ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள்
- சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி
- மார்க்கண்டேய புராணம்!
- கவிதை - தேடுகிறேன்!
- என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங்
- ஆக்ரா கோட்டை
- சிங்கங்களின் வம்சாவளியை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்
- உடலுக்கு நன்மை பயக்கும் செம்பருத்தி இலைகள்
- ராஜபாளையம் நாய்கள் சர்வதேச முத்திரை பெறுமா?
- பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி: வீடியோ வெளியீடு
- MH370 : தேடுதல் செலவில் வரலாற்றுச் சாதனை!!
- திரைவிமர்சனம்-மான்கராத்தே
- சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன்
- விண்டோஸ் போன் 8.1
- தர்ப்பைப் புல்லும் சர்க்கரை நோயும்!
- கனவு பலன்
- தேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கல்லறை
- பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
- மூன்று நிலைகள்
- சிந்தனைத் துளிகள்
- கண்ட்ரோல் + சி
- E-Tweets
- பயனுள்ள விண்டோஸ் டூல்கள்
- என்னைப் பற்றி - வினோத்
- யாத்திரை - ஒரு பக்க கதை
- பசி - ஒரு பக்க கதை
- கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது
- எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங்
- ஆயிரம் பதிவுகளைக் கடந்துள்ள தமிழ் நேசனுக்கு பாராட்டுக்கள்
- கன்னி என்கிற கற்றாழை!
- MS-WORD-ல் PASSWORD கொடுத்து SAVE செய்வது எப்படி?
- தேர்தல் களத்தில் நடிகைகள்
- டிப்ஸ்... டிப்ஸ்...
- இந்திய தேசிய கீதத்தின் பொருள்!
- ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்
- கல்லை வெல்லும் வாழைத்தண்டு
- மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா?
- அதிசயங்கள் நிறைந்த அற்புதம் பப்பாளி
- அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை
- கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம்
- ரூ.23 லட்சம் கோடி கருப்புப் பணம்! - மக்களவைத் தேர்தலையொட்டி ரகசியமாக திரும்புகிறது?
- பரிமாண வளர்ச்சி !!!!!!!!!!!!
- பெண்கள் திருமணத்திற்கு பின் ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டியவை
| மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Posted: 05 Apr 2014 03:36 PM PDT ஆசியாவின் மிக பிரமாண்டமான அரசு பொது மருத்துவமனை என்று பெயர் பெற்ற ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் அவலம், நோயை குணப்படுத்துவதற்கு பதிலாக, அதிகரிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி கோடிக்கணக்கான ஏழைகள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். அரசு மருத்துவமனைக்கு சென்றால் நோய் குணமாகும் என்று நினைத்து பலரும் அங்கு செல்கின்றனர். ஆனால், தற்போதைய நிலையில், அரசு மருத்துவமனைக்கு செல்பவர்கள் திரும்பி வரும்போது, வேறு ஒரு புதிய நோயுடன் வீட்டிற்கு திரும்பி வரலாம் ... |
| சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி Posted: 05 Apr 2014 03:32 PM PDT சிவகங்கை : சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் தனது வேட்பு மனுவில், தன்னிடம் ரூ.95,500, மனைவி குந்தவை நாச்சியாரிடம் ரூ.71,000, மகன்கள் மலர்மன்னன், குமணன் ஆகியோர் பெயரில் ரூ.78,000 கையிருப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பி.ஆர்.,செந்தில்நாதன் அசையும் சொத்து: கையிருப்பு ரூ.95,000, டெபாசிட் ரூ.11,58,198. எல்.ஐ.சி., பாலிசி ரூ.40,00,000. கடன் பாக்கி ரூ.9,88,477. ஹீரோஹோண்டா 2 - ரூ.80,000, இன்னோவா கார் ரூ.17,18,005. ஸ்கார்பியோ கார் ரூ.13,24,210. ரூ.11,28,000 ... |
