாநகராட்சி மைதானத்தில், அ.தி.மு.க., பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை, 3:00 மணிக்கு நடந்தது. இதில், தஞ்சை தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து, நேற்று முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.இமாலய ஊழல்:தேர்தல் கமிஷன் ...

அ.தி.மு.க.,வுக்கு வாக்களித்தால்... அனுபவிப்பீர்கள்: கோவை பிரசார கூட்டத்தில் கருணாநிதி சாபம்

Posted:

கோவை: ''அ.தி.மு.க.,வுக்கு வாக்களித்தால்... அந்த அம்மையார் சுட்டிக்காட்டுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்தால்... எங்களது பேச்சை அலட்சியப்படுத்தினால்... மற்றவற்றை நீங்கள் அனுபவியுங்கள் என சாபமிடுவதை தவிர வேறுவழியில்லை,'' என கோவையில் நேற்று கருணாநிதி உணர்ச்சி பொங்க பேசினார்.அவர் பேசியதாவது: கடந்த சில ஆண்டு காலமாகவே உடல் நலிவுற்றதன் காரணமாக, பல நிகழ்ச்சிகளை ரத்து செய்து, ஒத்தி வைத்து உங்களை சந்திக்க முடியாத சங்கடத்துக்கு உள்ளானேன். செம்மொழி மாநாடு: சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் நடந்த தமிழ் மாநாட்டில், உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டில் ...

தமிழகத்தில் அ.தி.மு.க.,விற்கு எதிராக மக்கள் அலை: உடுமலையில் விஜயகாந்த் ஆவேசம்

Posted:

உடுமலை :''எங்களுக்கு குவாட்டர் வேண்டாம்; பிரியாணி வேண்டாம்; பணம் வேண்டாம்; குடிக்க தண்ணீர் மட்டும் போதும் என்ற வாசகங்களை மக்கள் எழுதும் அளவிற்கு, அ.தி.மு.க., விற்கு எதிரான அலை வீசி வருகிறது'', என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.பொள்ளாச்சி லோக்சபா தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்; நேற்று உடுமலை தாராபுரம் ரோட்டில் உள்ள தாஜ் திடலில் பிரசாரம் செய்தார்.அப்போது, அவர் பேசியதாவது:பொள்ளாச்சியில் தென்னை நோய்த்தாக்குதலுக்கு மாவட்ட நிர்வாகம் மருந்து தருவதாக, விவசாயிகளை தொடர்ந்து ...

'பா.ஜ., கூட்டணி 259 இடங்களில் வெற்றி; காங்., படுதோல்வி'

Posted:

புதுடில்லி:'லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 259 இடங்களில் வெற்றி பெறும். காங்., படுதோல்வியைத் தழுவும்' என, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.வடமாநில ஆங்கில செய்தி தொலைக்காட்சியான, என்.டி.டி.வி., லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில், பா.ஜ., இதுவரை இல்லாத அளவு, அதிக இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:லோக்சபா தேர்தலில் பா.ஜ., 214 இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., ...

நேரங்கெட்ட நேரத்தில் மின் தடை: மின் வாரிய அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி

Posted:

சென்னை : அறிவித்தபடி மின் தடை செய்யாதது; இரவு நேரத்தில் மின் தடை என, நேரம் கெட்ட நேரத்தில், மின் தடை செய்வதால், மின் வாரிய அதிகாரிகள் மீது, பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், மின் பற்றாக்குறை நிலவுவதால், சுழற்சி முறையில், சென்னையில், காலை, 8:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை அறிவிக்கப்பட்டும்; மற்ற பகுதிகளில், நான்கு ஐந்து மணி நேரம், அறிவிக்கப்படாமலும், மின் தடை செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு, காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மேட்டூர், வடசென்னை விரிவாக்க, புதிய அனல் மின் நிலையங்களில், கூடுதல் மின்சாரம் கிடைத்ததால், மின் தடை அமலில் ...

தேவயானி மீது குற்றச்சாட்டு: சி.பி.ஐ., முடிவு

Posted:

புதுடில்லி: மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கில், அமெரிக்க மாஜி துணை தூதர், தேவயானி மீது, சி.பி.ஐ., குற்றச்சாட்டு பதிவு செய்ய உள்ளது.ஆதர்ஷ் ஊழல்: மும்பை, -கொலாபா பகுதியில், ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு அடுக்கு மாடி குடியிருப்பைக் கட்டி, கார்கில் போர் வீரர்களுக்கும், அப்போரில் உயிரிழந்தவர்களின், மனைவிகளுக்கும் அளிக்க, மகாராஷ்டிர அரசு, 'ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டி' யை உருவாக்கியது. முதலில் ஆறு மாடிகள், 40 வீடுகள் என்று போடப்பட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக, 31 மாடிகள், 103 வீடுகள் என, ...

மொய்லி மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தல்

Posted:

புதுடில்லி: ''காஸ் விலை உயர்த்தப்பட்டதில், முறைகேட்டில் ஈடுபட்டதாக, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, தொழில் அதிபர், முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மீது, டில்லி மாநில அரசு வழக்குப் பதிவு செய்தது சட்டவிரோதமானது,'' என, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், மோகன் பராசரன் கூறியுள்ளார்.எப்.ஐ.ஆர்., பதிவு: டில்லியில், 'காஸ்' விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அப்போதைய டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இதில், இயற்கை எரிவாயு எடுக்கும் பணியில் ...

'ஒரு நாள் போதாது; 2 நாட்கள் மோடி வர வேண்டும்': பா.ஜ.,வுக்கு கூட்டணி கட்சிகள் கோரிக்கை

Posted:

சென்னை: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தமிழகத்தில் இரண்டு நாட்கள் பிரசாரம் செய்யும் வகையில், அவரது பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக, ஆறு இடங்களில் அவர் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமைந்துள்ள, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்ய, மோடி அடுத்த வாரம் வருகிறார். தமிழ் புத்தாண்டு தினமான, 14ம் தேதி, அவர் தமிழகம் வர வேண்டும் என, தமிழக பா.ஜ., தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மோடியின் பிரசாரம் தான், தமிழகத்தில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™