| Posted: 05 Apr 2014 03:20 PM PDT முருகப் பெருமான் தன் தந்தையான சிவபெருமானுக்கு உபதேசம் செய்த புராணக்கதை போலவே, இன்னொரு சம்பவமும் உண்டு. அதில் தந்தைக்கு உபதேசம் செய்தவன், பிருகு வம்ச அந்தணர் ஒருவரின் மகன். சகல சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தாலும் பித்தனைப் போலத் திரிந்தான், அவன். அவனது தந்தையோ அவனிடம் குருகுல வாசம் முடிந்ததும், திருமணம் செய்து வைப்பதாகவும், அதன் பின் பித்ரு, தேவகாரியங்களைச் செய்து நற்கதி அடையலாம் என்றும் கூறினார். அவனோ பிறவிகள் பல எடுத்தும் ஏராளமான தான தர்மங்கள் செய்தும், பிறவிக் கடனை அடைக்க முடியவில்லை எனச் ... |
| Posted: 05 Apr 2014 03:17 PM PDT வளர்ந்தாலும் உணவை வாயில் ஊட்டிவிடும் அம்மாவையும் வரும்வரை வாசலிலேயே தூங்காமல் காத்திருக்கும் அப்பாவையும் வாஞ்சøயாய்த் தலைகோதி முத்தமிட்டு நெட்டி முறிக்கும் பாட்டியையும் டி.வி. ரிமோட்டுக்கு தினமும் சண்டையிடும் அருமைத் தம்பியையும் ஊர்வம்பு பேசியபடியே வீட்டைக் கூட்டிப் பெருக்கும் கண்ணம்மாவையும் "உன் கையாலே போணி பண்ணு' என உரிமையுடன் கேட்கும் பூக்காரம்மாவையும் மனம் தேடித் தவிக்கிறது... அமெரிக்க தேசத்தின் அந்நிய முகங்களிடையே.... [thanks] ஜி. ராஜி, சென்னை[/thanks] |
| என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Posted: 05 Apr 2014 03:13 PM PDT தமிழில் எனக்கு தெரிந்தது இரண்டே சொற்கள் தான். "வணக்கம்' "நமஸ்காரம்'. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. ஜெயலலிதா, எனது ராக்கி சகோதரியான பிரேமா சுப்ரமணியம் உள்பட. ஆனால் அவர்கள் எனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க கொஞ்சமும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களும் என்னிடம் பஞ்சாபி கற்றுக் கொள்ளவில்லை. இப்போது என்னைப் பற்றி சில வார்த்தைகள். உங்களுக்கே அனேகமாய்த் தெரிந்திருக்கும் - நான் ஒரு சர்தார்ஜி. என்னை "பஞ்சாப் சோ ராமசாமி' என்று அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். அவருக்கும் எனக்கு உருவ ஒற்றுமை ... |
| Posted: 05 Apr 2014 03:03 PM PDT காதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் #தாஜ்மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே, #யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை. தாஜ் மஹாலைப் போல இதுவும் ஐ.நா.வின் #யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் உறுதியான சுவர்களுடன் திகழும் இக்கோட்டை, ஓராயிரம் ஆண்டுக் கால வரலாற்றுச் சுவடாக விளங்குகிறது. முகலாயப் ... |
| சிங்கங்களின் வம்சாவளியை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் Posted: 05 Apr 2014 02:58 PM PDT இன்று உலகின் சில காடுகளில் மட்டும் வாழும் சிங்கங்கள் எங்கே, எப்போது உருவாகின, இந்தச் சிங்கங்களின் மூதாதையர்கள் யார் என்ற கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர். இன்றைய சிங்கங்களையும் அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ள சிங்கங்களின் உடல் படிமங்களையும் மரபணு ஆராய்ச்சிக்கு உட்படுத்திய விஞ்ஞானிகள், கடைசியாக ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய சிங்கங்களின் பொதுவான மூதாதை மிருகங்கள் வாழ்ந்துள்ளதாக உறுதிசெய்துள்ளனர். இன்றைய நவீனச் சிங்கங்கள் இரண்டு குழுக்களாக பரிணாமம் அடைந்துள்ளன. ... |
| உடலுக்கு நன்மை பயக்கும் செம்பருத்தி இலைகள் Posted: 05 Apr 2014 02:54 PM PDT செம்பருத்தி என்ற பூச்செடி, உலகத்தில் உள்ள வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல வட்டாரங்களில் அதிகமாக காணப்படும். இதனை "மார்ஷ் மாலோ" என்றும் அழைக்கின்றனர். செம்பருத்தி இலைகள் என்பது நம் இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். பல ஆண்டு காலமாக பலவித சிகிச்சைக்காக இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் உலகத்தில் உள்ள பலரும் செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த தேநீரிலும் கலந்து குடிக்கின்றனர். இது நம் உடலுக்கு மிகவும் நல்லது. செம்பருத்தி இலைகளில் உடல்நலம் பேணும் இன்னும் பல நன்மைகள் ... |
| ராஜபாளையம் நாய்கள் சர்வதேச முத்திரை பெறுமா? Posted: 05 Apr 2014 02:50 PM PDT தெற்காசியாவிலேயே முதல் முறையாக குறிப்பிட்ட இரண்டு நாய் இனங்கள் குறித்த ஆய்வுகள் இந்தியாவில் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழகத்திலுள்ள ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை வகை நாய்கள் குறித்து சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் இயல்புகள் பட்டியிலப்படவுள்ளன. இந்த ஆய்வுகளை ஹரியானா மாநிலம் கர்னாலிலுள்ள தேசிய விலங்குகள் மரபின ஆராய்ச்சி மையமும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்கின்றன. இதற்கு முன்னர் மாடுகள் மற்றும் பல வகை ஆடுகளில் இப்படியான ஆய்வுகள் ... |
| பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி: வீடியோ வெளியீடு Posted: 05 Apr 2014 02:40 PM PDT அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு திட்டமிடப்பட்ட சதிச்செயல் என்று 'கோப்ரா போஸ்ட்' புலனாய்வு இணையதளம் தெரிவித்துள்ளது. இந்த இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட ரகசிய விசாரணைகளின் மூன்றரை மணி நேரம் ஓடும் வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கை பல ஆண்டுகளாக விசாரித்து வரும் நிலையில், ரகசிய வீடியோ பதிவை டெல்லி பத்திரிகையாளர் மன்றத்தில் கோப்ராபோஸ்டின் ஆசிரியர் அனிரோத் வெளியிட்டுள்ளார். பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாகக் ... |
| MH370 : தேடுதல் செலவில் வரலாற்றுச் சாதனை!! Posted: 05 Apr 2014 02:38 PM PDT 2009ஆம் ஆண்டு ஏர் பிரான்ஸ் விமானன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. அதனை கண்டுபிடிக்க 2 ஆண்டுகள் ஆனது. இதனை கண்டுபிடிக்க 54 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. இந்த நிலையில் காணாமல் போன எம்.எச்.370 விமானத்தைத் தேடும் பணிக்கான செலவு வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தியில், மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், மலேசிய அரசு உண்மைத் தகவல்களை வேண்டுமென்றே மறைத்துவருவதாகக் கூறியுள்ளார். மயமான விமானம் குறித்து அரசு உண்மைத் தகவலைக் கூற வேண்டுமென அவர் கோரியுள்ளார். ... |
| Posted: 05 Apr 2014 02:16 PM PDT மான்கராத்தே- விமர்சனம் ! நான்கு மாதங்களுக்குப் பிறகு குறிப்பிட்ட ஒருநாளில் என்ன நடக்கும் என்பது உறுதியாகத் தெரிந்தால் அதைத் தெரிந்துகொள்கிறவர்கள் மனநிலை எப்படியிருக்கும்? மென்பொருள்துறையில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் அவருடைய குழுவினருக்கு நான்குமாதங்கள் கழித்து ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன நடக்கும்? என்பது தெரிகிறது. ஒரு குத்துச்சண்டைப்போட்டியில் ஒருவர் வெற்றி பெறுவார் அவருக்குச் சன்மானமாக இரண்டுகோடி கிடைக்கும் என்கிற செய்தி இவர்களுக்கு மட்டும் தெரிகிறது. அந்த இரண்டுகோடியைக் ... |
| சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன் Posted: 05 Apr 2014 02:09 PM PDT சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன் சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதிய கட்டுரை மின்னூல் வடிவில் http://www.mediafire.com/download/dq8k41omlpna5b1/Sithargal%2528OrathanaduKarthik.blogspot.com%2529.rar |
| Posted: 05 Apr 2014 01:15 PM PDT மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த புதன் கிழமை சான் பிரான்சிஸ்கோவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் 8.1 இயங்குதளத்துடன் கூடிய விண்டோஸ் போன் 8.1 – ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில் மிகச் சிறந்த தொழில்நுட்பக் கூறுகளைக் கொண்டுள்ள விண்டோஸ் போன் 8.1 பயனர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும் எனக் கூறப்பட்டது. இதன் முதன்மையான அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் கூறியிருப்பதாவது:- 1. 'ஆப்பிளின் சிறி' (Apple's Siri) போன்று செயல்படும் Cortana ... |
| தர்ப்பைப் புல்லும் சர்க்கரை நோயும்! Posted: 05 Apr 2014 01:12 PM PDT தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்கக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாத பித்த கபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பையை ஓர் அருமருந்தாக நாம் குறிப்பிடலாம். சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) ... |
| Posted: 05 Apr 2014 01:08 PM PDT இன்று காலை 6மணி முதல் 7மணிக்குள் நான் ஒரு கெட்ட கனவு கண்டேன்,,சுடுகாட்டில் என்னை உயிருடன் புதைப்பது போல்,அதாவது என் தந்தையிடம் நானே என்னை உயிருடன் புதைக்கும் படி கூருகிறேன்,நான் இந்து ஆனால் என்னை சவப்பெட்டியில் புதைக்கிறார்கள்.முதலில் 4 1/2 அடி சவபெட்டியில் என்னை படுக்கச் சொன்னார்கள்,,பிறகு அது வேண்டாம் என்று 6 அடி சவபெட்டியில் படுக்கச்சொல்லி உயிருடன் புதைக்கிறார்கள்.என்னை புதைக்கும் பொழுது மயக்க மருந்து கொடுக்கச் சொல்லி கேட்கிறேன்,தர மறுத்து விட்டனர்.என்னை புதைத்து விட்டு சென்ற பிறகு நான் ... |
| தேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கல்லறை Posted: 05 Apr 2014 01:01 PM PDT தென் ஆப்பிரிக்காவின் கோய்சன் என்னும் பழங்குடி இனத்தில் பிறந்தவர் அழகு மங்கை சாரா பார்ட்மன். இங்கிலாந்து கப்பலில் ஆப்பிரிக்கா வந்த வில்லியம் டன்லப் என்னும் மருத்துவர் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி இங்கிலாந்துக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கு ஊர் ஊராக அவளை அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி வெள்ளை மிருகங்கள் கைதட்டி மகிழ்ந்து கூத்தாடச் செய்தான். கறுப்பின பெண்தானே என்னும் அலட்சியம். அவளைப் பலர் சீண்டி மகிழ்ந்தனர். லண்டனிலிருந்து பிரான்சுக்கும் அவள் அழைத்துச் செல்லப்பட்டாள். ... |
| பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Posted: 05 Apr 2014 12:53 PM PDT பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்? தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ... |
| Posted: 05 Apr 2014 12:51 PM PDT 1. தொடர்ந்த கடவுள் சிந்தனை. 2. நல்ல குணங்களைப் பேணி வளர்த்துக் கொள்ளுதல். 3. எல்லாச் செயல்களிலும் ஆன்மிகமாக்குதல் ஆகிய மூன்றும் ஆன்ம பரிபாகம் அடைதற்குத் தேவையான மூன்று நிலைகள். பெரும்பாலான மக்களால் தொடர்ந்து பகவானின் நாமத்தை ஸ்மரிப்பது ஒன்றே சாத்தியம். இடைவிடாது முயன்றால், எண்ணத்திலும் சிந்தையிலும் எப்போதும் இறைவனைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம். நற்குணங்களுள், அஹிம்சை, உண்மை, பிரும்மச்சரியம் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள முயன்றால் மற்ற குணங்கள் யாவும் தாமே வந்தமையும். தன் ஆராய்ச்சி மூலம் ... |
| Posted: 05 Apr 2014 12:49 PM PDT ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். - விவேகானந்தர். மனிதன் முன்னேற ஏழு பாதைகள் பகுத்தறிவு கல்வி சிந்தனையில் உண்மை அன்புடமை நன்னடத்தை கட்டுப்பாடு உள்ள குடும்பம் நல்ல ஆட்சி - சீன அறிஞர் கன்பூசியஸ் "வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க" - தாகூர் ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன். -அண்ணல் காந்தி புதியதோர் ... |
| Posted: 05 Apr 2014 12:20 PM PDT நாம் காப்பி செய்திடும் டெக்ஸ்ட் மற்றும் படங்கள் அனைத்தும் கிளிப் போர்டில் தான் சேவ் செய்யப்படுகின்றன. அவ்வப்போது காப்பி செய்துவிட்டு, அடுத்த வேலைக்கு நகன்றுவிடுவோம். எப்போதாவது, நாம் எவற்றை எல்லாம் காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு சென்றோம் என நீங்கள் எண்ணியதுண்டா? நேற்று காப்பி செய்தது இன்றைக்கும் வேண்டுமே என எண்ணி, அதனை எப்படி பெறுவது என்று தேடியதுண்டா? இதற்கெனவே, கண்ட்ரோல் + சி (ControlC!) என்ற பெயரில் ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் நமக்கு இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், ... |
| Posted: 05 Apr 2014 12:11 PM PDT முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
|
| Posted: 05 Apr 2014 12:06 PM PDT விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே ஆண்டுக் கணக்கில் பழகி இருந்தாலும், அதில் இணைந்து தரப் பட்டுள்ள சில டூல்கள் குறித்துப் பலர் அறியாமல் இருக்கின்றனர். இவை நம் சிஸ்டம் இயங்குவது குறித்து கண்காணிக்க நமக்கு உதவுகின்றன. சிஸ்டம் செயல்பாட்டில் பிரச்னை ஏற்பட்டால், அவற்றைக் கண்டறிந்து நீக்கவும் உதவுகின்றன. அப்படிப்பட்ட, அதிகம் அறியப்படாத, அறிந்திருந்தாலும் பயன்படுத்தப்படாத சில டூல்கள் குறித்து இங்கு பார்க்கலாம். இங்கு தரப்படுபவை, விண்டோஸ் 8 சிஸ்டம் வரையிலான டூல்கள் குறித்து இருந்தாலும், அதற்கு முன்னதாக ... |
| Posted: 05 Apr 2014 11:57 AM PDT பெயர்: vinoth சொந்த ஊர்: Poompukar ஆண்/பெண்: aan ஈகரையை அறிந்த விதம்: net search பொழுதுபோக்கு: FB & Blocks readings தொழில்: Engg மேலும் என்னைப் பற்றி: qatar - gulf il electrical engineeraga velai parkkum oru thamizh nattukkaran. |
| Posted: 05 Apr 2014 10:05 AM PDT இன்னிக்கு நேத்து பழக்கமா...இருபது வருஷ நட்பு, ரெண்டு பேரும் சேர்ந்து எதிரெதிர்ல வீடு கட்டி அண்ணன், தம்பி போல இருந்தோம். நம்ம பொண்ணு கல்யாணத்தை அவன் வீட்டு கல்யாணம் மாதிரி முன்னே நின்னு நடத்துவான்னு ஆசைப்பட்டேன். - ஆனா கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி குடும்பத்தோட எங்கேயோ போயிட்டான். எல்லா நம்பரும் ஸ்விட்ச் ஆஃப். கொஞ்ச நாளாவே அவன் மூஞ்சியும் சரியில்லை! - அவன் பொண்ணுங்களுக்கு கல்யாணம் கூடி வராதப்போ நம்ம பொண்ணுக்கு அமைஞ்சுடுச்சேன்னு பொறாமை போல'' - கடுமையாகப் புலம்பிக் கொண்டிருந்தார் ... |
| Posted: 05 Apr 2014 10:04 AM PDT - வயிறார சாப்பிட்டு இன்றோடு மூன்று நாட்களாகி விட்டது. பசி மயக்கத்தில் உறங்கிய குழந்தைகளையும், காயம் பட்டு படுத்திருந்த கணவன் மாரியையும் இயலாமையோடு பார்த்தாள் அஞ்சலை. - தொழிலுக்குப் போய் ஒரு வாரமாகி விட்டது. கையில் சல்லிக்காசு இல்லை. குழந்தைகள் பட்டினியில் வாடி அவதிப்பட, இப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை என்ற முடிவுடன் எழுந்தாள். அடுக்களையில் இருந்த எலி மருந்துடன் வந்து நின்றவளை வெறித்துப் பார்த்தான் மாரி. - அவள் நோக்கம் புரிந்து. அவள் கையிலிருந்த மருந்தை பிடுங்கித் தூக்கிப் போட்டுவிட்டு, ... |
| கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Posted: 05 Apr 2014 10:00 AM PDT கணக்காயிருக்கணும் என்ற வார்த்தைகளைத் தமிழ் நாட்டில், பண்டிதர், பாமரர் எல்லோரும் உபயோகிக்கின்றார்கள். எனக்கு முன்னால் இங்கே அக்கவுன்டண்ட் ஜெனரல் ஆபீசிலிருந்து பலர் வந்து உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தவுடன் அவர்கள் பணக் கணக்குகளை சரி பார்க்கிறவர்கள் அல்லவா. எனக்கு இந்த வாசகம் நினைவுக்கு வருகிறது. பண விஷயத்தில் பெரும்பாலும் நாம் கணக்காகவே இருக்கிறோம். இதை நமக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. ஒரு வஸ்துவுக்கு அதன் விலையைவிட ஒரு பைசா அதிகம் கொடுப்போமா ? மட்டோம். பணத்தில் கணக்காக இருப்பது உண்மை. ... |
| எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Posted: 05 Apr 2014 09:54 AM PDT நூறு வருடங்களுக்கு முன்பு அடிமை விடுதலைச் சாசனத்தில் கையெழுத்திட்ட ஒரு மாபெரும் அமெரிக்கரின் சிலையின் நிழலில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். அநீதியால் வாடிய லட்சக்கணக்கான நீக்ரோக்களுக்கு கலங்கரை விளக்கமாக காட்சியளித்தது இந்த சாசனம். அவர்களது அடிமைத்தன இரவின் விடியலாக அமைந்தது அந்த சாசனம். ஆனால் நூறு வருடங்கள் கழிந்த பிறகும் நீக்ரோ விடுதலையாகவில்லை. நூறு வருடங்கள் கழித்த பின் நீக்ரோவின் வாழ்க்கை ஒதுக்குதலினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மாபெரும் செல்வக்கடலின் நடுவே வறுமைத்தீவில் நீக்ரோ வாழ்கிறான்; ... |
| ஆயிரம் பதிவுகளைக் கடந்துள்ள தமிழ் நேசனுக்கு பாராட்டுக்கள் Posted: 05 Apr 2014 09:39 AM PDT அரிய மின்னூல்களை அள்ளித் தந்து, பயனுள்ள பதிவுகளுடன் முதல் ஆயிரம் பதிவுகளைக் கடந்துள்ள தமிழ் நேசனுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! [thanks]தமிழ்நேசன்! தொடரட்டும் தங்களின் பணி![/thanks] |
| Posted: 05 Apr 2014 09:36 AM PDT ''தோட்டத்து மூலிகையின் அருமை தெரியாது என்பார்கள். இயற்கை தந்த அபூர்வ வரங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் நமக்குக் கிடைத்துவிடுவதாலேயே, அதனுடைய அருமைகளை நாம் உணராமல் தவறவிட்டுவிடுகிறோம். சமீபத்தில் நண்பர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். வீட்டை ஒட்டிய இடத்தில் சோற்றுக் கற்றாழையை வளர்த்திருந்தார்கள். சோற்றுக் கற்றாழையின் மருத்துவ மகிமைகளை நன்றாக அறிந்த எனக்கு, அதைப் பார்த்த உடன் மட்டற்ற மகிழ்ச்சி. நண்பரை மனமாரப் பாராட்டினேன். 'இது என்ன செடின்னு எனக்குத் தெரியாது. சும்மா அழகுக்காக வீட்டில் வளர்த்துக்கிட்டு ... |
| MS-WORD-ல் PASSWORD கொடுத்து SAVE செய்வது எப்படி? Posted: 05 Apr 2014 07:57 AM PDT WORD DOCUMENT-யை புதிதாக OPEN செய்து கொள்ளவும், பிறகு WORD-ல்TYPE செய்யவும். படம் 1-யை பார்க்கவும் . பிறகு SAVE செய்யும்.படம் 2-யை பார்க்கவும். TOOLS->SECURITY OPTIONS யை கிளிக் செய்யவும். படம் 3-யை பார்க்கவும். படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்து பார்க்கவும். பிறகு PASSWORD-யை என்டர் செய்யவும். PASSWORD-யை RETYPE செய்யவும். படம் 4-யை பார்க்கவும். பின் வேண்டிய இடத்தில் SAVE செய்து கொள்ளவும். படம் 5-யை பார்க்கவும். பிறகு WORD DOCUMENT-யை ... |
| Posted: 05 Apr 2014 06:14 AM PDT கதாநாயகிகளை அரசியலுக்கு இழுப் பதில் தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என்ற பாகுபாடெல்லாம் இங்கே கிடையாது. கட்சியில் சேர்கிறேன் என்று கதாநாயகியர் ஆர்வமாக முன்வந்தால், வந்தவரைக்கும் லாபம் என்று முன்பின் யோசிக்காமல் கட்சியில் சேர்த்துக்கொள்வார்கள். குவாட்டர், பிரியாணிப் பொட்டலம் இல்லாமல் கூட்டம் சேர்க்கும் 'சக்தி'களாகப் பார்க்கப்படும் கதாநாயகிகளின் உணர்வுகளுக்கும், உழைப்புக்கும், கட்சிகள் உரிய இடம் கொடுத்திருக்கின்றனவா என்றெல்லாம் வாக்காளர்கள் பார்ப்பதில்லை. அவர்கள் போட்டியிட்டாலும் சரி, பிரச்சாரத்துக்கு ... |
| Posted: 05 Apr 2014 05:20 AM PDT ![]() |
| இந்திய தேசிய கீதத்தின் பொருள்! Posted: 05 Apr 2014 05:11 AM PDT ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே ! பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே. பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் - பஞ்சாப் மாகாணம் உன்னுடையது. புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் ... |
| ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Posted: 05 Apr 2014 04:56 AM PDT நம் தளத்தில் என்னென்ன புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் இங்கு தொகுத்து வழங்கப்படும். ஏதேனும் மாற்றங்கள் உங்களுக்கு இடைஞ்சலாக உள்ளது எனக் கருதினால் இங்கு அறியத் தரவும். மறுமொழி எழுதுங்கள் ஒவ்வொரு பதிவிற்குக் கீழேயும் உள்ள மறுமொழி எழுதுங்கள் என்பதைத் திறந்து அந்தப் பக்கத்திற்கான பின்னூட்டம் எழுதலாம். இதில் கூகிள் தமிழ் எழுதி இணைக்கப்பட்டுள்ளது. விரைவாகவும் பின்னூட்டமிடலாம். தனிமடல் * ஒரு பதிவு குறித்த கருத்தை பதிவிட்டவருக்கு தனிமடலில் தெரிவிக்க வேண்டுமெனில் ... |
| Posted: 05 Apr 2014 04:15 AM PDT சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில் கற்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வெயில் உடலில் தோற்றுவிக்கும் வறட்சியும்... அதனால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையும் சிறுநீரகக் கற்கள் தோன்ற ஒரு காரணம்தான்! உடலில் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், ரத்தத்தில் இருந்து சிறுநீர் பிரியும்போது உப்புப் படிவங்கள் சேர்ந்து கல் தோன்றும். பலரும் சிறுநீரகத்தில் தோன்றுவது சிறுநீரகக் கல் என்று நினைக்கிறார்கள். ஆனால், சிறுநீரகக் கல் என்பது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் ... |
| மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Posted: 05 Apr 2014 04:13 AM PDT ''எங்கள் மருத்துவமனைக்கு முழு உடல் பரிசோதனை (மாஸ்டர் ஹெல்த் செக்-அப்) செய்துகொள்வதற்காக வந்திருந்தார் அவர். கூடவே கேஷ§வலாக அவருடைய நண்பர் ஒருவரும் வந்து இருந்தார். 'நான் சும்மா... இவனுக்குக் கம்பெனிக்காக' என்றார். இருவருக்கும் உடல் பரிசோதனை முடிந்தது. சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். பரிசோதனையின் முக்கியத்துவம் தெரிந்து தன் உடம்பில் ஏதேனும் கோளாறு இருக்குமோ என்ற பதைபதைப்பில் வந்தார் இல்லையா, அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கூட சும்மா கம்பெனிக்கு வந்த நண்பருக்கு சர்க்கரை நோயில் தொடங்கி, ... |
| அதிசயங்கள் நிறைந்த அற்புதம் பப்பாளி Posted: 05 Apr 2014 03:41 AM PDT கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு முன்னால் பிரபல கடல் யாத்ரிகரான மார்கோபோலோ, தன்னுடன் பயணித்த சக யாத்ரிகர்களிடம் ஒரு வகை காய், பழம், இலை போன்றவைகளைக்காட்டி 'உங்களில் யாருக்காவது வயிற்று உபாதைகள் இருந்தால் அதை போக்கவும், பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருப்பவர்களுக்கு வயிற்று தொந்தரவுகள் வராமல் இருக்கவும், இவைகளை சாப்பிடுங்கள்' என்று கூறினார். அவர் காட்டியது பப்பாளிகாய், பப்பாளி பழம், பப்பாளி இலை! அதிக செலவு இல்லாமல், குறிப்பிடத்தக்க கவனிப்பும் இல்லாமல், எளிதாக வளர்ந்து- முழு பலன்தரும் பப்பாளியை ... |
| அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை Posted: 05 Apr 2014 03:24 AM PDT இத்தனை காலங்களில், அப்பாவின் மீது ராமுக்கு மிஞ்சி இருந்தது, வெறுப்பு... வெறுப்பு... வெறுப்பு மட்டும்தான். ராமுக்கு அவர் மீது இருந்த அதே வெறுப்பு, அவருக்கும் அவன் மீதும், அவன் அம்மாவின் மீதும் இருந்தது. அம்மா, ஒரு பூஞ்சை; சிறு வயதிலிருந்தே உழைக்கப் பழகியவள். கண்களைச் சுற்றி எப்போதும் கருவளையங்களும், இந்த ஜென்மத்தில் துடைத்தெடுக்க முடியாத தனிமை உணர்ச்சியும் அவள் முகத்தில் நிறைந்திருக்கும். தனிமை அடர்ந்த முகம், சக மனிதனுக்கு எப்போதும் அந்நியமான ஒன்றுதான். அப்பா, அவளுடன் நடந்த திருமணத்தை ஒரு ... |
| கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Posted: 05 Apr 2014 03:20 AM PDT ஷடங்கங்கள் ஹிந்து மதத்தின் ஆதாரப் புஸ்தகங்களில், வேதத்துக்கு அடுத்தபடியாக வருவது வேதத்தின் ஆறு அங்கங்கள். வேதத்தை ஒரு மூர்த்தியாகச் சொல்லும் போது அந்த வேத புருஷனுக்குப் பல அங்கங்கள் இருக்கின்றன. வாய், மூக்கு, கண், காது, கை, பாதம், என்ற ஆறு அங்கங்கள் இருக்கின்றன. இவற்றை "ஷட் (ஆறு) அங்கம்","ஷடங்கம்"என்று சொல்லுவார்கள். சடங்கு என்று சொல்லுவது அந்த வார்த்தையிலிருந்து மருவி வந்ததுதான். "வேதமோ (டு) ஆறு அங்கம் ஆயினான்"என்று தேவாரம் சொல்லும் ஆறு அங்கம் ஷடங்கமே. கல்வெட்டும் செப்பேடும் பழைய ... |
| ரூ.23 லட்சம் கோடி கருப்புப் பணம்! - மக்களவைத் தேர்தலையொட்டி ரகசியமாக திரும்புகிறது? Posted: 05 Apr 2014 03:12 AM PDT மக்களவைத் தேர்தலையொட்டி வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் நாடு திரும்பிவிட்டது என்று மும்பையில் உள்ள நிதி நிர்வாக நிபுணர்கள் கூறுகின்றனர். கருப்புப் பணம் இந்தியாவுக்குள் திரும்பி வருகிறது என்பதற்கு என்ன ஆதாரம் என்று அந்த வட்டாரங்களிடம் கேட்டபோது, பங்குச் சந்தையில் ஏற்படும் அர்த்தம் புரியாத எழுச்சி, ஹவாலா சந்தைகளில் காணப்படும் சுறுசுறுப்பு, தங்கக் கடத்தல் அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் நாடு முழுக்க ஏற்பட்டுள்ள திடீர் சுறுசுறுப்பு ஆகியவைதான் ... |
| Posted: 05 Apr 2014 03:05 AM PDT |
| பெண்கள் திருமணத்திற்கு பின் ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டியவை Posted: 04 Apr 2014 11:34 PM PDT ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் மறக்க இயலாத விஷயங்களை பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். சமூக வலைத்தளங்களின் பதிவு செய்யும் போது கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டாலோ, திருமணம் நடந்து விட்டிருந்தாலோ அல்லது யாருடனாவது தொடர்பில் இருந்தாலோ, உங்களுடைய இணைய வழி செயல்பாடுகளை சற்றே கவனத்துடன் அணுக வேண்டிய தருணம் இதுவாகும். ஃபேஸ்புக்குகளில் எந்தவித அறிமுகமும் இல்லாமல் தொடங்கிய பல்வேறு உறவுகளும், விவாகரத்து ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
